பாட்டி மன்றம்
இப்போது தமிழ்நாட்டில் பட்டி மன்றங்கள் பெருத்துவிட்டன. ஏதாவது ஒரு விசேஷ நாள் என்றால் நிச்சயம் எல்லா டிவி சேனல்களிலும் ஏதாவது ஒரு பட்டி மன்ற நிகழ்ச்சி இருக்கும். இவற்றில் ஏதோ ஒரு தலைப்பைக்கொடுத்து அதை ஒட்டி ஒரு சாரார், வெட்டி ஒரு சாரார் பேசுவது என்பது ஒரு வழக்கம் ஆகிவிட்டது. இன்று பலர் நம் பண்டிகை நாட்களுக்காக ஆவலுடன் காத்து இருப்பது, அந்தப் பண்டிகைகளுக்காக அல்ல. அன்று நடக்கும, நடக்கவிருக்கும் பட்டி மன்றங்களுக்குத் தான். ஆக நம் பண்டிகைகளைவிட பட்டி மன்றங்கள் பிரசித்தி அடைந்து விட்டன. அவரவர்கள் அவரவர்களின் வீட்டு ஹாலில் உட்கார்ந்த படியே டிவியில் பட்டி மன்ற நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழ்ச்சி கொள்கின்றனர்.
பேச்சாளர்களில் பெரும்பாலோர் அழகாக, மக்களை ஈர்க்கும் வித த்ததில் நகைச்சுவையுடனும், இலக்கியச் சுவையுடனும் பேசுவார்கள். சிலர் பேச்சு வழக்கு முறையிலேயே பேசி சொல்ல வேண்டியவை எல்லாம் சொல்லி மக்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பார்கள். ஒரு சிலர் ஆபாசமாகப்பேசுவதையே நகைச்சுவையாகக் கருதி தங்கள் மனவக்கிரங்களை வெளிப்படுத்துவார்கள். இவர்களுக்கு என்றே ஒரு கட்சியின் ஆதரவும் இருக்கும். ஆனால் பொதுவாக இந்த பட்டி மன்றங்கள் பலவும் கட்சி சார்போ, அரசியல் சார்போ இன்று வரை இல்லாமல் இருப்பது நாம் செய்த பேறாகும்.
பட்டி மன்றம் ரசிப்பதற்கென்றே இன்று பெரும்கூட்டம் இருக்கிறது. இவர்கள் பேசும் தலைப்பு சமூக பிரச்சினைகள் பற்றி இருக்கலாம். இல்லை, குடும்பப் பிரச்சினையாகவும் இருக்கலாம் அல்லது அவரவர்கள் அன்றாடம் சந்திக்கும் தனிப்பட்டவர்கள் பிரச்சினையாகக் கூட இருக்கலாம். எந்தப் பிரச்சினைக்கும் இரு பக்கம் உண்டு என்ற மகத்தான உண்மையின் அடிப்படையில்தான் பேசுவதற்கான பிரச்சினைகளும்தலைப்புகளும் தேர்ந்து எடுக்கப்படுகின்றன. நடுவர் ஒருவர் இருந்து கொண்டு ஆதரிப்போர் மூவரோ நால்வரோ ஒரு பக்கமும், எதிர்ப்போரும் மூவரோ நால்வரோ இனஃனொரு பக்கமும் இருந்துகொண்டு ஒருவர் பேசத் தொடங்க , அவர்முடித்த உடன் அவரை எதிர்த்துப் பேசுபவர் பேச இப்படி இரு கட்சியினரும் மொத்தமாக அந்தத்தலைப்பை தங்கள் தங்கள் பாணியில் அலசித்தீர்த்து பேச , இவர்களின் உரை முடிந்த உடன் நடுவர் தம் தீர்ப்பை சொல்லுவார். இதுதான் இன்றைய பட்டிமன்ற நடைமுறை.
பட்டி மன்றத்துக்கு என்று நேரத்திற்கு ஏற்ப தலைப்பை தேர்ந்து எடுத்தல் என்பது ஒரு கலை. இன்றுள்ள நம் பிரச்சினைகளோ ஏராளம். எனவே தலைப்புகளுக்குப் பஞ்சமில்லை். ஆனால் எடுத்துக்கொள்ளும் தலைப்புகள் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போன்று இல்லாமல் பயனுள்ளதாகவும் கேட்பவர்களுக்கு சந்தோஷம் அளிப்பதாகவும் இருக்க வேண்டுமேயன்றி ஒருவர்கொருவர் வாய்வார்த்தை தடித்து கைகால் உரசலிலோ, சண்டையிலோ முடியக்கூடாது என்பது அறிவிக்கப்படாத விதியாகும். பட்டி மன்றம் பார்த்தவர்கள் அது முடிந்தவுடன் தங்களுக்குள் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு விவாதிப்பதை நான் பார்த்து இருக்கிறேன்.
ஒரு நாள் விசாலாட்சி பாட்டி ஒரு பட்டி மன்றத்தைப்பார்த்தவுடன் அதனால் இம்ப்ரஸ் ஆகி ஏன் நாமும் பெண்களை வைத்து மட்டும் பட்டி மன்றம் நடத்தக்கூடாது என்று தீர்க்கமாக யோசித்து ஏன் இளைஞர்கள் மாத்திரம் இதில் பேசவேண்டும், வயதானவர்கள் தங்கள் பிரச்சினையையையும் குறிப்பாக வயதான பெண்களின் பிரச்சினையையும் யாரும்பேசுவதில்லையே. ஏன் பட்டி மன்றங்களைப் பாட்டி மன்றங்கள் ஆக்கி அதில் வயதான பெண்களை பேசவைக்கக் கூடாது என்று தோன்றவே. அவர் போனில் காது கேடஃகும் பாட்டிகளுக்கெல்லாம் போன்செய்து அவர்களிடம் தனக்குத்தோன்றிய இந்த மகோன்னத ஐடியாவைப் பற்றிச் சொல்ல தங்களுக்குப் பேசுவதற்கே சந்தர்ப்பம் தராத இந்த சமூகத்தில் தங்களுக்கு பேச சான்ஸ் அளிக்கும் இத்தகைய பாட்டி மன்றங்களை. ஏன் ஆரம்பிக்கக கூடாது எனக் கருதி, பல பாட்டிகளும் இதற்கு தங்கள் ஒப்புதலைத்தர. பாட்டி மன்றம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
அதில் முதல் தலைப்பாக வீடுகளில் அதிகமாக மதிக்கப்படுபவர்கள் தாத்தாக்களா இல்லை பாட்டிகளா என்ற தலைப்பில் பாட்டி மன்ற துவக்க தலைப்பாக அங்கீகரித்து அதற்கு ஒரு நடுவராக தங்களுள் ஒருவரான எச்சிப்பாட்டியை தேர்வு செய்து, ஒரு முன்னாள் பெண் மந்திரியான பரிமளவல்லியை அழைத்து விழாவைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
இதோ முதல் பாட்டி மன்றம் ராணி லட்சுமி அரங்கில் கோவிட் காரணமாக 1000 பேர் உட்காரும் அரங்கில் 500 பேர் முக கவசம் அணிந்து இனிதே துவங்கியது. ஏற்கனவே பற்கள் போய், பேசும் வார்த்தைகள் தெளிவாக வராத காரணத்தினால் அவர்கள் பேசுவதை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் பேசுபவர்கள் மாத்திரம் மைக்கிற்கு மூன்றடி அப்பால் நின்று முக கவசத்தைக் கழட்டி விட்டுப் பேசலாம் என்று விதிதளர்த்தப்பட்டது. பட்டி மஃறத்தில் நுழைவோர் அனைவருக்கும் சானிடைசர் வழங்கப்பட்டது. அவர்கள் கைசுத்தம் செய்து கொண்ட பின்னர்தான் அரங்கத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வீட்டிற்கு உபயோகமானவர்கள் தாத்தாக்களா, பாட்டிகளா என்ற தலைப்பில் பாட்டி மன்றம் ஆரம்பம் ஆகியது. நான் அதை சுருக்கமாக விளக்குகிறேன்.
வழக்கம்போல நடுவர் தம் துவக்க உரையில் அங்கு கூடியுள்ள பெருமக்களுக்கும், பட்டி மன்றம் நடத்த அரங்கம் வழங்கிய ஆரவல்லி அம்மைக்கும், இதை உலகெங்கும் ஒலிபரப்ப ஏற்பாடு செய்திருந்த தாரகை சேனலுக்கும் தம் நன்றியைத்தெரிவித்து விட்டு, இன்றைய தலைப்பு வீட்டிற்கு அதிக உபயோகமானவர்கள் தாத்தாக்களா. இல்லை, பாட்னிகளா என்ற தலைப்பில் பேசுவார கள். என்று பாட்டிகளே என்று பாட்டிளை ஆதரித்துப்பேசும் தன் வலது பக்கம் உட்கார்ந்து இருந்த பாட்டிகள் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினார்.
டாக்டர் மந்தாகினி என்ற 70 வயதான இளம் பாட்டி, 75 வயதான விநோதினி என்ற ஓய்வு பெற்ற கல்லூரிஆசிரியை, 76 வயதான ஒரு இல்லத்து ராணி இசைஅரசி ஆகியோர் தாத்தாக்களை ஆதரித்தும், பிறகு தன் இடது பக்கம் அமர்ந்திருந்த பாடகி கஜ லட்சுமி 60, ஸ்லோகம் சுந்தர வல்லி75, மற்றும் அலட்டல் அல்லிராணி72 என்று பாட்டிகளை ஆதரிக்கும் மூவரையும் அறிமுகப்படுத்த கோலாகலமாக பாட்டி மன்றம் ஆரம்பம் ஆகியது.
முதலில் டாக்டர் மந்தாகினி தொடங்கினார்: வழக்கம்போல் அங்கு வந்திருந்த , கோவிட்டினால் வர வேண்டும் என்று விரும்பினாலும் வர இயலாது போனவர்களுக்கும் அகில உலகத் தமிழர்களுக்கும் தன் வணக்கத்தைத் தெரிவித்து தான் இன்னும் இருக்கும் ஐந்து நிமிடங்களில் என்ன சொல்லவேண்டுமோ அனைத்தையையும் சொல்லிவிடுவதாக கூறினார்.
தாத்தாக்கள் என்றால் தன் குடும்பத்துக்காக உழைத்து உருக்குலைந்து எப்படி அவர்கள் தங்கள் சௌகரியத்தைக் கருதாமல் தங்கள் குழந்தைகளுக்காகப் பாடு பட்டனர் என்பதை தான் டாக்டர் ஆகவேண்டும் என்று ஆசைப்பட்ட தன் தாத்தா எப்படி எல்லாம் கஷ்டப்பட்டார் என்பதை கண்முன் கொண்டு நிறுத்த, ஒரு சில பாட்டிகள் கண்ணீர் சிந்த , சிலர் மூக்கைத்துடைத்துக் கொண்டு தங்களின் வாழ்க்கையை ரீவைண்ட் செய்து கொண்டு அவ்வப்போது முடிந்த வரையில் கைதட்டி ஆதரித்தனர்.
ஆகா என்ன அருமையாகச்சொன்னார் தன் தாத்தா தனக்காக கஷ்டப்பட்டதை என்று விளக்கி அவர் பேச்சைப் புகழ்ந்து “சரி இந்தப்பக்கம் இவர் பாட்டிகளைப்பற்றி என்ன சொல்லப்போகிறார் என்று பார்ப்போம். “பாடகி வாங்ககஜலட்சுமி அம்மையாரே வாங்க” என்று அவரைப்பேச அழைத்தார்.
பாடகி கஜலட்சுமி அம்மையார்:
******************
இந்த உலகிற்கெல்லாம் நீதி வழங்கிய திருக்குறள் தந்த வள்ளுவரை நாம் வள்ளுவர் என்று மட்டுமே கூறுகிறோம். வள்ளுவர் தாத்தா என்று சொல்வதில்லை. ஆனால் உலகுககே எளிய தமிழ் மூலம் ஆத்திசூடி , கொன்றைவேந்தன் போன்ற அறிவுரை தந்தவரை ஔவைப்பாட்டி என்று இன்றும் போற்றிப் புகழ்கிறோம். பாட்டி என்ற சொல்லுக்கே மரியாதை கொடுத்தவர் ஔவைப்பாட்டியாகும் என்பதை அழுத்தம் திருத்தமாக அடித்துச் சொல்லி எப்படி பழந்தமிழ் காலத்திலே இருந்தே பாட்டிகள் பெருமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் என்று தன் பாட்டி தான் இன்று நான் பாடகியாக, இசை ராணியாக வலம் வருகிறேன் என்றால் அதற்கு என் பாட்டியே காரணம். எப்படி நான் என் அம்மாவின் கருவில் இருந்தபோதே என் பாட்டியின் பாடல்களைக்கேட்டு இனி என்வாழ்வே பாட்டுதான் என்று தீர்பானித்துக்கொண்டே பிறந்தேன் என்பதை அபிமன்யுவின் கதையைச்சொல்லி விளக்க பல பாட்டிகளும் கேட்டுப் பரவசம் அடைந்தனர். இதுவே ஒவ்வொரு வீட்டிலிருந்தும் மறைக்கப்படும் மாபெரும் உண்மை என்றார். தந்தைசொல் மிக்கதோர் மந்திரமில்லை என்ற அவ்வைப்பாட்டி , தாத்தா சொல் மிக்கதோர் தந்திரமில்லை என்றாவது சொன்னாரா இல்லையே. ஒரு ஈசி சேரிலே உக்கார்ந்து கொண்டு உலக அரசியல் பேசறதைத் தவிர இவங்க என்னத்தைக்கிழிச்சாங்க என்று ஊய் ஊய் சத்தத்துக்கிடையே சொல்லி அமர்ந்தார்..
விசிலடிக்க வராததால் சில பாட்டிகள் தங்கள். கைகளை மேல் நோக்கி உயர்த்தி சபாஷ் போட்டனர்.சிலர் கை தட்டினர்.
நடுவர்: சபாஷ். நல்ல பாயிண்டைச்சொல்லி இருக்கார். இப்ப விநோதினி அம்மையார் தாத்தாக்களை பற்றி என்ன பேசுவார், பார்ப்போம். இவ்வளவிற்கும் இவர் பெண்கள் கல்லூரியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பேராசிரியையே. வாங்க
பேராசிரியை வினோதினி:
****************
சற்று முன் பேசியவர் அழகாகப் பேசினார் ஔவைப்பாட்டி பற்றி. நான் அதை மறுக்கவில்லை. ஆனால் அவர் தாத்தாக்களைப்பற்றி இழிவாக பேசுவதை ஒரு போதும் ஆதரிக்கமாட்டேன். இன்று தமிழ் கூறும் நல்லுலகில் தாத்தா என்றாலே உ வே சாமினாத அய்யரையே அது குறிக்கும் என்பது பாடகி அம்மையார் வேண்டுமானாலும் மறந்து இருக்கலாம், தமிழை மறந்தது போல. ஆனால் தமிழ்கூறும் நல்லுலகம் ஒரு போதும் அதை மறவாது. மறக்கும் அளவிற்கு நன்றி கெட்டவர்கள் நாங்கள் அல்ல. பாட்டி என்ற சொல்லுக்கு மரியாதை ஔவைப்பட்டி தந்தார். நான் அதை இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் தமிழுலகில் தாத்தா என்ற சொல்லுக்கு மிகப் பெரிய மரியாதையையும்புகழையும் சேர்த்தவர் எங்கள் தமிழ் தாத்தா என்பதை் மறக்க முடியாது.அது மட்டுமா, இந்திய நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மாவைவநாம் அன்புடன் காந்தி தாத்தா என்று அழைப்பதில்லையா? ஔவைப்பாட்டி ஒரு பாட்டிதான். ஆனால் மதிப்புக்குரிய. தாத்தாக்கள் இருவர். எனவே தாத்தாக்களை குறைவாக மதிப்பிட வேண்டாம்.
(நடுவர்: சபாஷ். சரியாக சொன்னார். அடுத்தபடியாக ஸ்லோகம் சுந்தரவல்லியார்
என்ன சொல்கிறார் பார்ப்போம். வாங்க
சுந்தரவல்லி அம்மையார்பேராசிரியர் வினோதினி அவர்கள்தாத்தாக்ளின் பெருமையை நன்றாக எடுத்துச் சொன்னார்.***************
ஆனால் இன்றைய தலைப்பு வீட்டுக்கு அதிக உபயோகமானவர்கள் தாத்தாக்களா, பாட்டிகளா என்பது தான். ஔவையார் வாழ்க்கைக்கான மூதுரைகளை, நன்னெறிகளை எடுத்துச்சொன்னார். உவேசா அவர்கள் தமிழ் இலக்கிய உலகத்திற்குப் புத்துயிர் அளித்தார். அதை நான் மறுக்கவும் இல்லை. மறக்கவும் இல்லை. ஆனால இவர்கள் வீட்டிற்கு எந்த அளவு உபயோகமாக இருந்து இருக்கிறார்கள் என்பதுதான் கேள்வி. ஔவைக்குக்குடும்பம் இரு்ததாக சரித்திரமே கிடையாது. அவர் நாடு நாடாக ,் மன னர்களை சந்தித்து அவர்களக்கு அறிவுரை வழங்கியும், அறநெறிகளைக்கூறியும், அவர்களுக்குள் சண்டை வரும போது அதைத்தவிர்ப்பதிலும் ஈடுபட்டிருத்தாரே ஒழிய,வீடு என்று இல்லாத ஒருவர் இல்லாத ்தன் வீட்டிறஃகு எவ்வளவு உபயோகமாக இருந்திருப்பார் என்பதை நீங்களே ஊகியுங்கள்.எனவே அவர் நாட்டுக்கான புலவரே அல்லாது வீடடுக்கான புலவர் அல்ல. உவேசா ஐயரும் தமிழ் ஓலைச்சுவடுகளைத்டிதேடிக்கண்த் அவற்றை நாட்டுக்கு வழங்குவதிலே முழு மூச்சுடன் இறங்கியவரே அல்லாது, அவர் வீட்காடிற்க கடைககுச்சென்று ஒரு வாழைக்காய் கூட வாங்கி இருக்கமாட்டார்.
எனவே இந்த இருவரையும் உதாரணமாக இந்தப்பட்டி மன்றத்தில், மன்னிக்கவும், பாட்டி மன்றத்தில் அவர்கள் பெயரை இழுப்பதே தவறு. அன்றாடம் வீட்டில் ்நம்தாட்டுக்கலாசாரத்தையும், பழக்க வழக்கங்களையும் கட்டிக்காப்பவர்கள் யார்? பெண்கள்தானே, அதிலும் குறிப்பாகப்பாட்டிகள்தானே. காலம்காலமாக நம் பழக்க வழக்கங்கள் இன்று வரையில் அழிந்து போகாமல் காப்பாற்றி வந்தவர்கள் பாட்மாடிர்களஏ என்பதில் எள்ளளவும், எள்ளு முனையளவும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. நான் எனக்குத்தெரிந்த நாளில் இருந்து, சுப்ரபாதம் சொல்லி வருகிறேன், விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி வருகின்றேன். மார்கழி வந்தால் திருவெம்பாவை சொல்கிறேன். தை பிறந்தால் கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் அரலங்காரம் சொல்லி வருகிறேன், ஒவவொரு மாதப்பண்டிகையின் போதும் சொல்லவேண்டிய மந்திரங்களையோ, தெய்வீகப்பாடல்களையோ பாடி வருகிறேன். இன்று நம் மதம் உயிரோடு இருக்கிறது என்ற
ல் என்னை மாதிரி பாட்டிமார்கள்தான் காரணம் என்று அடி்த்துச்சொல்வேன். இதை உங்களால் மறுக்கமுடியுமா? 100 க்கு 90 வயதான எங்களைப் போன்ற பெண்கள் தான் நம்கலாசாரத்தைக்கட்டிக் காக்கிறோம். கல்யாணம் என்றால் என்னென்ன எப்படி எப்படி செய்யவேண்டும் என்ற பத்ததி முறைகளை நாங்கள்தான் காத்து வருகிறோம். வயதான் ஆண்களில் 100க,கு 10 பேர் வேண்டுமானால் இவற்றை தெரிந்து வைத்து இருக்கலாம், புரோகிதர், சாஸ்திரி. குருக்கள் போன்றோர் தெரிந்து வைத்திருக்கலாம். மத்த தாத்தாக்கள் எல்லாம் ஏதாவது விசேஷம் எனறால் எங்கள் கிட்டே வந்து என்ன செய்ய வேண்டும் என்று இன்று வரையில் கேட்டு்த்தான் செய்கிறார்களே ஒழிய, அவர்களாக செய்தார்கள் என்பது கிடையாது. எனவே வீட்டிற்கு பாட்டிகளே அதிக உபயோகமாக இருக்கிறார்கள் என்பது எதிர் கட்சியினரும் மறுக்க முடியாது
நடுவர்: ஒரே போடா போட்டுட்டாங்க. உண்மைதானே.. இதை யாராலும் மறுக்க முடியாதுதான். சரி. அடுத்து இசை அரசி இப்ப. எப்படி பதில் சொல்லப்போறாங்கன்னு பாப்போம் வாங்க
இசை அரசி: எனக்கு முன்னே பேசிய அம்மையார்கள் பாட்டிகளின் புகழ் பாடினார்கள். அவர்களுக்கெல்லாம் நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன், டாக்டர் மந்தாகினி 70 வயது டாக்டர். அந்த்காலத்தில் பெண்கள் 12ம் வகுப்பே தாண்ட முடியாத தேரத்தில் அன்று அவரின் தாத்தா அவரை எவ்வளவு துணிச்சலுடன, டாக்டருக்குப் படிக்க வைத்து இருப்பார். தாத்தாக்கள் மாத்திரம் தாம் உண்டு தங்கள் மூக்குப்பொடி டப்பா உண்டு என்று ஒரு மணிக்கு ஒருதரம் மூக்குப்பொடி போட்டுக்கொண்டு தும்மிக்கொண்டு இருந்திருந்தால் அவருக்கு தன் பெண்ணையோ, பேத்தியையோ, படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து இருக்குமா? யோசிக்கும் அறிவு உள்ளவர்களே யோசியுங்கள். அவர் தன் குழந்தைகளின் எதிர்காலம் கருதி வெளி ஊருக்கெல்லாம் அனுப்பி செலவு செய்து படிக்க வைத்ததை மறந்து பேசலாமா? அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று எண்ணிய காலத்தில் ஒரு ஒரு துணிவான, தீர்க்கமான முடிவு எடுத்ததைப்பாராட்ட வேண்டாமா? மேலும் படிப்பே இல்லாத பாட்டிகளால் நம் பண்பாடு தெரிந்தால் மட்டும் என்ன செய்து இருக்க முடியும்?. தாத்தாக்கள் சம்பாதித்து உங்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுத்ததால்தானே நீங்கள் நம் நாட்டின கலாசாரத்தைக்காப்பாற்ற முடிகிறது. வெறும் வாயளவு தெரிந்திருந்து என்ன பயன்?! எனவே அவர்கள் இல்லாவிடாட்டால் உங்கள் பலரின் அட்ரஸே இல்லாமல் போயிருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நடுவர்: புரட்டி அடிச்சுட்டூங்க. அடுத்ததுஅல்லி ராணி வாங்க.
அல்லி ராணி: தாத்தாக்கள் ஆதரவு இன்றி பாட்டிகள் எதையும் செய்ய முடியாது என்று ஒரு கால் இருந்தது உண்மைதான். அது எப்போது பெண்கள் உத்தியோகத்துக்கு போக ஆரம்பித்தார்களோ அப்பவே அடிபட்டுப்போய் விட்டது. காலம் மாறிவிட்டது. இப்போது எந்தப்பாட்டியும் தன் பேரனோ, பேத்தியோ, தன்னை பாட்டி என்று கூப்பிடுவதை விரும்புவதில்லை தெரியுமா?
நடுவர்: அப்படியா ஏன்?
அல்லிராணி; ஆம் நடுவரே. அமெரிக்காவில் குழந்தைகள் டாய்லெட்டிரெயினிங்கின்போது பயன்படுத்தப்பயன்படும் ஒரு வகை கம்மோடு.அதன் பெயர் பாட்டி எனப்படும். எனவே prof வினோதினி சொன்னாற்போல பாட்டி என்ற வார்த்தை மரியாதை இழந்து விட்டது. அதற்குப்பதில் பாட்டிகளை, குழந்தைகள் grandma என்று அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
நடுவர்: ஓகோ, அப்படியா?
அல்லி ராணி: ஆமாம். சுந்தரவல்லி அவர்கள் நாங்கள் நம் கலாசாரத்தைக் கட்டிக்காக்கிறோம் என்று சொன்னார்கள். அது 100க்கு 110. உண்மை. அவர் இன்னொரு மிக முக்கியமான பாயிண்டை நேரம் இன்மையால் சொல்லாமல் விட்டு விட்டார் என்று நினைக்கிறேன். நம் நாட்டுக்கென்று ஒரு சமையல் பக்குவம், ஒரு சமையல் சுவை இருப்பது உலகப் பிரசித்தம்., இதை எத்தனை நூறு வருடங்களாக நாங்கள் கட்டிக்காக்கிறோம் தெரியுமா? எங்கள் அருமை உங்களுக்கு இப்போது தெரியாது. வெளி நாட்டுக்குப்போய் நாலாவது நாளிலேயே உங்க நாக்கு செத்தா அப்ப தெரியும். உங்களுக்கு எங்க அருமை, பெருமை எல்லாம். அமெரிக்கா போற நம்ம பசங்க, பொண்ணுங்க எல்லாம் கொஞ்ச நாளிலேயே ஏன் அவங்க அம்மாவை வருந்தி வருந்தி அழைக்கிறாங்க.அவங்க நாக்கு அவங்களை அப்படி சுழட்டி அடிக்குது. ஆனா அப்பாவை மாத்திரம் யாரும் கூப்பிட மாட்டாங்க. ஆனா அம்மாவை மாத்திரம்கூப்பிட்டுட்டு , அப்பாவைக்கூப்பிடாம இருந்தா அக்கம் பக்கம் எல்லாம் நம்மைப் பத்தி எவ்வளவு கேவலமா நெனச்சிப்பாங்கங்கற பயத்துலேதான் அம்மாவைக்கூப்பிடும்போது அப்பாவையும் சேத்து கூப்பிடறாங்க. அம்மாக்கள் அங்கே போனா சமையல்வேலை எல்லாம் செய்வாங்க, அதைத் தவிர வேறே சில சுத்த பத்த வேலைகளையும் செய்வாங்க. ஆனா ஆம்பிளைங்க வந்தா, உக்காந்த இடத்துவே இருந்து வேடிக்கை பாப்பாங்க. இல்லை ஏதோ நொள்ளை, சொள்ளையை கண்டுபிடிச்சி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருப்பாங்க. அம்மாவோட அருமை பிள்ளைக்கோ, பொண்ணுக்கோ அயல் நாடு போனாத் தெரியுங்கற விஷயம் உங்க எத்தனை பேருக்குத் தெரியும்? யானை இருந்தாலும் ஆயிரம் பொன், செத்தாலும் ஆயிரம் பொன். அதுமாதிரி அம்மா உள்ளூர்லே இருந்தாலும் ஆயிரம் பொன் அயல் நாட்டுக்குப்போனாலும் ஆயிரம் பொன்.
( பலத்த கைதட்டல்) அதனால் கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்புங்கிற மாதிரி அம்மாவுக்கு இருந்த இடத்திலேயும் சிறப்பு, போற இடத்திலேயும் சிறப்புதான்.********நான் இத்துடன் என் சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்.
( பலத்த கைதட்டல்)
நடுவர்: அல்லி ராணி அவர்கள் பேச்சுக்கு அப்பீல் கிடையாது. கனகச்சிதமா, பொளேர்னு சொல்லி அத்தனை பேரையும் சாச்சுட்டாங்க. எனக்கு அவங்க வேலையே வெக்கலை. ஆனா நான் ஒண்ணு சொல்ல ஆசைப்படுகிறேன். எவ்வளவுதான் பாட்டியாக இருந்தாலும் தாத்தா, அதாவது அவர் கணவர், பக்கத்துலே இருக்குறதுதான் பாட்டியோட பலம். அதேமதிரிதான் பாட்டி பக்கத்துலே இருக்கிறதுதான் தாத்தாவோட பலம். அவங்களைப் பிரிக கப்பாக்கறதோ, அல்லதுஉ பிரிச்சிப் பார்க்கிறதோ தப்பு.நாம தப்பா நென்ச்சிக்கிட்டு இருக்கோம். வயசானவங்களை பத்தி. வயசு ஆக ஆக அவங்க ஒருத்ருக்கு ஒருத்தர் பிணைப்பு அதிகம் ஆகிறது. அன்பு அதிகம் ஆகிறது. ஒருத்தர் போனா அவங்க வெளியிலே தங்களோட துக்கத்தைக் காட்டிக்காமல் உள்ளுக்கேள்ளேயே ஒரே குமுறலா வருகின்ற அழுகையை அடக்கிக்கிட்டுத்தான் இந்த உலகத்துலே அவங்க நடமாடறாங்க. அதனாலே பாட்டிகள் ஆயிட்ட ஒரே காரணத்துக்காக நீங்க அவர்களுக்கு கடைசி வரையிலும் சப்போர்ட இருந்து ஆதரிச்சவங்களை தப்பா பேசக்கூடாது. குடும்பத்திற்கு அதிகமா உழைப்பவர்கள் பாட்டிகள்தான் என்றாலும் அவர்களுடைய அந்த உழைப்பிற்கு உந்து சக்தியாக இருப்பவர்கள் அவர்களின் கணவன்மார்களாகிய தாத்தாமார்களே. எனவே பாட்டிகள் தான அதிகமாக உழைக்கிறார்கள் என்று சொல்லி அவர்கள் இரண்டு பேருக்கும் இடையே மனவருத்தம் உண்டாவதை நான் விரும்பவில்லை. எனவே இந்தப்பாட்டி மன்றம் மூலம் ஒரு குடும்பத்தின் வளர்ச்சிக்கு இருவருமே முக்கியமானவர்கள். ஒருவர் வீட்டிற்குள் இருந்தபடி சாதனை புரிகிறார், இன்னொருவரோ தம் இளம் வயதில் தன் உழைப்பைத்தந்து, கடைசி வரையில் தன் ஆதரவையும், அவருக்குத்தேவையான நம்பிக்கையையும் தந்து அந்த குடும்ப முன்னேற்றத்துக்கு உதவுகிறார் என்பதை நாம் மறுக்க முடியாது.
(இத்துடன் பாட்டி மன்றம் கலைகிறது)
*************************************