• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
If I am correct, there are some people who are poor by their choice. They do not work or
choose to work less and engage in other unwanted activities to the society in general.
Poor people have fewer responsibilities or less stress for the next day. They generally
have nothing to loose or less to worry about anything in particular.

Perhaps, I suppose, some rich people can be unhappy or worried owing to their wealth
or large amounts of money, etc to be preserved and protected. Sometimes they feel of
bored life too and won't have proper diet at times. Whereas, the poor once their stomach
is full, a roof over their head with a safe place to sleep, they are not worried about
accumulating wealth, etc. These may be one of the reasons for the happiness of poor.

Balasubramanian
Ambattur
 
The rich have a THOUSAND things to worry about.
The poor have only three things to worry about...
two square meals a day and a roof over their head!
So less worry = more happiness.
More worries = less happiness.
No wonder the poor people appear to be happier than the rich.
 
Most people sell their souls and live with
a good conscience on the proceeds. :shocked:


There are two things to aim in life:
First to get what you want; :popcorn:

and after that to enjoy it. :dance:

Only the wisest of the mankind achieve the second.


People say life is the thing.
But I prefer reading.:nerd:

Logan Pearsall Smith.
 
# 226. வந்தவனுக்கு வண்டிக் கூலி.

சில சம்பிரதாயங்கள் சங்கடமானவை.

எப்போதோ யாராலோ ஏற்படுத்தப் பட்டவை.

இப்போது ஏற்கக் கூடியது அல்லவே அல்ல.

முன்பு ஒரே ஊரில், ஒரே தெருவில் இருப்பார்கள்.

வருபவர்கள் ஏதேனும் கொண்டு வருவார்கள்;

வீட்டில் இருப்பவர்கள் ஏதேனும் தருவார்கள்.

இன்று விமான
ம், ரயில், பஸ், கார் ஏறிப் போகிறோம்.

சென்ற உடனேயே பெட்டியில் என்ன இருக்கிறது

என்று பார்க்கவே அனைவருக்கும் ஆவல் மீறும்!

ஒன்றும் இல்லையென்றால் முகம் வாடிவிடும். :pout:

செலவழித்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.

சில நாட்கள் நன்றாகப் பார்த்துக்கொள்ளுவோம்

அது நினைவுக்கு வராது. :nono:

"நாங்கள் சாப்பாட்டுக்குச் செலவு செய்யவில்லையா?"

"வந்தவனுக்கு வண்டிக் கூலி,

இருப்பவனுக்கு உணவுச் செலவு!"

சிலர் அம்மி போல இருக்கும் இடத்தை விட்டு

நகருவதே இல்லை. :couch2:

அவர்களுக்கு வண்டி
க் கூலியும் இல்லை.

யாரும் அவர்கள் வீட்டுக்கு வராததால்

அவர்களுக்கு உணவுச் செலவும் இல்லை.

பிழைக்கத் தெரிந்த மனிதர்கள் தாம்!
:thumb:
 
# 227. ரோஜா மாலை.

நண்பரின் மனைவியின் திடீர் மறைவு
என்னை மிகவும் பாதித்துவிட்டது. :whoo:

"இறுதியாக ஒருமுறை பார்ப்போம்!" என்று

இவருடனும் பிற நண்பர்களுடனும் சென்றேன். :flock:

"மாலை வாங்க வேண்டும்" என்று நான் சொல்லவும்,

நண்பரின் மனைவி "அதெல்லாம் எதற்கு?" என்றார்.

"நம் மரியாதையையும் அன்பையும் காட்டுவதற்கு!" என்றேன்.

"அதைத் தூக்கி விசிறப் போகிறார்கள்!

அதில் பணம் செலவு செய்வானேன்?"

அவர் மாலையை வாங்கவும் ல்லை.

அவர் மாலையை வாங்க விட
வும் ல்லை.

இவரிடம் நான் பணம் கொடுத்தேன்.

பெரிய ரோஜா மாலை வாங்கி வந்தார்.

காரில் இருந்து
நான் இறங்கி நடப்பதற்கு முன்பே

இவர் மாலையைச் சுமக்க, நண்பரின் மனைவி

எனக்குக் காத்திராமல் முன்னே சென்று விட்டார்.

நான் அந்த வீட்டின் உள்ளே செல்லும் முன்பே

ரோஜா மலையை இவர் கைகளில் இருந்து வாங்கித்

தான் கொண்டுவந்
து போலப் போட்டும் விட்டார்.

Shining in borrowed feathers may be O. K!

This is shining in borrowed glory! :doh:

அத்தனை தூரம் மாலை வாங்க வேண்டாம் என்று தடுத்தவர்

அவ்வளவு விரைவாகச் சென்று அதைப் போடுவானேன்??? :mmph:
 
Last edited:
Madam I really like your quotes and enjoy it. I have no intention to have cross swords.

At times I feel Life has become a lyric. On the other hand, the teachings of many
Scholars say that life is a game and they pronounce that if we enjoy it as a game,
then life becomes enjoyable. Third one says, life is a big gamble. Sometimes, we
feel something right, we feel something good, etc. If one works to the right or good one,
we may term it as true. Yet another person say, it is time for change. If that is what
one want, will he ever stop or continue..

Balasubramanian
Ambattur
 
Madam I really like your quotes and enjoy it.

Dear Sir,
These are called write-ups or articles. Quotes are words spoken by very famous and well known persons. I am very very far away from being quoted as yet!
 
Sydney Smith.

What would life be without Arithmetic, but a scene of horrors. :scared:

I am convinced digestion is the great secret of life. :rolleyes:

I have no relish for the country: :hand:
it is a kind of a healthy grave.
:rip:
 
# 228. "BRING THE SAMPLE IN A MATCH BOX ONLY!"

எங்கள் கம்பெனி டிஸ்பென்சரியில் இருந்தது

ஒரு குட்டி மைக்ரோலேப், சில ஸ்டாஃப்களுடன்!

Urine, Motion, Blood test எல்லாம் செய்வார்கள்.

Motion டெஸ்டுக்கு சாம்பிள் எப்போதுமே ஒரு

மேட்ச் பாக்ஸ்சில் கொண்டு போகவேண்டும்.

அங்கு இருந்த என் நண்பரிடம் கேட்டேன்,

"மேட்ச் பாக்ஸ்சுக்கும் motion டெஸ்ட்டுக்கும்

என்ன தொடர்பு?" என்று. :confused:

ஒரு worker நியூஸ் பேப்பரில் motion சாம்பிள் பாக் செய்து

மேஜை மேல் வைத்து விட்டுப் போய்விட்டான். :bolt:

இவர் தினமும் வரும் டிபன் பொட்டலம் என்று நினைத்து

அதைப் பிரிக்க ...:shocked:

இதயம் தொண்டைக்கு வந்துவிட்டது ஷாக்கில்!

அன்றிலிருந்து நியூஸ் பேப்பர் பொட்டலத்தைப் பார்த்தாலே

'பேசும் படம்' திரைப் படத்தில் ஒரு மனிதன்

கமலின் கிஃப்ட் பாக்கைப் பார்த்துவிட்டு

குமட்டுவது போல ஆகிவிட்டது இவருக்கு.

அன்றிலிருந்து ஸ்ட்ரிக்ட் ரூல் !

"BRING THE SAMPLE IN A MATCH BOX ONLY!"

Occupational hazard மனிதனை

எப்படி எல்லாம் பாதிக்கின்றது பாருங்கள்!" :doh:
 
# 229. நல்லெண்ணெய் தாத்தா.

விசா
காவில் காலனிக் கடையில் ஒரே கும்மாளம்!

என்ன என்று அங்கு சென்று பார்த்தால்

தமிழ் நாட்டுத் தாத்தா நட்ட நடுவில்.

அவரைச் சுற்றி சுந்தரத் தெலுங்கர்கள். :grouphug:

அவர் அபிநயிக்க, கடைக்காரர்

ஒவ்வொரு பொருளாகக் காட்ட,

அவர் அது இல்லை என்று தலை ஆட்டி

மேலும் தீவிரமாக அபிநயிக்க,

சுந்தரத் தெலுங்கர்களுக்கு நல்ல தமாஷ். :becky:

"உங்களுக்கு என்ன வேண்டும் மாமா?"

தமிழ்க்குரல் கேட்டு ஓடியே வந்துவிட்டார். :ear:

நல்லெண்ணெய் வேண்டுமாம்.

அவர் தலையில் தேய்ப்பது போலக் காட்டவே

தேங்காய் எண்ணை முதல் கொண்டு

அத்தனை எண்ணையையும் காட்டி இருக்கிறார்

கடைக்காரர் -
நல்லெண்ணெயைத் தவிர.

பிறகு அவருக்கு எல்லா எண்ணெய்களின் பெயர்களையும்

எளிதில் நினைவு வைத்துக் கொள்ளும் முறையும்

கற்றுக்கொடுத்தேன்.

வேர்ச்சன நுன = வேர்க்கடலை எண்ணை.

கொப்பரி நுன = தேங்காய் எண்ணை.

மஞ்சி நுன = நல்லெண்ணெய்.

பாவம் தாத்தா, நல்ல மனிதரைக்

காமெடியன் ஆக்கிவிட்டார்கள் அன்று!
:tsk:
 
Sydney Smith.

Madam, I have been looking for a person who disliked

gravy all my life; :spit:
let us swear eternal friendship. :tea:


How can a bishop marry? How can he flirt? :shocked:
The most he can say is ,"I will see you in the vestry after service".
:rolleyes:
 
# 230. A treasurer's job.

"If you want to know the value of money

just go out and try to borrow some!"

எத்தனை உண்மையான வார்த்தைகள்.

கடன் கூட வாங்க வேண்டாம்

subscription வாங்குவதே போதும்!

அப்போது லேடீஸ் கிளப்பின் மாத ஃபீஸ்

ஜஸ்ட் இரண்டே இரண்டு ரூபாய்!

நீலம்மாவின் தசரா போனஸ் போல!

பெரிய மனிதர்களின்
பெரிய மனைவிகள்

அதையும் கூடத் தர மாட்டார்கள்.

துரத்தித் துரத்தி வாங்க வேண்டும் - அல்லது :bump2:

எல்லோரும் நூறு ரூபாயை நீட்டுவார்கள்.

அத்தனை 98 ரூபாய்க்கு நான் எங்கே போவேன்? :shocked:

" இரண்டு ரூபாய்க் கோஸரம் சம்பேஸ்துந்தி!"

( இரண்டு ரூபாய்காக உயிரை வாங்குகிறாள்!)

இரண்டு ரூபாய் தராமல் இவர்கள் எல்லோரும்

என் உயிரை வாங்குவது போதாது என்று

போனஸ் ஆகத் திட்டு வேறு free
ஆக! :doh:

கடைசியில் இரண்டு ரூபாயை உயர்த்தி

ஐந்தாக்கி அதையும் ஸாலரியில் இருந்தே

எடுக்க ஆரம்பித்தார்கள்! இறைவனுக்கு நன்றி!
:hail:
 
# 231. Morargin.

அது ஊரோடு எல்லோரும் urine புகழ் பாடிய காலம்.

சர்வரோக நிவாரணி போல ப்ரொஜெக்ட் செய்யப்பட்டது.

உள்ளே குடிக்க, பூசிக்கொள்ள, தடவிக்கொள்ள என்று.

விடிகாலையில் வருவது பெஸ்ட் சாம்பிள் என்றார்கள்.

மூக்கைப் பிடித்துக் கொண்டால் கூட

நிச்சயமாகக் குடிக்க முடியாது அதை. :yuck:

மாடு வாலைத் தூக்கும் முன்பே சிலர்

சொம்புடன் சென்று தயாராக நிற்பார்கள்.

இனி எல்லோரும் பாட்டிலில் சேகரித்து

Recycle செய்வார்களோ என்று தோன்றியது.

அன்று மனதில் உதித்த பெயர் தான் Morargin!
icon3.png


அன்று நாங்கள் ஐந்து பேரும் சிரித்தது போல

என்றாவது சிரித்திருப்போமா தெரியாது.

அப்பாவுக்கும் அந்தப்பெயர் பிடித்திருந்தது.

அடிக்கடிச் சொல்லிச்
சொல்லிச் சிரிப்பார். :laugh:

Urine recycle செய்து அதன் மூலம்

உடல் நலம் பெற்றோமோ இல்லையோ

சிரித்துத் சிரித்தே உடல் நலம் பெற்றிருப்போம்.
:becky:
 
Morargin. I was in Poona when this concept was announced. But I am told that
the Urine Therapy has historical roots in ancient Egypt, China etc. Urine Therapy,
Shivambu is known to be a medicine to heal certain diseases. I also heard that
when patients hesitate, it is injected. How far it is true, I do not know.
But there is a prevalent information that consumption of one's own urine is
relatively low in risk.

Balasubramanian
Ambattur
 
For years, people have said , "Well, I have heard of people surviving by ingesting their own urine, but I thought it was just a myth." Myth it isn't. Medical fact it is.

As Dr. John R. Herman remarked in his article which appeared in the New York State Journal of Medicine in June, 1980:

"Auto-uropathy (urine therapy) did flourish in many parts of the world and continues to flourish today....there is unknown to most of us, a wide usage of uropathy and a great volume of knowledge available showing the multitudinous advantages of this modality.

Actually, the listed constituents of human urine can be carefully checked and no items not found in human diet are found in it. Percentages differ, but urinary constituents are valuable to human metabolism."
 
Sydney Smith.

Praise is the best diet for us after all! :hungry:

I never read a book before reviewing it;
it prejudices a man so. :confused:

He (Macaulay) has occasional flashes of silence, :tape:
that make his conversation perfectly delightful. :becky:
 
# 232. Why the candle light dinners?

கண்களில் பாப்பா பெரிய வட்டம் ஆனால்

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். :love:

நமக்குப் பிடித்தவர்களைப் பார்க்கும்போது

பாப்பாவின் விட்டம் மிகப் பெரிதாகும். :happy:

மனிதமூளை இவ்விரண்டையும் அறிந்துள்ளது.

அதன் பலன் தான்
candle light dinner

மங்கிய ஒளியில் பாப்பா பெரியது ஆகும்.

பிரகாச ஒளியில் ஊசி முனை ஆகிவிடும்.

மங்கிய ஒளியில் இன்னொரு நன்மையையும் உண்டு!

சின்ன
ச் சின்ன குறைகள் தென்படாது கண்களுக்கு! :nono:

அரை இருட்டில் பெண்கள் அனைவரும் அழகிகளே! :music:

வாழ்க! வளர்க!!
Candle light dinners!!!
 
# 233. குட்டி nurse போட்ட பெரிய ஊசி!

எப்போதும் போல அங்கேயும் கேரளா

சிஸ்டேர்ஸ் (நர்சுகள்) அதிகம் இருந்தனர்.

அதில் ஒருவர் midget போல மிகவும் குட்டை.

உயரமானவர்கள் ஸ்டூலில் அமர்ந்தால்

அவர் நிற்பதைவிட உயரமாக இருப்பார்கள்.

அவரிடம் ஊசி போட்டுக்கொள்ளுவது என்றால்

எல்லோருக்குமே உண்டு மிகுந்த அச்சம். :scared:

Javelin throw , Short-put throw போல

ஓடி வந்து நம் கையைப் பதம் பார்ப்பார். :bowl:

அப்போது தான் ஊசி உள்ளே இறங்குமாம்.

உண்மைதான் அவர் நினைத்தது!

ஊசி இறங்கியே விட்டது கை எலும்பில்! :shocked:

அதைப் பிடித்து வலிக்கும் போது

அது உடைந்து போயிற்று கையினுள்!

சின்ன அறுவை சிகிச்சை ஒன்று செய்து

ஊசியைக் 'கைப்பற்றினார்கள்' அவர்கள்.

இதுவே அமெரிக்காவாக இருந்திருந்தால்

யார் யாரெல்லாம் நேரத்தைத் தொலைக்கக்

கம்பி எண்ணிக் கொண்டிருப்பார்களோ?

அங்கு டென்டிஸ்ட் இடம் போனபோது,

"Do you feel any discomfort or pain"

என்ற அவர் நிமிடத்துக்கு பத்துமுறை கேட்டது

நினைவுக்கு வந்தது இப்போது!

இந்தியாவைப் பொருத்த வரையில்

Patients are no better than cattle!
:flock:
 
Life is like that

Our life is a stage and the relatives and friends become actors;
life is a tragedy for those who feel so much and a comedy for those who
think too much. All are not happy. One problem after another arises,
whether we want it or not, and in the process of solving them, at times
a few can find greatest pleasure. While others either learn to play and take
it lightly or bear its troubles patiently.

Balasubramanian
Ambattur
 
A mere index hunter, who held the eel of science by the tail. :moony:

Some folks are wise , and some are otherwise. :rolleyes:

An ounce of prudence is worth a pound of gold. :decision:

Tobias Smollett.
 
# 234. THE LIE DETECTORS .

இயற்கையே நமக்கு தந்துள்ளது


ஏகப்பட்ட LIE DETECTORS.

நாம் நேரில் பேசும்போது ஒருவருடைய

கண்களில் காணலாம் மெய்யும் பொய்யும்!

எத்தனை திறமை வாய்ந்த நடிகர் ஆனாலும்

கண்கள் கூறிவிடும் மனதி
ல் உள்ள உண்மையை.

பிடிக்காது என்றால் பாப்பாவின் விட்டம் சிறியதாகும். :suspicious:

பிடித்தது என்றால் பாப்பாவின் வட்டம் பெரிதாகும்.

போனில் பேசும் போது அவர்களின்

வார்த்தைகளே காட்டிக் கொடுக்கும் இதை.

கள்ளச் சிரிப்பு என்பார்கள்.

கண்ணனின் கள்ளத்தனமான சிரிப்பு அல்ல இது

போலியாக முயற்சி செய்து சிரிப்பது :heh:

அது நேரில் கூடத் தெரியாது அவ்வளவாக.

போனில் மண்டையில் அடித்தது போல் தெரியும். :phone:

தப்பு செய்தவர்கள் நம்மிடமிருந்து

சற்று விலகியே நிற்பார்கள்.

நம் அருகில் சென்றபோதும் அவர்கள் நகர்வார்கள். :bolt:

இது " puff and sip" கேசுகளுக்கு ரொம்பவே பொருந்தும்.

அவர்களின் body language காட்டிக் கொடுக்கும்

அவர் பொய்மையையும், போடும் வேடத்தையும்!

கண்களையும், காதுகளையும் நாம் அலெர்ட் ஆக

வைத்திருந்தால் ஏமாறாமல் தப்பிக்கலாம்.
 
# 235. பிராமன்ஸ்' hoax !

அன்று
ஒரு விடுமுறை நாள்.

அடுத்த வீட்டில் ஸ்பஷ்டமாக தேவ பாஷையில்

ஆசீர்வதிக்கும் ஒரு அவியல் குரல் கேட்டது.

அடுத்த நிமிடம் நான்கு பேர்கள் வந்தனர்.

மூன்று பேர்கள் பஞ்சகச்சம் உடுத்தி இருக்க

ஒருவன் மட்டும் பேன்ட், ஷர்ட் + கிராப்.

"உள்ளே வரலாமா?" என்றார் ஆஜானுபாகு மனிதர்!

தனியாக இருந்தால் இரும்புக் கதவைத் திறக்க மாட்டேன்.

இவர் இருந்ததால் தைரியமாக கதவைத் திறந்தேன்.

ஆளுக்கு ஒரு சேரில் அவர்களே அமர்ந்து கொண்டார்கள்.

ஏதோ போட்டோ I.D card மற்றும்

fees due என்று ஒரு கல்லூரியில் கொடுத்த

ஒரு கடிதத்தையும் காட்டி உதவி கேட்டனர்.

படிப்புக்கு என்றால் எல்லோருமே உதவுவார்களே!

"எங்களால் முடிந்தது இது தான்!"

என்ற இருநூறு ரூபாய் கொடுத்தால்

"ஐநூறாவது தாருங்கள்" என்று மன்றாடினார்கள்!

நல்ல வேளை கையில் அவ்வளவு தான் இருந்தது

இல்லாவிட்டால் தூக்கிக் கொடுந்திருந்திருப்போமோ?

போகும் முன்பு பெயர் கேட்டார்கள்.

இவர் பெயரைச் சொன்னால் என் பெயர் தான் வேண்டுமாம்!

அடுத்த நாள் தெரிந்தது அவர்கள்

என் பெயரைச் சொல்லிக் கொண்டு

அத்தனை வீட்டுக்குள்ளும் சென்று நுழைந்தது!

ஐநூறில் தொடங்கி 'பேரமாடி' ஐந்து ரூபாய் வரை

கிடைத்ததை விடாமல் வாங்கிக் கொண்டது. :popcorn:

ஒரு வீட்டில்," wrist watch கொடு!" என்று மல்லுக்கு நின்றது;

இன்னொரு வீட்டில் "டைம் பீஸ் வேண்டும்!" என்று கேட்டது.

நல்ல collection!!! அன்று நரி (என்) முகத்தில் விழித்ததாலா?

போததற்கு என் பெயரை வேறு உபயோகித்து இருக்கிறார்கள்.

ஒரு நம்பகத் தன்மை இருக்குமே! கில்லாடிகள்!! :spy:

அன்றே முடிவு செய்தேன் ஒரு மாற்றுப்பெயர்

யோசித்துத் தயார் செய்து வைக்க வேண்டும்

இந்த மாதிரி ஆட்களிடம் உண்மைப் பெயரைக் கூறி

அவர்கள் கூறும் எல்லாவற்றையும் உண்மை ஆக்கவேண்டாமே!

வெறும் ஆசீர்வாதத்தை 'முதலா'க வைத்துக் கொண்டு :blabla:

ஒரு நாளில் அவ்வளவு நிறைய சம்பாதித்தது

அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்திருக்கும்!
:shocked:
 
சிந்தையில் நிற்கும் விந்தை மனிதர்கள்!

ஒவ்வொரு நாளும் எத்தனையோ மனிதர்களை
ஒவ்வொருவரும் சந்திக்கின்றோம் என்றாலும்,

அத்தனை பேரும் நம் நினைவில் நிற்பது இல்லை.
அத்தனை பேர் நினைவில் நாமும் இருக்க மாட்டோம்!

சிந்தையில் நிற்பார்கள் சில விந்தை மனிதர்கள் மட்டும்.
எந்தக் காரணத்தினால் என்பது நமக்கு முக்கியமல்ல!

என்ன பாடம் கற்றுக் கொள்கிறோம் என்பதே முக்கியம்
படிக்க விரும்புவன் கல்லிலும் காண்பான் ஒரு பாடம்!

புரிந்து கொள்ளுபவன் புல்லிலும் காண்பான் ஒரு போதனை.
தேவை க
ற்க வேண்டும் என்ற ஆவலும், சிரத்தையுமே!

இந்தத் தொடரில் வருபார்கள் உண்மையான,
உயிருடன் வாழ்கின்ற (வாழ்ந்த) நிஜ மனிதர்கள்.

சிந்தித்தால் புரியும் நன்றாக, இந்த விந்தை மனிதர்கள்
சிந்தையில் ஏன் நிலைத்து நிற்கின்றார்கள் என்று!

விரும்புபவர்கள் தொடர்ந்து படியுங்கள்! :pray2:

 
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top