• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

"Life is like that!"

Status
Not open for further replies.
P. B. Shelley.

To know nor faith, nor love, nor law; to be
Omnipotent but friendless is to reign. :whip:


The soul of man, like un-extinguished fire ,
Yet burns toward heaven with fierce reproach. :flame:


Many faint with toil, :faint:

That few may know the cares and woe of sloth.
:bored:
 
# 212 . டிராமா கிளப்.

எங்கள் கம்பெனியில் அமச்சூர் நடிகர்கள் அநேகம்.

திரைப்படத்தில் சான்ஸ் கிடைக்கததால் தங்கள் ஏக்கத்தை

தீர்த்துக்கொள்ள பெரிய நாடக விழா நடத்துவார்கள்.

ஒரு வாரம் தொடர்ந்து நடக்கும், நன்றாகவே இருக்கும்.

Topical themes சிலர் எடுத்துக் கொள்ளுவார்கள்

அல்லது புராணக் கதைகள், இதிகாசங்கள் என்று

இருக்கவே இருக்கின்றது என்றும் தீராத stock!

அன்று என்றும் புதுமையான ராமாயண நாடகம்.

சோனி ராவணன் தான் கிடைத்தான் போல.

குரல் மிகவும் கம்பீரமாக இருந்ததனால் அந்த

ராவணன் ரோலை கொடுத்தார்களோ என்னமோ.

மூச்சு விடாமல் முழுப் பக்க டயலாக் பேசி,

p. S. வீராப்பா போலச் சிரித்து அச்சுறுத்தி,

மீசையை ஸ்டைலாக நீவி விட்டுக்கொண்டு,

கன கம்பீரமாக சின்ன foot ஸ்டூலில் காலை வைத்து,

சிம்மாசனத்தில் அமரும் போது... ஸ்டூல் அசைந்தது.

அன்று ராவணன் நடுங்கியதை நினைத்தால்,

இன்றும் சிரிப்பு பொத்துக் கொண்டு வருகிறது.

அவன் பேசிய டயலாக் என்ன!

"நேனே ராவணேஸ்வருடு!"

என்று கொக்கரித்தது என்ன!!

கடைசியில் ஸ்டூல் ஆட்டத்தைக் கண்டு ஆடிபோனதென்ன!!!

Super duper comedy scene - completely unplanned! :clap2:
 
Last edited:
# 213. "பெள்ளமா காதா?"

டிராமா கிளப் நாடகப் போட்டியில்

social themes இருப்பதுண்டு.

அன்று "குடியும், கூத்தும் எப்படிக்

குடும்பத்தைப் பாழாக்குகிறது" என்ற தீம்.

உலகில் உள்ள அத்தனை கெட்ட பழக்கங்களும்

உடையவன் தான் அன்றைய நாடக ஹீரோ.

விலைமகள் வீட்டுக்குச் செல்வது போலக் காட்சி.

பிறகு வெளியே வந்து அவளுக்கு பணம் தருவான்.

பின்னல் அமர்ந்திருந்த இரண்டு வாண்டுகள் பேசின!

"ஆமே ஆயின பெள்ளமா காதா?"

(அவள் அவன் மனைவியா இல்லையா?)

"ஆமே ஆயின பெள்ளம் காது ரா!

பெள்ளானிக்கி எவரு டப்பு இவ்வரு".

(அவள் அவன் மனைவி இல்லை!

மனைவிக்கு யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள்!)

உலக தத்துவத்தையே ஒரு வாக்கியத்தில்

அடக்கி விட்
டான் அந்த உலக மஹா மேதை!

மனைவி என்றா
ல், எல்லாமே ஃப்ரீ!

அவள் செய்யும் வேலைகளுக்கும்,
பிற சேவைகளுக்கும்,

பணம் கொடுத்
தால், பிறகு பையில் என்ன மிஞ்சும்??? :rolleyes:
 
# 213. "பெள்ளமா காதா?"

​மனைவிக்கு மனைவி என்னும் இடம் உண்டு. மற்றவளுக்கு அது இல்லை.மனைவிக்கு செய்யும் எல்லா வேலைக்கும் பணம் கொடுக்க நேர்ந்தால், கையில் காசு இருக்காது. உண்மை. மேலும் அவள் மனைவியாகவும் இருக்க முடியாது. அப்படியே பணம் கொடுத்தாலும், அடுத்தாத்து மாமா அதிகம் கொடுத்தால்.....? சரி, மாமாவுக்கு கூலியே கிடையாதா?
 
சாட்டை இல்லாமலேயே
ஆட்டுவிக்கின்றது தான் :whip:
மாமாவுக்கு கிடைக்கும்
ஏராளமான கூலி!போதாதா??
 
"பச்சைக்கிளி மாதிரி மனைவி இருந்தாலும்
கருங்குரங்கு மாதிரி வைப்பாட்டி வேண்டும்!"

There are certain things in life
a man can't ask his wife to do;
but the 'other woman' will do anything -
to retain her prize catch and not lose him!

நான் கண் கூடாகக் காண்கின்றேன்.
ஐராவதம் போன்ற 'பெரிய' மனைவி.

அவளை ஓரங்கட்டிவிட்டு விட்டு
செட்டில் ஆகிவிட்டார் ஓபன் ஆக
கணவனை விட்டு ஓடி வந்தவளுடன்!

அவனை விட்டு விட்டு அவள் ஓடினது
இவனுடனா அல்லது வேறு ஆளா :noidea:

அவர்கள் காலனியில் அடிக்கும் கூத்து :drama:
அசல் கணவன் மனைவியர் தோற்றார் போங்கள்! :doh:

 
P. B. Shelley.

......I know
The past, and thence I will essay to glean
A warning for the future, so that man :nono:
May profit by his errors, and derive :llama:
Experience from his folly.
:loco:
 
# 214. எப்படி மனைவி கிடைக்கிறாள்?

எனக்குத் தெரிந்த எத்தனையோ பயல்கள்

மணமகளைத் தேடுகிறார்கள், தேடுகிறார்கள்,

தேடிக்கொண்டே இருக்கிறார்கள் இன்னமும். :bump2:

யாருக்குமே பெண் கிடைப்பது இல்லை! :nono:

நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும்,

நன்கு சம்பாதிக்கும், கண்ணுக்கு லக்ஷணமான

இவர்களுக்குப் பெண் கிடைப்பதே இல்லை.

சிக்னலில் பிச்சை எடுப்பவனுக்கும்,

பாட்டுப் பாடி உண்டி குலுக்கும் குருடனுக்கும்,

தெரு முனையில் சேர் வயர் பின்னுபவனுக்கும்,

ஒரு கிளியையும் கூண்டையும் வைத்துக் கொண்டு

உற்சாகமாகப் பிழைப்பு நடத்துபவருக்கும், :blabla:

எப்படி மனைவி கிடைக்கின்றாள்?

இது என்ன மாயாஜாலம்?

புரியவில்லை எனக்கு! :dizzy:

உங்களுக்குப் புரிகின்றதா???
 
# 215. "NO BAR" GUY.

நண்பியின் மகன் பெண் தேடுகிறான்.

நம்மால் ஆன உதவியைச் செய்வோமே!

"என்ன மாதிரிப் பெண் வேண்டும் உனக்கு?"

"எப்படி இருந்தாலும் ஓ.கே. தான் மாமி!"

ஏதாவது SPECIFICATIONS வேண்டுமே!

"உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?"

"Anything between five and six feet!"

"உடல் வாகு ஸ்லிம்மாக வேண்டுமா?"

"Anyone like Kushboo is also o.k."

"கலர் எப்படி இருக்க வேண்டும்?"

"அதை பத்தி எல்லாம் கவலை வேண்டாம்"

" பிராமின் பொண்ணு தானே வேண்டும்?"

"Religion no bar; Region no bar;

Caste no bar; Non Vegetarian no bar"

இத்தனை 'பார்'களையும் கழட்டி விட்டும்

இன்னமும் கல்யாணம் ஆகவில்லை என்றால்...?:shocked:

தலை சுற்றியது எனக்கு! :faint:

அவன் பெற்றோர் அவனைப் பற்றிக்

கவலைப் படுவதன் காரணம் தெரிந்தது. :whoo:

"இது வேண்டும்" என்று கேட்டால் கிடைக்கும்.

எது வேண்டும் என்றே தெரியாதவனை என்ன செய்வது?? :wacko:

 
Quote by P.B. Shelley.

Nature rejects the monarch, not the man; :hand:

The subject, not the citizen: for kings

And subjects, mutual foes, forever play :fencing:

A losing game into each other's hands, :doh:

Whose stakes are vice and misery.
:whoo:
 
# 216. Modern parents in law... at what cost???

அந்தப் பெண்ணின் நட்சத்திரம்

ஆகாது அவள் மாமியாருக்கு!

மாமியாரோ, மாமனாரோ இல்லாத

நல்ல இடமாகப் பார்க்கவேண்டுமே!

கவலைப்பட்டனர் அவள் பெற்றோர்!

அப்போது அவர்கள் முன் வந்தார்கள்

"எங்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை!"

நம்பவே முடியவில்லை யாராலும்! :shocked:

பாத்ரூம் போகக் கூட சகுனம் பார்க்கும்

பாலக்காட்டு கிராமங்களில் ஒன்றில்

இவ்வளவு broad-minded persons ??? :rolleyes:

பிறகு ஒவ்வொன்றாகப் பட்டியல் நீண்டது

அவள் கொண்டுவரவேண்டிய சீர்கள்!

பண்டம், பாத்திரம், நகை, நட்டு ஓ.கே!

கட்டில், பீரோ, T. V, washing machine, :bump2:

grinder, mixie, சோபா செட் என்று ஒன்று விடாமல்

கறந்துவிட்டனர் அந்த broad -minded parents!

பெண்ணையும் கொடுத்து, பொருளையும் கொடுத்து

அவளுக்கு வாழ்வு தந்த பெயரையும் கொடுத்தார்கள்.

அத்தனை பொருள்கள் அவன் சம்பாத்தியத்தில் வாங்க

எத்தனை ஆண்டு காலம் பிடிக்கும் சிந்தியுங்கள்!:popcorn:

திடீர் தோசை, திடீர் சாம்பார் போல அவனுக்குக் கிடைத்தது!

முழுக் கதையும் தெரியும் முன்பே யாரும் மயங்க வேண்டாம்!

சோழியன் குடுமி சும்மா ஆடாது புரிந்துகொள்ளுங்கள்.

 
# 217. Three establishments - one salary.

சல்லடை போட்டு சலித்துக் கண்டு பிடித்தனர் அவளை.

ஒரே மகனுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

முதல் நாளில் இருந்
தே ஒத்துப் போகவில்லை.

அவன் மனைவியும் சரி, அவன் அம்மாவும் சரி

இருவருமே சேர்ந்து இருக்க விரும்பவில்லை.

பெற்றோர்கள் கூறினார்கள்,

"ஆடி ஓடி ஓய்ந்து விட்டோம்

உன் குழந்தையை எங்களால்

பார்த்துக்கொள்ள முடியாது."

அவள் சொன்னாள் அவனிடம்,

தனியாக இருந்தாலும் இருப்பேன்!

இவர்களுடன் இருக்க மாட்டேன்!"

பலன்....மூன்று establishments!

கண் காணாத இடத்தில் இரவு பகல் உழைக்கின்றான்!

வயது பெண்ணை வைத்துக் கொண்டு மனைவி தலைநகரில்.

வயோதிகத்தில் தள்ளாடும் பெற்றோர்கள் வேறிடத்தில்.

யாருக்கு இருக்கும் வாழ்க்கையில் இன்பம்???

money making machine அவனுக்கா???

வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு

வாழும் அவளுக்கா???

உயிரைக் கையில் பிடித்துக்
கொண்டு

வாழும்பெற்றோர்களுக்கா???

தனியாக இருந்து தத்தளித்தாலும் பரவாயில்லை

என்று நினைப்பவர், கூடி இருந்து சுகப்படக் கூடாதா?
 
P.B. Shelley.

Kings, priests and statesmen, blast the human flower
Even in its tender bud; their influence darts :croc:
Like subtle poison through the bloodless veins
Of a desolate society. :whoo:

An old, mad, blind, despised and dying king. :doh:

If I esteemed you less, Envy will kill Pleasure.
:moony:
 
# 218. மோப்ப மனிதர்கள்!

தேஜஸ் வந்த போது கவனித்தேன்.

சில வீடுகளில் நுழைய மறுத்தான்;

சில வீடுகளில் இருந்து வர மறுத்தான்.

He was sensitive to home atmosphere.

நாமும் அப்படித்தான் இருக்கின்றோம்

அதைப் பற்றிச் சற்றும் சிந்திக்காமலேயே!

சில வீடுகளில் வாசலில் நின்று பேசுவோம்.

சிலவற்றில் ஹாலில் அமர்ந்து பேசுவோம்.

அதிசயமாக சமையல் அறை வரை செல்வோம்

அதிக அன்புடன் பழகுபவர் வீட்டில்.

சில வீடுகளில் பாத்ரூம் கூடப் போகத் தோன்றாது!

அவர்கள் நாம் use பண்ணிய பிறகு

அங்கே சென்று மோப்பம் பிடிப்பார்கள்.

அல்லது எதாவது spray செய்வார்கள்...

நாம் இருக்கும் போதே, நமக்குத் தெரியும்படி. :shocked:

ஒரு முறை இவ்வாறு செய்தால் நாம்

மறுமுறை அந்த வீட்டுக்கே போக மாட்டோம்! :bolt:

அப்புறம் எப்படி அங்கே பாத்ரூம் போவோம்?

"Actions speak louder than words!"

You are unwelcome here! என்பதை :hand:

இதைவிட அநாகரீகமாகச் 'சொல்ல' முடியுமா?? :doh:
 
# 219. Karelaa Swaamiji!

When we are happy, we can smile! :)

When we smile, we become happy! :happy:

வாழ்க்கையில் இது உண்மையாக நடக்கும்.

பிடித்தால் மிகவும் விரும்பி உண்ணுவோம்.

உண்ணுவதால் விரும்பத் தொடங்குவோம்!

எங்கள் ஊரில் ஒரு "கரேலா சுவாமிஜி" உள்ளார்.

(கரேலா = பாகற்காய் / bitter gourd.)

அவர் பிக்ஷைக்குப் போன ஒரு இடத்தில்

பாகற்காயை அள்ளி இலையில் வைத்திருக்கின்றனர்.

அவருக்கு அது அவ்வளவு பிடிக்காது.

ஆனால் சன்யாசிகள் சுவை பாராட்டக் கூடாது.:nono:

அதனால் முதலில் அதை முடித்துவிட்டு

பிறகு மற்ற பண்டங்களை உண்ணலாம் என்று

முதலில் கரேலாவை முடித்துவிட்டார்.

அவருக்கு அது நிரம்பவும் பிடிக்கும் என்று

மீண்டும் நிறைய அள்ளிப் போட்டிருக்கிறார்கள்.

அத்துடன் நிற்கவில்லை அவர்கள்.

"சுவாமிஜிக்கு கரேலா தான் பிடிக்கும்" என்று கூற

எங்கு போனாலும் தவறாமல் கரேலா இருக்குமாம்.

சில நாட்களில் அதுவே அவருக்கு பிடித்துப் போயிற்றாம்.

நமக்கும் அப்படியே கஷ்ட நஷ்டங்கள் பழகிவிடும்.

பிறர் பார்த்து வியப்பார்கள் எப்படித்தான் :shocked:

பொறுத்துக் கொள்ளுகிறார்களோ என்று?

மனிதன் அலாஸ்காவிலும் வாழ்கிறான்!

மனிதன் சஹாரவிலும் வாழ்கிறான்!

மனதார முயன்றால் முடியாதது எது???
 
REAL LIFE PARTNERS!!!

சில வியாதிகள் வரும்போது
லைஃப் டைம் contract உடன் வரும். :tea:

நாம் இருக்கும் வரையில் அதுவும்

நம்முடன் இணைபிரியாது தொடரும். :bump2:

கூட நான்கு நண்பர்களையும்

தவறாமல் அழைத்து வரும். :grouphug:

"The more the merrier" அல்லவா ?


"கால்வலி எப்படி இருக்கிறது?" என்றால்

"பழகிப் போய் விட்டது!" என்பது என் பதில்.

What cannot be cured must be endured! :frusty:

என்பது எவ்வளவு உண்மை!
 
P.B. Shelley.

Nature impartial to munificence
Has gifted man will, all subduing will. :high5:
Matter, with all its transitory shapes
Lies subjected and plastic at his feet.
:hail:
 
# 220. Dowry for Dames ???

முதலில் பெண்வீட்டார் செலவு செய்வார்கள்.

நான்கு நாட்கள் ஜம்மென்று கல்யாணம் நடக்கும்.

சுற்றம் புடை சூழ எல்லோரும் வருவர். :flock:

எல்லோரும் இழுத்துப் போட்டுக்கொண்டு

எல்லா வேலைகளையும் செய்வார்கள்.

வீட்டிலேயோ, கோவிலேயோ நடக்கும்.

அதிகம் செலவு ஆகாது இப்போதுபோல!

கிடைத்த இடத்தில் படுத்து உறங்குவர். :grouphug:

இப்போது போல வருபவர்களுக்கு

ஹோட்டல் ரூம் போட வேண்டாம். :couch2:

பிறகு இரண்டு நாள் கல்யாணம் ஆயிற்று.

முதல் நாள் விரதமும், நிச்சயதார்த்தமும்

அடுத்தநாள், ஊஞ்சல், காசியாத்திரை,

பாணிக்ரஹணம், மாங்கல்ய தாரணம்

ஹோமம் எல்லாம் நடக்கும்

மாலையில் நலுங்கு and reception .

இரவு படுக்கை அறைக்குள் வந்து

மந்திரம் சொல்ல வைப்பார் வாத்தியார். :becky:

பிறகு செலவைக் குறைக்க ஒரு நாள் திருமணம்!

முதல் நாள் மாலை reception உடன் தொடங்கி

மறுநாள் கல்யாணச் சாப்பாட்டுடன் முடிந்துவிடும்.

பிறகு இரு வீட்டுக்காரர்களும் திருமணச்

செலவைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர்.

இப்போது சில இடங்களில் 'மணமகன் செலவில்' கல்யாணம்!

இப்படியே போனால் சில வரு
ங்களில் ஆண்கள்

பெண்ணுக்கு வரதட்சணை கொடுக்க வேண்டிவருமோ??? .

Law of demand and supply is applicable everywhere!!!

Marriage is fast becoming a business contract.
 
# 221. "Was he not manly???"

பள்ளிப் படிப்பின் போதே படிப்பார்கள் :love:

Romantic Novels புத்தகத்தில் மறைத்து வைத்து.

எல்லா ஹீரோக்களும் tall, dark and handsome!

எல்லா ஹீரோயின்களும் அனிச்சமலர் போல

மோப்பக்குழையும் ரகத்தைச் சேர்ந்தவர்கள்.

படித்துப் படித்துக் கனவுகளை வளர்ந்து,

நிஜ வாழ்க்கைக்கு கொஞ்சமும் தொடர்பு

இல்லாமல் தயார் ஆனார்கள் அந்தப் பெண்கள்.

மண இரவு அன்றே மன முறிவு!!!.

"அவன் ஆண் பிள்ளையே இல்லை!

அவனுக்கு மனைவி தேவையே இல்லை!"

"எப்படி உனக்குத் தெரியும்?" என்றால்

"பக்கத்தில் வரவே பயப்படுகிறான்!"

"புதுப் பெண் பயமுறுத்தவேண்டாம்

என்று GENTLE ஆக இருந்திருப்பான்!

அல்லது அவனும் களைத்துப் போயிருப்பான்;

வாழ்க்கை முழுவதும் முன்னால் இருக்கிறதே!"

எதையும் கேட்கும் நிலைமையில் இல்லை அவள்.

கதையில் படித்த ஹீரோவைப்போல இவன்

நடந்து கொள்ளாததால், ஆண்மையற்றவன்

என்ற முத்திரையைக் கவலைப்படாமல் குத்தினாள்.

படித்து நல்ல வேலையிலும் இருந்ததால்

அப்பா அம்மாவின் ஆதிக்கம் செல்லாது. :nono:

அடுத்த நாளே பிரிந்தார்கள் அவர்கள். :bolt:

மண முறிவு ஏற்படவில்லை இன்னமும்!

மன முறிவுடன் நிற்கின்றது இன்றைக்கும்.

அறுபது வயதை நெருங்கும் அவள் இனி

அவனுடன் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை.

சிலருக்கு "காய்ந்த மாட்டையும், கம்பையும்" தெரியும்.

கலைஞனையும், ரசிகனையும் இனம் காணத் தெரியாது. :doh:
 
A friend of mine asked my colleague in the Office, "you say quite often, stress, tension, panic etc. I do
not know what do you mean and could you kindly tell me the difference between these three", he said.

My colleague instantly replied without laughing

Stress is when Wife is pregnant
Tension is when Girl Friend is pregnant and
Panic is when both are pregnant.

He moved telling these...

Balasubramanian
Ambattur
 
He has none but himself to blame for :whoo:


being so demanding from his wife and :whip:
so careless with his girl friend and :llama:


for riding on two horses at the same time.
:frusty:


A friend of mine asked my colleague in the Office, "you say quite often, stress, tension, panic etc. I do
not know what do you mean and could you kindly tell me the difference between these three", he said.

My colleague instantly replied without laughing

Stress is when Wife is pregnant
Tension is when Girl Friend is pregnant and
Panic is when both are pregnant.

He moved telling these...

Balasubramanian
Ambattur
 
P. B. Shelley.

We look before and after

And pine for what is not: :tsk:

Our sincere laughter
With some pain is fraught; :whoo:

Our sweetest songs are those :sing:

That tell of saddest thoughts.
:sad:
 
# 222. ஆளுக்கு ஒன்று ஆர்டர் செய்யலாம்.

மகன்களுக்கு நண்பர்கள் அதிகம். :grouphug:

அதிலும் பெரியவனுக்கு உள்ளனர்

நல்ல நண்பர்கள் உலகெங்கிலும்!

எங்கள் முதல் விசிட்டின் போது

எல்லோருக்கும் போன் பறந்தது. :phone:

அந்த இந்தியன் உணவு விடுதியில்

நாங்கள் மொத்தம் பதினாறு பேர்கள்!

ஆள் ஆளுக்கு ஆர்டர் செய்கிறார்கள். :hungry:

சர்வர் கேட்டதைக் கேட்டவர்களுக்குத்

தந்து கொண்டே இருந்தான் -
மாற்றாமல்


"இன்றைக்கு பில் பழுக்கப் போகிறது!

இந்த மாதம் பட்ஜெட்டில் மகனுக்கு

துண்டு விழுமோ அல்லது

வேஷ்டியே விழுமோ?

என் கவலை எனக்கு. :scared:

பில் கொண்டுவந்தவன் ஒவ்வொருவருக்கும்

ஒவ்வொரு பில்லைக் கொடுத்ததும் தான்

எனக்கு மூச்சே வந்தது பழையபடி.

"Go Dutch" என்று ஒரு system!

எல்லோரும் ஒரே டேபிளில் அமரலாம்.

பிடித்ததை ஆர்டர் செய்யலாம்.

அவரவர் பில்லைக் கொடுக்கலாம்.

இங்கு போல ஏமாந்தவன் ஒருவன் தலையில்

எல்லோருமாகக் கை வைக்க வேண்டாம்.

Americans are very cautious about their money!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top