தொல்காப்பியம்
புறத்திணையியல் -ஸு-16
அறுவகைபட்ட பார்ப்பனப்பக்கமும்
ஐவகைமரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் எனோர் பக்கமும்
மறு இல் செய்தி மூவகை காலமும்
நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்
நால் இரு வழக்கில் தாபகப் பக்கமும்
பால் அறி மரபின் பொருந்ர் கண்ணும்
அனை நிலை வகயொடு ஆங்கு எழு வகையான்
தொகை நிலை பெற்றது என்மனார் புலவர்
மரபியல் - ஸு-71
நூலேகரகம் முக்கோல் மணையே
ஆயுங்காலை அந்தணர்க்குரிய -71
படையும் கொடியுங் குடியும், முரசும்
நடைநவில் புரவியும், களிறுந்தேரும்
தாரும், முடியும் நேர்வன பிறவும்
தெரிவுகொள் செங்கோல் அரசர்க்குரிய -72
அந்தணளார்க்கு உரியது அரசர்க்கு
ஒன்றிய வருஉம் பொருளுமார் உளரே -73
பரிசில் பாடாண் திணைத்துறைக் கிழமைப்பெயர்
நெடுந்தகை செம்மல் என்று இவை பிறவும்
பொருந்தச்சொல்லுதல் அவர்க்கு உரித்தன்றே -74
ஊரும் பெயரும் உடய்த்தொழிற் கருவியும்
யாரும் சார்த்தி அவை அவை பெறுமே - 75
தலமைக்குணச்சொல்லும் தம் தமக்கு உரிய
நிலைமைக்கு எற்ப நிகழ்த்துப என்ப - 76
இடை இரு வகையார் அல்லது நாடின்
படை வகை பொறாஅர் என்மனார் புலவர் - 77
வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை - 78
மெய் தெரி வகையின் எண் வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பாலான. - 79
கண்ணியும் தாரும் எண்ணியர் ஆண்டே - 80
வேளாண் மாந்தாக்கு் உழுதூண் அல்லது
இல் என மொழிப பிற வகை நிகழ்ச்சி - 81
வேந்து விடு தொழிலின் படையும் கண்ணியும்
வாய்ந்தனர் என்ப அவர் பெறும் பொருளே - 82
அந்தணளார்க்கு அரசு வரைவு இன்றே - 83
வில்லும் வேலும் கழலும் கண்ணியும்
தாரும் மாலையும் தேரும் மாவும்
மன் பெரு மரபின் ஏனோர்க்கும் உரிய - 84
அன்னர் ஆயினும் இழிந்தோருக்கு இல்லை - 85
குறிப்பு
இங்கு பல ஸுத்திரங்களால் நான்கு வகுப்புக்கள் குறிக்கப்பட்டன
அவை - பார்ப்பனர்/அந்தணர்,அரசர்/மன்னர்,வைசிகன்,வேளாளர்
பூணூல்(நூல்),கமண்டலம்(கரகம்),த்ரிதண்டம்(முக்கோல்),ஆஸனம்(மணை) அந்தணார்க்கு - 71 ஸ்ரீவைஷ்ணவ ஸன்னியாஸிகள் இன்றும் முக்கோல் ஏந்துகிறார்கள்
இவை அரசர்க்கும் உண்டு - 73
பரிசில் பெறுவோர்,நெடுந்தகை,செம்மல் என அரசரை சொல்லலாம், அந்தணரை சொல்லக்கூடாது- 74
நான்கு வகுப்புக்களுக்கும் ஊர்ப்பெயர்,தொழில்,கருவி சேர்த்து சொல்லலாம் - 75
அரசர்,வைசிகன் - படை வகை உண்டு, ஏனயோர்க்கு இல்லை. - 77
எட்டு தான்யங்கள்-உற்பத்தி, விற்றல் வணிகர்க்கு உண்டு - 79
வேளாளர்க்கு உழுதல், அதைக்கொண்டு உண்பது, வேறு ஒன்றும் இல்லை - 81
அந்தணர்கள் அரசாளக்கூடாது. - 83
செல்வந்தராயினும் தன் வகுப்பு தொழிலை விட்டவர் இழிந்தோர் - 85
தர்ம சாஸ்த்ரங்களிலும் இவை(பதிதன்) சொல்லப்பட்டவையே
கற்பியல் - ஸூ-51
காமஞ்சான்ற கடைக்கோட்காலை
ஏமன்சென்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
-இஙகு வானப்ப்ரஸ்த ஆஸ்ரம முறை சொல்லப்படடது.
புறத்திணையியல் -ஸு-16,17
நால் இரு வழக்கில் தாபகப் பக்கமும் - 16
அருளோடு புணர்ந்த அகற்சியானும் - 17
- துறவு பேசப்பட்ட்து
கற்பியல் ஸூ-1
கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொளற்குரிய மரபின் கிழவன் கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே
-இங்கு தாய் தந்தை பெண்ணை கன்னிகாதானம் செய்யும் ப்ரகரணம் சொல்லப்பட்டது
களவியல் ஸூ-1
இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங்காணுமங்காலை
மறையார் தேயத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்வாழ்த் துணைமையோர் இயல்பே
-இங்கு தர்ம சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட எட்டு விவாஹ முறையும் அவற்றுள் காந்தர்வ விவாஹமும் பேசப்பட்டன
முன்னய மூன்றும் கைக்கிளை குறிப்பே - 14
பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே - 15
-:ப்ராஹ்மம்,ப்ராஜாபத்யம்,ஆர்ஷ்ம்,தெய்வம் முதலியவை அறம் என்றும்,
-ஆஸுரம்,ராக்ஷஸம்,பைஸாசம் முதலியவை செய்யத்தகாதவை என்றும் கூறுகிறார்.
மேலோர் மூவர்ககும் புணர்ந்த கரணம்
கீழோர்க்கு ஆகிய காலமும் உண்டே - கற்பியல் - 3
-அந்தணர்,அரசர்,வணிகர்க்கு உரிய முறைகள் வேளாளர்களுக்கும்
ஏற்பட்டது.
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (கற்பு - 4)
-பொய் கூறுதல், சொன்ன பேச்சைக் காபாற்றதல்- முதலிய காரணங்களால்
அந்தணர் வைதீகச்சடங்கை வகுத்தனர்.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவு, நிறுத்த காமவாயில்
நிறையே,அருளே, உணர்வொடு திருவென
முறையுறக்கிளன்த ஒப்பினது வகையே - மெய்ப்பாட்டு இயல் - 25
-இங்கு தலைவன் தலைவியரின் தகுதியைக் கூறுமிடத்து பத்து வித ஒற்றுமையில்
பிறப்பையும் ஒரு ஒற்றுமையாக்குகிறார். பிறப்பு என்பதற்கு அந்தணர்,அரசர்,வணிகர்,குறவர்,
கூறுவர்,வேடுவர் போன்ற குலத்தை குறிப்பிடுவதாக இளம்பூரணர் கூறுகிறார்.