• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
பெரியவாளும் மந்திரஜபமும்:

பெரியவாளும் மந்திரஜபமும்:

ஒரு இளைஞன் பெரியவாளை தரிசனம் பண்ண வந்தான். அவன் முன்பே பெரியவாளுக்கு பரிச்சியம் ஆனதால், "ஆமா, இங்கே இப்போ வந்திருக்கியே,........ஏதாவது விசேஷம் இல்லாம நீ வர மாட்டியே?........" சிரித்தார்.

"ஆமா பெரியவா. எனக்கு பெரிய சந்தேகம். அதை நிவர்த்தி பண்ணிண்டு போகலாம்னு வந்தேன்"
"அப்டியா! சொல்லு சொல்லு. நோக்கு அப்படி என்ன சந்தேகம்?"
"மந்த்ரஜபம் பத்தின சந்தேகம். எனக்கு மைசூர் யஞ்ய நாராயண கனபாடிகள் மந்த்ரோபதேசம் பண்ணியிருக்கார். ............"

"பேஷ்! பேஷ்! ரொம்ப வாசிச்சவா. என்ன மந்த்ரமோ?" என்றவர் உடனே "இரு இரு........மந்த்ரம்...ங்கறது ரகஸ்யமா ஒன்கிட்டதான் இருக்கணும். எந்த தேவதை பரமானதுன்னு மட்டும் சொல்லு."

"ஹனுமத் உபாசனா பரமான மூல மந்த்ரம்"

"சரி. அதுல நோக்கு நிவர்த்தி பண்ணிக்க என்ன இருக்கு?"

"இந்த மந்த்ரம் உபதேசமாயி ஏழு வருஷமா, கடுமையா விதிப்படி ஜபிச்சுண்டு வரேன். ஆனா ஒண்ணுமே தெரியலியே பெரியவா"

"ஒண்ணுமே தெரியலேன்னா?"

"அந்த மந்த்ரம் நேக்கு ஸித்தியாயிடுத்தா? இல்லியா?....ங்கறது தெரியலியே பெரியவா" என்றான் வருத்தமாக.

"மந்த்ர ஸித்தி..ங்கறதை அனுபவ பூர்வமாத்தான் தெரிஞ்சுக்க முடியும். பலவருஷங்களுக்கு முன்னே, ஸ்ருங்கேரி சாரதா பீடத்ல, ந்ருஸிம்ஹ பாரதிஸ்வாமிகள் ன்னு ஒரு பெரிய மகான் பீடாதிபதியா இருந்தார்.

ஒருநாள் ஒருமடத்து சிஷ்யன், இப்போ நீ கேட்ட கேள்வி மாதிரி அவரை கேட்டான். அவர்சொன்னார் "நீ பாட்டுக்கு ஆத்மார்த்தமா ஜபத்தை விடாம பண்ணிண்டு வா. ஸித்தி பலனை தேவதையே அனுக்கிரகம் பண்ணும்..னார். அவனோ விடறதா இல்லை. ஸ்வாமிகள் சொன்னார், "தெனமும் நீ ஜபம் பண்ண ஆரம்பிக்கறச்சே ஒரு மரப் பலகையைபோட்டுண்டு, அதுக்கு மேல நெறைய நெல்லைப் பரப்பிடு. அதுக்கு மேல ஒரு வஸ்த்ரத்தை போட்டுண்டு அதுமேல ஒக்காந்துண்டு ஜபம் பண்ணு. என்னிக்கு நீஜபம் பண்ணறச்சே, அந்த நெல்லெல்லாம் தானாப் பொரியறதோ.........அன்னிக்கு ஒன் மந்த்ரம் ஸித்தி ஆயிடுத்துன்னு அர்த்தம்" ன்னுட்டார்.




சிஷ்யனுக்கு சந்தேகம்.......... இது சாத்தியமா? மெல்ல ஸ்ருங்கேரி பெரியவாளையே அதை நிரூபிக்க முடியுமா?..ன்னு ரொம்ப தாழ்மையா கேட்டான். ஒரே
கூட்டம் கூடிடுத்து! பெரியவாளும் ஒடனே மணையைப் போட்டு நெல்லைப் பரப்பி ஒக்காந்து ஜபம் பண்ண ஆரம்பிச்சாளோ, இல்லியோ, அடுத்த நிமிஷம், "பொர
பொரன்னு" நெல் பொரி சத்தம். லேசா பொகையவும் ஆரம்பிச்சது. பெரியவா வஸ்த்ரத்தை எடுத்துட்டு பாத்தா!....... வெள்ளவெள்ளேர்னு நெல்லுப் பொரி!

சிஷ்யன் அழுதுண்டே ஸ்வாமிகள் பாதத்ல விழுந்தான்..........." என்று கூறி முடித்தார் பெரியவா.
"பெரியவா..........நீங்க...." ஹனுமத் உபாசகன் இழுத்தான்.
"என்ன? பெரியவா.........நீங்க அந்த மாதிரி பலகைலே நெல்லைப் பரப்பி ஒக்காந்து ஜபம் பண்ணி பொரிச்சுக் காட்டறேளா..ன்னு கேக்கப் போறியா?"
சிரித்தார்.
"இது போறும் பெரியவா. ஒங்க அனுக்கிரகம் இருந்தா அது ஒண்ணே போறும்" சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துவிட்டு விடைபெற்றான்.


panvel balagan



 
Solomon Paapaiya on Sanskrit

Solomon Paapaiya on Sanskrit



எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது. ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி? மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது. ஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும்.



தமிழ் ஒரு கண் என்றால் சம்ஸ்க்ருதம் மற்றொரு கண். இரண்டு கண்களும் முக்கியம். “பார்வை” சரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும் தேவை. இந்திய மண்ணில் விஷயம் தெரிந்தவராய் உருவாக ஒருவருக்கு இந்த இரண்டும் வேண்டும்.



எம்.ஏ. (தமிழ்) படிக்கும் போது, “வட எழுத்து நீக்கி வருவது சொல்” என்ற பொருள்பட இலக்கண சூத்திரம் படித்தேன். அதாவது தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் வடமொழி இருந்திருக்கிறது. எனவே தான் “அதை நீக்கி” என்று கூறியிருக்கிறார். ஆக, தமிழில் சம்ஸ்க்ருதம் இருந்தது. பிற்காலத்தில் தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தைத் தவிர்க்க “சமக்கிரதம்”, “சமற்கிரதம்” என்றெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டி இருந்தது. காரணம் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தாம்.



அது சரி “வடமொழி” என்றால்? சிலர் வடக்கிலிருந்து வந்ததால் என்று விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் வட (vata) என்ற சொல்லுக்கு ஆலமரம் என்று பொருள். ஆலின் கீழ் அமர்ந்து தான் உயரிய ஞான உபதேசங்கள் அருளப் பட்டன. அவற்றைக் கொண்ட மொழி; எனவே வடமொழி என்பேன். இது “பிரிட்டானிக்கா” கலைக்களஞ்சியம் தந்துள்ள விளக்கம். இது நமக்குத் தெரியாமல் போயிற்றே! அவன் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்!!


ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.


தமிழ் போலவே சமஸ்க்ருதமும் செம்மொழி. ஆக, சம்ஸ்க்ருதம் படிப்பது தமிழுக்குத் தொண்டு. இப்படிப் பலரும் அறிந்த மொழி, அனைவரும் பாராட்டும் மொழி, பதவிப் போட்டி காரணமாக அனைவரும் படிக்க முடியாமல் செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும். குறைந்த பட்சம் – ஆம் – குறைந்த பட்சம் பகவத் கீதையாவது படிக்கணும். சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொருவரும் புண்ணியவான். அன்னவர்கள் அனைவரையும் போற்றுகிறேன்.


(2012ம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து).


Solomon Paapaiya on Sanskrit « Sage of Kanchi
 
பகவானுடைய கிருபை

பகவானுடைய கிருபை


"நமக்கு தர்மம் கிடைக்க வேண்டுமானால், பண்ணிய கர்மாக்கள் பூர்ணமாக வேண்டுமானால், பகவானுடைய கிருபை அவசியம் தேவை என்பதை "அக்ஞாத ப்ரபவைர்வ சோபி" என்று ஆரம்பிக்கும் "யக்ஞநராயண தீக்ஷிதரால்" செய்யப்பட்ட ஸாயித்யரத்னாகரத்தில் உள்ள சுலோகம் கூறுகிறது. எங்கிருந்து உண்டாயிற்றென்று தெரியாத தன்மையுடைய வேதங்கள் தர்மத்தை தெரிவிக்கக் காரணமாக இருக்கின்றன. அவை அநேகவிதமான யஜ்ஞங்களைப் பண்ணு என்று ஆஜ்ஞை செய்கின்றன. அந்த யஜ்ஞகர்மாக்களுக்கு அதிபதி நீதான். யஜ்ஞேசுவரன் நீ. உன்னை ஆராதிக்காமல் எந்தக்கர்மாவின் பலனையும் ஒருவன் அடைய முடியாது என்று இதில் சொல்லப்பட்டிருக்கிறது.


: kamakoti.org
 
நைமிசாரண்யம் தெரியுமோ?


நைமிசாரண்யம் தெரியுமோ?


பெரியவாளுடைய பரமபக்தர் ஒருவருக்கு காது கேட்காது! புஸ்தகம் படிக்க முடியாதபடி பார்வைக் குறைபாடு! எதிரில் நிற்பவர்கள் கூட ஏதோ நிழல் மாதிரித்தான் தெரிவார்கள். அந்த வயசான பக்தருக்கு ரொம்ப தீவிரமான ஆசை ஒன்று இருந்தது. ஏக்கம் என்று கூட சொல்லலாம்.அது அவருக்கு ஒரு விதத்தில் வெறியாகவே இருந்தது.பாவம்! “சரஸ்வதி”யிடந்தானே மனக்குறையை சொல்ல வேண்டும்? பெரியவாளிடம் ரொம்ப மனஸ் உருகி வேண்டினார்.






“பெரியவா…எனக்கு ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், பகவத்கீதை, பதினெட்டு புராணங்கள் எல்லாத்தையும் படிச்சு என்னோட ஜன்மாவை கடைத்தேத்திக்கணும்….ஆனா, என்னால புஸ்தகம் படிக்க முடியாது. கண் பார்வை முக்காவாசி கெடையாது. காதால கேக்கலாம்..ன்னா காதும் கேக்கலை. நான் என்ன பண்ணுவேன்? பெரியவாதான் எனக்கு கதி”


அப்போது பெரியவாளை சுற்றி சில பண்டிதர்களும் அங்கே இருந்தார்கள். பெரியவா அவர்களிடம் “இவரோ ராமாயண, மஹாபாரதம்,புராணம் எல்லாத்தையும் படிக்கணும்ன்னு ரொம்ப ஆசைப் படறார்….கண் பார்வை செரியில்லே! என்ன பண்ணலாம்?”


சர்வஞ்யத்வம் என்பதின் முதல் தகுதியே தனக்கு எல்லாம் தெரிந்தும், அதைப் பற்றி கொஞ்சங்கூட சட்டை செய்யாமல் [ஆஞ்சநேய ஸ்வாமி மாதிரி] மற்ற பேருக்கு முக்யத்வம் குடுப்பதுதான். பண்டிதர்களுக்கு சரியான பதில் சொல்ல முடியவில்லை. பெரியவாளே சொன்னார்……


“நைமிசாரண்யம்ன்னு ஒரு க்ஷேத்ரம் இருக்கு தெரியுமோ?”….
“தெரியும்”
“அங்க என்ன விசேஷம்?”
“அங்கதான் ரிஷிகள்ளாம் புராணங்கள் கேட்டா……”
“புராணங்களை எழுதினது யாரு?”
“வ்யாஸர்….”
“வ்யாஸாச்சார்யாள் புராணங்கள் எழுதின எடம்ன்னு ஒரு ஸ்தலம் இருக்கு. “வ்யாஸகத்தி” ன்னு பேரு!…..”
பண்டிதர்களுக்கோ ஆச்சர்யம்! அவர்களுக்கும் இது புது விஷயமாக இருந்தது. நைமிசாரண்யம் போய்விட்டு வந்தவர்களுக்கு கூட இந்த இடம் பற்றி தெரிந்திருக்கவில்லை! ரொம்ப நுணக்கமான விஷயங்கள் கூட பெரியவாளுக்கு தெரியும்.



பக்தரை அருகில் அழைத்து “குடும்பத்தோட நைமிசாரண்யம் போயி, கொஞ்சநாள் அங்க தங்கு! வ்யாஸர் புராணங்கள் எழுதின எடத்ல விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணு! அப்புறம் ஒனக்கே எல்லாப் புராணங்களும் மனஸ்ல ஸ்புரிக்கும் !…”


நிச்சயமாக அந்த பக்தருக்கு ஸ்புரித்திருக்கும். பெரியவா சொன்னது அனுபவ ஸாத்யமான வழி! அநுக்ரஹ வழி!


???????????? ????????? : MahaPeriyava.Org
 
ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்! — ரா.கணபதி

ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்! — ரா.கணபதி



ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர, மூலமான ஒரே கடவுளுக்கென அந்த மந்திரமும் இல்லாதிருப்பது ஏன் என்பதே கேள்வி.


ப்ரணவம் எனும் ‘ஓம்’ மூலக்கடவுளுக்கே உரித்தான மந்திரந்தான் ஆயினும் வேறு பல மகான்களின் கருத்துக்கு மாறாக, சாஸ்திரக் கருத்தையே மட்டுமே ப்ரணவ ஜபம் செய்யலாம், ஏனையோர் முதலில் ‘ஓம்’ என்று கூறி அதோடு குறிப்பிட்டதொரு தேவதைக்கான மந்திரத்தைச் சொல்லலாமே தவிர, தனியாக ப்ரணவ ஜபம் செய்யலாகாது என்று கூறி வந்துள்ளார்.


ப்ரணவம் எனும் ஓம்காரம் நமக்குள் தன்னியல்பாகவே இதயத்தை ஒட்டிய அநாஹத சக்கரத்திலிருந்து எழும் ஒலி; எனவே சிலருக்குத் தன்னியல்பாகவே ‘ஓம்’ என்பது ஒலிக்கும். அவர்கள் மட்டுமே துறவியாய் இல்லாவிடினும் ப்ரணவ ஜபம் செய்யலாம் என்பது ஸ்ரீ பெரியவாளின் கருத்து.


இவ்விஷயமாக ஸ்ரீ பெரியவாளையே கேட்டுத் தெளிவு பெறவேண்டும் என்ற எண்ணத்துடன் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு, அப்பொழுது அவர்கள் முகாமிட்டிருந்த தேனம்பாக்கத்துக்குச் சென்றேன். நேரம்: மாலை ஐந்து மணி.


முகாமில் இருந்த கிணற்றின் ஒரு புறத்தில் இருந்த குடிலை ஒட்டிய பகுதியிலிருந்து ஸ்ரீபெரியவாள் தரிசனம் தருவார்கள்; கிணற்றின் மறுபுறத்திலி ருந்து மக்கள் தரிசனம் பெறுவார்கள்.


அன்றும் அப்படியே நடந்தது. நாங்கள் 40-50 பேர் இருந்தோம். வழக்கம் போல் அதில் பல்வேறு வயதினரும், பல்வேறு சமூகத்தினரும் இருந்தோம். ஓரிரு வெளிநாட்டவரும் இருந்தனர்.


தரிசனத்தின்போது ஓர் ஐயங்கார் மாது, நேற்றிரவு பெரியவாள் சொப்பனத்தில் வந்து ஏதோ ஒரு மந்திரம் உபதேசித்தீர்கள்; ஆனால் என் துரதிர்ஷ்டம். இன்று காலை அந்த மந்திரம் மறந்து போய்விட்டது!

பெரியவாள்
அவசியம் அந்த மந்திரத்தை மறுபடி உபதேசிக்க வேணும். எப்பொழுது மடியாக வந்து அந்தரங்கமாக உபதேசம் பெறலாம்?” என மிகவும் ஆதுரத்துடன் வினவினார்.



அப்பொழுது சாஸ்திரக் காவலரான ஸ்ரீ பெரியவாளா பேசுகிறார் என்று பேராச்சர்யம் அடையுமாறு அவர்கள் கூறிய மறுமொழி: மடியும் வேண்டாம்; அந்தரங்கமும் வேண்டாம்; பகிரங்கமாக எல்லோருக்குமாகச் (அம்மந்திரத்தை) சொல்கிறேன்.” – இப்படிச் சொல்லி கணீரென்ற தெய்வத்தின் குரலில், அம்பகவ”: அம் பகவ”: அம் பகவ”: என மும்முறை உபதேசித்தார்கள்.


இப்படியும் மந்திரமூர்த்தியே ஆகிய ஸ்ரீமஹாபெரியவாளிடமிருந்து கேளாமலே உபதேசமா என்ற பேருவகையுடன் அங்கு கூடியிருந்த எல்லோரும் ‘அம் பகவ’:மந்திரோபதேசம் பெற்றோம்.
ஆச்சர்ய உணர்வைத் தொடரும் விதத்தில் அவர்கள் ‘இதை ஜபிக்க எந்த நியமமும் (விதிமுறையும்) இல்லை. எவரும், எந்த நேரமும் ஜபிக்கலாம்’ என்றும் கூறினார்கள்.


மந்திரத்தின் உச்சரிப்பு: UMBHAGAVAHA (UMBRELLA என்பதிலுள்ள UM ஒலி) ‘பகவ’ என்பதன் முடிவான ‘வ’: என்பதை ‘வஹ’ என்று கூறவேண்டும். ஒலியியலின்படி ‘’ என்பதற்கும் ‘வஹ’ என்பதற்குமிடையே சிறு மாறுபாடு உண்டு. ஆனால் நாம் அதைக் கருத்தில் கொள்ள வேண்டியதில்லை. அன்று ஸ்ரீ பெரியவாளும் ‘வஹு’ என்றே ஸ்பஷ்டமாக மொழிந்தார்கள்.


ஆகக்கூடி எந்த மந்திர சாஸ்திர நூலிலும் காணப்படாத ‘அம் பகவ’: என்ற மகா மந்திரம் ஸ்ரீ பெரியவாளின் வாய்மொழியில் நமக்கெல்லாம் ஓர் அமுதச்சுனையாகக் கிடைத்துவிட்டது!
‘பகவ’: என்பதற்கு ‘பகவானே!’ என்று பொருள். ‘அம்’ என்பது ஒரு மங்கல அக்ஷரம்.


நெடுங்காலமாக எனக்குள் இருந்த கேள்விக்கான பதிலும் கிடைத்துவிட்டது! அனைத்து தெய்வங்களுமான மூலக் கடவுளுக்குரிய மந்திரம் ‘அம் பகவ!’எந்த தெய்வத்தை இஷ்டமூர்த்தியாகக் கொண்டவரும் இம் மந்திரத்தை அம்மூர்த்திக்குரியதாகக் கருதி ஜபிக்கலாம் என்றும், ‘பகவ;’ என்பது ஆண்பாலில் இருந்தாலும் பெண் தெய்வங்களை ஸ்மரித்தும் இதனை ஜபிக்கலாம் என்றுபெரியவரிடமிருந்து விளக்கம் பெற்றோம்.

ஸ்ரீபெரியவாள்
தமது நீண்ட நெடிய நூறாண்டு வாழ்வில் அன்று ஒரே ஒருநாள்தான் இப்படியொரு மந்திரத்தை – அதுவும் பஹிரங்கமாக மொழிந்திருக்கிறார்கள் என்பது இன்னொரு பேராச்சர்யம்!

https://groups.google.com/forum/#!topic/kanchiperiva/xbPoyb4h7Xw
 
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு


ஒரு திவலை ஜீவன் தான் ஒரு உயிராகிறது. அது பல உயிர்களை உண்டாக்கும். அந்த உயிர் உன்னதமாயிருக்க விரும்பும் தகப்பன் ஸம்ஸ்காரங்களை விடமாட்டான்.

ராமனின் பாட்டனார் அஜன். அஜனின் தந்தை ரகு. அஜகுல திலகன் என்று ஒரு இடத்திலும் வரவில்லை. மாறாக பல இடத்தில் கொள்ளுத் தாத்தாவின் பெயரைச் சேர்த்து ரகுநந்தனன், ரகுகுல திலகன், ரகுராமன் என்று ஸ்ரீராமர் சிறப்பிக்கப்படுகிறார். ராகவன் என்றாலும் ரகுகுலத் தோன்றால் என்று அர்த்தம். நம் வம்சம் நன்றாயிருக்க வேண்டும் என்று பாடுபடுபவர்களின் பெயரை மங்கும்படி பகவான் விடுவதில்லை! ரகுவின் தகப்பனாரான திலீபன் ஒரு பிள்ளை பிறக்க காமதேனுவின் பெண் நந்தினியை கண் போல் காத்து, அதன் குளம்படி மண்பட்டு புனிதனாகி தந்தை என்ற பேற்றை அடைந்தான்.

அதனால் தான் 'தவறாத சந்தானம்' என்று அதைப் பதினாறு பேறுகளில் ஒன்றாக வைத்தார்கள். ஒரு அபூர்வ விருந்தாளி வருகிறார். அவரை வரவேற்க என்னவெல்லாம் ஆயத்தம் செய்கிறோம். உங்களைப் பெருமைப்படுத்த ஈஸ்வரன் ஒரு ஜீவனை அனுப்ப தீர்மானித்திருக்கிறார் என்பது தான் கர்ப்பம். அந்த உயிர் உங்களுக்கு கட்டுப்பட்டு, உங்களோட லாப நஷ்டங்களைப் பகிர்ந்துண்டு வாழப்போறது. அதுக்கு மரியாதை பண்றதில்லையா?

Source: sage of Kanchi
 
கடவுளுக்கு பயப்படுங்கள்

கடவுளுக்கு பயப்படுங்கள்


* எந்தவித குற்றமும் செய்யாத பாவமற்றவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. தைரியம் அவன் முகத்தில் பிரகாசமாய் ஜொலிக்கும்.


* ராமநாமத்தை தாரக மந்திரம் என்பார்கள்.தாரகம் என்றால் பாவங்களைப் பொசுக்கி மேலே போவது எனப்பொருள்.


* நீ தானதர்மங்களைச் செய்தால் பலனை எதிர்பார்க்காமல் செய். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை.


* மருந்தை வாங்கி விட்டு சாப்பிடாமல் இருந்தால் அதன் வீரியம் குறைந்துவிடும். அதுபோல, மந்திரத்தை ஜெபிக்காமல் இருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும்.


* உன்னுடைய துன்பத்தையே பெரிதாக எண்ணாதே.உலகம் உன்னால் சிறிதாவது நன்மை பெற வேண்டும் என்று பாடுபட முயற்சி செய்.


* முதலில் மனிதன் மிருகநிலையிலிருந்து மனிதனாக மாறவேண்டும். அப்புறம் தெய்வமாகத் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும்.


* இறைவனே சர்வசாட்சியாக இருந்து நம் செயல்களுக்குப் பலன் தருகிறான் என்ற பயஉணர்ச்சி வேண்டும். அந்த எண்ணம் தான் தர்மவழியில் செல்ல நமக்கு துணை நிற்கும்.


காஞ்சிப்பெரியவா

Source: Sage of Kanchi
 
மகா பெரியவரின் ஞாபக சக்தியும்,நகைச்சுவை&

மகா பெரியவரின் ஞாபக சக்தியும்,நகைச்சுவையும்.

ஒருநாள் காலை தர்சனத்துக்கு ஒரு வயஸான தம்பதி வந்திருந்தனர். பெரியவா ஒரு வாதா மரத்தின் கீழ் அமர்ந்து தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார். தம்பதிகள் பழங்களை சமர்ப்பித்துவிட்டு நமஸ்கரித்தனர்.


“இதே மாதிரி வாதா மரம் ஒங்காத்து வாசல்ல இருந்துதே!……இன்னும் இருக்கோ?….”


“ஆமா…இன்னும் இருக்கு! பெரியவா பாத்து இருவது வர்ஷத்துக்கு மேலேயே இருக்கும்….இப்போ நன்னா பெருஸா வளந்திருக்கு; நெறைய காயக்கறது; தெருப் பசங்க கல்லை விட்டெறிஞ்சு வாதம் பழத்தை பொறுக்கித் திங்கறதுகள்..”


“கூடத்ல ஒரு பத்தாயம் இருந்துதே!….அதுல கரையான் அரிச்சு ரிப்பேர் பண்றா..ப்ல ஆயிருந்துதே!..”


“ஆமா….அத அப்போவே ரிப்பேர் பண்ணியாச்சு. அதுலதான் சாப்பாட்டு நெல்லைக் கொட்டி வெக்கறோம்….”
“ஒரு சே…ப்பு பசுமாடு கன்னு போடாம இருந்துதே!…..”


“அது ஆறு கன்னு போட்டுது பெரியவா…..இப்போ, சமீபத்லதான் தவறிப் போச்சு. எல்லாக் கன்னும் நன்னா இருக்கு…நல்ல வம்சம்….”


“ஐயங்கார் கணக்குப்பிள்ளை இருந்தாரே! திருநக்ஷத்ரம் எம்பதுக்கு மேலே இருக்குமோ இப்போ?….”


“சதாபிஷேகத்துக்கு ரெண்டு வர்ஷம் முன்னாடி, வைகுண்டம் போய்ட்டார் பெரியவா….”


“எட்டுக்குடி முருகனுக்கு தைப்பூசம் காவடி எடுக்கற வழக்கமாச்சே! ஒங்க புத்ராள் யாராவுது வந்து காவடி எடுக்கறாளா?…”


“பெரியவா க்ருபைல எட்டுக்குடி முருகன் கைங்கர்யம் நடந்துண்டிருக்கு..”


“வடுவூர் துரைஸ்வாமி ஐயங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள்,பம்மல் சம்மந்த முதலியார் நாவல்கள், மதனகாமராஜன், விக்ரமாதித்தன் புஸ்தகங்கள் எல்லாம் அலமாரி நெறைய இருந்துதே! இருக்கா? யாராவுது படிக்கறாளா?….”


“எல்லாப் புஸ்தகமும் இருக்கு…ஆனா யாரும் படிக்கறதில்லே பெரியவா…..”


“ராமாயண பாராயணம் பண்ணிண்டிருந்தியே! நடக்கறதா..?”


“கண் செரியாத் தெரியறதில்லே, அதுனால ஒரு சர்க்கம் மட்டும் படிக்கிறேன்…”


கேட்டுக்கொண்டிருந்த பாட்டிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! பாட்டி சொன்னாள்….”எத்தனையோ வர்ஷத்துக்கு முன்னாடி பெரியவா எங்க க்ராமத்துக்கு வந்தப்போ, எங்காத்துக்கு வந்து, கொஞ்ச நேரம் இருந்திருப்பேள் …..ஆனா, எப்டி இத்தனை நுணுக்கமா எல்லாத்தையும் பாத்து, இத்தனை வர்ஷத்துக்கப்புறம் கூட எதையுமே மறக்காம, அவ்வளவு ஞாபகமாக் கேக்கறேளே!…பெரியவா கேட்டதுல பாதி விஷயங்கள், அந்தாத்துல இருக்கற நேக்கே நெனைவுல இல்லே!……”


பெரியவா படாரென்று ஒரு பெரிய விஷயத்தை போட்டுடைத்தார்……..


“ஆமா……இதெல்லாம் என்ன ஞாபகசக்தி? ஈஸ்வரன் ஞாபகம் எப்பவுமே இருக்க மாட்டேங்கறதே!…”

ஸூர்யனுக்கு அக்னியின் நினைவு இல்லையாம்!!



குறை என்று வரும்போது, பெரியவா மாதிரி மஹான்கள் தங்களை முன்னிறுத்தி சொல்லுவார்கள். நம்மை மாதிரி அல்பங்களோ, குறை என்றால் அடுத்தவர்களைத்தான் முன்னிறுத்திச் சொல்லுவோம்



Source:Periyava Devotees
 
Never judge a person on his external appearance

periyva-16.jpg


Never judge a person on his external appearance



மகான் கர்நாடாகாவில் 1979 - ம் வருடம் பாதயாத்திரை மேற்கொண்டு இருந்தார். பயணித்தப்பிறகு, மாலை நேரத்தில் ஓர் இடத்தில தங்குவது வழக்கம்.

அன்றும் வழக்கம்போல் காலையில் ஒரு குளத்தின் கரையில் அமர்ந்து, பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது, மகானை பார்க்க இரு அந்தண இளைஞர்கள் அங்கே வந்தனர்.

தரக்குறைவான ஆடைகளுடன் , குளிக்காத தோற்றத்தோடும் , படிப்பு அறிவே கொஞ்சமும் இல்லாதவர்களை போல் காட்சியளித்த அவர்களை பார்த்த டாக்டர் ராமமூர்த்தி முகம் சுளித்தார்.

மகானை பார்க்க வரும்போது குளித்துவிட்டு, சுத்தமான அடைகளை அணிந்துகொண்டு வரவேண்டாமோ?

மகானை வழங்கி எழுந்த அவர்களை கணிவுடன் பார்த்து, மகான் கேட்டார்,

"அத்யயனம் முடிந்தாகி விட்டதா?

அவர்களும் தலையை ஆட்டினார்கள்.

"ரிக்வேதம்" சொல்லுங்கள்" என்று மகான் கட்டளை இட்டவுடன், அருவியிலிருந்து நீர் பெருக்கெடுத்து வந்தது போல், அவர்கள் வேதத்தை சொல்ல தொடங்கினார்கள்.

கண்களை மூடியவாறு மகான் அதை கேட்டு கொண்டிருந்தவர் - பிறகு அவராக கையமர்த்தியபின் தான் அவர்கள் வேதம் சொல்வதை நிறுத்தினார்கள்.

"எங்கிருந்து வருகிறீர்கள்?" - மகான் கேட்டார்.

இருபது மைல்களுக்கு அப்பால் இருந்த ஓர் இடத்தை சொன்னார்கள் இளைஞர்கள்.

"அங்கிருந்து எப்படி வந்தீர்கள்?

"நடந்துதான் வந்தோம்"

"திரும்பி போகும்போது?

"நடந்துதான் போகவேண்டும்"

மகானை பார்க்க இருபது மைல் தூரத்தை நடந்தே கடந்து வந்து இருகிறார்கள்.

உடம்பில் அழுக்கு ஏன் சேராது?

மடத்தின் மூலமாக அவர்களுக்கு புதிய ஆடைகளை கொடுத்து, உண்ண உணவு கொடுத்து அனுப்பினார், மகான்.

அவர்களை பற்றி தவறாக நினைத்துகொண்டிருந்த டாக்டரின் பக்கம் திரும்பினார் மகா பெரியவர்.

"மனிதனின் வெளிப்படையான தோற்றத்தை வைத்து, அவனது உண்மையான யோக்கியதை அறியாது மனதை குழப்பிக் கொள்ளக்கூடாது", என்றார்.


அவர் மனதில் என்ன நினைத்தார் என்று இவருக்கு எப்படி தெரியும்? டாக்டர் மெய்சிலிர்த்தார்
 
குழந்தை வரம் தந்த கொய்யாப்பழம்

குழந்தை வரம் தந்த கொய்யாப்பழம்

சென்னையில் தற்போது வசித்து வருபவர் சூரியகுமார். மகா பெரியவாளின் தீவிர பக்தர்.

சூரியகுமாரின் மனைவி விஜயலட்சுமி, மயிலாப்பூரில் ஒரு பள்ளியில் ஆசிரியையாக இருந்தார். இல்லறம் இனிமையாகப் போய்க்கொண்டிருந்தாலும், இந்தத் தம்பதியருக்குக் குழந்தைப் பேறு அமையவில்லை. நாட்கள் தள்ளிக் கொண்டே போயின.

சூரியகுமாருக்கு மிகவும் பழக்கமான ஆன்மிக அன்பர் ஒருவர், ‘‘மனதில் ஒரு குருவை நினைத்துக் கொள். அவரையே சரண் அடைந்து விடு. அவரிடம் உன் பிரார்த்தனையை வை. நிச்சயம் உனக்கு என்ன தேவையோ, அதை அருளுவார்’’ என்று சொல்லி இருந்தார்.

அதன்படி தன் குடும்பத்துக்கு மிகவும் இஷ்டமான காஞ்சி மகா ஸ்வாமிகளையே குருவாக மனதில் வரித்துக்கொண்டு, அவரிடம் தன் பிரார்த்தனையை வைத்தார். தினமும் மகா ஸ்வாமிகளை வணங்கினார். நாட்கள் இப்படிப் போய்க்கொண்டிருந்தன.

அன்றைய தினம் மகர சங்கராந்தி. இரவு சூரியகுமாரின் கனவில் மகா பெரியவா வந்தார். சூரியகுமாரிடம், ‘எனக்குக் கொய்யாப்பழம் வேண்டும்’ என்று கேட்டார் பெரியவா. சிலிர்ப்புடன் துணுக்குற்று எழுந்தார் சூரியகுமார். ‘பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்கிறாரே… எப்படியாவது காஞ்சிபுரம் சென்று அவரிடம் சேர்ப்பித்தாக வேண்டும்’ என்று அந்த நள்ளிரவிலேயே மனதுக்குள் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். அதற்கேற்றாற்போல் அப்போது மகா பெரியவா காஞ்சிபுரத்தில்தான் இருந்தார்.

அடுத்த நாள் மாட்டுப் பொங்கல். அன்றைய தினம் சென்னை நகர் முழுதும் கொய்யாப்பழத்தைத் தேடி அலைந்தார் சூரியகுமார். அது சீஸன் இல்லாததால், எங்கேயும் கொய்யாப்பழம் கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு வழியாக சூரியகுமாரின் அண்ணன் ரவிகுமார் பாரிமுனையில் ஒரு கடையில் இருந்து கொய்யாப்பழங்களை எப்படியோ தேடி வாங்கி வந்து விட்டார்.

மாட்டுப் பொங்கல் அன்று காலை ரவிகுமார், சூரியகுமார் & இருவரும் தம்பதி சமேதராக காஞ்சி ஸ்ரீமடத்துக்குப் புறப்பட்டனர். பெரியவா கேட்ட கொய்யாப்பழத்தோடு வேறு சில பழங்களும் வாங்கி வைத்திருந்தனர்.

விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் காஞ்சி ஸ்ரீமடத்தில் தாங்க முடியாத கூட்டம். பெரியவாளின் சந்நிதிக்குச் சென்று திரும்புவதே சிரமம் என்பதால், சென்னையில் இருந்து வந்திருந்த பல பக்தர்களும் தொலைவில் இருந்தே மகா பெரியவாளை தரிசனம் செய்துவிட்டுத் திரும்பினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!

இத்தனை கூட்டத்தில் நீந்திப் போய் எப்படிப் பெரியவாளிடம் சென்று, கொய்யாப்பழங்களைக் கொடுப்பது என்று சகோதரர்கள் இருவரும் யோசித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீமடத்தில் பணி புரியும் & தங்களுக்குப் பரிச்சயமான ஒரு நண்பரைப் பார்த்தார்கள். இருவரும் முகம் பிரகாசிக்க, அந்த நண்பரை நோக்கி ஒருவாறு கூட்டத்தில் புகுந்து சென்றார்கள்.

அந்த நண்பரும், இவர்களை முகம் மலரப் பார்த்துவிட்டு, ‘என்ன?’ என்பதுபோல் கேட்டார்.

அதற்கு சூரியகுமார், ‘‘பெரியவா நேத்து என் கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதான் வாங்கிண்டு வந்திருக்கோம். பெரியவாகிட்ட அதைக் கொடுத்துட்டு ஆசிர்வாதம் வாங்கணும்’’ என்றார்.

அந்த நண்பரின் முகம் மாறியதே பார்க்கணும். ‘‘தோ பாருப்பா… நீ என் ஃப்ரெண்டுதான். அதுக்காக, பெரியவாளை உடனே பாக்கணும்கறதுக்காக ‘என்கிட்ட கொய்யாப்பழம் வாங்கித் தரச் சொன்னார். மெட்ராஸ்லேர்ந்து வாங்கிண்டு வந்திருக்கேன்’னு பொய்யெல்லாம் சொல்லாதே’’ என்று படபடவென்று பேச… ரவிகுமாரும் சூரியகுமாரும் அதிர்ந்தார்கள்.

கேட்டவருக்குத் தெரியாதா, இதை எப்படி வாங்கிக்கொள்ள வேண்டும் என்று?!

ஸ்ரீமடத்து அன்பரின் முகம் போன விதத்தைப் பார்த்தால் இவர்கள் இருவரும் சொன்ன விஷயத்தை நம்பியதாகத் தெரியவில்லை. தன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினார். பிறகு, ‘‘பெரியவாளை உடனே தரிசனம் பண்ணிட்டுப் போகணும்கறதுக்காக அவர் என் கனவில் வந்தார்… கொய்யாப்பழம் கேட்டார்… அப்படி இப்படின்னு எல்லாம் பொய் சொல்றேளா? மகா பெரியவாளே உங்க கனவில் வந்து கொய்யாப்பழம் கொண்டு வான்னு சொன்னாரா?’’ என்று கிண்டலும் கேலியுமாகக் கேட்டார். அப்போது மகா பெரியவாளின் கைங்கர்யத்தில் இருக்கும் ஆசாமி ஒருவர், இந்த அன்பரைப் பார்த்துக் கை நீட்டி அவசரமாக அழைக்க… இவர்களிடம் எதுவும் சொல்லாமலே பொசுக்கென நகர்ந்து போய்விட்டார்.

கனவில் பெரியவாளின் அருட்காட்சி கிடைக்கப் பெற்ற சூரியகுமார், அதிர்ந்து போனார். “இன்னிக்கு எத்தனை நேரமானாலும் பரவால்லை. வரிசையில் நின்னு, இந்தக் கொய்யாவை பெரியவாகிட்ட சமர்ப்பிச்சுட்டுத்தான் மெட்ராஸ் கௌம்பப் போறோம்’’ என்று தன் அண்ணன் ரவிகுமாரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, பெரியவா தரிசனத்துக்காகக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் தன்னை இணைத்துக்கொண்டார் சூரியகுமார். அவரைத் தொடர்ந்து அவருடன் வந்த குடும்பத்தினர் அனைவரும் அதே வரிசையில் இணைந்தனர்.

பெரியவா கேட்ட கொய்யாப்பழங்களை மட்டும் பயபக்தியுடன் தன்வசம் ஒரு பையில் வைத்துக்கொண்ட சூரியகுமார், அவர் சந்நிதானத்தில் சமர்ப்பிக்கவேண்டிய மற்ற பழங்களைத் தன் அண்ணன் ரவிகுமாரிடம் கொடுத்தார்.

வரிசையில் திரளான பக்தர்கள் நின்றிருந்தாலும், அனுபவம் வாய்ந்த ஸ்ரீமடத்து அன்பர்கள் கூட்டத்தை வெகு நேர்த்தியாகக் கட்டுப்படுத்திக்கொண்டு வந்ததால், சற்று விரைவாகவே வரிசை நகர்ந்து போய்க்கொண்டிருந்தது.

மதியம் ஒண்ணரை மணி வாக்கில் பெரியவா திருச்சந்நிதி அருகே வந்துவிட்டனர் சூரியகுமாரும் ரவிகுமாரும். இருவர் முகங்களிலும் பெரியவாளை தரிசிக்கப் போகிற பரவசம். அந்த மகானின் அருகே நெருங்கிவிட்டோம் என்கிற ஆனந்தம். ‘ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர’ கோஷம் எங்கும் முழங்கியபடி இருந்தது.

சர்வேஸ்வரனாக அந்த பரப்பிரம்மம் கொஞ்சமும் களைப்பே இல்லாமல் கன ஜோராகக் காட்சி தந்துகொண்டிருந்தது.

களைப்பும் கவலையும் இந்த மனித குலத்துக்குத்தானே?! மகான்களுக்கு ஏது!

பெரியவா தன் வலக் கையை உயர்த்தி, தன் முன்னால் நின்று கொண்டிருக்கும் சகோதரர்கள் இருவரையும் பார்த்து ஆசிர்வதித்தார். கனிவும் புன்னகையும் மாறா முகத்துடன் இருவரையும் தன் பார்வையால் ஏறிட்டார் பெரியவா.

கொய்யாப்பழங்கள் இருந்த பையைக் கக்கத்தில் இடுக்கிக் கொண்டு மகா ஸ்வாமிகளின் அருகே கைகட்டி, வாய் பொத்தி பவ்யமாக அவரது திருமுகத்தையே ஏக்கமாகப் பார்த்தபடி நின்றிருந்தார் சூரியகுமார். பக்திப் பரவசத்தின் வெளிப்பாடாக அவரது கண்கள் கலங்கிக் காணப்பட்டன.

‘‘பெரியவாளை எப்படியும் இன்னிக்கு தரிசனம் பண்ணியே ஆகணும்னு ஒரு சங்கல்பம்.. அதான் குடும்பத்தோட புறப்பட்டு வந்துட்டோம்’’ & சூரியகுமார் நா தழுதழுத்தபடி சொன்னார்.

‘‘கொய்யாப்பழம் கேட்டேனே… கொண்டுவந்தியோ?’’ பெரியவா கேட்டதும், சூரியகுமாரும் ரவிகுமாரும் ஆடிப் போனார்கள். இருவரின் மனைவிகளும் விதிர்விதிர்த்துப் போனார்கள். இத்தனைக்கும் சூரியகுமாரின் கையில் இருக்கும் துணிப்பைக்குள் இருப்பது கொய்யா என்பதை எவராலும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது.

‘‘கொய்யாப்பழம் கேட்டேனே… கொண்டுவந்தியோ?’’ பெரியவா கேட்டதும், சூரியகுமாரும் ரவிகுமாரும் ஆடிப் போனார்கள். இருவரின் மனைவிகளும் விதிர்விதிர்த்துப் போனார்கள். இத்தனைக்கும் சூரியகுமாரின் கையில் இருக்கும் துணிப்பைக்குள் இருப்பது கொய்யா என்பதை எவராலும் பார்த்துத் தெரிந்துகொள்ள முடியாது.

கூடவே, பெரியவாளுக்கு அருகே கைங்கர்யத்துக்காக நின்று கொண்டிருந்த இவர்களின் நண்பரும் (‘பெரியவா தரிசனத்துக்காகப் பொய் சொல்லாதே’ என்று சொல்லி விட்டுச் சென்றாரே, அவர்தான்!) அதிர்ந்து போனார். ‘இதைத்தானே முதலில் என்னிடம் சொன்னார். பெரியவா கனவில் வந்து கொய்யாப்பழம் கேட்டார். அதை அவரிடம் சமர்ப்பிக்க வேண்டும்’ என்றல்லவா சொன்னார்?! நான் அதைக் கிண்டலும் கேலியுமாக பரிகசித்துவிட்டு வந்தேனே’ என்று தனக்குள் மருகினார். ‘என்னை மன்னிச்சிடுப்பா’ என்று சூரியகுமாரைப் பார்த்துச் சொல்லாத குறையாகக் கையெடுத்துக் கும்பிட்டார், மன்னிப்புக் கோரும் தொனியில்!

பெரியவாளே வாய் திறந்து கேட்டதும், துணிப்பையில் இருந்து கொய்யாப்பழங்களை பரபரப்புடன் வெளியில் எடுத்தார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதிக்கு முன்னால் இருக்கிற ஒரு காலி மூங்கில் தட்டில் அவற்றை வைத்தார்.

‘‘இதை அலம்பிட்டியோ?’’ – கொய்யாவைக் காட்டி சூரியகுமாரிடம் கேட்டார் பெரியவா.

சூரியகுமார் தன் அண்ணன் ரவிகுமாரின் முகத்தைப் பார்க்க… அவரோ உடன் இருந்த தன் துணைவியார் மற்றும் சூரியகுமாரின் மனைவியைப் பார்க்க… அனைவருமே உதடு பிதுக்கினார்கள்.

சட்டென்று சுதாரித்துக்கொண்ட சூரியகுமார், ‘‘கௌம்பற அவசரத்துல கொய்யாவை அலம்பறதுக்கு மறந்துட்டோம் பெரியவா. இதோ, இப்ப… இப்பவே அலம்பிடறோம்’’ என்று கொய்யாப்பழங்களைக் கையில் எடுத்துக்கொண்டு சுற்றும்முற்றும் பார்த்தார்.

அதற்குள், பெரியவாளின் கைங்கர்யத்துக்காக நின்றிருந்த சீடன் ஒருவன் பித்தளைச் சொம்பில் தண்ணீர் எடுத்து வந்தான். அங்கேயே ஒரு ஓரமாகப் போய் கொய்யாப்பழங்களைத் தண்ணீர் விட்டு அலம்பினார் சூரியகுமார். ஈரம் சொட்டச் சொட்ட அந்தப் பழங்களை உதறியபடி எடுத்து வந்து, பழையபடி மூங்கில் தட்டில் வைத்தார்.

பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.

அந்தப் பரப்பிரம்ம சொரூபி மூங்கில் தட்டைப் பார்த்தார். பிறகு, அதில் இருந்து ஒரு கொய்யாவைத் தன் கையில் எடுத்தார். பச்சை நிறமும் மஞ்சள் நிறமும் கலந்து நல்ல பழுத்த பழமாகக் காட்சி அளித்தது பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த கொய்யா. தன் வலது உள்ளங்கையில் அதை வைத்துக்கொண்டு இடது உள்ளங்கையால் அதன் மேல் ஒரு அழுத்து அழுத்தினார். அவ்வளவுதான். கொய்யாப்பழம் ‘பொளக்’கென இரண்டு சரி பாதியாக உடைந்தது.

க்ஷண நேரத்துக்குள் ஒரு பாதியைத் தன் வாய்க்குள் போட்டுக் கொண்டார் மகா பெரியவா. மற்றொரு பாதியை சூரியகுமாரிடம் கொடுத்து அவரையும் அவருடைய மனைவியையும் சாப்பிடச் சொன்னார்.

மிகுந்த பவ்யத்துடன் பெரியவா தந்த பிரசாதமான பாதி கொய்யாவை வாங்கிக்கொண்டார் சூரியகுமார். பெரியவாளின் சந்நிதியிலேயே சாப்பிடும்படி உத்தரவானது. எனவே, பாதி கொய்யாவில் ஒரு பகுதியை எடுத்துத் தன் மனைவியிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார். மறு பாதியைத் தான் சாப்பிட்டார்.

அங்கு கூடி இருந்த அனைவரும் இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து மெய்சிலிர்த்துப் போனார்கள். ‘இந்தத் தம்பதிக்கு எப்பேர்ப்பட்ட ஆசி கிடைத்திருக்கிறது’ என்று நெகிழ்ந்து போனார்கள்.

அதன்பிறகு கொய்யாப்பழத்தின் சிறப்பு, அதன் மருத்துவ குணம், என்னென்ன நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்றெல்லாம் ஒரு நீண்ட உரையாற்றினார் மகா பெரியவா. சூரியகுமார் குடும்பம் உட்பட வந்திருந்த அனைவரும் இமை கொட்டாமல் இந்த உரையைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

‘கொய்யாப்பழ படலம்’ முடிந்தது. மகா பெரியவா எழுந்து தன் ஜாகைக்குச் சென்றார். பக்தர்கள் கன்னத்தில் போட்டு தரிசித்துவிட்டு, அங்கிருந்து நகர ஆரம்பித்தனர்.

மதியம் ஸ்ரீமடத்திலேயே போஜனத்தை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பினர் சூரியகுமார் குடும்பத்தினர்.

அடுத்து வந்த ஒரு சில நாட்களிலேயே கர்ப்பம் தரித்தார் சூரியகுமாரின் மனைவி.

பெரியவா தந்த பிரசாதத்தின் மகிமை அதுதான்.

அதுவும் பெரியவாளே விருப்பப்பட்டுக் கனவில் கேட்டு வாங்கி, திரும்பித் தந்த பிரசாதம் ஆயிற்றே!

பெரியவாளின் பரிபூரண அனுக்ரஹத்தோடு சூரியகுமார் தம்பதிக்குத் தாமதமாகப் பிறந்த ஒரே மகளான மதுராம்பிகா, தற்போது பொறியியல் படித்து வருகிறாள்.



source:https://groups.yahoo.com/neo/groups/uzhavaarapani/conversations/messages/4075
 
ஆற்காடு நவாபை அசர வைத்த ஜோதிடர்!

ஆற்காடு நவாபை அசர வைத்த ஜோதிடர்!








நா ன் சொல்லும் நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் ஆகிறது. அப்போது என் அப்பா பி.எம். நடராஜ சர்மா, திருச்சி பிஷப் ஹீபர் உயர்நிலைப் பள்ளியில் சம்ஸ்கிருத ஆசிரியராகப் பணியாற்றினார். காஞ்சி மகா ஸ்வாமிகள்- ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் மரியாதையும் பக்தியும் கொண்டவர் அவர்.


திருச்சி மாவட்டத்தில், காவிரியின் வடகரையில் உள்ளது நத்தம் கிராமம். ஒரு முறை மகா ஸ்வாமிகள் அங்கு முகாமிட் டிருந்தார். அவர் நடத்தும் ஸ்ரீதிரிபுர சுந்தரி ஸ்ரீசந்திர மௌலீஸ்வரர் பூஜையை தரிசிக்க விரும்பினார் என் அப்பா. தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் வெள்ளிக் கிழமை இரவில் நத்தம் கிராமத்தை அடைந்தார். பூஜை முடிந்தது. அப்பாவை அங்குள்ள எவருக்கும் தெரியாது. எனவே, எவரும் உபசரிக்கவில்லை. மகா ஸ்வாமிகள் தந்த விபூதிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டுக் கொண்டு பந்தலில் ஒரு மூலையில் படுத்து விட்டார் அப்பா. அடுத்து வந்த சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் அப்படியேதான் கழிந்தன! பூஜைகளையும், ஆராதனையையும் கண்ணாரக் கண்டு தரிசித்தார்.




மூன்றாம் நாள் விநாயகர் சதுர்த்தி. சிறப்பு பூஜைகள் முடிந்ததும் ஸ்வாமிகளிடம் பிரசாதம் பெறச் சென்ற என் அப்பா, ‘‘நான் ஊருக்குப் போய் வருகிறேன்!’’ என்றார். நிமிர்ந்து பார்த்த ஸ்வாமிகள், ‘‘முதலில் பிள்ளையாருக்கு முன் உள்ள கொழுக்கட்டையை எடுத்துச் சென்று, நிதானமா சாப்பிட்டப்புறம் வாங்கோ. ஊருக்குப் போறதைப் பத்தி பேசிக்கலாம்!’’ என்றார். ‘ஊருக்குப் போய் வருகிறேன்’ என்று ஒரு மரியாதை நிமித்தம் சொன்ன தற்கு ‘முதல்ல சாப்பிட்டு வா’ என்கிறாரே ஸ்வாமி கள்?! அப்பாவுக்கு பிரமிப்பு. ‘சரி’ என்று சாப்பிடப் போனார்.

சாப்பிட்டு முடித்ததும் அப்பாவை அழைத்து விசாரித்தார் ஸ்வாமிகள். என் அப்பா, லால்குடி தாலூகாவில் உள்ள புதுக்குடி சீனிவாச ஜோதிடரின் பிள்ளை வழிப் பேரன் என்பதை அறிந்ததும் பெரியவா மிகவும் மகிழ்ச்சியடைந்தார். என் அப்பாவின் தாத்தாவைப் பற்றியும் அவரது காலத்தில் நடந்த பல நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து சொன்னார் ஸ்வாமிகள். அப்பாவுக்கோ ஆச்சரியம்!




ஸ்வாமிகள் தொடர்ந்தார்: ‘‘உன்னோட தாத்தா மலையாள தேசம் போய் ஜோதிஷத்தை முறையா கத்துண்டு வந்தவர். தேவதைகளின் உபாசனையும் உண்டு. அவர், ஆற்காடு நவாபுக்கு ஜோசியர் ஆனது ஒரு சுவாரஸ்யமான நிகழ்ச்சி. அப்போது திருச்சி ராப்பள்ளி, ஆற்காடு நவாப் ஆட்சியில் இருந்தது. நவாப் பிடம் பல ஜோசியர்கள் உண்டு. ஒரு நாள் நவாப் தன் கச்சேரியில் (அரசவையில்) இருந்த ஜோசியர்களுடன், தனது ஆட்சிப் பிரதேசத்தில் இருந்த அனைத்து ஜோசி யர்களையும் அவைக்கு வரும்படி அறிவித்தார். புது ஜோசியர்கள் பலரும் கூடினர். அதுல உன்னோட புதுக்குடி தாத்தாவும் ஒருத்தர்.



கச்சேரிக்கு நவாப் வந்ததும் திவான் எழுந்து நின்று அங்கு கூடி இருந்த ஜோதிடர்களைப் பார்த்து, ‘உங்களுக்கெல்லாம் இன்று ஒரு போட்டி வைக்கப் போகிறார் நவாப். இன்று நம் நவாப், கோட்டையில் இருந்து எந்த வழியாக வெளியேறி, வேட்டைக்குப் போகப் போகிறார் என்று நீங்கள் எல்லோரும் ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுத் தர வேண்டும். எல்லாக் கூடுகளும் முத்திரையிடப்பட்டு எனது பாதுகாப்பில் இருக்கும். நவாப் திரும்பியதும் கூடுகளின் முத்திரைகள் உடைக்கப்பட்டு ஓலைகள் படிக்கப் படும். யார் எழுதியது சரியாக இருக்கிறதோ அவருக்கு நவாப் தக்க மரியாதை செய்வார்!’ என்று அறிவித்தார். உடனே எல்லா ஜோசியர்களும் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என்று அவரவர் கணக்குப்படி ஓலையில் எழுதிக் கூட்டுக்குள் போட்டுக் கொடுத்தார்கள்.



கடைசியில், அன்று நவாப் கோட்டையின் பிரதான வாசல்கள் வழியாகப் போகவே இல்லை. மேற்கு வாசலின் வடக்குப் புறம் (தற்போது மெயின்கார்டு கேட் எனப்படும் வாயிலுக்கு வடக்கே பெட்ரோல் பங்க் இருக்கும் வழி) கோட்டை மதிலை இடித்து வெளியேறி, மேற்குத் திசையில் உறையூர் நோக்கிக் கொஞ்ச தூரம் சென்றார். பிறகு, வடக்குத் திசையில் திரும்பி காவிரிக் கரை வரை போனார். அதன் பிறகு தெற்கு நோக்கித் திரும்பி வடக்கு ஆண்டார் வீதியில் இடிக்கப்பட்ட வாசப்படி (புதுப்படி சந்து என்று தற்சமயம் பெயர்) வழியாக மலைக்கோட்டை வடக்கு வீதியில் நுழைந்தார். பிறகு, கிழக்குத் திசையில் திரும்பி சறுக்குப் பாறைத் தெரு வழியாகக் கிழக்கு ஆண்டார் வீதிக்கு வந்தார். மலையை வலமாக வந்து தற்சமயம் உள்ள சின்னக் கடைத் தெரு வழியாக இப்போ டவுன்ஹால் என்று சொல்லப்படுகிற கச்சேரிக்கு வந்து விட்டார். வேட்டையாடவே இல்லை.

நவாப் கச்சேரிக்குத் திரும்பிய பின், ஜோசியர்கள் கொடுத்த கூடுகள் ஒவ்வொன்றும் முத்திரை உடைக்கப்பட்டு பிரிக்கப்பட்டன. ஓலைகள் எடுத்துப் படிக்கப்பட்டன. உன்னோட தாத்தா எழுதிக் கொடுத்த ஓலை ஒன்று மட்டுமே துல்லியமாக நவாப்பின் நடவடிக்கையைக் குறிப்பிட்டிருந்தது. நவாப் ஆச்சரியத்தில் மூழ்கிப் போனார். கச்சேரில இருந்தவர்களும் பிரமிச்சுப் போயிட்டா.




அப்புறம் நவாப், உன்னோட தாத்தாவுக்குப் புதுக்குடியில் 80 ஏக்கர் நிலம் பட்டயம் செய்து கொடுத்தார். மலைக்கோட்டை தெற்கு வீதில மேற்கே ஒரு கருப்புக் கோயில் இருக்கு. அதுக்குப் பக்கம் இரும்புக் கிராதி போட்ட ஒசரமான ஒரு பெரிய வீடு இருக்கு. அதன் எதிரே திண்ணை உள்ள ஒரு சின்ன வீடு உண்டு. இந்த ரெண்டு வீட்டையும் தாத்தாவுக்குக் கொடுத்தார். அந்த 80 ஏக்கர் நிலம், மலைக்கோட்டைப் பகுதியில் தந்த அந்த ரெண்டு வீடுகள் எல்லாத்தையும் சிறுகச் சிறுக தர்ம காரியங்களுக்கே செலவு பண்ணினார்’’ என்று கூறி முடித்தார் மகா ஸ்வாமிகள். இதன் பின் அப்பாவுக்கு ஆசியளித்து வழியனுப்பி வைத்தார் மகா ஸ்வாமிகள்.


மகா ஸ்வாமிகளின் தரிசனத்துக்குப் போய், அவரிடம் இருந்து பூரண அனுக்ரஹமும் பெற்று வந்த என் அப்பா, இந்த சம்பவத்தை அடிக்கடி என்னிடம் சொல்லிப் பெருமைப்படுவார்.



source:https://groups.google.com/forum/#!topic/amrithavahini/AJezqKUIf6Y
 
பெரியவாளை பார்ப்பதற்கு நிபந்தனை விதித்&#

பெரியவாளை பார்ப்பதற்கு நிபந்தனை விதித்த வைஷ்ணவர்


அபாரமான சாஸ்திரப் புலமை பெற்ற மஹாவித்வான் என்று ஒருவரைப் பற்றி ஸ்ரீசரணர் கேள்விப் பட்டிருந்தார். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்றபடி பண்டித திலகமான ஸ்ரீசரணர் அவரை சந்திக்க ஆர்வமாயிருந்தார்.

ஆனால் அந்தக் கற்றார் இந்தக் கற்றாரைக் காமுறவில்லை. காரணம் அவர் வீர வைஷ்ணவர், வீர சூர வைஷ்ணவர் என்றே சொல்லுமளவுக்குச் சென்றவர். ஸித்தாந்தத்தில் அத்வைதத்தையும், தோற்றத்தில் சைவக் கோலத்தையும் மேற்கொண்ட ஒரு ஏகதண்ட ஸன்னியாஸியைப் பார்ப்பதே தோஷம் என்று கருதியவர்.

அவருடைய ஊருக்கே பெரியவாள் சென்றிருந்தார். அப்போதும் ஊரே திரண்டு வந்து கண்ட பெரியவாளைக் காண அவர் வராமலே இருந்தார். பேதமறியா மன இசைவே திரண்டு வந்த திருவடிவமான பெரியவாளோ அந்தப் பெரியவர் பற்றியே கேட்டுக்கொண்டிருந்தார்.

ஊர் முழுதும் பெரியவாள் பெருமை பேசுவதை வைணவப்பெரியார் கேட்டார். அது அவரை எவ்வளவு தூரம் தொட்டதோ? ஆனால் பெரியவாளிடம் வந்து போகும் பல மஹாவித்வான்கள் அவரது வித்வத் பெருமையைச் சொல்லக் கேட்டபோது அப்பெரியாரும் காது கொடுத்துக் கேட்டுக் கொள்ளாமலிருக்க முடியவில்லை.

அதுவே தருணமென்று பெரியவாள் ஸத்வகுணரான ஒரு வித்வான் மூலம் அவருக்கு அழைப்பு விடுத்தார். வித்வான் வைணவர் வீடு சென்று மரியாதை முறைப்படி பெரியவாளின் அழைப்பைத் தெரிவித்தார்.

இவ்வளவு தூரம் பண்டிதர் பாமரர் புகழும் அந்தப் பெரியவரை தாமும்தான் சென்று பார்த்துவைப்போமே என்று வைணவருக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

“கூப்டு அனுப்பிச்சிருக்கார். மாட்டேன்னு சொல்லப்படாதுதான். ஆனாலும் எனக்குச் செல ப்ரதிக்ஞைகள் இருக்கு. அதை மீறுகிறத்துக்கில்லை. அது ஒங்களுக்கும், ஒங்க பெரியவாளுக்கும் ஸம்மதப்படாம இருக்கலாம். அதுதான் யோஜனையா இருக்கு.” என்றார் அவர்.

அந்தப் பிரதிக்ஞைகள் என்னவென்று ஸ்ரீமடத்து வித்வான் கேட்டார்.

வைஷ்ணவர் மூன்று ப்ரதிக்ஞைகள்---அல்லது நிபந்தனைகள்----கூறினார். ஒன்று---பெரியவாளை அவர் நமஸ்கரிப்பதற்கில்லை. இரண்டு----பெரியவாள் ப்ரஸாதம் கொடுத்தால் ஏற்பதற்கில்லை. மூன்று---வித்வத் ஸம்பாவனை என்று சால்வை போர்த்துவது போல் ஏதேனும் பெரியவாள் செய்தாலும் அதையுங்கூட அங்கீகரிப்பதற்கில்லை.

இப்படிக் கடும் நிபந்தனை போடுபவரை எதற்காக வர்வேற்க வேண்டும் என்று நமது வித்வானுக்கு---அவர் ஸத்வகுணிதான் எனினுங்கூட------தோன்றிவிட்டது.

மரியாதையாகவே அங்கிருந்து விடை கொண்டு ஸன்னிதானம் சென்று, “ஒண்ணும் ஸ்வாரஸ்யப்படலை. அவர் ரொம்ப நிர்தாக்ஷண்யமா கண்டிஷன் போடறார்” என்றார்.

“அப்படியா! ஸ்வாரஸ்யமாத்தானே இருக்கு! நல்ல சேதின்னா கொண்டு வந்திருக்கேள்!” என்றார் ஸ்ரீசரணாள்.

வித்வானுக்குப் புரியவில்லை. எந்த வித்வத்திற்கும் புரிபடாத ஸூக்ஷ்ம நோக்கில் பேசுபவரல்லவா பெரியவாள்?

“எப்படி நல்ல சேதின்னு புரியலையே?” என்றார் வித்வான்.

“கண்டிஷன் போடறார்னு நீங்க சொன்னதுலேந்தே அவர் முடுஞ்ச முடிவா ‘வரவே மாட்டேன்’னு சொல்லலை. கண்டிஷன் எதுக்கோ உட்பட்டா வரேன்—னு சொல்றார்—னுதானே ஆறது? அந்த மட்டுக்கும் நல்ல சேதிதானே?”---பெரியவாள் இன்னகை பூத்து “என்ன கண்டிஷன்?” என்றார்.

‘சொல்றத்துக்கே மனஸ் இடம் குடுக்கல்லை’ என்று கூறி, வித்வான் வீர வைஷ்ணவப் பெரியாரின் மூன்று நிபந்தனைகளை சிரமப்பட்டுத் தெரிவித்தார்.

பெரியவாளோ ஸகஜமாக, “அவர் இஷ்டப்படியே இருந்துட்டுப் போகட்டுமே! எனக்குத்தானே அவரைப் பார்க்கணும்னு இருக்கு? அவருக்கு இயலாதப்ப அவர் கண்டிஷன் போட்டதிலே என்ன தப்பு? எனக்கு நெஜமாவே அவர் ஒரு வித்வத் ஸ்ரேஷ்டர், அவர் கிட்ட புதுசா ஏதோ கொஞ்சமாவது க்ரஹிச்சுக்கப் பார்க்கலாம்னு இருந்தா கண்டிஷனை நான் பொருட்படுத்தாம ஏத்துக்கத்தானே வேணும்?” என்று நியாயம் கேட்டார் ஸத்யமூர்த்தி!.

அநுபூதி கண்ட மஹாபுருஷனுக்கு யாரைப் பார்த்து என்ன ஆக வேண்டும் என்று நாம் நினைப்போம். ஆனால் அவரோ நரவேடம் பூண்டு, ஆதரிச நிலைகளை நமக்குக் காட்டுவதில் வித்யையில் இருக்க வேண்டிய ஆர்வம், அதன் பொருட்டாகக் காட்டவேண்டிய விநயம் இவற்றில் நமக்குப் பாடம் கொடுக்கவே, தாம் ஸர்வக்ஞராக இருந்த போதிலும் வேறொரு வித்வானிடமிருந்து கொஞ்சமாவது க்ரஹித்துக்கொள்ள இயலுமா என்று பார்ப்பதற்காக அவர் விதிக்கும் கடும் நிபந்தனைகளுக்கு உடம்பட்டுக் காட்டினார்.

[ வித்தையார்வம், விநயம் ஆகியவற்றின் எல்லை கண்ட ஸ்ரீசரணர் அந்த ஸ்ரீவைஷ்ணவரைத் தம் இருப்பிடத்திற்கு அழைக்காமல் தாமே அங்கு சென்றிருக்கக் கூடியவர்தாம்! ஆனால் விபூதி—ருத்ராக்ஷதாரியான ஓர் ஏகதண்டியை வீட்டினுள் அனுமதிக்க அவருக்கு மனமில்லமலிருக்கலாம் என்றே போகாதிருந்திருப்பார்]

வித்வான் ப்ரதிக்ஞா—பங்கமில்லாமலே தம்மிடம் வரலாம் என்று ஸ்ரீசரணர் செய்தியனுப்பினார்.

அவரும் பெருமிதத்துடன் வந்தார்.

பெரியவாள் அழகிய ஸம்ஸ்கிருதத்தில், ஸ்ரீவைஷ்ணவர்களுக்கே உரிய பரிபாஷைகளைக் கலந்து, அவரை கௌரவமாக வரவேற்று அவருக்கென இடப்பட்டிருந்த மணையில் அமரச் சொன்னார்.

அதுவே அவரது கடினத்தில் சிறிது நெகிழ்வை ஏற்படுத்தியதென்றாலும், நமஸ்காரம் செய்யாமலேதான் அமர்ந்தார்.

ஸ்ரீபாஷ்யம் (‘ப்ரஹ்ம ஸூத்ர’த்திற்கு ஸ்ரீ ராமாநுஜரின் பாஷ்யம்) பற்றியே முக்யமாகப் பெரியவாள் அவரிடம் கேட்கலானார். ‘கேட்கலானார்’ என்பது போகப் போக அந்தப் பெரியார் கேட்க இந்தப் பெரியவாள் சொல்வதாகவே உருமாறிற்று1 அவரிடம் இவர் கொஞ்சமாவது க்ரஹித்துக் கொள்ள இடமிருந்ததோ என்னவோ, இவரிடமிருந்து அவர் நிறையவே க்ரஹித்துக் கொண்டார் என்பதை அந்த அறிஞர் கேட்டுக்கொண்ட ‘பா’வமும் அவரது முகமலர்ச்சியுமே காட்டியது.

பண்பு மிக்க ஸ்ரீசரணர் அவரை ஊக்கி ஊக்கி நிறையக் கூறவும் வைத்தார். ஓர் அறிவு மலையிடம் பேசுகிறோம் என்று புரிந்து கொண்ட வைஷ்ணவரும் உத்ஸாஹத்துடன் தமது பாண்டித்தியத்தைக் கொட்டித் தீர்த்தார்.

அவர்கள் ஸித்தாந்தத்திற்கு அத்வைதம் எப்படி மாறுபடுகிறது என்று உயர்த்திக் காட்டாமலே பெரியவாள் ஸ்ரீசங்கர பாஷ்யத்தில் இப்படி இப்படி என்றும் அங்கங்கே சொல்ல, அந்த அறிஞர் அவற்றிலும் ஆழ்பொருள் இருப்பதை ஒப்பி மகிழாமலிருக்க முடியவில்லை.

ஆக நெடுநேரம் சம்பாஷணை நடந்து இனிக்க முடிந்தது.

இரு வித்வான்கள் அறிவைப் பரிமாறிக் கொள்ளும் இனிமைதான்! நம் விஷயமான இதய இனிமை இல்லை!

அதுவும் வருகிறது இனி!

சிரம பாராட்டாது அந்தப் பெரியவர் வந்து நெடுநேரம் தம்மை வித்வத் கடலாட்டியதில் தமது மகிழ்ச்சியையும்—நன்றியையுமே---தெரிவித்து அவருக்குப் பெரியவாள் விடை கொடுத்தார்.

அவரோ தம்மைத் ‘தாஸன்’ என்று சொல்லிக்கொள்ளுமளவுக்குத் தழைந்து,” பெரியவாளுக்குத் தெரியாத சாஸ்த்ர ஞானம் தாஸனுக்கு இல்லை. ஆன தாஸனுக்குத் தெரியாத கருணை பெரியவாளூக்கு இருந்துதான் கூப்டு அனுப்பி அநுக்ரஹிச்சிருக்க”---என்று சொல்லி, தண்டகாரமாக நமஸ்கரிக்க முற்பட்டார்.

‘கருணை’, ‘அனுக்ரஹம்’ என்ற சொற்கள் வந்து விட்டதோ இல்லையோ? இதயமும் வந்து விட்டது!

நமஸ்கரிக்க முற்பட்டவரை, “வேண்டாம்!ப்ரதிக்ஞா பங்கமாயிடும்” என்று பெரியவாள் தடுத்தார்.

ஆனால் அவரோ, ‘ப்ரதிக்ஞையெல்லாம் மனுஷ்யாளை முன்னிட்டுப் பன்ணினதுதானே? ஸன்னிதானத்துல அதுக்கு ப்ரஸக்தியில்லே [அதைப் பொருத்துவதற்கில்லை]” என்பதாக தெய்வங்களின் மட்டத்தில் ஸ்ரீசரணாளைக் கூறி நமஸ்காரம் செய்தே தீர்த்தார்!

தெய்வமாகவே பொலிந்துகொண்டு ஸ்ரீசரணர் அதை ஏற்றார்.

“மந்த்ராக்ஷதை அனுக்ரஹிக்கணும்” என்றும் வைஷ்ணவர் தாமாகக் கேட்டுப் பிரஸாதம் பெற்றார். அதாவது, இரண்டாவது நிபந்தனையையும் அவரே தகர்த்துக் கொண்டார்.

“ என் ஆசைக்காக மூணாவது ப்ரதிக்ஞையையும் விடலாம்னு தோணினா, ஒரு மஹாவித்வான் வந்து மடத்துல அவருக்கு ஸம்பாவனை பண்ணலே—ங்கற கொறை எனக்கு இல்லாம இருக்கும்” என்றார் ஸ்ரீசரணர்.

“பெரியவா எது பன்ணினாலும் பாக்யமா ஏத்துக்கறேன்” என்று ஸ்ரீவைஷ்ணவர் கூற, பெரியவாள் மிக உயர்ந்த சால்வை தருவித்து ஸ்ரீமடத்து வித்வானைக் கொண்டு அதை அவருக்குப் போர்த்தினார்.
 
வேத மந்த்ரங்களுக்கு என்ன மதிப்பு?

வேத மந்த்ரங்களுக்கு என்ன மதிப்பு?

Quote from Periyava:




“வாழ்க்கைன்னா, ஆயிரம் கஷ்ட நஷ்டம் வரத்தான் வரும். குடும்பம்ன்னா, சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும். பொறுமையா ஒர்த்தரோட ஒர்த்தர் அனுசரிச்சு போனா, எப்பேர்ப்பட்ட ப்ராப்ளத்தையும் ஈஸியா solve பண்ணலாம். அல்ப விஷயத்துக்கெல்லாம் பெரிய சண்டையைப் போட்டுண்டு, விவாஹரத்து பண்ணிக்கறதுக்கா, இத்தனை செலவழிச்சு கல்யாணம் பண்றா? அல்ப மனஸ்தாபத்துக்காக, நீயா?நானா?ன்னு ஈகோ clashனால, வேத மந்த்ரங்கள், அக்னியை சாக்ஷியா வெச்சுண்டு, நாள் நக்ஷத்ரம் பாத்து பண்ற கல்யாணத்தை, யாரோ வக்கீல்கள், அவாளுக்குள்ள பேசிண்டு, argue பண்ணிண்டு, அதுக்கு ஒர்த்தர் ஜட்ஜ்மெண்ட் குடுத்து பிரிச்சு வெக்கறார்ன்னா, வேத மந்த்ரங்களுக்கு என்ன மதிப்பு? அக்னி பகவானுக்கு என்ன மதிப்பு? இல்லே….பத்திரிகைல ஆச்சார்யாளோட அனுக்ரஹத்தோடன்னு போடறேளே, அவாளுக்கு என்ன மதிப்பு?…

By kanchi sri Maha Periyava.


Source:2014 June 10 « Sage of Kanchi
 
Periyava’s hunger

Periyava’s hunger

ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.


அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம…் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். “கஜானா” சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. “ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?” என்ற சந்தேகம். பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. “நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, “அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடு”ன்னார்” என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.


“கஜானா” மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் “கஜானா”விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.


“நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்” என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.

அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா “நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?” என்றார்.

“அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்” என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.


“சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி வைக்கறையா?” என்றார் பெரியவா

“காத்துண்டு இருக்கேன்” என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.


“அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!”


“அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு…..” கஜானா இழுத்தார்.

“அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா”


“சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்” என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.


அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது “சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு”

கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.


“அதி”க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். “இவ்வளவுதானா?” என்று வேறு கேட்டார்.


பன்னிரண்டு திருவோணம் அட்டேன்; “இன்னம் உவப்பன் நான்” என்று சொல்லி
எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!…………என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.


பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று “இன்னும் என்ன இருக்கு” என்று கேள்வி
கஜான வெலவெலத்து போனார்.


“வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!” என்ற
பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.


“பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்” என்று விக்கினார்.


குழந்தையாக சிரித்த பெரியவா, “இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?” என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்.


Source:Periyava?s hunger « Sage of Kanchi
 
Gems from Maha Periyava

Gems from Maha Periyava

It is not enough if the body is clean. Our mind should become free from impurities. For this, the only way is meditation on the lotus feet of Ambal, the consort of Parameswara and the Supreme Shakthi (Parasakthi).

In the wordly life in which there is no peace at all, even if temporarily some peace is generated it is good to some extent. What is necessary is to make temporary as permanent. The only means to it is meditation on Ambal’s lotus feet. To me, Ambal is important. I am meditating on Ambal’s lotus feet for the sake of the welfare of the world. All of you must meditate on Ambal.



?To me Ambal is Important? | Divine Excerpts
 
புண்ணிய எண்ணம் புனிதம் தரும்

புண்ணிய எண்ணம் புனிதம் தரும்




* சத்தியம் என்றால், வாக்கும் மனதும் ஒன்றுபடுவது மட்டுமன்று. நல்ல மனதில் தோன்றுகின்ற நல்ல எண்ணங்களை
வாக்கில் சொல்வதே சத்தியம்.

* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன் தான் குடி இருக்கிறார், ஒருவரை நமஸ்கரிக்கும் போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாக தான் அர்த்தம்.

* மனம் தியானத்தில் நிலைத்து நிற்க, அசையாத பரம்பொருளைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்ள வேண்டும்.
* கோபத்தால் பிறரைத் தாக்குவதாக நினைத்தாலும், அது நம்மையே தான் அதிகம் தாக்குகிறது. தேகம், மனம் இரண்டுக்கும் பெரிய பாதிப்பு உண்டாகிறது.

* பொருள் சேர்ப்பதிலும், அலங்காரம் செய்து கொள்வதிலும் தற்காலிக இன்பம் கிடைக்கலாம். ஆனால், உள்ளத்துக்கு நிறைவான ஆனந்தம் அன்பு செலுத்துவதிலேயே இருக்கிறது.

* புண்ணியமான நினைப்புகளை வளர்த்துக் கொண்டால், உலகமே புனிதமாகும்.

* பிறரிடம் உள்ள குறைகளை வெளிப்படுத்துவதை தவிர்த்துவிட்டு, அவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களை வெளிப்படுத்த வேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்

Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
சாஸ்திரமா? மனசாட்சியா?

சாஸ்திரமா? மனசாட்சியா?

தர்மம் என்பது உலக க்ஷேமத்துக்காகச் செய்யப்பட வேண்டியது. துளிகூட சொந்த விருப்பு வெறுப்பு இல்லாமல், சமஸ்த பிராணிகளும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு மகான்கள் தர்ம நூல்களைத் தந்திருக்கிறார்கள். தர்ம சாஸ்திரங்கள், இன்னது தர்மம் என்று தீர்மானம் பண்ணுபவை. ரூபத்தை அறிவதற்குப் பிரமாணம் கண். சப்தத்தை அறிவதற்குப் பிரமாணம் காது, தர்மப் பிரமாணம் என்ன எனில் தர்ம சாஸ்திரப் பிரகாரம் செய்வதேயாகும்.


சகல தர்மத்துக்கும் மூலம் வேதம். அதை ச்ருதி என்பார்கள். (எழுதிப் படிக்காமல் காதால் கேட்டுப் பாடம் பண்ணுவதால் இப்படிப் பேர்) . ச்ருதிக்கு அப்புறம் ஸ்மிருதி. ஸ்மிருதி என்பது வேதத்தின் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு விரிவாகக் குறித்த குறிப்பு (Notes) தர்ம சாஸ்திரம் என்பது இதுவே.


அந்த ஸ்மிருத்திக்கு அப்புறம் பிரமாணமாக இருப்பது பெரியவர்களுடைய நடத்தை. பெரியவர்கள் எப்படி நடந்தார்கள் என்பது புராணங்களால் நமக்குத் தெரிய வருகிறது. அதற்கப்புறம் நமக்குத் தெரிந்து சிஷ்டராக இருப்பவர்களின் நடத்தை. சிஷ்டாசாரம் என்று அதைச் சொல்லுவார்கள். எல்லோருடைய நடத்தையும் பிராமணமாகாது. நம்மிடையே வாழ்பவரில் எவரது நடத்தை தார்மிக விஷயங்களில் பிரமாணமெனில், அவருக்கு சாஸ்திர நம்பிக்கை இருக்க வேண்டும். சாஸ்திரத்தில் சொல்லப்பட்ட ஆசாரங்களை அவரே வாழ்வில் அநுசரிக்க வேண்டும். காமக் குரோதம் இல்லாதவராக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட சிஷ்டர்களுடைய ஆசாரம் ஒரு பிரமாணம். அதற்கப்புறம் நம்முடைய மனசாட்சி (conscience) . நம்முடைய மனசு நிஷ்கல்கமாக எப்படி ஆலோசிக்கிறதோ அது ஒரு பிராம்மணம்.


ஆகவே, ஆத்மிக, தார்மிக மத விஷயங்களில் பிராம்மணங்களைக் கொள்ளும் முறையில் முதலில் வேதம் இடம்பெற வேண்டும். அப்புறம் தர்ம சாஸ்திரங்களைக்
கொள்ள வேண்டும். அப்புறம் தர்ம சாஸ்திரத்தைக் கொள்ள
வேண்டும். அப்புறம் பூர்வகால ரிஷிகள் முதலியவர்களின் நடத்தை. பின்பு இப்போதுள்ள சிஷ்டர்களில் ஆசாரத்தைப் பிரமாணமாகக் கொள்ள வேண்டும். இவைகளுக்கெல்லாம் அப்புறம் கடைசிப் பக்ஷமாகத்தான் சாஸ்திர விஷயங்களில் மனசாட்சியைப் பிரமாணமாக வைத்துக்கொள்ள வேண்டும்.


இப்பொழுது எல்லாம் தலைகீழாக மாறிவிட்டன. முதலில் மனசாட்சியைத்தான் பார்க்கிறார்கள்.

கடைசியில்தான் வேதத்தைக் கவனிக்கிறார்கள். நியாயப்படி வேறு ஒரு மார்கமும் இல்லாதபோதுதான் மனசாட்சியை அநுசரிக்க வேண்டும். மனசாட்சி என்று ஏன் அதற்குப் பெயர் வந்தது. சாட்சி சொல்லத்தான் யோகிதை உடையது. நியாயாதிபதியாக (Judge) இருக்க அதற்கு யோக்கியதை இல்லை. சாட்சியாக வந்தவன் வாயால் பொய்யைச் சொல்வான். அதனால் வாய்சாட்சியை நம்புவதற்கில்லை. ஆனால், மனம் பொய் சொல்லாது. மனசுக்கு எல்லாம் நிஜமாகத் தெரியும். நெஞ்சை யளித்தொரு வஞ்சகமில்லை என்று அவ்வைப் பாட்டி சொன்னாள். ஆகவே அதைச் சாட்சியாக மட்டும் வைக்கலாம்.

இப்பொழுது மனசாட்சியை ஜட்ஜாகவே வைத்து விடுகிறார்கள். இன்னது நடந்தது என்பதை அது நிஜமாகவே சொல்லும். இதுதான் நியாயம் என்று அதனால் தீர்த்துச் சொல்ல முடியாது. தான் நினைப்பதை சரி என்று எப்ப்டியாவது சமாதானம் சொல்லி நிலைநாட்டிக் கொள்வதே அவரவர் மனசும் செய்கிறபடியாக இருக்கும். இது எப்படி தர்ம நியாயமாகும். எனவே மனசாட்சிக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன் என்று சொல்வது தப்பு. எடுத்தவுடன் அதற்கு ஜட்ஜ் ஸ்தானம் கொடுத்து விடக்கூடாது. ஒருவித வழியும் இல்லாமல் போனால், c தான் சாட்சியாக இருந்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறாயே, இப்போது உன் அபிப்பிராயத்தைச் சொல் என்று மனசிடம் கோட்கலாம். மனசு ஒரு தனி மனிதனைச் சேர்ந்தது. எனவே அது எவ்வளவு தூரம் தன் சுயநலத்தை விட்டு விலகிப் பேசும் என்று சொல்ல முடியாது.

சொந்த விஷயங்களில் அதற்குத் தருகிற இடத்தைக்கூட சமய விஷயங்களில் தருவதற்கில்லை. தனி மனசு என்கிற நிலைக்கு மேலே போய் முழுக்க முழுக்க லோக க்ஷேமத்தையே சொன்ன ரிஷிகளின் அபிப்ராயம்தான் தர்ம விஷயங்களில் பிரமாணமாகும்.



Maha Periyava


?????????? ??????????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
ஒரிஜனல் ஹிந்து கல்ச்சர்

ஒரிஜனல் ஹிந்து கல்ச்சர்


போலகம் கோபால அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின் தொண்டர்; பெரியவாளிடம் அதீதமான பக்தியுடையவர்.

திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலையில் ஸ்ரீமடத்துக்குச் சொந்தமான தோட்டம் இருக்கிறது. ஒரு தடவை, எஸ்டேட் மேற்பார்வைக்காக, சிறுமலை சென்று திரும்பி வரும்போது சுமார் ஐந்நூறு மலை வாழைப் பழங்கள் கொண்டுவந்து பெரியவாளிடம் சமர்ப்பித்தார்.

“மடத்து எஸ்டேட்டில் விளைந்த பழம். பெரியவாளுக்காகக் கொண்டு வந்திருக்கேன்”.

ஒரு சீப்பிலிருந்து ஒரு பழத்தை மட்டும் எடுத்துத் தன் மடியில் வைத்துக் கொண்டார்கள் பெரியவா.

பெரியவாளுக்கு நேர் எதிரில் முந்நூறு அடிக்கு அப்பால் நரிக்குறவர்கள் கூட்டம் தங்கியிருந்தது. சமையல், சாப்பாடு, தூக்கம் – எல்லாம் மரத்தடியில் தான்!

கார்வாரைக் கூப்பிட்டார்கள் பெரியவா.

“இதோ பாரு, எல்லா மலைப்பழம், பக்தர்கள் கொண்டுவந்த கல்கண்டு, திராட்சை, தேங்காய், மாம்பழம், சாத்துக்குடி, கமலா – எல்லாத்தையும் மூட்டையாகக் கட்டி, நரிக்குறவர்களிடம் கொடுத்துட்டு வா….”

ஸ்ரீமடத்தில் தங்கியிருந்த அனந்தானந்த ஸ்வாமிகள் என்ற துறவி அப்போது அங்கே இருந்தார். அவருக்கு இப்படி எல்லாவற்றையும் மொத்தமாக, நரிக்குறவர்களுக்குக் கொடுப்பது நியாயமாகப் படவில்லை. “இது என்ன புதுப் பழக்கம்? இவ்வளவு பழங்களையும் குறவர்களுக்குக் கொடுக்கணுமா?”

பெரியவா நிதானமாகப் பதில் சொன்னார்.

“நாம் எல்லோரும் நமது கலாசாரத்தை மாற்றிக் கொண்டுவிட்டோம் – கிராப்பு, டிராயர், ஷர்ட், மீசை, ஹோட்டல், டீக்கடை, சீமைக்குப் போவது – எல்லாம் வந்துவிட்டது. பாரத கலாசாரமே போயிடுத்து. ஆனா, ஏழைகளான இந்த நரிக்குறவர்களைப் பாருங்கோ. அவாளோட சிகை, டிரஸ், பழக்கவழக்கம், பரம்பரையா வந்த பாசிமணி, மாலை, ஊசி விற்பது – இவைகளை விட்டுவிடல்லே. கூடியமட்டும் திருடமாட்டா. குறத்திகள் கற்பைக் காக்கிறவர்கள். அந்த ஜாதிக்குள்ளேயே கல்யாணம், மறுநாளைப் பற்றிக் கவலைப்படறதில்லே. வெட்டவெளியில் சமையல், சாப்பாடு, தூக்கம். இது வரை அரசியலில் ஈடுபடவில்லை. அதனாலே, சுயநலம் – கெட்ட புத்தி வரல்லே. குடும்பக் கட்டுப்பாடு – (மஹா பாபம்) – அதைச் செய்து கொள்றதில்லே. நாடோடிகள். அன்றன்று சாமான் வாங்கி, சமையல். இவர்கள் தான் ஒரிஜினல் ஹிந்து கல்சரை இன்னிக்கு வரை கடைப்பிடித்து வருகிறார்கள். பழங்கால ரிஷிகள் போல, கவலையில்லாமல் வாழ்கிறார்கள்…”

அந்தக் கிராமத்திலிருந்து பெரியவா புறப்பட்ட போது, நூற்றுக்கணக்கில் நரிக்குறவர்கள் வழியனுப்ப வந்தார்கள். அரை கிலோமீட்டர் தூரத்தில், அவர்களை ஆசீர்வதித்து, திரும்பிப் போகச் சொன்னார் பெரியவா.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!
 
கல்வி அறிவும் ஞானமும்

கல்வி அறிவும் ஞானமும்

(08/06/2014) ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியில்
சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஒளிபரப்பாகியது.

அதில் விருது பெற்றவர்களில் ஒருவரான திரு. சுகிசிவம் அவர்கள் பேசும்போது கல்வி அறிவுக்கும் ஞானத்திற்கும் உள்ள வித்தியாசத்தை காஞ்சி மஹாபெரியவர்கள் மடத்தில் இருக்கும் பொது நடைபெற்ற ஒரு சம்பவத்தின் மூலம் விளக்கினார்கள்.

அந்த சுவாரசியமான நிகழ்ச்சி:

ஒரு நாள் இரவு நேரம் அனைவரும் அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்த சமயம், மஹாபெரியவர் மடத்தின் யானை பிளிரும் சப்தம் கேட்டு விழித்து எழுந்தார்கள். காரணத்தை அறிய யானை கட்டப்பட்டிருக்கும் இடத்தின் அருகே சென்று பார்த்தபொது, ஒரு நல்ல பாம்பு யானைக்கு முன்னே படம் எடுத்துக்கொண்டிருந்தது. அதைக்கண்டு யானை பயந்து பிளிரியத்தை அறிந்து கொண்டார்.

மடத்திலிருந்த மற்றவர்களும், ஊழியர்களும் விழித்து எழுந்து வந்துவிட்டனர். ஒரு சிலர் அந்த பாம்பை அடித்து விரட்ட எத்தனிக்க, மஹாபெரியவர் அவர்களை தடுத்து “நல்லெண்ணெய் விளக்கை” சர்பத்தின் அருகே ஏற்றி வைக்கச்சொன்னார். அவர்களும்அதுபோல செய்தவுடன் சர்ப்பமும் விலகிச்சென்று மறைந்தது. யானையை பராமரிப்பவரிடம் மஹாபெரியவர், யானையை அங்கிருந்து அகற்றி வேறு ஓரிடத்தில் பாதுகாப்பாக கட்டி வைக்கச்சொன்னார்கள். அதற்கு யானைப்பாகன் “பாம்பு தான் போய்விட்டதே” என்று கேட்கவும், மஹா பெரியவர்கள் உடனே “பாம்பு போய்விட்டது. ஆனால் யானை அங்கேயே இருந்தால், அதன்மீதான பயம் போகாது. அதனால் இடத்தை மாற்று.” என்று சொன்னார்.

நல்லெண்ணெய் விளக்கு இருக்கும் இடத்தில் சர்ப்பம் வராது என்பதும், யானையின் பயம் போக இடத்தை மாற்ற சொன்னதும் மகா பெரியவர்களின் ஞானம் அன்றி வேறென்ன?


Source:Varagooran Narayanan
 
Why Hanumaan chose to sit on the Shimshupa Vruksha in Ashoka Vanam

Why Hanumaan chose to sit on the Shimshupa Vruksha in Ashoka Vanam

while searching for Seeta ? Periyavaa answers...



Credits: Heard this on MahaPeriyava Mahimai on Sankara TV
Narrator : Sri Ganesa Sarma


Once a Vidwan visited MahaPeriyavaa.

He was going to perform his 100th pravachanam on Sundarakaandam.

He submitted the invitation for the same and sought HIS blessings.

After reading the invitation carefully, Periyavaa asked him what the invitation was about?

The vidwan was initially shocked by this question,only to realise his mistake.

The invitation had his name in bold and bigger font while "Sundarakaandam" was in smaller font.

He had given more importance to himself, his ego than to the Puranaa .


Afterwards Periyavaa asked the Vidwan,
since you have given discourse 99 times,can you clarify this one question...


Sundara Kaandam is about Aanjaneyar going to Lanka in search of Seeta,
Seeta was sitting in Ashoka Vanam, a place full of Ashok, champaka, vakula trees.


Why did Hanumaan choose to sit on the Shimshupa tree and look for Seeta?


The vidwan replied it might have been "yadruchhaya" ...यदृच्छया as mentioned in one of the slokas.


Mahaperiyavaa,then explained the actual reason as follows ..

In the Valmiki Ramayana, 14th chapter, 37th sloka, Valmiki says,


काञ्चनीं शिन्शुपामेकां ददर्श स महाकपिः /
वृतां हेममयीभिस्तु वेदिकाभिस्समन्ततः // ३७


Kaanchaneem Shimshupaam Ekaam dadarsha sa mahaakapih
Vrutaam hemamayeebhistu vedikaabhih samantatah //37//
Hanuman saw (dadarsha) one shimshupaa tree, golden(Kaanchaneem)in colour....
Moreover we refer to Hanuman as "Kaanchanaadri Kamaneeya vigraham.."

ie his body radiates golden color.


Thinking thus, Hanuman "Camouflaged" himself on this tree and looked around for Seeta.


If he were to sit on any other tree there like champaka, chandana, vakula having white or red or other coloured leaves or flowers ,

Hanuman would have been spotted easily by the spies of Ravana and hindered his search mission.

Hearing this explanation, the Vidwan was impressed.


Periyavaa also added that this only proves Camouflaging and many other present day concepts exists in our Puraanas. They have to be read and identified correctly and brought out to match modern day concepts.



Jaya Jaya Shankara Hara Hara Shankara



Source: Sage of Kanchi

Usha Ashok
 
ஊடுருவி பார்க்கும் திறன்

ஊடுருவி பார்க்கும் திறன்

திருநெல்வேலிக்கு அருகே உள்ள கிருஷ்ணாபுரம் தான் கே.வி.கே. சாஸ்திரியின் பூர்வீகம். அப்பா, தாத்தா என்று தலைமுறை தலைமுறையாக இருந்து, கஸ்டம்ஸ் உப்பளத்தில் சேர்ந்து, மரக்காணத்தில் பணியாற்றி ஓய்வுக்குப்பின் வளவனூரில் இருக்க நேரிட்டது. பெரியவாள் சொல்லிட்டா போதும் உடனே கேட்டு விடுவார். ஏன் என்ற மறு பேச்சே கிடையாது. ஒரு சமயம் பெரியவா, “ஏய், கிருஷ்ணஸ்வாமி, நான் ஒண்ணு சொல்றேன், நீ கேட்பாயா?” என்று புதிர்போல் கேட்டார். “உத்தரவு இடுங்கள்” என்று பணிவோடு நின்றார் கே.வி.கே.


“நீ கிருஷ்ணாபுரம் போய், கோவிலுக்கு அருகே உள்ள ஏழாம் நம்பர் வீட்டிலே போய் ஒரு அம்பது ரூபாய் கொடுத்துட்டு வா. அவர் வாங்க மாட்டேன்னு சொல்லுவா. உன் அப்பா அவர் அப்பாகிட்ட கடன் வாங்கினது. திருப்பிக்கொடுக்கவேயில்லை. அதை நீ கொண்டு கொடுத்து அப்பா கடனை தீர்த்துடு. அப்போதான் நிம்மதியா தூக்கம் வரும்னு” சொன்னார். கே.வி.கே க்கு இரவிலே தூக்கம் வராது – விடிய விடிய முழித்துக்கொண்டு இருப்பார், காலையிலே தூங்கி விடுவார். இது எப்படி பெரியவாளுக்கு தெரியும் என்பதுதான் ஒரே கேள்விக்குறி.


சொன்னபடியே கே.வி.கே கிருஷ்ணாபுரம் சென்று பணத்தைக் கொடுக்க முயன்றார். ஆனால் அங்கிருந்தவர்களோ, பணத்தை வாங்கவே மறுத்தனர். ‘எங்கப்பா டைரி எழுதற பழக்கம் உண்டு, அதிலே இப்படி கடன் கொடுத்தா இல்லை” என்று கூற, கடைசியில் எப்படியோ பெரியவா சொன்னான்னு சொல்ல அவர்களும் அதை வாங்கிக் கொண்டனர்.


வளவனூர் திரும்பி வந்து பெரியவாளிடம் நடந்த விபரத்தை கூறினார். பெரியவா சொன்னா தலைமுறை கடந்து வந்ததாலே இந்த விஷயம் யாருக்கும் தெரியாது. “எனக்கு மனதிலே பட்டுது சொன்னேன்” என்று கூறினார்.


கே.வி.கே க்கும் டைரி எழுதற பழக்கம் உண்டு. அவருடைய டைரியில் அப்பா கடன் திரு. சீதாராமய்யருக்கு கொடுக்க வேண்டும் என்று எப்பவோ எழுதியது ஞாபகம் வந்தது. அப்போதான் அந்த சீதாராமய்யர் குடும்பம் கிருஷ்ணாபுரமத்தில் இருக்கு என்ற விபரம் தெரிய வந்தது.



காலங்களை மீறி, ஊடுருவி பார்க்கும் சக்தி பெரியவாளுக்கு உண்டு என்பதில் சந்தேஹம் உண்டோ? கே.வி.கே ஆண்டு முதல் நல்ல தேக ஆரோக்யத்துடன் தூங்கினார்.

– Shri Bharani Mani

2013 June 12 « Sage of Kanchi
 
குமார ஸம்பவம்

குமார ஸம்பவம்


அருணகிரிநாதர் ஸுப்ரமணிய ஸ்வாமியிடமிருந்து தமக்குக் கிடைத்த அத்வைத அநுக்கிரகத்தையே கந்தர் அநுபூதியில் விசேஷமாகச் சொல்கிறார்.


அவர் தம்முடைய திருப்புகழ் பாட்டுக்கள் ஒவ்வொன்றையும் பெருமாளே என்கிற வார்த்தையுடனேயே முடிக்கிறார். பொதுவாக பெருமாள் என்றால் மகாவிஷ்ணுதான். ஒரு ஊரில் ஈஸ்வரன் கோயில் பெருமாள் கோயில் என்ற போது பெருமாள் கோயில் என்றால் விஷ்ணு ஆலயம்தான். சிவசக்தியின் பூர்ணதேஜஸாக இருக்கப்பட்ட சுப்ரம்மண்யத்தை இப்படி பெருமாளாகச் சொல்லிக் சொல்லி அவர் முடிப்பதும் அழகாகத்தான் இருக்கிறது.


தமிழ்நாட்டிலேயே பொதுவில் இவரை மகாவிஷ்ணுவுடன் சம்மந்தப்படுத்திப் பேசுவது அதிகம். மருகன் என்றும் முருகனைச் சொல்கிறோமே, இது எதனால். அவர் அம்பாளுக்கு சகோதரராக இருக்கிற மகாவிஷ்ணுவின் மருமகன் என்பதால்தான். மால் மருகன் என்கிறோம்.

மருமகன் என்றால் மாப்பிள்ளை என்று அர்த்தம். மருமகப்பிள்ளை என்பார்கள். பூர்வத்தில் வள்ளி தேவசேனைகள் மகாவிஷ்ணுவின் புத்திரிகள்தான். அதனால் மாமாவான விஷ்ணு முருகனுக்கு மாமனாராகவும் இருக்கிறார். சிவனுக்கு மகன், மகாவிஷ்ணுவுக்கு மருமகன் என்ற பெருமை இவருக்கே இருக்கிறது. மருகோனே என்று அருணகிரிநாதரும் சொல்வார். ஆனால், வடதேசத்தில் இந்த மாமனார் சமாசாரமே சுப்ரமணியருக்குக் கிட்டே வரக்கூடாது. அவர் இங்கே எந்நாளும் பிரம்மச்சாரித் தெய்வம்தான். சில இடங்களில் சுப்ரம்மணியர் கோயிலுக்குள் ஸ்திரீகளை அநுமதிப்பதுகூட இல்லாயாம். அத்தனை கடுமை. சுப்ரம்மணியர் என்ற பெயரும் வடதேசத்தில் பிரசித்தியில்லை. அங்கே அவரைக் கார்த்திகேய என்றே சொல்வார்கள்.



பரமேஷ்வரனின் கண்களிலிருந்து ஆறு பொறிகள் வெளிவந்து, அவை சரவணப் பொய்கையில் தங்கி ஆறுமுகனாக உருக்கொண்டன. அப்போது கார்த்தைப் பெண்கள் - கிருத்திகா தேவதைகள் - என்கிற ஆறுபேர் அவரை எடுத்துப் பாலூட்டினார்கள். ஆகாசத்தில் கிருத்திகா நக்ஷத்திரங்கள் என்று ஆறு கூட்டமாக (Constellation) இருக்கின்றனவே, இவற்றின் அதிதேவதை அவர்களே.

கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததால் அவருக்குக் கார்த்திகேயர் என்று பெயர் வந்தது. தனக்குத் தாயார் மாதிரி இருந்தவர்களின் பெயரை வைத்தே இப்படிப் அவர்களுக்குப் பெருமையாகப் பெயர் கொண்டார். வடக்கே இந்தப் பெயரை வழங்குகிறது. இல்லாவிட்டால் குழந்தை என்பதை வைத்து குமாரன் என்பார்கள். குமார ஸ்வாமி என்று நாம்கூடச் சொல்கிறோம்.

குமரன் என்று குறுக்கிச் சொல்வது தமிழ் மொழிப் பண்பு. வடக்கே குமரன் என்றால் சுப்பிரமணியர்தான். சிவசக்திகளில் பிள்ளை - சர்வலோக மாதா பிதாக்களின (விசேஷமான) புத்திரன் - இவர்தான். நாம் பிள்ளை (பிள்ளையார்) என்றால் விக்கினேச்வரரைத்தான் நினைக்கிறோம். ஆனால், வடக்கே கணேசருக்கு ஏனோ குமார சப்தத்தைக் காணோம். ஷண்முகரே அங்கே குமாரராக இருக்கிறார். காளிதாசன் செய்திருக்கிற காவியத்தைப் பார்த்தாலும்


அதற்கு குமார ஸம்பவம் என்றே பெயர் இருக்கிறது.


குமார சம்பவம் என்ற சொற்றொடர் சாக்ஷ£த் வால்மீகி ராமாயணத்தில் வருகிறது. பாலகாண்டத்தில் விசுவாமித்திரர் ராம லக்ஷமணர்களுக்கு ஸ்கந்த உற்பத்தி கதையை விரிவாகச் சொல்கிறார். இதன் முடிவில், வால்மீகி சாதாரணமாக இந்தக் கதை கேட்டதற்கு இந்தப் பலன் என்று பலச்ருதி சொல்வதில்லைதான் என்றாலும், விதிவிலக்காக-சொல்கிறார். குமார ஸம்பவக் கதையைச் சொன்னேன்.

இது தனத்தையும் கொடுக்கும். புண்ணியத்தையும் கொடுக்கும். அப்பா, காகுத்ஸா, இந்த லோகத்தில் ஒரு மனுஷ்யனின் கார்த்திகேயனிடம் பக்தி வைத்துவிட்டால் போதும். தீர்க்காயுழ், புத்திர பௌத்திர சௌபாக்கியம் எல்லாம் அவனுக்குக் கிடைத்துவிடும். முடிவிலோ ஸ்கந்த லோகத்துக்கே போய் அவனுடைய நித்தியவாசம் செய்யலாம் என்கிறார். (பாலகாண்டம் - 37வது ஸ்ர்க்கம். சுலோ 31-32) .

இங்கே குமார ஸம்பவம் என்று ஆதிகவி சொன்னதைத்தான் மங்கள வாக்காகக் கொண்டு காளிதாஸன் தன் காவியத்துக்கு அதே பெயரைத்தான் கொடுத்தான்.



குமாரன் என்ற பெயரை வைத்துத்தான் கௌமார மதம் என்ற ஸுப்ரமண்ய உபாஸனை ஏற்பட்டிருக்கிறது. ஷண்மதங்கள் என்று ஆறைச் சொல்வார்கள். கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடுவது காணபத்தியம். சூரியனை முழு முதலாகக் கொள்வது ஸெளரம். அம்பாளையே (சக்தி) பரமதாத்பரியமாகச் சொல்வது சாக்தம். சிவனைச் சொல்வது சைவம். விஷ்ணுவைச் சொல்வது வைஷ்ணவம். இன்னொன்று சுப்பிரமணியரையே பரமாத்மாவாக உபாஸிப்பது. இங்கே குமார வழிபாடு என்ற பொருளில் கௌமாரம் என்றே பெயர் உண்டாக்கியிருக்கிறது.



மேலே ஸ்கந்த லோகம் என்று வால்மீகி ராமாயணத்திலிருந்து ஒரு வார்த்தை சொன்னேன். ஸ்கந்தன் என்பதும் சுப்பிரமணியரின் பிரக்யாதி வாய்ந்த பெயர். ஸ்கந்த என்கிற தாது (Root) வுக்கு, வெளிப்படுவதுபோல், சிவ ஜோதியிலிருந்து ஆறு பொறிகளாக வெளிப்பட்டுத் தெறித்ததால், ஸ்கந்த என்ற பெயர் உண்டாயிற்று. ஸ்கந்த என்ற நாமாவை விசேஷமாக வைத்தே புராணத்திற்கு ஸ்காந்தம் என்ற பெயர் வந்திருக்கிறது. தமிழில் இதைக் காஞ்சிபுரத்தில் இருந்த கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணம் என்று செய்திருக்கிறார். ஸ்கந்தன் தமிழில் கந்தனாகிறான்.



இருந்தாலும், தமிழ்நாட்டில் மருமகனாகக் சிறப்புப் பெற்றிருப்பவன் வடதேசத்தில் மகனாகவே - குமாரனாகவே - விசேஷிக்கப்படுகிறான்.


??????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
அந்திம ஸ்மரணை

அந்திம ஸ்மரணை


வாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனசில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப் பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும்.

இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீட்சை வைத்துக் கொள்ளலாம். அதாவது:

அன்றன்றைக்கும் நாம் தூங்குகிறோம் அல்லவா ? இதையும் ஒரு சாவு மாதிரி என்று தான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது.

தூங்குகிறபோது கட்டை போல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம் ? இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது.

‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் ‘சாகிற’ போது பகவானையே ஸ்மரித்துக் கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம்.

தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்து விட வேண்டும்
.
வேறே நினைப்பு வரக் கூடாது. சொல்லும்போது சுலபமாக இருக்கும். ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும்.

காமாக்ஷியோ, நடராஜாவோ, தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸ்வாமியோ, முருகனோ — எந்த தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமான நமக்கு சாந்தியும், சந்துஷ்டியும் தருகிற ஒரு குரு அல்லது மகானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால்,

“இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது ? மனசுக்கு ரம்யமாகவும், ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம் ?” என்று தான் தோன்றும்.

ஆனால், எதனாலோ, சிறிது நேரமானால், இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு, மனஸ் வேறெங்கேயாவதுதான் போய் விழும்.

அப்படியே கண்ணைக் கசக்கித் தூக்கத்தில் கொண்டு போய் விட்டுவிடும்.

இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம்.

எல்லாம், அப்யாஸத்தில், விடா முயற்சியில் தான் இருக்கிறது. நம்முடைய ஸ்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கைகொடுப்பார்.
 
மஹா பெரியவா அருள்வாக்கு

மஹா பெரியவா அருள்வாக்கு

* எந்தவித குற்றமும் செய்யாத பாவமற்றவன் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. தைரியம் அவன் முகத்தில் பிரகாசமாய் ஜொலிக்கும்.


* ராமநாமத்தை தாரக மந்திரம் என்பார்கள்.தாரகம் என்றால் பாவங்களைப் பொசுக்கி மேலே போவது எனப்பொருள்.


* நீ தானதர்மங்களைச் செய்தால் பலனை எதிர்பார்க்காமல் செய். பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரன் வேலை.


* மருந்தை வாங்கி விட்டு சாப்பிடாமல் இருந்தால் அதன் வீரியம் குறைந்துவிடும். அதுபோல, மந்திரத்தை ஜெபிக்காமல் இருந்தால் அதன் வீரிய சக்தி குறைந்துவிடும்.


* உன்னுடைய துன்பத்தையே பெரிதாக எண்ணாதே.உலகம் உன்னால் சிறிதாவது நன்மை பெற வேண்டும் என்று பாடுபட முயற்சி செய்.


* முதலில் மனிதன் மிருகநிலையிலிருந்து மனிதனாக மாறவேண்டும். அப்புறம் தெய்வமாகத் தன்னை உயர்த்திக் கொள்ளவேண்டும்.


* இறைவனே சர்வசாட்சியாக இருந்து நம் செயல்களுக்குப் பலன் தருகிறான் என்ற பயஉணர்ச்சி வேண்டும். அந்த எண்ணம் தான் தர்மவழியில் செல்ல நமக்கு துணை நிற்கும்.




https://balhanuman.wordpress.com/2014/06/10/
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top