• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Introduction to Vedic Astrology

இராசிகளில் கிரஹங்கள் உச்சம் நீசம் பெறும் அளவு.

கிரஹம்உச்ச பாகை அளவு. நீச பாகை அளவு.
சூரியன் 10 190
சந்திரன் 33 213
செவ்வாய் 298 118
புதன் 165 345
குரு 95 275
சுக்கிரன் 357 177
சனி 200 20
 
நவாம்ச அட்டவணை. இதை பார்த்து நவாம்சம் சக்கிரம் சீக்கிரம் போடலாம்..

நட்சத்திரம்1ம் பாதம்2ம் பாதம்3ம் பாதம்4ம் பாதம்.
அசுவினிமேஷம்ரிஷபம்,மிதுனம்கடகம்.
பரணிசிம்மம்கன்னிதுலாம்வ்ருச்சிகம்
கார்த்திகைதனுசுமகரம்கும்பம்மீனம்.
ரோஹிணிமேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
மிருகசிம்மம்கன்னிதுலாம்வ்ருச்சிகம்
திருவாதிரைதனுசுமகரம்கும்பம்மீனம்
புனர்பூசம்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்.
பூசம்சிம்மம்கன்னிதுலாம்வ்ருச்சிகம்
ஆயில்யம்தனுசுமகரம்கும்பம்மீனம்
 
நட்சத்திரம்1ம் பாதம்2ம் பாதம்3ம் பாதம்4ம் பாதம்
மகம்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
பூரம்சிம்மம்கன்னிதுலாம் வ்ருச்சிகம்
உத்திரம்தனுசுமகரம்கும்பம்மீனம்
ஹஸ்தம்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
சித்திரைசிம்மம்கன்னிதுலாம்வ்ருச்சிகம்
சுவாதிதனுசுமகரம்கும்பம்மீநம்
விசாகம்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
அனுஷம்சிம்மம்கன்னிதுலாம்வ்ருச்சிகம்
கேட்டைதனுசுமகரம்கும்பம்மீனம்
 
நட்சத்திரம்1ம் பாதம்2ம் பாதம்3ம் பாதம்4ம் பாதம்
மூலம்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
பூராடம்சிம்மம்கன்னிதுலாம்வ்ருச்சிகம்
உத்திராடம்தனுசுமகரம்கும்பம்மீனம்
திருவோணம்மேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
அவிட்டம்சிம்மம்கன்னிதுலாம்வ்ருச்சிகம்
சதயம்தனுசுமகரம்கும்பம்மீனம்
பூரட்டாதிமேஷம்ரிஷபம்மிதுனம்கடகம்
உத்திரட்டாதிசிம்மம்கன்னிதுலாம்விருச்சிகம்
ரேவதிதனுசுமகரம்கும்பம்மீனம்
 
ராசி ஸ்புட அட்டவணை.

முதல்
வரை
நட்சத்திரம்பாதம்பாகைகலைபாகைகலைராசிராசியாதிபதி.
அசுவனி10000320மேஷம்செவ்வாய்
""2320640""""
"36401000""
"410001320""
பரணி113201640""
"216402000""
"320002320""
"423202640""
 
கிரஹ காரஹத்வம்=கிரஹங்கள் எவற்றை குறிக்கும் என்பது.

சூரியன்:- ஆத்மா, உடல்வலிவு. ,உடல்கட்டு, உஷ்ணம், எரியும் பதார்தங்கள், சிவ பூஜை, தைரியம், அரசாங்க உத்யோகம். வயது காலம், காரசாரமான உணவு, பூமி, தகப்பன், ப்ரகாசம், ஆத்ம ஞானம், ஞானோதயம் உண்டாகுதல், ஆகாயம், தீர்க்கதரிசி, பயம், தொழில் சாலைகளில் உற்பத்தி யாகும் பொருட்கள். கிராம அதிகாரி, க்ஷத்திரிய வர்க்கம், வீரமரணமெய்யும் வாய்ப்பு,பஞ்சாயத்தின் முடிவு, மனித வர்க்கங்கள். சதுரமான பொருட்கள். ப்ரதாபங்கள்;

பல வித புற்கள், வயிறு, உற்சாகம், அடர்ந்த காடு, உத்தராயணம், கோடை காலம், பிரகாசமான கண்கள், மலை புறத்தில் சஞ்சரித்தல்,காட்டு மிருகங்கள், வழக்குகள் விவகாரங்கள், பித்தம், வட்டத்தின் பரிதி, கண்ணை பற்றிய வ்யாதிகள். வேகம், துளிர், இலையுள்ள மரங்கள், சுத்தமான மனது , மேன்மையான உடல் நலம். நகைகள், தலை வலி. தந்தை வர்கத்தினர், முன் கை; தாமிரம், சிவப்பு வஸ்திரம், கல் வெட்டு, கல்லில் சிற்ப வேலை.

கல்லிலான விக்கிரஹம், நதிகரை, மத்தியான நேரம், பிரபலமான ஆட்கள்;மனோ தைரியம், முகப்பொலிவு, அடக்க முடியாத கோபம்,, பிறரால் கடத்தபடுதல்; சாத்வீக சுபாவம்,ஒரு அயனம், மாணிக்ககல், வயல்கள், ஜாதகத்தில் முதல் பாவம்,இடா நாடி, சிவந்த கண்கள், அணு ஆயுதங்களில் பயிர்ச்சி, புதிய கண்டு பிடிப்புகள்; அரசியல் சாசனம், மேதாவி தன்மை. புகழ் பெறுதல், தன்னம்பிக்கை,

மன கோட்டைகள்,முதுகு எலும்பு, பரந்த நெற்றி,
கண்ணின் மணி, க்ஷயரோகம், அஜீரணம், குடல், யோனி வியாதிகள். சக்கரை வியாதி, காலரா, போன்றவைகள், நிலக்கடலை, முந்திரி பருப்பு, பசுக்கள், மக்களது பிரதி நிதி, இரசாயந தொழில் புரிவோர்கள்,

மருந்து வியாபாரம், தட்டான், வயிற்றில் புண் உண்டாவது; விஷங்களிலிருந்து செய்ய படும் மருந்துகள், வேப்ப மரம், திருடர்கள். பயிர் தொழில் செய்பவர்கள்; சர்ப்பம், அத்திமரம், திருப்பதி மலை போன்றவை கூட சூரியனது காரஹத்துவங்கள்.
சந்திரன்:-
புத்தி, மலர்ந்த புஷ்பங்கள், வாசனை பொருட்கள், மனம், நெருங்கி பழகும் தன்மை, நீர் நிலைகள், குளம்,கிணறு, ஆற்றில் நீர் உள்ள பாகங்கள்,
தேவி உபாசனை, யாத்திரை, பிரமானங்கள்,சோம்பல், களைப்பாறுதல், ரத்த பித்தம், காக்காய் வலிப்பு, படரும் கொடிகள், ஹிருதயம், பெண்களது சாந்த குணம், தூக்கம், தண்ணீர்,

நாணயங்கள், வெள்ளி, ருசியுள்ள கரும்பு, சமமான சீரான சுக ஜீவனம், சீத ஜ்வரம், தாய்; வளர்ப்பு தாய், மத்தியானம், முக்தி அடைதல்; மலை மேலுள்ள ஸ்தலங்களை பார்ர்க போவது, வெளுத்த நிரம், அரைஞான், ஓடு, உப்பு, இளகிய மனது; மனதை கட்டுபடுத்தும் சக்தி, தாமரை உள்ள குளம், முஹூர்த்தங்கள். முகத்தின் பிரகாசம், வயிற்றின் அடிபகுதி, தெய்வ பக்தியில் ஆழ்ந்து இருப்பது.

மது பானங்கள், சந்தோஷம், காம தேவன், அரசனால் சன்மானிக்க படுவது, இரவில் தைரியம் உண்டாகுதல், வைடூரியம், சுலபமான வெற்றிகள். அழகு போஜனம், தூர தேச ப்ரயாணம், கடல் கடந்து போகுதல், தோல், பழுத்த பழங்கள், நீர் வாழ ஜந்துக்கள், பட்டு வஸ்த்திரம், தொழில் வளர்ச்சி, அழகான உடை;
நல்ல பெயர், வினயம், தேன், கற்கண்டு, பெண்களீன் மாங்கல்ய பாக்கியம், நாட்டு பற்று, இரக்கம், பெருந்தன்மை, தலையின் உச்சி பாகம், கடலில் பணி புரியும் ஆட்கள், பிறரது கஷ்டங்களை புரிந்து கொள்வது, பெண்களின் கர்ப்பபை, பிங்களா நாடி, வெண் குஷ்டம், தொண்டை புண், வைத்தியம், திரவ ரூபத்தில் மருந்து வகைகள். செவிலி தாய், அலை போன்ற தலை மயிர்,

கடலில் உற்பத்தி ஆகும் உணவு பொருட்கள், அழகான சரிரம், தனது சுய பலத்தை அறியாமை, , பெண்களை துன்புறுத்துவது, கருவழித்தல், பெண்களின் மாத விடாய், பத்திரிக்கை நிரூபர்கள், சித்திரம் வரைபவர்கள், வாதத்தால் ஏற்படும் கஷ்டம், சிறு காரியங்களூக்கு கூட விஷேஷ முயற்சி செய்ய வேண்டிய சூழ்நிலை.சத்துவ குணமுள்ள ராக்ஷஸர்கள், வெள்ளை குதிரை.

செவ்வாயின் காரகத்துவங்கள்:- ஆண்களின் ஆணவம் மற்றும் ஆண்மை; பூமி. முரட்டு சுபாவம், எதிர்ப்பு சக்தி, ஜனங்கள் மீது ஆதிபத்தியம், புகழ் குன்றி போகுதல், திருடன், யுத்தம் , கிரியா சக்தி, கலகம், பரஸ்பர விரோதம், சத்துருக்களது நல்ல மனம். சிவப்பு வஸ்துக்களில் ஆர்வம், பூந்தோட்டம், வயல்கள்.

விவசாயத்துக்கான நீர் நிலைகள், மிருதங்கம், தவில் போன்றவற்றின் சப்தங்கள். ,நினைத்த காரியத்தை செய்து முடித்த பரம த்ருப்தி, நாற்காலிகள், சிறிய அரசன், முட்டாள், பாம்பு, முன் கோபம்,வெளி நாட்டில் நல்ல பெயரெடுத்தல். , படை தாக்குதல், நெருப்பு, இரைந்து பேசும் வாக்கு வாதங்கள்,

வாந்தி பேதி, உஷ்ண ஜுரம், மெய் காவலன், அரசாங்க உத்தியோகம், இரத்தத்தினால் உடலில் ஏற்படும் கோளாறுகள். தேவியின் பால் பக்தி, ஆயுதங்கள்., முத்து மாலை, சுப்பிரமணியரை வணங்குவது, மிக உறப்புள்ள வஸ்துக்கள். அரசனை அண்டி வாழ்வது, சத்துருக்களை ஜயிப்பது, சூரிய உதயத்தில் காணப்படும் நல்ல சொப்பனம்,

வெய்யலின் கொடுமை, பராக்கிரமம், கம்பீர தோற்றம், ஒருவனது உண்மையான நடத்தை, கிராம ஆதிபத்தியம், காட்டில் வசிக்கும் ஜனங்கள், பொருட் காட்சிகள், மூத்திர கோச சம்பந்த வியாதிகள். தச்சர், இழந்த பொருள் திரும்ப கிடைப்பது, எரிந்து போன இடம், துஷ்டர்கள்.

சுகமான மாமிச சாப்பாடு, ரத்தம் சிந்துதல், தாமிரத்தால் செய்ய பட்ட மூர்த்திகள், புருஷ தன்மை, பிறரை குற்றம் சொல்வது, துப்பாக்கி, வெடிகுண்டு, பீரங்கி, போன்ற யுத்த ஆயுதங்கள். இடிந்து போன வீடு, வெறுப்புக்குறிய காம விகாரம், வீண் கோபம், சொந்த வீடு, பருத்த மரங்கள், உடன் பிறந்தோர், கடப்பாறை, தெற்கு பக்கம், வெட்கமில்லா குல பெண்கள், அடுக்கு மாடி வீடுகள், வேட்டை, குதிரை லாயம், நாற்றமுள்ள ரசாயன பொருட்கள், மின்சாரம்,

இடி, மின்னல், பேராசை, நியாய ஸ்தலங்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவது, விலை உயர்ந்த வாஹனம், அலர்ஜி, ரத்தக்குறைவு, மனைவியின் உடன் பிறந்தோர், விதைகள், உழவரது ஆயுதங்கள், சாகச செயல்கள். தேசாபி மானம் , பொறாமை, விடா முயர்ச்சி, எந்த சூழ் நிலையையும் சமாளிக்கும் தைரியம், பொறுமை யின்மை, சபல புத்தி, பித்த ப்ரகிருதி, கஸ்தூரி, வெல்லம், வெறுப்பு, திடீரென்று ஏற்படும் நன்மை தீமைகள், காவல் படை மின்சாரம்,

திடீரன்று கோபம் வருதல், அதிகார துஷ் ப்ரயோகம், இரவோடு இரவாக பணக்காரனாவது, பணத்தின் அசிங்கமான உபயோகம்,தர்மத்தை மறந்து எதை வேண்டுமானாலும் செய்பவர்கள், கொல்லன்மார், லஞ்சம் வாங்கும் சர்க்கார் ஊழியர்கள், கர்வம் பிடித்தவர்கள், இடையர்கள், வேத ப்ராஹ்மண குடும்பம், தர்க்க சாஸ்திரம், பெரிய பட்டிணத்தில் வசிக்கும் ஜனங்கள், நீண்ட கால சத்ருத்வம்; பல இடங்களுக்கு போய் வியாபாரம் செய்பவர்கள்.

 
புதன்:- புதனுடைய காரகத்துவங்கள் கீழ் கண்டவாறு.
படிப்பில் கெட்டிக்காரன், மேல் படிப்பு, கணிதத்தில் சிறந்த அறிவு; கஜானா, நல்ல அழகிய குதிரை;வாக்கு வன்மை; வேதம் ஓதும் ப்ராஹ்மணர்.அக்ஷரங்கள்,கடிதம், புதிய வஸ்திரம்,ஆர்கிடெக்ட்;ஜோதிடர்கள், நகாசு வேலை செய்யும் சிற்பிகள்.தீர்த்த யாத்திரை; பிரசங்கம் செய்வது. நல்ல வாக்கு சொல்வது; கோவில், பல்லக்கு; உணவு பொருட்கள்; பருக படும் பொருள்; இவைகளை வியாபாரம் செய்தல்;

விசேஷ ஆபரணங்கள், அர்த்த புஷ்டியுள்ள பேச்சு வார்த்தைகள், வேதாந்தம்,வடக்கு புறம், காய் பழங்களின் தோல்;ஓடு
பித்தளை இவற்றால் ஆன பண்டங்கள்; வைராக்கியம், அழகான கட்டிடங்கள்;கழுத்து; வைத்திய நிபுணர்கள்; செய்வினைகள்;
பச்சை குழந்தை;; உறவினர்களல் தொந்திரவு; நடனம், கை வரிசை; பக்தி;பரிகாரம் செய்தல், அதிகாலை; நல்ல பண்புள்ள,

சுபாவமுள்ள, ஆசாரமுள்ள மனிதர்கள்; தொப்புள், கோத்திரம், ஹேமந்த ருது; பதவி உயர்வு; நிலையில் மாற்றம்;பல பரீக்ஷைகளை நடத்துவது; விஷ்ணு பூஜை செய்வது; பறக்கும் பக்ஷிகள்; உடன் பிறவா சகோதரி; பாஷையில் உயர்ந்த கெட்டிக்கார தனம்,இலக்கணம்; இரத்தினங்களை , நகைகளை பரிசோதித்தல்; புராண கதைகள். ஆசிரியர்கள்,

வயதானவர்கள், பூந்தோட்டம், கோபுரம், ரஹஸ்ய ஸ்தானங்கள்; ஸ்ரீ கிருஷ்ண பகவான்; கோபம் இல்லாதவர்கள்; மாமனும் அவர் குடும்பத்தினரும், தாந்த்ரீகன், ஸங்கீத வித்வான்; வாதம் ப்ரதிவாதம் செய்பவர்; பொறியாளர்; அரசாங்க ப்ரதி நிதிகள்; வீண் வம்பு பேசுதல், மறதி, மனதிற்கு உகந்த செயல்களை செய்தல்; செய்வினை செய்பவர்கள்,தண்டோரா போடுபவர்கள்,
தூதர்கள்; ஆண் அலிகள்; மாயா ஜாலம் காட்டுபவர்கள்; சிரிக்க சிரிக்க பேசுபவர்கள்; நாட்டியகாரி; ஊர் காவலர்கள்; நெய், எண்ணைய், விதைகள்;இரசாயனம்; வெறுக்க தக்க நடத்தையுள்ளவர்; மூளை மற்றும் நரம்பின் சக்தி இவை எல்லாம் புதனை கொண்டு சொல்ல பட வேண்டும்.

குரு;- குருவின் காரகங்கள்;-
வைதீகர்கள், குருக்கள், தனது நித்ய கடன், பெயர், பசுமாடு; ஆக்ஷேபனைகள்; ருக் வேதம், மீமாம்சை; வேதாந்தம், வேத பாஷ்யங்கள்; ஆள் கூட்டம், ப்ரதாபம், கீர்த்தி; தர்க்கம், வானவியல், ஜோதிடம், புத்திர பெளத்திரர்கள்; வயிற்று வலி; அண்ணன்; தந்தையின் தந்தை; சிசிர ருது; கெட்டிகார தனம்; உடல் நலம், ;வியாபாரிகள்; அரச சன்மானங்கள்; தேவர்களின் வாழ்க்கை

பொருளாதாரம், கூட கோபுரங்கள்; அழகான மாளிகைகள்; கோரோசனை; டிராயிங்க் ரூம்; பூஜை ஸ்தலம், பஜனை மடம்;
தான தர்மம், பரோபகாரம், விருதுகள்; தவ மஹிமை; மஞ்சள் நிறம்; வட்டமான பொருட்கள்; கிராமத்தில் சஞ்சரிப்பவர்; வாக்கு வன்மை; வடக்கு பக்கம். பட்டு வஸ்திரம், புது மனை புகுதல், வயது முதிர்ந்தோர், முழங்கால். புகழ் பெற்ற வம்சம்; பெளதிக சாஸ்திரம், புத்தி கூர்மை; நுண்ணறவு; காவியம், எழுத்து கலை;சிம்மாசனம், விதானம்; நிறைந்த மனது;

பிராமணரது ஸ்தாபனங்கள், காலம், மாதம், அழகான பாத்திரங்கள்; வைடூரியம், இச்சா சக்தி; ஞாந சக்தி;சுப பலன், இனிப்பான பானம்; குடும்ப சுக செளக்கியங்கள்; நீளம், பொருமை; தங்கம்; தாந்த்ரீக கார்யங்கள்; புண்ணிய காரியங்கள், கபம், சட்ட திட்டம்; நல்ல ராகங்கள்; நீதி ஸ்தலம், குருவின் அருள்; பூர்வ புண்ணியம், வியாக்கியானம் செய்வது; கலா ஞானம்,
அன்னியோன்னியம்; ருக் வேதம், நல்ல பழுப்புள்ள தலைமயிர்; சுப ப்ருகிருதி; அஷ்ட லக்ஷ்மி; பருப்பு வகைகள், பொன், த்யாள குணம், புரோஹிதர்; கல்யாண குணம்; புதையல், மாணவர்கள்;ஆல மரம், தரகர்கள்; காய் கறி, மெழுகு, அரக்கு,

சுக்கிரன்:- காரகத்துவங்கள்:-

திருமணம், நல்ல உடை; நவீன நூதன வாஹனம்; பெண் மணிகள்; மத கோட்பாட்டை மறந்த பிராமணர்கள்; மனைவி

காதலர், சரீர சுகம், நல்ல புஷ்பங்கள், நினைத்ததை நடத்தி வைப்பவர்; சர்க்கார், மற்றும் பெரியோரது உத்திரவுகள்;

கீர்த்தி, மனம் போன போக்கு; வெள்ளை நிறமுள்ள உலோகங்கள்; சமிதாதானம், ஒளபாசனம், வைஸ்வ தேவம் போன்ற அக்னி காரியங்கள் செய்வது; உப்பு, ரசம், முன்னோக்கு; யஜுர் வேதம், ஒரு பக்ஷம், அரசனுக்கு சமமானவர்; வைசியர்கள், பரஸ்த்ரீ, நடனம், அருங்கலைகள், நாட்டியம், சித்திரம் வரைபவர்; ஸங்கீத வித்வான்கள்; விடுதி காப்பாளர்; கொடுக்கல் வாங்கல்,கிரய விக்கிரயம், இஷ்டமுள்ள பேச்சு வார்த்தை; அரச போகம், தனி அழகு, ஸ்தூல சரீரம், விசித்திரமான கவிதைகள்; பாட்டு

மனைவி சுகம்; முத்து மணி போன்ற ஆபரணங்கள்; ,பரிகாசம், பறவைகள்; பெண் அடிமை யாட்கள்; வேலையாட்கள்; பலிச்சென்று இருக்கும் முகம்; நல்ல மகன்கள்; நல்ல மணமுள்ள மாலைகள்; சந்தனம், அலங்கார பொருட்கள்; வீணை, புல்லாங்குழல்; அழகான நடை, அஷ்ட ஐசுவர்யம்; காண்பதற்கு அரிய அவயவங்கள்; அல்ப ஆகாரம், வசந்த காலம்,

ஸ்த்ரீகளிடம் நட்பு; கலைகளில் நிபுணர்; கிழக்கு பாகம், கம்பீரமான தோற்றம்; பல வித வாத்தியங்கள்; நவீன நாடகங்கள்.ரம்மியமான அலங்காரம், கண்ணுக்கு உகந்த காட்சிகள்; விளையாட்டில் வெற்றி; படகோட்டி; மாலுமி; டாம்பீக வாழ்க்கை; விபத்தினால் ஏற்பட்ட காயங்கள்; பணக்காரர்களுக்கு சமமான வாழ்க்கை; களைப்பு; பட்டபகல்; தாய்மை; பூப்பு;
கவி அரங்கம், புத்தகங்கள் எழுதுவது; அழகான தலைமுடி; பெண்களை வர்ணிப்பது; ஆண்குறி; பெண் குறி; மூத்திரம், சர்ப்ப லோகம்;யோகாப்பியாசம், குடும்ப ரகசியம், பெருவழி; உடலுக்கு மெருகு ஏற்றுதல், கலை ஞானம், பிறரிடம் காட்டும் பரிவு.

அன்பு, அழகான வாஹனங்கள்; தலைவர்கள், பாடகர்கள்; பசுக்களை காப்பாற்றுவது உலக புகழ் பெறுதல்; அன்னம், தித்திப்பை விரும்பும் ஜனங்கள், தோட்டம், புஷ்ப வாஹனங்கள்; நீர் வாழ வளர்ப்பவர்கள்/விற்பவர்கள்; வித்வான்கள்;

வானியர்கள்; குயவன்; கடுக்காய், நெல்லிக்காய்; தானிக்காய், ஜாதிக்காய்; சந்தனம், அகர்பத்தி; பட்டு, கம்பளி, சணல் காகிதம், மசாலாக்கள்; ஈர்ப்பு சக்தி; போக்கு வரத்து; கல்யாண மண்டபம், சினிமா நாடக தியேட்டர்கள்; பாலாலான பொருட்கள்; பாலருந்துதல்,
சனி ராஹு கேது தொடரும்.
 
ஒரு கிரகத்துக்கு மற்ற கிரகங்கள் எப்படி நட்பாக, பகையாக, சமமாக இருக்கிறது என்பதற்கான சித்தாந்த விளக்கம்.
கிரகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு மூலதிரிகோண வீடு இருக்கும். அந்தந்த கிரக மூலதிரிகோண வீட்டிலிருந்து 2, 12, 4, 5, 8, 9 ஆகிய ஸ்தான அதிபதிகளும், மற்றும் அதன் உச்ச ஸ்தான அதிபதியும் அந்த கிரகத்துக்கு வேண்டிய கிரகமாக இருக்கும். இதை உதாரணத்தோடு விளக்கினால் நன்கு புரியும்.

செவ்வாய் கிரகத்தை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். செவ்வாயின் மூலதிரிகோண வீடு மேஷம் ஆகும். மேஷத்தின்,
2, 12 -ன் அதிபதிகள் சுக்கிரன், குரு.
4, 5 -ன் அதிபதிகள் சந்திரன், சூரியன்.
8, 9 -ன் அதிபதிகள் செவ்வாய், குரு.
அதில் உச்சம் பெறும் கிரகம் சூரியன்.

இதை நன்கு பாருங்கள்.
குரு இரண்டு தடவை வருவதால் செவ்வாயின் மிக வேண்டிய நட்பு கிரகமாக குரு இருக்கிறது.
சந்திரன் ஒரு தடவை வந்துள்ளது. ஆனால் சந்திரனுக்கு ஜாதக கட்டத்தில் ஒரு வீடு மட்டும் ஒதுக்கப்பட்டிருப்பதால் அது இரண்டு தடவை வந்ததற்கு சமமாக நாம் எடுத்துக் கொள்ளவேண்டும். ஆகவே சந்திரன் செவ்வாயின் நட்பு கிரகமாக செயல்படும். சூரியனையும் இதே அடிப்படையில் அப்படியே பாவிக்க வேண்டும். மேலும் சூரியனுக்கு உச்ச வீடு என்பதால், செவ்வாய் இன்னும் கூடுதல் நெருக்கத்தை சூரியனோடு ஏற்படுத்திக் கொள்ளும்.

ஆனால் இரண்டு வீடுகளை கொண்ட சுக்கிரன் ஒரு தடவை மட்டும் வருவதால் நட்பும் இல்லாமல் பகையும் இல்லாமல் செவ்வாய் கிரகத்துக்கு சுக்கிரன் சம கிரகமாக செயல்படும்.

சனிக்கும் புதனுக்கும் ஒரு ஸ்தானம்கூட வராத காரணத்தால் அவை இரண்டு கிரகங்களும் செவ்வாயின் எதிரியாக செயலாற்றுவார்கள். ஆனால் சனி தன் மகர வீட்டை செவ்வாய் கிரகம் உச்சம் பெறுவதற்கு இடம் கொடுத்துள்ள காரணத்தால் சூழலுக்கு ஏற்ப எதிர்ப்பு தன்மையை குறைத்து சம தன்மையை கடைப்பிடிக்கும். (பாதகாதியாகவும் மேஷத்துக்கு சனி வரும் காரணத்தால் தொழில் படிப்பு போன்றவற்றில் பாதியிலேயே தடங்கலை ஏற்படுத்தும்)

இப்படியே ஒவ்வொரு கிரகத்துக்கும் கண்டுப் பிடித்துக் கொள்ளுங்கள்.
சனி ராஹு கேது தொடரும்.
சனியின் காரகத்வம்:-
ஆறறிவு இல்லாத ஜடங்கள்; தடங்கல்கள்; நொண்டி குதிரை; யானை தோல்;தன லாபத்தின் அளவு; வாணியர்; கைகோளர்; மரம் அறுப்போர்; குரங்கு வேட்டை ஆடுபவர்; அதிக துக்கம், பற்பல வியாதிகள்;சங்கடங்கள், விரோதம், மரணம், நடத்தை கெட்ட ஸ்த்ரீகளது சேர்க்கை அல்லது சினேகிதம்; பணி யாட்கள்; ஒட்டகம்; துஷ்டர்கள்; இழி குலத்தோர்;வன ஜாதியர்கள்;

உடல் ஊனமுற்றோர்; காயம் பட்டவர்கள், மலை ஜாதியினர்; தானம் செய்வதில் தடங்கல்கள்; ஆயுட் காலம், பெண் அலிகள்;பக்ஷிகள், மிருகங்களை வேட்டையாடி உண்பவர்கள்; நெருப்பில் வேலை செய்பவர்கள்; அனாசாரம், வீரியமின்மை; பரை; தம்பட்டம், டமாரம், போன்ற பெரிய வாத்தியங்கள்; புயல்காற்று; வயது முதிர்ந்த குடும்பத்தினர்; அந்தி பொழுது;

சிஷ்யர்களது முன் கோபம், கடுமையான உழைப்பு, சூதாட்டம், துஷ்ட க்ஷேத்திரங்கள், பூமியின் தெற்கு பாகம், அழுக்கான வஸ்த்திரம், இடிந்த வீடு. அருவருப்பான காக்ஷிகள்;கெட்ட சினேகிதம், கொடூரமான சுபாவம், கொடிய செயல்கள்; சாம்பல்; நீல நிற தானியங்கள்;இரும்பு; மெஷின்கள்; கரி; எண்ணெய்கள்; கீழ் தர வியாபாரிகள்; கம்பளம், மேற்கு பாகம். வெளி நாட்டுக்கு யாத்திரை போதல்; வாழ்வின் தரம்; குயுக்தியான திட்டம்; கீழ் நோக்குவது; கூர்மையான ஆயுதங்கள்; வெடி மருந்து;

சதி செயல்; கீழ்தரமான தெய்வங்களிடம் பக்தி; யுத்தம்; வீண் அலைச்சல்; விஷம் தோய்ந்த ஆயுதங்கள்: பராக்கிரமம்;பழகிய எண்ணெய்;விறகு, நீச தொழில் செய்யும் ப்ராஹ்மணர்; தாமச குணம், விஷ மருந்துகள்;தொழிலாளிகளின் பிரதினிதிகள்; மந்திர வாதம்; கொடுமை; பயம், நீளம்; வேட்டையாட்கள்; தலை முடி; விகாரமான தோற்றம்; கற்பனை வியாதிகள்; ஆடு; எருமை மற்றும் வன விலங்குகள்;
கெட்ட எண்ணம் உள்ள ஆண்கள், பெண்கள்; பிறரை மயக்கும் வேலை; ஏமாற்றம், சுடுகாட்டில் உபாசனை; கொள்ளையடித்தல்; தரித்ரம், நகம், தெருவில் அலைந்து வியாபாரம் செய்பவர்கள்; போக்குவரத்து; நில சம்பந்தமான வழக்குகள்; ஒப்பந்தத்தின் அடிபடையில் பயிர் தொழில் செய்வது; குப்பை கூளம்; எண்ணைய் வியாபாரி;கெட்ட எண்ண காரர்கள்; வலிமை இழந்த ஆண்; கைதி; புலி; பன்றி;

அசுத்தமான இடங்கள்; கூட்டு ப்ரார்த்தனை; தீண்டாமை; காணக்கூடாத வியதியஸ்தர்கள்; எண்பது வயதிற்கு மேற்பட்டவர்கள்; கசப்பும் புளிப்பும் உள்ள பானங்கள்; நாற்றமுள்ள இரசாயன மருந்துகள்;விதவை; விஷமுள்ள பாம்பு; வைக்கோல்; கழுதை; நரி;ஜமீந்தார்கள்; தரித்ரர்கள்;

இராகு:-
குடிசைகள்; ரஹஸ்யமான விஷயங்கள்;வீண் வாக்குவாதம்; கடுமையான பேச்சு; பிணம் தூக்குபவர்; கெட்ட தொழிலில் ஈடு பட்ட பெண்கள்; சுடுகாட்டில் பணி புரிபவர்; அகங்காரம் உள்ளவர்; சூதாடுதல்; திருட்டு தனமான திட்டங்கள்; மற்றும் வேலைகள்; தீட்டு; பெண்களால் ஏற்படும் வியாதி; குன்ம வியாதி; வெளி நாடு செல்வது; எலும்பு; சதி செயல்கள்; நாவிதன்

தூக்கிலிடுபவன்; திருட்டுதன மான பார்வை; அடர்த்தியான பசுமை இல்லாத காடு; மிலேச்சர்கள்; கருடன்; காடுகள், மற்றும் மலைகளில் ஏற்படும் கொடுமைகள்; வீட்டுக்கு வெளியில் உள்ள காலியிடம்; துஷ்ட தனமாக பேசுபவர்கள்; வாதம் கபம் இவற்றால் ஏற்படும் தொல்லைகள்; பேய் காற்று; கொலை; கொள்ளை;தீ வைத்தல்; பாம்புகள்;உடன் பிறந்தவருடன் பாலுறவு;
அமங்கள வஸ்துக்கள்; பாம்பு கடி; விஷ வைத்தியம்; பழைய வாஹனங்கள்; தாயிடம் கள்ள உறவு உடையவர்; மிருகங்களை புணர்வது; கட்டுக்கு அடங்காத காம வெறி; காச நோய்; மூச்சு முட்டுதல்; கெட்டவர்களின் தலைவன்; கெட்ட வழியில் பணம் சம்பாதித்தல் இங்கும், தூர தேசத்திலும்; வன துர்கை உபாசனை; விபரிதமான எழுத்துக்கள்; ஆடு மாடு மந்தை; தோல்; மலை உச்சி

குரங்கு; நதி கரையில் வாழ்பவர்கள்; கோமயம்; ஜாதியிலிருந்து விலக்கபட்டவர்; தீட்டு உள்ளவர்; மாதவிடாயில் இருக்கும் ஸ்த்ரீ; மல் யுத்த காரர்; அளவுக்கு மேல் தூங்குபவர்; தொழு நோயாளி; நாஸ்திகர்கள்; குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க விரும்புவர்கள்; நர மாமிசம் சாப்பிடுபவர்; விஷ ஜந்து; நாஸ்திகர்கள்; தர்மத்தை விரும்பாதவர்கள்;

கேது:-
செவிடர்; முடமானவர்; கணபதி; சண்டிகேஸ்வரர்; காட்டு மருந்தை உபயோகிக்கும் வைத்தியர்; வெறி பிடித்த நாய்; கோழி; சேவல்; சித்தர்கள்; பாம்பாட்டிகள்; சிறை சாலை ஊழியர்கள்; மோக்ஷ ஸாதனம்; சொத்துக்கள் நஷ்டமடைவது;

ஆறாத துக்கம்; பல வித ஜுரங்கள்; கடுமையாக தவம் புரிதல்; அல்ப சிநேகிதம், புண் ஏற்படுதல்; வயிறு, கண் இவற்றில் வியாதி; கல் வகைகள்; பிறருக்கு உதவுதலில் வெறுப்பு; மான்; பல வித முட்கள்;ஞானம், மெளன விருதம், சித்தாந்தம்; அளவை நூல்

தர்க்க சாஸ்திரம், வழக்கத்திற்கு மாறான சுக போகம்; சத்ருக்களால் செய்ய படும் செய்வினை; வைராக்கியம்; வெடி குண்டு; சூலம், பல வித வெறுக்க தக்க வியாதிகள்; நல்ல விளையாட்டு;கட்டடங்கள்; குழப்பங்கள்; கற்பழிப்பு; வாழ்வில் வெறுப்பு; தற்கொலை முயர்ச்சி; மலைச்சாரல்கள்; உள் நாட்டு கலகம், மிக பெரிய வியாபாரிகள்; தைரிய சாலியான பெண்கள்;
கட்டுக்கு அடங்காத உணர்ச்சிகள் மற்றும் மன விகாரங்கள்; மத பற்று இல்லாத ஜனங்கள்;பிறர் மனைவியை துன்புறுத்துபவர்; அல்ப சந்தோஷம்; பிறர் கஷ்டத்தை கண்டு சந்தோஷம் அடையும் மன முடையவர்; தன்னிச்சைபடி நடப்பவர்; முட்டாள்கள்; மத பைத்தியம்; கட்டுபாடான உணவு; நல்ல விளையாட்டு;
 
12 ராசிகளின் காரகத்வங்கள்.

12 ராசிகளின் காரகத்வங்கள்.
மேஷம்:- மிருகங்களின் மாமிசம், கம்பளி; சிவந்த தானியங்கள், கடுகு, துவரை, சிவப்பு சந்தனம், சிவந்த கோதுமை; சித்த மருந்துகளின் செடி கொடிகள். பால் மரங்கள். இரும்பு மெஷின்கள்; நீர் தேக்கங்கள்; மின்சார உற்பத்தி ஸ்தலம்,மான் போன்ற மாமிசம் உண்ணா வன விலங்குகள்;

ரிஷபம்:- வயல்கள்; கவிதை பாட்டுகள்; கொடுக்கல், வாங்கல், வாணிபம்; பூர்வீக சொத்து, விலை யுயர்ந்த பழ வகைகள்; வெள்ளை கோதுமை, அரிசி, சக்கரை; பால் பொருட்கள்; நூலால் செய்யபடும் ஆடைகள்; நூல், சணல், பஞ்சு;ராஜ முத்திரை.

மிதுனம்:- ஹாஸ்யம், நடனம், சங்கீத வாத்ய கச்சேரிகள்; சில்பம், ஆராய்ச்சி, விமான யாத்திரை; நபும்சகர், கடை வீதி,
பயிறு, நிலக்கடலை, பருத்தி; விதையில்லாபழங்கள்; குங்கும பூ; கஸ்தூரி; வாசனை பொருட்கள்; காகிதம், பத்திரிக்கை, எழுத்தாளன். பிரசுரம், ரயில் வாஹனங்கள்; மஞ்சள்; வெள்ளரி.

கடகம்:- சோறு, ஆகார பொருட்கள்; பானங்கள்; பான பொருட்கள்; வெள்ளி, பாதரசம், கப்பல்; நீரில் செல்பவை; போக்குவரத்து;காலத்தை அளப்பவை; மின்னியங்கிகள்; பூமியிலிருந்து எடுக்கபடும் கற்கள்; மாணிக்கம், சர்க்கார் துறை.

சிம்மம்:- பழ ரஸங்கள்; தோல், புலி, மான், வெல்லம், கற்கண்டு, பித்தளை, தங்கம்; நீர், ஆஹாரம், வேட்டை ஆடிய மாமிசங்கள்;.யுத்ததில் வெற்றி; சிறு வன விலங்குகள்; காட்டில் வாழும் நாட்டு மிருகங்கள்;

கன்னி:- விளையாட்டு சாதனங்கள்; விளையாட்டு மைதானங்கள்; பூந்தோட்டம், காய் கறிகள்; அலங்கார தூண்கள்; அலங்கார பொருட்கள்; பொது ஜன சேவை; மாமன், தாய் வழி பாட்டன்; எண்ணய்; வித்துக்கள்; பட்டாணி, பார்லி, செயர்க்கை பட்டு மற்றும் வஸ்திரங்கள்; பசுமையான பொருட்கள்;பச்சை பொருட்கள்;

துலாம்:- நீதி சாஸ்திரம்; தர்ம சாஸ்திரம்; நீதி மன்றம்; பெளராணிகர்; மாணவர்கள்; வழக்கறிஞர்; புராண கதைகள்; வியாபாரிகள்; தொழில் அதிபர்கள்; பட்டு, ஆமணக்கு, எள்; மிருகங்களின் உணவுகள்;

விருச்சிகம்:- தொழிலாளிகள், சுரங்கம்; கட்டு வேலை; பூமியிலிருந்து உலோகங்களை எடுக்கும் தொழில் வகைகள்; உணவு எண்ணைய்கள்; பாக்கு, சர்க்கார் ஒப்பந்தம்; அறுவை சிகிட்சை; வெளி நாட்டு மருத்துவம்; ஆயுதங்கள்; கருத்தடை, மற்றும் அவற்றின் உபகரணங்களும், விளைவுகளும்; கற்பழித்தல்; கள்ளக்கடத்தல்; விஷ ஜந்துக்கள்; பந்தங்கள்; யுத்தம், யுத்த சின்னங்கள்; தொழிற்சங்கங்கள்;

தனுசு:- இரட்டை வேஷம், குதிரை; கிழங்கு வகைகள்; ரப்பர், வியாபாரம், காப்பீடு; நீர் வாழ் ஜந்துக்கள்; தொலை பேசி; அணு ஆயுதங்கள்; இயைற்கைக்கு எதிரான மரணம்;

மகரம்:- இரும்பு, எண்ணைய், எண்ணைய் ஊற்றுகள்; மண்ணிலிருந்து எடுக்க படும் நகைகல்; இயற்கை வாயுவின் உபயோகம், சர்க்கார் நிலம், பெரிய அதிகாரம்; கண்ணாடி, டின், ஈயம், தாமிரம் முதலியன. சுரங்கத்திலிருந்து வரும் ஜலம்; கரி வகைகள், உரங்கள்; விவசாய கருவி; கூட கோபுரம், விசித்திரமான மாளிகைகள்.

கும்பம்:- நீரில் வளரும் செடி கொடிகள்; பூக்கள். சங்கு; முத்துசிப்பி; உளுந்து; செயற்கை ஜந்துக்கள்; மின்சார சாதனங்கள்; வெளி நாட்டு பயணம்; கண் வியாதி, ரத்த ஓட்டம்; சுவாச வியாதிகள்; ஹிருதய நோய் தீவிர சிகிச்சை;

மீனம்:- திரைப்படம், ரசாயன பொருட்கள்; கோரோசனை; விக்ஞ்ஞான வளர்ச்சி; விஷ ஜந்துக்கள்-குளவி போல் பறப்பவை;
கொசு, மதுபானம். மதுக்கடை முதலியன.
பற்பல ஹோரா சாஸ்திரங்களிலிருந்து ராசிகளின் காரகத்துவங்களை தேர்ந்தெடுத்து எழுதியுள்ளார் திரு. பி எஸ் ஐயர் அவர்கள்.
 
Dear Sir,
Pls let me know how will you make horoscope for a individual is it based on birth time or based upon conceived time in the womb - which very difficult to ascertain & hence all these predictions are hoax.
No individual can predict the correct time if a person for making a horoscope.
To my understanding is that we should know the e act date & time a person was conceived in the womb in order to get the correct prediction otherwise it is all hoax to make money.
Hence the astrology is not correct way & we Brahmins are fooled by this.
My humble request is not hurt anybody but was finding a true answer in order to make astrology correct.
Once conceived the fotus has life & it transforms into a baby in the womb itself & hence for making a true horoscope we need to have e act date & time of conceivement. Otherwise the horoscope will give incorrect info & it us speculation.
Marrying people by matching horoscope is also not correct & two astrologers won't agree on the matching concept. One will say it is matched & other it is not but parent follow what is convenient to them & not strictly as per horoscope - which is totally wrong for all individual.
Sir if you do research on the same you will agree with this.
Timing of making horoscope is - at the birth or at the conceivement ( which no one can actually predict the date & time). Hence the astrology is fake & prediction are whins & fancy of astrologer in order to make money.
My intention is not to hurt anybody but wants to ascertain the correct timing for making horoscope for the individual. Thanks for reading it.
Your query is a common doubt raised by many rational individuals and invariably by non-believers of god. Nothing wrong in having difference of opinion.
Possibly, you may be aware that “Astrology” is a part & parcel of Veda, which is true.
Yes, exact time & spatial coordinates of birth (real time of disconnecting umbilical chord-natural & C-section Birth or exit of head or complete baby) are prime parameters for calculations. Most likely, the present day calculations of horoscopes takes care of conceiving / womb duration. Medically, within 72 hrs of conjugation the union of egg & one sperm may take place. Again, it’s “Probability Theory”. In mathematics & Probability, we say an event (here creation start) can occur with 99%, 96% or 90% confidence level. So, there is nothing called 100% confidence and therefore the Astrology predictions too vary between lesser to highest possible confidence and never can have 100%. Main reason is the number of parameters an astrologer considers for calculations and his knowledge plus skill to interpret so many variables, their feasible combinations. Therefore, we can blame ourselves (like going to LMP Doctor, RMP, MBBS, MD, super-specialist for any ailment and blaming him for killing the patient: Affordability & Requirement) for mid-prediction. Atleast, I won’t agree or say “True Vedic Astrologer does prediction for only money”. Ample dakshinai was given to pandits, gurus, Acharyas, Brahmins without asking earlier and now a days without baby’s crying even mother’s do not feed milk. So, survival instinct of every astrologer has forced him to say pleasing predictions with ifs & buts, pariharams, etc. Infact, as a citizen and practicing a profession
 
Your query is a common doubt raised by many rational individuals and invariably by non-believers of god. Nothing wrong in having difference of opinion.
Possibly, you may be aware that “Astrology” is a part & parcel of Veda, which is true.
Yes, exact time & spatial coordinates of birth (real time of disconnecting umbilical chord-natural & C-section Birth or exit of head or complete baby) are prime parameters for calculations. Most likely, the present day calculations of horoscopes takes care of conceiving / womb duration. Medically, within 72 hrs of conjugation the union of egg & one sperm may take place. Again, it’s “Probability Theory”. In mathematics & Probability, we say an event (here creation start) can occur with 99%, 96% or 90% confidence level. So, there is nothing called 100% confidence and therefore the Astrology predictions too vary between lesser to highest possible confidence and never can have 100%. Main reason is the number of parameters an astrologer considers for calculations and his knowledge plus skill to interpret so many variables, their feasible combinations. Therefore, we can blame ourselves (like going to LMP Doctor, RMP, MBBS, MD, super-specialist for any ailment and blaming him for killing the patient: Affordability & Requirement) for mid-prediction. Atleast, I won’t agree or say “True Vedic Astrologer does prediction for only money”. Ample dakshinai was given to pandits, gurus, Acharyas, Brahmins without asking earlier and now a days without baby’s crying even mother’s do not feed milk. So, survival instinct of every astrologer has forced him to say pleasing predictions with ifs & buts, pariharams, etc. Infact, as a citizen and practicing a profession.... continued

Infact, as a responsible Citizen & practicing a profession to earn our livelihood can majority (exceptions never proves the rule) say “I do not lie, I am cent % honest & true to my employer, employees, even mother, father, wife, family, friend, colleague, 100% involved & Productive in job, journey, availing facilities, IT, etc”. Answer is “NO”. Than how we can expect a day to day basis earning Astrologer? Yes, in Kaliyugam -as per Veda, the person with least little knowledge in any field shall project himself as super specialist in the field. We should be cautious. “Kurai Kudam Vs Nirai kudam...”. Masters & Vedic Pandits, enlightened gurus always keep low profile and tell only truth, whether you like or not. So, with total belief & faith (like we go to a doctor of our affordability & ailments) approaching right person for any particular job in right time is needed and that too happens only if one has divine blessings and divine support is given if one does good selfless deeds in this life in the name of humanity & god.
Please excuse me if the explanation is not convincing. V.Rajagopalan, Bangalore (Retired Professional R&D Scientist- learning & practicing Veda /Upanishadam/Astrology-not for money as passion)
 
நீச வீடு கிரஹங்களுக்கு.

மீனம்
புதன்
மேஷம்
சனி
ரிஷபம்மிதுனம்
கும்பம்கடகம்
செவ்வாய்
மகரம்
குரு
சிம்மம்
தனுசுவிருச்சிகம்
சந்திரன்.
துலாம்
சூரியன்
கன்னி
சுக்கிரன்

Sir
Do Rahu / Ketu have Ucha Neecha sthanams? If yes,what are they?
 
.ராசி, அம்ச கட்டங்களில் கிரஹங்கள் அமைக்க:-உதாரண ஜாதகம்.

இது யாருடைய ஜாதகமும் இல்லை. உதாரணதிற்காக குறிக்க பட்டது.
தாது வருடம் பங்குனி மாதம் 27ந்தேதிக்கு சரியான 09-04-1997. புதன் கிழமை சுக்கில பக்ஷம் துதியை திதி 13-15. பரணி நக்ஷத்திரம் 42-52. இரவு 07-15 மணிக்கு சென்னையில் பென் குழந்தை சுப ஜனனம்.

பங்குனி மாதம் 27 ம் தேதி.சூரிய உதயம் வாசன் பஞ்சாங்கம் படி 6.03.சென்னையில்.
குழந்தை ஜனனம் இரவு 7-15 மணி.சூரிய உதயத்திலிருந்து எவ்வளவு நேரத்தில் குழந்தை பிறந்தது.என்று பார்க்க வேண்டும்.அந்த நேரத்தை கண்டறிய பகல் 12 மணிக்குள் என்றால் பிறந்த நேரத்திலிருந்து சூரியோதய நேரத்தை அப்படியே கழித்துக்கொள்ளலாம்.பகல் 12 மணிக்கு மேல் ஆனதால் 12+7.15=19-15. -6-03=13.12 அன்று சூரிய உதயத்திலிருந்து 13 மணி 12 நிமிஷத்தில் குழந்தை பிறந்துள்ளது.

மற்றொரு குழந்தை இரவு 2 மணி 20 நிமிஷத்திற்கு பிறந்து இருந்தால் எப்படி கணக்கிட வேண்டும்.
ஒரு நாளின் மொத்த மணி 24. 24.00+2.20=26.20.சூரிய உதய நேரம்=6.03.குழந்தை பிறந்த நேரம்=26-20-6.03=20.17.

சில பஞ்சாங்கங்களில் சென்னை சூரிய உதயம் பங்குனி 21ம் தேதி 6-06 என்று இருக்கும். சித்திரை 1ம் தேதி சூரிய உதயம் சென்னையில் 6-01 என்று இருக்கும். மற்ற ஊர்களுக்கும் வரிசையாக கொடுத்து இருப்பார்கள். உதாரண ஜாதக குழந்தை பிறந்தது பங்குனி 27,

ஆதலால் இன்று சூரிய உதயம்= பத்து நாட்களில் சூரிய உதயம் 5 நிமிடம் குறைந்துள்ளது
பங்குனி 21 டு 26 =6 நாட்களில் 3 நிமிடம் குறைத்து உதய நேரம் 27ம் தேதியன்று 6-03 என்று கொண்டு வர வேண்டும்.

ராசி இருப்பு தசா புக்தி காண நாழிகை முறையே அனுசரிக்கபடுகிறது. அதனால் 13 மணி 12 நிமிஷத்தை நாழிகை ஆக்கி கொள்ள வேண்டும். 24 மணி க்கு 60 நாழிகை;

12 மணிக்கு 30 நாழிகை+1 மணிக்கு 2.30 நாழிகை+ 12 நிமிடத்திற்கு 0.30 நாழிகை=30.00+2.30+0.30=33 நாழிகை. சூரிய உதயத்திலிருந்து குழந்தை 33 நாழிகையில் பிறந்துள்ளது. 24 நிமிஷம் ஒரு நாழிகை; 60 வினாடி ஒரு நாழிகை.

அன்று துதியை திதி 13.15 வரைக்கும் அதாவது பகல் 11 மணி 21 நிமிடம் வரை தான் உளது
உதாரண ஜாதக ஜனன நேரம் இரவு 7.15 மணி. ஆதலால் த்ருதியை திதியில் பிறந்துள்ளது.

நக்ஷத்திரம் பாதம் அறிதல்:- பங்குனி மாதம் 27 ம் தேதி பரணி நக்ஷத்திரம் நாழிகை 42.52 வரையிலுள்ளது. =அது இரவு 11 மணி 12 நிமிடம் வரை உள்ளது. குழந்தை 7 மணி 15 நிமிடத்திற்கு பிறந்து விட்டது. ஆதலால் பரணி நக்ஷத்திரம் என்று சுலபமாக தெரிந்து கொள்ளலாம். பரணி நக்ஷதிரத்தின் பரம நாழிகை கணக்கிட வேண்டும்.

பங்குனி மாதம்26ம் தேதி பஞ்சாங்கத்தில் அசுவினி நக்ஷத்திரம் 46.12 என்று உள்ளது. ஆதலால் முதல் நாள் 46.12 நாழிகைக்கு மேல் பரணி நக்ஷத்திரம் ஆரம்பம். ஓரு நாளுக்கு 60 நாழிகை. ஆதலால் 60.00-46.12= 13.48 நாழிகை பரணி உள்ளது.

குழந்தை பிறந்த புதன் கிழமை அன்று பரணி நக்ஷத்திரம் 42.52 வரை உள்ளது. ஆதலால் 42.52+13.48=56.40. ஆதலால் பரணி நக்ஷத்திரம் பரம நாழிகை= மொத்த நாழிகை 56.40.

இந்த நக்ஷத்திரத்தில் முன்னால் சென்று விட்ட 13.48+குழந்தை ஜனனமான 33.00ம் கூட்ட 46.48 நாழிகை என்று வரும். பரணி நக்ஷத்திரம் மொத்த நாழிகை 56.40. இதில் சென்று விட்ட நாழிகை 46.48. ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் 4 பாதங்கள். பரம நாழிகை56.40/ 4=14.10. ஆக ஒரு பாதத்திற்கு 14.10 நாழிகை; இரண்டாம் பாதம் 14.10 நாழிகை; 3ம் பாதம் 14.10 நாழிகை மொத்தம் 42.30. குழந்தை ஜனனமான நாழிகை 46.48. ஆதலால் பரணி நக்ஷத் திரம் நான்காம் பாதம் என்று அறிய வேண்டும்.


அடுத்தது யோகம் அறிதல்:- பங்குனி மாதம் 27ம் தேதி புதன் கிழமை ஆரம்பத்தில் விஷ்கம்ப யோகம். 4.47 முடிய. பிறகு ப்ரீதி யோகம் 58.05 வரை உள்ளது. புதன் கிழமை குழந்தை ஜனனம் 33 நாழிகையில். ஆதலால் ப்ரீதி யோகம் என்று எடுத்துகொள்ள வேண்டும்.

கரணம் அறிதல்:- புதன் கிழமை அன்று கெளலவ கரணம் 13.19 நாழிகை வரை உள்ளது. அதற்கு மேல் தைதுல கரணம்.இந்த தைதுல கரனம் மறு நாள் காலை 8.42 நாழிகை வரை உள்ளது. ஆதலால் குழந்தை ஜனனம் 33 நாழிகை ஆனதால் தைதுல கரணம் என்று எடுத்து கொள்ள வேண்டும்.

பெளர்ணமிக்கு மறு ப்ரதமை முதல் அமாவாசை முடிய தேய் பிறை=க்ருஷ்ண பக்ஷம்.
அமாவாசைக்கு மறு ப்ரதமை முதல் பெளர்ணமி முடிய வளர்பிறை=சுக்ல பக்ஷம்.

இப்போது லக்னம் கண்டறிய வேண்டும்.

பூ மண்டலதிலிருந்து பார்க்கும் போது கீழ் வானம் எந்த ராசியில் பூமியை சந்திப்பதாக தோற்றமளிகிறதோ அது தான் லக்னம். ஒவ்வொரு நாளும் பூமி நான்கு நிமிடங்களுக்கு ஒரு பாகை வீதம் சுழன்று கொண்டே வருகிறது. ஒரு நாளைக்கு 360 பாகைகள் சுழள்கிறது. இவ்வாறு சுழன்று வரும் போது குழந்தை ஜனனம் ஆகும் போது கீழ் வானத்தில் எந்த ராசி

உதயமாகிறதோ அதையே ஜனன லக்னம் அல்லது உதய லக்னம் என்று சொல்கிறோம்.இந்த அடிபடையில் தான் பிறந்த லக்னத்தை கணக்கிட்டு அறிய வேன்டும். சூரிய உதயத்திற்கு ஏற்ப ஒவ்வொரு ராசிக்கு உறிய இராசிமான சங்கியை மாறு பட்டிருக்கும்.

மேல் நாடுகளில் சூரியனின் சலனத்தை அடிபடையாக கொண்டு பலன் அறிகிறார்கள். இது சாயன முறையாகும். இதில் அயனாம்சம் சேர்த்து கணிக்க பட்டிருக்கும்.
இந்தியாவிலும் கீழை நாடுகளிலும் சந்திரனின் சலனத்தை அடிப்படையாக கொண்டு நிராயன முறையில் அயனாம்சம் இல்லாமல் கணிக்க படுகிறது.

ஒவ்வொரு நாளும் கீழ் வானத்தில் லக்னம் தோன்றும் நேரம் சம சீராக இருக்காது. வான மண்டலம் நீள் வட்டமாக அமைந்து இருப்பதாலும் , பூமியின் மேற்பரப்பில் பூமத்ய ரேகையிலிருந்து ஒவ்வொரு அக்ஷாம்சத்திற்கும் சரிவு ஏற்பட்டிருப்பதாலும் ஒவ்வொரு ராசியும் தோன்றும் நேரம் வேறு பட்டிருக்கும்.

அதனால் ஒவ்வொரு ராசிக்கும் ராசிமான சங்கியை மாறுபடும். பிறந்த ஊர் எதுவோ அந்த ஊரின் அக்ஷாம்சத்திற்கு ஏற்ப ராசிமான சங்கியை மாறுபடும்.ஜாதகம் கணிக்க இருப்பவர் பிறந்த ஊரின் அக்ஷாம்சத்திற்கு ஏற்றதான சங்கியை எடுத்துகொள்ள வேண்டும்.

60 நாழிகை=24 மணி நேரம்= 12 ராசிகள். ஒவ்வொரு நாளிலும் சூரிய உதயத்திலிருந்து இந்த ராசிமான சங்கியை கணக்கிட்டு வர 12 ராசிகளின் கால அளவு தெரியும். ஒவ்வொரு மாதமும் சூரியன் இருக்கும் ராசியிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

கார்த்திகை மாதத்தில் சூரியன் வ்ருச்சிக ராசியில் சஞ்சரிப்பான்.அன்று முதல் ராசி விருச்சிகம் ஆகும்.ஆரம்ப லக்னம் விருச்சிகம் ஆகும். ஒவ்வொரு மாதத்தின் ஆரம்பத்தில் ராசிமான சங்கியையின் முழு கால அளவு இருக்கும். அது ஒவ்வொரு நாளும் சூரிய உதய காலத்தில் 9 வினாடிகள் = 4 நிமிடங்கள் வீதம் குறைந்து கொண்டே வரும்.பஞ்சாங்கத்தில் ஒவ்வொரு நாளும் ராசி இருப்பு என்ற காலத்தில் கீழ் கொடுக்க பட்டிருக்கும்.

இதன் அடிபடையில் அன்றைய தினம் அந்த ராசியின் இருப்பையே உதய லக்னமாக கொண்டு அடுத்த ராசி மான சங்கியை கூட்டி குழந்தை ஜனனமான நேரத்தில் எந்த ராசி வருகிறதோ அதையே ராசி கட்டத்தில் ஜன்ம லக்னமாக குறிக்க வேன்டும்.

குழந்தை பிறந்தது சென்னையில். சென்னையின் அக்ஷாம்சம் 13* .சென்னையை சுற்றி சுமார் 120 கிலோ மீட்டருள்ள ஊர்களுக்கும் இதுவே பொருந்தும். 13* அக்ஷாம்சத்திற்குரிய ராசிமான சங்கியை பஞ்சாங்க உதவி கொண்டு கணக்கிட வேண்டும்.

வடக்கு (உத்திர) அக்ஷாம்சத்திற்குரிய ராசிமான சங்கியை ஒவ்வொரு டிகிரிக்கும் ஒவ்வொரு ராசிக்கும் ராசி மானம் குறிக்க பட்டிருக்கும். நாம் நிராயண முறையில் உள்ளதை எடுத்து க்கொள்ள வேண்டும்.

இந்த ராசிமான சங்கியை ஒவ்வொரு மாதத்திலும் ஆரம்பத்திற்குடையது. பங்குனி மாதம் 27ம் தேதிக்கு நேராக பஞ்சாங்கத்தின் ராசி இருப்பு என்ற தலைப்பின் கீழ் உதய லக்ன முடிவு அல்லது மீன இருப்பு என்று கொடுத்திருக்கிறார்கள். இதில் மீனம் 0.38 என்று இருப்பதை காணலாம்.

மீன லக்ன ஆட்சி0.38+மேஷ லக்ன ஆக்ஷி4.29 நாழிகை/வினாடி; ரிஷபம் 5.04;மிதுனம்5.27;கடகம் 5.22;சிம்மம்5.08; கன்னி 5.04; மொத்தம்31.12;துலாம் 5.16 மொத்தம் 36.28; குழந்தை பிறந்தது 33 நாழிகை. ஆதலால் துலாம் லக்னம் என தீர்மான மாகிறது.

இந்த துலா லக்னத்தில் எத்தனாவது பாகை கலையில் லக்னம் வருகிறது என்று பார்க்க வேண்டும்.
கன்னி வரைக்குமான நாழிகை,வினாடி 31.12; துலாம் வரைக்குமான நாழிகை 36.28. குழந்தை ஜனனமானது 33 நாழிகை; அப்படியானால் துலாம் இருப்பு 3.28; துலாம் ராசிமான சங்கியை 5.16; இதில் துலாம் ராசிக்கான இருப்பு 3.28; அப்படியானால் துலாமில் சென்றது 1.48;

ஒவ்வொரு ராசியும் 30 பாகை கொன்டது. துலா ராசிக்கு 30 பாகையை கடக்க ஆகும் நேரம் 5 நாழிகை 16 வினாடி. 30 பாகை கடக்க 5.16 நாழிகை;1.48 நாழிகைக்கு எத்தனை பாகை
கடந்திருக்கும். 5 x 60=300+16 வினாடி=316 வினாடிகள்.1.48 நாழிகை=60+48=108 வினாடிகள்.

ஒரு ராசி 30பாகை இதை கலைகள் ஆக்கவேண்டும். 30x 60=1800 கலைகள். 316 வினாடிகளில் 1800 கலைகள் கடக்கும்108 வினாடிகளில் எத்தனை பாகை கடந்திருக்கும்.
108/316 1800. =108 x 1800=194400/316=ஈவு 615 கலைகள் மீதி 160. விகலைகள்.

இந்த ஈவு 615 கலைகளை பாகை யாக்க 615/60=10 பாகை 15 கலை; துலாம் ராசியின் ஆரம்ப பாகை 180.00 கடந்தது 10.15 மொத்தம் 190.15. இது தான் லக்ன ஸ்புடம். இந்த லக்ன ஸ்புடம் செய்வதில் நூலுக்கு நூல் வேறுபாடு உள்ளது. இது எளிய முறையாக இருக்கிறது.

30 பாகை=ஒரு ராசி; 60 கலை ஒரு பாகை;60 விகலை=ஒரு கலை;60 உபவிகலை=ஒரு விகலை.
திருக்கணித பஞ்சாங்கத்தின் துணையுடன் நிராயனப்படி கணிக்க படுவது தான் எல்லா ஊருக்கும் பொருந்துவதாக இருக்கும்.பஞ்சாங்கத்தில் குறிக்க பட்டிருக்கும் கிரக பாத சாரங்களை கொன்டு இராசி கட்டத்தில் கிரஹங்களை குறித்து விடலாம்.
ஆனால் வாசன் திருக்கணித பஞ்சாங்கத்தில் ஒன்றாவது வாக்கியத்தை பயன்படுத்தி குறிப்பது தான் துல்லியமாக இருகிறது.

உதாரண ஜாதகபடி பங்குனி மாதம் 27ம் தேதி நிலையை ஒன்றாவது வாக்கியத்தின் படி அறிவோம். நிராயனப்படி. சூரியன் பாகை355 கலை 30.; சந்திரன் 16.17;செவ்வாய் 145.20;
புதன் 14.02; குரு 292.42. சுக்கிரன் 357.08; சனி 347.42; ராகு 154.11; கேது 334.11; ராஹுவுக்கு கூறப்பட்டதுடன் 180*யை கூட்டி கொன்டதே கேதுவிற்கு உரியதாகும்.

பங்குனி மாதம் காலை 6.03 மணிக்குண்டான நிராயண பாகையாகும். ஆனால் குழந்தை பிறந்தது அன்று 33 நாழிகையில். அந்த நேரத்தில் இருந்த ஸ்தானத்தை அறிவதே ஸ்புடம் செய்வதாகும்.

அதற்கு பங்குனி மாதம் 27ம் தேதிக்கும் 26ம் தேதிக்கும் உள்ள வேறுபாட்டை அறிய அந்தந்த கிரஹம் ஒரு நாளில் கடக்கும் தூரத்தை அறிய வேண்டும். இதையே தின கதி என்பர்.ஒவ்வொரு கிரஹத்தின் சஞ்சார நேரம் மாறுபாடு உள்ளதால் தின கதியில் ஒவ்வொரு


கிரஹத்திற்க்கும் வித்தியாசம் உள்ளது.27ம் தேதிப்படி சூரியனின் பாகை கலை 355.30. 26ம் தேதி 354.31. தினகதி 0.59. சந்திரனுக்கு 16.17-1.53=14.24.
செவ்வாய்;-145.20-145.35=0.15 வக்கிர கதி; புதன்:-14.02-13.20=0.42; குரு:-293.02-292.32=0.30;

சுக்கிரன்:-357.08-355.54=1.14; சனி 347.42-347.34=0.08; ராகு:-154.11-154.14=0.03.கேது:-334.11-
334.14=0.03.

சூரியன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதம் ஆகிறது.
சந்திரன் ஒரு ராசியை கடக்க 2.25 நாட்கள் ஆகிறது.
செவ்வாய் ஒரு ராசியை கடக்க 1.5 மாதங்கள் ஆகிறது.

புதன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதம் ஆகும்.
குரு ஒரு ராசியை கடக்க ஒரு வருடம் ஆகும்.
சுக்கிரன் ஒரு ராசியை கடக்க ஒரு மாதம் ஆகிறது.

சனி ஒரு ராசியை கடக்க 2.5 ஆன்டுகள் ஆகிறது.
ராகு, கேது இருவருக்கும் ஒரு ராசியை கடக்க 1.25 ஆண்டுகள் ஆகும்.

ராகு கேது அப்பிரதக்ஷிணமாக சுற்றுவதால் அவர்களின் பாகை முந்தய நாளுக்கு
பிந்தைய நாள்குறைந்து கொண்டே வரும்.

செவ்வாய்க்கு முந்தைய நாளை விட பிந்தைய நாள் குறைந்து காணப்படுகிறது.
இதற்கு காரணம் செவ்வாய் வக்ர கதியில் உள்ளது.
இனி ஒவ்வொரு கிரஹத்தின் ஸ்புடத்தை பார்ப்போம். உதாரண ஜாதகப்படி ஜாதகர் பிறந்தது இரவு 7.15 மணிக்கு. அன்று சூர்ய உதய நேரம் மணி 6.03. சூரிய உதயத்திற்கு பின் ஜனன நேரம் வரைக்குமான நேரம் என்ன என்பதை அறிய வேண்டும்.

இரவு 19.15-6.03=13 மணி 12 நிமிடம்.இதை அடிப்படையாக கொண்டு தான் கிரஹ ஸ்புடம் செய்ய வேண்டும்.

சூரியனுக்கு ஸ்புடம்;- சூரியனின் தின கதி 59 கலை. அதாவது 24 மணி நேரத்தில் சூரியன் 59 கலை சஞ்சரிக்கிறான். 13 மணி 12 நிமிடத்திற்கு எவ்வளவு தூரம் சஞ்சரிப்பான் என்பதை கணக்கிட வேண்டும்.59 X13.12=778.48/24=32.27.=32 கலை 27 விகலை.இதில் 27 விகலையை விட்டு விட்டு 27ம் தேதி கண்டுள்ள 355.30 உடன் கூட்ட வேன்டும்.355.30+0.32=356.02. இதுவே சூரியனின் ஸ்புடம்.

சந்திரனின் ஸ்புடம்:- சந்திரனின் தின கதி 14.24. இதை கலையாக மாற்ற வேன்டும். 14X 60=840+24=864 கலைகள். 13.12X 864=11404.48. இதில் 48 விகலையை விட்டு விடலாம்.
11404/24=475 கலை 5 விகலை. 475 கலைகளை பாகை கலைகளாக்க 475/60=7 பாகை 55 கலையாகிறது. சந்திரனின் 27ம் தேதிப்படி 16.17+7.55=24.12. சந்திரனின் ஸ்புடம்=24.12.

செவ்வாய்க்கு ஸ்புடம்:- செவ்வாயின் தின கதி 15 கலை. 13.12X 15=198.00/24=8.15. இதில் விகலை 30க்கும் குறைவாக இருப்பதால் 8 கலையை மட்டும் எடுத்துகொள்ள வேண்டும்.
செவ்வாய் வக்ர கதியில் இருப்பதால் கழிக்க வேண்டும்.145.20-0.8=145.12. செவ்வாயின் ஸ்புடம்=145.12.

புதனின் ஸ்புடம்:- புதனின் தின கதி 42 கலை.13.12X 42=554.24 554.24/24=23.6. 14.02+0.23=14.25. புதனின் ஸ்புடம் 14.25.

குருவின் ஸ்புடம்:- குருவின் தின கதி 30 கலை. 13.12 X30=396.00/24=16.30. 292.42+0.16=292.58 குருவின் ஸ்புடம் 292.58.

சுக்கிரனின் ஸ்புடம்:- சுக்கிரனின் தின கதி 1.14 =74 கலைகள். 13.12X 74= 976.48/24=
40.48 இதில் விகலை 48 ஆக வருவதால் 30க்கு மேல் வருவதை 1 கலையாக கொள்ளலாம். 30 க்கு கீழ் வந்தால் விட்டு விடலாம்.357.08+0.41=357.49.சுக்கிரனின் ஸ்புடம் 357.49.

சனியின் ஸ்புடம்:- சனியின் தின கதி 8 கலை. 13.12X 8=105.36/24=4.24. 347.42+0.04=347.46.
சனியின் ஸ்புடம் 347.46.

ராகுவின் ஸ்புடம்:- ராகுவின் தின கதி 3 கலை. 13.12 X 3=39.36/24=1.39 விகலை 30கு மேல் வருவதால் 1+1= 2 கலை எனலாம்.இதை ராஹுவின் பாகையிலிருந்து கழிக்க 154.11-0.02=154.09 ராகுவின் ஸ்புடம்=154.09.

கேதுவின் ஸ்புடம்:- 154.11+180.00=334.11-0.02=334.09. கேதுவின் ஸ்புடம்=334.09.

செவ்வாய் மார்கழி மாதம் 2ம் தேதி=17-12-1996 அன்று கன்னியில் ப்ரவேசமானது. அன்று 149.55 பாகையிலிருந்து படிபடியாக உயர்ந்து தை மாதம் 24ம் தேதி வரை 162.14 பாகை வரை வந்தது. அதற்கு மேல் வக்ரம் ஆரம்பமாகி 162.14இல் இருந்து படி படியாக குறைந்து 145.12க்கு நாம் கணக்கிட்ட நாளுக்கு வந்துள்ளது.

பஞ்சாங்கத்தின் முன் பக்கங்களில் கிரஹ பாத சாரங்கள் என்ற தலைப்பின் கீழ் கிரஹங்களின் சஞ்சார நிலை குறிக்க பட்டிருக்கும். அதன் படி நம் உதாரண ஜாதக பங்குனி மாதம் 27 ம் தேதி சார நிலை ஒவ்வொரு கிரஹத்திற்கும் பார்க்கவும்

.சூரியனுக்கு பங்குனி மாதம்27ம் தேதி இல்லை எனில் அதற்கு முன் 24ம் தேதியில் உள்ளது. பிறகு 28ம் தேதி குறிக்க பட்டுள்ளது. 24ம் தேதி நிலையே 27ம் தேதிக்கும் என்று அறிய வேண்டும்.

சூரியன் ரேவதி3ம் பாதம். மீன ராசியில் சூரியனை போட வேண்டும். சந்திரன் பரணி 4ல் மேஷ ராசியில் சந்திரனை போட வேண்டும். பஞ்சாங்கத்தில் ராசிகு பக்கத்தில் அம்சத்தில் எங்கு போட வேன்டும் என்பதையும் கொடுத்து விடுகிறார்கள். ஆதலால் கும்பம் நவாம்ச கட்டத்தில் சூரியனை போடலாம். சந்திரன் பரணி4 மேஷ ராசி விருச்சிக நவாம்சம்.

செவ்வாய் வக்ரம் பூரம் 4ல் சிம்மம் ராசி. புதன் பரணி1ல் மேஷ ராசி; குரு திருவோணம் 4ல் மகரம்; சுக்கிரன் ரேவதி 4ல் மீனம்; சனி ரேவதி 1ல் மீனம்; ராகு உத்திரம் 3ல் கன்னி;
கேது உத்திரட்டாதி1ல் மீனம். ராசி கட்டத்தில் இந்த கிரஹங்களை போடலாம்.

ஜனன சமய நிர்ணயம்.:-

வாராஹி ஹோரை , 4ம் அத்தியாயம், மூன்றாவது செய்யுளில் எப்படிபட்ட கிரஹ நிலையில் ஆண் பெண் சேர்க்கை ஏற்பட்டால் அது கர்பத்தை உண்டுபண்ணும் என விளக்க மாக உள்ளது. ஆதான சமயத்தின் அடிபடையில் ஜாதகம் கணிப்பது என்பது அனேகமாக நடவாத காரியம் என்றே சொல்லலாம். ஆதான லக்ன ஜாதகம் கணித்தால் பாலாரிஷ்டம்

மூன்று தோஷங்கள், முக்கோபங்கள்; சாபங்கள் இவற்றை சுத்தமாக அறியலாம்.

ஜலோதய சமயம்:-இதை தமிழில் நீர்குடம் உடையும் நேரம் என்பார்கள். பிரசவ வேதனையில் இருக்கும் பெண்மணி ஓரளவு சொல்லி விடக்கூடும். இதுவும் ஓரளவு தான் சரியாக இருக்கும்.இம்மாதிரி கணித்து பார்க்கும்போது ஆயுள் நிர்ணயம், மாதுர் பிதுர் சுகம்
நோயற்றவாழ்வு;இவற்றை ஆதாரமாக கொண்டு சொல்லலாம் எங்கிறது சாஸ்திரம்.

சிரோதய சமயம்:-இயற்கை பிரசவ குழந்தையை பொருத்த மட்டில் சுலபம் தான். பிரசவ அறையில் இருப்பவர்கள் இதை கண்டுபிடித்து சொல்லலாம். ஆனால் இதை சுத்தீகரணம் செய்தோமானால் சுலபமாக ஜனன சமயத்தை நிர்ணயித்து விடலாம்.

பூப்பதன சமயம்:-பூமியில் விழுவது என்று அர்த்தம்.குழந்தையை கர்பபையிலிருந்து வெளியே எடுத்து இடும் சமயம். எல்லோரும் இந்த சமயத்தை தான் ஜனன சமயமாக கருதுகிறார்கள். குழந்தை முதன் முதலில் அழும் சப்தம். இதன் மூலம் தான் முதன் முதலில் வெளியே குழந்தை சுவாசிக்க ஆரம்பிக்கிறது.


அறுவை சிகிட்சை
அல்லது இதர முறைகள் மூலம் பிறக்கும் குழந்தைகளின் சிரோதய சமயம் என்ன என்பது சர்ச்சைக்குறிய விஷயம் தான்.தாயின் கர்ப்ப பையிலிருந்து சிசுவை வெளியே எடுத்து போட்டவுடன் தான் அதை ஜனித்த குழந்தை என்று சொல்கிறோம். அறுவை மூலம் தாயின் கர்ப்பபை திறக்கபட்டதும் குழந்தை பூமியின் காற்றை உட்கொள்ள ஆரம்பித்து விடும்.அதை தான் சிரோதய காலமாக எடுத்துக்கொள்ள வேன்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.

நாள கண்டனம்:- இது சற்று தாமதமான செயலாகும்.தொப்புள் கொடியை நறுக்கி எறியும் சமய மாகும். சிலர் இது தான் உண்மையான ஜனன நேரம் என் கிறார்கள்.இதன் பிறகு தான் குழந்தைக்கு சுய உணர்வு வருகிறது என் கிறார்கள்.

இனி ஜனன சமயத்தை சுத்தீகரணம் செய்யும் முறை யை பார்ப்போம். மாந்தி உதய நேரப்படி ஜனன கால சுத்தீகரணம், மற்றும் தத்துவா தத்துவ முறை

மாந்தி ஒவ்வொரு நாளும் பகலிலும், இரவிலும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உதயமாகிறது.
அன்றாட சூரிய உதய நேரத்தின் மற்றும் அஹஸின் அடிபடையில் மாந்தி உதய ஸ்புட பாகை , கலை அல்லது நாழிகை, வினாடிகளில் கணிக்கிறோம்.

மாந்தி ஸ்புடத்தை 81ல் பெருக்கி27ஆல் வகுத்து ஈவை களைந்து மீதி வருவது குழந்தையின் ஜனன நக்ஷத்திரம் அல்லது அதன் ஜன்மானுஜன்ம மாக இருந்தால் அந்த குழந்தையின் பிறந்த நேரம் சரியாக கணிக்க பட்டிருக்கிறது என்று சொல்லலாம். வித்தியாசம் வந்தால் ஒரு பாகைக்கு 10 வினாடிகள் வீதம் குறைத்தோ கூட்டியோ சரியான ஜனன நேரத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

உதாரணம்:- ஜாதகி பிறந்த நாள் செவ்வாய் கிழமை; மிருக சீர்ஷம் நக்ஷத்திரம் அன்று குளிகை உதய நேரம் உதயாதி 18 நாழிகை ; அன்றைய பகல் அகஸ்31 நாழிகை32 வினாடிகை; மாந்தி உத்யம் காண 18ஐ 30ஆல் வகுத்து 31 நாழிகை 32 வி நாடிகளால் பெருக்க வேண்டும். எனவே மாந்தி உதயம்

சூரிய உதயாதி 18 நாழிகை, 54 வினாடிகள் ஆகும். நக்ஷத்திர ஹோரைப்படி அதன் ஸ்புடம் 179 பாகை 23 கலையாகும். =5 ராசி 29 பாகை 23கலை. இந்த 29.23 ஐ 81ஆல் பெருக்கி 27ஆல் வகுக்க மீதி வருவது 13ஆவது நக்ஷத்திரமாகும். அதாவது ஹஸ்தம். ஜனன சமயத்துடன் பத்து வினாடி வீதம் கூட்டினால் சித்திரை வரும்.

உத்திர காலாம்ருதத்தில் தத்துவா தத்துவ முறை கொடுக்க பட்டிருக்கிறது.பஞ்ச பூத கிரஹங்களை இவ்வாறு பாகுபடுத்தி உள்ளார்கள்.
புதன்-பூமி பூதம்; சந்திரனும் சுக்கிரனும் ஜல பூதம்; செவ்வாய், சூரியன் நெருப்பு பூதம்; சனி வாயு பூதம்; குரு ஆகாய பூதம்.

ஒரு முறை பஞ்ச பூத கிரஹங்களின் ஒரு சுற்று முடிவதற்கு 90 நிமிடம் அல்லது மூன்றே முக்கால் நாழிகை அதாவது 225 வினாடிகைகளாகும்.

இதி புதனுக்கு 15 வினாடிகைகள், சந்திரன் அல்லது சுக்கிரனுக்கு 30 வினாடிகைகள்; சூரியன் அல்லது செவ்வாய்க்கு 45 வினாடிகைகள்;சனிக்கு 60 வினாடிகை; குருவிற்கு75 வினாடிகை என்று கணக்கிட பட்டிருக்கிறது.

ஒவ்வொரு நாளும் சூர்ய உதயத்தின் போது அந்தந்த நாளின் கிரகத்தின் தத்துவம் நிலவில் இருக்கும். பிறகு வரிசை கிரமமாக மற்ற கிரகங்களின் தத்துவங்கள் நிலவில் வரும்.

உதாரணம்:- ஞாயிற்று கிழமை அன்று சூரிய உத்யம் முதல் 45 வினாடிகள் சூரியனுடைய நெருப்பு தத்துவம்; அடுத்த 60 வினாடிகள் சனியினுடைய வாயு தத்துவம்; அதற்கடுத்த 75 வினாடிகள் குருவினுடைய ஆகாய தத்துவம்; அடுத்த 15 வினாடிகள் புதனுடைய பூமி தத்துவம் அடுத்த 30 வினாடி சுக்கிரன் அல்லது சந்திரனுடைய ஜல தத்துவம்.இதற்கு பிறகுஇப்படியே தத்துவங்கள் இதே வரிசையில் சுழன்று கொண்டே இருக்கும்.

திங்கட் கிழமை அன்று முதல் 30 வினாடிகள் சந்திரனின் ஜல தத்துவம்; அடுத்த 45 வினாடிகள் நெருப்பு தத்துவம்; அடுத்த 60 வினாடி வாயு தத்துவம்;அடுத்த 75 வினாடி ஆகாய தத்துவம்;ங்கடைசி 15 வினாடிகல் பூமி தத்துவம் இதே வரிசையில் நாள் முழுவதும் தத்துவங்கள் வந்து கொண்டே இருக்கும்.

செவ்வாய் கிழமை முதல் 45 வினாடி நெருப்பு தத்துவம்; அடுத்து 60 வினாடி வாயு தத்துவம்
அடுத்த 75 வினாடி ஆகாய தத்துவம்; அடுத்த 15 வினாடி பூமி தத்துவம்; அடுத்து 30 வினாடி ஜல தத்துவம். இதே போல் ஒவ்வொரு நாட்களும் காண வேண்டும். அப்படி இருந்தால் கூட ஒவ்வொரு தத்துவத்திலும் முழு நேரத்திற்கு மனித ஜனனம் இருக்குமென்று சொல்வதற்கில்லை. எனவே இவற்றை கணக்கிட்டு கீழ் கண்ட பட்டியலை நமக்கு தந்திருக்கிறார்கள்.

தினசரி தத்துவ ஜனன பட்டியல்.
ஆண்;- கிழமை ஞாயிறு0-15;105-165; 180-195.
திங்கட் கிழமை:- 30-75; 135-150.
செவ்வாய் கிழமை:-0-30;105-165.
புதன் கிழமை:- 45-90;165-225.
வியாழன்:-0-30;105-165;
வெள்ளி:- 45-75;135-180.
சனி:-60-105;180-195;

பெண்:-
ஞாயிறு கிழமை:-45-90;195-210;
திங்கள்:-0-30;75-90;
செவ்வாய்:-45-90;195-210;
புதன்:-0-15; 15-30; 90-120;
வியாழன்:- 90-105;165-195;
வெள்ளி:-0-15;75-90;
சனி:- 0-30;135-150;165-180;

ஜனன சமயத்தை உதயாதி நாழிகையை வினாடிகளாக்கி 225 ஆல் வகுக்கவும். ஈவை களைந்து மீதியை மேல் எழுதிய மேல் எழுதிய பட்டியல் படி சரி பார்க்கவும்.

ஜாதகத்தில் ஜனன நாழிகை 1 நாழிகை 30 வினாடிகள்= 90 வினாடிகைகள் ஜனன கிழமை செவ்வாய். ஸ்த்ரீ ஜனனம். 45-90 . இந்த ஜாதகி பிறந்த சமயம் ஒரு நாழிகை 30 வினாடிகள் சரியான ஜனன சமயம் என்று கொள்ளலாம்.

குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட வினாடிகைகளில் குழந்தை பிறந்தால் தத்துவம் சரியானதாகும் என்று கருதலாம். அதை வைத்து சுத்தீகரணம் செய்யலாம்.இம்முறைகளில் ஜனன சமயத்தை சுத்தீகரணம் செய்து ஜாதகம் கணித்தால் வாழ்வில் ஏற்படும் சம்பவங்கள் தவறில்லாமல் இருக்கும்.
 

Latest ads

Back
Top