• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Interesting articles from various sources.

Status
Not open for further replies.
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல்

அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத

நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர்

சித்தர் எளிய வழியை கூறுகிறார்.


ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று

குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது

தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று

கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை

நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவு...ம் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப்

பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?


அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான

அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே

இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு

உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

continued.......

Source: aanmikam.blogspot
 

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்)

சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில்

சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

Read more in
aanmigam
 
SHRI MAHAPERIYAVAL'S ONE OF THE GREATEST MIRACLES



கல்கத்தாவில்,அந்த பக்தை கணவருடன் , அப்போது அவரது வேலை நிமித்தமாக இருந்த கால கட்டத்தில் நடந்த சம்பவம்.

அன்றும் கணவர் ஆபீஸ் போன அப்புறம் வாசலில் பெல் அடித்ததும் , கதவை திறந்தார் , அந்த பெண்மணி .

naxalites கள் 3 , 4 பேர் திமு திமு என்று உள்ளே நுழைந்தும் என்ன செய்ய, என்றே தெரியாத அவர் தன்னை கொல்ல அவர்கள் தயாராக இருப்பதை அவர்கள் பேச்சின் மூலம் புரிந்து கொண்டார்.


பயத்தில் வெலவெலத்து போன அந்த மாது அவர்கள் கேட்ட படி சாய் போட்டு கொடுத்து விட்டு , அவர்களிடம் ஒரு போன்கால் போட்டு கொள்ள அனுமதி கேட்டார்.

சென்னையில் விடுதிஇல் படித்து வரும் தன் அன்பு குழந்தைகளிடம் ஒரு நிமிடம் பேசினார் .

நாளை எந்த செய்தி கேட்டாலும் அதை சுவாமி கொடுத்தது என்று எடுத்துகொள்ள வேண்டும் என்றார் .

வீட்டின் ஹால் பகுதிக்கு வந்த அவர் , பெரியவா படத்தையும் அதை அடுத்து இருக்கு,ம் காளி மாதாவின் படத்தையும் பார்த்து

பூரண பக்தி யோடு நமஸ்கரித்தார் .


இன்னிக்கு ஏகாதேசி .இன்று இந்த சோதனைக்கு உளாகி இருக்கேனே என்று வருத்தப்பட்டார்

அவர்களை பார்த்து ஓரே போடாக போட்டு விடுங்கள்.வேறு ஒன்றும் என்னை செய்து விடாதீர்கள் என்று மனமுருக சொன்னார்.

பெரியவா படத்தை பார்த்து மனமுருகி வேண்டினார்.தரையில் அவரை வேண்டி கொண்டே படுத்தார்

அப்ப அந்த அதிசயம் நடந்தது.naxalites மேலே பார்த்தவர்கள் கண்ணுக்கு , பெரியவா போட்டோ இருந்த இடத்தில் பயங்கர உருவத்தோடு பவதாரிணி காட்சி கொடுத்தாள் .காளி பக்தர்கள் ஆன அவர்கள் திகைத்து போனார்கள் .

ஒரு காளி இருந்த இடத்தில இப்ப எப்படி ரெண்டாவது உக்ர காளி வந்தாள் என்று ஸ்தம்பித்து போனார்கள்.

காளியை மதிக்கும் அவர்கள் அந்த அம்மையாரையும் அம்பாள் ரூபமாக பார்க்க தொடங்கினர் .

"மன்னித்து விடுங்கள் தாயே " என்று எடுத்தனர் ஓட்டம் .

கணவர் வந்தவுடன் கண்ணீரை அடக்க முடியாமல் சொரிந்த அந்த மாது உடனே பெரியவாளை பார்க்க காஞ்சிக்கு புறப்பட்டார்

மடத்தில் என்றும் போல அன்றும் ஒரே கூட்டம் . வரிசையில் வந்த அந்த பெண்மணி பக்தி பெருக்கோடு கலங்கிய கண்களோடு பெர்யவாளை நமஸ்கரிக்க , "காமாக்ஷி காப்பதினாளா " என்று ஒரே வார்த்தையில் நடந்தது எல்லாம் தனக்கு தெரியும் என்பதை உணர்த்தினார் அந்த பரப்ரஹ்மம் .

உண்மையான குரு பக்திக்கு என்றும் ஒரு குறையும் வராது .
 
[h=3][/h]










[TABLE="align: center"]
[TR]
[TD="bgcolor: #d8dce2, colspan: 2"][/TD]
[/TR]
[TR]
[TD="colspan: 2"]

[TD="bgcolor: #9CA9E7"]

[TD="width: 37%, bgcolor: #bdc4e3"][FONT=Arial, Helvetica, sans-serif][SIZE=-1] [/SIZE][/FONT]
[/TD]
[TD="width: 34%, bgcolor: #bdc4e3"][/TD]
[TD="width: 29%, bgcolor: #bdc4e3"]
[/TD]

[TD="bgcolor: #bdc4e3"][/TD]
[TD="bgcolor: #bdc4e3"]

[/TD]
[TD="bgcolor: #bdc4e3"][/TD]

[/TD]

[TD="width: 22%, bgcolor: #bdc4e3"]


[TD="width: 34%"][/TD]
[TD="width: 1%, bgcolor: #D4D6DC"][/TD]
[TD="width: 32%"]
[FONT=Tahoma, Geneva, sans-serif][SIZE=-1]
[/SIZE][/FONT]​
[/TD]
[TD="width: 1%, bgcolor: #D4D6DC"][/TD]
[TD="width: 30%"]
[FONT=Tahoma, Geneva, sans-serif][SIZE=-1]


[/SIZE][/FONT]​
[/TD]
[TD="width: 2%"]
[/TD]

[TD="bgcolor: #990000, colspan: 6"] [TABLE="align: center"]
[TR]
[/TD]


[/TD]
[/TR]
[/TABLE]
[/TD]
[/TR]
[TR]
[TD="width: 44%, bgcolor: #e3e3eb"]
[/TD]
[TD="width: 56%, bgcolor: #e3e3eb"]
[FONT=Arial, Helvetica, sans-serif][/FONT]
[FONT=Arial, Helvetica, sans-serif][SIZE=-1][/SIZE][/FONT]​
[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #5c85eb, colspan: 2"]
[/TD]
[/TR]
[TR]
[TD="bgcolor: #F7F7F7, colspan: 2"]

[TD="width: 10%, bgcolor: #E7E7E7"]

[/TD]
[TD="width: 15%, bgcolor: #E7E7E7"]
[/TD]
[TD="width: 14%, bgcolor: #E7E7E7"]
[/TD]
[TD="width: 14%, bgcolor: #E7E7E7"]
[/TD]
[TD="width: 16%, bgcolor: #E7E7E7"]
[/TD]
[TD="width: 17%, bgcolor: #E7E7E7"]
[/TD]
[TD="width: 14%, bgcolor: #E7E7E7"]
[/TD]

[/TD]
[/TR]
[/TABLE]
























[h=3][/h]







































































































































































[h=3][/h]


























































[h=3][/h]





























































































































































[h=3][/h]

























































































[h=3]ஸர்வவ்யாபி[/h]
[h=3][/h]


பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜ சாஸ்த்ரிகள் குடும்பம். அவர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில் டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில் முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜா மாலையை அணிவிக்க வேண்டும் என்று கொள்ளை ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்து ரொம்ப அழகான குண்டு குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச் சொல்லி, பெரியவாளை தர்சனம் பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார்.

ஆனால், இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார். நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்! மாலையோடு வீடு திரும்பினார். அவருடைய மனைவி "எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையை அம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும் வேறவேறயா என்ன?" என்றாள். "இல்லே, இல்லே,
அம்பாளும், பெரியவாளும் வேற வேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்! ஆமா. இது அவருக்கு மட்டுந்தான்!" என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதை பூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார். மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும், பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம் வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும் ஒரே பரபரப்பு! "பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!" மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில் சொல்லிக் கொண்டே போனார். உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள் நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசர அவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்! பெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோ சாதாரணமாக நடப்பது போல் இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால் பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்த வேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!

பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு, சற்றும் எதிர்பாராமல், "டக்"கென்று சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாக பூஜை ரூமுக்குள் போய், முன்தினம் "பெரியவாளுக்குத்தான்!" என்று முத்ரை குத்தப்பட்டு, ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையை அப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவது போல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக் கொண்டார்! சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரை தாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்! ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒரு பரமகருணையா? என்று சொல்லமுடியாத
ஆனந்தம்! திக்கு முக்காடினார்கள். எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம் நடந்தார். சற்று நின்று திரும்பி, "எங்கே வெள்ளிக்கிண்ணம்?" என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார். அவ்வளவுதான்! ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்! நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக்கிண்ணம் குடுக்கணும் என்று சொல்லி, ஒரு புது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார். இதோ! அவர்கள் நேற்று பேசியதை ஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல் அல்லவா' வெள்ளிக்கிண்ணம் எங்கே?' என்று கேட்கிறார்! ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டு வந்து சமர்ப்பித்தார். பகவான் ஸர்வவ்யாபி! என்பதை அன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்!

 
தர்ம சாஸ்திரபடி பெண்கள் வணங்கும் முறை;
---------------------------------------------------------------
*கடவுளையோ அல்லது பெரியவர்களையோ பூமியில் விழுந்து வணங்கவேண்டும் அடிக்கடி இவ்வாறு வணங்குவதால், ஆயுளும் அழகும் கூடும்.

*பூமித் தாயின் அருள் கிடைக்கப் பெண்கள் விழுந்து வணங்கும்போது கொண்டை போட்டுக் கொண்டோ - அள்ளி முடிந்து கொண்டோ விழுந்து வணங்க வேண்டும். இதனால் நீண்டநாள் ஆரோக்யமாக வாழலாம் என கூறுகிறது தர்ம சாஸ்திரம்.

*வணங்கும் பொழுது பெண்களின் கூந்தல் தரையில் விழக்கூடாது. காலின் மேலும் விழக்கூடாது; இதனால் தெய்வ அருளும், பெரியவர்களின் ஆசியும் பூரணமாகக் கிடைக்காதபடி தேவதைகள் தடுக்கும்.

*பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர். பஞ்சாங்க என்பது தலை, கையிரண்டு முழந்தாளிரண்டு என்னும் ஐந்தும் நிலத்தில் பொருந்தும்படி வணங்குவதாகும்.

*பஞ்சாங்க நமஸ்காரத்தை மூன்று,ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப்படையில் செய்வது மிகுந்த நன்மையாகும். இது சிறந்த பெண்களுக்கான உடல் பயிற்சியாகும்.

1471261_633287423379700_743668870_n.jpg



அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்
 
தானங்களால் ஏற்படும் பலன்கள்;
---------------------------------------------
தானம் என்பது வேறு தர்மம் என்பது வேறு.அதாவது தர்மம் என்பது தனக்கு தெரிந்த விசயங்களை அடுத்தவருக்கு கூறி நல்வழிக்காட்டி அவரை வாழ்வில் உயர்த்துவது தர்மம் ஆகும்.தானம் என்பது தனக்கு தேவைக்கு மீறிய செல்வங்களை இலவசமாக கொடுப்பது.

1.ஆடைகள் தானம்:


ஆயுள் விருத்தியாகும்.புத்திர தோசம் விலகும்.அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் ஆடைதானம் செய்வது மிக நன்று.வியாழக்கிழமையன்று ஆடைதானம் செய்வதால் பெண்களிடம் நல்லுறவும், சுக போக பாக்யவிருத்தியும்,உடல் வலிமையும் உண்டாகும்.

2.தேன் தானம்:


புத்திர பாக்யம் இல்லாதவர்கள், கர்ப்பப்பை வலிமை இல்லாதவர்கள், வெண்கலப்பாத்திரத்தில் தாரா பலன் உள்ள நட்சத்திரத்தன்று( இதை அறிய உங்கள் ஆஸ்தான ஜோதிடரை அணுகவும்) சுத்தமான தேனை தானம் செய்ய வேண்டும்.

3.நெய்தானம்:

பாவக்கிரக திசை நடப்பவர்கள்(6,8,12 ஆம் அதிபதியின் திசை).நோய் தொல்லையால் அவதிப்படுபவர்கள் வெண்கலக் கிண்ணத்தில் சுத்தமான நெய் தானம் செய்ய வேண்டும்.சகலவிதமான நோய்களும் தீரும்.

4.தீப தானம்:

இஷ்ட தெய்வ சன்னதியில் மாதம் ஒருமுறை 10 தீபம் ஏற்றினால் கண் கோளாறுகள் தீரும்.அல்லது ஏழை,எளியவர்களுக்கு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் பார்வைத்திறன் எப்போதும் பாதுகாக்கப்படும்.

5.அரிசிதானம்:

பூர்வ ஜென்ம தோஷங்கள், தெரிந்தும் தெரியாமலும் செய்தவை விலக ஏழை அல்லது வாழ்வில் நலிந்தவர்களுக்குஅரிசி தானம் செய்யவேண்டும்.யாருக்கு வீடு வாசல் இல்லையோ அவர்களுக்கு தானம் செய்தால் தான் நாம் தானம் செய்த பலன் நமக்கு உணடாகும்.

6.கம்பளி-பருத்தி தானம்:

வாயு சார்ந்த நோய் உள்ளவர்கள் வயது முதிர்ந்தவர்களுக்கு கம்பளிதானம் செய்தால் நோய் தீரும்.வெண்குஷ்டம் அறிகுறி தென்பட்டால் பருத்திதானம் (பருத்திஉடைகள்) செய்து அதிலிருந்து மீண்டுவிடலாம்.


1472762_632909310084178_1911660564_n.jpg

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
கோயிலில் வழிபடும் முறை;


----------------------------------------
கோயிலுக்கு செல்பவர்கள் வழிபாட்டிற்கான அடிப்படை வழிமுறைகள்..,

*தொலைவில் இருந்தே கோபுரத்தை தரிசனம் செய்ய வேண்டும்.

*கோபுரவாசலைக் கடந்ததும், கொடிமரத்தை வணங்கியபடியே கோயிலுக்குள் நடக்க வேண்டும்.ஆண்டவனைச் சரணடைகிறேன் என்பதே கொடிமர வழிபாட்டின் நோக்கம்.

*பலிபீடத்தின் முன்னால் தலை தாழ்த்தி வணங்க வேண்டும்.
இறைவா! என்னிடம் உள்ள ஆணவம் முதலிய தீயகுணங்களை இங்கேயே பலியிடுகிறேன், அதற்கு அருள்செய், என்பதே பலிபீடத் தத்துவம்.

*விநாயகப்பெருமானை வணங்கி, தலையில் குட்டி, தோப்புக்கரணம் இட வேண்டும்.
தடையின்றி வழிபாடு இனிதே அமைய பிரார்த்திக்க வேண்டும்.

*சிவாலயத்தில் நந்திதேவரையும், பெருமாள் கோயில்களில் கருடாழ்வாரையும் தரிசித்து அவர்களிடம் மானசீகமாக அனுமதி பெற்ற பின்னர் கருவறை நோக்கிச் செல்ல வேண்டும்.

+தேங்காய், பூ, பழம், வெற்றிலை, பாக்கு, தீபம் ஆகியவற்றில் ஏதோ சிலவற்றைக் கொடுத்து வணங்க வேண்டும்.

+தீபாராதனை காட்டும் போது தீபஜோதியின் நடுவே காட்சிதரும் மூலவர் மீது கண்ணையும், கருத்தையும் செலுத்தி பக்தியோடு ஒன்ற வேண்டும்.

*அம்மன் சன்னதி சென்று அம்பாளை மனதார வேண்டும்.

*முருகன்,நடராஜர்,தட்சிணாமூர்த்தி,துர்க்கை,சண்டிகேஸ்வரர்
மற்றும் பரிவார தேவதைகளை வணங்கி பிரகாரத்தையும்,
நவக்கிரக மண்டபத்தையும் வலம் வர வேண்டும்.

*கொடிமரத்தின் முன் வடக்கு நோக்கி விழுந்து (தலை வடக்கிருக்கும் படியாக) நமஸ்காரம் செய்ய வேண்டும்.

*வழிபாடு முடிந்ததும் சிறிது நேரம் அமர்ந்து கண்ணை மூடி அமர்ந்து தியானம் செய்வது மிகுந்த நலமாகும்.


1484135_632398670135242_602944713_n.jpg

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
சூலாயுதங்களில் எலுமிச்சை ஏன் குத்தப்படுகிறது?
---------------------------------------------------------------------
சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுவதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.

முக்கனிகளான மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு. பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு.
ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.

மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.அதனால்தான் சூலாயுதத்தில் எலுமிச்சை குத்தப்படுகிறது.


1459957_631324526909323_865906551_n.jpg

அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
 
Once a team of 5-6 scientists from U.S, probably some New York University, visited the temple, and did a lot of research on the shadow of the Vimana, which does not fall on the ground, at any time of the day, in any season. They arrived at the conclusion that it is not based on any mathematical formula, and is a coincidental accident, which cannot be replicated at all, unless such a coincidence occurs again.

This report was published in ‘The Hindu’ newspaper. After four days, mathematicians from Madras University visited Mahaperiyava.

He had the newspaper brought and questioned the mathematicians -

“What they are saying, maybe it is right?”

They replied – “It seems so, because we don’t know otherwise…”

He – “So that is what you say? , and left it at that.”

A few of months went by.

The mathematician was asked to visit Mahaperiyava, Who was now camping at a village, Vellam, in Chengalpet district, near Madras.

The mathematician was asked to visit Mahaperiyava, Who was now camping at a village, Vellam, in Chengalpet district, near Madras.

Beyond the village, there is a forest, hills, rocks, ruins…. Mahaperiyava would get up everyday and go to the temple ruins there. There’s a huge rock slab in front of the temple, around 6′ by 10′. There is also a pond there. He would pick a neem twig from a tree and sit on the rock and brush his teeth.

When the professor arrived, He had the rock slab overturned, washed well. There were inscriptions on this rock.
It said – ‘Thanjai Periakovil Munnodi!’ (Thanjavur Big Temple precursor or model)

He says – “There is charitram that the person who built the Thanjai kovil belonged to this area Mahabalipuram, Chengalpet. Why shouldn’t it be that his ancestry could be this village?”

“When it says Thanjavur Big Temple model, then it means that the architect tried it here on a smaller scale, and based on this model, he has built it there, isn’t it. Then it also means that, without a mathematical formula he could not have replicated it.”

“So, it is not accidental. Obviously he had some mathematical formula, based on which he built it here and then at Thanjavur. Here he built with a height of couple of feet, and a 4 ft. gopuram.”

Mahaperiyava had it all dug out and washed and shown to them.

Here also, the shadow does not fall on the ground. Then He says, -

“Now you too find the formula, and write to them also, informing them that it is not an accident. Maybe the architect did not inform anybody about the formula. Or maybe we might find another ‘Kalvettu’ (stone inscription) later with it.”
Then the professor says, “Since Periva knows, He himself could maybe inform them”.

To that, He says, ” Is that my job? Am I here to do all this? It is all your job. That is why you are all there. How can I interfere in your job”?

So saying, He sent them on. :)))

Source : Mail from a friend collected from a Newspaper
 
தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள்...

வைதீக முறைப்படி நடைபெறும் திருமணத்தில், தாலி கட்டும் போது சொல்லும் சமஸ்கிருத மந்திரத்தின் பொருள் என்ன என்று தெரியுமா ..?!

'மாங்கலயம் தந்துனானே' என தொடங்கும் இம்மந்திரத்தில்,
''சோமஹ ப்ரதமோ விவிதே
கந்தர்வோவிவித உத்ரஹ த்ரியோ
அக்னிஸ்டே பதிதுரியஸ்தே
மனுஷ்ய ஜாஹ''


விசமிகளால் வெளியிடப்பட்டுள்ள பொய்யான விளக்கம் கீழ்வருமாறு.


''நீ(மணமகள்) முதலில்

சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய்,

பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான்,

பின்பு அக்கினி உன்னை அடைந்தான்.

இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய்.''



இந்த மந்திரத்திற்கு உண்மையான பொருள் கீழ்வருமாறு:


நம் உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கிறோம். கண்களுக்குச் சூரிய பகவான்; கைகளுக்கு இந்திரன் - இது போன்று. இதே போல குழந்தை ஜனித்ததிலிருந்து அது வளர்ந்து பெரியவனா(ளா)கும் வரை ஒவ்வொரு பருவத்திலும் உடல் பல மாற்றங்களைச் சந்திக்கிறது. ஓவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்திற்கு - தெய்வத் தன்மைக்குப் ஒப்புமைப் படுத்தியிருக்கிறோம்.


இதன்படி ஒரு பெண் குழந்தை பிறந்ததிலிருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம் வரை "ஸோமனின் (Moon God)ஆதிக்கத்தில்" இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போலவே "குளிர்ச்சியாக" இருக்கிறாள். (ஆண்கள் அணியும் வேஷ்டியின் பெயரும் சோமன்).


பிறகு இந்தச் "சோம பருவத்திலிருந்து" "பூப்பெய்தும் பருவம் வரை" விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பியிருக்கும் பெண் குழந்தை. இப்பருவத்தில் அவள் "கந்தர்வனின் ஆதிக்கத்தில்" இருக்கிறாள் அவள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய கந்தர்வ பருவம்!


பூப்பெய்திய பருவத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை அவள் "அக்னியின் ஆதிக்கத்தில்" - அதாவது அக்னி போன்று எழுந்து தகிக்கும் காம உணர்வுகளுடன் - இருக்கிறாள்.


இப்பொழுதிருக்கும் எவ்வித வசதிகளுமற்ற, எந்தவித நவீனத் தாக்கங்களும், தேவைகளுமற்ற எளிய வாழ்க்கை வாழக்கூடிய காலகட்டத்தை மனதில் கொண்டால், பெண் வீட்டைப் பார்த்துக்கொள்ள, ஆண் வெளியில் வேலை செய்து பொருளீட்டி ஜீவனத்தை நடத்தும் குடும்ப அமைப்பை மனதில் கொண்டால், பருவமடைந்து அக்னியின் பிடியில் இருக்கும் - காம உணர்வுகளில் உந்தப்பட்டுக்கொண்டிருக்கும

ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொடுப்பதே பெற்றவர்களின் முக்கிய கடமையாக இருந்தது - அக்னியின் ஆதிக்கத்தில் இருக்கும் பெண் - குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி, திருமணம் செய்விக்கப்பட்டு ஓர் ஆண்மகனின் கைகளில் ஒப்படைக்கப் படுகிறாள்.


ஆக, நிலவைப் போல் குளிர்ந்து நிற்கும் குழந்தை, விளையாட்டுத் தனம் நிரம்பி அழகு ததும்பும் பருவத்தைக் கடந்து, பூப்பெய்தி, பிறகு அவ்வயதிற்குரிய உணர்வுகளால் உந்தப்பட்டு காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கும் போது, ஆண்மகனைக் கைப்பிடித்து திருமண பந்தத்தின் மூலம் குடும்ப வாழ்க்கையைத் துவங்குகிறாள் - என்று இதைப் புரிந்துகொண்டால் நலம்.


Source:harikrishnamurthy
 
Last edited:
பக்தியின் வலிமை.
குழந்தைக் கண்ணன் கடுமையான சேஷ்டைகள் செய்து கொண்டிருந்தான்.

ஏன் உபத்திரவம் செய்கிறாய்?, என்று கண்டித்த யசோதை, அவனது காதை கோபத்துடன் திருகினாள்.

உரலில் பிணைத்துக் கட்ட கயிறைத் தேடிப்போனாள். அவள் வரும்வரை ஆடாமல் அசையாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான் கண்ணன்.

அவனைக் கட்டும் போது, கயிறை முடிச்சுப் போட முடியாமல் தவித்தாள். ஆயர்பாடியில், அத்தனை பேர் வீட்டில் இருந்தும் கயிறை எடுத்து வந்து கட்டியும் அவனைக் கட்ட முடியவில்லை.

ஒரே ஒரு கயிறு தான் பாக்கி! அது தான் அங்குள்ள பெண்களின் கழுத்தில் கிடந்த தாலிக்கயிறு. அதை யாராவது தருவார்களா என்ன! அம்மா, தன்னைக் கட்டிப் போட முடியாமல் திணறுவதைப் பார்த்து கண்ணனுக்கே என்னவோ மாதிரியாகி விட்டது! ஒரு கயிறைப் பார்த்து, நீ என்னைக் கட்டு, என்று அவன் மனதுக்குள் உத்தரவு போட்ட பிறகு தான் அதைக் கொண்டு யசோதை கட்டிப் போட்டாள்.

பக்தி என்று வந்து விட்டால், தன் காதைத் திருகவும், கயிறால் கட்டவும் கூட பரம்பொருள் அனுமதிக்கிறான். கண்ணனின் இந்த எளிமையைப் பற்றி படித்த நம்மாழ்வாருக்கு மயக்கமே வந்து விட்டதாம். மூர்ச்சையாகி கீழே விழுந்து விட்டார். தெளிய ஆறுமாதம் ஆனது.


Source: harikrishnamurthy
 
Offering To God

Tad aham bhakty-upahrtam asnami: A leaf, a little particle sticking to the vessel in which Draupadi had her meal satisfied everyone in the whole universe including Sri.Krishna and consequently Sage Durvasa and his thousand disciples.


A flower offered by the Elephant King brought Sri Vishnu hurrying down to save it from the jaws of a crocodile.



A forest fruit, that too tasted first by Sabari, was eaten with relish by Sri Rama.


BG 9.26
Pattram puspam phalam toyam

a leaf, a flower, a fruit, water,


Translation:

He who offers to Me with devotion and a pure heart
A leaf, a flower, a fruit, or water,

That offering of devotion
I accept from him.



“I shall be easily pleased. My worship is not difficult.” We do not require large assets to please God. The samarpana or the naivedya that we have to offer to God is simple. Patram pushpam phalam toyam (9.26): “You can offer a leaf; I shall be satisfied. You can offer a single flower; I shall be satisfied. You can offer Me a spoon of water with devotion to Me; I am fully satisfied with it. But it has to be offered with devotion.” What is offered is not of consequence in the eye of God. The bhava, or the feeling, or the mode, or the attitude with which it is offered is what counts. God does not want anything from us.


This offer must be with complete devotion surrendering yourself manasaa vachaa karmanaa (trikarana suddhi)...then you are blessed.


Patram need not be a Tulsi leaf


It is said that Arjuna and Bhima were worshiping Lord Siva. Arjuna was collecting tons and tons of bilva leaves and offering mountains of these leaves to Lord Siva in worship; and Bhima was also worshipping Lord Siva, but he did it only in his mind. He had no physical leaf, and did not bring anything from the forest to offer to Lord Siva. One day, it seems, Arjuna and Bhima were taken to Kailasa for some reason. They saw cartloads and cartloads of bilva leaves being brought by the ganas of Siva, and they were poured at his feet. And some people were also bringing little handfuls of leaves, and throwing them. Arjuna asked, “Who are these people that are bringing little bunches of leaves and offering them, and who are these who are offering cartloads?” “That little bit is what that has been offered by Arjuna, and the cartloads are the offerings of Bhima.” “Bhima! He never does any worship,” said Arjuna. “He has done the worship, and Lord Siva is pleased,” they replied. Bhima offered cartloads, because his mind was there; and Arjuna offered a little bit, because it was a physical offering.


“Whatever you offer outside in the form of sacrifices – in yajnasalas – that is also an offering to Me, and whatever you offer inside also by way of a meal that you take, that is internal yajna that you perform as pranagnihotra. Therefore, may your actions be devoted to Me, dedicated to Me. Whatever be these actions, whether secular or religious – clerical, military, business, sweeping the floor, or anything that you perform according to the station of your life and location in society – let it be dedicated to Me, and you shall see that you are taken care of abundantly by the guardians of the Earth.”

How the poor offer to GOD


They worship from the bottom of their heart with pure devotion, and if it is even for a second, God will come to his rescue.


Various sources
 
கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான்.

புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.

2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.

3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.

4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.

5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.

6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.

7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.

8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.

9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.

10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.

11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.

12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.

13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.

14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.

15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.


16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.

17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.

18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.

19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.

20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.

21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.

22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.

23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.

24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.

25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.

26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.

27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.

28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.

அநித்தாமிஸ்ர நரகம்:
கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.


ரௌரவ நரகம்:
பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.



மகா ரௌரவ நரகம்:
மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.


கும்பிபாகம்:
சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.


காலகுத்திரம்:
பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.


அசிபத்திரம்:
தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.



பன்றி முகம்:
குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.


அந்தகூபம்:
உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.


அக்னிகுண்டம்:
பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.


வஜ்ரகண்டகம்
: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.


கிருமிபோஜனம்:
தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.


சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.

வைதரணி:
நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.


பூபோதம்
: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.


பிராணி ரோதம்
: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.


விசஸனம்:
பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.


லாலா பக்ஷம்:
மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.


சாரமேயாதனம்:
வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.

அவீசி: பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.


மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:

1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.

2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.

3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.

4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.

5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.

6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.

7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.

8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

Garuda Puranam | ???? ??????? ?????? ???????? ????????????? ?????????!
 
பிரளயம்


ஐந்து வகையான உலக அழிவுகளைப் பற்றி இந்து மதம் கூறுகின்றது. இந்த அழிவுகள் எமது பூமிக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வகையான அண்டத்தொகுதிகளுக்கும் பல்வேறுபட்ட காலங்களில் நடைபெறும் என்று இந்த நூல்கள் கூறுகின்றன.

1. நித்திய பிரளயம்; இது ஒவ்வொரு மன்வந்தரத்தின் முடிவிலும் நடைபெறுவது. ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகங்கள் கொண்டது. சதுர் என்றால் நான்கு. சத்தியயுகம், திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்று அடுத்தடுத்து வரும் நான்கு யுகங்களைக் கொண்டது ஒரு சதுர்யுகம். இவ்வாறான ஒரு சதுர்யுகத்தில் 43 இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் உள்ளன. ஆகவே 71 சதுர் யுகங்கள் கொண்ட ஒரு மன்வந்தரம் முப்பது கோடியே அறுபத்தேழு இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் ஆகும்.

இப்போது நடைபெறுவது வைவஸ்வத மன்வந்தரம். இதிலே உள்ள எழுபத்தொரு சதுர்யுகங்களில் இருபத்தேழு சதுர்யுகங்கள் ஏற்கெனவே கழிந்துபோயின். தற்போது நடப்பது இருபத்தெட்டாவது சதுர் யுகமாகும். இந்த இருபத்தெட்டாவது சதுர்யுகத்தில் முதல் மூன்று யுகங்களான சத்திய யுகம் 17 இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்களும், திரேதா யுகம் 12 இலட்சத்து தொண்ணூற்றாறாயிரம் வருடங்களும், துவாபர யுகம் 8 இலட்சத்து அறுபத்துநாலாயிரம் வருடங்களும் கழிந்து தற்போது நடக்கும் கலியுகம் பெப்ரவரி மாதம் 17ம் திகதி கிமு 3101 ம் வருடம் தொடங்கியது.

இந்த கலியுகம் மொத்தம் 4 இலட்சத்து முப்பதிரண்டாயிரம் வருடங்கள் கொண்டது. இதிலே வெறும் 5111 வருடங்களே இதுவரை கழிந்திருக்கின்றன. இந்த கலியுகம் முடிய இன்னமும் 4 இலட்சத்து இருபத்து ஆறாயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்பது வருடங்கள் உள்ளன. அப்போதும் உலக அழிவு நடைபெறாது. தர்மம் நசிந்து அதர்மம் மேலோங்கி இருக்கும் அக்கலியுக முடிவில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும் என எமது இந்து சமயப் புராண நூல்கள் பகர்கின்றன. கல்கி மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். அத்துடன் கலியுகம் முடிந்து இருபத்து ஒன்பதாவது சதுர்யுகத்தின் முதற்பகுதியான சத்திய யுகம் என்ப்படும் கிருத யுகம் பிறக்கும். இதையே ரஷ்சிய புரட்சி பற்றிப் பாடிய பாரதியும் "கிருத யுகம் எழுக மாதோ" என்று பாடினான். இவ்வாறாக இன்னும் 43 சதுர்யுகங்கள் கழிந்த பின்னர்தான் பூலோகம் எனப்படும் எமது பால்வீதி அண்டத்தொகுதி முழுவதும் நீரில் அமிழும். இதுவே நித்திய பிரளயம் ஆகும். இப் பிரளய காலம் ஒரு கிருதயுக காலத்துக்கு அதாவது 17 இலட்சத்து இருபத்தெண்ணாயிரம் வருடங்களுக்கு நிலைத்திருக்கும். இதன் முடிவில் மீண்டும் அடுத்த மன்வந்தரம் தொடங்க பூலோகம் இருப்புக்கு வரும். குறிப்பு;

சதுர்யுகம்

1. கிருதயுகம் என்னும் சத்திய யுகம் - 17, 28, 000 வருடங்கள்

2. திரேதாயுகம் - 12, 96, 000 வருடங்கள்

3. துவாபரயுகம் - 8, 64, 000 வருடங்கள்

4. கலியுகம் - 4, 32, 000 வருடங்கள்

மொத்தமாக ஒரு சதுர் யுகம் 43, 20, 000 ( நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம்) வருடங்கள் கொண்டது.

மன்வந்தரம்

71 சதுர் யுகம் - ஒரு மன்வந்தரம் - 306, 720, 000 (முப்பதுகோடியே அறுபத்தேழு இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள்)கல்பம்

ஆயிரம் சதுர் யுகங்கள் - ஒரு கல்பம் - 4, 320, 000, 000 (நானூற்று முப்பத்திரண்டு கோடி வருடங்கள்)

2. நைமித்திக பிரளயம்; இது ஒவ்வொரு கல்ப கால முடிவிலும் நடைபெறும் அண்ட அழிவாகும். ஒரு கற்ப காலம் எனப்படுவது ஆயிரம் சதுர் யுகங்கள் கொண்டது. இது 432 கோடி வருடங்கள் கொண்டது. இதன்போது எமது பூலோகம் என்னும் பால்வீதி அண்டத்தொகுதியுடன் அதற்கும் அப்பாலுள்ள புவர்லோகம் என்னும் அன்ட்றோ மீடா அண்டத்தொகுதியும் அதற்கும் அப்பால் இன்னமும் அண்டவியல் விஞ்ஞானத்தின் பார்வைக்கும் கணிப்புக்கும் உள்ளாகாமல் விளங்கும் சுவர்லோக அண்டத் தொகுதியுமாக மூன்று அண்டத்தொகுதிகளும் மொத்தமாக நீரில் அமிழும். இதையே பரிபாடல் என்னும் சங்க இலக்கியம் "பசும்பொன் உலகமும் மண்ணும் விசும்பில் ஊழி ஊழூழ் செல்ல" என்று குறிப்பிடுகின்றது. இப்பிரளய காலம் ஒரு கல்ப காலத்துக்கு நீடித்திருக்கும். இதன் முடிவில் மீண்டும் இவ்வுலகங்கள் இருப்புக்கு வரும்.

3. அவாந்தர பிரளயம்; மேற்குறிப்பிட்ட மூன்று அண்டத்தொகுதிகள் உள்ளிட்ட பிரகிருதி மாயா புவனங்கள் 164உம் ஓடுங்கும் காலம் அவாந்தர பிரளய காலமாகும். இது பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது. இவ்வாறே இது பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு நிலைத்திருப்பது.

4. மத்திம பிரளயம்; முன் அவாந்தரப் பிரளயத்தில் ஒடுங்கிய புவனங்களோடு அவற்றின் பௌதிக விஞ்ஞான விதிகளுக்கும், காட்சிகளுக்கும், கணிப்புகளுக்கும் அப்பாற்பட்ட அடுத்துள்ள இருபத்தேழு புவனங்களின் ஒடுக்கம் அவாந்தரப் பிரளயம் ஆகும். இது பல கோடானுகோடி வருடங்களுக்கு ஒரு முறை நிகழ்வது. இவ்வாறே பல கோடானுகோடி வருடங்களுக்கு நிலைத்திருப்பது.

5. மகா பிரளயம்; முன் ஒடுங்கிய புவனங்களோடு அதற்கும் அப்பாலாயுள்ள முப்பத்தொரு புவனங்களும் ஒடுங்குகின்ற, எமது வார்த்தைகளுக்கும் கருத்துக்கும் கணிப்புக்கும் எட்டாத பிரளயம் ஆகும். இந்த மகாபிரளயத்தை நடாத்துபவரே மகாசங்கார மூர்த்தியாகிய பரசிவன். உலகங்கள் யாவும் அவற்றின் மூலமாகிய மாயையிலே ஒடுங்க, மாயை சத்தியிலே ஒடுங்க, சத்தியும் சிவத்தில் ஒடுங்கும் காலம் இந்த மகாசங்காரகாலமாகும்.

இந்த ஐந்து விதமான அண்டப்பேரழிவுகளை பஞ்சப் பிரளயம் என்று கூறுவர். இந்த ஐந்து வகை பிரளயங்களிலும் அழிவில்லாமல் நிலைத்திருப்பவன் நஞ்சைக் கண்டத்திலே கொண்ட நெற்றிக்கண்கடவுள் என்று இப்பாடல் கூறுகின்றது.

பஞ்சப் பிரளயத்து மிஞ்சி இருப்பாண்டி

நஞ்சு பொதிமிடற்றான் நயனத் தழல்விழியான்


நன்றி : ?????? ??????????
 
கோபுர தரிசனம் - கோடி புண்ணியம் ( ஒரு விஞ்ஞான பூர்வ விளக்கம் )

ஞானிகள்,முனிவர்கள்,சித்தர்கள் சிறந்த கோயில்களையும்,அதில் தெய்வ திருவுருவச் சிலைகளையும் ஏற்படுத்தும் முறைகளை வகுத்து கொடுத்து கோயில் திசை நான்கிலும் விண்ணை முட்டும் பெரிய கோபுரங்களை நிர்மாணித்து அவற்றின் சக்தியால் உயிர்கள் நல்ல முறையில் வாழும் அமைப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம். ஆலயம் தொழுவது சாலவும் நன்றே என்ற முன்னோர்களின் பொன் மொழிகள் இதன் பயன் கருதி கூறியவை.


ஆகம விதிப்படி கோயில் நிர்மாணித்து,அபிஷேகிக்கப்பட்டு,காலம் தவறாது கும்பாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்து கொண்டிருக்கிற கோயில்களில் உள்ள கோபுரங்களின் மேல் தங்கத்தாலும், செம்பினாலும் செய்யப்பட்ட கலசங்கள் தனது கூரிய முனை வழியாக ஆகாயத்தில் உள்ள உயிர் சக்தி என்று அழைக்கப்படும் பிராண சக்தியை கிரகித்து வெளிவிடுகிறது.அந்த சக்தியை நம் உடல் பெறுவதால் புத்துணர்ச்சி,புது உணர்வு, உள்ளத் தூய்மை, ஆன்மீக ஈர்ப்பு, நோயின்மை,நோய் எதிர்ப்பு சக்தி அடைகிறோம்.


இதனால் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணீயம் என்று முன்னோர்கள் கூறினர்.


கர்ப்பக்கிரக கோபுரத்தின் மேல் வைக்கப்பட்டுள்ள கலசங்கள் அதே போல் பிராண சக்தியை கிரகித்து கலசத்தின் நேர் கீழே உள்ள இறை பீடத்திற்கு இடையறாது அனுப்பி கொண்டிருக்கிறது. இந்த சக்தி பீடத்தின் அடியில் உள்ள தங்கத்தாலும்,வெள்ளியினாலும் செய்யப்பட்ட மந்திர சக்கரங்கள், யந்திரங்கள் தன்பால் இழுத்து தான் அமையப் பெற்றிருக்கும் தன்மைக்கு ஏற்ப பீடத்தின் மேல் தன் சக்தியை வெளிப்படுத்துகிறது.


சில குறியீடுகளும், யந்திர தகடுகளும், இந்த சக்தியை முழுவதும் ஈர்த்து விடுகின்றன.


இந்த பிராண சக்தியின் அளவை மேலை நாட்டு விஞ்ஞானி போவிஸ் கண்டு பிடித்துள்ளார். இதிலிருந்து வெளிப்படும் சக்தியை (14 ,000 போவிஸ்) நம் உடலில் உள்ள உயிர் அணுக்கள் தாங்க இயலாது. எனவே தான் பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலை அந்த சக்தியை பிரித்து ஒன்பது முனைகள் வழியாக வெளியேற செய்கிறது.


அந்த சக்தி கர்ப்பக்கிரத்தின் வாயில் வழியாக வெளியே வருகிறது. அங்கு இறைவனை வணங்கி கொண்டுள்ள நம் மீது படுகிறது. அப்போது தீப ஆராதனை காட்டப்படும்போது , அந்த சக்தி தூண்டப்பட்டு - கைகளை இணைத்து , மேலே உயர்த்தி வணங்கும்போது - கை விரல்கள் வழியே அந்த சக்தி நம் உடம்புக்குள் ஊடுருவுகிறது.


இதனால் ஆன்மீக உணர்வு, சக்தி நம்மீது பரவி மனதில் உள்ள கவலைகள், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள்,உடல் நோய்கள் அனைத்தையும் போக்கி ஆனந்தத்தை கொடுக்கிறது. கர்ப்பக்கிரத்தில் கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் நீர் செல்லும் பொருட்டு ஓர் துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த துவாரத்தின் வழியே செல்கின்ற நீரிலும் கலந்து பிராண சக்தி வெளிப்படுகிறது.


அங்கு அமைக்கப்பட்டுள்ள சதுர வடிவ தொட்டியில் விழும் நீரை கோயிலை வலம் வரும் நாம் அந்த இடத்தில் வந்தவுடன் எடுத்து கண்ணிலும் சிரசிலும் ஒற்றிக் கொள்கிறோம்.அந்த சில நிமிடங்களில் நம் மீதும் பிராணசக்தி பரகிறது. இந்த பிராணசக்தி வெளிப்பட்டு கொண்டு இருப்பதால் தான் சிலையின் குறுக்கே செல்லக்கூடாது.


சிலையின் பக்கவாட்டில் தான் செல்ல வேண்டும். சிலையை விட்டு விலகி நிற்பதுடன், அபிஷேகம் செய்யும் போது கைகள் சிலைக்கு மேல் செல்லக்கூடாது. ஒரு காலை வெளியிலும், மறு காலை கர்ப்பக்கிரகத்தின் வாயிலிலும் வைக்ககூடாது.

கர்ப்பக்கிரகத்திற்குள் இரும்பாலான எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என முன்னோர்கள் விஞ்ஞானத்தின் அடிப்படையில் தான் கூறியுள்ளனர்.

harikrishnamurthy

 
Message of Maha Periyavaa - Deivathin Kural
லோகத்தில் மனசுக்கு ரொம்பவும் ஆனந்தமாகவும் சாந்தமாகவும் இருக்கப்பட்ட பல விஷயங்களுக்கு, அப்பர் ஸ்வாமிகள் ஒரு லிஸ்ட் கொடுக்கிறார். இந்திரியங்களுக்கு அகப்படுகிற சுகங்கள்போல இருந்தாலும், நிரந்தரனமான, தெய்வீகமான ஆனந்தத்தைத் தருகிற வஸ்துக்களைத் சொல்கிறார். அந்த வஸ்துக்கள் என்ன. முதலில், துளிக்கூட தோஷமே இல்லாத வீணா கானம், அப்புறம், பூரண சந்திரனின் பால் போன்ற நிலை. தென்றல் காற்று, வஸந்த காலத்தின் மலர்ச்சி. வண்டுகள் ரீங்காரம் செய்து கொண்டிருக்கிற தாமரைத் தடாகம்.
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே.
இந்திரியங்களால் பெறுகிற இன்பங்களை ஈசுவர சரணாரவிந்த இன்பத்துக்கு உபமானமாக அடுக்கும்போது, மாசில் வீணை என்று சங்கீதத்துக்கே முதலிடம் தருகிறார்.
நல்ல ஸங்கீதம் அதுவும் குறிப்பாக நம்முடைய ஸங்கீதத்துக்கே எடுத்த வீணையோடு கானம் என்றால் அது ஈசுவரனின் பாதத்துக்குத் கொண்டு சேர்ப்பதர்காகவே இருக்கும். நம் பூர்விகர்கள் இசையை ஈஸ்வரனின் சரணங்களிலேயே ஸமர்ப்பணம் பண்ணினார்கள். அந்த இசை அவர்களையும், அதைக் கேட்கிறவர்களையும் சேர்த்து, ஈசுவர சரணாரவிந்தங்களில் லயிக்கச் செய்தது. தர்ம சாஸ்திரம் தந்த மஹரிஷி யாக்ஞவல்கியரும் சுஸ்வரமாக வீணையை மீட்டிக் கொண்டு, சுருதி சுத்தத்தோடு, லயம் தவறாமல் நாதோபாஸனை செய்துவிட்டால் போதும் - தியானம் வேண்டாம். யோகம் வேண்டாம். தபஸ் வேண்டாம். பூஜை வேண்டாம். கஷ்டமான சாதனைகளே வேண்டாம். இதுவே மோஷத்துக்கு வழிகாட்டும் என்கிறார்.
 
Raavan's Advice to Lakshman

When Raavan was attacked by Lord Rama and was nearing death, Rama asked his brother Lakshman to go to him and learn something about the world, which no other person except for such a learned Brahmin like Raavan could ever teach him.



Lakshman obeyed his brother’s order and stood near dying Raavan’s head. But Raavan did not say anthing and Lakshman returned to Rama. Rama then told Lakshman that whenever one wants to learn something from a person, you should never stand near his head, but his feet.


Lakshman again went to Raavan and this time he stood near his feet. Raavan seeing Lakshman standing near his feet told him 3 secrets that would anyone’s life successful.




1 - The first thing Raavan told Lakshman was that one should complete any auspicious work as soon as possible and keep delaying the inauspicious work as much possible. He supported this teaching by saying, “शुभस्य शीघ्रम्” (Shubhasya Shighram).


He told Lakshman that he could not recognize Rama and therefore delayed arrival at the shelter. Hence this is his condition.




2 - The second thing he taught Lakshman was never to underestimate one’s enemy. He said that he did this mistake of understanding the monekys and bears lesser or incompetent and he lost the battle against them.

He said, when he asked Lord Brahma to make him immortal, he said no one else except for monkeys and human could kill him. This is because he believed that both these living beings were not capable to kill him.

This was his mistake and he suffered life as a result.



3 - The third and final thing Raavan told Lakshman that one should not reveal one’s life secret to anyone in the world. Here also Raavan made a mistake as Vibhishan knew the secret of his death. Raavan knew this was his biggest mistake of life.



Source: JEEVAN MANTRA
 
Predictions about Kaliyug in our Puranas ! (How much correct!)



A PERFECT PREDICTION MADE THOUSANDS OF YEARS AGO
ABOUT OUR CURRENT STATE OF AFFAIRS :

Bhagavad Purana, the 12th Chapter (Skandha) has the following
description of Kaliyug (in which we are living) which , seemingly ,
has a striking resemblance to the prevailing conditions in India:

" As the Age turns to evil (that is, when Kaliyug begins) every virtue
decays and vanishes : honesty, forbearance, kindness, memory and
strength disappear.

Wealth replaces a noble birth, character and conduct. Might becomes
right, for might alone determines dharma and justice.

Trade and fraudulent practice become synonymous.

The law will favour only the rich, and will have no regard for
justice. He that can curse and swear best will be considered thefinest
scholar.

Poverty will be sufficient cause to establish guilt in the eyes of the
law, while wealth and ostentation will be indices of character.

Rudeness and brashness of speech will be equal to dharma.

He that maintains his family by the foulest means will be considered
respectable. Dharma will be observed only for exhibition.

Whoever is strong and daring will become the king, and will rule like
greedy lustful bandits, with plunder and rapine of their own subjects,
who will often flee such tyranny and seek refuge in forests and
mountains.

Exhausted by cruel taxes, deprived of rains in lands from which true
dharma has fled, the people will subsist on wild vegetation,
roots,flesh, fruits, flowers, etc.

Kings will become mere robbers, and men, driven by despair and
poverty, will become thieves, liars and murderers.

Men will become bestial and perverse-- miserly, ruthless, greedy and
vindictive for the flimsiest reasons.

Arrogance, hypocrisy, deception, dishonesty, sloth, somnolence,cruelty
of every kind, delusion, terror and wretchedness will rule.

Brigands and robbers will rule the land. Kings will all be tyrants.
People will espouse gluttony, lasciviousness and venality of every kind.

The vilest men will become the foremost traders, making cheating and
thievery the common practice of the marketplace. Even when they are
not threatened with any danger, men will take to forbidden means to
earn their livelihood, and pride themselves on it.

Relationships between parents and children, brothers, friends and
relations will not be valued.

Seated upon the sacred thrones of great and holy gurus of yore, men
that are masters only of vice will expound dharma to the gullible
populace.

Depleted by dreadful taxes, tormented by drought, starved, owning none
of the bare necessities of life ...homes, clothes, food and drink, a
bed, a bath, etc. men will seem more like bhutas and pisachas.

Over small matters, members of the same family will fight their own
blood relations, even unto death, forgetting all ties of affection.

No one will bother to look after their old parents any more, they will
only live for themselves, and will neglect their own children. "

--Bhagavad Purana- 12th Chapter.

Is this not a glaring reflection on the condition of Indian society
today ? And this was written two thousand years ago !

Truly, our ancestors were men of great vision, who could see two
thousand years into the future.

Source : Net
 
கோயிலில் கொடிமரம் ஏன்?

2eeb1f90-94e2-4135-9ad3-4e701723edb4_S_secvpf.gif



கோயில்களுக்கு அழகு தருவது கொடிமரமாகும்.பக்தர்களை காக்கவும்,இறை சக்தியை அதிகரிக்கவும்,தீய சக்திகளை விரட்டவும் கோயிலில் கொடிமரம் நடப்படுகிறது. இதில் சூட்சும ரகசியம் என்னவென்றால் கொடிமரம் அடியில் சதுரமாக இருக்கும் இது இறைவனின் படைக்கும் கடவுள் பிரம்மனை குறிக்கிறது.

அதன் மேல் பாகம் கோண வடிவில் இருக்கும் இது காக்கும் கடவுள் மாகாவிஷ்ணுவை குறிக்கிறது.அதன் மேல் பாகம் உருண்டு நீளமாக இருக்கும்,அகம்பாவத்தை அழிக்கும் உருத்திரனை(சிவன்) குறிக்கிறது.

அதாவது கோயிலில் நமக்கு முதலில் காட்சியளிக்கும் கொடிமரம் மும்மூர்த்திகளின் முத்தொழிலை நமக்கு உணர்த்துகிறது. கோயிலில் நடக்கும் திருவிழா கோடியேற்றத்துடன் ஆரம்பிக்கிறது.

இதன் தத்துவம் என்னவென்றால் நாம் பூமியில் பிறந்து(படைத்தல்),நல்ல நிலையில் வாழ்ந்தாலும்(காத்தல்),கடைசியில் சிவனின் காலடியில் சரணடைகிறோம்(அழித்தல்) என்பதை உணர்த்துவதாகும்.

கொடிமரத்தின் மேல் உள்ள உருவங்கள்;

சிவன் -நந்தி.
பெருமாள்-கருடன்.
அம்பாள்-சிங்கம்.
முருகன் -மயில்.
விநாயகர்-மூஞ்சுறு.
சாஸ்தா-குதிரை.


Source:???????? ???????? ???? || why kodimaram in temple
 
பிரதோஷ காலத்தில் செய்யத்தகாத எட்டு விஷயங்கள்

aa92a601-00d0-4145-93c0-eb2900eb844f_S_secvpf.gif



1. போசனம் - உணவு உண்ணுதல்.

2. சயனம் - தூங்குதல்

3. ஸ்நானம் - குளித்தல்

4. எண்ணெய் தேய்த்தல்

5. வாகனம் ஏறல் -இது வெளியூருக்குப் பயணித்தலைக் குறிக்கும்.

6. நூல் படித்தல்

7. மந்திர செபம் - பலர் தவறுதலாக பிரதோஷ காலத்தில் பஞ்சாட்சர செபம் செய்கின்றனர். இது தவறு.

8. விஷ்ணு தரிசனம் - விஷ்ணுவே பிரதோஷ காலத்தில் சிவன் கோவிலுக்கு வழிபாட்டுக்கு வந்துவிடுவதால் இக்காலத்தில் விஷ்ணு வழிபாடு இல்லை.

பிரதோஷ காலத்தில் சிவாலயத்துக்குச் சென்று வழிபட வேண்டும் என்பதற்காகவே இந்த விதிகள். பலர் இக்காலத்தில் சிவாலயத்துக்குச் செல்லாமல் தாமே பூஜை, அபிஷேகங்கள் செய்து வழிபடுதலும், மற்றவர்களையும் அதற்கு அழைத்தலும் தவறாம்.

Source:?????? ????????? ??????????? ????? ????????? || prathosam time not doing things
 
ஜோதிர்லிங்க தலங்கள்

cb9f03fe-8ad1-41ca-8132-23f5919e5384_S_secvpf.gif



ஜோதிர்லிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருகிறது. இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கத் திருத்தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

இதனால் திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக ஜோதிர்லிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை.

எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் பூமியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர் லிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

அவ்வாறு ஒளியாக விளங்கும் பரம்பொருளைத் தியானிப்பது அல்லது பூஜை செய்வது, வணங்குவது என்பது மனிதர்களுக்கு கடினமாக இருந்தது. ஆகவே அந்த ஒளியை எளிதாக வழிபட லிங்க உருவத்தைக் கண்டு, அதைப் பல்வேறு கோணங்களில் உலகின் பல பாகங்களிலும், பல மதத்தினரும் வணங்கி வந்துள்ளனர் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு.

அந்த சிவலிங்க உருவம் தொன்று தொட்டு பாரதத்தின் 12 முக்கிய திருத்தலங்களில் பிரசித்தமாய் பல்வேறு பெயர்களில் வணங்கப்பட்டு வருகிறது. ஜோதிர்லிங்க வழிபாடானது துவாபரயுக ஆரம்பத்தில் விக்கிரமாதித்த மன்னரால் முதல் முதலில் ஆரம்பித்து வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

சிவனை ஜோதி உருவாய்த் திகழ்பவரை மனதார எண்ணி, புத்தியின் மூலமாய் தியானம் செய்வது அவருடைய வழிபாட்டின் உன்னத நிலையாகும். இவ்வாறு மனதையும் புத்தியையும் ஒருமுகப்படுத்தும் முறையே ராஜயோக தியானம் எனப்படுகிறது.

மனித ஆத்மாக்கள் அனைவருக்கும் மேலான அவர் நிராகாரமானவர் (மனித உருவற்றவர்); ஜோதி சொரூபமாய் விளங்குபவர். இந்த உலக சிருஷ்டியின் கர்த்தா அவரே! அவரை அன்புடன் நினைத்து தியானம் செய்வதன் மூலமே நமது பாவச்சுமைகள் அழிந்து, அமைதியும் அன்பும் ஆனந்தமும் பொங்கி வழியும்.

புதிய உலகமான சொர்க்கம் இப்புவியில் படைக்கப்படும்.

அதுவே இறைவனின் படைப்பில் முதல் யுகமாகும். அதைத் தொடர்ந்து திரேதா, துவாபர, கலியுகம் என்று காலச்சக்கரம் சுழன்று கொண்டேயிருக்கும்.

இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கத் தலங்கள்:

சோம்நாத் கோயில், பிரபாஸ் பட்டன், சௌராஷ்டிரா, (குஜராத்)

மல்லிகார்ஜூனா கோயில், கர்நூல், (ஆந்திரப் பிரதேசம்)

மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன்(மத்தியப் பிரதேசம்)

ஓங்காரேஸ்வரர் கோயில் (மத்தியப் பிரதேசம்)

கேதார்நாத் கோயில், (உத்தரகாண்டம்)
பீமாசங்கர் கோயில், சகியாத்திரி (மகாராஷ்டிரா)

காசி விஸ்வநாதர் கோயில், வாரணாசி (உத்தரப் பிரதேசம்) திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக் (மகாராஷ்டிரா)

வைத்தியநாதர் கோயில், தேவ்கர் (ஜார்க்கண்ட்)

நாகேஸ்வரர் கோயில், துவாரகை (குஜராத்)

ராமேஸ்வரம் (தமிழ்நாடு)

கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஒளரங்கபாத் (மகாராஷ்டிரா)


Source:http://www.maalaimalar.com/2013/11/27151924/jyotirlinga-darshan.html
 
சாஸ்திர-ஸம்ப்ரதாய வழிமுறைகளைக் சொல்கிற நாங்கள் ஸ்த்ரீ தர்மம் பற்றி என்ன சொல்கிறோம் ? ‘ஸ்த்ரீ தர்மம் என்பது, ஸ்த்ரீயானவள் தன்னுடைய ஸ்த்ரீத்வம் என்பதான இயற்கையாயமைந்த பெண்மையை சுத்தமாக ரக்ஷித்துக் கொள்வதில்தான் இருக்கிறது. இதற்கு அவள் புருஷன் மாதிரி உத்யோகம், பதவி என்பது போன்ற வெளியுலக வியாபாரங்களில் போகாமல் அடக்கமாக இருந்துகொண்டு வீட்டு நிர்வாஹத்தை அப்பழுக்கில்லாமல் கவனித்துக் கொள்வதையே தன்னுடைய பிறவிப் பணியாகவும், பிறவிப் பிணிக்கு விமோசனம் தரும் ஸாதனா மார்க்கமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால்தான் ஒரு ஸ்த்ரீக்கு வாஸ்தவமான, நிலைத்து நிற்கிற உள்நிரைவும், ஒயாத பறப்பு இல்லாத சாந்தி-நிம்மதிகளும் ஏற்படும். அவள் ஒருத்தியின் நிறைவோடு நிற்காமல் அவளுடைய சுத்தமான க்ருஹ நிருவாகமே குடும்பத்தையும் ஒரு ஒழுங்கான கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். க்ருஹத்தைச் சேர்ந்த புருஷன், பெண்டாட்டி, குழந்தைகள் ஆகிய எல்லா அங்கத்தினர்களும் ஸெளக்யமாக ஒன்றுபட்டு வாழ க்ருஹ லக்ஷ்மியின் பணியே வழிவகுக்கும். இப்படி தனி மநுஷ்யர்கள் அடங்கிய குடும்பம் ஒரு ஒழுங்கு முறையில் இருந்தால், பல குடும்பங்கள் அடங்கிய நாட்டிலும் தன்னால் ஒழுங்கு ஏற்படும். தனி மநுஷ்யர், குடும்பம், நாடு ஆகிய ஒவ்வொன்றிலும், எல்லாவற்றிலும் ஒரு நிம்மதியும் சாந்தியும் ஸெளக்யமும் இருப்பதற்கு இவ்வாறு ஸ்த்ரீகளும் புருஷர்களும் அவரவர்களுக்கு ஏற்பட்ட ஸ்வதர்மப்படி, அவள் உள்நிர்வாஹம், (சிரித்து) Home Department, அவன் வெளி நிர்வாஹம் – External Affairs என்று சாஸ்திரங்கள் அவரவர் ஸ்வபாவத்தை அனுஸரித்து அழகாகப் பங்கீடு செய்து கொடுத்திருப்பதைப் பின்பற்றுவதே உபாயம்’ என்று சொல்கிறோம்.
அப்படிச் சொன்னால் இக்காலத்துப் புதுக் கொள்கைக்காரர்களாக இருக்கிற எல்லோருக்கும் கோபம் கோபமாக வருகிறது. ‘இதெல்லாம் சாஸ்த்ரங்களை எழுதிய கொடுங்கோல்காரப் புருஷர்களின் வழியிலேயே போய், பெண்கள் புருஷர்களுக்கு ஸரிநிகர் ஸமானமாக எழும்பவிடாமல் அவர்களை அடக்கி, ஒடுக்கி, நசுக்கி வைக்கிற உபாயமே. ஸ்த்ரீ தர்மம் – புருஷ தர்மம் என்று பேதமேதும் இல்லை. மநுஷ்ய ஸமுதாயம் முழுதற்கும் ஸமமான ஒரே தர்மந்தான்’ என்று அவர்கள் எங்களைக் கண்டனம் செய்கிறார்கள்.
ஆனால் பதட்டப்படாமல் கொஞ்சம் ஆய்ந்து ஓய்ந்து ஆலோசித்துப் பார்த்தால் உண்மை புலப்படும்.
இங்கே ஸமத்துவப் போட்டி, போராட்டங்களுக்கு இடமே இல்லை. ஒரு தினுஸான கார்யம் உசத்தி, இன்னொன்று தாழ்த்தி என்றும் இல்லை. வெளிக்கார்யம் பண்ணி ஸம்பாதிப்பது, ஸம்பாதித்ததைக் கொண்டு வீட்டுக் கார்யங்களைப் பண்ணுவது ஆகிய இரண்டுமே மனித வாழ்க்கைக்கு அத்யாவச்ய மானவைதான். அப்படி இரண்டு தினுஸாகத்தான் பதி-பத்னிகளுக்கு தர்ம சாஸ்திரம் அதிகாரம் வழங்கியிருக்கிறது. மந்திரி இலாகா உதாரணம் சொன்னேனே, அதிலே ஒரு புது ஏற்பாடாக, Income Minister என்று வரவுக்கு மந்திரி ‘பதி’ என்றும், Expenditure Minister என்று செலவுக்கு மந்திரி ‘பத்னி’ என்றும் வைத்திருக்கிறது! பல பேருக்குத் தெரியாத விஷயம்:
ஸ்த்ரீகளுக்கே க்ருஹத்துக்கான ஸகலமும் வாங்கிப் போட்டுச் செலவு செய்வதற்காகத் திட்டம் போடும் அதிகாரத்தை தர்ம சாஸ்த்ரம் ஸ்பஷ்டமாகத் கொடுத்திருக்கிறது. அவன் உழைத்து ஸம்பாதனம் பண்ண வேண்டியது; அவளே தக்க ஆலோசனையுடன் அதைக் கொண்டு எல்லாச் செலவுகளுக்கும் திட்டம் போட்டு க்ருஹத்தை நிர்வஹிக்க வேண்டும் – இப்படி சாஸ்த்ரம் சொல்வதிலிருந்தே ஸ்த்ரீகள் தங்களுக்கென்று ஒரு ஸ்வதந்திரம், அதிகாரம் இல்லாமல் அடக்கி நசுக்கி வைக்கப்படவில்லை என்று புரியும்.
இப்படி இரண்டு விதப் பணிகள் இருப்பதில் ஒன்றுதான் உசத்தி, மற்றது தாழ்த்தி என்ற மாதிரி அபிப்ராயங்கள் ஏன் எழும்ப வேண்டும் ? ஆனபடியால், வெளிலோக கார்யத்தில் ஈடுபட்டிருக்கும் புருஷனுக்குத்தான் உசந்த ஸ்தானம், அகத்துக் கார்யத்தோடு நின்றுவிடுகின்ற ஸ்த்ரீக்குத் தாழ்ந்த ஸ்தானம் என்று எண்ணவேண்டிய அவசியமேயில்லை. (சிரித்து) அவனுக்கு வெளி உத்யோகமானால், அவளுக்கு உள் உத்யோகம்! அந்த உள் உத்யோகத்தை, ‘அடுப்பங்கரைச் சாக்கிலி’ என்று மட்டமாக நினைக்காமல் Domestic Management Executive என்று நினைத்துவிட்டால் எல்லாம் ஸரியாகிவிடும்; ஸரிநிகர் ஸமானமும் ஆகிவிடும். இன்னும் ஸம ஸ்தானத்துக்கு மேலேயேகூட இதை ஸ்த்ரீகள் ஒரு படி உசத்தியும் நினைக்கலாம். எப்படியென்றால், அவன் சம்பளத்துக்காக வெளியிலே ஆஃபீஸ் பண்ணுகிறானென்றால், இவளோ honorary – யாக அல்லவா உள் ஆஃபீஸ் நடத்துகிறாள்? கூலிக்கு வேலை செய்வதைவிட ‘ஆனரரி’யாகச் செய்வதில் ‘ஆனர்’ ஜாஸ்திதானே? அதாவது அதன் ஸ்தானம், கூலிக்குச் செய்வதை விட உசத்திதானே? அதுவும் ஆறு மணி, எட்டுமணி வேலை, வாராந்தர விடுமுறை என்ற ‘கண்டிஷன்’கள் இல்லாமல், தூங்குகிற நேரம் போக ஸதாகால கெளரவ உத்யோகம்! இப்படிப் பார்த்தால் ஸம ஸ்தானத்துக்கு ரொம்பவும் மேலேயே போய்விடுகிறதல்லவா? வேடிக்கைக்கு சொன்னேன். இங்கே ஸம-அஸமப் பேச்சுக்கே இடமில்லை. இரண்டு விதமான அவசியப் பணிகளை இரண்டு விதமான பேர்கள் தங்கள் தங்கள் ஸ்வதர்மத்துக்கு ஏற்றபடி செய்கிறார்கள். அவ்வளவுதான்! ச்வாஸ கோசம், ஹ்ருதயம் என்ற இரண்டு அவயவங்கள் இருவிதமான அத்யாவச்யப் பணிகளைச் செய்து ஒரு ஜீவனை உயிர்வாழச் செய்கின்றனவென்றால், இங்கே ஒன்றுக்கொன்று ஸமத்வப் போராட்டம் எங்கேயிருந்து வந்தது? அப்படித்தான் ஸ்த்ரீ-புருஷாள் தங்கள் தங்கள் இயற்கைக்கேற்ற ஸ்வதர்மப் பணியால் தாங்களும் நிஜ மனிதர்களாக உயிர்வாழ்ந்து, குடும்பம், நாடு ஆகியவற்றையும் வாழ வைப்பதும்.

Source : Net
 
சூரியத்திருவிழா

952955f6-2eae-4c64-992c-fbabf6344a4e_S_secvpf.gif


சூரியனின் ஒளிக்கதிர்கள் இல்லாமல் உலகம் இல்லை. பயிர் பச்சைகள் விளைய அவனே காரணமாகிறான். அவனது வெம்மையால், பூலோகத்தில் இருக்கும் தண்ணீர் ஆவியாகி மீண்டும் மழையாகக் கொட்டுகிறது. அதனால் தான், தங்கு தடையின்றி விவசாயம் நடக்கிறது.

நமது பசி தீர்க்கும் இறைவனுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனே பொங்கல். சூரியபகவான், உணவளிக்கும் வள்ளல் மட்டுமல்ல, கடுமையான நோய்களை போக்கும் மருத்துவராகவும், திகழ்கிறார். யார் ஒருவர் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்கிறாரோ, அவருக்கு நோய் என்பதே இல்லை.

சூரியனிடம் வரம் வாங்கிய சாம்பன் கிருஷ்ணருக்கு பல தேவியர் இருந்தாலும் ருக்மணி, பாமா, சாம்பவதி ஆகியோரே முக்கிய தேவியர் ஆவார். இவர்களில் சாம்பவதிக்கு பிறந்த மகன் சாம்பன். ஒருமுறை சூரியனின் மகிமையை உலகுக்கு உணர்த்தும் வகையில், தன் குடும்பத்திலேயே ஒரு குழப்பத்தை உண்டாக்கினார் கிருஷ்ணர்.

தன் மனைவியுடன் அவர் நீராடிக்கொண்டிருந்தபோது அவர்கள் அறியாமல் சாம்பனும் நீராடினான். தங்கள் மகன் வெள்ளத்தில் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்பதால் தாயார்கள் அவனையே கவனித்துக் கொண்டிருந்தனர். கிருஷ்ணை சரிவர கண்டுகொள்வில்லை.

இதை அறிந்த கிருஷ்ணர், சாம்பனிடம் பெற்றோருக்கு தெரியாமல் எப்படி நீராட வரலாம்? எனக் கேட்க, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் வந்துவிட்டது. "எதிர்த்தா பேசுகிறாய்'' என்ற கிருஷ்ணன், அவனுக்கு தோல்நோய் ஏற்படும்படி சபித்து விட்டார். இந்த நோய் நீங்குவதற்கு நாரதரிடம் சென்று சாம்பன் ஆலோசனை கேட்டான்.

அதற்கு நாரதர் சூரிய பகவானின் தரிசனம் கிடைத்தால், நோய் குணமாகும் என்றார். உடனே சாம்பன் காட்டிற்குச் சென்று சூரிய பகவனைக் குறித்து கடும் தவத்தில் ஆழ்ந்தான். சூரியனும், அவனது தவத்தை மெச்சி அவன் முன் தோன்றினார். ஆனந்தமும் பரவசமும் அடைந்த சாம்பனிடம், "என்ன வரம் வேண்டும், கேள்...'' என்றார் சூரியன்.

"தங்களுடைய தரிசனம் கிடைத்த பிறகு வரம் எதற்கு? என்றான் சாம்பன். அவனது ஆசை இல்லாத மனம் கண்ட சூரியன் மகிழ்ந்து "கண்டிப்பாக வரம் தந்தே தீருவேன்....'' என்றார். இதையடுத்து தனக்கு ஏற்பட்டுள்ள தோல் நோய் நீங்க வேண்டும் என்று சாம்பன் வரம் கேட்டான்.

சூரியனும் அவ்வாறே வரம் கொடுத்தார். இதையடுத்து சூரியனுக்கு சில கோவில்களைக் கட்டினான் சாம்பன். சூரியனுக்கு நம் நாட்டில் பல கோவில்கள் இருந்தன. காஷ்மீரில் மார்த்தாண்ட், ராஜஸ்தானில் சிரோஹ, மேற்கு வங்காளத்தில் ஆடியால் போன்ற இடங்களில் கோவில்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

ஆனால் இப்போது ஒரிசாவில் கொனார்க், தமிழகத்தில் சூரியனார் கோவிலில் மட்டுமே உள்ளன. இதில் சூரியனார்கோவிலில், தன் தேவியரான உஷா, பிரத்யுஷாவுடன் இருக்கிறார் சூரியன். இந்தக் கோவிலில் பிற கிரகங்கள் சூரியனைச் சுற்றி உள்ளன. இந்தியாவில், இத்தகைய அமைப்பில் வேறு எந்தக் கோவிலும் இல்லை.

??????????????? || pongal worship
 
பக்தியின் மகத்துவம்!

52e10373-38a2-4149-b4af-b2bb660b774e_S_secvpf.gif



கடவுளின் மீதும், வேதங்களின் மீதும் அளவற்ற நம்பிக்கை கொண்டவன் மண்டலீகன். இளவரசனான அவன் வனத்தில் சந்தித்த முனிவரை பணிந்து வணங்கி, 'எந்த முறையில் இறைவனை வணங்குவது நல்லது?' என்று கேட்டான். 'மண்டலீகா! அது அவரவர் மனப்பக்குவத்தை பொறுத்தது. பார்க்கும், உணரும் பொருளில் எல்லாம் கடவுள் உண்டு.

உனக்குள் இறைவனை நிறுத்து. எப்போதும் உனக்குள் மணி ஒலிக்கட்டும். அர்ச்சனை, ஆராதனை, அலங்காரம் நடக்கட்டும். அதைவிட பெரிய பக்தி எதுவுமில்லை'என்றார். முனிவரின் சொற்கள் மண்டலீகனின் நெஞ்சில் ஆழப்பதிந்தன. அவன் அரண்மனையிலும், எங்கினும் பார்ப்பவர்களிடம் எல்லாம் இறைவனைக் கண்டான்.

யாராவது வெறுப்பு காட்டினால், 'அறுசுவைகளில் ஒன்றுதானே கசப்பும்' என்றும், யாரேனும் கோபம் கொண்டால், 'காரமில்லாத உணவு சுவை கூட்டாதே! என்றும் ஒவ்வொன்றுக்கும் மனதில் புதிய விளக்கம் சொல்லிக் கொண்டான். அனைவருக்கும் நல்லவனாக இருந்தான். அன்பை செலுத்தினான். மக்கள் நலம் பேணினான்.

மண்டலீகனின் பெற்றோர் அவனுக்கு திருமணம் செய்து வைத்து, தவம் புரிய காட்டிற்கு சென்றனர். மண்டலீகனின் மனைவி சுலக்ஷனா இறைவன் மீது பக்தி மிக்கவள். எப்போதும் பூஜை, ஆராதனை, திருவிழா, அபிஷேகம், தான தர்மம் என்று தொண்டும் பக்தியுமாக இருந்தாள்.

அவளுக்கு கணவன் இதில் எல்லாம் கலந்து கொள்வதில்லையே, பாராட்டுவதில்லையே என்ற குறை இருந்தது. இதுபற்றி அவனிடம் ஒருநாள் கேட்டாள். அதற்கு மண்டலீகன், 'குடிமக்களின் நன்மையே மன்னனின் ஆராதனை! நாட்டின் அமைதியே பெரிய பக்தி' என்று கூறினான்.

ஒரு நாள் இரவு ஆழ்ந்த உறக்கத்தில்... ராமரின் பட்டாபிஷேகத்தை கனவில் கண்டு களித்தான் மண்டலீகன். ஆனந்த மிகுதியில், 'என் பிரபுவே! ராமச்சந்திர மூர்த்தி, ரகுபதே' என்று மெய்மறந்து வாய்விட்டு கூவினான், கைகள் கூப்பியபடி இருந்தன. கண் விழித்த சுலக்ஷனா, தன் கணவனின் பக்தியைக் கண்டு பூரித்துப் போனாள்.

மறுநாள், 'சுவாமி! என் நெடுநாள் பிரார்த்தனை நிறைவேறியது. தாங்கள் கனவிலாவது வாய்விட்டு இறைவனை துதித்தீர்களே!' என்று கூறினாள் சுலக்ஷனா. அதைக் கேட்டதும் திடுக்கிட்டான் மண்டலீகன். இவ்வளவு காலமும், நெஞ்சத்தில் பூட்டி வைத்திருந்த தாரக நாமத்தை அலட்சியமாக வெளியே விட்டு விட்டேனே!

கனவு மயக்கத்தில் உளறி விட்டேனே! ராமா! எங்கே போனாய்? இதோ உன்னுடன் வருகிறேன்' என்றவன் சரிந்து விழுந்தான். ஒரு ஜோதி கிளம்பி வானில் மறைந்தது. பிரமை பிடித்தவள் போல் ஆகிவிட்டாள் சுலக்ஷனா!. 'ஐயோ! என் கணவர், ராம நாமத்தை உச்சரித்தாலே இறைவன் வெளியே வந்து விடுவான் என்று நம்பும் அளவுக்கு ஈடற்ற பக்தரா?.

என் அகந்தையால் அவருக்கு பக்தியே இல்லை என்று தவறாக அல்லவா நினைத்திருந்தேன். இறைவா! அரை கணமேனும் உன்னை நான் அன்புடன் ஆராதனை செய்திருந்தால், என்னையும் என் பதியுடன் சேர்த்து விடு' என்று உருக்கமாக பிரார்த்தித்தாள்.

மறுகணமே அவள் உயிரும் பிரிந்தது. உள்ளத்தில் கோவில் கட்டி, மனதால் இறைவனை வணங்கி, அபிஷேக, ஆராதனை செய்து துதிப்பதும் பக்திதான். பக்தனுக்கும், தனக்குமான அந்த உறவை இறைவன் உணர்ந்து கொள்வான். வேறு எவரும் அறியத் தேவையில்லை.

????????? ?????????! || The effects of devotion
 
How to Eat in Banana Leaf - Hindu Life Style

..................................................................

Wash your hands thoroughly before sitting down to eat. Food served on a banana leaf is traditionally eaten with your fingers.

Eat the food that is served on the banana leaf with your right hand. Never eat food with your left hand; it is considered unclean. If you need to serve yourself additional food after you have started eating, you may use your left hand --- but say "Excuse me" first.


Fold the banana leaf in half when you have completed your meal.
If it is a joyous celebration or the food is very good, fold the banana leaf toward you.


If it is a somber occasion, such as a funeral, or the food is not particularly tasty, fold the banana leaf away from you.


HARI KRISHNAMURTHY


 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top