• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
சிவனுக்கு ஆபரணம்

சிவனுக்கு ஆபரணம்

எந்த பக்தராவது கொன்றைப்பூ கொண்டு வந்து கொடுத்தால், பெரியவாள் மிகவும்
மகிழ்ச்சி அடைவார்கள்

காரணம்; பரமேசுவரன் மிகவும் உவந்து ஏற்றுக் கொள்ளும் பூ-கொன்றைப்பூ.

ஒரு பக்தர்,கூடை நிறைய கொன்றைப் பூ கொண்டு வந்து சமர்ப்பித்தார்.
பெரியவாள் கூடையையே ஒரு நிமிஷம் உற்றுப் பார்த்தார்கள்.


"கூடையிலே வேறே என்ன கொண்டு வந்திருக்கே?"
"கொன்றைப் பூ மட்டும்தான்"
"இல்லே! பரமேசுவரனுக்கு உகந்த பூ மட்டும் கொண்டு வரலே. அவனுக்கு ஆபரணமும்
கொண்டு வந்திருக்கே!"

யாருக்கும் விளங்கவில்லை. பூக்கூடையை சற்றுத் தள்ளி எடுத்துக் கொண்டு
போய்,ஒரு மூங்கில் தட்டில்
கவிழ்க்கச் சொன்னார்கள்.


தட்டில் கொட்டியவுடன், ஒரு சர்ப்பம் சர்ரென்று வெளிப்பட்டு நொடி
நேரத்தில் ஓடி மறந்தே போயிற்று.


பரபரப்புடன் பெரியவாளிடம் வந்து சொன்னார்கள்.
பெரியவாள் புன்னகைக்கிற மாதிரி தரிசனம் கொடுத்துக் கொண்டு, அந்த பக்தரைப்
பார்த்து,"இனிமேல்
சந்திரமௌலீஸ்வரருக்கு பூ மட்டும் கொண்டு வா: ஆபரணம் எல்லாம் வேண்டாம்!"
என்றார்கள்.


https://groups.google.com/forum/#!topic/paramacharya/6NIPP5CwWVE
 
பசுக்களைக் காப்பாற்றிய பெரியவாள்


பசுக்களைக் காப்பாற்றிய பெரியவாள்





தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன் in Facebook


கும்பகோணத்தை மையமாக வைத்து ஸ்ரீமடம் செயல்பட்டுக் கொண்டிருந்த சமயம்.


மடத்தின் பின்புறம் பெரிய மாட்டுக் கொட்டில்,மடத்துப் பசுமாடுகளுடன் கூட ஒரு புதிய பசுமாடு வந்து வைக்கோல் தின்று கொண்டிருந்தது.தண்ணிர் குடித்துக் கொண்டிருந்தது.


யாருடைய மாடு என்று தெரியவில்லை. ஒருவரும் மாட்டைத் தேடிக்கொண்டும் வரவில்லை. அக்கம் பக்கத்தில் தகவல் கொடுத்தும் பயனில்லை.


நாலைந்து நாட்கள் கடந்தன.


“அந்த மாட்டை வெளியே ஓட்டி விடலாமா?” என்று பெரியவாளிடம் வந்து கேட்டார் கார்வார்.


“வெளிமாடு என்பதால் அந்தப் பசு மாட்டை வெளியே துரத்தி விடுவதானால், நம்ம மடத்திலுள்ள பல வெளி மனிதர்களையும் வெளியே அனுப்பி விட வேண்டும்!..”


(மடத்தில் எந்தக் காரியமும் செய்யாமல், தான் முக்கியமான பணி செய்வது போல் காட்டிக் கொண்டு பலர் உண்டு, உறங்கி வந்தார்கள்)


“மாடு வாயில்லாப் பிராணி.அதனுடைய எஜமானன் யார் என்று தெரியல்லே. நம்ம மாட்டுக் கொட்டகையிலேயே இருக்கட்டும். அதை ரட்சிக்க வேண்டியது நமது கடமை.”


சில நாட்கள் கழிந்த பின் அந்தப் பசுமாடு சினைப்பட்டு கன்றும் ஈன்றது.


கார்வார் மறுபடியும் வந்து நின்றார் பெரியவாள் முன்.


“சீயம்பால் காலம் முடிஞ்சு போச்சு…நல்ல ஜாதி மாடு…புஷ்டியான தீனி….வேளைக்கு நாலு சேர் கறக்கிறது…”
“அந்த மாட்டுப் பாலை அப்படியே காளஹஸ்தீஸ்வரர் கோயில் அபிஷேகத்துக்குக் கொடுத்து விடு.மாடு மடத்துக்குச் சொந்தமானது இல்லை. பால் மடத்துக்கு வேண்டாம்.”


இரண்டு நாட்கள் ஆயின.


“என்ன செய்கிறே அந்த மாட்டுப் பாலை?” என்று கார்வாரிடம் கேள்வி.
அவர் அவசரம்,அவசரமாக, “தினந்தோறும் நாலு சேர் பால் காளஹஸ்தீஸ்வரர் கோயிலுக்கு கொடுக்க ஏற்பாடு செய்துட்டேன்…” என்றார்.


“என்றாலும் தவறுதலாக மடத்து உபயோகத்துக்கு வந்துடலாம் இல்லையா?…மாட்டையும்,கன்றையும் ஏதாவது ஒரு சிவன் கோயிலுக்குக் கொடுத்து விடு.”
அப்படியே செய்தார் கார்வார்.


ஆனால், அந்தக் கோயிலில் ஏற்கனவே நாலைந்து பசுமாடுகள் இருந்தன.நிர்வகிப்பது கஷ்டமாக இருந்தது.
பசு மாடுகளை கோயில் அதிகாரி ஏலத்துக்குக் கொண்டு வந்து விட்டார்.


ஏலத்தில் விட்டால், அவையெல்லாம் நேரே கசாப்புக் கடைக்குத் தான் போகும் என்ற அச்சம் பெரியவாளுக்கு.
செல்வந்தரான ஒரு பக்தரிடம் சொல்லி எல்லா மாடுகளையும் ஏலத்தில் எடுக்கச் சொன்னார்கள். பின்னர், அக்கறையுடன் பராமரிக்கக் கூடியவர்களைப் பார்த்து ஒவ்வொரு பசுமாடாகக் கொடுத்து விட்டார்கள்.

பசுக்களிடம் அவ்வளவு வாத்ஸல்யம் பெரியவாளுக்கு.




2014 May 16 « Sage of Kanchi
 
பரோபகாரம்

பரோபகாரம்

பரோபகாரம் பண்ணறவாளுக்கு ஊக்கமும், தைர்யமும் அத்யாவச்யம். மான அவமானத்தை பொருட்படுத்தாத குணம் வேணும்.பொழுதுபோக்குன்னு சொல்லி, வாய்க்கு ருசியா திங்கற எடத்லேயும், கண்ணை கவர்ற காட்சி சாலைகள்ள பொழுத வீணாக்கறது தப்பு.

இந்த நேரத்த
, பொறத்தியாருக்கு சேவை பண்ணறதில் கழிக்கணும்.லைப்…ல ஏகப்பட்ட அக்கப்போருக்கு நடுவுல கொஞ்சம் உல்லாசமா பொழுத கழிக்கறது ஒரு தப்பா?..ன்னு பலபேர் கேக்கலாம். அப்பிடி கேக்கறவாளுக்கு சொல்றேன்…..பரோபகாரமா சேவை பண்ணினாலே போறும், அதுவே பெரிய உல்லாசம் ன்னு தெரிய வரும். அதுதான் வெளையாட்டு. அதுதான் சந்தோஷம். ஈசாவாஸ்ய உபநிஷத் மொதல் மந்த்ரத்லேயேத்யாகம் பண்ணி அனுபவின்னு சொல்றது.


காந்தி கூட இதுலதான் தன்னோட பிலாசபி முழுக்க இருக்குன்னு அந்த உபநிஷத்தை தலைக்கு மேல வெச்சுண்டு ச்லாகிச்சுண்டு இருந்தார்.

தானம் பண்ணிட்டு நாம் நம்ம பேரை பேப்பர்ல போட்டுக்காம இருக்கலாம். ஆனாலும், “எப்டியாவது நாலு பேருக்கு நாம தானம் பண்ணினத நைஸா தெரியப்படுத்திடணும்“..ங்கற எண்ணம் உள்ளூர இருந்தா……….பேப்பர்ல போட்டுக்கறத விட மஹா தோஷமாயிடும்.

பண்ணின தானத்த வெளில சொல்லிக்காம இருக்காரே! எத்தன உத்தமமான குணம்ன்னு பத்து பேர் ஸ்தோத்ரம் பண்ணுவா. அந்த மாதிரி ஆசைகள் தலையை கூட தூக்க வொட்டாம அதை சம்ஹாரம் பண்ணனும்னா….என்ன பண்ணணும்?



தானம் வாங்கறவன், தனக்கு அந்நியன் இல்லே“..ங்கற ஞானத்த நன்னா ஸ்திரமாக்கிண்டுட்டா குடுத்தத வெளில சொல்லிக்கவே தோணாது. நம்ம பந்துக்களுக்கோ, நம்ம கொழந்தைகளுக்கோ ஏதாவது குடுத்தா, அத வெளில சொல்லி பெருமைப் பட்டுப்போமா? அதே மாதிரி லோகத்ல சகல ஜீவ ஜந்துக்களுக்கும் அப்பா அம்மா அந்த பார்வதி பரமேஸ்வராள்தான் !

தானம்ங்கற வார்த்தைகூட தப்புதான்.பகவான் நம்மளை கொடுக்க வெச்சான்ன்னு பவ்யமா இருக்கணும்.


????????? « Sage of Kanchi

 
Temple Worship

[SIZE=+2]Temple Worship


[/SIZE]
[SIZE=+2]
chandrasekharendra_saraswati300.jpg

G[/SIZE]od exists everywhere. So, a question may be asked why there should be any temples built for Him. We know that God exists everywhere, but still the idea does not get firmly established in our mind. It does not get reflected in our daily actions. If one remembers God all the time, how can one utter any falsehood or commit evil acts?


If God is merely omnipresent, how can He help us? We all long for His grace somehow. So, we have to worship Him and get His grace. But the agama-shastras tell us how this should be done. The sun's rays contain a lot of heat energy. If we keep a piece of cloth in the sun, it does not catch fire by itself. But if we place a lens and focus the sun's heat rays on that piece of cloth, after some time, we find that the cloth catches fire.


Similarly, electrical energy is everywhere, but in order to bring it to our daily use, we need to have generators to channel that energy and transmission systems to distribute it at the places where we need it. In the same way, in order to get the grace of the Omnipresent Lord, we have to build temples, where we can focus the power of the Lord in a consecrated idol for our benefit in an easy way.


So, in our country, we find that there are many temples; of course, in other countries also, there are many places of worship, but there is no question of installation of any idols, as in the case of our temples. They have just a big prayer hall where people assemble and offer some prayers or do some silent meditation and then disperse after getting some peace of mind. But in our temples, the idols are installed and they have divinity infused into them and, as such, they have a certain sanctity about them.


Until a particular day, the sculptor goes on chiseling that piece of stone, but after a certain day, it becomes invested with divinity, and we start performing abhisheka, archana, deepaharati etc. for that deity; it acquires divine power and it obtains chaitanya. We see divinity in our idols and, therefore, we do abhisheka, alankara or decoration, naivedyam, haarati and many other upacharas.



Some people say that the places of worship, which belong to other religions, are quiet, but our Hindu temples are full of noise. Of course, this is true. Actually, there are two types of noises in our temples. One is the desirable type of noise such as ringing of bells, the sounding of musical instruments like nadaswaram and the shahnai; the recitation of namavalli archana, recitation of mantras and so on.


Of course, there is also the undesirable type of noise in the form of people indulging in idle gossip and purposeless talk. It is our duty to see that this idle talk, which results in undesirable noise, is totally eliminated from our temples. In other places of worship, this type of fanfare that we have in our temples, is not there, because they do not recognize idol worship or worship of God in the saguna form and they believe in worship of God in his attributeless and shapeless form only.


In our temple, a huge temple bell is rung at the time of puja. This is done so that the evil spirits may go away from temple premises, and all abuses or other bad sounds may be stifled from being heard. In our houses, we do not have such a huge bell, but we ring only a small bell at the time of puja. But we do not offer musical instruments and other upacharas to the deity, but only akshata or unbroken rice.


Discourse during His Delhi Vijayam in 1973


Temple Worship
 
In our temple, a huge temple bell is rung at the time of puja. This is done so that the evil spirits may go away from temple premises, and all abuses or other bad sounds may be stifled from being heard. In our houses, we do not have such a huge bell, but we ring only a small bell at the time of puja. But we do not offer musical instruments and other upacharas to the deity, but only akshata or unbroken rice.


Discourse during His Delhi Vijayam in 1973


Temple Worship


Dear PJ sir,

I do not understand something here..its says that the bells rung at the time of Puja in a temple...to keep away evil spirits from temple premises..my question is "if a temple is so sacrosanct to start with..what is an evil spirit doing there in its premise?"

or it is the so called evil spirit too is looking for some mode of salvation and hanging around a temple and we humans chase them away? Is that fair?

Salvation is for everyone ..after all human from all walks of life and thoughts throng a temple..even people with evil tendencies come to temple..so its not fair to only keep the evil spirit out...cos if the evil spirit is present at the temple he/she has every right to gain some divine blessing.

There is no need to get worried about evil spirits in temples cos we believe that a temple is a sacred place and it should confer some "protection" to devotees that come there.

Now coming to the mechanism of action on how a bell drives away an evil spirit..even in Chinese Culture they use Gongs,Cymbals etc to drive away evil spirits..but are evil spirits actually scared of a loud sounds?
If they are..that means evils spirits prefer silence isnt it?
Isnt that a Sattva Guna to prefer silence..that means its we humans who make non stop noise but claim to be better that evil spirits otherwise.

So does a bell actually chase away evil? or is it just a siren to remind people "hey its prayer time"

or does the frequency of the sound waves from a bell disturb the subtle body of the evil spirit?

How does the bell work???


Just to add..taken from internet:

In Hindu practice, bell-ringing during prayer is said to help one clear the mind of mundane thoughts and focus on the deity or reflect and meditate. Also, the chiming of bells is said to resemble that of the primordial sound, Aum that represents all-pervading energy.

I think this explanation about bell resembling AUM makes the most sense.
The scaring away evil spirits theory seems to be part of Agamic Tradition as cited in these verses:

Taken from internet:
According to Agama Sastra the bell ringing in temples is to ward off evil spirits.

(i) "ghantaayam tadayeth kim prayochanam?
yaksha rakshasa paisasa tanava brahmarakshasah gacchanthi mani sapthah"

'Why to ring bell in temples?
Yaksha, Rakshasa, Paisasa and Brahmarakshasah like evil spirits go out of the temple when they hear the ringing of temple bell'

(ii) "uthsatanam pisasatheh preenanam sahareh param
sannithana mamarthyanam ghantaayachalanath baveth"

The bell is used to give sound for keeping evil forces away. The ringing of bell is pleasant to God. Also beneficial Devatas are attracted by this sound.

So since the bell driving away the evil spirits theory is actually Agamic..so what is the Vedic theory about bells??
 
Last edited:
Story of Padhukas


Story of Padhukas




“பெரியவா திடீரென்று ஒரு சின்ன குழந்தையின் துள்ளலோடு பாதுகையை போட்டுக்கொண்டு கால் மாற்றி மாற்றி குடுத்த தர்சனம்”
======================================================

ஒருநாள் மடத்தில் எக்கச்சக்க கூட்டம்! பெரியவாளுடைய பரம பக்தரான ராமலிங்க பட் வரிசையில் நின்று கொண்டிருந்தார். பக்கத்தில் வேதமூர்த்தி என்ற பக்தரும் இருந்தார். ராமலிங்க பட்டின் கைகளில் பட்டுத் துணியால் போர்த்திய ஒரு பெரிய தாம்பாளம் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்தது. பட் மெதுவாக வேதமூர்த்தியிடம்,
“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?”
“சொல்லுங்கோ பட்…. என்ன வேணும்?”


“கையில வெச்சிண்டு இருக்கறதை பெரியவாட்ட குடுத்து ஆசீர்வாதம் பண்ணி வாங்கணும்….ரொம்ப கூட்டமா இருக்கு…ஒங்களுக்கு யாரையாவது தெரியுமா? இதை பெரியவாட்ட குடுக்கறதுக்கு….”


“ரொம்ப கூட்டந்தான்…பாக்கலாம் யாராவது தெரிஞ்சவா இருக்காளான்னு…சரி, பட்டுத்துணி போத்தி என்ன கொண்டு வந்திருக்கேள் ?…”


“இது…பெரியவாளுக்கு பாதுகைகள் ரெண்டு ஜோடி பண்ணிண்டு வந்திருக்கேன். ஓரிக்கையில பெரியவாளுக்கு கோவில் கட்டப்போறா இல்லியா..அதுக்கு அவரோட பாதங்கள்ள போட்டுண்ட பாதுகையை அங்கே ப்ரதிஷ்டைக்கு குடுக்கலாம்ன்னு கொண்டு வந்திருக்கேன். இன்னொரு ஜோடி எங்காத்துல வெச்சு பூஜை பண்ணறதுக்கு.”


” ஒரிக்கைல கோவில் டிரஸ்டிகிட்ட பர்மிஷன் வாங்கிண்டுதானே இந்த பாதுகைகள பண்ணிண்டு வந்தேள்?..” வேதமூர்த்தி அனாயாசமாக ஒரு குண்டைத் தூக்கி போட்டார்.


“பர்மிஷனா!…எனக்கு அதுமாதிரி யார்கிட்டயும் கேக்கலியே! அப்டி கேக்கணும்னு என் மனசுக்கு தோணவே இல்லியே!..” கலவரமடைந்தார் பட். “என்னவோ என்னோட மனசுக்கு பட்டதை செஞ்சிருக்கேன். எங்கம்மா சமீபத்ல சுமங்கலியா காலமானா….அவாளோட சொத்தா கடைசி வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் நகைகளையும், இந்த பாதுகையோட பெரியவா கைங்கர்யத்துக்கு சமர்ப்பிக்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தது.. மைசூர்ல நல்ல ஒசந்த சந்தன கட்டை வாங்கி, நல்ல ஆசாரிகிட்ட குடுத்து, ரொம்ப சுத்தபத்தமா ரெண்டு செட் பாதுகையும் பண்ணிண்டு வந்திருக்கேன்……”


“ஸ்வாமி……நீங்க சொல்றது ரொம்ப நல்ல கார்யம். ஆனா, ஒருவேளை மடத்ல இதை ஏத்துக்கலேன்னா?…” வேதமூர்த்தி கேட்ட க்ஷணமே நொறுங்கிப் போனார் பட். …”பகவானே! ஒருவேளை பர்மிஷன் வாங்காம பண்ணிண்டு வந்தது தப்போ?…” உண்மையில் யாருமே இல்லாத போது பெரியவாளிடம் பாதுகைகளை குடுத்து ஆசீர்வாதம் வாங்கலாம் என்ற எண்ணத்தோடுதான் வந்தார். என்னவோ, ஒரு விசேஷமோ, லீவு நாளோ இல்லாதபோதும் அன்று மடத்தில் சொல்லிமுடியாத கூட்டம்!


வேதமூர்த்தியின் முகம் திடீரென்று ப்ரகாசமானது! “சித்த இருங்கோ பட்! அதோ பெரியவாகிட்ட சந்த்ரான்னு ஒர்த்தர் கைங்கர்யம் பண்றார். அவரைக் கூப்ட்டு விஷயத்தை சொல்லுவோம். அப்புறம் பெரியவா சித்தம்.” என்று சொல்லிவிட்டு, கியூவிலிருந்து அடிக்கடி சந்த்ரா தன்னை பார்க்கும்படி வெளியே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார். பெரியவாளோ அசைவற்று அசலமான ப்ரம்மமாக அமர்ந்திருந்தார். உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லாத நேரம். பார்வையும் குறைந்திருந்தது. யாராவது எதிரில் வந்து இன்னார் என்று சொல்லிக்கொண்டு நின்றால், கண்களை சுருக்கிக்கொண்டு பார்ப்பார். காதும் சரியாக கேட்கவில்லை.

சந்த்ராதான் தன்னுடைய வெண்கலக் குரலில் பெரியவாளிடம் யார் வந்திருக்கிறார்கள் என்பதை சொல்லிக் கொண்டிருந்தார். அவருடைய செயல் எல்லாம் டமார், டுமீர்தான்! அவரிடம் யாரும் ரகசியமே சொல்லிவிட முடியாது! அவருக்கும் மெதுவாகவே பேச வராது!


இதோ! சந்த்ரா வேதமூர்த்தியைப் பார்த்துவிட்டார். “கூட்டமோ திமிலோகப்படறது! இதுல பட் கொண்டுவந்திருக்கற பாதுகைக்கு விளக்கம் குடுத்து சந்திராவுக்கு புரிய வைத்துவிடுவோம்…அவர் பெரியவாட்ட சொல்லிட்டாப் போறும்”….என்று எண்ணி வேதமூர்த்தி சந்திராவை அருகில் வர சைகை பண்ணினார்.


“சொல்லுங்கோ மாமா” என்ற சந்திராவிடம் சுருக்கமாக விஷயத்தை சொன்னார் வேதமூர்த்தி.
“இதானா விஷயம்! குடுங்கோ…மாமா அந்த பாதுகைகளை!” என்று பாதுகைகளையும், எட்டு பவுன் நகைகளையும் வாங்கிக்கொண்டு தன் தலைமீது வைத்துக்கொண்டு பெரியவாளிடம் போய்விட்டார்.

கல்யாணம், வேலை, வ்யாதி என்று பெரியவா காதில் போட்டுக்கொண்டே, வந்தவர்களுக்கு ப்ரசாதத்தை குடுத்துக்கொண்டே சரியான க்ஷணத்தை எதிர்பார்த்தார் சந்த்ரா. ஒரு க்ஷணம் அடுத்து வந்த கூட்டத்தை காத்திருக்கும்படி சொல்லிவிட்டு, பெரியவாளிடம் விஷயத்தை சொன்னார். பட்டும், வேதமூர்தியும் மூச்சைப் பிடித்துக்கொண்டு பெரியவாளின் திருமுகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் முகத்தில் ஒரு புன்னகை! உடனே சந்த்ரா எல்லாருக்குமாக ஒரு செய்தியை சொல்ல ஆரம்பித்தார்…



“கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருங்கோ….பெரியவா கார்யமா, அவாளோட அனுக்ரகத்தோட ஒரு சேதி சொல்லப்போறேன்..மஹா பெரியவாளுக்கு ஒரிக்கைல கோவில் கட்டறதுக்கு ப்ரதோஷம் மாமாவும் இன்னும் சில பக்தாளும் முனைப்பா இருக்கா..அந்த கோவில்ல ப்ரதிஷ்டை பண்ணனும்னு ஆசைப்பட்டு ஒரு பக்தர் ஒரு ஜோடி பாதுகைகளை கொண்டு வந்திருக்கார். அவர் பேரு ராமலிங்க பட். அவா அம்மா காலமாற வரைக்கும் போட்டுண்டு இருந்த எட்டு பவுன் செயினையும் கோவில் பணிக்காக குடுத்துறதா இருக்கார்…இது எல்லாத்தையும் பெரியவாளோட சந்நிதியில சமர்ப்பிக்கறேன்…” என்று சொல்லிவிட்டு பாதுகைகளை பெரியவா முன்னிலையில் வைத்தார். நகையை கங்கா ஜலத்தில் அலம்பிவிட்டு ஒரு மூங்கில்தட்டில் வைத்தார். பெரியவா தன் பார்வையால் கூட்டத்தில் துழாவி, ராமலிங்க பட்டை முன்னால் வருமாறு அழைத்தார்.



அவருடைய தாயார் நகையை தன் வயிற்றின் மேல் வைத்துக்கொண்டார். திருப்பாதுகைகளை தன் திருவடிகளில் அணிந்து கொண்டார். அதை குனிந்து பார்த்துவிட்டு குழந்தையைப் போல் சந்தோஷப்பட்டுக்கொண்டார். பிறகு, இடது காலைத்தூக்கி வலது தொடையின் மேல் போட்டுக்கொண்டும், மறுபடி வலது காலைத்தூக்கி இடது தொடையில் போட்டுக்கொண்டும் நடராஜரை போல் எல்லாருக்கும் காக்ஷி குடுத்தார். அவர் முகத்திலோ ஒரே குஷி! இப்படி நான்கு முறை கால்களை மாறி மாறிப்போட்டு ஏக அனுக்ரஹம்! உடல்நிலை சரியில்லாதிருந்த பெரியவா திடீரென்று ஒரு சின்ன குழந்தையின் துள்ளலோடு பாதுகையை போட்டுக்கொண்டு கால் மாற்றி மாற்றி குடுத்த தர்சனம் பக்தர்களிடையே பரவசத்தை உண்டு பண்ணியது. எங்கும் “ஹர ஹர சங்கர; ஜய ஜய சங்கர” கோஷம் !!



இரண்டாவது செட் பாதுகைகளை தன் பாதங்களில் அணிந்து கொண்டு பின்பு கழற்றி விட்டார். நான்கு முறை போட்டுக்கொண்ட பாதுகைகள்தான் இப்போது ஓரிக்கையில் ப்ரதிஷ்டையாகி இருக்கிறது.


ராமலிங்க பட் பெரியவாளின் இந்த அபரிமிதமான ப்ரேமையில் திக்கு முக்காடித்தான் போனார். இப்போது இந்த பாதுகையை ப்ரதோஷம் மாமாவிடம் முதலில் ஒப்படைக்கவேண்டும்.ஸ்ரீமடத்திலிருந்து ஒரு பக்தர் வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக நேரே ப்ரதோஷம் மாமாவிடம் போய் பாதுகை விஷயத்தை சொல்லி, அப்பாதுகைகள் அவரைத் தேடி வந்துகொண்டிருப்பதையும் கூறினார். அவர் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. உடனே வாசலில் மெழுகி கோலமிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி, வாசலில் பூர்ணகும்ப மரியாதையோடு தயாரானார் பெரியவாளை [பாதுகையை] வரவேற்க!



மஹா பக்தர்கள் கூடியதால் பாதுகைக்கு கண்ணீரால் அபிஷேகம் ஆனது. இன்றும் ஓரிக்கையில் பெரியவா அப்பாதுகை மூலமாக அனுக்ரஹம் செய்து கொண்டிருக்கிறார். எப்படி சிதம்பரம் என்றால் நந்தனாரோ, ராமன் என்றால் ஆஞ்சனேயஸ்வாமியோ, குருவாயூரப்பன் என்றால் பூந்தானமோ, அப்படி பெரியவா என்றால் ப்ரதோஷம் மாமா நம் நினைவிற்கு வருகிறார்.



Jaya Jaya Sankara Hara Hara Sankara.


Story of Padhukas @Orikkai Mani Mantapam « Sage of Kanchi
 
ஐந்து நிமிஷமாயிற்று

ஐந்து நிமிஷமாயிற்று

முதுமை, உடல் தளர்ச்சி, துணை இல்லாமல் வெளியே போக முடியாது. ஆட்டோ, டாக்ஸியில் போகலாமே என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.

நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக் கொள்கிறது. அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும். ஒரே ஒரு தடவை வெறும் பகற்கனவு என்பது அவருக்கே புரிகிறது. ஆனால், நாள் ஆக, ஆக, தவிப்பும் வளர்ந்துகொண்டே போயிற்று.


வாசற்படியில், காலடிச் சத்தம் கேட்டாலே, அவன் தானோ? என்ற திகில் போகவேண்டியிருக்கிறதே? என்ற அச்சம் இல்லை; தரிசிக்காமல் போகிறோமே! என்ற ஏக்கம்.


ஒருநாள் வாயிற்புறத்தில் காலடிச் சத்தம்.

ஆமாம், காலடிச் சத்தம்.

உங்களை அழைச்சிண்டு காஞ்சிபுரம் வரும்படி பெரியவா உத்தரவு என்றார் வந்தவர்.


வயோதிகரின் ஆத்மா சிலிர்த்தது. நான் எனக்குள் தானே பேசிக் கொண்டேன்? அதெப்படி பெரியவாளுக்குக் கேட்டிருக்கும்?


நான் என்ன பண்டிதனா? அக்னிஹோத்ரியா? இல்லை, அமைச்சரா? அரசியல் தலைவரா? எப்போதோ ஒரு தேங்காயைச் சமர்ப்பித்து, நமஸ்காரம் செய்த நினைவு. நெஞ்சில் பதிந்த திருவுருவம், காலத்தால் மறைந்துவிடவில்லை.


மடத்துப் பணியாளர், என் தோளைப் புடிச்சிண்டு நடந்து வந்து கார்லே ஏறிக்கிறேளா?என்றார்.


கார்! விமானத்தையல்லவா எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்!


இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சென்றடைந்த சமயத்தில், பெரியவாள் அன்னை காமாக்ஷி கோயிலில் இருந்தார்கள்.


அம்பாளைத் தரிசனம் பண்ணிட்டுப் போகலாமா? என்றார் சிப்பந்தி.


முதல்லே, பெரியவா தரிசனம் அப்புறமா எல்லாம்…..


பெரியவாள் திருமுன்னிலையில் போய் நின்றார். பேச்சு வரவில்லை. கண்கள் பேசிக் கொண்டன. ஒரு வழியாகச் சமாளித்துக் கொண்டு, பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார்.


ஐந்து நிமிஷமாயிற்று. எழுந்திருக்கவேயில்லை. <Shankara>


பெரியவா தன்னுடைய ஒரு காஷாய வஸ்திரத்தைக் கொடுத்து, அந்தச் சரீரத்தின் மேல் போர்த்தச் சொன்னார்கள். மடத்துப் பணியாளர்களே இறுதிச் சடங்குகளைச் செய்யும்படி உத்தரவாயிற்று.


முதல்லே பெரியவா தரிசனம்; அப்புறமா, அப்புறமா அம்பாளைத் தரிசித்துக் கொள்ளலாம் என்று சொல்லத்தானே விரும்பினார். அவர் விருப்பம் நிறைவேறிவிட்டது.


அரைமணி கழித்து, அவர் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தார் அம்பாளை தரிசிக்க. இனி, எந்த ஒரு தாயின் கர்ப்பமும் அவருக்குக் கிருஹம் ஆகமுடியாது!


அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை. உம்மாச்சி தாத்தா அனுகிரஹம் !!!


2014 January 28 « Sage of Kanchi
 
Where did the headache go?

Where did the headache go?

In the year 1968 when Shri Periyavaa was on a yatra in Andhra Pradesh a bhakt by the name of Thiru Sundararajan (TS) was in mental turmoil with the desire to have a darshan of Shri Periyavaa. Commencing on January 24, 1969 TS started having splitting headaches every night and became habituated to suffering in this way every night from approximatedly 10 pm to 11 pm. The intensity of the headache lead one to suspect whether it was not being caused by cancer. He took leave of absence for one month from his office and came from Delhi to Hyderabad on February 15.


In the village of Telaprolu some 20 km from Vijayawada he had a darshan of Shri Periyavaa. At about 4 o’clock in the evening when Shri Periyavaa was in repose TS stood before him.


“Do you know what is Brahacharanam ?” asked Shri Periyavaa. TS did not consider this to be a question without any context. This was because although TS belonged to the Vadama sect his wife belonged to the Brahacharnam sect. TS understood that it was to point this out that Shri Periyavaa had asked this question. TS confirmed that it was the manner in which he had got married.


TS then explained the problem of his headache and the fact that he had specifically taken leave of absence from his office in order to come and meet Shri Priyavaa and prayed that Shri Periyavaa should grace him with a solution.


“Do you know Samskritam ?” asked Shri Periyavaa to which TS, red in the face, confessed that he had not learnt the language.


“You read 10 lines everyday from the Narayaneeyam”, said Shri Periyavaa and with his blessings sent TS on his way.


After taking his leave TS sat in his car when a lady came running up.
“Periyavaa has asked me to go up to Vijayawada in your car” said the lady and TS accomodated her and they set out.


On arrival in Vijayawada the lady insisted that TS should partake of meals at the home where she was staying. But he was dead scared. The reason was that even if he made haste in driving to Hyderabad it would be 10 pm by the time he arrived there and he was scared that his affliction, the daily ache in the head, would have started by then.


Saying it is very late and TS should leave only after finishing his meals the lady went into the agraharam, brought one dish from each home and served TS with relish.


Finishing his meals within 15 minutes he set off for Hyderabad and arrived there at 10 pm with great trepidation in the expectation that the headache would set in as usual.


But where did the headache go ? The anticipated headache which he used to await with fear everyday during the past months did not put in its appearance that day. TS was overcome with wonder as to whether this was the result of his entreaties made to Shri Shri Shri Mahaperiyavaa and Shri Vaideeshwarar.


He was not without fear and suspicion that even if he had escaped the headache that day perhaps it would return the next day. But what to speak of that day the total disappearance of the headache on all subsequent days after causing untold pain every night at 10 pm was an act of grace in the full knowledge of that master of spiritual medicine Shri Shri Shri Mahaperiyavaa.

Where did the headache go? :))) « Sage of Kanchi
 
வாழைத்தண்டு / Banana tree inner stem for skin diseases

வாழைத்தண்டு / Banana tree inner stem for skin diseases



at_shankara_mutt_chennai.jpg


The lady had only her son to support her and he was afflicted with a skin disease that spread rapidly all
over his body. He had itching sensation everywhere and if he scratched it would start to bleed leaving large patches of bruise. The mother, like every one else, came to Maha Periyava.

‘I know no other refuge and cannot afford medical treatment. Maha Periyava should cure him’.

The Jagadguru asked them to stay in the mutt. He instructed the boy not to eat or drink anything, except His utchishta. He gave instructions to the kitchen attendants too about His bhiksha, which was the inner stem of the banana tree, boiled in water with some salt added to it. Maha Periyava would accept this as His bhiksha and then drink some butter milk. the leftovers of both were given to the boy.


Ten days later the itching and the darkness in the skin began to subside. as the days passed the skin was rid of the infection and became clear and healthy. after 40 days the skin regained its perfect health and the boy looked radiant. the mother of the boy was delighted.


‘I used to think that my son’s affliction of the disease was because of his past sins. now, I know that it was the merit of the good deeds of the past that gave him this infection. who could ever have the fortune of eating and drinking Maha Periyava’s utchishta for 40 days at a stretch?!


Maha Periyava, like always, said humbly ‘ it was all because of the medicinal qualities of the banana stem!’

Sri Maha Periyava Thiruvadigal Saranam.

Jaya Jaya Sankara, Hara Hara Sankara.


2014 May 23 « Sage of Kanchi
 
கனகல் மருத்துவம் – Cancer Cure

கனகல் மருத்துவம் – Cancer Cure


இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.



ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள்.
பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.



‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக் காவல்என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா.



அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது.



(துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)”
- ஸ்ரீ மடம் பாலு
- வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்தவர் : த.கி.நீலகண்டன்

2014 May 23 « Sage of Kanchi
 
“You are only a Trustee for the wealth you possess. Never think that you are its own

“You are only a Trustee for the wealth you possess. Never think that you are its own


A wealthy man had come for Periva’s darshan.



With his right hand over his mouth, he started to speak emotionally, “I have blood pressure & diabetes for a long time. Now, I have been diagonised with cancer too. I am suffering a lot. Periyava must please suggest a parikaram (remedy).”


“Will you do as I say”, asked Periva.


“Certainly”, said the man.

“It might be difficult…”.

“Never mind. I want to just get rid of these diseases. I will do whatever Periva instructs.
All I want is to be cured of this BP, diabetes and cancer……”, saying this, he wiped his eyes.
Generally, Periva had compassion towards everyone for no reason at all, and now, this man was in tears. Can Periyava let him down?

Periva said, “In the well, there is water. But the well never drinks up the water claiming ownership over it”.


Trees bear fruits, but it never says ‘this fruit belongs to me. I will only eat it”.


“The cow gives milk, but never drinks up its own milk. Several trees and plants yield vegetables, but they keep nothing for themselves”.


“As you can see, plants and animals themselves are doing so much paropakaaram (service to others).

They say Man has got six senses. So, how much more paropakaaram must he do?
“You have lot of money – but you are neither spending it for yourself, nor are you doing any dharma (good deeds) from it. The sins from your last birth have befallen on you in the form of diseases. If you have to get rid of the sins, you must do a lot of good deeds”.


“Have you heard about the dharmam called ‘Ishta Purtham?’. Money must be spent in good deeds like digging a well, temple renovation, helping the poor, helping relatives, etc. Also, buy medicines for poor orphans who are sick. When someone asks for something, he must not go empty handed. Is this all clear?

You are only a Trustee for the wealth you possess. Never think that you are its owner“.



The man started weeping uncontrollably…”



He lived for many years thereafter doing a lot of dharma.


Thanks to Shri Suresh Panchanathan for sharing this


You are only a Trustee for the wealth you possess « Sage of Kanchi



 
ஆஞ்சநேயர் வெண்ணை for skin disease

ஆஞ்சநேயர் வெண்ணை for skin disease



namakkal-anjaneyar-butter-alankar.jpg



பெரியவாளிடம் ஒரு பக்தர் வந்தார். அவருடைய முகம், எல்லோரையும் ஒரு மாதிரியாகப் பார்க்க வைத்தது. காரணம்? ஏதோ ஒரு வித skin disease
அவரைத் தாக்கியதால், முகம் மட்டும் பயங்கர கருப்பாக ஆகியிருந்தது. பாவம். முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?


“பெரியவாதான் எனக்கு ஒரு மருந்து சொல்லணும். வெளில போகவே ரொம்ப கஷ்டமா இருக்கு. போகாம இருக்கவும் முடியாது. எல்லா வைத்யமும் பண்ணிட்டேன்….”


மஹா வைத்யநாதம் தீர்க்காத வியாதியா!


“ஒங்காத்துப் பக்கத்ல ஆஞ்சநேயர் கோவிலோ, சன்னதியோ இருக்கோ?.”

“இருக்கு பெரியவா…பெருமாள் கோவில்ல ஆஞ்சநேயர் சன்னதி இருக்கு”

“ரொம்ப நல்லதாப் போச்சு. நீ தெனோமும் அந்த ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாத்தி, அதை வழிச்சு எடுத்துண்டு போயி, ஒன்னோட மூஞ்சி முழுக்க தடவிண்டு கொஞ்ச நேரம் ஊறணும். அப்றம் அதை சோப்பு கீப்பு போட்டு அலம்பாம, ஒரு துணியால நன்னா தொடச்சுக்கோ!…பண்றியா?”


“பெரியவா உத்தரவு. கட்டாயம் பண்றேன் “


கொஞ்ச நாள் தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சாற்றிய வெண்ணையை முகத்தில் தடவிக் கொண்டு வந்தார்.

கொஞ்சங்கொஞ்சமாக வெண்ணையை துடைத்து
எடுக்கும்போது, கூடவே அட்டக் கருப்பும் சேர்ந்து வர ஆரம்பித்து, முகம் பளிச்சென்று ஆகிவிட்டது!


தர்சனத்துக்கு மிகவும் சந்தோஷமாக வந்தார்.



“என்ன? த்ருப்தியா? சொஸ்தமாச்சா? எப்டி ஆஞ்சநேய வைத்யம்?..” என்று சிரித்தார்.


“ஆஞ்சநேய வைத்யம் இல்லே; ஆச்சார்யாள் வைத்யம்” என்று நன்றியும் சந்தோஷமும் கலந்து கூறினார் பக்தர்.



இரண்டுமே சத்யந்தான்! ஒன்றுதானே!



Thanks to Suresh Panchanathan for the article.


2014 May 23 « Sage of Kanchi
 
Results of mistakes and adharma

Results of mistakes and adharma



Both the kidneys did not function. Survival was very difficult. He had spent a lot of money visiting
several specialists and took the medicines prescribed by them, but all was in vain.

The man came to Periva and poured out his grief. Generally, Periyava would show kindness and compassion towards devotees who come with such problems, but on that day He spoke quite harshly.

“People commit mistakes and adharma, and come here when they have a problem. They don’t realize their faults at all. What can I do?”

Why this sudden outburst from Periyava? – no one could understand.

After a while, Periva said, “This man’s ancestors had established a Trust for doing dharma activities.They had left behind land which gave a good yield. It was intended to erect water booths (தண்ணீர் பந்தல்) and carry out the dharma activities. But this man has sold the land, and gobbled up all the money”.

The man who came with kidney problems felt very guilty. “Henceforth, I will erect water booths (தண்ணீர் பந்தல்) and carry out the dharma activities”, promised the man.

Periyava at once softened!

“Are you aware of Vasambu? (வசம்பு Acorus calamus also called as Common Sweet Flag — a medicinal plant) You will get it in traditional stores selling herbal medicines. Grind it and apply under your belly regularly”, said Periyava.

The man came again for darshan after about ten to twelve days. Even before Periva could ask, he said “There is no trouble now!”

(Thanks to Suresh Panchanathan for the article)

Results of mistakes and adharma « Sage of Kanchi
 
வெள்ளிக்காசு தந்த தங்கக்கைகள்

வெள்ளிக்காசு தந்த தங்கக்கைகள்

large_155129734.jpg




54 ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகிலுள்ள திப்பிராஜபுரம் கிராமத்தில் மகாபெரியவர் முகாமிட்டார். பெருங்கூட்டம் அலைமோதியது. அதில் சிக்கிக்கொண்ட ஒரு ஒன்பது வயது சிறுமியை கூட்டத்தினர் அங்குமிங்கும் தள்ளினர். அவளது கையில் ஒரு நோட்டு இருந்தது. அதை பெரியவர் கையில் கொடுக்க வேண்டும் என்பது அவளது நோட்டம். எப்படியோ ஒரு வழியாக பெரியவர் முன் வந்து விட்டாள். ஆனாலும், அவளை அவர் பார்க்கவில்லை. பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுப்பதிலேயே கவனமாக இருந்தார்.

ஒரு வழியாக, சிறுமி மீது பெரியவரின் பார்வை பட, அவரை அருகே அழைத்தார். சிறுமி அவரிடம் ஆசி பெற்றாள்.

""இந்த நோட்டில் லட்சத்து எட்டு தடவை "ஸ்ரீராம ஜெயம்' எழுதிருக்கேன்! வாங்கிக்கிடுங்கோ!'' என்றாள்.
பெரியவரும் அதை தன் தலையில் வைத்து "ராம..ராம..' என்று ஐந்துமுறை உச்சரித்தார். நோட்டை அருகிலிருந்த ஒருவரிடம் கொடுத்து, ஏதோ அவரிடம் சொன்னார். ஆனாலும், சிறுமி அங்கிருந்து நகராததைக் கண்ட பெரியவர், ""வீட்டுக்குப் போகலியா?'' என்று கேட்டார்.

""சுவாமி! ஸ்ரீராமஜெயம் எழுதினா நீங்க வெள்ளிக்காசு தர்றதா சொன்னாங்க! அதற்காகத்தான் காத்திருக்கேன்,'' என்று சற்றும் தயக்கமின்றி சொன்னாள்.

பெரியவர், அவளை உற்றுப்பார்த்து விட்டு, பதில் சொல்லாமல், தீர்த்தம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்.
வருத்தமடைந்த சிறுமி வீட்டுக்குப் போய்விட்டாள். அன்று மாலை பெரியவர், அவள் வீட்டுப் பக்கமாக பல்லக்கில் பவனி வந்தார். ஒரு வீட்டின் முன் பூரணகும்ப மரியாதை அளித்த போது, சிறுமி வேகமாக அவர் அருகே சென்றாள்.

பெரியவரிடம்,""சுவாமி! நீங்க எனக்கு இன்னும் வெள்ளிக்காசு தரலியே! சுவாமியான நீங்களே இப்படி ஏமாத்தலாமா?'' என்று சற்று கடுமையாகவே கேட்டாள். இதைக்கேட்ட அவளது தந்தை அவளை தரதரவென வீட்டிற்குள் இழுத்துப்போய் விட்டார். ஊராரோ மரியாதையில்லாமல் பேசிய அவளைத் திட்டினர்.

பெற்றவர்களுக்கு அவமானம் தாங்கவில்லை, அப்போது தான் நிகழ்ந்தது அந்த அற்புத நிகழ்வு. பெரியவர் பல்லக்கை விட்டு இறங்கி, அவளது வீட்டுக்குள் வேகமாக நுழைந்தார். பெரும் பணக்காரர்கள் எல்லாம் அவர் தங்கள் வீட்டுக்கு வரமாட்டாரா என்று ஏங்கித்தவித்த வேளையில், பெரியவர் தங்கள் வீட்டுக்கு வந்ததும் சிறுமியின் பெற்றோர் என்ன செய்வதென அறியாமல் திகைத்தனர். சிறுமியின் தாய், ஒரு மணையை (பலகை) கொண்டு வந்து போட்டார். அதில் ஏறி நின்ற பெரியவர், ஏதும் பேசாமல் மீண்டும் வெளியே வந்து விட்டார்.

மறுநாள் "சாமாங்கிறது யாரு?' என்ற குரல் அவள் வீட்டு வாசலில் கேட்டது. ஒருவர் மரத்தட்டுடன் வாசலில் நின்றார்.

அவளது அப்பா "நான் தான் சாமா என்ற சாமிநாதன் என்று அவரை வீட்டுக்குள் அழைத்தார்.
""இங்கே தங்கமணிங்கிற குழந்தை இருக்காளாமே! அவளுக்கு பெரியவா ஆசியோட பிரசாதம் அனுப்பியிருக்கா,'' என்றார். தட்டில் குங்குமம், பழம், அட்சதையின் நடுவே ஒரு வெள்ளிக்காசு இருந்தது.

சிறுமி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவள் வேறு யாருமல்ல. இந்த கட்டுரையை எழுதிய நானே தான்! என் பெயரை யாரிடமோ விசாரித்து, எனக்கு வெள்ளிக்காசு வழங்கிய அந்தத் தங்கக்கைகளுக்கு சொந்தமான மகாபெரியவரின் ஆசியை நினைத்து இப்போதும் நெக்குருகி நிற்கிறேன்


தங்கமணி சுவாமிநாதன்


Aanmeegam | Aanmeegam News | Aanmeegam Malar | Aanmeegam Stories | SPIRITUAL Stories | SPIRITUAL News | SPIRITUAL Thoughts
 
ஆகாரத்திற்கு ஆதாரமானது மழை

ஆகாரத்திற்கு ஆதாரமானது மழை

xuntitled_1859559h.jpg.pagespeed.ic.qCNLLyUXSN.jpg



மனிதர்கள் வேண்ட வேண்டியது என்ன?


தான்,பிறர் இரண்டுபேரின் நலனுக்காக ஈடுபடும் ஜன்மம்


திருடர்கள் யார்?
புலன்களை இழுத்துக்கொண்டு போகும் விஷயங்கள்தான்.


விரோதி யார்?
சோம்பேறித்தனமே.


அறிவின்மை யாது?
தேர்ச்சியிலிருந்தும் பயிற்சியின்றி இருத்தல்.


தாமரையிலைத் தண்ணீர் போல் நிலையில்லாதன எவை?
இளமை, செல்வம், ஆயுள்.


நரகம் யாது?

பிறர் வசமாயிருத்தல்.


எது அனர்த்தத்தைக் குறிக்கும்?
அகம்பாவம்.


விலை மதிக்கப்படாதது எது?

தக்க சமயத்தில் கொடுத்தது.


சாகும்வரையில் குத்துவது எது?
ரகசியத்தில் செய்த பாபம்.


உயிர் போவதாயிருந்தாலும் எவனுடைய ஆத்மாவை நல்வழிப்படுத்த முடியாது?
மூர்க்கர்கள், நித்ய சந்தேகி, எப்பொழுதும் குறைசொல்லி துக்கம் உடையவர்கள், நன்றி இல்லாதவர்கள்.


ஜீவராசிகள் எவனுக்கு வசமாகும்?
சத்யமும் பிரியமுமான வசனமுடைய வணக்கமுள்ளவனுக்கு.


மனிதர்களால் சம்பாதிக்கத்தக்கது எது?
கல்வி, செல்வம், வலிமை, புகழ், புண்ணியம் இவையே.


உடலெடுத்தோருக்குப் பெரிய பாக்கியம் எது?
ஆரோக்கியம்


அன்னதானத்திற்குத் தகுதியானவன் யார்?
பசியுள்ளவன்


ஆகாரத்துக்கு ஆதாரமானது எது?
மழை


சிந்தாமணி போல் கிடைத்தற்கரியது எது?
சதுர்பத்ரம் (பத்திரமாக இருப்பது)


அந்த சதுர்பத்ரம் என்றால் என்ன?
பிரிய வாக்குடன் தானம், கர்வமில்லா ஞானம், பொறுமையுடன் கூடிய வீரம், தியாகத்துடன் கூடிய செல்வம் ஆகிய இந்த நான்கு சுபங்களும் கிடைத்தல் அரிது.


ஆதிசங்கரரின் ப்ரஸ்னோத்தர ரத்ன மாலிகை நூலிலிருந்து



????? ???? - ?? ?????
 
"தெய்வம் பேசுமா?"

"தெய்வம் பேசுமா?"


தனியார் ஆபீஸில் தன்னுடைய பதினெட்டாவது வயஸில், shorthand, typewriting, SSLC certificates உடன் வேலைக்கு சேர்ந்தவர், ஐம்பத்தெட்டாவது வயஸில் retire ஆகி வீட்டில் உட்கார்ந்தார் ஒரு பக்தர்.


அவர் வஹித்த பதவி, அவருக்கு ஏகப்பட்ட பணம், செல்வாக்கு எல்லாவற்றையும் குடுத்திருந்தாலும், அவருடைய உள் மனஸில் வெறும் சூன்யமாகவே இருந்தது. வேலை, வேலை என்று உயிரைக் குடுத்து உத்யோகம் பார்த்ததில், "நான் யார்?" என்று அரை நிமிஷம் கூட சிந்திக்காமல் விட்டுவிட்டார். அதன் பலன்? retire ஆனதும், அத்தனை நாள் மாங்கு மாங்கென்று எந்தக் கம்பெனிக்காக உழைத்தாரோ, அந்த routine, நண்பர்கள்,எல்லாமே ஒரு நொடியில், ஒரு பிரிவுபசார பார்ட்டியோடு அவரை விட்டுத் தள்ளிப் போய்விட்டது!

பெற்ற பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் கல்கத்தாவில் இருந்தார்கள். அங்கேயெல்லாம் போனால், போய் இறங்கின அன்று இருக்கும் மரியாதையும் உபசரிப்பும், நாலு நாளைக்கு மேல் நீடித்தால், அது அவர் செய்த பாக்யம்! பிள்ளை நல்ல உத்தியோகம்; ரொம்ப நல்லவன்; ஆனால், என்ன ப்ரயோஜனம்? மாட்டுப்பெண்ணும் நல்லவள்தான்....யாருக்கு? பிள்ளைக்கு! பெற்றவர்களை ஒதுக்கி விட்டு, பிள்ளையை மட்டும் தன்னுடைய குடும்பமாக நினைப்பவள்; பிறந்த வீட்டார் மேல் அபரிமிதமான கரிசனம்; இப்படி இருக்கும் வீட்டில் தான் போய் அதிக நாட்கள் தங்கினால், இப்போதிருக்கும் பேச்சு வார்த்தை கூட அறுந்து போய்விடும் என்று தயங்கினார். யார் வழி காட்டுவார்கள்?



"நீனே அநாத பந்து" என்று பெரியவாளுடைய திருவடியில் வந்து விழுந்தார். மனசுக்குள், எங்கே போவது? யாருடன் தங்குவது? ஜன்மாவை கடைத்தேற்றிக் கொள்ளாமல் ஐம்பத்தெட்டு வர்ஷம் கோட்டை விட்டாச்சு!....என்று ஒரே குழப்பம். எதுவுமே பேசாமல் நமஸ்காரம் பண்ணிவிட்டு ஒரு ஓரமாக நின்றார்.

பெரியவா அவரைப் பார்த்தார்.....

உடனே அருகில் வந்து மிகவும் பவ்யமாக,

"பெரியவா அநுக்ரஹத்ல அனேகமா எல்லா க்ஷேத்ரங்களும் தர்சனம் பண்ணிட்டோம். போனவாரம் தலைக்காவேரி போயிட்டு, அப்டியே காவேரிப்பூம்பட்ணம் போய்ட்டு வந்தோம்..."


"காவேரி உற்பத்தி ஸ்தானத்லயும், சங்கமத்துலேயும் ரொம்ப குறுகலாத்தானே இருக்கு?"


"ஆமா....."


"காவேரி, ரொம்ம்...ம்ப அகலமா இருக்கற மத்ய ஸ்தானத்துக்கு என்ன பேரு?"


"அகண்ட காவேரி"


"அது எங்க இருக்கு?"


"திருச்சி பக்கத்ல ..."


"அந்த ப்ரதேசத்துக்கு என்ன பேரு?"


பக்தர் முழித்தார்!.....


"மழநாடு...ன்னு கேள்விப்பட்டிருக்கியோ?"


"எங்க தாத்தா சொல்லுவார்"


"காவேரி தீரம்தான் மழநாடு; ரொம்ப ஆசாரக்காரா இருந்த நாடு; ஒன்னோட தாத்தா இருந்த எடம்"


பக்தருக்கு இதெல்லாம் எதுவுமே தெரியவில்லை. நெளிந்தார்.

ஆஹா! அடுத்து பெரியவா, இவர் எதுவும் சொல்லாமலேயே, இவருடைய குழப்பத்தை தீர்த்து வைத்தார்!


"திருச்சில ஜாகை வெச்சுக்கோ! தெனோமும் ஒரு கோவிலுக்கு போ! உச்சிப் பிள்ளையார், மாத்ருபூதேஸ்வரர்,அகிலாண்டேஸ்வரி, ஜம்புலிங்கம்,ஸ்ரீரங்கம் ரங்கநாதர், வயலூர் முருகன், குணசீலம் ஸ்ரீநிவாஸ பெருமாள்....இப்டியா தர்சனம் பண்ணிண்டு இரு!"


"தெய்வம் பேசுமா?"...என்று சந்தேஹம் வருபவர்களுக்கு, இதோ! தெய்வம் பேசுகிறது! என்று உண்மையான மஹான்கள் முன்னால் கொண்டு போய் நிறுத்தி விடலாம். கண்களில் நன்றிக் கண்ணீரோடு நமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவா சொன்னபடி திருச்சியில் ஜாகை பார்க்கச் சென்றார். மலைக்கோட்டை தெருவில் அம்சமான வீடும் கிடைத்தது! பெரியவா சொன்னபடி தன் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டபடியால் கட்டாயம் "வீடு பேறும்" கிடைக்கும்


Source:Mannagudi Sitaraman Srinivasan
 
காட்டுப்பள்ளி எஸ்டேட் உரிமையாளர் சண்முகசுந்தர முதலியார். அவரது மேனேஜர் கிருஷ்ணானந்தம். இருவரும் மஹாபெரியவாளின் பக்தர்கள்.

1965-ஆம் வருடம் மஹான் தண்டையார்பேட்டையில் முகாமிட்டிருந்தபோது, தாம் காட்டுபள்ளிக்கு விஜயம் செய்வதாக முதலியாரிடம் சொன்னார். முதலியாருக்கு அளவற்ற மகிழ்ச்சி.

கிருஷ்ணானந்தத்தின் மனைவிக்குத் தொடர்ச்சியாக வயிற்று வலி. மஹாபெரியவாளிடம் முறையிட்டுப் பிரசாதம் வாங்கிக் கொடுத்தார். இதற்கிடையில் ஒரு நாள் மஹான் எப்போதோ கிருஷ்ணானந்தம் சொன்னதை நினைவில் கொண்டு,
”உன் மனிவிக்கு சிகிச்சை அளிக்க வேலூர் போவதாகச் சொன்னாயே நாளையே அழைத்துப் போ” என்று புன்சிரிப்போடு, அவரைச் சோதிப்பது போலக் கூறினார்கள்.

அதன்படியே இவரும் தயாராகி, மனைவியை மைலாப்பூரில் ஒரு உறவினர் வீட்டில் தங்க வைத்து அடுத்த நாள் வேலூர் போகத் திட்டமிட்டார்.

ஆனால் நடந்ததோ வேறு. முதலாளியிடமிருந்து மஹாபெரியவா அதே நாளில் காட்டுப் பள்ளிக்கு விஜயம் செய்வதாகத் தகவல் வர, கிருஷ்ணானந்தம் எல்லாம் தெய்வச் செயல் என்று மனைவியுடன் ஊருக்கே திரும்பிவிட்டார். வேலூர் பயணம் தவிர்க்கப்பட்டது. மேலும் எதிர்பாராத விதமாக காட்டுப் பள்ளியிலேயே மஹாபெரியவா சாதுர்மாஸ்ய வியாச பூஜையை செய்யத் திட்டமிட்டார்.

போக்குவரத்து வசதியில்லாமல் படகில் வந்து போகும் கிராமத்திற்கு இப்படி ஒரு வாய்ப்பு கிட்டியதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி.

மஹான் அங்கேயே நாலரை மாதங்கள் தங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்தார்.

முதலியாரின் மேனேஜர் தன் மனைவி படும்பாட்டை மஹானின் முன் முறையிட்டார். மஹான் கிருஷ்ணானந்தத்தின் மனைவியை அங்கே அழைத்து வந்து ஒரு வாரம் தங்கும்படி சொல்ல, மேனேஜரும் அவ்வாறே செய்தார். அவரது மனவி தினமும் குளித்துவிட்டு, பூஜைக்கு சென்றார். வயிற்றுவலி தாங்காமல் அந்தப் பெண்மணியும் கண்களில் நீர் தளும்ப அமர்ந்திருப்பார். கருணாமூர்த்திக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

முதலியாரின் மைத்துனரை அழைத்து குளத்தங்கரைக்குப் பக்கத்தில் குளியலறை போன்று தற்காலிக ஏற்பாடாக தென்னக்கீற்றினால் அமைக்கப்பட்டது.

மறுநாள் அந்த அம்மாள் ஸ்நானம் செய்தபின், சுவாசினிகள் பூஜைக்கு அமர்ந்தபோது,

“இந்த அம்மாவை குளியலறைக்கு அழைத்துப் போய் இரு ஸ்டூல்களைப் போட்டு ஒன்றில் உட்காரவைத்து, அபிஷேகத் தீர்த்தத்தை பாதத்தில் படாமல் எல்லா ஜலத்தையும் சிரசில் விடுங்கள் என்றார்” மஹான்.

அபிஷேக தீர்த்தம் உதவியாள் மூலமாக அனுப்பப்பட்டது. சிரசில் நீர் கொட்டும்போது மேனேஜர் மனைவி மெய்மறந்த நிலையில் இருந்தாராம். ஸ்நானம் முடிந்தவுடன் புத்துணர்ச்சி பெற்று வயிற்றுவலி போன இடம் தெரியாமல் வலி நீங்கப் பெற்றவராக வந்தாராம். அதற்குப் பிறகு வயிற்றுவலி அந்த அம்மையாருக்கு வரவே இல்லை.

இப்படிப்பட்ட அதிசயமான அனுபவம் வேறு யாருக்கும் கிட்டியிருக்காது என்று கிருஷ்ணானந்தம் நன்றிப் பெருக்கோடு குறிப்பிடுகிறார்.

மஹாபெரியவாளெனும் மாபெரும் தெய்வம் தன்னை அண்டியவர்களுக்கெல்லாம் அற்புதமான அனுபவங்களை அருளிக் காத்து நிற்கிறார்.



 
Sri Kanchi Mahaswamigal Tapovanam – Govindapuram

Sri Kanchi Mahaswamigal Tapovanam – Govindapuram

Thapovanam at Govindapuram has two uniqueness – first thapovanam for Periyava and the place where HH Mettur Swamigal spent last several years and now we have His adhishtanam for Him as well. If anyone is traveling near Kumbakonam etc, please stop at Govindapuram and visit all these holy places. Also please read the article from Shri Suresh to participate in nithya puja and bikshavandhanam activities and support this great Periyava kshetram.





English Translation of Saanu Puthiran’s article on Sri Kanchi Mahaswamigal Tapovanam – Govindapuram by Dr. Sujatha Vijayaraghavan, Pondicherry University.
Sri Gurubhyo Namah
Sadasiva samarambham Sankaracharya madhyamam |
Asmadacharya paryantam vande guru parmaparam ||



The details presented here will facilitate devotees to participate in the Nitya puja and the Bhikshavandana offered to our Guruparampara, at this Tapovanam at Govindapuram.


I pray that each and every devotee participates in the Nitya puja and the Bhikshavandana offered to the spiritual treasures that form our Guru parampara.


As the Vedas and the Sastras have enunciated it, the Guru is himself the path to the Lord and from thereon to the Supreme Truth. The Lord Iswara is realized very easily through the Guru whom we can see and know as our own. The Guru is none other than Iswara himself. Iswara incarnates as the Guru to lead us onto the right path and thence to the Brahman.


At a time when the frenzied forces of Kali ousted our spiritual unity, the Lord Parameswara himself incarnated in Kalady. He preached the truth of Advaita that propounds the Supreme Truth as enshrined in the Vedas, to rid the world of divisiveness and to nurture love among men, curing them of their delusion and bestowing upon them clarity of mind and thus attain the goal of life here and hereafter.


It is a universally known fact that Sri Adi Sankara established Mathas — which came to be known as Sankara Mathas—in several places, to guide people onto the path of righteousness, and finally establishing the Kamakoti Peeetha at Kanchi, ascended the Sarvagna Peetha to merge with the nameless and formless Infinite. From then on an unbroken and long line of masters – like gems strung together in a necklace – have adorned the Sri Adi Sankara Paramparagatha Sarvagna Mulaamnaya Sri Kanchi Kamakoti Peetha and leading the world through the righteous path and have also imparted wisdom. This fact is known to the spiritually evolved as well as to the lay folk alike for the past two thousand five hundred years and more.


In this exalted galaxy, Kanchi Sri Mahaswami Sri Sri Sri Chandrasekharendra Saraswathi Swami, who ascended the Peetha in his thirteenth year, brought about a renaissance to the Vedas and Sastras as a meaningful part of our lives and removed the ignorance that clouded us. Though he was the divine in human garb, he lived and moved among us, leaving the imprint of his holy feet in distant corners and unknown hamlets, making all his own by his love and enfolding all in his grace that did not know differences in caste, creed and faith. Among the Masters who have adorned the Sri Kanchi Kamakoti Peetha, adishtanams have been established only for a few and in these places both Nithya puja and aradhana are being performed even today. Even while he dwelt in his physical form, Sri Mahaswami approved of the idea to establish a place of worship for all the Master together in one place and have Nithya puja, abhisheka and aradhana performed to all.


Sri Mahaswami chose Govindpuram in the sacred Madhyarjuna kshetra, to dwell in his subtle form and shower his grace upon all as well as to establish a dhyana mantapa for him and his Masters, the preceding sixty-seven ofthe Kamakoti Peetha and so conveyed his wish through his ardent devotee

Srimati
Kamakshiammal of Chitlapalkam, Chennai, Tamilnadu.


The sanctity of Govindpuram is of course unique. It is a sacred place where Srimad Bhagavannama Bodhendral – the fifty-nineth acharya of the Sri Kamakoti Peetha, who propogated Namasankeertana and chanting of “Sri Rama Nama” as the divine path to liberation for one and all in the age of Kali – reached God-head while still in human form (in1692 AD) and had his brindavana established by his grace.



It is indeed most befitting that we are blessed to worship all the Gurus of the Sri Kamakoti Peetha established in this sacred place where the Lord Parameswara as Mahalinga, gave a tangible sign of affirmation to Sri Adi Sankara, that advaita is the Supreme Truth. By the grace of Sri Mahaswami and the Divine Mother Sri Kamakshi, Srimati Kamakshiammal has with the help of devotees built this Tapovanam, so that dharmic acts may continue.

Sri H.G. Rangan Goud of Hospet, Karnataka has been the single most munificent benefactor of this divine project. It will not be an exaggeration to say that Sri Rangan Gowd’s exalted service to Sri Mahaswami has not only brought Sri Kanchi Mahaswamigal Tapovanam into existence in a short while, but has made it possible for us and all the generations of the future to worship our Guru paramapara. With gladdened hearts we seek the grace of Sri Kanchi Mahaswami – while gratefully acknowledging his services – upon him and his family which is known for its patronage of several Dharmic deeds which Mahaswami himself held important.


Tapovanam is situated in Govindapuram – near Tiruvidaimarudur in Thanjavur district – and is close to the Bodhendral Matha and obliquely opposite to the Rukmini sametha Sri Pandurangan temple. The divine form of Sri Mahaswami which is in a seated posture has been sculpted in green stone by Sri Ganapathi Sthapati. Encircling Sri Mahaswami, are Sri Adi Sankara in sculpted form and all the other Gurus in the form of banalingas. All these banalingas have been brought from the Narmada river. Wondrous indeed, that by the grace and penance of Sri Mahaswami, all these lingas were found on a single day. Here in their subtle presence are all the sixty-eight Masters starting from Sri Adi Sankara onwards, in one and the same place. A small Gosala has also been established. A small mantapa is adorned by the utsava idols of Kanchi Sri Mahaswami, Sri Vyasa Ganapati and Sri Kamakshi. A shrine is also established to house Dakshina Kali, as is a pond. It is known to all that Sri Mettur Swami, who received sanyasa directly from Sri Mahaswami and who was personally overseeing the performance of the Nithya puja and abhisheka entered his brindavana here.


Every year during all the four navaratrisSarada Navaratri, Vasantha Navaratri, Ashada Navaratri and Shyamala NavaratriNavaavarna puja is performed at Tapovanam. This apart every year Sri Mahaswami’s jayanti is celebrated in the month of Vaikasi (mid-May to mid-June) on the day of the anusha star, and samvatsara abhisheka in the month of Aani (mid-June to mid-July), on the day of the anusha star. Vyasa puja is celebrated grandly every year on Gurupoornima day.


Darsan timings: Morning: 7 am to 12 in the afternoon & Evening: 4pm to 8pm
The Kanchi Sri Mahaswami Bhikshavandana Trust has been established so that all devotees may participate in the Nitya puja and the Bhikshavandana offered to our Guru parampara graciously present in Tapovanam-

Govindapuram
. By the grace of Sri Mahaswami a plan has been drawn up to involve families in the worship of the Guru parampara. Each family may pay Rs. 1200/- (i.e. Rs.100/- per month) for Nitya puja and the Bhikshavandana offered to our Guruparampara, either in the form of cheque posted to the Trust, or in person or deposited in favour of the Trust in a bank. May all devotees participate in this adoration and spread the message to others also.


To participate in Homa and Nityapuja: Cheques can be drawn in favour of:
KANCHI SRI MAHASWAMY BIKSHAVANDANA TRUST
On-line Transfer:

KANCHI SRI MAHASWAMY BIKSHAVANDANA TRUST
CITI UNION BANK S.B. A/C NO. 021001000620590 | IFSC Code: CIUB0000021 |Bank Branch: 103, North Street, Thiruvidaimaruthur 612104.


Contacts: Mr. Parthasarathy – 9841265785 & Mr. Santhanam – 9445157748
Devotees wishing to participate in Nitya puja and the Bhikshavandana may offer Rs.1200/- as cheque, or deposit the same in bank or make an online transfer via NEFT and inform [email protected] so that prasada can be sent to the donor.


The following details will help in offering the puja:


Gotra, Nakshatra/star, Rasi, Sarma/Name, Tamil Month of Birth (as per Hindu calendar), Cheque number or NEFT reference number, address, Telephone/cell number, and email address.


Devotees are requested to share these details about Tapovanam-Govindapuram with their families & friends so that all are blessed with a chance to participate in the Nitya puja and the Bhikshavandana. Let us offer a small portion of our earnings towards the Nitya puja and the Bhikshavandana toour Guruparampara. Let us visit this sacred place of pilgrimage at least once in our life and receive the blessings of our gracious Guruparampara.
May Periyava look upon us graciously.
With Namaskarams,
Saanu Puthiran.

[email protected]


Sri Kanchi Mahaswamigal Tapovanam ? Govindapuram « Sage of Kanchi
 
காஞ்சி மாமுனிவர் சொன்ன கதை :

காஞ்சி மாமுனிவர் சொன்ன கதை :



ஒரு ஆஸ்ரமத்தில், வேதாந்த பாடம் நடத்திக் கொண்டிருந்த குரு, ""உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் கடவுளின் அம்சம்,'' என்று போதித்துக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு பசு தோட்டத்தில் உள்ள பயிர்களைத் தின்று கொண்டிருந்தது. சிஷ்யர்களின் கவனம் பசுவின் மீது செல்லத் தொடங்கியது.


ஆத்திரமடைந்த குரு, பசுவை தடியால் பலமாக அடித்தார். அந்த இடத்திலேயே பசு இறந்து போனது. பசுவின் உரிமையாளர் குருவிடம் வந்து நஷ்ட ஈடு கேட்டார்.


அதற்கு குருவோ, ""பசுவும் பிரம்மம். நானும் பிரம்மம். உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் பிரம்மம் (கடவுள் அம்சம்). பிரம்மத்தைப் பிரம்மம் அடித்தது. பிரம்மம் பிரம்மத்திடம் சென்றுவிட்டது, அவ்வளவு தான்,'' என்று பதில் அளித்தார்.


பதிலைக் கேட்ட பசுவின் உரிமையாளர் செய்வதறியாமல், வழியில் சென்ற துறவி ஒருவரை அழைத்து குருவிடம் நியாயம் கேட்கும்படி வேண்டினார்.

துறவி குருவிடம், ""இங்கே பாடம் நடத்துவது யார்?'' என்றார்.


""நான் தான்'' என்றார் குரு.


""இந்த தோட்டம், ஆஸ்ரமம் இவற்றை எல்லாம் பராமரிப்பவர் யார்?''

அதற்கும், ""நான் தான்'' என்றார் குரு.


சந்நியாசி குருவிடம், ""இதற்கெல்லாம் பதில் "நான்' என்றால் பசுவைக் கொன்றதும் தாங்கள் தானே!'' என்றார்.


தவறை உணர்ந்த குரு, பசுவின் உரிமையாளருக்கு நஷ்டஈடு தர ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டார்.


ஒருவர், தான் செய்த தவறை, கடவுள் தான் செய்ய வைத்தார் என்று சொல்லி காரணம் கற்பிக்கக்கூடாது, புரிகிறதா!


Source: Jayanathan Durai
 
இறைவன் உங்களுக்களித்த வரம்

இறைவன் உங்களுக்களித்த வரம்


ஒரு வங்கி மேலாளர் அவர் தனக்கு என்ன மனக்குறை என்றாலும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியாரை (மஹா பெரியவர் ) நேரில் சந்தித்துத் தனது குறைகளைக் கொட்டிவிடுவார். அந்த வங்கி மேலாளர் தனது கதையைச் சொன்னார்.


“என் மனத்தில் இருந்த நெடுநாளைய பாரத்தை இறக்க காஞ்சி மடம் சென்றேன். அங்கே என்னைப்போலவே பலரும் தங்கள் மன வேதனையைப் பெரியவரிடம் தெரிவித்து ஆறுதல் மருந்தையும் கவலையிலிருந்து விடுபடு வதற்கான மார்க்கத்தையும் பெற்றுக் கொண்டி ருந்தார்கள். என்னுடைய முறை வந்தது. நான் அவரைப் பார்க்க, அவர் என்னைப் பார்த்தார். அந்த மணித்துளியிலேயே நான் என்னை இழந்துவிட்டேன். வெடித்து அழுதுவிட்டேன். கதறினேன். பக்கத்திலே இருந்தவர்கள் என் கையைப் பிடித்து வெளியேற்றக்கூட முயற்சி செய்தார்கள். ஆனால் பெரியவரோ, அவர் அழுது தீர்க்கட்டும். பாரம் இறங்கும் என்று சொல்லிவிட்டார். நான் அழுதுமுடித்து அமைதி பெற்றேன்.


“இப்போது சொல் உன் துன்பத்தை” என்றார் பெரியவர்.


“எனக்கு இருப்பது இரண்டே குழந்தைகள். இரண்டுமே மூளை வளர்ச்சி குறைந்தவை. இவற்றைப் வளர்க்க நானும் என் மனைவியும் போராடுகிறோம். எங்கள் வாழ்க்கையே நரகமாகிவிட்டது” என்று சொல்லி கதறி அழுதேன்.


மீண்டும் நான் அமைதி அடைந்தபின் பெரியவர் சொன்னார்…… “இந்தக் குழந்தைகள்தான் கடவுளின் குழந்தைகள். இவர்கள் நிச்சயமாக எந்தக் காலத்திலும் எந்தப் பாவமும் செய்யப் போவதில்லை. இத்தகைய குழந்தைகளை எப்படிப்பட்ட பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை இறைவன்தான் தீர்மானிக்கிறான். உங்களிடம் ஒப்படைத்திருக்கிறான். இந்தக் குழந்தைகளை வளர்ப்பதற்கு ஒப்பற்ற இதயம் இருக்கவேண்டும். நீ அழுவதில் பயனில்லை. இந்த இரண்டு குழந்தைகளும் இறைவன் உங்களுக்களித்த வரம்’ என்றார்.


அந்த நிமிடத்திலேயே என் பாரம் குறைந்து, கடவுள் தந்த அந்தக் குழந்தைகளைப் பாசத்துடன் வளர்க்க ஆரம்பித்தேன்” என்றார் வங்கி மேலாளரான அந்த நண்பர்.


அவர் சொல்லி முடித்தபோது அவர் கண்களில் மட்டுமல்ல, என் கண்களிலும் கண்ணீர் துளிர்த்தது.

As narrated by Shri VTK Balan in a speech recently in an event.


2014 May 30 « Sage of Kanchi
 
பகவான் ஸர்வவ்யாபி

பகவான் ஸர்வவ்யாபி


பெரியவாளிடம் அத்யந்த பக்தி கொண்டது திரு நடராஜசாஸ்த்ரிகள் குடும்பம்.


அவர் தஞ்சாவூர் பங்காரு காமாக்ஷி அம்மன் கோவில்டிரஸ்டியாக இருந்த சமயம். பெரியவா தஞ்சாவூரில்முகாம். பெரியவாளுக்கு ஒரு அழகான ரோஜாமாலையை அணிவிக்க வேண்டும்
என்று கொள்ளை ஆசை! பூக்கடையில் இதற்கென ஆர்டர் குடுத்துரொம்ப அழகான குண்டு
குண்டு பன்னீர் ரோஜாக்களை பொறுக்கி எடுத்து கட்டச்சொல்லி, பெரியவாளை தர்சனம்
பண்ணப் போகும்போது எடுத்துக் கொண்டு போனார். ஆனால்,இவர் போய் சேருவதற்குள் தர்சன நேரம் முடிந்து பெரியவா உள்ளே போய்விட்டார்.

நடராஜ சாஸ்த்ரிகளுக்கோ ரொம்ப வருத்தம்! மாலையோடுவீடு திரும்பினார். அவருடைய மனைவி”எல்லாமே பெரியவாதானே? இந்த மாலையைஅம்பாளுக்கே போட்டுடுங்கோ. பெரியவாளும் அம்பாளும்வேறவேறயா என்ன?” என்றாள்.


“இல்லே, இல்லே, அம்பாளும் பெரியவாளும் வேறவேற இல்லேதான். ஆனாலும், இந்த மாலை
நாம ப்ரத்யக்ஷமா பாக்கற பெரியவாளுக்குத்தான்! ஆமா. இதுஅவருக்கு மட்டுந்தான்!” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டு, அதைபூஜை ரூமில் ஒரு பக்கமாக ஒரு ஆணியில் தொங்கவிட்டார்.


மறுநாள் காலை விடிந்தும் விடியாமலும்,பெரியவா மேலவீதி சங்கரமடத்திலிருந்து ஸ்ரீனிவாசபுரம்வந்து, நடராஜ சாஸ்த்ரிகள் வீட்டுக்கு பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில்
தர்சனம் பண்ண வருவதாக தெருவே திமிலோகப்பட்டது! சாஸ்த்ரிகள் வீட்டிலும்ஒரே பரபரப்பு!


“பெரியவா வரா! பெரியவா வரா! தர்சனம் பண்ணிக்கோங்கோ!”மடத்து பாரிஷதர் உச்சஸ்தாயியில் தெருவில்சொல்லிக் கொண்டேபோனார்.உடனே வீடுகளுக்குள் இருந்தவர்கள்நண்டு சிண்டுவிலிருந்து தாத்தா, பாட்டி வரை அவசரஅவசரமாக பூர்ணகும்பம், குத்துவிளக்கு, புஷ்பம் சஹிதம் அடிச்சு பிடிச்சு வாசலுக்கு ஓடி வந்தனர்!



பெரியவாளுடைய வேகம் அப்படி இருக்கும்! குள்ள உருவமாக இருந்தாலும், அவர் என்னவோசாதாரணமாக நடப்பது போல் இருக்கும். ஆனால், கூட வரும் நெட்டை மனிதர்கள் கூட குதிகால்பிடரியில் அடிக்க ஓடி வரவேண்டியிருக்கும். அந்தவேகம், உண்மையான மஹான்களுக்கே உரித்தான லக்ஷணம்!



பெரியவா நேராக பிள்ளையாரை தர்சனம் பண்ணிவிட்டு,சற்றும் எதிர்பாராமல், “டக்”கென்று
சாஸ்த்ரிகள் வீட்டுக்குள் நுழைந்து, ரொம்ப ஸ்வாதீனமாகபூஜை ரூமுக்குள் போய், முன்தினம்
“பெரியவாளுக்குத்தான்!” என்று முத்ரை குத்தப்பட்டு,ஆணியில் தொங்கிக் கொண்டிருந்த ரோஜா மாலையைஅப்படி லாவகமாக, யானை தும்பிக்கையால் தூக்குவதுபோல், அருட்கரத்தால் தூக்கி, தானே தன் தலையில் சூடிக்கொண்டார்!


சாஸ்த்ரிகளும் குடும்பத்தாரும் கண்களில் தாரைதாரையாக நீர் வழிய, விக்கித்து நின்றனர்!ஹ்ருதயமே வெடித்துவிடுவது போன்ற சந்தோஷம்! இப்படி ஒருபரமகருணையா? என்று சொல்லமுடியாத ஆனந்தம்!திக்கு முக்காடினார்கள்.


எல்லாரும் நமஸ்கரித்ததும், விடுவிடென்று வாசல்பக்கம்நடந்தார். சற்று நின்று திரும்பி,
“எங்கே வெள்ளிக்கிண்ணம்?” என்று சாஸ்த்ரிகளிடம் கேட்டார்.


அவ்வளவுதான்! ஆடிப் போய்விட்டார் சாஸ்த்ரிகள்!நேற்று மனைவியிடம் பெரியவாளுக்கு ஒரு வெள்ளிக் கிண்ணம்குடுக்கணும் என்று சொல்லி, ஒருபுது கிண்ணத்தையும் எடுத்து வைத்திருந்தார்.
இதோ!


அவர்கள் நேற்று பேசியதைஏதோ பக்கத்திலிருந்து கேட்டதுபோல்அல்லவா’வெள்ளிக்கிண்ணம்
எங்கே?’ என்று கேட்கிறார்! ஓடிப் போய் பீரோவிலிருந்த வெள்ளிக் கிண்ணத்தையும் கொண்டுவந்து சமர்ப்பித்தார்.



பகவான் ஸர்வவ்யாபி! என்பதைஅன்று எல்லாரும் ப்ரத்யக்ஷமாக கண்டார்கள், உணர்ந்தார்கள்!



2014 May 29 « Sage of Kanchi
 
ஸ்ரீ ராமன்

ஸ்ரீ ராமன்



ராமன் என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம். மற்றவர்களுக்கு ஆனந்தத்தைத் தருகிறவன் என்ற அர்த்தம். எத்தனை விதமான துக்கங்கள் வந்தாலும் அதனால் மனம் சலனம் அடையாமல், ஆனந்தமாக தர்மத்தையே அநுசரித்துக்கொண்டு ஒருத்தன் இருந்தான் என்றால், அது ஸ்ரீ ராமன்தான். வெளிப்பார்வைக்கு அவன் துக்கப்பட்டதாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளேயே ஆன்ந்தமாகவே இருந்தான்.


சுக துக்கங்களில் சலனமில்லாமல், தான் ஆனந்தமாக இருந்துகொண்டு,
மற்றவர்களுக்கும் ஆனந்தத்தை ஊட்டுவதுதான் யோகம். அப்படியிருப்பவனே யோகி. இவ்வாறு மனசு அலையாமல் கட்டிப்போடுவதற்குச் சாமானிய மனிதர்களுக்கான வழி வேத சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிற தர்மங்களை ஒழுக்கத்தோடு, கட்டுப்பாட்டோடு, பின்பற்றி வாழ்வதுதான். சொந்த விருப்பு வெறுப்புக்கு இலக்காகாமல் வேதம் விதிக்கிற தர்மப்படி வாழ ஆரம்பித்துவிட்டால், தானாகவே மனஸின் சஞ்சலம் குறைந்து, அது தெளிய ஆரம்பிக்கும். இந்தத் தெளிவால் மனசு எப்போதும் ஆனந்தமாக, லேசாக இருக்கும். இந்த சித்த சுத்தி மோக்ஷத்திலேயே கொண்டு சேர்த்துவிடும்.


ஜனங்களுக்கெல்லாம் ஒரு பெரிய உதாரணமாக வேத தர்மங்களை அப்படியே அநுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டுவதற்கான ஸ்ரீமத் நாராயணனே ராமனாக வந்தார். ராம வாக்கியத்தை எங்கு பார்த்தாலும், இது என் அபிப்பிராயம் என்று சொல்லவே மாட்டார். ரிஷிகள் இப்படிச் சொல்கிறார்கள். சாஸ்திரம் இப்படிச் சொல்லுகிறது என்றே அடக்கமாகச் சொல்வார். சகல வேதங்களின் பயனாக அறியப்படவேண்டிய பரம புருஷன் எவனோ, அவனே அந்த வேத தர்மத்துக்கு முழுக்க முழுக்க கட்டுப்பட்டு, அப்படிக் கட்டுப்பட்டு இருப்பதிலேயே ஆனந்தம் இருக்கிறது என்று காட்டிக் கொண்டு, ராமனாக வேஷம் போட்டுக் கொண்டு வாழ்ந்தான்.


ராவணன் ஸீதையைத் துரத்திக் கொண்டு போனபோது, ஒரே மயில் தூரத்திலிருந்தே ராமனுக்கு ஸீதை போட்ட கூச்சல் காதில் விழவில்லையாம். அப்படிப்பட்டவனை இப்போது பக்தர்கள் கூப்பிட்டால் என்ன பிரயோஜனம். என்று கேலி செய்து கேட்டவர்கள். எழுதியவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ராமனாக இந்த லோகத்தில் வாழ்ந்தபோது மனுஷ்ய வேஷத்தில் இருந்தான். மநுஷ்ய ரூபத்திலேயே இருந்தான் என்பதை மறந்து பேசுகிறார்கள்.


ஒரு நாடகம் நடக்கிறது. ராமாயண நாடகம்தான். அதில் லவ குசர்களை வால்மீகி ராமனிடம் அழைத்து வருகிறார். ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்கார் ராமராக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய சொந்தப் பிள்ளைகளே நாடகத்தில் லவ குசர்களாக நடிக்கிறார்கள். நாடக ராமன் வால்மீகியைப் பார்த்து இந்தக் குழந்தைகள் யார். என்று கேட்கிறார். ராமஸ்வாமி அய்யங்காருக்குத் தம்முடைய பிள்ளைகளையே அடையாளம் தெரியவில்லை என்று கேலி செய்யலாமா. நாடக வால்மீகி, இவர்கள் ராஜபார்ட் ராமஸ்வாமி அய்யங்காரின் பிள்ளைகள். நீங்கள் தானே அந்த ராமஸ்வாமி அய்யங்கார். என்று பதில் சொன்னால் எத்தனை ரஸாபாஸமாக இருக்கும். வாஸ்தவத்தில் இருப்பதை, வாஸ்தவத்தில் தெரிந்ததை, நாடகத்தில் இல்லாதாக, தெரியாததாகத்தான் நடிக்க வேண்டும்.

ஸ்ரீ ராமன் பூலோகத்தில் வாழ்ந்தபோது, இப்படித்தான் மநுஷ்ய வேஷம் போட்டுக் கொண்டு தம் வாஸ்தவமான சக்தியையும் ஞானத்தையும் மறைத்துக் கொண்டு வாழ்ந்தார்.


வேதப் பொருளான பரமாத்மா தசரதனின் குழந்தையாக வேஷம் போட்டுக் கொண்டவுடன், வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ராமாயணமாக வந்துவிட்டது. அந்த ராமாயணம் முழுக்க எங்கே பார்த்தாலும் தர்மத்தைத்தான் சொல்லி இருக்கிறது. ஊருக்குப் போகிற குழந்தைக்குத் தாயார் பட்சணம் செய்து
தருகிற வழக்கப்படி கௌசல்யா தேவி காட்டுக்குப் போகிற ராமனுக்குப் பதினாலு வருஷங்களும் கெட்டுப்போகாத பட்சணமாக இந்தத் தர்மத்தைதான் கட்டிக் கொடுத்தாள். ராகவா, c எந்த தர்மத்தை த்ருதியோடு, அதாவது தைரியத்தோடு, நியமத்தோடு அநுசரிக்கிறாயோ, அந்தத் தர்மம் உன்னை ரக்ஷிக்கும் என் ஆசீர்வாத பட்சணம் கொடுத்தாள்.


நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியமும் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விட்டுவிடக்கூடாது.

ராமனை சாக்ஷ£த் லக்ஷ்மணனே பரிகசித்தான். அண்ணா. தர்மம் தர்மம் எதையோ கட்டிக் கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்ஜியத்தை நான் ஸ்வீகரித்துத் தர ஆனுமதி தா என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது. ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன.

ஸ்ரீராமன் இன்றும், "ராமோ விக்ரஹவான் தர்ம". என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்து வருகிறான். சாக்ஷ£த் ஸ்ரீ ராமனை லட்சியமாகக் கொண்டு ராம என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர்களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.


???? ????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
Kanchi Sage/ Maha Periyaval /Miracle

Kanchi Sage/ Maha Periyaval /Miracle


Kanchi Sankaracharya,who has been affectionately called by all as 'Maha Periyaval ' of Kancheepuram Sankara Mutt, attained Maha Samadhi, and when he was in physical form on this earth, many miracles happened to thousands and thousands of his devotees and visitors and one such incident [miracle] is explained here below by a writer Saarukesi in 'Sakthi Vikatan' dt 22/10/10, a Tamil Magazine of Ananda vikadan Group of publications.

One Sivan , a resident of Thirunelveli, one of the towns of Tamil Nadu State of India,used to visit Kancheepuram regularly to have a Darshan of Kanchi Sankaraacharyaa, when he did so, he neither went near him or tried to talk to him; he would simply sit before him , sometimes days together and he felt happiness by seeing him. This Sivan was a puritan both physically and in his eating habits and always wearing the Saivite symbol of 'Vibhoothi' [holy ash] on his forehead, and anyone seeing him could perceive , he was a man of complete devotion by his looks and deeds.

Once after the Darshan , he neared the 'Maha Swami' as usual to take leave of him and which usually given by him by waving his hand showing blessing to Sivam.But on that particular day , Swami opened his sacred mouth and said

' started for journey? At least take a soda [aerated bottled water , popularly known as ' Goli Soda' ].On the way you can...'

Sivam started for his home town, came to Chengalpet and started for Thirunelveli. In the same bus, four boys were travelling making noise , troubling co-passengers.Sivam kept quiet and continued his journey.When the bus nearing Madurai on the way to Thirunelveli, stopped in a small village, where Sivam sitting in the bus , watched a small shop, keeping soda bottles arranged neatly in a row , and he remembered what Periaval said and besides he also felt like taking water, so got down and went to the shop to drink one Goli Soda.

On his coming back to the bus , to his seat, he was shocked to find his bag , which he usually carried and contained his meager belongings and money , missing. But the four boys shouted at him with out respect and said
' we have put your bag in one of the seats behind , go there, we want to travel sitting in that seat'

Sivam meekly went to the seat where his bag was kept and traveled. Immediately after exactly an hour the bus he was travelling met with an accident, and the two boys who were travelling in his previous seat died on the spot.

Sivam got shocked and dazed, started thinking , why Periyaval asked him to take Goli soda, which was unusual, why the bus stopped there , and why he saw the shop and the goli soda, and why he felt like drinking a soda.......... and all.

When the gentleman who narrated this incident to the original writer, met Mahaperiyaval and told him as to how Sivam escaped from the accident.Mahaperiyaval said

' Oh Sivam thought I saved him, the great Lord saved him'

Such is the divine humility of Great Mahaperiyaval.

My thanks to the writer of the original article Sri.Saarukesi,and 'Sakthi Vikatan,Tamil Magazine dt 22/10/10


utham: Kanchi Sage/ Maha Periyaval /Miracle

 
Sri Vedha Vidya Ashramam (W Mambalam) now enrolling students!

Sri Vedha Vidya Ashramam (W Mambalam) now enrolling students!


veda-classes-west-mambalam.gif




Sri Vedha Vidya Asharamam is now enrolling students from the age 7 to 11 for Krishna Yajurveda. The children in this age group must have had their Upanayanam. Please find attached the banner in this regard, created by Ganapatigal Gururaman who runs this veda patasala at West Mambalam. Shri Kartik Narasimhan forwarded this to me, to be posted here and elsewhere. He says that Ganapatigal requested him to let everyone know. Significant to note that Kartik himself is attending the classes in this place after he saw an earlier similar post two/three months back!
Contact Details:

Ganapatigal Shri Gururaman
c/o Shri Vedha Vidya Ashramam
63, Ellaiamman Koil Street,
West Mambalam,

Madras – 600 033 Phone: 94442 24310/98410 55109


http://mahaperiyavaa.wordpress.com/...a-ashramam-w-mambalam-now-enrolling-students/
 
நவகிரக நாயகி காமாட்சி!

நவகிரக நாயகி காமாட்சி!


p4b.jpg



காமாட்சி ஸகல கஷ்டத்தையும் நிவர்த்தி பண்ணிப் பரமானந்தத்தை அளிக்கிறவள். நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு ஜ்யோ திஷ ரீதியில் நவகிரகங்களைத்தானே காரணமாகச் சொல்கிறார்கள்? இந்த நவகிரக பாதிப்பு எதுவும் அவள் பாதத்தை ஸ்மரிக்கிறவருக்கு ஏற்படாது என்று பொருள்படுமாறு, ‘மூக பஞ்சசதி’யில் - வார்த்தை விளையாட்டுப் பண்ணி, ஒரு ச்லோகம் இருக்கிறது.


‘மூக பஞ்சசதி’ என்பது ஞானம், பக்தி, சாக்த சாஸ்த்ர தத்வங்கள், காவ்ய ரஸம் எல்லாம் சேர்ந்ததாகக் காமாட்சியைப் பற்றி மூகர் என்பவர் அநுக்ரஹித்துள்ள ஐநூறு ச்லோகம் கொண்ட ஸ்தோத்ரம். இவற்றிலொன்றுதான் நவகிரகங்களில் ஒவ்வொன்றின் தன்மையும் அம்பாளின் சரணாரவிந்தத்தில் இருப்பதாகச் சொல்லும் ச்லோகம்.

ததாநோ பாஸ்வத்தாம் அம்ருதநிலயோ லோஹிதவபு:
விநம்ராணாம் ஸௌம்யோ குருரபி கவித்வம் ச கலயந்
கதௌ மந்தோ கங்காதர-மஹிஷி காமாக்ஷி பஜதாம்
தம: கேதுர்-மாத:ஸ்தவ சரணபத்மோ விஜயதே
(பாதாரவிந்த சதகம் - 59)



சூரியன்:

ப்ரகாசிப்பதாலே ‘பாஸ்வத் தாம்’ என்று அந்தப் பாதத்தைச் சொல்கிறார். நவகிரகங்களில் முதலில் வரும் ஸூர்யனின் தன்மை இதுதானே? ‘பாஸ்கரன்’ என்றே அவனுக்கு ஒரு பேர்.

சந்திரன்:
அம்பாள் சரணத்திலிருந்து அம்ருதம் கொட்டுகிறது. இதை ‘அம்ருத நிலய:’ என்கிறார். யோகிகள் சிரஸின் உச்சியில் அவளுடைய பாத பத்மத்தின் அம்ருதம் பெருகுவதில் அப்படியே ‘உச்சி குளிர்ந்து’ இருப்பார்கள். ‘சரணாம்ருதம்’ என்றே சொல்வது வழக்கம். இதேபோல அம்ருதம் பெருக்குகிற தன்மை சந்திரனுக்கு உண்டு. அதனால்தான் ‘ஸுதாகரன்’ என்று பெயர்.

செவ்வாய்: ‘லோஹிதவபு:’ என்று ச்லோகத்தில் இருப்பதற்கு, ‘சிவந்த ரூபமுள்ளது’ என்று அர்த்தம். சிவப்பாயிருப்பதுதான் செவ்வாய். ‘விநம்ராணாம் ஸௌம்ய:’ அந்தப் பாதத்திலே போய் நமஸ்காரம் பண்ணுகிறவர்களுக்கு, அது ஸௌம்யமாயிருக்கிறது. மனஸுக்குப் பரமஹிதமாக, ம்ருதுவாக, சாந்தமாக இருப்பதெல்லாம் ஸௌம்யம். உக்ர தேவதை என்பதற்கு ஆப்போஸிட்டாக ஸௌம்ய தேவதை என்கிறோம்.

புதன்:
‘சோம’ என்ற சந்திரனிலிருந்து உண்டானதே ‘ஸௌம்யம்.’ நிலவு போலக் கோமளமாக, சாந்தமும் ஹிதமும் தருவதாக இருப்பதையெல்லாம் ஸௌம்யம் என்கிறோம். சோமனுக்குப் புத்ரனாக உண்டானவன் புதன். அதனால் அவனுக்கு ஸௌம்யன் என்று பேர்.

குரு: அம்பாள் பாதம் ‘குரு ரபி’ - ‘குரு: அபி’ என்கிறார். ‘குருவானதும்கூட’ என்கிறார். குரு என்றால் குணவிசேஷத்தால் பெரியது என்று அர்த்தம். அதோடுகூட, அந்தப் பாதம் க்ஷணகாலம் பட்டுவிட்டால் திருவடி தீக்ஷையினாலே ப்ரஹ்ம ஞானமே ஸித்தித்துவிடும். இப்படி ஞானம் தருவதாலும் அது குருவாயிருக்கிறது. குரு என்றால் வியாழன். குருவாரம் என்றே அந்தக் கிழமைக்குப் பேர்.

சுக்கிரன்: ‘கவித்வம் சகல யந்’ - கவித்வத்தையும் அநுக்ர-ஹித்துவிடுகிறது அம்பாள் பாதம். அவளருளால் அருட்கவியாகி, ஒரு காலத்தில் தாம் மூகனாயிருந்ததை லோகமெல்லாம் அறிய வேண்டுமென்பதால், ‘மூகர்’ என்றே பெயர் வைத்துக் கொண்டவர்தான் இந்த ச்லோகத்தைப் பண்ணியிருப்பவரே! நவகிரகங்களில் கவித்வகாரகன் வெள்ளிக் கிழமைக்குரிய சுக்ரன். ‘குரு’ என்று வெறுமே சொன்னால், அது தேவகுருவான ப்ருஹஸ் பதியைத்தான் குறிக்கும். அப்படியே ‘கவி’ என்று வெறுமே சொன்னால், அது அஸுர குருவான சுக்ராச்சாரியாரைத்தான் குறிப்பிடும். கவித்வ சக்தி அருளுவதால், அம்பாளின் பாதம் சுக்ரனாக இருக்கிறது.

சனி: ‘கதௌ மந்த:’ மிக மெதுவான நடை உள்ளது அம்பாள் பாதம். ‘மந்தன்’ என்று சனிக்கு ஒரு பேர். சனி, ரொம்ப மெதுவாக ஸஞ்சாரம் செய்யும் கிரஹம். ‘சனீச்வரன்’ என்று சொல்வது தப்பு. மற்ற கிரகம் எதற்கும் இல்லாத ‘ஈச்வர’ப் பட்டம் இதற்கு மட்டும் வருவதற்கு நியாயமில்லை. ‘சனைச்சரன்’ என்பதே சரியான வார்த்தை.

‘சனை:’ - மெதுவாக, ‘சர’-ஸஞ்சரிப்பவன். அதைச் சுருக்கி சனி என்கிறோம்.


ராகு: ‘பஜதாம் தம: கேது:’ - அம்பாள் பாதம் தன்னை பஜிக்கிறவர்களின் தமஸுக்கு உலை வைக்கும் தூமகேதுவாக இருக்கிறது. தமஸ் என்றால் இருட்டு. துக்கம், அஞ்ஞானமெல்லாம் தான் பெரிய இருட்டு. தமஸ் என்று ராஹுவுக்கும் பெயர்.

கேது: கேது என்பது ஒன்பதாவது கிரகமென்று எல்லோருக்கும் தெரியும். ச்லோகத்தில் ராஹுவின் தன்மை மாத்திரம் நேரே அம்பாள் பாதத்துக்கிருப்பதாகச் சொல்லாமல், ஆனாலும் ‘தமஸ்’ என்ற வார்த்தையை வைத்து, மற்ற எட்டு கிரகங்களையும் நேரே அந்தச் சரண ஸம்பந்தப்படுத்திச் சொல்லியிருக்கிறது.

ஸ்ரீகாஞ்சி காமகோடி பரமாச்சார்ய ஸ்வாமிகள்


Hindu Spiritual Articles: ?????? ????? ????????!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top