S
samarapungavan
Guest
புறநானூறு - 166 (26-1-4)
நன்றாய்நத நீ ணிமிர் சடை முது முதல் வன்வாய்போகா-
தொன்று புரிந்த வீரிரண்டின் ஆறுணர்ந்த வொருமுது நூல்
பரிபாடல் 3 (10,11)
மாயோய் நின்வயிற் பரந்தவையுறைத்தேம்
மாயா வாய் மொழி
ஆரிநீர்க்களிப்பிய அரன்நவில் கொள்கை
மூன்று வகை குறித்த முத்தீச்செல்வத்து
இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல
-இங்கு நால்வேதங்கள், ஆறு வேதாங்கங்கள் பேசப்படுகின்றன.
அதன் நித்யத்வம், அபௌருஷேயத்வம் பேசப்படுகின்றன.
பெரும்பாணாற்றுப்படை 300-301
வளைவாய்க்கிள்ளை மறைவிளி பயிற்றும்
மறைகாப்பாளர் உறைபதிச்சேப்பின்
-இங்கு வேதம் பயிற்றுவிக்கும் முறை சொல்லப்பட்டது. கிளிப்பிள்ளை போல
அத்யயனம் செய்யும் முறை - சந்தை-திருவை சொல்லப்பட்டது.
பதிற்றுப்பத்து 24 (68)
ஓதல் வேட்டலவை பிறர்ச்செய்தல்
ஈதலேற்றலென்றாறுபுரிந்தொழுகும்
அறம்புரியன்தணர் வழிமொழிந்தொழிகி
-இங்கு அறம்புரியன்தணர் ஆறு புரிந்தொழுகும் செயல்கள் ஓதல்,வேட்டல், இவைகளை
பிறருக்கு செய்தல்-ஓதுவித்தல்,வேட்டுவித்தல் மற்றும் ஈதல்,ஏற்றல் என்பவை சொல்லப்பட்டது.
.
மேலும்,
நான்மறை முனிவர் - புறநானூறு 6
நான்மறை முதல்வர் - புறநானூறு 26,93
கேள்வி உயர்ந்தோர் - புறநானூறு 229
அருமறை அந்தணர் - சிறுபாணற்றுப்படை 204
நான்மறையோர் - பட்டினப்பாலை 202
வேள்வி அந்தணர் - புறநானூறு 361
வேள்வி மடித்த கேள்வி அந்தணர் - பதிற்றுப்பத்து
- இவ்வாறு வேள்வி யாகம் என்பதும், கேள்வி வேதம் என்பதும் புலனாகிறது.
ஐங்குருனூறு 202 (1-3)
நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப்போலத்
தாமும் குடுமித்தலய
-பார்ப்பனர் குடுமித்தலை பேசப்பட்டது
திருமுருகற்றுப்படை - 182,187 (முருகனை வழிபடுதல்)
இருபிறப்பாளர் பொழுதரிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் புலராக்கழகம் புலர
உடிஇ உச்சிக்கூப்பிய கையினர், தற்புகழ்ந்து ஆறு எழுத்து
அடக்கிய அருமறைக்கேள்வி நா இயல் மருங்கில் நவிலப்
பாடி விரை உறு நறுமலர் ஏந்தி-பெரிது உகந்து எரகத்து
உறைதலும் உரியன்.
-இருபிறப்பாளர்(அந்தணர்,அரசர்,வைசிகர்)
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண்ஞாண் - பூணூல்
- அருமறைக்கேள்வி- வேதம்
.-ஒன்பது, அதாவது மூன்று முப்புரி நூல் அணிதல் இன்றும் வழக்கத்தில் உள்ளது.பெரும்பாலும் இன்று மூன்று(ப்ரஹ்ம்மசாரி),ஆறு(க்ருஹஸ்தர்). சில சன்யாஸிகள் ஒன்பது அணிகிறர்க்ள்
இனி ஒரு அழகான பரிபாடல் இதோ:
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமாரைப்
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்து
அரும்பொருட் டனைத்தே அண்ணல் கோயில்
தாதி னனையர் தண்டமிழ் குடிகள்
தாதுண்பற வையனயர் பரிசின் வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினில் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குர லெடுப்ப
ஏமவின் துயி லெழத லல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியி னெழஆதெம் பேரூர் துயிலே
- மாயோன்(திருமால்) கொப்பூழ்(தொப்புள்) மலர்ந்த தாமாரைப் பூவினுள் பிறந்தோன் (நான்முகன்-ப்ரஹ்மா))நாவினில பிறந்த நான்மறைக் கேள்வி(வேதம்).
குறுந்தொகை - 156
செம்பூ முருக்கினன்னார் களைந்து
தண்டொடு பிடித்த தாழ்கமண்டலத்துப்
படிவ உண்டி பார்ப்பன மகனே
-பலாச தண்டம், கமண்டலம் தரித்து விரதம் இருத்தல்
- இவ்வாறு வேதம் கேள்வி,நான்மறைக்கேள்வி,நான்மறை,மறை,முதுமொழி,நிறைமொழி,
வாய்மொழி,அருமறைக்கேள்வி என்று தொல்காப்பியம் மற்றும் சங்க இலக்கியங்களிலும் குறிக்கப்பட்டிருக்கிறது.
மதுரைக்காஞ்சி - 656-657(அந்தணர் அதிகாலையில் வேதம் ஓதுதல்)
ஓதல் அந்தணர் வேதம் பாட, சீர் இனிது கொண்டு
நரம்புஇனிது இயக்கி
கலித்தொகை - 119 -12,13(அறுதொழில் அந்தணர் தீயை வழிபடுதல்)
அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து செந்தீச்செவ்வழல்
தொடங்க வந்ததை அறுதொழில் அந்தணர் அறம் புரிந்து
எடுத்த தீயொடு விளங்கும் நாடன், வாய்வாள் வலம்படு
தீவின்பொலம் பூண்வளவன்