• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Jagatguru Sri Maha Periyava Messages

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.



பெரியவா சரணம் !!

டாக்டர்களாலயே தீர்க்க முடியாத சித்தபிரமையை
லேசா நெத்தியில் குட்டச் சொல்லி குணப்படுத்தின பெரியவா

"இதுல எதுவும் என்னோட கார்யம் இல்லை.எல்லாம் பகவானோடஅனுக்ரஹம்.திவ்ய தேசத் திருப்பதிகளுக்கெல்லாம் போயிருக்கேள்அதோட பெருமாளோடஸ்லோகத்தைபரிபூரணமான
நம்பிக்கையோட சொன்னேள். இது எல்லாத்தோட பலனும்தான்அவருக்கு சுயநினைவை வரவழைச்சிருக்கு!--பெரியவா

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-08-09-2016 தேதியிட்ட குமுதம் பக்தி
(சுருக்கமான ஒரு பகுதி)

ஒருசமயம் பெரியவா ஸ்ரீமடத்துல இருக்கறச்சே,
அவரை தரிசனம் பண்றதுக்கு வந்த பக்தர்கள்
கூட்டத்துல ஆறேழுபேர் ஒரு குழுவா வந்திருந்தா.
அவா நெத்தியல பளீர்னு இட்டுண்டிருந்த திருமண்ணே
அவாள்லாம் வைஷ்ணவாங்கறதை உணர்த்தித்து.
தங்களுக்குள்ளேயே எதோ மெதுவா பேசிக்கறதும்,
அடிக்கடி ஆசார்யாளை எட்டி எட்டிப் பார்க்கறதுமா
இருந்தா அவா. அதே சமயம் அவாள்ல ஒருத்தர் மட்டும்
தனக்கு இதுல எல்லாம் இஷ்டம் இல்லைங்கற மாதிரி
நெட்டுக்குத்தான ஒரு பார்வையோட எந்த சலனமும்
காட்டாம நின்னுண்டிருந்தார்.

மடத்துக்கு வைஷ்ணவா வர்றது ஒண்ணும் புதுசு
இல்லையானாலும் அவாளோட செய்கைகள் எல்லாம்
கொஞ்சம் வித்யாசமா இருந்ததால,எல்லாரையும்
கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைச்சுது.

ஆச்சு, ஒருவழியா அவா பெரியவா முன்னால வந்து நின்னா
யாரும் எதுவும் பேசலை. ஆனா, அவாளோட கண்ணுல
இருந்து ஜலம் மட்டும் மளமளன்னு கொட்டித்து. ரெண்டு
மூணு நிமிஷத்துக்கு அப்புறம் அவாள்ல ஒருத்தர் பேச
ஆரம்பிச்சார்.

"ஸ்வாமி, இவர் என்னோட தாய்மாமா.ரொம்ப நன்னா வேத
மந்திரமெல்லாம் சொல்லிண்டு இருந்தார். திடீர்னு எதுனாலயோ
இவரோட சித்த ஸ்வாதீனம் தவறிடுத்து.மனுஷா யாருன்னு
அடையாளம் தெரியலை; கார்த்தாலைக்கும் ராத்திரிக்கும்
வித்தியாசம் தெரியலை. ஒரே இடத்தை வெறிச்சுப் பார்த்துண்டு
பிரமைபிடிச்சாப்புல இருக்கார். எப்பத் தூங்கறார்.எப்போ
முழிச்சுக்கறார்,என்ன பண்ணறார்ங்கறதெல்லாம் தீர்மானமே
இல்லாம இருக்கு!" நாக்கு தழுதழுக்க சொன்னவர் கொஞ்சம்
நிறுத்தி ஆசுவாசப்படுத்திண்டு பேச ஆரம்பித்தார்.

"குணசீலம்,சோளிங்கர்னு பெருமாள் க்ஷேத்ரங்களுக்கும்
நாலஞ்சு திவ்ய தேசத் திருப்பதிகளுக்கும் அழைச்சுண்டுபோய்
தரிசனம் பண்ண வைச்சோம்.இதைதவிர எங்க சக்திக்கு ஏத்த
எல்லா சிகிச்சையும் பார்த்துட்டோம்.கொஞ்சம்கூட தெளிவு வரலை
டாக்டர்களே என்னதுன்னு கண்டுபிடிக்க முடியாம குழம்பறா.

பெரியவாளைப் பார்த்தா தீர்வு கிடைக்கும்னு தோணித்து. அதான்
தாமதிக்காம அழைச்சுண்டு வந்துட்டோம். நீங்கதான் அனுகிரஹம்
பண்ணணும்!" சொல்லி முடிச்சார்,அவர்.

அப்போதான் எல்லாருக்குமே தெரிஞ்சுது.வெறிச்ச பார்வையோட
நின்ன அந்த மனுஷருக்கு சித்தபிரமை பிடிச்சிருக்குங்கறது.
எல்லாரும் பரிதாபத்தோட அவரைப் பார்க்கத் தொடங்கினா.
அந்த சமயத்துல பரமாசார்யா , பாதிக்கப்பட்ட மனுஷரை
வாத்சல்யத்தோட பார்த்தார்.

அதுக்கப்புறம் அவரைக் கூட்டிண்டு வந்தவாகிட்டே,
"விஷ்ணு சகஸ்ரநாம பாராயண க்ரமத்துல வர்ற

"அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத் !
நச்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம் !!

அப்படிங்கற ஸ்லோகத்தை நூத்தியெட்டுதரம் நீங்க எல்லாருமா
சேர்ந்து சொல்லுங்கோ!" சொன்னார். மஹாபெரியவா.

பெரியவா சொன்னதும் அந்த ஸ்லோகத்தை கோரஸா அவ
எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சா. நூத்தியெட்டு தரம் சொல்லி
முடிச்சுட்டு ஏதோ அதிசயம் நடக்கப் போறதுங்கறமாதிரி, புத்தி
சுவாதீனம் இல்லாத அந்த மனுஷரைப் பார்த்தா.ஆனா,அவர்
முன்னை மாதிரியே அப்படியே பிரம்மமேன்னுதான்
நின்னுண்டு இருந்தார்.அடுத்ததா எல்லாரும் பெரியவாளைப்
பார்த்தா.

"அவரை இங்கே அழைச்சுண்டு வந்து நிக்கவைங்கோ!
(தன்னோட தலைல ஒரு இடத்தை சுட்டிக்காட்டின பெரியவா)
அவரோட சிரசில இதோ இந்த இடத்துல கொஞ்சம் வலிக்கறாப்புல
ரெண்டுதரம் குட்டுங்கோ!" அப்படின்னு சொன்னார்.

வந்தாவாளுக்கு சின்ன தயக்கம். என்னடா இது. ஏதோ ஸ்லோகம்
சொல்லச் சொன்னார். சொன்னோம். இப்போ தலைல குட்டச்
சொல்றாரே.இது எதுக்கு?ஏற்கெனவே மூளை குழம்பிப்போனவரை
குட்டினா இன்னும் குழம்பித்தானே போவார்? இப்படியெல்லாம்
யோசிச்சு அவா குழம்ப ஆரம்பிச்ச சமயத்துல,"என்ன தயங்கறேள்,
நான் சொல்றதை தைரியமாச் செய்யுங்கோ!" என்றார் பெரியவா.

குட்டுப்பட்டதும் டக்குன்னு தூக்கத்துல இருந்து விழிச்சவர் மாதிரி
கண்ணை உருட்டின வைஷ்ணவர்,தன்னைக் கூட்டிண்டு
வந்தவாள்ல இருந்த ஒருத்தரப் பார்த்து, "ஏண்டா,இது ஏதோ மடம்
மாதிரி இருக்கே? நாம எப்போடா இங்கே வந்தோம்? இது எந்த ஊரு?
எதுக்காக இங்கே வந்திருக்கோம்?-கேள்விகளை எழுப்பினார்.

அவரோட சித்த பிரமை முழுசா நீங்கிடுத்துன்னு புரிஞ்சுண்ட அவா
அத்தனைபேரும் சாஷ்டாங்கமா பெரியவாளுக்கு நமஸ்காரம்
பண்ணினா."எல்லாம் உங்களோட அனுகிரகம்'னு --சொன்னார்கள்.

"இதுல எதுவும் என்னோட கார்யம் இல்லை.எல்லாம் பகவானோட
அனுக்ரஹம்.திவ்ய தேசத் திருப்பதிகளுக்கெல்லாம் போயிருக்கேள்
அதோட பெருமாளோட ஸ்லோகத்தை பரிபூரணமான
நம்பிக்கையோட சொன்னேள். இது எல்லாத்தோட பலனும்தான்
அவருக்கு சுயநினைவை வரவழைச்சிருக்கு!--பெரியவா

பழம்,கல்கண்டு,துளசி பிரசாதங்களைக் குடுத்து அவாளை
ஆசிர்வாதம் பண்ணி அனுப்பினார்

Source: WhatsApp message

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


 

பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: Moral Dilemma (Dharma Sankatam)
One day, several years ago, in 1989; at about six in the evening, Kanchi Sri Maha Periyava was seated blissfully and giving darshan to the devotees.

My elder brother, Thiru.Sundaram who was earlier a Tahsildar in Kanchipuram and then an Asst.Collector and I were sitting for darshan. During the time this incident happened my elder brother was serving as Welfare Officer in the District Office for the backward classes at Tirunelveli. He had come for Paramacharya’s darshan and had to return to Chennai the same night.

One by one the devotees moved forward and prostrated to him. When our turn came, we too prostrated and got up. With a smile, he said “Are you in hurry? Stay on for a while.” We surrendered to to his command and sat in front of him. Lifting up His hands, He gestured to everyone (around 30 people) who had come there for darshan to sit down.

Sri Maha Periyava’s eyes moved over the crowd repeatedly and settled on a devotee who was seated in a corner with reverential devotion. Periyava spoke to him and the gentleman got up. He had wrapped his shirt around his dhoti in lieu of an upper cloth, as a mark of respect.

“Your name?”

“Murugesan” said the gentleman in a respectful tone.

“What is your profession?”

“Farming, Saami”.

“You feed the world” said Swamigal with a smile and told the devotee to sit down.
Periyava’s eyes began to move over the crowd of devotees again and his hand pointed towards another devotee. The devotee got up and said that his name was Munusamy and that he was the Revenue Inspector at Vellore.

“How do you help people?”

“I issue the Land Ownership documents, Title Deed to housing plots and other such certificates that people seek”

All of a sudden Periyava looked at me and asked me, “What occupation are you in now?”
I was shaken, because I was then serving as the Deputy Tahsildar at the Tamilnadu Consumer Federation. The chief duty of that post at TASMAC was to sell the liquor varieties from the Government godown to the retail liquor shops. How could this be considered as public service?
So, I replied with hesitation, "I am serving as the Deputy Tahsildar in TASMAC". I broke into sweat in embarrassment. However for some reason Periyava did not ask me about my job in detail.
Periyava’s eyes then fell on my brother. He got up and said that through his office he was arranging free education, distributing food and clothing to people belonging to backward communities and that he was also distributing sewing machines and coal iron boxes and that he was holding the post of Assistant Collector then.

When Periyava heard him, He said “In this gathering there is a Revenue Officer, Deputy Tahsildar and Assistant Collector who serve the people. What else could we possibly need? He then laughed captivatingly in an inimitable manner.

As for me, my heart was beating fast. At any moment, Swamigal’s eyes may fall on me again. How could I talk about my job which brought harm to the community? Within my heart, I addressed a prayer to Him, “Swami, I do not wish to continue in this post which I have been holding for the last three years. Please bless me so that I may be relieved from this office.” Swamigal who was compassionate to me did not embarass me by asking me about my job.

Within a few weeks after this meeting took place, I was relieved from that post and was posted as a Deputy Tahsildar in the Collector's Office.

Although it was the Government that issued the transfer order, there is no doubt whatsoever that it was really issued by Swamigal gracious heart.

Author: Irasu, Chennai-61
Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol.2
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb
Source:
Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 
பெரியவா சரணம் !!

"அதோ நிற்கிறாளே...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடவையைக் கொடு.....தீபாவளி புதுப் புடவையை வண்டிக்காரனுக்குக் கொடுத்துட்டு பழசைக் கட்டிண்டு நிற்கிறா"

தீபாவளி தினம், ஒரு குதிரை வண்டிக்காரன் வந்து பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டுக் கையைப் பிசைந்து கொண்டு நின்றான்.

'என்ன' என்று ஜாடையால் கேட்டார்கள்,பெரியவா.

"வேட்டி..." என்று இழுத்தான்,வண்டிக்காரன்.

பெரியவாள்,பக்கத்திலிருந்த சிஷ்யரிடம், "அவனுக்கு ஒரு வேஷ்டி-துண்டு கொடு" என்றார்கள்.
சிஷ்யர் வேஷ்டி-துண்டு கொண்டு வந்து கொடுத்த பின்னர் வண்டிக்காரன் நகரவில்லை.

"சம்சாரத்துக்குப் பொடவை..."

அந்தச் சமயத்தில், புடவை ஏதும் கையிருப்பில் இல்லை. ஆனால், பெரியவாளோ," அவனுக்கு ஒரு புடவை கொண்டு வந்து கொடு" என்று சிஷ்யனுக்கு ஆக்ஞையிட்டார்கள். சிஷ்யர் பாடு திண்டாட்டமாகப் போய்விட்டது.

பெரியவாள் தரிசனத்துக்காகப் பல பேர் வந்திருந்தார்கள். அவர்களில் ஓர் அம்மாள், தொண்டரின் இக்கட்டைப் புரிந்து கொண்டார். உடனே, சற்றுத் தொலைவில் ஒரு மறைவான இடத்துக்குச் சென்று,தான் கட்டிக் கொண்டிருந்த புதுப் புடவையைக் களைந்து விட்டு,ஒரு பழைய புடவையைக் கட்டிக்கொண்டு வந்தார்.அந்தப் புதுப் புடவையையும் சீட்டி ரவிக்கைத் துண்டையும் வண்டிக்காரனிடம் கொடுத்து அனுப்பி விட்டார்.

பெரியவாளுக்கு உடம்பெல்லாம் கண்கள் போலும். புடவை மாற்று விவகாரம் அவர்களுக்குத் தெரிந்து விட்டது. சற்றைக்கெல்லாம் ஒரு தம்பதி தரிசனத்துக்கு வந்தார்கள். "பெண்ணுக்குக் கல்யாணம்,..பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்.."

"கல்யாணப் புடவைகள், காஞ்சிபுரம் கடைத் தெருவிலே வாங்கினேளா?"

"ஆமாம்,..கூறைப் புடவை, சம்பந்திக்குப் புடவை, பந்துக்களுக்குப் புடவைன்னு.. ஏகப்பட்ட புடவைகள்..."

"பந்துக்களுக்குன்னு வாங்கியிருக்கிற புடவையிலே ஒரு புடவையை ஸ்ரீ மடத்துக்குக் கொடுப்பியோ?"
தம்பதிக்கு மகிழ்ச்சி கரை புரண்டது.பெரியவாளே கேட்கிறா.. உயர்ந்த புடவை ஒன்றை பெரியவாள் திரு முன்னிலையில் சமர்ப்பித்தார்கள்.

தொண்டரைக் கூப்பிட்டு, "அதோ நிற்கிறாளே...ஒரு..மாமி, அவாகிட்டே இந்தப் புடவையைக் கொடு.....தீபாவளி புதுப் புடவையை வண்டிக்காரனுக்குக் கொடுத்துட்டு பழசைக் கட்டிண்டு நிற்கிறா...." என்றார்கள்,பெரியவாள்.

"தனியே, ரகசியமாக நடந்த அந்தச் சம்பவத்தை எந்த யட்சிணி போய் பெரியவா திருச்செவியில் போட்டது?" என்று ஆச்சர்யப்பட்டுப்போனார், சிஷ்யர்.

ஆமாம் அந்த அம்மையாரும்தான்.

Source: Siva sankaran / Mahaperiyava Public Group / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம் !!

"நெத்தியில் இட்டுக்கோம்மா. உன்னோட வருத்தம் தேவை இல்லாதது. உன் கணவர் உயிரோட இருக்கார். கூடிய சீக்கிரமே உங்கிட்ட அவர் திரும்ப வரப்போறார். "

காஞ்சி சங்கரமடத்தில் ஒரு வெள்ளிக்கிழமை தினத்தில் சுமங்கலி பூஜைக்கு ஏற்பாடு ஆகி இருந்தது. அதுவும், மகா ஸ்வாமிகள் இந்த பூஜையில் கலந்து கொள்ளும் சுமங்கலிகளை ஆசிர்வதிப்பதற்காகக் கலந்து கொண்டார்.

மடத்தில் நடக்கும் சுமங்கலி பூஜை……. மகா பெரியவாளே ஆசிர்வதிக்கும் பூஜை… இப்படிப் பல சிறப்புகள் இந்த வைபவத்துக்கு இருந்ததால் காஞ்சிபுரம், சென்னை, கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட பல வெளியூர்களில் இருந்து சுமங்கலிகள் ஆர்வமாக வந்து இதில் கலந்து கொண்டனர். சுமார் ஆயிரக்கணக்கான சுமங்கலிகள் பங்கெடுத்துக் கொண்ட பிரமாண்டமான திருவிழா!
அன்றைய தினம் மடமே கோலாகலப்பட்டது. வாழை மரங்கள் என்ன….மாவிலை …….தோரணம் என்ன……….. வேத பாராயணம் என்ன… என்று ஆன்மீக மணம் எங்கும் கமழ்ந்தது.

மஞ்சள் முகத்தோடு காட்சி தந்த அனைத்து சுமங்கலிகளின் முகங்களிலும் அம்பாளின் அம்சமான குங்குமம் ஏகத்துக்கும் பிரகாசித்தது. வந்திருக்கும் சுமங்கலிகளைப் பார்த்தாலே அவர்களுக்கு நமஸ்காரம் செய்யலாம் போன்றதொரு தெய்வீகக் களை அனைவரின் முகத்திலும் தெரிந்தது.
இவர்களிடையே வித்தியாசமாக ஒரு பெண்மணி தெரிந்தார். நடுத்தர வயது இருக்கும். அவரது நெற்றி மட்டும் மூளியாகக் காணப்பட்டது. குங்குமம் இல்லை. பூஜை செய்ய வந்தது மாதிரியும் தெரியவில்லை.
சுமங்கலி பூஜை செய்து கொண்டிருந்த பல பெண்மணிகள் வித்தியாசமாகத் தெரிந்த இந்த அம்மையாரைப் பார்த்ததும் நெளிந்தார்கள். ‘இவள் சுமங்கலிதானா? நெற்றியில் குங்குமம் இல்லையே? அப்படி என்றால், இந்த பூஜை நடக்கும் இடத்துக்குள் ஏன் வந்தாள்? என்பது மாதிரியான பல சந்தேகங்கள் அவர்களுக்குள்.

ஒரு சில பெண்மணிகள் ‘குங்குமம் இட்டுக் கொள்ள இவள் மறந்து விட்டாள் போலிருக்கிறது’ என்றெண்ணி, தாங்கள் கையில் வைத்திருந்த விதம் விதமான குங்குமச் சிமிழை அவர் பக்கம் நீட்டி ‘எடுத்துக்கோங்கோ’ என்றனர் பரிவுடன்.

ஆனால், அந்தக் குங்குமச் சிமிழைப் பார்த்த மாத்திரத்திலேயே ஏதோ பார்க்கக் கூடாத ஒன்றைப் பார்த்து விட்டது மாதிரியும், தனக்குச் சம்பந்தமே இல்லாத ஒரு பொருள் போலவும் விலகி விலகி நடந்தார் அந்தப் பெண்மணி. இனியும் இங்கு நின்று கொண்டிருப்பது சரிப்படாது என்று தீர்மானித்தவராக பூஜை நடந்து கொண்டிருக்கும் அந்த ஹாலின் ஒரு மூலையை நோக்கி விறுவிறுவென்று நடந்து சென்று நின்றார்.

மகா ஸ்வாமிகளின் பார்வையில் இது படாமல் போகுமா?
தன் பீடத்தில் இருந்தபடியே, அந்தப் பெண்மணியைப் பார்த்து அருகே வருமாறு சைகை காட்டினார். பெரியவா யாரை அழைக்கிரார் என்று முதலில் ஆளாளுக்குக் குழம்பிய சுமங்கலிகள், பிறகு தான் நெற்றியில் குங்குமம் இல்லாத அந்தப் பெண்மணியை அழைக்கிறார் என்று தெளிந்து, அவரிடம் விவரம் சொன்னார்கள்.

ஆனால் அந்தப் பெண்மணி, மகாபெரியவாளின் சந்நிதானத்துக்கு அருகே செல்ல மிகவும் தயங்கினார். தான் இருந்த இடத்திலேயே அடமாக நின்று கொண்டிருந்தார். கொஞ்சமும் நகரவில்லை. மகா பெரியவா அழைக்கிறார் என்பது தெரிந்தும், சுரத்தில்லாத முகத்துடன் காணப்பட்ட அவரைப் பார்த்ததும் சிலருக்கு கோபமே வந்தது. ‘போங்கோ.. அந்தக் கருணைத் தெய்வம் உங்களைத்தான் கூப்பிடறது. சீக்கிரம் போங்கோ’ என்றனர் சில சுமங்கலிகள்.
இருந்த இடத்தை விட்டுப் பெண்மணி நகரவில்லை என்பது தெரிந்தும், மகாபெரியவா தனது அழைப்பை விடவில்லை. மீண்டும் இந்தப் பெண்மணிக்கு சைகை காட்டி அருகே வரச் சொன்னார்.
இதற்கு மேல் அந்தப் பெண்மணியால் அங்கு நின்று கொண்டிருக்க முடியவில்லை. அதற்குள், ஒரு சீடன் இவரிடம் வேக வேகமாக வந்து ‘வாங்கோ..பெரியவா கூப்பிடறார்’ என்று வலுக்கட்டாயமாக கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்தான். வேறு வழி இல்லாமல் சீடனைப் பின் தொடர்ந்து பெண்மணியும் நடந்தார்.

மகா பெரியவாளின் சந்நிதானத்தின் முன் நெற்றியில் குங்குமம் இல்லாத அந்தப் பெண்மணி நின்று கொண்டிருந்தார். எதுவும் பேசவில்லை. கேவிக் கேவி அழ ஆரம்பித்தார்.

‘ஏம்மா…..சுமங்கலி பூஜை நடக்கிற இடத்துல குங்குமம் இல்லாம – மூளி நெத்தியோட நின்னுண்டுருக்கியே..’ என்று நிதானமாகக் கேட்டார் மகா பெரியவா.

மீண்டும் பெருங்குரல் எடுத்து அழ ஆரம்பித்தார் அந்தப் பெண்மணி. அதற்குள் மகா பெரியவா ‘தோ பாரம்மா… இது சந்நிதானம். இங்கே பூஜை நடந்திண்டிருக்கு. எத்தனை சுமங்கலிகள் வந்திருக்கா பாரு. இந்த இடமே எவ்வளவு மங்களகரமா இருக்கு. இந்த வேளைல நீ மாத்திரம் கண்ணீரும், கம்பலையுமா இருந்தா நன்னாருக்குமா? குங்குமம் வெச்சுக்கோ’ என்றார்.

‘இல்லே பெரியவா… நான் குங்குமம் வெச்சுக்கப்படாது’ என்றார் அந்தப் பெண்மணி தெளிவாக.
பெரியவா பதில் ஏதும் பேசவில்லை. பிறகு அந்தப் பெண்மணியே தொடர்ந்தார் : ‘என்னோட கணவர் ராணுவத்துல இருந்தார். எல்லைப் பகுதியில் நடந்த ஒரு சின்ன யுத்தத்துல அவர் இறந்து போயிட்டதா எனக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி ஒரு சேதி வந்தது. ஆனா அவரோட உடம்பு வரலை. முதல்ல இந்தச் சேதியை நான் நம்பலை. அவர் நிச்சயம் உயிரோட இருப்பார்னு நம்பிண்டு இருந்தேன். வேண்டாத தெய்வத்தை எல்லாம் வேண்டிண்டு இருந்தேன் – அவர் பத்திரமா திரும்பி வரணும்னு. ஆனா….’

சற்றே நிறுத்திய அந்தப் பெண்மணி, அடக்க முடியாமல் வரும் அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு திடமான குரலில் மீண்டும் பேச ஆரம்பித்தார். ‘என்னோட கணவர் போர்முனைல இறந்துட்டார்னு ரெண்டு மூணு தடவை பேப்பர்ல நியூஸ் வந்துடுத்து. அதனோட கட்டிங்கும் எங்கிட்ட இருக்கு. தவிர மிலிட்டரில இருக்கிறவா சிலரும் இதை உறுதிப்படுத்திச் சொன்னா. அதுக்கு மேல இந்த விஷயத்தை நம்பாக என்னால இருக்க முடியல. என்னோட தலைவிதின்னு திடப்படுத்திண்டுட்டேன். நான் இன்னிக்கு ஸ்ரீமடத்துக்கு வந்ததே அகாலமா மரணமான அவரோட கர்மாவை எப்படி நான் செய்யணும்னு உங்க கிட்டே கேக்கறதுக்குத்தான்”.

அந்தப் பரப்பிரம்மம் சாதுவாக வீற்றிருந்தது. ஹாலே அமைதியாக இருந்தது.

contd....../2
 
Contd..../2

அந்தப் பெண்மணியே தொடர்ந்தார்.

‘இன்னிக்கு இங்கே இப்படி ஒரு சுமங்கலி பூஜை நடக்கப் போற விஷயம் எனக்கு தெரியாது. தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன். சுபகாரியம் நடக்கிற இடத்துல நான் நுழைஞ்சிருக்கவே மாட்டேன். அவருக்கான கர்மாவை செஞ்சு, அவரோட ஆத்மா சாந்தி அடையணும். இது தான் என் பிரார்த்தனை. நீங்க தான் எனக்கு உபாயம் சொல்லணும். நீங்க இப்ப போகச் சொன்னா இன்னொரு நாள் நான் வர்றதுக்குக் கூடத் தயாரா இருக்கேன்’

மகான் சாதாரணப்பட்டவரா? எங்கோ இருந்து கொண்டு வேறெங்கோ நடப்பதை ஞான திருஷ்டியால் அறிந்து சொல்பவராயிற்றே! இந்தப் பெண்மணிக்கு என்ன உபாயம் சொல்லப் போகிறார் என்று வந்திருந்த சுமங்கலிகள் உட்பட அனைவரும் தவித்தவாறு காணப்பட்டனர்.
கண்களை மூடிச் சில நிமிடங்கள் தியானத்தில் இருந்த பெரியவா பின் கண் விழித்தார். அப்போது அவருடைய தேஜஸை பார்த்தால் சாட்சாத் சிவ சொரூபமாகவே தெரிந்தார். இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் உருக்கமாக அவரைத் தரிசித்தனர்.

தன் முன்னால் குங்குமம் இருந்த மரப் பேழைக்குள் கை விட்டார். தன் கை நிறைய குங்குமத்தை எடுக்கவில்லை. அள்ளினார். அந்தப் பெண்மணியிடம் புன்முறுவலாக அதை நீட்டினார்.

பெண்மணி விதிர்விதிர்த்து நின்றார்.

உடன் இருந்த சுமங்கலிகளும் திகைத்துப் போய்க் காணப்பட்டனர்.
முக்காலமும் உணர்ந்த மகான் ஒருவர், புன்னகை ததும்பும் முகத்துடன் தன் திருக்கரங்களால் குங்குமத்தை அள்ளித் தரும்போது, சம்பந்தப்பட்ட அந்தப் பெண்மணி வெலவெலத்த நிலையில் காணப்பட்டார். குங்குமத்தைப் பெற்றுக் கொள்ள ஏனோ அவரது கைகள் முன்வரவில்லை. உடலிலும் ஒரு பதற்றம் தொற்றிக் கொண்டது.

அப்போது உடன் இருந்த மற்ற சுமங்கலிகள், ‘வாங்கிக்கோங்கோ..மகா பெரியவா கையாலயே உங்களுக்குக் குங்குமம் தர்றார். இதுக்குப் பெரிய பாக்கியம் வேணும்’ என்று சொல்ல… நடுங்கும் தன் வலைக்கையை நீட்டி அந்தக் குங்குமப் பிரசாதத்தை அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அந்த வேளையில் திருவாய் மலர்ந்தார் மகா பெரியவா. ‘நெத்தியில் இட்டுக்கோம்மா. உன்னோட வருத்தம் தேவை இல்லாதது. உன் கணவர் உயிரோட இருக்கார். கூடிய சீக்கிரமே உங்கிட்ட அவர் திரும்ப வரப்போறார். உன் முகம் பிரகாசம் பெறப் போகிறது.’

இந்த வார்த்தைகளை அவரது திருவாக்கில் இருந்து பெற்ற பின், அந்த குங்குமத்தை மிகுந்த பயபக்தியுடன் தன் கண்ணில் முதலில் ஒற்றிக் கொண்டார் பெண்மணி.

ஒரு பெண்ணுக்கு எது முக்கியம்?

சொத்தா? சுகமா? ஆடம்பரமா?

இவை எதுவுமே இல்லை.

தழையத் தழையத் தன் கழுத்தில் மங்கலகரமான மஞ்சள் கயிறு புரள்வதைத் தவிர வேறு எது தான் ஒரு பெண்ணுக்கு நிரந்தர சுகத்தைத் தந்து விட முடியும்?

தன்னையே வருத்திக் கொண்டு, தன் கணவனுக்குப் பணிவிடை செய்பவள் தானே நல்ல குடும்பப் பெண்ணாக இருக்க முடியும்!

அவனுடைய சுகத்தையும் சந்தோஷத்தையும் கண்டு மகிழ்ந்து தானும் இன்புறுபவள் தானே நல்ல குடும்பப் பெண்ணாக இருக்க முடியும்?!

‘உயிரோடு இல்லை’ என்று ஆறு மாதங்களால ஆணித்தரமாக நம்பி வந்த துக்ககரமான ஓர் உண்மை மகா பெரியவா திருச்சந்நிதி முன்னால் இன்று பொய்யாகிப் போனது. ‘உயிரோடு இல்லை என்று நம்பப்பட்ட தன் கணவன் திரும்ப வரப் போகிறான்’ என்று இவர் சொன்ன வாக்கு பொய்யாகுமோ?

மகானின் ஆசி, பலிக்காமல் போனதுண்டோ? அதுவும் சாட்சாத் சிவ சொரூபமாக நடமாடிக் கொண்டிருக்கும் இந்தக் கலியுக தெய்வம் சொன்னது எப்படிப் பலிக்காமல் போகும்?
கண்களில் நீர் தாரை தாரையாகக் கொட்ட – தன் வாழ்வே புனர் ஜென்மம் அடைந்ததாகக் கருதி – மகான் அருளிய அந்தக் குங்குமப் பிரசாதத்தைத் தன் நெற்றியில் கொண்டு போய், பெரிய பொட்டாகத் தீற்றிக் கொண்டாள் பெண்மணி. அப்போது அவர் முகத்தில் தெரிந்த மலர்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அங்கே திரளாகக் குழுமி இருந்த சுமங்கலிகள் பலரும் அந்தப் பெண்மணிக்குத் தங்கள் வாழ்த்துக்களியயும் ஆசிகளையும் சொன்னார்கள். பூஜையில் கலந்து கொண்ட சுமங்கலிகள் பலரும் அந்தப் பெண்மணிக்கு பூ, வெற்றிலை – பாக்கு, குங்குமம் அடங்கிய பிரசாதங்களைக் கொடுத்து சூழ்நிலையை மெருகேற்றினார்கள்.

மடத்தின் உள்ளே வரும் போது மூளி நெற்றியுடன் வந்த பெண்மணி அங்கிருந்து புறப்பௌட்ம் போது நெற்றி நிறைய பிரகாசிகும் குங்குமத்துடன் வெளியே வந்தது பற்றிப் பலரும் வியந்து தான் பேசினார்கள்.

அதிசயங்களையும் அற்புதங்களையும் அடிக்கடி நிகழ்த்தி வரும் மகா பெரியவா, இந்தப் பெண்மணியின் வாழ்விலும் திடுக்கிடும் திருப்பத்தை ஏற்படுத்தினார் அடுத்து வந்த நாட்களில்.

ஒரு வாரம் ஓடிற்று. மகா பெரியவாளின் திருவாக்கு பலிக்கப் போகும் திருநாளாக அந்த நாளின் அதிகாலைப் பொழுது அமைந்தது.

இறந்ததாகக் கருதப்பட்ட அவருடைய கணவர் அன்று – மெலிந்து போய் முகத்தில் பொலிவிழந்து தேகத்தில் சுரத்திழந்து வீட்டுக்குள் நுழைந்தார். அவரைப் பார்த்த மாத்திரத்தில் பெண்மணி அதிசயித்துப் போனார்.

அல்பாயுசில் போனதாகக் கருதப்பட்ட வாழ்க்கையில், அள்ளிக் கொடுத்த குங்குமம் அற்புதமான ஒரு
மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது கண்டு நெகிழ்ந்தாள்; நெக்குருகினாள்.

கணவரைக் கண்ட மாத்திரத்தில் அவரது திருப்பாதங்களில் விழுந்து கால்களைக் கட்டிக் கொண்டு தேம்பினாள். அவனது தேகத்தை ஆதுரத்துடன் அணைத்துக் கொண்டு விசும்பி விசும்பி கதறினாள். ‘

என்னை விட்டுட்டு இவ்ளோ நாள் எங்கே போனீங்க? என்னென்னவோ சேதி எல்லாம் வந்து என்னைப் பாடா படுத்திடுச்சே..’ என்று புலம்பியவளை ஆசுவாசப்படுத்தி அமர வைத்தார்.

‘நீ கேள்விப்பட்ட செய்தி எல்லாம் நிஜம் தான். கிட்டத்தட்ட மரணத்தின் விளிம்பையே தொட்டுவிட்ட நான் இறந்ததாகக் கருதப்பட்டேன். எந்தவிதமான சலனமும் சன்னமான மூச்சுக் காத்தும் இல்லாமல் இருந்த என்னை எதிர்கள் ‘இறந்து விட்டான்’ என்று கருதி, என் உடலை எங்கோ இழுத்துக் கொண்டு போய் அநாதரவாகப் போட்டு விட்டார்கள். நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்வது மிகவும் மேலானது என்று தான் அப்போது என் நிலைமை இருந்தது. யாரோ சில மலைவாசிகளின் புண்ணியத்தால், எனக்கு புனர்ஜன்மம் கிடைத்தது. என்னைக் காப்பாற்றினார்கள். உனது பிரார்த்தனையும் தாலி பாக்கியமும் தான் என்னை மீண்டும் இங்கே கொண்டு வந்தது’ என்று சுருக்கமாகச் சொல்லி தன் மனைவியை கட்டிக் கொண்டு நீண்ட நாள் பாசத்தை வெளிப்படுத்தினார். அவரது கண்களும் பனித்தன.

‘உடனே புறப்படுங்கள்…காஞ்சிக்குச் செல்வோம். உங்களுக்கு மறுவாழ்வு தந்து, இழந்த பிரகாசத்தை என் முகத்தில் மீண்டு தவழவிட்டது அந்தக் கருணை தெய்வம் தான். அவருக்கு நன்றி சொல்லி அவரது திருப்பாதம் தொழுது வருவோம். அதன் பிறகு தான் அன்ன ஆகாரம்’ என்று மனைவி சொல்ல…அடுத்த அரை மணி நேரத்தில் அவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தை நோக்கிப் பயணித்தார்கள்.

இவர்கள் இருவரும் குதூகலமாக மடத்துக்குள் நுழையும் போதே அங்கிருந்த பலரும் இவர்களை நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்கள் போலிருக்கிறது. ‘போன வாரம் தானே இந்தம்மா இங்கே வந்து தன் கணவனுக்கு இறுதிக் காரியங்களை எப்படிச் செய்ய வேண்டும் என்று கேட்பதற்காக மடத்துக்கு வந்திருந்தார். பெரியவா தான் குங்குமம் கொடுத்து சந்தோஷமா அனுப்பி வைச்சா’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

தன் பீடத்தில் படு அமர்க்களமாக அமர்ந்திருந்த அந்தப் பரப்பிரம்மம், இவர்களைப் பார்த்துப் பெரிய புன்முறுவல் பூத்தது. ‘வாம்மா…புருஷனோட சந்தோஷமா வந்திருக்கே…. இனிமே உனக்கு எந்தக் குறையும் இருக்காது’ என்று சொல்லி மீண்டும் பிரசாதம் வழங்கியது.

அவரது திருவடிக்கு ஆனந்தக் கண்ணீரையும் சாஷ்டாங்க நமஸ்காரத்தையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்கள் அந்தத் தம்பதியர்.

Source: Maha Periyava Public Group / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: On the Path of Righteousness

Sri Maha Periyava was camping at Kalavai. One morning an advocate from Thanjavur came for darshan by car. There was a lot of fanfare. His wife wore the saree in the traditional manner, the sons, dhoti and upper cloth, the gentleman himself a dhoti in a traditional manner, upper cloth and a gem studded gold chain around his neck.

He held a large plate on which were fruits, flowers, sugar candy, grapes, cashew nuts, honey and with all these, money, packed inside a cover. They placed the plate in front of Sri Maha Periyava and prostrated to Him. Periyava gently probed the plate with His eyes.

“What cover is that?”

“Just a little... money...”

“By little do you mean ten or fifteen rupees?”

The lawyer’s ego was probably hurt. He was known to be the best criminal lawyer in his district.

“Why did Periyava estimate of him so low?”

With an excessive display of humility, he said in a honeyed voice, “Fifteen thousand rupees”.
Periyava was silent for a while and then asked, “How did you come here?”

“We came by car”.

“Put away this cover safely in the car. The fruits and flowers will do”.

The advocate was shaken. He carried out Periyava’s instructions. Periyava conversed with him in a peaceful manner for a long time and then sent him away with prasada. The sound of the car leaving was heard. Did not Periyaval know that the attendants were disappointed because Periyaval refused fifteen thousand rupees?

“He argued a false case and won it. The fifteen thousand rupees he offered was a portion of the money he got for that. It was tainted money. That is why I refused it”. The attendants understood and accepted.

There were times when SriMatham went through dire circumstances. The Manager would be worried. Even then Periyava never accepted money anxiously, disregarding righteousness.

“A tiny drop of salt is enough to curdle a pot of milk. If dharma is slackened for the sake of one man, it will become a habit,” He would say.

Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal
Source: Maha Periyava public group / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!!
!! பெரியவா என்ன ப்ரஸாதம் குடுத்திருப்பார்...ன்னு சொல்லுங்கோ!!

பெரியவாளே
கதி! என்றிருக்கும் பல குடும்பங்களில் ஒன்றான ஒரு டெல்லி வாழ் குடும்பத்தில் மனைவிக்கு நெடுநாட்களாக ஏதோ உடலில் கோளாறு. என்ன சாப்பிட்டாலும் வாந்தி வந்து விடும். வெறும் ஹார்லிக்ஸை கரைத்துக் குடித்தபோது அதுவும் வாந்தியாக வெளியே வந்து அந்த அம்மா மயக்கம் அடைந்ததும், கணவர் பதறி அடித்துக்
கொண்டு ஹாஸ்பிடலில் சேர்த்தார்.


இரவு
முழுதும் IC U வில் இருந்தாள். நிஜமாகவே ரொம்ப ரொம்ப நல்ல டாக்டர் வந்து " ஒங்க மனைவிக்கு உடல்ல எந்த கோளாறும்

இல்லே
......இந்த டெஸ்ட் அந்த டெஸ்ட்...ன்னு அனாவச்யமா பணம் பிடுங்குவா .......அதுனால, இப்பவே டிஸ்சார்ஜ் பண்ணிண்டு பேசாம ஆத்துக்கு போங்கோ" என்று சொன்னார். இவரும் பணத்தை செட்டில் பண்ணிவிட்டு மனைவியை பார்க்கச் சென்றார்.



அவள்
சொன்னாள்..."நான் நேத்திக்கு ஆத்ல மயக்கமா விழுந்ததும், எனக்கு என் முன்னால பெரியவா நின்னுண்டு இருந்தா மாதிரி இருந்துது........ஒனக்கு எல்லாம் செரியாயிடும்.....நாளைலேர்ந்து காலமே பல் தேச்சதும், ஒரு வில்வத்ல கொஞ்சம் விபூதி வெச்சு மொதல்ல சாப்டு....நாப்பத்தஞ்சு நாள்ல எல்லாம் செரியாப்
போய்டும்....ன்னு சொன்னார்"


வீட்டுக்கு
போன மறுநாளே விடிகாலை வில்வமும் விபூதியும் சாப்பிட ஆரம்பித்தாள். வாந்தி என்ற வார்த்தையையே மறந்து விட்டாள்.

சரியாக 43ஆம் நாளில், ஏதோ ஞாபகமறதியால் வில்வம் சாப்பிடாமல், காப்பியைக் குடித்துவிட்டாள். அவ்வளவுதான்! சாயங்காலம் கணவர் ஆபீசிலிருந்து வந்ததும் வாந்தியும் ஆரம்பித்தது. ஆனால், இம்முறை அதில் ரத்தம் தெரிந்தது!

அரண்டு
போய் டாக்டரிடம் காட்டி, TB யாக இருக்குமோ என்று கேட்டார்.
ஹாஸ்பிடல் போகும்போதே மனஸில் " ப்ரபோ! ரெண்டு நாள் பாக்கி இருக்கறச்சே...வில்வம் சாப்டாம, காப்பி குடிச்சுட்டா........தெரியாம
பண்ணிட்டா...மன்னிச்சிடுங்கோ! அனுக்ரகம் பண்ணுங்கோ"என்று மன்றாடினார்.


டாக்டரும்
TBஇல்லை வெறும் பலஹீனம்தான் என்று சொல்லிவிட்டார்.

அன்று சாயங்காலம் வீட்டுக்கு வந்தபோது, ஆச்சர்யமாக அவர் மனைவி ரொம்ப ரொம்ப தெம்போடு அவரை வரவேற்றாள். அவள் சொன்னது.........."மத்யானம் பக்கத்தாத்து மாமி இங்க வந்தா.....நேத்திக்கு அவாத்து பிள்ளையோட கல்யாணம்

மெட்ராஸ்ல
நடந்தப்புறம் இளையாத்தன்குடி போய் பெரியவாளை
தர்சனம் பண்ணப் போனாளாம்......அப்போ மாமி பெரியவாகிட்ட,"நான் டெல்லிலேர்ந்து வரேன்.....எங்காத்துக்கு பக்கத்ல இருக்கற என் ஸ்நேகிதிக்கு ஏதோ உடம்பு படுத்திண்டே இருக்கு.........பெரியவாதான் அனுக்ரகம் பண்ணணும்"ன்னு சொன்னாளாம்.


அதுக்கு
பெரியவா," என்னது! ஒன்னோட friend ! பெரிய உபகாரியா? அடிக்கடி வாந்தி எடுக்கறாளாக்கும்?......எல்லாம் செரியாயிடும்"ன்னு சொல்லிட்டு, ப்ரஸாதம் குடுத்தாராம். மாமி அதை பிரிக்காம எங்கிட்ட
குடுத்தா.......அதுல பெரியவா என்ன ப்ரஸாதம் குடுத்திருப்பார்...ன்னு சொல்லுங்கோ!"என்றாள்.


பக்தர்
கல்கண்டு, திராக்ஷை, குங்குமம், விபூதி என்று
சொன்னார். கொண்டு வந்து காட்டினால்.......ஒரு சின்ன இலையில், ரெண்டே ரெண்டு வில்வ இலைகள்!


45
நாட்களுக்கு ரெண்டு நாள் இருக்கும் போது மறந்துபோய் காப்பி
குடித்ததால், விட்டுப் போன ரெண்டு நாட்களுக்காக ரெண்டே ரெண்டு வில்வ இலைகள்!"


நீ
கண்டது கனவல்ல...நிஜம்"என்று நிருபித்த அழகு மகான்களுக்கே
முடியும்!—


Source: S
iva sankaran/ Maha Periyava Public Group/ Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 




பெரியவா சரணம் !!

படிக்கும்போதே...கண்ணுல தண்ணி தளும்பரது....பகவானே...ஜய ஜய சங்கர...ஹர ஹர சங்கர...காஞ்சி சங்கர...காமகோடி சங்கர...
மகா பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்று!

ஆந்த்ராவில் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தபோது, மகா பெரியவாளுடன் கூட போகும் சிஷ்யர்கள் ரொம்ப குறைவு. எந்தவிதமான படாடோபமோ, ப்ருதாவளியும் கிடையாது. உள்ளடங்கிய பகுதிகளில், பெரியவா வந்திருப்பதை கூட தெரிந்து கொள்ள முடியாது. முன்னாடியே போய் மகா பெரியவா தங்க வசதியான இடங்களை பார்த்து வைப்பதெல்லாம் கிடையாது. காடோ, மேடோ, பொந்தோ, பாழடைந்த மண்டபமோ, மரத்தடியோ………பெரியவா “இங்க தங்கிக்கலாம்” என்று உத்தரவு போட்டு விட்டால், அதுதான் க்ஷேத்ரம்!
வழியில் ஒரு கிராமத்தில் ஒரு புராதனமான சிவன் கோவில் இருந்தது. மகா பெரியவா அங்கே தங்கி கொஞ்சம் ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டார். கிராமத்து ஜனங்கள் வந்து தர்சனம் பண்ணினார்கள். பக்கத்து கிராமங்களுக்கு காட்டுத்தீயாக “பெத்தச்ச தேவுடு” வந்திருக்கும் செய்தி பரவியது. உச்சிக்கால பூஜை முடிந்தது. மகா பெரியவா அங்கு மூலையில் இருந்த மண்டபத்தில் படுத்துக் கொண்டுவிட்டார். சிஷ்யர்களும் அங்கங்கே ஸ்ரமப் பரிஹாரம் பண்ணிக் கொண்டனர்.

கோவில் அர்ச்சகர் வீட்டுக்கு போவதிலேயே குறியாக இருந்தார் போல ! உச்சிக்கால பூஜை முடிந்ததும், மகா பெரியவா உள்ளே தங்கி இருப்பதைக் கூட நினைவில் கொள்ளாமல், கோவிலை பூட்டிக் கொண்டு போயே போய் விட்டார்!

பக்கத்து கிராமங்களிருந்து பக்தர்கள் மகா பெரியவாளை தர்சிக்க வேகாத வெய்யிலில் நண்டு,சிண்டு, குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் தூக்கிக்கொண்டு, போறாததற்கு கையில் தங்களால் இயன்ற காணிக்கைகளை தூக்கிக் கொண்டு வந்து பார்த்தால்……………கோவில் வாசலில் பெரிய பூட்டு தொங்கியது!

இந்த பட்டைபடைக்கிற வெய்யிலில் “பெத்தச்ச தேவுடு” எங்க போயிருப்பார்? தெய்வமே! நம்ம கிராமத்துப் பக்கம் அவர் வந்தும், நம்மால தர்சனம் பண்ண முடியாமல் போயிடுத்தே! …………இப்படியாக பாவம் பலவிதமாக எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டு, திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள். உள்ளே கர்ப்பக்ரஹத்துள் இருக்கும் முக்கண்ணன், மண்டபத்தில் கண்களை மூடி ஓய்வெடுப்பது போல் படுத்திருந்தாலும், தன்னை ஆசையோடு பார்க்க வந்த பக்தர்கள் அதுவும், எந்த சுக சௌகர்யங்கள் இல்லாமல், வெய்யிலில் குழந்தை குட்டிகளோடு வந்திருக்கும் உண்மையான பக்தர்களை பரிதவிக்க விடுவானா?

சிட்டிகை போட்டு சிஷ்யர்களை எழுப்பினார்……..” ஏண்டா! வெளில பாவம் எல்லாரும் காத்துண்டிருக்காளா, என்ன?”

சிஷ்யர் பார்த்துவிட்டு “ஆமா…ஆனா, வெளில கோவில் கதவு சாத்தி பூட்டியிருக்கு பெரியவா”

“அடடா……….ஜனங்கள் வந்து பாத்துட்டு ஏமாந்து போய்டுவாளேடா!………சரி இந்தா! குமரேசா! நீ “டக்”குனு அந்த கல்லுல ஏறி அங்க தொங்கற மணியை பலமா அடி!”
மணி ஓசை கேட்டது ! திரும்பி போக யத்தனித்த ஜனங்கள் மணி ஓசை கேட்டதும், சந்தோஷமாக கோவிலுக்கு ஓடி வந்தனர். காவல்காரரும் ஓடி வந்தார்! பூட்டு தொங்குவதைப் பார்த்து திகைத்தார்! தன்னிடமிருந்த மாற்று சாவியால் கதவை திறந்து விட்டார். படிப்பறியாத பாமர ஜனங்கள் தங்களுடைய அன்பான “பெத்தச்ச தேவுடு” வைப் பார்த்து பரவசம் அடைந்தனர் ! எப்படிப் பட்ட பிரத்யேகமான தர்சனம்! தங்களை திரும்ப அழைக்க பெரியவா கையாண்ட யுக்தியைக் கேட்டு, “எதுவுமே தெரியாத எங்களையும் கூட ஒரு பொருட்டா நெனச்சு, கூப்பிட்டு தர்சனம் குடுத்திருக்காரே !” என்று எண்ணி எண்ணி மாய்ந்து போனார்கள்.

மகா பெரியவாளுக்கு படித்தவனும், பாமரனும் ஒன்றுதானே!

post courtesy Hinduism

Source: Siva sankaran/ Maha Periyava Public Group/ Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 



பெரியவா சரணம் !!

"உண்மையான குழந்தை உள்ளத்தோடு தேடினால், பெரியவா நிச்சயம் கிடைப்பா ""
மிருதங்க வித்வான் ஒருவர் சிறு பையனாக இருந்தபோது பெரியவாளுடைய சந்நிதியில் நடந்த சங்கீத கச்சேரிக்கு தன் அப்பாவோடு போனார். அவருடைய அப்பாவும் மிருதங்க வித்வானானதால், அன்று மகனை மிருதங்கம் வாசிக்க அமர்த்திவிட்டார். இரவு எல்லாருக்கும் ப்ரஸாதம் வழங்கினார்கள். அப்போது பெரியவா அந்தப் பையனை மட்டும் அழைத்து ஒரு சிவப்புப் பட்டு வழங்கி ஆசிர்வதித்தார்.
பல வர்ஷங்கள் கழித்து அந்தப் பையன் வானொலி நிலையத்தில் பணி புரிந்துவந்தார். அப்போது வானொலி நிலைய இயக்குனரோடு பெரியவாளை தர்சனம் பண்ணப் போனார். போகும்போது ஞாபகமாக அந்த சிவப்புப்பட்டையும் எடுத்துக் கொண்டு போனார்.
பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு "இந்த பட்டு வஸ்த்ரம் பெரியவாதான் அனுக்ரகம் பண்ணிக் குடுத்தேள் ..." என்றதும், "ஆமா....அப்போ ஒனக்கு ஒம்பது வயஸ்.." என்று சொன்னதும், ஆடிப்போய்
விட்டார்!

45 வர்ஷங்களுக்கு முந்தி நடந்ததை, ஏதோ நேற்று நடந்த மாதிரி பெரியவா சொன்னார். ஞானிகள் காலம், இடம் இரண்டையும் கடந்தவர்கள் இல்லையா?
அதே பக்தர் வீட்டில் பெரியவாளுடைய படங்கள் விதவிதமான போஸ்களில் மாட்டியிருந்தார். சொந்த ஊரை விட்டு தஞ்சாவூரில் சிலகாலம் வசிக்க வேண்டிய சூழ்நிலை! அந்த வீட்டில் பெரியவாளுடையது ஒரு படம் கூட இல்லை! மனசுக்குள் ஏதோ தவிப்பு! சஞ்சலம் ! அரிசி வாங்குவதற்காக கடைக்குப் போனார். புது ஊர்!

மாதிரிக்காக ஒரு கிலோ அரிசி வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார். அவர் குடுத்த பேப்பர் பை ரெண்டு நாட்களாக வீட்டில் கிடந்தது. மூன்றாவது நாள் அதை குப்பையில் போடுவதற்காக எடுத்தால்........அந்தப்பையின் மேல் பக்கத்தில் "இதோ! வந்துட்டேன் பாத்தியா!.." என்று அழகாக சிரித்துக்கொண்டு பெரியவா!

பக்தருக்கு நன்றியில் அழுவதைத்தவிர என்ன பண்ண முடியும்?

உண்மையான குழந்தை உள்ளத்தோடு தேடினால், பெரியவா நிச்சயம் கிடைப்பா!

Source: Siva sankaran/ Maha Periyava Public Group/ Face Book


ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

 



பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: The union of the separated ones

In a small village in Thanjavur district, all the families were devoted to the SriMatham. There was bitter enmity in the street where the Brahmins lived and they had fallen apart to form two groups. The reason was not worth a pinch of salt, though the enmity grew to enormous proportions.

By some quirk of circumstances, both Ananthu and Sethu, who spear-headed the two groups respectively, came to Sri Maha Periyava at the same time. They prostrated to Periyava.

"Excellent!" said Periyava. "Have you both come together?"

"Yes", they lied in one voice, not wanting to broadcast their enmity in Periyava's presence. Periyava chatted with them for long. In between, He gestured to the attendants in a way in which they alone could understand, to pack a
separate parcel of prasada and put it aside.

Practically everything concerning the two families featured in the conversation - Ananthu's son's higher studies, his uncle's eightieth birthday celebrations, the celebrations of Sethu's daughter's pregnancy, the fire-walking festival at the Mariamman temple, Chinna Mirasdar Chittayyan's cows, everything!

As He gave them prasada and leave to depart, Periyava asked, "You are both going straight back home, aren't you?"

"Yes".

"Do you know the Mannargudi estate Srinivasa Iyengar?

"Yes", said both in one voice.

"The two of you may go straight to his residence and hand over this prasada to him before you go home".

The huge mountain of enmity that stood between the two crumbled as Periyava's words descended upon it forcefully. How could the two of them travel to Mannargudi from Kanchipuram and not look at each other or talk to each other?

When the two gentlemen came out of SriMatham with the prasada, they had once again become steadfast friends. The Iyengar who accepted the prasada with reverence and devotion was very surprised and delighted. "Usually Periyava sends prasada through the attendants of SriMatham. Today He has sent it through the two dignitaries such as you both!"
Only the dignitaries knew why it was so.

Narrated by SriMatham Balu Mama

Source: Maha Periyaval Darisana Anubhavangal

Source: Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya Public Group / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 



பெரியவா சரணம் !!
மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் –

நெஞ்சை உலுக்கும் சம்பவம் –

குரு தரிசனம்

மகா பெரியவா பக்தர்களுக்கு அருளியது தொடர்பாக
எந்த சூழ்நிலையிலும் மகா பெரியவா கோபங்கொண்டு எவரிடமும் பேசியது கிடையாது.
சபித்தது கிடையாது. சில சமயம் பக்தர்கள் தவறுக்காக அவர் கோபப்படுவதுண்டு. காலில் விழுந்தவுடன் அடுத்த நொடி கோபம் நீங்கி சாந்தமாகி விடுவார்.
தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பது மட்டுமல்ல மறப்பது தான் தெய்வ குணம் என்பது அவருக்கு தெரியும்.
ஆனால்…

தவறுக்கும் தவறான தவறை ஒருவர் செய்த காரணத்தால் மகா பெரியவா எரிமலையாய் சீறி அனல் கக்கிய தருணம் பற்றி தெரியுமா?
2006 ஆம் ஆண்டு சக்தி விகடனில் வெளியான இந்த சம்பவத்தை படியுங்கள்.
பல இடங்களில் நமக்கு திக் திக் என்று இருக்கும்.

கண்ணீர் பொத்துக்கொண்டு வரும்.

மிராசுதாரை மிரள வைத்த மகா பெரியவா!

பல வருஷங்களுக்கு முன், ஒரு சித்ரா பௌர்ணமி தினம். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயிலில் மஹாந்யாஸ ருத்ர ஜபத்துடன் ஓர் அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர், திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் என்பவர்.
காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த ருத்ராபிஷேகம்,

மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது.

காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். ‘எப்படியும் இந்த ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பித்துவிட வேண்டும்’ என்று தீர்மானித்தார்.
ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பய பக்தியுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப் பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக் கொண்டார். அன்று மாலையே திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷனில், மதுரை- சென்னை பாசஞ்சர் ரயிலில் ஏறினார் மிராசு தார்.

விடியற்காலம் செங்கல்பட்டு ஸ்டேஷனில் இறங்கி, பஸ் பிடித்து காஞ்சிபுரம் வந்து இறங்கினார் நாராயணஸ்வாமி ஐயர்.
அன்று மடத்தில் ஏகக் கூட்டம். ஸ்நானம் இத்யாதி களை முடித்துக் கொண்டு, பெரியவா தரிசனத்துக்காக பிரசாதத்துடன் காத்திருந்தார் மிராசுதார்.
நண்பகல் 12 மணி சுமாருக்கு, ஸ்ரீசந்திரமௌலீஸ்வர பூஜையை முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தார் மகா ஸ்வாமிகள்.
பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்தது. மிராசுதாரால் ஸ்வாமிகளை நெருங்க முடியவில்லை.

உடனே மிராசுதார், ‘‘எல்லாரும் நகருங்கோ… நகருங்கோ.

நா பெரியவாளுக்கு திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்.
அத அவர்ட்ட சமர்ப்பிக்கணும்’’ என்று பிரசாத மூட்டையைக் காட்டிக் கெஞ்சினார்.

ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரின் தவிப்பையும் பதற்றத்தையும் பார்த்த மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக் கொடுத்து நாராயணஸ்வாமி ஐயரை, பெரியவாளுக்கு அருகே அழைத்துச் சென்றார். பெரியவாளைப் பார்த்தவுடன் மிராசுதாருக்குக் கையும் காலும் ஓடவில்லை. தொபுக் கடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார்.
மகா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார்! ‘என்ன விஷயம்’ என்பதைப் போல புருவங்களை உயர்த்தினார்.
உடனே மிராசுதார் கைகள் உதற பிரசாத மூட்டை யைப் பிரித்துக் கொண்டே, ‘‘பிரசாதம்… பிரசாதம் பெரியவா’’ என்று குழறினார். மீண்டும் பெரியவா, ‘‘என்ன பிரசாதம்?’’ என்று கேட்டு அவரைப் பார்த்தார். அதற்குள், மூட்டையைப் பிரித்து, பிரசாதத்தை எடுத்து, அங்கிருந்த மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாகச் சமர்ப்பித்தார் மிராசுதார்.
அதில், ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், இரண்டு தேங்காய் மூடிகள், பூவன் வாழைப்பழங்கள் சில இருந்தன.
மகா ஸ்வாமிகள், ‘‘இதெல்லாம் எந்த க்ஷேத்ர பிரசாதம்?’’ என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப் பார்த்தார். மிராசுதார் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மிக விநயமாக,

‘‘பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூர்ல மகாலிங்க ஸ்வாமிக்கு ருத்ரா பிஷேகம் பண்ணி வெச்சேன்.
மஹாந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம்.

அந்தப் பிரசாதம்தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறதுக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹம் பண்ணணும்!’’ என்று சொல்லி முடித்தார்.
உடனே பெரியவா அந்த பிரசாத மூங்கில் தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டார்: ‘‘நாராயணசாமி! நீ பெரிய மிராசுதான். இருந்தாலும் செலவுக்கு இன்னும் யாரை யாவது கூட்டு சேத்துண்டு இந்த ருத்ராபி ஷேகத்தை ஸ்வாமிக்கு பண்ணினாயோ?’’

‘‘இல்லே பெரியவா… நானே என் சொந்தச் செலவுல பண்ணினேன்’’ என்று, அந்த ‘நானே’வுக்குச் சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். பெரிய வாள் தனக்குள் சிரித்துக் கொண்டார். அத்துடன் விட வில்லை. ‘‘லோக க்ஷேமத்துக்காக (உலக நன்மைக்கு) மத்யார்ஜுன க்ஷேத்ரத்துலே (திருவிடைமருதூர்) ருத்ராபிஷேகத்தைப் பண்ணினாயாக்கும்?’’ என்று கேட்டார்.

உடனே மிராசுதார் ஆதங்கத்துடன்,

‘‘இல்லே பெரியவா. ரெண்டு மூணு வருஷ மாவே வயல்கள்ல சரியான வெளச்சல் கிடை யாது.
சில வயல்கள் தரிசாவே கெடக்கு. திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப் பாத்தேன். அவர்தான், ‘சித்ரா பௌர்ணமி அன்னிக்கு மகாலிங்க ஸ்வாமிக்கு மஹாந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து. அமோகமா வெளச்சல் கொடுக்கும்’னார்!

அத நம்பித்தான் பண்ணி னேன் பெரியவா’’ என்று குழைந்தார்.

எதிரில் வைத்த பிரசாதம் அப்படியே இருந்தது. ஆசார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. ‘‘அப்டீன்னா ஆத்மார்த்தத் துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ நீ இதைப் பண்ணலேனு தெரியறது’’ என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தார் ஆசார்யாள். அவர் முகத்தில் அப்படி ஒரு தெளிவு! கண் மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள், பல விஷயங்களைப் புரிந்து கொண்டு விட்ட ஒரு ஞானப் பார்வை. அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடர்ந்தார்.

‘‘சரி… ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா?’’

‘‘பதினோரு வேத பண்டிதாளை ஏற்பாடு பண்ணியிருந்தேன் பெரியவா!’’ – இது மிராசுதார்.
உடனே ஸ்வாமிகள், ‘‘வைதீகாள் எல்லாம் யார் யாரு?

எந்த ஊருன்னெல்லாம் தெரியுமோ?

நீதானே எல்லா ஏற்பாடும் பண்ணினே?’’ என்று விடாப்பிடியாக விசாரித்தார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு, ‘பெரியவா ஏன் இப்படித் துருவித் துருவி விசாரணை செய்கிறார்!’ என வியப்பாக இருந்தது.
இருந்தாலும், ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார் என்பதையும் புரிந்து கொண்டார்கள். மிராசுதார்,
தன் இடுப்பில் செருகியிருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.

‘‘வாசிக்கறேன் பெரியவா. திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாச கனபாடிகள், ராஜகோபால சிரௌதிகள், மருத்துவக்குடி சந்தான வாத்யார்,
சுந்தா சாஸ்திரிகள், சுப்பிரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக்குடி வெங்கிட்டு வாத்யார்… அப்புறம்…’’ என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள்,

‘‘எல்லாம் நல்ல அயனான வேதவித்துகளாத்தான் ஏற்பாடு பண்ணிருக்கே. அது சரி… ஒன் லிஸ்ட்டுலே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கானு பாரு…’’ என்று இயல்பாகக் கேட்டார்.
உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, ‘‘இருக்கு பெரியவா… இருக்கு.

அவரும் ஜபத்துக்கு வந்திருந்தார்!’’ என ஆச்சரியத்தோடு பதிலளித்தார்.
Periyava angry சூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம் ‘பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப் பற்றி, இப்படி துருவித் துருவி விசாரிக்கிறார்’ என்று வியப்பு.
தவிர, ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.
ஸ்வாமிகள்,

‘‘பேஷ்… பேஷ்! வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லிருந்தயா? ரொம்ப நல்ல காரியம். மகா வேத வித்து!
இப்ப கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்பவும் சிரமப்படும். ஜபத்தை புடிச்சு (மூச்சடக்கி) சொல்றதுக்கு கஷ்டப்படுவார்’’ என்று கூறியதுதான் தாமதம்… மிராசுதார் படபடவென்று,
உயர்ந்த குரலில், ‘‘ஆமாம் பெரியவா! நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே!
சில நேரம் வாயே திறக்காம கண்ண மூடிண்டு ஒக்காந்துருக்கார். அடிக்கடி கொட்டாவி விடறார்.

அதனால ஜப ‘ஸங்க்யை’யும் (எண்ணிக்கை) கொறயறது!

Contd....'2
 


Contd.../2

நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார். ஏண்டா அவரை வரவழைச்சோம்னு ஆயிடுத்து பெரியவா’’ என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்… பொங்கி விட்டார் ஸ்வாமிகள்.
வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள்,

‘‘என்ன சொன்னே… என்ன சொன்னே நீ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவயா நீ? அவரப் பத்தி என்னமா நீ அப்டிச் சொல்லலாம்? நேத்திக்கு மகாலிங்க ஸ்வாமி சந்நிதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நா புரிஞ்சுண்டுட்டேன்!
நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு!

நேத்திக்கு ஜப நேரத்துலே… கனபாடிகள் முடியாமல் கண் மூடி ஒக்காந்திருந்த நேரத்துலே நீ அவர்ட்ட போய், கடுமையாக ‘ஏங்காணும், காசு வாங்கலே நீர்!
இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கீரே’னு கத்தினது உண்டா, இல்லியா?’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப் போனது.
கை- கால்கள் நடுங்க சாஷ்டாங்க மாகப் பெரியவா கால்களில் விழுந்தார் நாராயணஸ்வாமி ஐயர். ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். வாயைப் பொத்திக் கொண்டு நடுக்கத்துடன்,

‘‘தப்புதான் பெரியவா! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பாத்து, ஸ்வாமி சந்நிதியிலே சொன்னது வாஸ்தவம்தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா’’ என்று கெஞ்சினார்.
பெரியவா விடவில்லை.

‘‘இரு… இரு…

நீ அந்த ஒரு தப்பை மாத்ரமா பண்ணினே? சொல்றேன் கேளு. எல்லாருக்கும் நீ தட்சிணை கொடுத்தியோல்லியோ… ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்ளவு தட்சிணை கொடுத்தே?’’ என்று கேட்டார். மிராசுதார் மென்று விழுங்கியபடியே, ‘‘தலைக்குப் பத்து ரூவா கொடுத்தேன் பெரியவா’’ என்றார் ஈனஸ்வரத்தில். ஸ்வாமிகள் நிறுத்தவில்லை.

‘‘சரியா சொல்லு! எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப் பத்து ரூவாயா கொடுத்தே! நேக்கு எல்லாம் தெரியும்’’ என்று மடக்கினார்.
மிராசுதார் மௌனமாக நின்றார்.

ஆனால், ஆசார்யாள் விடவில்லை!

‘‘நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறத நா சொல்றேன் கேட்டுக்கோ…
நோக்கு சொல்ல வெக்கமாருக்கு போல. வைதீகாளை எல்லாம் வரிசையா சந்நிதியிலே ஒக்காத்தி தலைக்குப் பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்கிட்டே வந்தபோது,

‘இவர்தான் சரியாவே ருத்ரம் சொல்லலியே… இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்?’னு தீர்மானிச்சு ஏழே ஏழு ரூவா சம்பாவனை பண்ணினே.
ஏதோ அவரைப் பழி வாங்கிப்டதா எண்ணம் நோக்கு. கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணாரா பாத்தியா?
நீ கொடுத்ததை வாங்கி அப்டியே தலப்பிலே முடிஞ்சுண்டுட்டார். நா சொல்றதெல்லாம் சரிதானே, சொல்லு’’ என்று உஷ்ணமானார் ஆசார்யாள்.
பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தனர்! ஒருவரும் வாய் திறக்கவில்லை!

‘நேற்று திருவிடைமருதூர் கோயிலில் நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?’ என அங்கே குழுமியிருந்த பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர்.
மிராசுதார் பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, ‘‘தப்புத்தான் பெரியவா! ஏதோ அஞ்ஞானத்தினாலே அப்படி நடந்துண்டுட்டேன். இனிமே அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிச் சுடுங்கோ…’’ என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா,

‘‘இரு… இரு! இதோட முடிஞ்சுட்டாத்தான் பரவாயில்லையே…

ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மகாதானத் தெரு ராமசந்த்ரையர் கிரஹத்துலதானே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே?’’ என்று கேள்வி போட்டார்.

‘‘ஆமாம் பெரியவா!’’ – இது மிராசுதார்.

உடனே ஆசார்யாள், ‘‘சாப்பா டெல்லாம் பரமானந்தமா நன்னாத் தான் போட்டே. பந்தியிலே,
நெய் ஒழுக ஒழுக நெறய மிந்திரி பருப்பு, திராட்சை எல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் பண்ணச் சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே… சரியா?’’ என்று கேட்டார். வெலவெலத்துப் போய் விட்டார் மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர்!

மிராசுதார் வாயைப் பொத்தியபடியே, ‘‘ஆமாம் பெரியவா! பந்தியிலே சக்கரைப் பொங்கலை மட்டும் என் கையால நானே பரிமாறினேன்!’’ என்று குழைந்தார்.
ஸ்வாமிகள் விடவில்லை.

‘‘சரி… அப்டி சக்கரைப் பொங்கலை நீ போடறச்சே,

பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒம் மனசாட்சி சொல்றதா?’’ என்று கேட்டார் கடுமையாக.
வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆசார்யாளே பேசினார்: ‘‘நீ சொல்ல வேண்டாம்… நானே சொல்றேன்!
நீ சக்கரைப் பொங்கல் போடறச்சே,

அது பரம ருசியா இருந்ததாலே வைதீகாள்ளாம் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்டா! நீயும் நெறயப் போட்டே. ஆனா, தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் வாயவிட்டு,
‘சக்கரைப் பொங்கல் இன்னும் போடுடாப்பா… ரொம்ப ருசியாருக்கு’னு பல தடவை வாய்விட்டுக் கேட்டும்கூட
நீ காதுலே வாங்கிண்டு அவருக்குப் போடாமலேயே போனயா இல்லியா? எத்தன தடவ வாய்விட்டுக் கேட்டார்! போடலியே நீ!
பந்தி வஞ்சனை பண்ணிப்டியே…

இது தர்மமா?

ஒரு மஹா சாதுவ இப்டி அவமானப்படுத்திப்டியே…’’ _ மிகுந்த துக்கத்துடன் மௌனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்!
மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது. கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்புறமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் ஆசார்யாள். சாட்சாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.
பதினைந்து நிமிஷங்கள். மௌனம். பிறகு, கண்களைத் திறந்து, மௌனம் கலைந்தார் ஆசார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஆசார்யாளே நாராயணஸ்வாமி ஐயரைப் பார்த்து தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தோரு வயசாறது. தன்னோட பதினாறாவது வயசிலேருந்து எத்தனயோ சிவ க்ஷேத்ரங்கள்ளே ஸ்ரீருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேர்ப்பட்ட மகான் அவர். அவர்ட்ட நீ நடந்துண்ட விதம் மகா பாபமான கார்யம்… மஹா பாபமான கார்யம்!’’ _
மேலே பேச முடியவில்லை பெரியவாளால்.

கண் மூடி மௌனமாகி விட்டார்.

சற்றுப் பொறுத்து ஆசார்யாள் தொடர்ந்தார்:

‘‘நீ ‘பந்தி பேதம்’ பண்ணின காரிய மிருக்கே, அது கனபாடிகள் மனச ரொம்பவே பாதிச்சுடுத்து. அவர் என்ன காரியம் செஞ்சார் தெரியுமா நோக்கு? சொல்றேன் கேளு. நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூர் போகலே. மகாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ‘அஸ்மேத’ (பெரிய பிராகார) பிரதட்சிணம் மூணு தடவை பண்ணினார்.

Contd..../3
 

Contd.....3

நேரா மகாலிங்க ஸ்வாமிக்கு முன்னாலே போய் நின்னார்.
கை கூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்திச்சார் தெரியுமா?’’ மேலே பேச முடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்:
வெங்கடேச கனபாடிகள்

‘‘கண்ணுலேர்ந்து தாரையா நீர் வழிய, ‘அப்பா ஜோதி மகாலிங்கம்!
நா ஒன்னோட பரமபக்தன். பால்யத்லேர்ந்து எத்தனையோ தடவ ஒன் சந்நிதியிலே மஹாந்யாஸ ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன்.
நீ கேட்ருக்கே.

இப்போ நேக்கு எம்ப்ளத்தோரு வயசாறது.

மனசுலே பலமிருக்கு. வாக்குலே அந்த பலம் போயிடுத்துப்பா! இன்னிக்கு மத்யானம் சாப்படறச்சே நடந்தது, நோக்குத் தெரியாம இருக்காது.
அந்த சக்கரப் பொங்கல் ரொம்ப ரொம்ப ருசியா இருந்துதேனு ‘இன்னும் கொஞ்சம் போடுங்கோ’னு வெக்கத்த விட்டு அந்த மிராசுதார்கிட்டே பல தடவ கேட்டேன்.
அவர் காதுல விழுந்தும் விழாத மாதிரி நகர்ந்து போயிட்டார்.

நேக்கு சக்கரப் பொங்கல்னா உசுருங்கறது நோக்குதான் தெரியுமே. சபலப்பட்டுக் கேட்டும் அவர் போடலியேனு அப்போ ரொம்ப தாபப் பட்டேன்.
ஆனா, சாப்டு கையலம்பிண்டு வாசத் திண்ணைக்கு வந்து ஒக்காந்தப்புறம்தான், ‘இப்டியரு ஜிஹ்வா சபலம்’ (பதார்த்தத்தில் ஆசை) இந்த வயசுலே நமக்கு இருக்கலாமானு தோணித்து. அப்பா மகாலிங்கம்… இப்போ அதுக்காகத்தான் நோக்கு முன்னாடி வந்து நிக்கறேன்.

ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்லேர்ந்து ஒரு பிரதிக்ஞை பண்ணிக்கறேன். எல்லாரும் காசிக்குப் போனா, புடிச்ச பதார்த்தத்த விடுவா. காசியிலேயும் நீதான்… இங்கயும் நீதான். அதனால ஒனக்கு முன்னாலே,
‘இனிமே என் சரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சக்கர பொங்கலையோ அல்லது வேற எந்தத் தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன்! இது சத்யம்டாப்பா மகாலிங்கம்’னு வைராக்ய பிரமாணம் பண்ணிண்டு, ‘அப்பா ஜோதி மகாலிங்கம்!

நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். கனபாடிகள் கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர்.
ஊருக்குப் பொறப்டுட்டார்!

இப்போ சொல்லு… நீ பண்ணின காரியம் தர்மமா? மகாலிங்கஸ்வாமி ஒப்புத்துப்பாரா?’’

பெரியவா நிறுத்தினார். அப்போது மதியம் மூணு மணி.

‘‘நேக்கு இன்னிக்கு பிக்ஷை வேண்டாம்!’’ என்று சொல்லி விட்டார் ஸ்வாமிகள்.
அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை.

அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் பிரமித்து நின்றிருந்தார். அவருக்குப் பேச நா எழவில்லை. பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘நேற்றைய தினம் திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்றாளே, இது எப்படி?’ என்று அனைவரும் வியந்தனர்.
பெரியவா காலில் அப்படியே விழுந்தார் மிராசுதார்.
கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது:

‘‘பெரியவா! நா பண்ணது மகா பாவம்! அகம்பாவத்திலே அப்டி பண்ணிப்டேன்.
என்னை மன்னிச்சுடுங்கோ.

இனி, என் ஜன்மாவிலே இப்டி நடந்துக்கவே மாட்டேன். ‘மன்னிச்சுட்டேன்’னு சொல்லணும் பெரியவா!’’ என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார்.
ஆசார்யாள் வாய் திறக்கவில்லை. விடவில்லை மிராசுதார். ‘‘பிரார்த்திக்கி றேன் பெரியவா. நீங்க இந்த மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதத்தை ஸ்வீகரிச்சுக்கணும்… என்னை மன்னிச்சுடுங்கோ!’’ என்று பிரசாதத் தட்டை நோக்கிக் கைகளைக் காண்பித்தார்.

உடனே ஆசார்யாள், ‘‘இருக்கட்டும்… இருக்கட்டும். நேக்கு அந்த மகாலிங்க ஸ்வாமியே ப்ரசாத அநுக்ரஹம் பண்ணுவார்’’ என்று சொல்லி முடிப்பதற்குள், ‘‘நகருங்கோ… நகருங்கோ’’
என்று ஒரு குரல் கூட்டத்துக்கு வெளியே கேட் டது.

எல்லோரும் விலகி வழிவிட்டனர்.

தலையில் கட்டுக் குடுமி. பளிச்சென்று பஞ்ச கச்ச வேஷ்டி. இடுப்பில் பச்சைப் பட்டு வஸ்திரம். கழுத்தில் பெரிய ருத்ராட்ச மாலை. பட்டுத் துணியில் பத்திரப்படுத்தப்பட்ட பிரசாதத்தை ஒரு பித்தளைத் தட்டில் வைத்துக் கைகளில் பக்தியோடு ஏந்தியபடி சுமார் அறுபத்தைந்து வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர், பெரியவாளுக்கருகே வந்து சேர்ந்தார். பிரசாதத் தட்டை ஆசார்யாளுக்கு முன்பு பவ்யமாகச் சமர்ப்பித்து விட்டு,

‘‘எம் பேரு மகாலிங்கம். திருவிடமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய அர்ச்சகர். நேத்திக்கு ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராசுதார் நடத்தினார்.
இந்தூர்லே எங்க அக்காவ (சகோதரி) கொடுத்துருக்கு. ஆசார்யாளுக்கும் அந்த பிரசாதத்தைக் கொடுத்துட்டு, அவளையும் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். நமஸ்காரம் பண்ணிக்கிறேன். பெரியவா அநுக்ரஹிக்கணும்’’ என்று நமஸ்கரிக்கப் போனவரைத் தடுத்தார் ஸ்வாமிகள்.

‘‘நீங்களெல்லாம் சிவதீட்சை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்டாது’’ என்று சொன்ன பெரியவா, அவர் கொண்டு வந்த பிரசாதங்களை ஸ்வீகரித்துக் கொண்டு, சிவாச்சார்யாருக்கு மடத்து மரியாதை பண்ணச் சொன்னார். அதற்குள், சற்றுத் தள்ளி நின்றிருந்த மிராசுதாரைப் பார்த்துவிட்டார் சிவாச்சார்யார். ‘‘பெரியவா! இவர் தான் நேத்திக்கு அங்கே ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சவர். அவரே இங்கே வந்திருக்காரே!’’ என்று ஆச்சரியத்துடன் கூறிவிட்டு, உத்தரவு பெற்றுக் கொண்டு போயே விட்டார் அந்த மகாலிங்கம் சிவாச்சார்யார்.

ஆசார்யாளை மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து எழுந்து, கன்னத்தில் போட்டுக் கொண்ட மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர், ‘‘திரும்பத் திரும்பப்
பிரார்த்திக்கறேன் பெரியவா.

நா பண்ணினது ரொம்ப பாவ காரியம்தான்! இதுக்கு நீங்கதான் ஒரு பிராயச்சித்தம் சொல்லணும்’’ என்று மன்றாடினார்.
விருட்டென்று ஸ்வாமிகள் எழுந்து விட்டார்.

‘‘இதுக்கு பிராயச்சித்தம் நா சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள்தான் சொல்லணும்’’ என்றார்!
‘‘இந்தப் பாவி பண்ணின காரியத்துக்கு கனபாடிகள் பிராயச்சித்தம் சொல்வாரா பெரியவா?’’ என்று தாபத்தோடு கேட்டார் மிராசுதார்.
உடனே ஸ்வாமிகள் சற்று உரத்த குரலில், ‘‘நோக்கு ‘ப்ராப்தம்’ இருந்தா நிச்சயம் சொல்வார்!’’ என்று கூறிவிட்டு, விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டார். அதன் பிறகு பெரியவா வெளியே வரவே இல்லை.
சில மணி நேரம் காத்திருந்து பார்த்தார் மிராசுதார்.

பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராகப் புறப்பட்டு பஸ் பிடித்து செங்கல்பட்டு வந்து சேர்ந்தார்.

ரயிலைப் பிடித்து, அடுத்த நாள் காலை திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்.

அங்கே காவிரி ஆற்றுக்குச் சென்று ஸ்நானத்தை முடித்துக்கொண்டு, ஒரு வைராக்கியத்துடன் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூரை நோக்கி நடையைக் கட்டினார்.
எப்படியும் வேங்கடேச கன பாடிகளைப் பார்த்து, அவர் காலில் சாஷ் டாங்கமாக விழுந்து, மன்னிப்புக் கேட்டு, அவர் கூறும் ‘பிராயச்சித்த’த்தைப் பூர்த்தி செய்து, பாபவிமோசனம் பெற்றுவிட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வேக வேகமாக நடந்தார்.

தேப்பெருமாநல்லூர் அக்ரஹா ரத்தில் நுழைந்தார் மிராசுதார். எதிர்ப்பட்ட ஒருவரிடம் கன பாடிகள் பெயரைச் சொல்லி, அவர் க்ருஹம் எங்கே என விசாரித் தார். உடனே அவர், வெளியே பலர் கூட்டமாக நின்றிருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டி, ‘‘துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா?

அதான் வேங்கடேச கனபாடிகள் வீடு. இன்னிக்கு விடியக் காலம் தான் கனபாடிகள் திடீர்னு காலமா யிட்டார். ‘அநாயாஸேன’ மரணம் (சிரமங்கள் இல்லாத சுலப மரணம்). போய்ப் பார்த்துட்டு வாங்கோ’’ என்று சொல்லிப் புறப்பட்டார்.
இதைக் கேட்டவுடன் பிரமித்து நின்று விட்டார், நாராயணஸ்வாமி ஐயர். யாரோ அவர் தலையில் சம்மட்டி கொண்டு தாக்கியது போலிருந்தது.
நேற்று மடத்தில் ஆசார்யாள் உரத்த குரலில் ஆணித்தரமாகச் சொன்ன வாக்கியம் மீண்டும் அவர் காதுகளில் ஒலிப்பது போலிருந்தது: ‘நோக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்வார்!’
‘பிராப்தம் இல்லேங்கறது நேத்திக்கே பெரியவாளுக்கு தெரிஞ்சிருக்கு’ என்பது மிராசுதாருக்கு இப்போது புரிந்தது. கனபாடி கள் வீட்டுக்குச் சென்றார் மிராசுதார். மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கனபாடிகளின் பூத உடலுக்கு நமஸ்காரம் பண்ணினார். புறப்பட்டார்.

அதன் பிறகு, பல விதமான துன்பங்களுக்கு ஆளான மிராசுதார், ஓரிரு வருஷங்களுக்கு உள்ளாகவே தன் சொத்துகளையெல்லாம் இழக்க நேரிட்டது. வடக்கே சென்று பல சிவாலயங்களிலே திருமடப்பள்ளி கைங் கரியம் பண்ணிவிட்டு, காசி க்ஷேத்ரத்திலே காலகதி அடைந்தார்.....

Source: WhastApp

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!

காஞ்சி மாமுனிவர் பெரியவா பிறந்தநாள் இன்று மே 20
*********
தமிழ்நாட்டின் தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரத்தில் மே 20, 1894ஆம் ஆண்டு அனுராதா விண்மீனில் கன்னட இசுமார்த்த பிராமணக் குடும்பத்தில் பிறந்தார்.

பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சுவாமிநாதன் என்பதாகும். இவரது தந்தை சுப்பிரமணிய சாத்திரி மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.

சுவாமிநாதன் தனது துவக்கக் கல்வியை திண்டிவனத்தில் உள்ள ஆற்காடு அமெரிக்கன் மிசன் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார்.
மகா பெரியவா...
- இன்று உலகமே உச்சரிக்கிற உன்னத மந்திரமாகி விட்டது.

காஞ்சி மகா ஸ்வாமிகள், காஞ்சி பெரியவா, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சங்கராச்சார்யர், காஞ்சியின் 68-வது பீடாதிபதி, ஜகத்குரு - இப்படி எத்தனையோ திருநாமங்கள் இந்த மகானுக்கு உண்டு என்றாலும், ‘மகா பெரியவா’ மட்டும் சட்டென்று மனசுக்குள் உட்கார்ந்து விடுகிறது.

‘பெரியவா’ என்ற பதமே வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த நிலையில் உள்ளவர்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல். அதிலும் இவரோ ‘மகா பெரியவா’...
ஆஹா! யாருக்குக் கிடைக்கும் இந்த அதி உன்னத பட்டம்!

1894-ஆம் வருடம் மே மாதம் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ நட்சத்திர தினத்தில் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரம் நகரத்தில் நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் காஞ்சி மகா பெரியவாளின் அவதாரம் நிகழ்ந்தது.

வசுதேவருக்கும் தேவகிக்கும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு பெற்றோராகும் பாக்கியம் எப்படிக் கிடைத்ததோ, அதுபோல் சுப்ரமண்ய சாஸ்திரிகளுக்கும், மகாலட்சுமி அம்மையாருக்கும் இந்த சுவாமிநாதனுக்குப் பெற்றோராகும் பாக்கியம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம்!

மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம (துவக்க கால) பெயர் சுவாமிநாதன்.

வாழ்க்கை வரலாறு என்பது புள்ளி விவரம்.
வாழ்ந்த விதம் என்பது நீங்கா நினைவு. அனுபவம். பாடம்.
எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். வளர்கிறார்கள். இறக்கிறார்கள்.
பிறக்கின்ற அத்தனை பேரும் செய்தி ஆகி விடுவதில்லை; இறக்கின்ற அத்தனை பேரும் செய்தி ஆகி விடுவதில்லை.
பிறக்கும்போது செய்தி ஆகிறோமோ இல்லையோ, இறக்கும்போது செய்தி ஆக வேண்டும். அதுவும் நல்ல விதமாக அந்த செய்தி பதியப்பட வேண்டும்.
‘அடடா... எப்பேர்ப்பட்ட நல்ல மனிதர்... இவர் மறைந்து போனாரே...’ என்று இந்த உலகம் கண்ணீர் விட்டால், அவரது நினைவு காலாகாலத்துக்கும் மக்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.
மகா பெரியவா - எத்தனை ஆண்டுகள் போனாலும், எத்தனை யுகங்கள் போனாலும் பக்தகோடிகளின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பார்.
வாழுகிற வாழ்க்கைதான் ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது.
.............................
மகா பெரியவாளைப் பார்த்து வியக்காத இந்திய அரசியல்வாதிகள் - ஏன் உலகத் தலைவர்களே இல்லை எனலாம்.
தனது இறுதிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜர் மகா பெரியவாளைப் பார்க்க விரும்பி கலவைக்கு வந்து மகானுடன் உரையாடி இருக்கிறார்.
காமராஜரின் அரசியல் நேர்மையை அறிந்த மகா பெரியவா, ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டிருக்கிறார். ‘மிஸ்டர் க்ளீன்’ என்று பெயர் பெற்றிருந்த காமராஜர், ‘தமிழ்நாடு சுபிட்சமா இருக்கணும்... அது போதும் சாமீ’ என்று மகா பெரியவாளிடம் நாட்டு மக்களை முன்னிறுத்தி வரம் கேட்டாராம்.

‘கடவுள் மறுப்புக் கொள்கை’ உடையவர்களாலும் பாராட்டப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மகான் ஒருவர் உண்டு என்றால், அது மகா பெரியவாதான்.
காரணம் - எளிமை, நேர்மை, தூய்மை, பரோபகாரம், மனிதநேயம் - இப்படிப்பட்ட நற்குணங்களை மட்டுமே தனது சொத்தாகக் கடைசி வரை வைத்திருந்தவர் மகா பெரியவா.
கவியரசர் கண்ணதாசனை அறியாதோர் எவரும் இருக்க முடியாது. துவக்க காலத்தில் ஒரு நாத்திகராக இருந்து, மேடைக்கு மேடை... அவ்வளவு ஏன்? காஞ்சிபுரத்திலேயே சங்கர மடத்துக்கு எதிரில் மேடை போட்டு, காஞ்சி ஸ்ரீமடத்தையும், மகா பெரியவாளையும் பல முறை திட்டித் தீர்த்தவர்.

அப்பேர்ப்பட்ட ‘அக்மார்க்’ நாத்திகரான கண்ணதாசன் கொடூரமான ஒரு கார் விபத்தில் உருக் குலைந்தார். அனைவருக்கும் இரங்கும் ஆபத்பாந்தவனான காஞ்சி மகா பெரியவாளின் பரிபூரண அருளாலும் ஆசியாலும் உயிர் மீண்டார்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், நேராகக் காஞ்சி போய் மகா பெரியவாளை கண்ணீர் மல்க வணங்கினார் கண்ணதாசன். பெரியவாளின் ஆசியுடன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ பிறந்தது.
காஞ்சி மகா பெரியவாளைப் பற்றிப் பின்னாளில் கண்ணதாசன் எழுதினார்:

‘அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் வழங்கும் பேரொளி. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.
செஞ்சிக் கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்குராஜா அல்ல. காவி கட்டிய எல்லோரும் மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்து சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும்.’

பக்தியின் பாதைக்கு முழுக்கத் திரும்பிய கண்ணதாசனின் உணர்ச்சிமிகு வரிகள் இவை.

‘இந்த மகானை முதல் முறையாக நான் காஞ்சியில் பார்த்தபோது இப்படியும் ஒரு எளிய துறவியா என்று வியந்தேன். இவரைப் பார்த்த பின் நானும் ஒரு துறவி என்று சொல்லவே வெட்கப்பட்டேன். பேச்சில் கலப்படம் இல்லாத உண்மை, குரலில் தெறிக்கின்ற ஞானம், தவத்தின்போது தெரிகின்ற அமைதி... யப்பப்பா’ என்று வியக்கிறார் புத்த துறவி தலாய்லாமா.
உலகில் வசிக்கின்ற எல்லோரையும் ஈர்த்த ஒரே விஷயம் - மகா பெரியவா வாழ்ந்த எளிமையான வாழ்க்கைதான்!
உருவத்தில் குள்ளம். உள்ளத்தில் உயரம்.

பணத்தைக் கையால் தொட்டதில்லை.

தொலைபேசி பயன்படுத்தியதில்லை.

உணவில் பற்றில்லை.

உடையில் நாட்டமில்லை.

சொத்து சுகத்தில் கவனமில்லை.

சொந்த பந்தங்களுக்கு சலுகை இல்லை.

இவரிடம் ஆசி பெற வருபவர்களில் கோடீஸ்வரர்கள் பலரும் உண்டு. ஆனால், இவரோ கட்டாந்தரையில், மாட்டுத் தொழுவத்தில், ஏதோ ஒரு திண்ணையில் யாரும் அறியாதவாறு சாதாரணமாக சுருண்டு படுத்திருப்பார்.
பாரத தேசம் முழுக்க மூன்று முறை யாத்திரை செய்தவர். கார் போன்ற சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தியதில்லை.
18 மொழிகள் தெரிந்தவர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ஒரு பார்வையாளராகச் சென்று விமானியே வியக்கும்படி பல சந்தேகங்களை எழுப்பி, அதற்கு உரிய விளக்கமும் தந்தவர்.
விசாகப்பட்டினம் சென்றபோது கப்பல் கட்டும் தொழிலில் உள்ளவர்களிடம் அதைப் பற்றி வெகு சுவாரஸ்யமாகப் பேசி அசத்தியவர்.
மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்துக்குச் சென்று அச்சுத் துறை சம்பந்தமான பல வியக்கும் தகவல்களைச் சொன்னவர்.
ஒரு விஞ்ஞானியிடம் பேசும்போது, ‘இவர் எங்கே போய் இத்தனை விஷயங்களைக் கற்றார்?’ என்று அவரே மூக்கில் விரல் வைக்கும்படியான உரையாடல்...
ஆக, மொத்தத்தில் மகா பெரியவா - நடமாடும் என்சைக்ளோபீடியா!
....................................
1994-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.58 மணிக்கு பிருந்தாவனஸ்தர் (முக்தி) ஆனார் மகா பெரியவா.


Source: WhastApp

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 



பெரியவா சரணம் !!

பெரியவாள்,"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன். ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!
("நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை!.மடத்து ஜாகையிலே எல்லாத்தையும்சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச்சாக்கிலே போட்டுக் கட்டினோம்.--விச்வநாதய்யர்)

கட்டுரையாளர்; ரா.கணபதி.
புத்தகம்-மஹா பெரியவாள் விருந்து.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

பெரியவாள் காசி யாத்திரை (1933) செல்லும் வழியில்ஒரு ஆந்திர குக்கிராமம் ஒன்றில் முகாமிட்டபோது ஸ்ரீஸி.எஸ்,விக்குப் பொத்துக்கொண்டு வந்து விட்டதாம்.
"எடுத்துச் செலவழிப்பதற்கு நம் மடத்தில் என்ன கொட்டியாகிடக்கிறதுஇந்தத்தரித்திரம்பிடித்தஊரில்இத்தனை யானையையும்,ஒட்டையையும்,
ஜனங்களையும் கட்டித்தீனி போடுவதென்றால் எப்படி?" என்கிற ரீதியில்பெரியவாள் காதுபடப் பொரிந்து தள்ளி விட்டாராம்.
பெரியவாள் அவரைக் கூப்பிட்டார். சாந்தமாக " நீ ஏன்பதட்டப்படறே? நாம நல்ல காரியத்தை உத்தேசிச்சுப்பொறப்பட்டிருக்கோம்.நம்ப லக்ஷ்யம் நன்னாயிருந்தா அம்பாள் கை கொடுக்காமப் போவாளா? அவதானே எல்லாருக்கும் படியளக்கிறா? நமக்கும் நிறைய அளப்பா"என்றாராம்.

மறுநாள், விச்வநாதய்யரால் நம்பவே முடியவில்லை! அந்தக் கிராமத்தில் ஏதாவது திருவிழா நடந்ததா, அல்லது சந்தை கூடிற்றா, அல்லது இப்படி எதுவுமே நடக்காமல் பெரியவாளின் சக்தி மட்டும்தான் வேலை செய்ததா என்று அவருக்குச் சொல்ல தெரியவில்லை. ஆனால் சொல்லத் தெரிந்தது,

மறுநாள் காலையிலிருந்து அந்த நிர்மாநுஷ்யக் குக்கிராமத்தில் புற்றீசலாகப்பக்தர்கள் பெரியவாளை வழிபட வந்து கொண்டேயிருந்ததுதான்.
வந்தது மட்டும் இல்லை.அக்காலத்தில் வெள்ளி நாணயம்வழங்கி வந்ததல்லவா? வந்த பக்தர்கள் யாவரும் இப்படி நாணயங்களைக் கொண்டு வந்து கொட்டினார்கள்.

"நான் மடத்திலே இருந்திருக்கிற இந்த நாற்பது வருஷமா(இதை ஸி.எஸ்,வி.என்னிடம் கூறியது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு-கட்டுரை-1960-பின் பாதியில்) அந்த மாதிரி ஒத்தை ஒத்தை ரூபாயா வந்து குன்று மாதிரி குவிஞ்சதேயில்லை!.மடத்து ஜாகையிலே எல்லாத்தையும்சேத்துக் குவிச்சு எண்ணிட்டுப் படியாலே எடுத்து எடுத்துச்சாக்கிலே போட்டுக் கட்டினோம்.
பெரியவாள்,"அம்பாள்,'படி' அளப்பாள்'னு சொன்னேன்.ஒனக்கு நம்பிக்கைப் படலை. இப்ப நீயே 'படியாலே' அளந்து அளந்து கொட்டறே, பாத்தியா?"-ன்னா!.

"பெரியவாளுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. பெரியவா செய்ய முடியாதது எதுவும் இல்லை. இருந்தாலும் 'எங்களைக் கூட வெச்சுண்டு ஆட்டம் போட்டிருக்கா

Source: Source: Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya Public Group / Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 

பெரியவா சரணம் !!
[h=3]நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே!!!பெரியவாவின் கதை.[/h]ஒரு ஜமீன்தார் பரமாசார்யாளோட பரம பக்தர்னே சொல்லலாம்.எத்தனையோ பாழடைஞ்சகோயில்களுக்கெல்லாம் கைங்கர்யம் பண்ணினவர்.
எதிர்பாராவிதமாக ஒரு சோதனை வந்து பெரிய அளவுல நஷ்டம் ஏற்பட்டு மனசு உடைஞ்சு போயிட்டார்.தெய்வம் கைவிட்டுடுத்தேன்னு ரொம்ப வருத்தப்பட்ட அவர்
சுவாமியைக் கும்பிடறதைக்கூட வெறுத்து நிறுத்திட்டார். அந்த சமயத்துலதான் பெரியவா கும்பகோணம் பக்கத்துலமுகாமிட்டிருந்தா.அவர் அங்கே வந்திருக்கிற தகவல்
தெரிஞ்சதும், மகாபெரியவா கிட்டேயே தன்னோட நியாயத்தைக் கேட்டுடுவோம்னு உடனே பெரியவாளைப் பார்க்க வந்துட்டார். வெறும் கையோட வந்திருந்ததுலயே, விரக்தி பட்டவர்த்தனமா
தெரிஞ்சுது.வழக்கம்போல இல்லாம ஏனோதானோன்னு தான் நமஸ்காரம் செஞ்சார். ஆனா ஆசார்யா அதை கவனிச்ச மாதிரி காட்டிக்காம," ஏதோ கேட்கணும்னு வந்திருக்கறாப்புல
தெரியறதே! என்ன கேட்கணும் ஒனக்கு? அப்படிங்கற மாதிரி அந்த ஜமீனதாரோட முகத்தைப் பார்த்தார் "பெரியவா,நான் பண்ணாத தர்மம் இல்லை.செய்யாத திருப்பணி
இல்லை. கும்பிடாத சாமி இல்லை.அப்படி இருக்கறச்சே இந்த மாதிரி ஒரு சோதனையை தெய்வம் எனக்குக் குடுத்திருக்கே, அப்புறம் எதுக்காக நான் அதைக் கும்பிடணும்? மேலும் சில
வார்த்தைகளை நெருப்பு மாதிரி கக்கினார். அமைதியா கேட்டுண்ட ஆசார்யா,"நீ இப்ப ரொம்ப விரக்தில இருக்கே.உனக்கு அட்வைஸ் பண்ணினா எடுபடாது. அதனால

ஒரு கதை சொல்றேன் அப்படின்னார்.

உப்பு விக்கறவனுக்கு,உப்புக் கொறவன்னு பேர்.அப்படி ஒரு உப்புக் கொறவன் இருந்தான்.காமாட்சியோட பரம பக்தன்அவன்.கார்த்தால கண்ணை விழிச்சு எழுந்திருக்கறச்சயே
காமாக்ஷினுட்டுதான் எழுந்திருப்பான்.தூங்கப் போறச்சேயும் அம்பாள் பேரைச் சொல்லிட்டுதான் படுத்துக்குவான். உப்பு மூட்டைகளை கழுதை மேல் ஏத்தி சந்தை நடக்கற
எடத்துக்கு கொண்டு வருவான்.பெரும்பாலும் இவன் கிட்டேயே எல்லாருமேவாங்குவதால் கொஞ்சம் நிறையவே பணம் சேரும் அந்தக் காலத்துல இப்போ இருக்கிற மாதிரி பாதை
வசதியெல்லாம் கெடையாது. ஒத்தையடிப் பாதைதான். அதனால் திருடாளும் நிறைய இருந்தா. ஒரு நாள் சந்தை நேரம் ஆரம்பிச்சுது. சரியா அதே சமயத்துல
திடீர்னு இருட்டிண்ட வானம் ஒரு க்ஷணம் கூட தாமதிக்காம ஜோன்னு வர்ஷிச்சுது. உப்புக் கொறவனும் பரபரப்பா உப்புமூட்டைகளை எடுத்து நகர்த்திவைக்க நினைச்சான். ஆனா
பிரயோஜனம் இல்லாதபடிக்கு மொத்த உப்பும் மழைத் தண்ணீர் பட்டு கரைஞ்சு ஓடித்து.அவ்வளவுதான்,அப்படியே விக்கிச்சுப் போய் நின்னான் அவன்,லாபம் இல்லாவிட்டாலும்
கூட முதலுக்கேன்னா மோசம் வந்துடுத்து.அவனோட விரக்தி அப்படியே கோபமா மாறித்து.அது அப்படியே காமாக்ஷிமேல திரும்பித்து.

"காமாக்ஷி காமாக்ஷின்னு ஒன்னைத்தானே கும்பிட்டேன். இப்படி மொத்தத்தையும் நஷ்டப்படுத்திட்டயே. பக்தன் காயப்போட்ட நெல் நனையக் கூடாதுங்கறதுக்காக
வேலியெல்லாம் கட்டினார் பரமேஸ்வரன் என்று சொல்வாளே அதெல்லாம் கூட பொய்யாத்தான் இருக்கும்.ஏன்னா தாயாரான உனக்கே பக்தன் மேல் இரக்கம் இல்லாதப்போ உன்னோட
ஆம்படையானுக்கு மட்டும் எப்படி இருக்கும்? அதனால இனிமே எந்த தெய்வத்தையும் நான் கும்பிடப்போறதில்லை!"
அப்படின்னு வெறுப்பா கத்தினான். கழுதை மேல வெத்து சாக்கைப் போட்டு,வெறுங்கையோட பொறப்பட்டான்.அப்படியே போயிண்டு இருந்தவன்,

"டேய் பிடிங்கடா அவனை..அவன் கையில் இருக்கிற பணத்தை பறிங்கடா..!" அப்படின்னு ஒரு பெருங்குரல் (திருடன்) கேட்டதும் அப்படியே நடுங்கிப்போய் நின்னான்.அவா கையில் இருந்த
அருவா அந்த இருட்டுலயும் மின்னித்து. நடுங்கின கொறவன் நம்ம உசுரு நம்மளோடது இல்லைன்னு தோணித்து அவனுக்கு. "மரியாதையா பணத்தை எல்லாம் குடுடா"ன்னு கேட்டுண்டே,
அவன் மடியில,இடுப்புல,கழுதை மேலே இருந்த சாக்குன்னு ஒரு இடம் விடாம துழாவினான் ஒருத்தன். ஊஹும் எங்கேயும் ஒரு தம்பிடிகூட இல்லை.

"ஏய் எங்கேடா ஒளிச்சு வைச்சிருக்கே பணத்தை"

"பணமா? ஏது பணம்? அதான் கொண்டுபோன உப்பு மூட்டை மொத்தமும் மழையில் கரைஞ்சு ஓடிடுத்தே...அப்புறம் ஏது வியாபாரம்,ஏது காசு? படபடப்பா சொன்னான் உப்புக் கொறவன்."இன்னிக்கு நீ தப்பிக்கணும்னு சாமி நினைச்சுருக்கு. அதனாலபிழைச்சே போ!" அப்படின்னு சொல்லிட்டு ஓடி மறைஞ்சா திருடர்கள்.

மழை விட்டு வானம் தெளியத் தெளிய கொறவனின் மனசுக்குள்ளேயும் தெளிவு வந்தது.இன்னிக்கு மட்டும் மழை பெய்யாம இருந்து உப்பு வித்த காசோட நாம வந்திருந்தா,உசுரு
தப்பியிருக்க முடியாமாங்கறது சந்தேகம்தான்.நாம கும்பிடற காமாக்ஷிதான் நம்பளைக் காப்பாத்தி இருக்குன்னு புரிஞ்சுண்ட அவன். அப்படியே அம்பாள் கிட்டே தன்னை மன்னிச்சுக்கச்
சொல்லி வேண்டிண்டான்.

மகாபெரியவா கதையைச் சொல்லி முடிச்சதுமே ஜமீன்தாருக்கு தன்னோட தவறு என்னங்கறது புரிஞ்சுது.தனக்கு ஏதோ ஒரு காரணத்துனாலதான் இப்படி கஷ்டம் வந்திருக்குன்னு புரிஞ்சு
பெரியவாளை நமஸ்காரம் பண்ண்ணிட்டு பிரசாதம் வாங்கிண்டு புறப்பட்டார்.

கொஞ்சகாலம் கழிச்சு அந்த ஜமீன்தார் மறுபடியும் பெரியவாளை தரிசிக்க வந்தார்."பெரியவா நமஸ்காரம். போன தரம் நான் வர்றச்சே,என்னோட சொத்து மொத்தமும் பறிபோகப்போறது
மாதிரியான சூழல் இருந்தது. ஆனா,இன்னிக்கு அந்த சொத்தெல்லாம் எனக்குப் பாரம்பரியமா வந்ததுங்கறதுக்கான விவரங்கள் எல்லாம் என்னோட முன்னோர்கள் திருப்பணி
பண்ணின ஒரு கோயில்ல இருந்த பிரமாணப் பத்திரங்கள் மூலமா தெரிய வந்துடுத்து.அதனால எல்லாமும் எனக்கே திரும்பக் கிடைச்சுடுத்து. விரக்தியில் பேசி விட்டேன்.உங்களை
சாட்சாத் பரமேஸ்வரனாவே நினைச்சுண்டு நமஸ்காரம் பண்ணறேன். என்னை மன்னிச்சுடுங்கோ" உப்பு கரைஞ்சுபோன கதையை ஆசார்யா அன்னிக்கு சொன்னதே
உன்னோட கஷ்டமும் ஒருநாள் மொத்தமா கரைஞ்சுபோகும்னு உணர்த்தத்தானேன்னு தோணித்து எல்லாருக்கும்.

நன்றி ; -- ஆனந்த விகடன்.

Source: Face book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 



பெரியவா சரணம் !!
Experiences with Maha Periyava: Ways of the World

When Sivasankaran, a long-standing devotee of SriMatham came for darshan one day, an attendant treated him very harshly. Sivasankaran was very upset. He felt that he had been insulted. He was not inclined to run to Sri Maha Periyava and complain. He had however an opportunity to talk to Periyava.

Indirectly, but intending to unburden his heart, he said with tact, as if he were injecting a needle into a banana fruit, "Some attendants at the Matham are pronouncedly bad. They commit wrong. They covet monetary gifts. I wonder how Periyava manages with such people around him".

Periyava was full of laughter. His expression seemed to suggest, "What you say is not new to me".

He then began to speak,

"Consider a factory where thousands work. Is everyone skilled and straightforward? Lakhs of people are working in Government offices. Everyone does not have the same level of commitment. Many do not work properly. Or if they do, they do their work imperfectly. It is not possible to send them home.

The Government has its apex body functioning. That is important. It is enough if this apex body is alright. That much is enough. Only that much is possible. The SriMatham is an empire in itself. Many kinds of attendants are necessarily to be found here...... Do you know Parameshwara?

Sivasankaran knew five or six gentlemen of the name of Parameswara. He blinked, not knowing which of them Periyava was referring to.

"I was referring to Parameshwara, the Lord of Kailasha. He has a snake around his neck. He holds fire in his hands. A malevolent deity is kept under control beneath his feet. His retinue consists of corpses and ghosts. He roams all over the world taking all these along with him and performs his dance. If the snake were to be let loose it will go all over the place enjoying great freedom, frighten and bite everyone. If fire is uncontrolled, it will destroy settlements and wilderness alike. If malevolent forces are allowed to go about freely, they will attack anyone they encounter. As for corpses and ghosts, one need hardly say anything (about what they may do). Parameswara's glory lies in keeping all these evil forces with him".

Sivasankaran stood in shocked silence. He had expected that Periyava would quieten him with some placatory words. But Periyava's reply sparkled with the perception of the ways of the world and was given in such unambiguous terms.

It is not Sivasankaran alone, but all devotees must attain greater refinement.
Narrated by SriMatham Balu Mama

Source: Maha Periyaval Darisana Anubhavangal
Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 
பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: Malevolent Forces destroyed

A malevolent force, invisible of course, possessed a woman and tortured her. If she sat down, it would press down upon her shoulders. If she attempted to run, it would follow her chasing her all the way. At night, the lady could not sleep. It would slap the lady and wake her up, shouting into her ears. The lady would sit up screaming in fear. No exorcist or wizard could relieve the lady from the grips of the spirit.

Ramanathan, the lady's elder brother came to Sri Maha Periyava and prayed for His grace. Periyava gave him sacred ash and kumkum. No matter how hard everyone tried, it was not possible to apply the sacred ash on the lady's forehead. She would not let anyone approach her. She would take to her heels the moment someone attempted to reach her. Ramanathan came back to Periyava.
Periyava gave an esoteric design that had been carved on a tiny strip of metal and placed inside an amulet. Somehow Ramanathan managed to tie it around the lady's neck. From that very moment the lady recovered speedily and came back to normal.

She said joyously, "I feel as if a huge mountain that was pressing upon my head has been removed". Of course, the sequel to the story is that the lady lived a healthy and happy married life and was blessed with children.

Shiva is the lord of ghosts and ghouls. So too our Acharya!

Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb


Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 
பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: Anjalai, Is Your Second Son in Delhi?

The Sakshat Sarveswarar Himself, who is omnipresent as ParaBrahmam, and is showering
‘Anugraham’ on the humanity, is blessing us in the humble ‘Avatar’ of Sri Sri Maha Periyava’, containing within Him, the greatness of Sage SukaBrahmam.

There are many incidents where this great compassion has voluntarily gone and blessed the poor people.

Anjalai worked as a cleaning lady for her daily bread. Poverty had been oppressing her endlessly. She had two children. In the year 1984, the ‘Walking God’ had travelled the length and breadth of Bharath sanctifying the land, and on His return was passing through the village where Anjalai was living.

Her family environment was such that she had never known or realised the greatness of the Mahan. She came to the place where Sri Periyava had His camp, just with the idea of seeing the ‘Samiyar’ (sage) who had come down to her village.

She had taken her two sons also along with her. There was not much crowd at that time with Periyava, so that she could have His darshan without any difficulty.

As she could not be called a ‘devotee’ of Sri Periyava, she came there only as a visitor, saw Him and was about to leave the place with her children.

Sri Sri Sri Periyava asked His attendant, “Ask her, her name!”

She told Him giving great respect that her name was Anjalai, was working as a cleaning lady, and had two sons and started to leave the place again.

“Call her”, said the ‘walking’ God.

He asked her when she came back and stood before Him, “ Your name is Anjalai. Then, You are not afraid of anything?” (In Tamil language “Anjalai’ means ‘Fearless’).

Anjalai was overwhelmed by the Mahan’s look of compassion and was slowly becoming devoted to Him.

Sri Periyava asked her again, “Did you say that your second son was working in Delhi?”. She could only laugh in spite of her pathetic state, poverty staring at her life. Her second son was standing by her side, holding her sari, wearing a torn half trouser and a dirty shirt, and a running nose. Anjalai was just standing there, not knowing what to answer, but Sri Periyava did not bother about it and blessed her.

From that day onwards, Anjalai had the ‘Bhagyam’ of always thinking of Sri Mahan. Without bothering about His strange question about her second son, and not trying to find any inner meaning for that, devotion to Periyava was the foremost thing on her mind.

She would complete her bath and come out of her small hut daily and perform ‘Arathi’ (showing of camphor) towards the sky. Though she thought she was not qualified to possess even a photo of The Mahan in her house, she had the noble thought of His omnipresence, and so performed ‘Arathi’ towards the sky assured that He is everywhere, which no one else had thought of.

Sri Sri Sri Periyava seemed to have blessed her with a strong mind to face any problem she met with in her life, by His question, ‘You are not afraid of anything?’.

Anjalai faced all her problems without any fear whatsoever and after twenty five years, The year now was 2008 and when Sri Periyava’s Aradhanai procession came to her village, was she happy !

Anjalai was telling others who were accompanying the ‘Rath Yatra’ that “Periyavar’ has not left us. Only those who had not understood Him would say that way (that He has left us). I am very certain that He has come here now in that ‘Rath Yatra’.”

There was a young man of about twenty seven, by her side carrying a one-year old child. He had come to his village for offering the child’s hair to the village deity. The young man was Anjalai’s second son and the child, her grandson.

“I am working as an officer in the Ministry of Human Resources and Development in Delhi. We are just leaving for the temple of our family deity to offer my son’s hair to her.”. The second son of Anjalai, whom Sri Periyava had talked about (twenty five years ago) was telling others.

He was blessed on that day itself when the Mahan uttered these words, to go and work in Delhi.

Everyone there was thrilled. Anjalai just stood there, with folded hands, tears running down her cheeks, having fully realised the omniscient Sri Periyava, who had Himself come there now as her family deity.

Source: Sri Periyava Mahimai Newsletter July 31 2009

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 

பெரியவா சரணம் !!

பெரியவா தேடி சென்ற பாட்டி !!!

ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து“சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”
என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

“என்னது இது?”

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

“குடுத்துட்டோம். பெரியவா”

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.
ஆம். தவறுதானே?

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

“நீ எங்கே குடியிருக்கே?”

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”

“இல்லை……….”

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”

“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”
பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.
பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர்
மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.
இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 
பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: You Build the Temple


I was in Tiruvannamalai in my young age. Our house was near the foothill. One Maami used to teach us song and dance and would ask us to sing before Ramana Maharshi. We would sing and dance before him, going in circles. He would never talk, only have a look with his eyes.

After I was married, a relative told me, "Have you seen Kumbakonam Swamy, Maha tapasvi, go and have darshan once." Periyaval at that time had the name 'Kumbakonam Swamy'. My husband and I came to Kanchipuram to have darshan, but we were told that Periyava had gone out somewhere. We went to three or four nearby villages, but could not see Him in those places. I was yearning for His darshan.


Only when Periyava had come to Madras, we could have his darshan. At the first sight of him I thought, "He looks typically like Ramana Maharshi. What tejas in those eyes!" Periyava was keenly looking at me.


Since then, we have been having darshan of Periyava for the last 50 years. If my husband had work, we would come on a Sunday and return the same day after darshan. One Sunday, when Periyava was in Sivasthanam, we came for His darshan. Some sumangalis (women who have their husbands alive) were talking amongst themselves loudly and happily. When inquired, one Maami said, "Periyava asks us to build a temple. Will you join?" We gave our immediate consent.


We prostrated to Periyava and told Him about the news. Periyava asked Rajappa Gurukkal who was near Him to show us the Sivalingams. Of the four Lingams we had a look, the Sevilimedu Lingam lingered in our minds. It was a large Lingam. When we said to Periyava, "We had a look at four Lingams", He immediately said, "You build the temple for the Sevilimedu Lingam." Whatever way He came to know of what I had in mind? Later when we started with the arrangements, He asked us to have one Sri Nagarajan of Kanchipuram for assisting us. My husband would come every Saturday and Sunday and buy the things required for building the temple.


Suddenly one day Periyava started on a yatra. I was very eager that Periyava should perform in the kumbhabhishekha of our temple. But we were told that Periyava was leaving for the North and it was not certain when He would return.


Sri Muthiah Stapati carved the Avudayar (the base of a Lingam), but we built only the sanctum sanctorum. Since Periyava had gone on yatra we could not perform the kumbhabhishekham.

I would daily go to the Shiva temple (BharatIswarar temple), light a lamp and go round nine times with the prayers that Periyava should come for our kumbhabhishekham. Meantime we visited the North and had darshan of Periyava. He was at that time in Mahagaon. When He saw us He said, "Conduct the temple kumbhabhishekham." I parayed to Him, "Only Periyava should come and do the kumbhabhishekham." He smiled and gave me the directions, "You visit all the doorsteps here, get some rice and wheat telling the householders that they are for my sake and send them to wherever I happen to stay." Then He looked at my husband and said, "You can't come yourself. Send them through Joshi." I was doing as ordered without break.

Because of everyone's prayer, Periyava came to Kanchi. On the day He reached there, we went to Him with a proposed kumbhabhishekham date. He gave His anugraha. When we came out, we were told that there was another kumbhabhishekham in Sivasthanam and that Periyavaa would visit only that and not ours. We went back and told this news to Periyava, but He asked us to conduct it on the same date.


The kumbhabhishekham day came. Ours was a simple ceremony with an expense of 6,000 to 7,000 rupees. They were doing it with a large sum of one lakh rupees. My mind was in a flutter that He should come. I was doing the smarana the whole night, constantly repeating to myself the words, 'Periyava should come', 'Periyava should come'. Before going to the temple in the morning when I went to have His darshan, He told me of everything I was thinking the whole of previous night. I was in a spiritual tingle.


Just seven people were there in our kumbhabhishekham. When we were almost done, and was about to pour the water in the holy pot over Swami, a boy came up running and cried, "Periyava is coming!" He literally came running, His feet going red in the hot sun of the Chitra month, took over the pot from us and did the abhishekam Himself. With Periyava, about a thousand people had gathered in our place. With many cars and vans on the queue, our kumbhabhishekham took place in a very grand manner--what grace we had! Even when writing this, my eyes pour water. He named the Swami Kailasa Nathar and did His bhiksha inside the sanctum and showed me 'I am the God!'


Since then, we used to do abhishekam for Kailasa Nathar and submit the prasada to Him. If one of us did not make it to Him, he would inquire the reason therefore.


Whenever I had mental suffering, He would come in my dream and say, "Why do you grieve when I am with you here?" Once when He came to Neyveli I was made a volunteer for the time of His pujas. One day I was standing alone. He called me and asked, "What would you want?" I did not know what to reply to that. I just thought that it was enough if I could have a perennial look at Him. He gave me His anugraha with a gesture of His hand and gave me kumkumam. My friends told me that I missed a good chance and should have asked to be blessed with a child.

It was ten years since I was married. In this way, Periyava used to give me anugraha of what I had in mind, but I wouldn't be able to orally ask Him anything when I stood before Him. He would of course know everything about me.

In the meantime, Periyava asked the then Minister Hon. Veerappan to arrange for the structural extension our temple. A committee was formed and the kumbhabhishekham was supposed to be held by a notable in the place. When the kumbhabhishekham date was fixed, I went to Periyava and asked what I should do about it. He said "Do nothing; just continue with it." Thinking why Periyava said like that I went back to my place. The kumbhabhishekham was on the 5th day of the Thai month. The Sankranti festival was over and on the day of Kanu we were sitting after our meals. A SriMatham assistant came and said, "Pudu Periyavaa wants you two to come immediately." When we rushed to meet him, he said, "Only you are doing the kumbhabhishekham. Come tomorrow. Get the anugraha of Periyaval and go." We were very happy. My husband said that it was not possible for him to withdraw the money at that time. He said he would make arrangements for the money and asked us to come on the morrow. He also said, "Periyava's health is not very good. Do not disturb Him. Myself and Bala Periyavaa will come and perform your kumbhabhishekham."


On the day of the kumbhabhishekham, we prostrated to Periyaval and took leave. I just thought inside my mind. 'When we built a small room, Periyava came to bless us. Now when this temple has been extended Periyava is not able to come.'


What a wonder! The Periyavaas came and performed the kumbhabhishekham as assured and gave us prasadam. The crowd dispersed. When we just thought of taking some prasadam as food, Maha Periyava came to the temple at that advanced age. I was apprehensive that Pudu Periyavaa might chide me, but nothing of that sort happened.


Later when we inquired, we learnt that the 'notable' who was to have conducted the kumbhabhishekham was out of station, so we had the bhagyam (fortune). In this way, Periyava has done a lot of anugraha for us.


Author: Jamba Nagasamy, Chennai (in Tamil)
Source: Maha Periyaval - Darisana Anubhavangal - Vol. 4
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!


















 

பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: The Mahaan Who Wiped Our Tears

Devotees saw with their own eyes that water was leaking from the corner of Sri Vishnu Durga's eyes in the Arulmigu Pandaadu Nayaki Sameta Pasupatinatha Swami temple (at PandanaiNallur)!

This happened on 19th Feb.1986.

They rushed and reported the matter to me. I went and had a look. Tears were leaking out of Ambal's two eyes! There were no words to describe the agony of our heart.

I arranged to bestow worship on a young virgin girl, treating her as Durga, submitting saubhagya dravyas, and performing the Navakshari mantra japam in front of the Kannika Durga.

"Why is this flaw, mother?" I asked her.

The virgin girl who was sitting as Durga told us that she had a vision of a divine girl who wore a green skirt telling her, "Reduce my burden" and disappearing.

Thereafter, we performed special Abhisheka Aradhanam to Vishnu Durga and the tears stopped.

We went to Kanchipuram to supplicate this matter to Sri Maha Periyava and seek His clarification and guidance.

Periyava gave us twenty-five litres of Gangaa Jalam (water from the Ganga). He asked us to spiritually strengthen it with one lakh Avrittis (repetition) of the Navakshari mantra, perform Abhisheka to Vishnu Durga with the strengthened water and then report to Him.

After four months and after carrying out the orders of Periyava, we went to Orirukkai, a village adjacent to Kanchipuram, where Periyava was staying.

I told Periyava that the tears that had been flowing from Durga's eyes had stopped.
Periyava heard me and then contemplated the matter for sometime. Then He asked, "Does the roof over Durga touch Her head?"

I could not remember if it was so, though I have been performing the daily puja. I said, "I did not notice. I shall go back and have a look."

When I got back and checked the roof by inserting a thick thread between Durga's head and the roof, I found out that the roof was indeed touching Her head, for the thread did not appear on the other side. It was also confirmed that a crack in the wall had caused the roof to slant slightly and thus touch Durga's head.

We came back and apprised Periyava of the details.

Periyava ordered us to take Durga's statue out, make a shallow dent on the roof, then place the statue back on its base and then perform a Kumbhabhishekam.

Changes were made as directed by Him and the Kumbhabhishekam took place in the Thai month of the year 1987.

We came back for Periyava's darshan with the prasadam.

Periyava happily listened to the details and accepted the prasadam. He said, "The people of your village are very fortunate. Ambal's crying was to give everyone her anugraha."
While we were conversing, a Gujarati devotee came for darshan. Periyava spoke a few words to him.

Then, looking at us, He asked, "What would it cost for you people to make a trip here?"

"About three hundred rupees."

He asked the Gujarati man to give us three hundred rupees. He considered Periyava's AGYA as his parama bhagya and gave the money very happily.

We experienced and melted at the utmost consideration and compassion the divine Periyava had for the prosperity of Shivacharyas who touch the god and do puja.

Periyava not only cleared Durga's burden on the head, but also the burden in our hearts! Who else except Periyava can give such divine guidance?

Author: Sivasri Jagadeesa Shivacharya, Pandanainallur
Source: Maha Periyaval Darisana Anubhavangal Vol. 2

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!



 





பெரியவா சரணம் !!


Experiences with the Omnipresent Divine

"Karunaa-rasa-kallola-kataakshaaya Namo Namaha"
From Sri Maha Periva Ashtottara Namavali - meaning is "Obeisance to Him whose glance is a flood of kindness and mercy"

Namaskaram. Kanchi Periva Forum is pleased to bring you this personal experience - shared by our member Sri Venkatesan Subramanian.

"....My name is Venkatesan and hailing from Trichy. I should not say I am Mahaswamiji's devotee right from the year I started experiencing my livelihood.

When I was working in Chennai, I happened to visit Srimatam almost 1-2 times in a month. I also started reading books written on the experiences of the devotees, some of them who were blessed to be close to Mahaswamiji and who didn't know about Him but were also blessed by Him.

Let me come to my experience with Him. On one of our wedding anniversaries, myself and my wife went to His sannidhanam at Srimatam. It was some special day and there was a grand pooja at Mahaswamiji's Adhishtanam.

My wife desired to go to Orikkai Sri Maha Periva Temple but I refused because it was very late. Then we had our food at Annadhana Matam.

When we were coming out, an old man insisted us to visit Orikkai. We just came out, one auto driver called us, telling that he was going to Orikkai and would drop us.

We reached Orikkai by 1.30 pm or so. The sannidhanam was closed and a man there told us it would be again opened by 4 pm. I just sat and prayed Mahaswamiji that it was a disappointment for us on our wedding day without His darshan. We started from there but suddenly I became very tired and could not walk even one step. I told my wife to rest for a while and fell asleep out of my control.

When I woke up again, I saw my wife talking to a person, who is a great devotee of Mahaswamiji. Just 15 minutes had passed when the temple archaka rushed suddenly to the temple and opened the sannidhanam.

I was a bit surprised, and asked him why he opened it well before the scheduled time. He told us that Mahaswamiji had ordered him that " A couple are waiting to see me and today is their wedding day. You go and open the sannidhanam and give Prasadam. That's why I came" - was his response.

I realized I didn't not bring anything as an offering for the Jagadguru. The man who was talking to my wife, gave the huge Thulasi Maalai to us to offer. We could not control our tears on Jagadguru's anugraham on us. It is an unforgettable moment for us.

I understood that Mahaswamiji is to be felt in addition to be prayed. He is a mother, a father, a child, a friend, a guru and a god. His existence is everywhere and also inside of us.

My words get struck when I talk or write about Him. May be He doesn't give what one wants but knows what one needs and fulfils.

It's a very simple concept. When we "entrust" ourselves to Mahaperiyava, He will bestow His "interest" on us.

Source: WhatsApp

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
 


பெரியவா சரணம் !!

Experiences with Maha Periyava: Special compassion towards Veda Panditas

Sri Maha Periyava had vishesha karunya (special compassion) and preeti (kindness), towards the Veda Panditas. Just their having memorised the Veda shabdas--Vedic accents and words was the complete reason for adoring them. Periyava has stressed this fact many times:

One day in Kanchi Matham Sri Maha Periyava asked, "Do the vaidikas who are the vadhyars (teachers), know the artha (meaning) of the karmas (rites) they conduct? Some people tend to look down upon them if they do not know the meaning of the mantras they chant."

A mail for the SriMatham arrived just as this talk was going on and Periyava asked the vilasam (address) on it to be read out. When the man who was reading it out read the word PIN, Periyava asked him, "Do you know what PIN is? Does the postman know (its expansion)? Does the postmaster know it?"

The one who read out the address stood speechless.

"Even if no one knows the meaning of PIN, once a number is written with the word PIN, the mail reaches its destination correctly, doesn’t it?

"In the same way, if we recite the Veda mantras with their proper swaram (intonation), even if we do not know their meaning, the offerings in the homam (fire sacrifice) reach their destination. There is no necessity to know the meaning.

"But then I shall tell you the expansion for PIN. It is 'Postal Index Number'." Periyava knows!
Author Dr.R.Krishnamurti Shastrigal, Chennai-4

Source: Maha Periyaval - Darisana Anubhavangal Vol.2

Source: MAHA PERIYAVA Public Group /Face Book

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top