• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.
631 (a). தவறே செய்யாதவன் எதுவுமே செய்ததில்லை.
631 (b). He who makes no mistakes makes nothing.

632 (a). எல்லோருக்கும் நல்லவன் இதுவரை பிறக்கவே இலை.
632 (b). He who can please everybody is yet to be born.

633 (a). மனம் விரும்புவதை எல்லாம் பேசுபவன், மனம் வெறுப்பதை
ல்லாம் கேட்க நேரிடும்.
633 (b). He who speaks what he likes, shall hear what he doesn't like.

634 (a). முத்துக் குளிக்க நினைப்பவன் மூச்சை அடக்க வேண்டும்.
634 (b). He who would reach for pearls, must dive below.

635 (a). கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்.
635 (b). Health is not valued till sickness comes.
 
Last edited:
636 (a).கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
636 (b). Honey is not for ass's mouth.

637 (a). அழகிய ரோஜா முள்ளுடன் மலரும்.
637 (b). Honey is sweet but bees sting.

638 (a). பதவி வந்தால் பவிசும் வரும்.
638 (b). Honors change manners.

639 (a). விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பவேண்டும்.
639 (b). If you can't have the best , make the best of what you have.

640 (a). ஒரு நேரம், ஒரு நோக்கம்.
640 (b). If you run after two hares, you will catch neither.
 
Last edited:
641 (a). அமைதியுடைமையே அறிவுடைமை.
641 (b). No wisdom like silence.

642 (a). பார்க்க மறுப்பவன் பெருங்குருடன்;
கேட்க மறுப்பவன் வெறும் செவிடன் .

642 (b). None so blind as those who won't see;
none as deaf as those who won't hear.

643 (a). பார்வையில் இல்லாதவன் மனதிலும் நில்லான்.
643 (b). Out of sight, out of mind.

644 (a). அடாது தடைவரினும் விடாது முன்னேறு.
644 (b). Slow and steady wins the race.

645 (a). சிறு மழை பெரும் புழுதியைத் தணிக்கும்.
645 (b). Small rain lays great dust.
 
646 (a). எத்தனை நாடுகளோ அத்தனை வழக்கங்கள்.
646 (b). As many countries, so many customs.

647 (a). இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
647 (b). Deceptively innocent.

648 (a). சுவையான உணவு விரைவாகத் தீரும்.
648 (b). The proof of pudding is in the eating.

649 (a). வெந்நீரால் வெந்த நாய் தண்ணீரைக் கண்டும் அஞ்சும்.
649 (b). The scalded dog fears cold water.

650 (a). ஒவ்வொரு பொருளும் தத்தம் இடத்தில்.
650 (b). There is a place for everything and everything is in its place.
 
651 (a). வசந்த காலத்தில் உழைத்தால், வர்ஷ காலத்தில் உண்ணலாம்.
651 (b). He must hunger in winter that will not work in summer.

652 (a). கழுத்து வரையில் கடன்.
652 (b). Neck deep in debts.

653 (a). கண் மண் தெரியாத காதல்.
653 (b). Head over heels in love.

654 (a). உள்ளதை உள்ளபடி உரைத்தல்.
654 (b). To call a spade a spade.

655 (a). பழுது படாது முழுதாய்த் திரும்புவது.
655 (b). To come off with whole skin.
 
656 (a). தாடி பற்றி எரியும் போது பீடிக்கு நெருப்புக் கேட்பது.
656 (b). To fiddle when Rome is burning.

657 (a). நிழலுடன் துவந்த யுத்தம்.
657 (b). To fight one's own shadows.

658 (a). நீரிலும் நெருப்பிலும் நுழைவது.
658 (b). To go through fire and water.

659 (a). கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
659 (b). To lock the stable door after the horse is stolen.

660 (a). ஆகாசத்தை வில்லாக வளைத்து மணலைக் கயிறாய்த் திரிப்பது.
660 (b). To turn air blue.
 
661 (a). பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம்.
661 (b). To pay back in one's own coins.

662 (a). புலி வாலைப் பிடித்து இழுப்பது.
662 (b). To pull the devil by its tail.

663 (a). மலை விழுங்கி மகாதேவனுக்கு கதவு அப்பளம்.
663 (b). Will a man who can swallow a camel strain at a gnat?

664 (a). திருநெல்வேலிக்கே அல்வாவா?
664 (b). To treat someone with his own medicine.

665 (a). அறிவாளியின் தலை பயிரில்லா நிலம்.
665 (b). Too much knowledge makes the head bald.
 
666 (a). மதில் மேல் பூனை.
666 (b). Cat on the wall.

667 (a). செருப்பின் அருமை வெய்யிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
667 (b). We never know the value of water till the well is dry.

668 (a). விதி வலியது.
668 (b). What must be, will be.

669 (a). துப்பாக்கி முனையில் சமாதான முயற்சியா?
669 (b). When the guns speak, it i too late to argue.

670 (a). சாத்தான் வேதம் ஓதும் போது சாக்கிரதை தேவை.
670 (b). When the fox preaches, take care of your geese.

 
671 (a). இலவு காத்த கிளி.
671 (b). The forlorn lover.

672 (a). அறிவிலியின் முயற்சி தறிகெட்டோடும் புரவி.
672 (b). Zeal without knowledge is a runaway horse.

673 (a). தாயை போல பிள்ளை, நூலைப் போல சேலை.
673 (b). A fine material yields a fine product.


674 (a). சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
674 (b). Little pigeons can carry great messages.

675 (a). எறும்பு ஊரக் கல்லும் தேயும்.
675 (b). Little ants can leave a track on a rock.

 
676 (a). மீன்கள் வலையில் சிக்கும், திமிங்கிலங்கள் தப்பிவிடும்.
676 (b). Flies get caught in a web, drones destroy the web.

677 (a). வாத்தியார் பிள்ளை மக்கு, வைத்தியர் பிள்ளை சீக்கு.
677 (b). Children unworthy of their parents are dime a dozen.

678 (a). பகிர்ந்த வேலை மிகுந்த சுலபம்.
678 (b). A job shared is swift and sweet.

679 (a). மனிதர்கள் பலவிதம், மனங்கள் பலவிதம்.
679 (b). Many men, many minds.

680 (a). நாவென்னும் கூரிய வாள்.
680 (b). A tongue can sting harsher than a whip and cut deeper than a sword.
 
681 (a). சட்டியில் இருப்பது அகப்பையில் வரும்.
681 (b) Nothing comes out of a sack but what was in it.

682 (a). செத்த பாம்பை அடிப்பது.
682 (b). To flog a dead horse.

683 (a). விழித்த முகம் சரியில்லை.
683 (b). To get out of one's bed on the wrong side.

684 (a). சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பார்.
684 (b). To give a lark to catch a kite.

685 (a). பிள்ளையார் பிடிக்கக் குரங்கானது.
685 (b). To go for wool and come back shorn.
 
686 (b). கிணறு வெட்ட பூதம் கிளம்பியது.
686 (a). Camel went looking for horns and came back without ears.

687 (a). பேனைப் பெருமாள் ஆக்குவது.
687 (b). To make a mount of a molehill.

688 (a). வேலியே பயிரை மேய்வது.
688 (b). To set a wolf to mind the sheep.

689 (a). அட்டை போல ஒட்டிக் கொள்ளுவது.
689 (b). To stick to someone like a leech.

690 (a). கடப்பாரையை எடுத்துப் பல் குத்துவது.
690 (b). To use a steam hammer to crack nuts.
 
691 (a). இரண்டு தப்புகள் ஒரு ஒப்பு ஆகா.
691 (b). Two blacks do not make a white.

692 (a). இருளில் செய்தது வெளிச்சம் ஆகும்.
692 (b). What is done by night appears by day.

693 (a). விரும்பிச் செய்வது கரும்பாக இனிக்கும்.
693 (b). Aptitude decides the attitude.

694 (a). மது உள்ளே, மதி வெளியே.
694 (b). When the wine goes in, the wit goes out.

695 (a). கசப்பை அறியாதவன் இனிப்பையும் அறியான்.
695 (b). He who has not tasted bitter, knows not what is sweet.
 
696 (a). கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.
696 (b). Wise after the event.

697 (a). முங்கி முங்கிக் குளித்தாலும் காகம் அன்னம் ஆகுமா?
697 (b). You can't wash charcoal white.

698 (a). பழம் தின்று கொட்டை போட்டவர்.
698 (b). A hard nut to crack.

699 (a). மனைவி இனியவள் ஆனால் கணவன் இனியவன் ஆவான்.
699 (b). A good wife makes a good husband.

700 (a). வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏற வேண்டும்.
700 (b). A man who fraternizes with wolves, must learn to howl and hunt.
 
701 (a). ஜாண் ஏறினால் முழம் சறுக்கும்.
701 (b). To struggle to make both ends meet.

702 (a). வாழ்வும் தாழ்வும் சில காலம்.
702 (b). Neither good fortune nor misfortune are permanent.

703 (a). வில்வப்பழம் தின்பார் பித்தம் போக,
பனம் பழம் தின்பார் பசி போக.

703 (b). Food can become a medicine and medicine can become a food.

704 (a). மேருவைச் சேர்ந்த காகமும் பொன் நிறம்.
704 (b). Proximity to great people makes you approximately great.

705 (a). பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் புளியமரம் ஏற வேண்டும்.
705 (b). The man who with a dog sleeps will wake up full of fleas.
 
706 (a). மொழி தப்பினவன் வழி தப்பினவன்.
706 (b). A broken promise leads to a broken friendship.

707 (a). வட்டிக்கு ஆசை, முதலுக்குக் கேடு.
707 (b). Greed breeds destruction.

708 (a). வரவுக்குத் தக்கபடி செலவு செய்.
708 (b). Learn to live within your means.

709 (a). வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
709 (b). For everyman on earth, there is always another more superior to him!

710 (a). முட்டையிட்ட கோழிக்கு வருத்தம் தெரியும்.
710 (b). The doer knows the difficulties.
 
711 (a). முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா.
711 (b). A crocodile never lets go of its prey nor does a fool his opinion.

712 (a). முன் வைத்த காலைப் பின் வைக்கலாமா?
712 (b). Quitters never win.

713 (a). முருங்கை பருத்தால் தூணாகுமா?
713 (b). True nature is hard to overcome.

714 (a). மூடக் கூட்டுறவு முழுதும் அபாயம்.
714 (b). A fool's friendship is full of perils.

715 (a). மடியில் கனம் இருந்தால் வழியில் பயம்.
715 (b). A tree laden with fruits invites stones.
 
716 (a). கடைந்த மோரில் குடைந்து வெண்ணை எடுப்பது.
716 (b). The ability to squeeze juice out of a stone.

717 (a). கனிந்த பழம் தானே விழும்.
717 (b ). The ripe fruit falls off the tree.

718 (a ). கரணம் தப்பினால் மரணம்.
718 (b). A hairline separates life from death.

719 (a).
கடல் மீனுக்கு நீச்சுப் பழக வேண்டுமா?
719 (b). A fish needs no swimming lessons.

720 (a). கடல் கொதித்தால் விளாவ நீர் எது?
720 (b). Man is powerless in front of the nature.
 
dear friends!

Quotes 251 to 260 have been posted in <veenaaramani.wordpress.com>

You are welcome to view them!. The images can be further enlarged by left

clicking on them.

with warm regards,
V.R.

 
721 (a). கடவுளை நம்பினோர் கைவிடப்படார்.
721 (b). God never forsakes those who trust in Him.

722 (a). கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
722 (b). Double tongued duper.

723 (a). சண்டி குதிரைக்கு நொண்டி சாரதி.
723 (b). To wrongs do not make a right.

724 (a). தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று.
724 (b). To escape by the skin of one's teeth.

725 (a). நித்திய கண்டம் பூரண ஆயுசு.
725 (b). Hope for the best and prepare for the worst.
 
726 (a). நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சுஆழம் காண முடியாது.
726 (b). Mind conceals more secrets than a sea its treasures.

727 (a). படிக்கிறது திருவாய் மொழி, இடிக்கிறது பெருமாள் கோவில்.
727 (b). To defeat one's own purpose.

728 (a). பல்லக்கு ஏற யோகம் உண்டு, உன்னி ஏற ஜீவன் இல்லை.
728 (b). To deserve is one thing, to enjoy is quite another!

729 (a). பழி ஓரிடம் பாவம் ஓரிடம்.
729 (b). Black sheep and scape goats.

730 (a). மனம் போல வாழ்வு.
730 (b). Mind can make a Hell out of Heaven and a Heaven out of Hell.
 
731 (a). மூத்தோர் சொல் வார்த்தை அமுதம்.
731 (b). Words of wisdom can win a kingdom.

732 (a). மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னிறம்.
732 (b). Greatness rubs in by close association.

733 (a). விரை ஒன்று போட்டால் சுரை ஒன்று முளைக்குமா?
733 (b). We grow what we sow.

734 (a). விதி எப்படியோ மதி அப்படி.
734 (b). Destiny shapes our decisions.

735 (a). வியாதிக்கு மருந்து உண்டு, விதிக்கு மருந்து உண்டா?
735 (b). Diseases can be cured but not destiny.
 
736 (a). விருப்பத்தால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
736 (b). What Love can't achieve, force can never achieve.

737 (a). ஆசை அறுபது நாள்; மோஹம் முப்பது நாள்.
737 (b). Infatuations are but short lived.

738 (a). வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
738 (b). Fraud backfires more often than not.

739 (a). வாழ்கிறதும் வீழ்கிறதும் வாயாலே.
739 (b). Tongues ruin more people than troubles.

740 (a). மிதித்தாரைக் கடியாத பாம்பும் உண்டோ?
740 (b). To revenge is human. To forgive is divine.
 
741 (a). முள்ளு மேல சீலை விழுந்தால் மெல்ல மெல்ல வாங்கணும்.
741 (b). Patience solves perilous problems.

742 (a). சரக்கு மலிந்தால் சந்தைக்கு வரும்.
742 (b). Demand and supply decide the value of an object.

743 (a ). மலையைத் துளைக்க சிற்றுளி போதாதா?
743 (b). A David can topple a Goliath.

744 (a). பொற்கலம் ஒலிக்காது; வெண்கலம் ஒலிக்கும்.
744 (b). Nobility is dignified; ruffians are raving mad.

745 (a). மண்டையுள்ளவரை சளி போகாது.
745 (b). As long as the cause exists, the effect will exist.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top