• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
The Sage of Kanchi

The Sage of Kanchi


The Sage of Kanchi - YouTube

The Sage of Kanchi is a 69 minute 35mm Color biographical documentary in English produced for Sri Kanchi Mahaswami Vidya Mandir, Chennai and directed by Mr. V. Balakrishnan of Nrityadaya, Chennai.

It takes on a spiritual journey and portrays the life and times of the Maha Periyaval of Kanchi, the 68th Pontiff of Sri Kanchi Kamakoti Peetam. A panoramic picture, it captures the 100 years in the life of this great spiritual head, his immense contribution to the national and spiritual fabric of India and to the 2500 year old institution established by Sri Adi Sankara.

"The visual, the commentary and the music fused into a seamless whole. All aspects of his life and work have been included and the comprehensive treatment gives the film the touch of an EPIC" - The Hindu

The devotional capsule is rounded off with glimpse of the institutions, memorials in his honor.The bhakti-filled music, especially of M. S. Subbulakshmi, used suitably in the background enhances the spirit of tribute.

Indeed a riveting experience for the devotees of the Paramacharya.
 
Kanchi Mahaperiyava Photos with song

Kanchi Mahaperiyava Photos with song

Kanchi Mahaperiyava Photos with song - YouTube


Mahaperiyava photos with Mahangalum Athisayangalum title song.

Song courtesy: StarVijay TV program

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...

வேதங்கள்-நாதங்கள் நீ போற்றுவாய்...இறைவா...!!!
பாபங்கள், சாபங்கள் பறந்தோடவே துணைவா...
அனைத்தையும் அறிந்திடும் ஜகத்குரு நீயே....

தாயாய் வந்தாய் ஆதிசிவ சங்கரா...
தவமாய் நின்றாய் பரமசிவ சங்கரா...

நீரோடையாய் நடந்தாய்...
பார் முழுவதும் கலந்தாய்...
ஏற்றினாய்...ஞானஒளி ஏற்றினாய்...
கார்மேகமாய் படர்ந்தாய்...
கருணை மழையென பொழிந்தாய்... தூயவா...

துறவு கொண்ட பாலசேகரா....
சங்கரா.. ஜெய சங்கரா
தண்டம் ஏந்திய தாண்டவா....
குருவாய் வருவாய் நடராஜ ரூபனே
திருவாய் மலர்வாய் நீ.... லோக சாந்தனே...

சங்கரா...சங்கரா...
சங்கரா.. ஜெய சங்கரா ..

உயிரெலாம் உருகுதே உனது புகழ் பாடவே...
மனமெலாம் மருகுதே உனது முகம் காணவே...
 
மஹாபெரியவா அருளுரை..

மஹாபெரியவா அருளுரை..



வைஷ்னவ சம்ப்ரதாயத்தில் கோவிந்த கோவிந்தா என்று
நாமாவளி போடுவது வழக்கம். ப்ராஹ்மணர்களில்தான்
சிலர் தவிர மற்ற வர்ணத்தார்கள் எல்லாரும் இரண்டையும்
சொல்லுவர். வைஷ்ணவர்களிலும் வெகு சிலர் தவிர
மற்றவர்கள் ஹர ஹர என்ரு சொல்கிறார்கள்.

சைவமும், வைஷ்ணவமும் ஒரு பொது மதத்தின் கிளைகள்.பொது
மதம் வைதீக மதம். வேதனெறி தழைத்தோங்குக என்று
ஞான சம்பந்தர் சொல்லியிருக்கிறார். சைவத்திற்கு
வைதீக சைவம் என்றே பெயர். பாண்டியனாட்டில்
நாஸ்திக வெள்ளம் புரண்டுவிட்ட காலத்தில் மங்கையர்க்கரசி
சிவபக்தி உள்ளவராக இருந்தமையால் தான் ஒர் பச்சைக்
குழந்தையான ஞான சம்பந்தரை நாடி அரன் நாமம்
பாண்டியனாடு முழுதும் ஒலிக்கும்படி ஏற்பட்டது



ஜய ஜய சங்கர ஹர சங்கர.

Source: Sage of Kanchi

Saraswathi Theagarajan
 
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

தேனீக்கள் தேனை கஷ்டப்பட்டு சேர்க்கறது. மனுஷன் ஒரே சமயத்திலே தேன் கூட்டை ஒடச்சுடறான். அதுக்காகக் தேனீ சோர்ந்து போறதில்லே. மறுபடியும் அதே மரத்திலே தேனடை வைக்கிறது. சம்சாரத்திலே கஷ்டங்கள், சிக்கல்கள் வரத்தான் செய்யும். அதுக்காக ஓடிப்போறதோ, காவிகட்டறதோ, தற்கொலை பண்ணிக்கறதோ தப்பு. சமாளிக்கறவனைத்தான் விதியை மதியாலே ஜெயிசுட்டாங்கறோம்.


Source:Sage of Kanchi

Ramachandran Venkataraman
 
விபூதியின் மஹிமை..

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர

மஹா பெரியவா அருள் வாக்கு....
விபூதியின் மஹிமை.....


விறகு க்ட்டைய அக்னி பஸ்மமாகுவதுபோல்
ஞானம் என்ற அக்னி எல்லாக்கருமங்களையும்
பஸ்மமாக்குகிறது என்று பகவத் கீதையில்
க்ருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபடேசம் செய்கிறார்.

பஸ்மமாகிய விபூதி, இவ்விதம் கர்மங்களை எரித்தபின்
நிற்கும் ஞானத்திற்கு சமம்.விபூதிர் ஐஸ்வர்யம் என்று
அமர கோசத்தில் உள்ளது. விபூதி என்பதும் ஐஸ்வர்யம்
அதாவது ஒரே பொருளைத் தரும்.

எந்தப்பொருளையும் தீயிலிட்டால் முதலில் அது
கருப்பாகும் இன்னும் அக்னி ப்புடமிட்டால் நீற்றுப்போகும்,
அதாவது சுத்த வெளுப்பாகும். இப்படி நீற்றுப்போனதே
திருனீரு. நீரு என்பது பஸ்மம். ஈஸ்வரன் மஹா பஸ்மம்

பலவர்ணங்களை உடைய பொருள்களைப் பார்க்கிரோம்.
இந்த வர்ணங்களெல்லாம் எரித்த பின் மாறிவிடுகின்றன.
கடைசியில் வெளுத்தும் போய்விடும். அப்போது நாம்
சாயம் வெளுத்து விட்டது என்கிறோம். ஆகையால் எஞ்சி
நிற்பது வெண்மை ஒன்றுதான்.மற்றவை எல்லாம் பொய்.
வெண்மையே உண்மை.

திருத்தொண்டர் புராணத்தில் சுந்தர மூர்த்தி நாயனார்
முழுநீரு பூசிடும் முனிவர்க்கும் அடியேன் என்று பாடினார்.
விபூதியை தேகம் பூரா பூசிக் கொள்ளவேண்டும்.

மண்ணை இட்டுக்கொள்வதும் திருநீரு இட்டுக்கொள்வதும்
நமக்கு தத்துவத்தை விளக்குகின்றன.

மன்னனும் மாசற கற்ரோனும் பிடி சாம்பலகப்போகிரோம்.
இந்த வாழ்க்கை மாயமானது என்பதை விபூதி உணர்த்துகிறது.
இதை ஞாபகப்படுத்தவே நாம் சிலர் விபூஒதியு, சிலர் திரு மண்ணும்
அணிகிறோம்.விபூதி பசுவின் சாணத்தை அக்னியிலிட்டு
பஸ்மமாக்குவதில் கிடைக்கிறது.

நமது உடல் பல துர் கந்தங்களை உடையது. இதனை சுத்த்ப்படுத்தி
ஆத்மாவையும் சுத்த்ப் படுத்த வல்லது திருநீறு மஹாபஸ்மமான
பரமாத்மாவாகவும் விபூதி என்னும் பஸ்மமமும் ஒன்றான படியால்,
விபூதியை அணிவதால் ஈஸ்வர சாக்ஷாத் காரம் ஏற்படும். ஆகையால்
நாம் யாவரும் விபூதியையோ திருமண்ணையோ அவஸ்யம்
இட்டுக்கொள்ளவேண்டும்.

ஞானம் என்னும் தீயில் கர்மாக்கள் யாவும் எரிந்து போனபின் நிற்கும்
மஹா பஸ்மமான பரமாத்மதான் விபூதி.

திருனீறு திருமண் இவற்றைத் தரிப்பது பரமாத்மா ஸ்வரூபத்தின்
உண்மையையும் உலகில் மற்ற யாவற்றின் அனித்தியத்தையும்
நினைவூட்டுகிறது.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர



Source:Sage of Kanchi

Saraswathi Thyagarajan
 
பாண்டுரங்கனுக்கும் தலைல இப்டித்தான்!

பாண்டுரங்கனுக்கும் தலைல இப்டித்தான்!


மெட்ராஸை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் இருந்தன. இப்போது மூன்றாவதாக கருவுற்றாள். எட்டாவது மாசம். இந்தக் குழந்தையாவது ஆணாகப் பிறக்க வேண்டும் என்று ஆசை. ரெண்டு பேரும் பெரியவாளுடைய தர்சனத்துக்கு போனார்கள். அப்போ பெரியவா பண்டரீபுரத்தில் தங்கியிருந்தார். கூட அவளுடைய மாமாவும் போனார்.


“பெரியவா……இவ என் மருமாள். மொத ரெண்டும் பொண் கொழந்தேள்……இந்தத் தடவையாவது பிள்ளைக் கொழந்தை பொறக்க அனுக்ரகம் பண்ணணும்”
“ஏன்? ரெண்டு பொண்ணோட மூணாவது பொண்ணு பொறந்தா………ஜாஸ்தின்னா சொல்றே?” கிண்டலாக சிரித்துக் கொண்டே கேட்டார். பின் தொடர்ந்தார்…….” இது எத்தனாவது மாசம்?”

“எட்டு நடக்கறது”

“ஏழு மாசம் கழிச்சு எங்கிட்ட வந்து பிள்ளை பொறக்கணும்…ன்னா…நான் என்ன பண்ணுவேன்? நீயே சொல்லு” பாவம். இவரால் எதுவுமே முடியாதாம்! என்ன ஒரு நடிப்பு!
மருமாளின் கண்களில் கண்ணீர் கோர்க்க ஆரம்பித்தது. பெரியவா அவளை பார்த்துக் கொண்டே, மாமாவிடம் “அவ ஏண்டா அழறா?” என்று கேட்டுக் கொண்டே எதிரில் தட்டில் வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களில் ஒன்றை எடுத்து தன் வலது தொடையில் தேய்த்துக் கொண்டே இருந்தார். பிறகு அப்பழத்தை அவளிடம் குடுத்து, ” இந்தா…….இதை சாப்டு! போயி பாண்டுரங்கனை தர்சனம் பண்ணிட்டு வா…….போக முடியுமொல்லியோ?”

பாண்டுரங்கனை தர்சனம் பண்ணிவிட்டு வந்தார்கள். மடத்தில் நான்கு நாட்கள் தங்கிவிட்டு போகச்சொல்லி உத்தரவானது. நான்காம் நாள் கிளம்பும்போது அவளிடம் “இப்டி வா! ஒனக்கு புள்ளைக் கொழந்தை பொறந்தா…….சந்திரமௌலி ன்னு பேர் வெக்கறையா?”
“பெரியவா என்ன சொல்றேளோ……அப்டியே நடக்கறோம் பெரியவா” நமஸ்காரம் பண்ணிவிட்டு கிளம்பினார்கள். அழகான பிள்ளைக் குழந்தை பிறந்தது. ஏழுமாசம் கழிச்சு குழந்தையை பெரியவாளிடம் அழைத்து வந்தனர். அப்போ பெரியவா காஞ்சிபுரத்தில் இருந்தார்.

“சந்த்ரமௌளிதானே?……..” ஞாபகமாக கேட்டார்.

“பெரியவா சொன்னபடி சந்திரமௌலி ன்னுதான் வெச்சிருக்கோம்…..ஆனா, கொழந்தையோட தலைல முன் நெத்திலேர்ந்து பின் கழுத்து வரைக்கும் நீளமா ஒரு பள்ளம் இருக்கு” என்று சொன்னாள்.

“கொழந்தைய நல்ல வெளிச்சத்ல கீழ துணிய விரிச்சு போடு! தலைல பள்ளம் இருக்கா….பாக்கலாம்” என்று சொன்னபடி வாழைபழம், மாம்பழம், அன்னாசிப்பழம் எல்லாவற்றையும் எடுத்து கீழே கிடந்த குழந்தையின் முன்னால் வைத்தார்.

“இந்த பழம் எல்லாம் நோக்கு வேணுமா?…..ஒன்னால இதெல்லாத்தையும் சாப்ட முடியுமா?” விளையாட்டு தாத்தாவாக குழந்தையிடம் கேட்டார். அதுபாட்டுக்கு கையை காலை உதைத்து விளையாடிக் கொண்டிருந்தது.
அப்புறம் அம்மாவிடம் “இதெல்லாத்தையும் இவனுக்கு குடுக்கலாமா?” என்றார்.

“கொழந்தை பால்தான் சாப்டுவான்….”அம்மாக்காரி சொன்னாள்.

“எல்லாத்தையும் நன்னா மாவாட்டம் பெசைஞ்சு ஜலம் ஊத்தி கரைச்சு கஞ்சியாட்டம் பண்ணிக் குடு” என்று சொல்லி எல்லாப் பழங்களையும் அம்மாவிடம் குடுத்தார்.

“உத்தரவு பெரியவா…….ஆனா, இந்த தலைல பள்ளம்….” இழுத்தாள் அம்மாக்காரி.

“இவ…..எங்கிட்ட பிள்ளைக் கொழந்தை வேணும்…ன்னு எந்த ஊர்ல இருக்கறச்சே கேட்டா?” கணவரிடம் கேட்டார்.

“பண்டரீபுரத்ல”

“அங்க….பாண்டுரங்கனை தர்சனம் பண்ணினாளோ?”

“பண்ணினோம் பெரியவா”

“வெறும் தர்சனம் இல்லே…அஞ்சு ரூவா குடுத்தா, ஸ்வாமியோட தலைல இருக்கற தலைப்பாகையை எடுத்துட்டு காட்டுவா………அந்த பாண்டுரங்கனுக்கும் தலைல இப்டித்தான் பள்ளமா இருக்கும்…..வடக்கே, பக்தாள்ளாம் ஸ்வாமியை கையால தொட்டு கும்படற பழக்கம் உண்டு. அதே மாதிரி பாண்டுரங்கன் தலைல எல்லாரும் கையை வெச்சு வெச்சு, ஸ்வாமிக்கு தலைல பள்ளமே விழுந்துடுத்து! இவ, பிள்ளை வேணும்…ன்னு பாண்டுரங்கன்கிட்ட கேட்டாளோல்லியோ?…..அதான், கொழந்தையோட தலைலையும் பள்ளம் இருக்கு….செரியாப் போய்டும்”

தெய்வத்தின் அனுக்ரகத்தால் தெய்வத்திடம் பிள்ளைவரம் வேண்டி அனுப்பப்பட்டு, அத்தெய்வத்தின் சாயலாகவே பிறக்க அந்த குழந்தை என்ன பாக்யம் பண்ணியிருக்க வேண்டும்! அதை கருவில் சுமந்த தாய் எத்தனை பாக்யசாலி!

பெரியவா சொன்னபடி அந்த பழங்களை கஞ்சி மாதிரி பண்ணி, நாலு நாள் குடுத்ததும் ஊர் திரும்ப உத்தரவானது. ரயிலில் குழந்தையோடு கிளம்பி வரும்போது, குழந்தைக்கு உடை மாற்றும் போது, அதிசயமாக தலையில் இருந்த பள்ளம் மாயமாக மறைந்துவிட்டிருந்தது!

2014 April 16 « Sage of Kanchi
 
அன்னதான சிறப்புக்கு மஹாபெரியவா சொன்ன உண&

அன்னதான சிறப்புக்கு மஹாபெரியவா சொன்ன உண்மைக்கதை.


பல வருடங்களுக்கு முன்பு காஞ்சி மஹாஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக்கிழமை. தரிஸனத்திற்கு ஏகக்கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயது தம்பதி, ஆசார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கைகூப்பி நின்றனர்.

அவர்களைக்கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், “அடேடே ….. யாரு …. பாலூர் கோபாலனா! ஒரு வருஷத்துக்கு முன்னால் வந்திருந்தே! அப்போ என்னவோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே ….. இப்போ செளக்யமா இருக்கேயோல்லியோ ! என்று சிரித்துக்கொண்டே வினவினார். உடனே அந்த பாலூர் கோபாலன், “பரம செளக்யமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ண படியே நித்யம் மத்யான வேளைல ஒரு ’அதிதி’க்கு [எதிர்பாராத விருந்தாளின்னு சொல்லலாம்] சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வறது பெரியவா! வயல்கள்ல விளைச்சல் நன்னா ஆறது …… முன்ன மாதிரி பசுமாடுகள் மரிச்சுப்போறதில்லே! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம், இப்போல்லாம் கையிலே தங்கறது. எல்லாம் நீங்க அனுக்ரஹம் செய்து சொன்ன அதிதி போஜன மஹிமைதான் பெரியவா …. தினமும் செஞ்சிண்டுருக்கேன். வேற ஒண்ணுமே இல்லை” என்று கண்களில் நீர் மல்கக் கூறினார். அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், “ பேஷ் … பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாகறதுங்கறதப் புரிஞ்சிண்டா சரிதான் ….. அது சரி, இன்னிக்கு நீங்க ரெண்டு பேரும் கிளம்பி இங்கே வந்துட்டேளே … அங்க பாலூர்லே யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா?” என்று கவலையுடன் விசாரித்தார். உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு ”அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணிவெச்சுட்டுத்தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நா கூட அதிதி போஜனம் விட்டுப்போகாது” என்றாள். இதைக்கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம ஸந்தோஷம். ”அப்படித்தான் பண்ணணும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கிறதுலே ஒரு வைராக்யம் வேணும்.

அதிதி உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்ரஹத்தைப்பண்ணி குடும்பத்தக் காப்பாத்தும்! ஒரு நாள் சாக்ஷாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்தில் வந்து ஒக்கார்ந்து சாப்டுவார், தெரியுமா?” – குதூகுலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்ரஹ வார்த்தைகளைக் கேட்டு மகிழ, க்யூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர். அனைவரையும் கீழே அமரச்சொல்லி ஜாடை காட்டினார், ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது. ஒரு பக்தர் ஸ்வாமிகளைப்பார்த்துக் கேட்டார், ”அதிதி போஜனம் பண்ணி வெக்கறதுலே அவ்வளவு மஹிமை இருக்கா ஸ்வாமீ?” உடனே ஸ்வாமிகள், “ஆமாமாம்! மோட்சத்துக்கே அழைச்சுண்டு போகக்கூடிய மஹாப் புண்ய தர்மம் அது. ரொம்பப் பேருக்கு அனுகூலம் பண்ணியிருக்கு! அத இந்த கோபாலன் மாதிரி அனுபவிச்சவாள்ட்ட கேட்டாத்தான் சொல்லுவா. அப்பேர்ப்பட்ட ஒசந்த தர்மம் இது!” என்று உருக்கத்துடன் சொல்லி முடித்தார்.


24 | December | 2013 | My blog- K. Hariharan
 
அருள்மொழிகள்

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்


1. உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று சமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப்போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும்.

2. இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள்.

3. நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது.

4. நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வருகிறது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ வித்யாசங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. லோகம் புரண்டு போனாலும் நம்முடைய கடமைகளைச் செய்து கொண்டு பயமின்றி அன்புடன் சாமாண்ய தர்மங்களை நன்றாக ரக்ஷித்து விசேஷதர்மத்தைக் கூடியவரை ரக்ஷிக்க வேண்டும். அதற்குரிய சக்தியைப் பகவான் அளிப்பாராக.

5. மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார்.

6. வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்ள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள், அவைகளுள் ஒன்றே லட்சம் கிரந்தம் உடையது.

7. பாபத்தை ஒரேக்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான பெயர் அது. வேதங்களின் ஜீவரத்னம் அதுவே. கோயிலில் மஹாலிங்கம் போலவும் தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. (சிவ என்ற இரண்டு எழுத்துக்களே அது) அதை ஒருதரம் சொன்னால் போதும். வேறு ஒரு காரியத்துக்கு நடுவிலும் சொல்லலாம். சொன்னால் அந்த க்ஷணத்திலேயே பாபத்தைப் போக்கிவிடும்.

8. வேதங்களுள் யஜுர் வேதம் முக்கியமானது. அதற்குள் அதன் மத்திய பாகமாகிய நாலாவது காண்டம் முக்கியமானது. அதற்குள்ளும் மத்திய பாகமான நாலாவது ப்ரச்னம் முக்கிய மானது. அதுதான் ஸ்ரீருத்ரம். அதற்குள்ளும் ‘நம: சிவாய’ என்ற பஞ்சாக்ஷர வாக்கியம் மத்தியில் இருக்கிறது. அதன் மத்தியில் ‘சிவ’ என்ற இரண்டு அக்ஷரங்கள் அடங்கியுள்ளன. இதையே ஜீவரத்னம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இந்த அபிப்பிராயத்தை அப்பய்ய தீக்ஷிதர் ப்ரம்மதர்க்க ஸ்தவத்தில் சொல்லியிருக்கிறார்கள். அந்த ப்ரம்மம் சிவஸ்வரூபம் என்று தெரிகிறது.

9. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை ஆராதிப்பதற்கு அடையாளமாகச் சிவபக்தர்கள் எல்லோரும் ஐந்து வித காரியங்களைச் செய்து கொண்டிருக்க வேண்டும். அவைகளாவன:
(1) விபூதி தரித்தல்,
(2) ருத்ராக்ஷம் அணிதல்,
(3) பஞ்சாக்ஷர மந்திரத்தை ஜபம் செய்தல், பஞ்சாக்ஷர மந்திரம் உபதேசமாகாதவர்கள் ‘சிவ’ என்ற பதத்தை ஜபம் செய்தல்,
(4) வில்வ தளத்தால் பரமேச்வரனைப் பூசித்தல்,
(5) இருதயத்தில் சதா சிவத்யானம் செய்தல் இவைகள் ஒவ்வொன்றும் ஈச்வரனுக்கு விசேஷப்ரீதியைக் கொடுக்கக் கூடியது.
(குறிப்பு: பஞ்சாக்ஷர மந்திரத்தை உபதேச பெற்று ஜபம் செய்தல் சிறப்பு. எனினும் உபதேசம் பெறாதவரும் இம்மந்திரத்தைத் தாராளம் சொல்லலாம். கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லாத் தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லார் நாமம் நமச்சிவாயவே - சம்பந்தர்.)



Source:

Sage of Kanchi

Jayaprakash PS
 
பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூ&

பிரபல எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…

அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு அதிகாரி, சன்னியாசத்தின் மேல் பற்று கொண்டு சன்னியாசியாக ஆகிவிட்டார். காவியும் உடுத்திக் கொண்டு கையில் த்ரிதண்டத்துடன் சன்னியாசிக்குண்டான லட்சணங்களோடு அவர் யாத்திரை புரிந்தபடி இருந்தார். அப்படிப்பட்டவருக்கும் ஒரு சோதனை! அவருடைய சன்னியாச தண்டம் காணாமல் போய்விட்டது. இப்படி ஒரு சன்னியாசிக்கு நிகழ்ந்தால் அவர் உடனே இன்னொரு சன்னியாசியைச் சந்தித்து அவரிடம் இருந்து புதிய தண்டத்தை தீட்சையுடன் பெற்றுக்கொள்வது என்பதுதான் வழக்கம். அவருக்கு உடனே பெரியவர் நினைவுதான் வந்தது. காஞ்சிபுரத்தை நோக்கிப் புறப்பட்டு விட்டார்.


ஒரு சன்னியாசியின் த்ரிதண்டம் காணாமல் போகிறது என்பதைக் கேள்விப்படும் போதே நமக்கு வியப்பாக இருக்கும். அது ஒன்றும் விலை மதிப்புள்ளதல்ல… அதாவது, லௌகீகப் பார்வையில்! ஆனால், பக்தியுடன் பார்த்தால் அதற்கு விலை மதிப்பே கிடையாது. இதுதான் யதார்த்தம்! கிடைப்பதை எல்லாம் அபகரிக்க நினைப்பவர்கள் கூட சன்னியாசியிடம் கை வைக்க அஞ்சுவார்கள். இருந்தும் அது காணாமல் போனதுதான் பெரிய விந்தை. இந்த விந்தைக்குப் பின்னாலே ஒரு நல்ல விஷயமும் இருந்ததுதான் ஆச்சரியம்.


அந்த சன்னியாசி பெரியவரை தரிசனம் பண்ண வந்தபோது, பெரியவருக்கு சரியான காய்ச்சல்! பக்தர்களுக்குத் தான் பெரியவரைப் பிடிக்க வேண்டுமா? காய்ச்சல், குளிருக்கும் கூட பெரியவரை மிகப் பிடித்துவிட்டது போலும். உடம்பு எவ்வளவு படுத்தினாலும் பெரியவர் அதைப் பொருட்படுத்த மாட்டார்.
அதிகபட்சம் கஷாயம் வைத்து சாப்பிடுவார். அவ்வளவுதான்! இரண்டொரு நாளில் தானாகச் சரியாகி விடும். ஆனால், அந்த சமயத்தில் அந்தக் காய்ச்சல் அவரை விடுவதாக இல்லை. உடம்பெல்லாமும் வலி எடுக்கத் தொடங்கி விட்டது. இந்த நிலையில் அவருக்கு சேவை செய்ய எவ்வளவோ பேர் தயாராக இருந்தாலும் அவரைத் தீண்டி எதையும் செய்ய முடியாது.

சன்னியாசிகளுக்குண்டான ஆசாரத்தில் – எதன் மேலும், எவர் மேலும் படாமல் இருப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். பட்டுவிட்டால், தீட்டு ஏற்பட்டு பின் சுத்தப்படுத்திக் கொள்ள மிகவே பிரயத்தனப்பட வேண்டும்.

இந்த ஆசாரமான விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கும், சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட சாரார் மேல் காட்டப்பட்ட தீண்டாமைக்கும் நிறைய வேற்றுமை உண்டு. நுட்பமாகச் சிந்தித்து உணர வேண்டிய ஒரு விஷயம் இது.

பெரியவரைத் தொட்டுத் தூக்கி, அவர் உடம்பைத் துவட்டி அவருக்கு உதவ எல்லோர் மனமும் துடித்த போதுதான், த்ரிதண்டத்தை இழந்துவிட்ட சன்னியாசி கடவுளாலேயே அனுப்பப்பட்டவர் போல வந்து சேர்ந்தார். சன்னியாசிக்கு சன்னியாசி, ஸ்பரிசம் படுவதில் பாதகமில்லை. அவர் வரவும், மடத்தில் உள்ளோர் மகிழ்ந்தனர். பெரியவர் அவருக்கு த்ரிதண்டத்தை வழங்கி, அவர் தன்னைத் தீண்ட வழி செய்தார். அவரும் அவருக்கு உதவிட, பெரியவர் வெகு சீக்கிரம் குணமாகி எழுந்தார். அதன்பின் சில காலம் அந்த சன்னியாசி பெரியவருடன்தான் இருந்தார்.

அந்த வேளையில் திருப்பதிக்கு யாத்திரை செல்லவும் நேர்ந்தது. பெரியவர் எப்போதும் விறுவிறுவென்று நடக்கக் கூடியவர். ஒடிசலான அவர் உடலமைப்பும் அவரது உணவுக் கட்டுப்பாடும் அவரை எப்போதும் சுறுசுறுப்பாகவே வைத்திருந்தது தான் காரணம். அப்படிச் சென்ற பெரியவர், பெருமாளின் திருச்சன்னிதிக்குள்ளும் விறுவிறுவென்று சென்று விட்டார். அங்கே அவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. அவரும் ஏகாந்தமாக பெருமாளை எப்பொழுதும் தான் பிறர் கேட்கும்படியாக உச்சரிக்கும் நாராயணா எனும் நாமத்துக்குரிய விஷ்ணுபதியை மனம் நெகிழ வணங்கிவிட்டு வெளியே வரும் போதுதான் அந்த த்ரிதண்ட சன்னியாசியின் ஞாபகம் வந்தது.

‘அடடா! அவரை விட்டுவிட்டு வேகமாக வந்து விட்டோமே…’ என்று தோன்றவே, அவரைத் தேடியபடி வெளியே வந்தார்.

வெளியே அந்த சன்னியாசியும் வந்து கொண்டிருந்தார். அப்படி வந்தவர், பெரியவரைப் பார்த்த மாத்திரத்தில் அப்படியே சிலிர்த்துப் போய்விட்டார்.

பெரியவர் பெரியவராகக் காட்சி தராமல், அந்த வேங்கடவனாகவே சங்கு சக்ரதாரியாகக் காட்சியளித்ததுதான் காரணம்! அதன்பின் பெரியவரே அவரை உள்ளே போய் சேவிதம் பண்ணச் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

‘ஆகிவிட்டது… தரிசனம் ஆகிவிட்டது… திவ்ய மங்கள ரூபமாக உயிர்த்துடிப்புடன் தரிசனம் செய்துவிட்ட நிலையில் உள்சென்று ஸ்தூலமான அந்த சிலாரூப தரிசனம் காண எனக்கு இப்போது தேவையில்லை!’ என்று கூறிவிட்டார். அவருக்கு ஏதோ பிரமை… அவர் கண்களுக்கு அப்படித் தெரிந்திருக்கிறது என்று இதற்கொரு அர்த்தம் கற்பிக்கலாம்தான். ஆனால், பிரமை எல்லாம் நம் போன்றோர்களுக்குத்தான்! சன்னியாசிகள் நம்மைப்போல உலக ருசிகளில் சிக்கி தங்களை இழந்தவர்கள் அல்ல; உலக ருசிகளை எல்லாம் வென்று தங்களை அடிமைப்படுத்தி விடாமல் செய்தவர்கள்.


Source: Sage of Kanchi

Geeta Sami
 
விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை

விவாகத்தில் தவிர்க்க வேண்டியவை

ஆர். ஜவந்திநாதன், உபன்யாசகர்


1. மாப்பிள்ளை அழைப்பு: முன் காலத்தில் மாப்பிள்ளை வெளியூரிலிருந்து வரும்போது ஊரின் எல்லையில் சென்று மேளத்தாளத்துடன் குதூகலமாக அழைத்துவருவது வழக்கம் தற்போது முதல் நாள் அன்றே மாப்பிள்ளை சத்திரத்திற்கு வந்துவிடுகிறார். தங்கி டிபன் முதலியன சாப்பிட்டு இளைப்பாறுகிறார். பிறகு இரவு (ஏற்கனவே வந்துவிட்ட வரை) வெளியில் அனுப்பி, ஓரிடத்திலிருந்து அழைப்பது அர்த்தமற்றது. இது சத்தியத்திற்குப் புறம்பானது. தவிர்க்கப்பட வேண்டும்.


2. காசியாத்திரை: முன் காலத்தில் பிரம்மச்சாரிகள் காசிக்குப் படிக்கச் செல்வார்கள். வழியில் பெண் வீட்டார். தங்கள் பெண்ணை ஏற்றுக்கொண்டு கிரஹஸ்தாஸ்ரமம் நடத்தச் சொல்வார்கள். சரி என்று பையனும் சம்மதித்துத் திரும்புகிறான். இதுதான் தற்போது நடக்கிறது. ஆனால் முதல் நாளே நிச்சயதார்த்தம் செய்து லக்னப் பத்திரிகை படித்து ஏற்பாடாகிறது. பிறகு காசிக்குப் போவது முரண்பாடான ஏற்பாடு தவிர்க்க வேண்டும் (நம்பிக்கை மோசடி என்றுகூடச் சொல்லலாம்)


3. ஊஞ்சல்: சாஸ்திரப்படி கல்யாணம் ஆனபிறகு தம்பதிகளாய்ச் சேர்ந்த பிறகுதான் அவர்களை ஊஞ்சலில் வைத்துக்கொண்டாட வேண்டும். பகவான் கல்யாண உற்சவங்களில் விவாஹம் ஆன பிறகுதான் திவ்ய தம்பதிகளை ஊஞ்சலில் வைத்து பூஜிக்கிறோம். கல்யாணத்திற்கு முன்னால் தம்பதிகளைச் சேர்த்துவைப்பது நல்லது இல்லை. ஏதாவது ஏற்பட்டு விவாஹம் தடைபட்டால் அவர்கள் வாழ்வு பாதிக்கப்படும்.


4. பாணிக்ரஹணம்: சுபமுகூர்த்தம் வைத்து நல்ல லக்னத்தில் மாப்பிள்ளை பெண்ணின் கரத்தை க்ரஹிக்க வேண்டும். இப்பொழுது முதலிலேயே (ஊஞ்சல் பிறகு) கையைப் பிடித்து அழைத்து மணமேடைக்கு வருகிறார்கள். கைப் பிடிக்கும் வேளை ராகு காலம் எமகண்டமாய் இருக்கலாம். சுப லக்னத்தில்தான் கைப் பிடிக்க வேண்டும்.


5. கைகுலுக்குதல்: மாப்பிள்ளை பெண் இருவரும் விரதம் செய்து, கையில் ரக்ஷா பந்தனம் செய்துகொள்கிறார்கள். கைகள் புனிதமாகி இருவரும் விவாதச் சடங்குகள். ஹோமம், சப்தபதி முதலியன செய்யத் தகுதி அடைகின்றன. இந்தப் புனிதத்வத்தைக் கெடுத்து எல்லாரும் வந்து பெண், மாப்பிள்ளை இருவரும் சடங்குகள் முடியும் முன் கைகுலுக்குகிறார்கள். கைகள் சுத்தம் இழக்கின்றன. ஆகையால் விவாஹச் சடங்கு, சப்தபதி முடியும் முன் யாரும் தம்பதிகளைக் கை குலுக்கக் கூடாது. இதைப் பத்திரிகைகளில் (NB) என்று போட்டுக் குறிப்பிட்டுவிட்டால். விவாஹத்திற்கு வருபவர்கள் தக்கபடி நடந்துகொள்வார்கள்.


6. பட்டுப்புடவை: விவாஹம் செய்யும்போது பாவம் சேரக் கூடாது. ஆயிரக்கணக்கான பூச்சிகளைக் கொன்று பட்டு இழை எடுக்கிறார்கள். ஆகையால் பாவம் சேர்ந்த இந்த பட்டுப் புடவையைக் கட்டிக்கொண்டால் விவாஹம் பாவத்திற்கு உட்படுகிறது. தம்பதிகள் க்ஷேமத்திற்கு உதந்ததல்ல இதற்காகத்தான் பரமாச்சார்யாள் இதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள். அஹிம்ஸா பட்டு உடுக்கலாம்.


7. விவாஹப் பணம் (Dowry): மாப்பிள்ளை வீட்டார் எதிர் ஜாமின் வகையறா வாங்குவது சாஸ்திர விரோதம். மேலும் விரதங்களை தங்கள் வீட்டில் செய்துகொண்டுதான் கல்யாணத்திற்கு வர வேண்டும். அவர்கள் பொறுப்பு. இப்படிச் செய்தால் சத்திரத்திற்கு காலையில் வந்தால் போதும். நேரே விவாஹம் மந்தர பூர்வமான சடங்குகளைப் பிரதானமாகச் செய்யலாம். நிறைய வேத வித்துகளுக்கு தக்ஷிணைக் கொடுத்து அக்னி சாக்ஷியான விவாகத்தைச் சிறப்பாக நடத்தலாம். சிலவும் குறையும். நகை ஆடம்பரம் தவிர்த்து ஒருவேளை ஆகாரத்துடன் முடித்து மிச்சமாகும் பணத்தை ஒரு ஏழைக் குடும்ப கல்யாணத்திற்கு உதவலாம் அல்லது சேமிக்கலாம்.


8. வரவேற்பு: முதல் நாள் வரவேற்பு கொடுப்பது தவறு. தம்பதிகளாகச் சேரும் முன் இருவரையும் ஒன்றாய் உட்காரவைப்பது தவறு. நமது கலாசாரத்திற்கு முரண்பட்டது. கோவில்களில் கல்யாணம் செய்தால் வரவேற்பு ஏதாவது சத்திரத்தில் காலியாயிருக்கும் தினத்தில் (கிழமை பார்க்க வேண்டாம்) செய்யலாம். சிலவு குறையும்.


9. திருமங்கல்ய தாரணம்: விவாகம் என்பது திருமங்கல்ய தாரணம் மட்டும் அல்ல. வேத பூர்வமான மந்த்ரம் திருமங்கல்ய தாரணத்திற்கு இல்லை. ஸ்லோகம்தான். மந்த்ர பூர்வமான விவாகம்தான் முக்கியம் உதாரணமாக 9-10:30 முகூர்த்தம் என்றால் 10:30க்குள் திருமங்கல்ய தாரணம் செய்துவிடுகிறார்கள். எல்லாரும் எழுந்து போய்விடுகிறார்கள். உண்மையான விவாகச் சடங்குகள் பிறகுதான் நடக்கின்றன. சாட்சிக்கு யாரும் இருப்பதில்லை. மேலும் முகூர்த்த காலத்திற்குப் பின் ராகுகாலம், எம கண்டம் இருக்கலாம். ஆகையால் எல்லாம் சப்தபதி உள்பட முகூர்த்த காலத்திற்குள் முடித்துவிட வேண்டும். சுபகாலத்தில் தான் சடங்குகள் செய்ய வேண்டும். அப்போதுதான் தம்பதிகளுக்கு க்ஷேமம் உண்டாகும்.


10. கூரைப்புடவை: மாயவரத்திற்கு அருகில் கொறை நாடு என்ற ஊரில்தான் முகூர்த்தப் புடவை செய்வது வழக்கம். கொறை நாடு புடவை என்பதைக் கூரப்புடவை என்கிறோம். நூலில் சிவப்புக் கட்டம் போட்டு அழகாக நெய்வார்கள். உண்மையான கூரப்புடவை என்றால் நூல் புடவை என்று அர்த்தம். நாம் தற்போது பணவசதியால் பெருமைக்கு ஆசைப்பட்டுப் பட்டு ஜரிகையை, ஆயிரக்கணக்கில் செலவு செய்து பாவத்தைத் தேடிக்கொள்கிறோம்.



NB: 1966இல் பரமாச்சார்யாள் உத்தரவு: “என் நிபந்தனைகளுக்கு உட்படாமல் செய்யப்படும் விவாஹப் பத்திரிகைகளில் என் பெயரைப் போடுவது தவிர்க்கப்பட வேண்டும்”.



Source:Tamil-English Web magazine for Brahmins
 
பெரியவா இன்னும் வரலியே!

பெரியவா இன்னும் வரலியே!

மிகவும் வயஸான ஒரு பாட்டிக்கு, தன் வீட்டிலும் ஹோமம் செய்ய வேண்டும் என்று மிகுந்த ஆசை. பெரியவாளிடம் அளவு கடந்த பக்தி. அப்போதெல்லாம் யாராவது தங்கள் க்ருஹத்திற்கு பெரியவாளை அழைத்தால், பெரியவாளின் திருவடிகள் அவ்வீடுகளில் கட்டாயம் பதியும். இந்தப் பாட்டியும் ஹோமத்துக்கு பெரியவாளை அழைக்க வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டாள்.

பெரியவாளிடம் வேண்டிக்கொண்டதும், "அதுக்கென்ன? வரேனே" என்று சொல்லிவிட்டார்.

பாட்டிக்கோ பரம சந்தோஷம்! ஹோமத்துக்கு பார்த்துப் பார்த்து ஏற்பாடு பண்ணினாள். ஆயிற்று. ஹோமம் ஆரம்பித்தாகிவிட்டது.

"பெரியவா இன்னும் வரலியே!.." பாட்டி வாசலுக்கும் உள்ளுக்கும் நடையாய் நடந்து கொண்டிருந்தாள். பூர்ணாஹுதியைக் கூட கொஞ்சம் பொறுத்திருந்து பார்த்துவிட்டு செய்யலாம் என்று வேத ப்ராஹ்மணர்கள் சொன்னார்கள்.

அப்போதும் கூட பூர்ணாஹுதி குடுக்கும் வரை பெரியவா வரவேயில்லை. பாட்டிக்கு ஒரே சோகம். ஹோமப்ரஸாதம் எடுத்துக் கொண்டு பெரியவாளை தர்சனம் பண்ணச் சென்றாள்.

"பெரியவா ஹோமத்துக்கு வர்றதா சொன்னேள். ஆனா, வராம இருந்துட்டேளே!" தன் ஆதங்கத்தை பெரியவாளிடம் புலம்பினாள். அழகாக சிரித்துக் கொண்டே அவள்
சொல்வதைக் கேட்டார்.

"நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!.."

பாட்டிக்கு ஒண்ணும் புரியவில்லை...................... வந்தாரா?

"என்னது? பெரியவா வந்தேளா? நேக்கு ஒண்ணும் புரியலே..."

"ஹோமத்தை போட்டோ எடுத்தியா?"

"எடுத்தா....."

"அதை ப்ரிண்ட் போட்டுப் பாரு"

பாட்டி உடனேயே போட்டோ எடுத்தவனை அதை ப்ரிண்ட் போடத் துரத்தினாள். வந்ததும் அவைகளைப் பார்த்தபோது, அதில் ஒன்று பூர்ணாஹுதி நடந்தபோது எடுக்கப்பட்ட படம்......

அந்த அக்னி ஜ்வாலை ஒரு ஆள் உயரத்திற்கு எழும்பி எரிகிறது.....அந்த ஜ்வாலை ஸாக்ஷாத் பெரியவா தண்டத்துடன் நிற்பது போலவே எரிந்து கொண்டிருந்தது! அந்த
போட்டோ இன்றும் சேலத்தில் உள்ள ஸ்ரீ பெரியவா க்ருஹத்தில் உள்ளது.

"நா, ஹோமத்துக்கு வரலேன்னு யார் சொன்னா? வந்தேனே!.." பெரியவா சொன்னது எத்தனை சத்யம்!! பஞ்ச பூதங்களையும் படைத்தவன் எவனோ, அவனே இங்கே அக்னி
ஸ்வரூபமாக ப்ரத்யக்ஷமாக நிற்கிறான்!!

இதில் நம்முடைய பக்தியை விட, மஹான்களின் பரம கருணை, அவ்யாஜ கருணை ஒன்றினால் மட்டுமே இம்மாதிரி நடக்கும்.
 
மாதா பிதா பண்ணுவது மக்களைக் காக்கும் - மஹ&#300

மாதா பிதா பண்ணுவது மக்களைக் காக்கும் - மஹா பெரியவர்

உபநயனம் முதல் பண்ணப்படும் ஸம்ஸ்காரங்கள் ஒரு ஜீவனுக்கு அறிவு வந்த பின்பு ஏற்படுபவை. குழந்தையாக இருந்த ஜீவன் அறிவுடன் மந்திரம் சொல்லிப் பண்ணத் தொடங்கும் முதல் ஸம்ஸ்காரம்(கர்மா) உபநயனமே.

மாதா பிதாக்களிடத்தில் ஏதாவது பாப தோஷங்களிருந்தால் அவை அவர்களிடத்திலுண்டாகிற ஜீவன் எந்த மாதாவுடைய கர்ப்பத்தில் வாஸம் பண்ணுகிறதோ, எந்தப் பிதாவால் உண்டாகிறதோ அவர்களுடைய தோஷங்கள் அந்த ஜீவனுக்கு ஏற்படாமலிருப்பதற்காக ஸம்ஸ்காரங்கள் செய்யவேண்டும். மாதா பிதாக்களிடம் துர்க்குணங்கள் உண்டு. அவை அவர்களால் ஏற்படும் ஜீவன்களுக்கு உண்டாகாமலிருக்க ஸம்ஸ்காரங்கள் செய்ய வேண்டும். அந்த தோஷங்கள் (கர்ப்ப சம்பந்தமான) கார்ப்பிகம் என்றும் (பீஜ சம்பந்தமான) பைஜிகம் என்றும் இரண்டு தந்தையால் உண்டாவது. இந்த தோஷங்களின் நிவாரணத்திற்காக அதாவது கர்பாதானம் முதற்கொண்டு, பும்ஸுவனம், ஸீமந்தம்,நாமகரணம் உள்பட மற்றும் பின்னர் உபநயனம் வரையில் உள்ள சம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள். உபநயனம் வரையில் உள்ள ஸம்ஸ்காரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவைகளைச் செய்ய வேண்டியவர்கள் மாதா பிதாக்கள்.

உபநயனம் வரைக்கும் ஸம்ஸ்காரங்களைத் தானே செய்து கொள்ளப் புத்திரனுக்கு அர்ஹமான (தகுதியான) வயது வரவில்லை.

எந்த ஸம்ஸ்காரத்தையும் உரிய காலத்தில் பண்ண வேண்டும். அதனால் பாப பரிகாரம் ஏற்படுகிறது. பூர்வத்தில் வேறொரு காரியம் பண்ணிப் பாபம் ஸம்பாதித்திருக்கிறோம். அதை நீக்க மனம்-வாக்கு-காயங்களால் ஸம்ஸ்காரம் பண்ணவேண்டும்.

நாம், பாபம் அந்த மூன்று கரணங்களாலேயும் பண்ணியிருக்கிறோம். மனதால் கெட்ட எண்ணம் நினைத்திருக்கிறோம். வாக்கால் பொய் பேசியிருக்கிறோம்.தேஹத்தால் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுசாகப் பொய் பண்ணியிருக்கிறோம். அதாவது பல தினுஸாகப் பாசாங்கு பண்ணியிருக்கிறோம். மனோ-வாக்-காயங்களால் பண்ணிய பாபங்களை அவைகளாலேயே ஸத் காரியங்களைப் பண்ணிப் போக்கிக் கொள்ள வேண்டும். மனத்தினால் பரமேச்வரத் தியானம் பண்ணவேண்டும்;வாக்கினால் மந்திரம் சொல்ல வேண்டும்;காயத்தால் ஸத்காரியம் பண்ண வேண்டும். மனோ -வாக் - காயங்களால் தானாக ஒரு ஸம்ஸ்காரத்தைப் பண்ணும் பக்குவம் ஜீவனுக்கு உபநயனத்திலிருந்து ஏற்படுகிறது. இதுவரை தகப்பனார்தான் இவனுக்காக மந்திரம் சொல்லிப் பண்ணினார்.

இங்கே இன்னொரு விஷயமும் சொல்லவேண்டும். ஒரு ஜீவனை direct -ஆக (நேராக) உத்தேசித்தே அதன் பிதா பண்ணும் (கர்ப்பாதானம் முதற்கொண்டு சௌளம் [சௌளம் என்பது சத்கர்மா செய்வதற்கு வைக்கப்படும் சிகை - குடுமி] வரையிலான) கர்மாக்கள் மட்டுமின்றி, அந்தப் பிதாவாகப்பட்டவன் மற்ற எல்லா ஸம்ஸ்காரங்களையும் பண்ணி நல்ல அநுஷ்டாதாவாக இருப்பதும் indirect -ஆக (மறைமுகமாக) அவனுடைய புத்திரர்களுக்கு நல்லதை செய்கிறது. 'மாதா பிதா பண்ணுவது மக்களைக் காக்கும்'என்ற வார்த்தைப்படி இது மாதிரி நடக்கிறது. வைதிக பிராமண ஸந்ததிக்குஸமீப காலம் வரையில் புத்திப் பிரகாசம் அதிகம் இருந்து வந்ததற்கு ஒரு முக்ய காரணம், முன்னோர்கள் பண்ணிய ஸம்ஸ்காரங்களின் சக்திதான். முன்பு இருந்தவர்கள் செய்தது இரண்டு அல்லது மூன்று தலைமுறைக்கு அஸ்திவாரமாக இருக்கிறது. அந்த எல்லை தாண்டிப் போனால் அப்புறம் கஷ்டந்தான்.

இந்த ஸந்ததியில் பிறந்த குழந்தைகளே லௌகிகத்தில் பிரவேசித்தபின் அதிகமாகக் கீழே போய் விட்டார்கள். ரொம்பவும் கெட்டுப் போனார்கள். மடை அடைத்து வைத்ததைத் திறந்துவிட்டால் வெகு வேகமாக ஜலம் போகிற மாதிரி இவர்கள்தாம் கடுமையாக லௌகிகத்தில் இறங்கி விட்டார்கள்.

நம்முடைய பெற்றோர்கள் ஸம்ஸ்காரம் பண்ணவில்லை;அதனால் நமக்கு நன்மை உண்டாகவில்லை என்ற குறை நமக்கு இருக்கலாம். அதைப்போல நம்முடைய குழந்தைகள் குறை கூறாமல் நாம் நல்ல ஸம்ஸ்காரங்களைப் பண்ணவேண்டும். அவர்களுக்கும் பண்ணி வைக்க வேண்டும்


Guru's Blog: ???? ???? ???????? ???????? ???????? - ??? ????????
 
“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடு&

“எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறியே “


மகாபெரியவாளின் அத்யந்த பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர் வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர் மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர் இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம்.


பலவருடங்களுக்கு முன்னாள் மகானின் அருகே அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார் மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக் கொண்டு இருந்த நேரம். பக்தர்களின் வரிசை மெதுவாக நகர்ந்தது, அப்போது ஒரு பக்தர் கையில் ஒரு சிறிய பையுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார் அவரது முறை வந்தபோது மகானிடம் ஆசிபெற்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அவர் நகர முயற்சித்த போது பெரியவரின் குரல் அவரை நிறுத்தியது.”எனக்கு கொடுக்கணும்னு கொண்டுவந்ததை கொடுக்காம போறியே “.பக்தர் திடுக்கிட்டு நின்றார். அவரது கையில் இருந்த பையில் நெல்லிக்கனிகள் அவரது தோட்டத்தில் விளைந்த முதல் கனிகள் அவை மகானுக்கு கொடுக்கவே அவர் கொண்டு வந்தார்.”இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, திராட்சைன்னு பல பழங்கள் கொண்டு வந்து தரா நான் சாதாரண நெல்லிக்கனியை பகவானுக்கு தர்றதா அதனாலே தான் கொண்டு வந்ததை எடுத்துண்டு போறேன் …”.

ஒரு மூங்கில் தட்டை காண்பித்து “நீ கொண்டு வந்ததை எடுத்துவை” என்று மகான் உத்தரவிட பக்தர் தன் பையில் இருந்த நெல்லிக்கனிகளை எடுத்து தட்டில் பக்தியோடு வைத்தார்.


கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளுக்கு ஒரே வியப்பு பக்தர் நெல்லிக்கநிதான் கொண்டுவந்திருக்கிறார். என்று மகானுக்கு எப்படித் தெரியும்?


அன்று துவாதசி மகான் அக்கனியை விரும்பி ஏற்றுக் கொண்டதன் காரணம் இப்போது கனபாடிகளுக்கு புரிந்தது .


ஆதிசங்கரருக்கு ஒரு நெல்லிக்கனியைக் கொடுத்தபோது அவர் வாயிலிருந்து அப்போதே கனகதாரா ஸ்தோத்திரம் கிளம்பியது இப்போது இவ்வளவு கனிகளை மகானுக்கு சமர்பித்த அந்த பக்தர் எந்த அளவுக்கு உணர்ந்திருப்பார் என்று கனபாடிகள் வியந்தார்.


அண்மையில், மகான் நெல்லிக்கனி பெற்ற விவரத்தை கிருஷ்ணமூர்த்தி கனபாடிகள், சேலம் பெரியவா கிரகத்தைச் சேர்ந்த ராஜகோபாலிடம் சொன்னார். துவாதசியன்று நெல்லிக்கனியை உண்பது எவ்வளவு விசேடமானது என்பதை மகான் புரிய வைத்திருக்கிறார்.


இந்த நெல்லிக்கனி விஷயத்தில் மகான் இன்னொரு அற்புதத்தையும் சேலத்திலேயே நிகழ்த்தியிருக்கிறார். இங்கே பெரியவா கிரகத்தில் மகாபெரியவாளின் முதல் ஆராதனை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது .


இதர பூஜை புனஸ்காரங்கள் அன்னதானம் போன்றவை சாஸ்திரப்படி நடக்க மிகவும் விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் ஆராதனை என்பதால் யாரிடமும் எள்ளளவும் சுணக்கம் தென்படவில்லை.
அன்னதானம் செய்யும் போது பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லிக்காய் பச்சடி போன்றவை வழங்க வேண்டும் என்று தீர்மானித்து , நெல்லிக்கனியை தேடி சேலம் முழுதும் அலைந்தார்கள் ஆனால் முதல் நாளும் ஜெயந்தி அன்றும் எவ்வளவு தேடியும் யாருக்கும் கிடைக்கவில்லை. மிகவும் மனகிலேசம் அடைந்த ராஜகோபாலன் எல்லாம் பரிபூரணமாக இருக்க இந்த நெல்லிக்கனி விஷயத்தில் குறை ஏற்பட்டுவிட்டதே என்ற எண்னம் மேலோங்கியது. அதை அப்படியே விட்டு விட வேண்டியதுதான் என்று அநேகர் சாந்தமடைந்து விட்டனர்


பூஜைகள் ஆரம்பமாகி வேதியர்கள் அமர்ந்து முறைப்படி எல்லாமே நடைபெற்றுக் கொண்டிருந்தது
ஹால் நிறையக் கூட்டம்


அந்த நேரத்தில் பெரியவா கிரகத்தின் வாயிலில் ஒரு நபர் வந்து நின்றார்
அவரது கையில் ஒரு பை.


நான் “ராஜகோபால் மாமாவை பார்க்கவேண்டும்” என்றார் வந்தவர்
“அவர் பூஜை செய்யும் வேதியர்களுக்கு உதவிக்கொண்டிருக்கிறார் இப்போது அவர் இங்கு வர முடியாது” இந்த பதிலைக் கேட்டு வந்தவர் சற்று தயங்கினார்


“சரி இந்த பையை அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று தன் கையில் இருந்த பையை கொடுத்தார்

“யார் தந்ததாகச் சொல்வது?”


“சங்கரன்” என்று சொல்லுங்கள், பையைக் கொடுத்தவர் விறு விறு என்று வந்தவழியே சென்றுவிட்டார்
அவர் கொடுத்த பையில் நிறைய நெல்லிக்கனிகள் இருந்தன அங்கே இருந்தவர்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை.


இதில் முக்கியமான விஷயம் அந்த சங்கரன் யார் என்றே இன்றுவரை ராஜகோபாலுக்குத் தெரியாது
பக்தர்களின் மனக்குறையை மகான் எவ்வாறு பூர்த்தி செய்கிறார் என்பதற்கு இதைவிட சான்று தேவையா?
*******
Thanks a ton to Shri “Well Bred” Kannan who had posted this in Sage of Kanchi group in Facebook.



Sage of Kanchi
 
Sri Sankara’s Vivekachudamani By Acharya Pranipata Chaitanya

Sri Sankara’s Vivekachudamani By Acharya Pranipata Chaitanya (Tiruchengode Chinmaya Mission, Tamil Nadu, India)
Postings – 21


Advice for self-control (verse 136)

136 With a regulated mind and a purified intellect, directly realize your self as the essential Self. Identify yourself with the Self, and cross the shoreless ocean of worldy existence with its waves of births and deaths. Be fulfilled thusly by becoming firmly established in Brahman (which is your very own essence).

What is bondage? Its reply (verses 137-142)

137 Due to ignorance, a person identifies the Self with not-Self. This is the bondage and brings in its wake the miseries of birth and death. Through this, one considers the unreal body as real, identifies with it and nourishes, bathes and preserves it with the help of sense-objects. Thereby, one becomes bound like the silk-worm in its cocoon woven by its own threads.

138 Being deluded by ignorance, one mistakes a thing for what it is not. In the absence of discrimination, the snake is mistaken for a rope, and great danger befalls one who seizes it through this false notion. So listen, my friend, it is mistaking the not-Self for the Self (the unreal for the Real) that creates bondage.

139 The veiling power, whose nature is ignorance, covers the Self whose glories are infinite, which is Indivisible, Eternal, and One-without-a-second, just as Rahu* covers the sun during a solar eclipse.

*Rahu is considered as a `shadow planet‘ in Indian astrology. In Indian mythology, it is conceived as a demon who periodically swallows the sun or moon, causing eclipses.

140 When a person‘s own Self of purest splendor is hidden from direct experience, that person, due to ignorance, comes to falsely identify with the body which is the non-Self. Then the merciless persecution of rajas (projecting power), binds the person down with fetters of lust, anger etc.

141 A person of deluded mind, whose knowledge of Self has been swallowed by the shark of complete ignorance, behaves as though the different states of the intellect were the attributes of the Self, and drifts up and down, now rising and now sinking, on the ocean of change, which is full of the poison of sense-pleasures. What a miserable fate, indeed!

142 As the formations of clouds generated by the sun‘s rays come to veil the very same sun and appear clearly manifest in the sky, so too, the ego arisen from the Self covers the reality of the Self and expresses itself in full manifestation.



source: sage of Kanchi

Venkatesan Ramadurai
 
"ஐயங்கார் ஸ்வாமிகளே....சந்தோஷமா?"

"ஐயங்கார் ஸ்வாமிகளே....சந்தோஷமா?"

கொஞ்சம் பழைய சம்பவம் இது..காஞ்சி மடத்தில்
அந்த நாட்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை
அன்றும் தர்க்க சாஸ்திரக் கூட்டங்கள் நடக்கும்.
'சதஸ்' என்பார்கள்.இது போன்ற நாட்களில் மடமே
களை கட்டி இருக்கும். விழாக் கோலம் பூண்டிருக்கும்.
வேத முழக்கங்கள் காதில் தேனாகப் பாயும்.

மகா பெரியவாள் நடு நாயகமாக கம்பீரமான ஓர்
ஆசனத்தில் அமர்ந்திருக்க, பெரிய பெரிய
பண்டிதர்கள்,வித்வான்கள் போட்டி போட்டுக் கொண்டு
இந்த சதஸில் கலந்து கொள்வார்கள்.அவர்களின்
முகத்தில் தென்படும் தேஜஸைப் பார்த்த மாத்திரத்திலேயே
அவர்கள் கற்ற வித்தையைக் கண் கொண்டு உணர முடியும்.
ஆன்மிகம்,ஆகமம்,சாஸ்திரம்,சம்பிரதாயம் என்று பல
தலைப்புகளுடன் விவாதங்கள் ஆதாரபூர்வமாக அனல்
பறக்கும் வாதங்கள் பூதாகரமாகக் கிளம்புகின்ற
சந்தர்ப்பங்களில் பெரியவா இன்முகத்துடன் தலையிட்டு
அதற்கு ஒரு தீர்ப்பைச் சொல்லி முடித்து வைப்பார்.
பண்டிதர்கள் சமாதானம் ஆவார்கள்.

இந்த விவாதங்களில் கலந்து கொள்ளும் பண்டிதர்களுக்கு
கலைமகளின் ஆசி நிரம்பவே உண்டு. ஆனால் அலைமகளின்
ஆதரவு கொஞ்சமும் இருக்காது. அதாவது படிப்பு விஷயத்தில்
ஜாம்பவான்கள்; ஆனால் லௌகீக விஷயத்தில் பெரும்பாலும்
கஷ்டப்படுபவர்கள். எனவே, இதில் கலந்து கொள்ள வருகிற
அனைவருக்கும்-வயது வித்தியாசம் பாராமல் தலா நூறு ரூபாய்
சன்மானமாகக் கொடுக்கும் வழக்கத்தை ஒரு முறை பெரியவாளே
ஆரம்பித்து வைத்திருந்தார்.

அது ஒரு வெள்ளிக்கிழமை....வழக்கம் போல பண்டிதர்கள் பலரும்
காஞ்சி மடத்தில் உற்சாகமாகக் கூடி இருந்தனர். இதில் கலந்து
கொள்கிற பண்டிதர்கள் விஷயத்தில் சைவம்,வைணவம் என்கிற
பேதம் எப்போதும் இருக்காது. மகா பெரியவர் உட்கார்ந்திருக்கும்
சதஸ் மண்டபத்தில் தாங்களெல்லாம் கலந்து கொண்டு பேசுவதையே
பெரும் பேறாக எண்ணினார்கள் அவர்கள்.

சின்ன காஞ்சிபுரத்தில் இருந்து ஒரு வைணவ பண்டிதரும் இந்தக்
கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்திருந்தார். அன்றைய விவாதங்கள்
வெகு விறுவிறுப்பாகப் போய் முடிந்தது. கூட்டம் முடிந்த பிறகு
பெரியவா முன்னிலையில் மடத்து உயர் அதிகாரிகள்,பண்டிதர்கள்
ஒவ்வொருவருக்கும் சம்பாவனை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அனைவரும் சம்பாவனையை வாங்கிக் கொண்டு,பாதார விந்தங்களுக்கு
நமஸ்காரம் செய்து விட்டுப் புறப்பட்டு போய்க்கொண்டிருந்தார்கள்.

சின்ன காஞ்சிபுரத்து வைணவ பண்டிதரின் முறை வந்தது.
மகா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு சம்பாவனையைப்
பெற்றுக் கொண்டார்.முழு நூறு ரூபாய் நோட்டை சம்பாவனையாகப்
பெற்றவரின் முகத்தில் ஏனோ மலர்ச்சி இல்லை. மாறாக வாட்டம்
தெரிந்தது. காரணம்-அவருக்கு முன்னால் சம்பாவனை வாங்கியவன்-
சிறு வயது பாலகன் ஒருவன். "அவனுக்கும் நூறு ரூபாய்....எனக்கும்
நூறு ரூபாய்தானா?" என்கிற வாட்டம்தான் அது.

பரப்பிரம்மம் இதை எல்லாம் அறியாமல் இருக்குமா?
"என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே...திருப்திதானே என்று கேட்டு வைத்தார்.

தன்னுடைய இயலாமையைப் பெரியவாளுக்கு முன் காட்டக் கூடாது
என்கிற சபை நாகரிகம் கருதி,உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல்
"சந்தோஷம் பெரியவா..நான் புறப்படுகிறேன்" என்று தான் கொண்டு
வந்திருந்த மஞ்சள் பையைச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொண்டு
வெளியேறினார்.

உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்டது அந்த பரப்பிரம்மம். வேதம்
கற்ற ஒரு பிராமணன்,மனம் வருந்திச் செல்வதை அவ்வளவு
சுலபத்தில் விட்டு விடுமா அந்தப் பரப்பிரம்மம்.

"சதஸில் கலந்து கொண்ட அனைத்து பண்டிதர்களுக்கும்
சம்பாவனை கொடுத்து முடித்தாயிற்று" என்று ஓர் உயர் அதிகாரி
மகானின் காதில் சென்று பவ்யமாகச் சொன்னார். "சரி...தரிசனத்துக்கு
வர்றவாளை வரச் சொல்லுங்கோ, பாவம், ரொம்ப நேரம் வெயிட் பண்றா"
என்று உத்தரவிட்டார் மகா பெரியவா.

முதலில், சென்னையில் இருந்து வந்திருந்த வக்கீல் ஒருவர்
குடும்பத்தினருடன் முன்னால் நின்றார். இரண்டு மூன்று பெரிய
மூங்கில் தட்டுகளில் பல வகையான கனிகள்,புஷ்பங்கள்,கல்கண்டு
முந்திரி,திராட்சை என்று ஏகத்துக்கும் நிரப்பிக் கொண்டு வந்திருந்தார்.
பெரியவாளின் திருவடி முன் அந்த மூங்கில் தட்டுகளை வைத்து விட்டு
குடும்பத்தினருடன் விழுந்து நமஸ்கரித்தார். கையோடு தான் கொண்டு
வந்திருந்த ஒரு ருத்திராட்ச மாலையைப் பெரியவாளின் திருக்கரங்களில்
கொடுத்து விட்டு,ஆசிர்வாதத்துடன் திரும்பத் தருமாறு வேண்டினார்.
பரப்பிரம்மமும் அதைத் தன் கையால் தொட்டு ஆசிர்வதித்து,ஒரு சின்ன
பூக்கிள்ளலுடன் திரும்பக் கொடுத்தார்.

உடல் வளைந்து,முகம் மலர- சாட்சாத் அந்த மகேஸ்வரனிடம் இருந்தே
ருத்திராட்ச மாலையை வாங்கிக் கொள்ளும் பாவனையில் பெற்றுக் கொண்ட
வக்கீலின் முகம் ஏகத்துக்கும் பிரகாசமாகியது.பிறகு, "பெரியவா........
ஒரு விண்ணப்பம்..." என்று இழுத்தார் வக்கீல்

"சித்த இருங்கோ..." என்று அவரிடம் சொன்ன பெரியவா, பார்வையை
வேறு பக்கம் திருப்பி.கொஞ்சம் தள்ளி நின்றிருந்த ஒரு சிஷ்யனை
சைகை காட்டி அழைத்தார்.

அந்த சிஷ்யன் வேகவேகமாக வந்து பெரியவாளின் முன் வாய் பொத்தி
பவ்யமாக நின்றான். அவர் சொல்லப் போகும் உத்தரவுக்காகக்
காத்திருந்தான். "சின்னக் காஞ்சிபுரத்துலேர்ந்து இப்ப வந்துட்டுப்
போனாரே, ஒரு அய்யங்கார் ஸ்வாமிகள்.....நீதான் பார்த்திருப்பியே..
அவர் வெளியேதான் இருப்பார்..இல்லேன்னா மண்டபம் பஸ் ஸ்டாண்டுல
பாரு..பஸ்ஸுல உக்காந்துண்டிருப்பார். போய் நான் கூப்பிட்டேன்னு
சட்டுன்னு அழைச்சிண்டு வா" என்றார்.

உத்தரவு வந்த அடுத்த நிமிடம் றெக்கை கட்டிப் பறந்தான் அந்த
சிஷ்யன்.மடத்து வாசலில் பரபரவென்று தேடினான். ஐயங்கார்
ஸ்வாமிகள் சிக்கவில்லை. அடுத்து,பெரியவா சொன்னபடி
கங்கைகொண்டான் மண்டபத்து பஸ் ஸ்டாண்டுக்கு வந்தான்.
அங்கே சின்ன காஞ்சிபுரம் செல்வதற்கு தயாராக பஸ் நின்றிருந்தது.
நடத்துனர் டிக்கெட்டுகளை விநியோகித்துக் கொண்டிருந்தார்.
விறுவிறுவென்று அதில் ஏறிப் பயணிகளைப் பார்வையால்
துழாவினான்.ஜன்னலோரத்து இருக்கை ஒன்றில் அந்த ஐயங்கார்
ஸ்வாமிகள் சிஷ்யனது பார்வை வளையத்துக்குள் சிக்கி விட்டார்.
அவர் அருகே போய், "பெரியவா உங்களை உடனே கூட்டிண்டு
வரச் சொன்னார்" என்றான். இதைச் சற்றும் எதிர்பாராத ஐயங்கார்
ஸ்வாமிகள்,விஷயம் என்ன ஏதென்று உணராமல், "அம்பீ.....
முப்பது காசு கொடுத்து சின்ன காஞ்சிபுரத்துக்கு டிக்கெட்
வாங்கிட்டேன். நான் இப்ப இறங்கி வந்தா முப்பது காசு வீணாகிப்
பொயிடுமேடா" என்றார்.

சிஷ்யனுக்கு சுரீரென்று கோபம் வந்தது, "அது என்னமோ தெரியல..
உங்களை உடனே கூட்டிண்டு வரணும்னு பெரியவா எனக்கு
உத்தரவு போட்டிருக்கா.அவா உத்தரவை என்னால மீற முடியாது.
அந்த முப்பது காசு டிக்கெட்டைக் கிழிச்சுப் போடுங்கோ..கையோட
உங்களுக்கு முப்பது காசு நான் தர்றேன்" என்று அடமாகிப் பேசிக்
கொண்டிருப்பதைப் பார்த்தார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

நடந்து கொண்டிருக்கும் சம்பாஷணையைக் கவனித்த நடத்துனரே
"ஐயரே [ஐயங்காரே]... அந்த டிக்கெட்டை என்கிட்ட கொடு.முப்பது
காசு நான் தர்றேன். மடத்து சாமீ கூப்பிடுதுன்னு தம்பி எவ்ளோ
அடம் பண்றான். ஏதாச்சும் முக்கிய விஷயமாத்தான் இருக்கும்.
போய்ப் பாரேன்.

அவனவன் தவம் இருந்து அவரைப்
பாக்கறதுக்காக எங்கிருந்தோ வர்றான். கூப்பிட்டா போவியா?"
என்று சிடுசிடுவென்று சொல்ல....வேஷ்டியில் சுருட்டு
வைத்திருந்த கசங்கலான டிக்கெட்டை நடத்துநரிடம் கொடுத்து
விட்டு, முப்பது காசு வாங்கிக் கொண்டுதான் கீழே இறங்கினார்
ஐயங்கார் ஸ்வாமிகள்.

மகா பெரியவாளின் உத்தரவைப் பூர்த்தி செய்து விட்ட தோரணையில்
மடத்துக்குள் கம்பீரமாக ஐயங்கார் ஸ்வாமிகளுடன் நுழைந்தான்
சுறுசுறுப்பான அந்த சிஷ்யன்.அதற்குள் பெரியவாளைச் சுற்றி
ஏகத்துக்கும் கூட்டம் சேர்ந்திருந்தது. உள்ளே நிழையும்
இந்த இருவரையும் தன் இடத்தில் இருந்தே பார்த்து விட்டார்,
ஸ்வாமிகள். அங்கே நெருங்கியதும் பவ்யமாக வாய் பொத்தி
நின்றார் சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்.

"என்ன ஐயங்கார் ஸ்வாமிகளே...கண்டக்டர் கிட்டேர்ந்து
முப்பது காசு வாங்காம பஸ்ஸை விட்டு நீர் இறங்க
மாட்டீராக்கும்?" என்று கேட்டு பவ்யமாக சிரித்தபோது
ஐய்யங்கார் ஸ்வாமிகள் அதிர்ந்து விட்டார்.சிஷ்யன்
சாதுவாக இருந்தான். அவன் இது மாதிரி அனுபவங்களை
ச்சந்தித்திருக்கிறான் போலிருக்கிறது. இவர்களைச் சுற்றி
இந்த சம்பாஷணையின் விவரம் புரியவில்லை.

சென்னை வக்கீல் ஆசாமி இன்னமும் மகா பெரியவா
முன்னாலேயே வாய் பொத்தி அமர்ந்திருந்தார். திடீரென
"பெரியவா...ஒரு விண்ணப்பம்.." என்று முன்பு ஆரம்பித்த
மாதிரியே மீண்டும் தொடர்ந்தார்.

"சித்த இருங்கோ...உங்க விஷயத்துக்குத்தான் வர்றேன்.."
என்ற ஸ்வாமிகள் ஐயங்காரை வக்கீலுக்கு அருகே
உட்காரச் சொன்னார். அமர்ந்தார். ; பிறகு "வக்கீல் சார்
இவரோட அட்ரஸைக் கேட்டுக் கொஞ்சம் தெளிவா
குறிச்சுக்கோங்கோ" என்றார் காஞ்சி மகான்.

இவருடைய அட்ரஸை நான் ஏன் குரித்துக் கொள்ள
வேண்டும்? என்று விவரம் ஏதும் கேட்காமல்,கைவசம்
இருந்த குறிப்பேட்டில், ஐயங்கார் ஸ்வாமிகள் அவரது
விலாசத்தைச் சொல்ல சொல்ல ..தன்வசம் இருந்த
குறிப்பேட்டில் தெளிவாகக் குறித்துக் கோன்டார் வக்கீல்.

"நீர் புறப்படும் ஐயங்கார் ஸ்வாமிகளே...அடுத்த பஸ்
மண்டபம் ஸ்டாண்டுக்கு வந்துடுத்து.அந்த கண்டக்டர்
ரிடர்ன் பண்ண அதே முப்பது காசுலயே இப்ப வேற
டிக்கெட் வாங்கிடுங்கோ" என்று சொல்லி, அந்த மண்டபமே
அதிரும் வண்ணம் பலமாகச் சிரித்தார் ஸ்வாமிகள்.

ஐயங்கார் ஸ்வாமிகள் குழம்பி விட்டார். "முப்பது காசுக்கு
இந்த சிஷ்யன்கிட்ட நான் தகராறு பண்ணது இவருக்கு
எப்படித் தெரியும்?" என்கிற சந்தேகம் ஒரு பக்கம்
இருந்தாலும், எதற்காக அந்தப் புது மனிதரிடம் [வக்கீல்]
என் விலாசத்தைச் சொல்லச் சொன்னார்? யார் அவர்?
அவர் வீட்டில் நடக்கப் போகிற கல்யாணம் எதுக்காவது
எனக்குப் பத்திரிகை அனுப்பப் போகிறாரா? எதுவும் புரிய
மாட்டேங்குதே?" என்று குழம்பி தவித்தபடி மடத்தை
விட்டு வெளியே வந்து மண்டபம் பஸ் ஸ்டாண்டை அடந்தார்.

பெரியவா சொன்ன மாதிரியே அடுத்து ஒரு பஸ் இவருக்காகக்
காத்திருந்தது மாதிரி புறப்படும் நிலையில் காணப்பட்டது.
விறுவிறுவென்று ஏறி, காலியாக இருந்த ஜன்னல் ஓரத்து
இருக்கை ஒன்றில் அமர்ந்தார்.

ஐயங்கார் ஸ்வாமிகள் பத்திரமாக சின்ன காஞ்சிபுரம்
போகட்டும். நாம் மடத்துக்குள் மீண்டும் போவோம்.

சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள் விலாசத்தைக்
குறித்துக் கொள்ளுமாறு வக்கீலிடம் ஏன் சொன்னார்
காஞ்சி ஸ்வாமிகள்.

விஷயத்துக்கு வருவோம். சின்ன காஞ்சிபுரத்து ஐயங்கார்
ஸ்வாமிகளின் முகவரியை மகா பெரியவர் சொன்னபடி
தன்னிடம் இருந்த குறிப்பேட்டில் குறித்துக் கொண்ட
சென்னை வக்கீல், "பெரியவா...ஒரு விண்ணப்பம்......
நானும் இதோட மூணு முறை இந்தப் பேச்சை
ஆரம்பிச்சுட்டேன் ..." என்று தொய்வான குரலில் இழுத்தார்.

"உன்னோட விண்ணப்பம்தாம்ப்பா இப்ப பூர்த்தி
ஆயிண்டிருக்கு.அதான் முடிஞ்சுடுத்தே."

"இல்லே பெரியவா...என்னோட விண்ணப்பத்தை நான்
இன்னும் சொல்லவே ஆரம்பிக்கலியே...".என்று
தயங்கினார் வக்கீல்.

"உன்னோட விண்ணப்பம் என்ன.... கஷ்டப்படற- வேதம்
படிச்ச ஒரு பிராமணனுக்கு மாசா மாசம் ஏதேனும் பணம்
அனுப்பணும்னு ஆசைப்படறே...அதானே?" என்று புருவத்தைச்
சுருக்கிக் கேட்டது அந்தப் பரப்பிரம்மம்.

வக்கீலுக்குப் பேச்சு எழவில்லை."ஆமாமாம் பெரியவா....
அதேதான்...அதேதான்!"

இப்ப குறிச்சிண்டியே ஒரு அட்ரஸ், அதாம்ப்பா சின்ன
காஞ்சிபுரத்து ஐயங்கார் ஸ்வாமிகள்....நீ தேடற ஆள்
அவர்தான். அதான் பஸ்லேர்ந்து அவரை எறக்கிக்
கூட்டிண்டு வந்துட்டானே அந்தப் பொடியன்?
இப்ப என்ன பண்றே..."-பெரியவா இடைவெளி விட்டார்.

"பெரியவா சொல்லணும்...நான் கேட்டுக்கணும்...."-
வக்கீல் வாய் பொத்தி பவ்யமாக, அந்த மகானின்
திருமுகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

"இந்த மாசத்துலேர்ந்து ஒரு இருநூத்தம்பது ரூபாயை
அந்த ஐயங்கார் ஸ்வாமிகள் அட்ரஸுக்கு மணி ஆர்டர்
பண்ணிடு.ஒரு மாசம் கூட தவறப்படாது. ஏன்னா நாலு
மாசம் வந்துட்டு,அஞ்சாவது மாசம் பணம் வரலேன்னா,
ஐயங்கார் ஸ்வாமிகள் என்னண்ட வந்துட்டு, "சும்மா
மடத்துப் பக்கம் வந்தேன் பெரியவா"னு சொல்லித்
தலையை சொறிஞ்சிண்டிருப்பார். பாவம்,நல்ல மனுஷன்
காசுக்குக் கொஞ்சம் கஷ்டப்படுகிறார். அவ்ளோதான்."

"பெர்யவா உத்தரவுப்படி தொடர்ந்து அவருக்குப் பணம்
அனுப்பிடறேன்" என்று சொன்ன சென்னை வக்கீல் குடும்ப
சமேதராக மீண்டும் பெரியவாளின் திருப்பாதங்களில் விழுந்து
வணங்கினார். உத்தரவு பெற்றுக் கொண்டு புறப்பட்டார்.

இதை அடுத்து வந்த சில மாதங்களுக்கு ஐயங்கார்
ஸ்வாமிகளுக்கு மணி ஆர்டர் சரியாக வந்து சேர்கிறதா என்று
மடத்து ஊழியர்களை விட்டுப் பார்க்கச் சொல்லி திருப்தி
அடைந்தார் அந்த மகான்.



???? ???????? ???????????????????????? « Sage of Kanchi
 
Maha Periyava Used Rickshaw

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பயன் படுத்திய சைக்கிள் ரிக்ஸா


10432482_706185636109757_35990538152139478_n.jpg




Source : Sage of Kanchi

Hari Haran
 
பாவம் தீர தியானம் செய்யுங்க!

பாவம் தீர தியானம் செய்யுங்க!


* மனம் தூய்மையாகவும், முன்வினைப் பாவங்கள் நீங்கவும், யாருக்கும் பழிபாவங்கள் செய்யாமல் இருக்கவும் வீட்டில் உள்ள அனைவரும் தியானத்தை காலையில் முறையாகச் செய்ய வேண்டும்.

* செல்வத்தில் திளைத்தாலும், வறுமையில் தவித்தாலும், துன்பத்தில் துவண்டாலும், போகங்களில் சுகித்திருந்தாலும், ஆரோக்கியம் இருந்தாலும், வியாதியில் அவதிப்பட்டாலும் தினமும் தியானம் செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

* குழந்தைப் பருவத்திலிருந்தே தியானத்தை பழகினால், மனம் பாவங்களில் ஈடுபடாமல் நல்ல விஷயங்களை நாடும் நிலை உண்டாகும். இதுவரை அநாவசியமாக எவ்வளவோ காலத்தை நாம் வீணடித்திருக்கிறோம். அதனால், தியானம் செய்வதை அன்றாட வாழ்வின் அடிப்படை கடமையாகக் கொள்ள வேண்டும்.

* வாக்கினாலும், மனத்தினாலும், கை, கால் முதலியவற்றாலும் பலருக்கும் தீமை செய்திருக்கிறோம். அந்தப் பாவங்களை எல்லாம் அதே வாக்காலும், மனதாலும், கை, கால் முதலியன கொண்டே புண்ணியம் செய்து கரைத்துவிடும் நல்லெண்ணத்தை தியானத்தால் மட்டுமே பெற முடியும்.


-காஞ்சிப்பெரியவர்


Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy
 
குடி" மகன்களை திருத்திய பெரியவா.

குடி" மகன்களை திருத்திய பெரியவா.

சிவாஸ்தானத்தில் பெரியவா தங்கியிருந்தபோது, காட்டுப்புத்தூரை சேர்ந்த ஒரு பெரிய பணக்காரர் தர்சனம் பண்ண வந்தார். அவர் கொண்டு வந்த காணிக்கை என்ன தெரியுமா? ரெண்டு ரஸ்தாளி வாழைப்பழத்தார்கள். ஒவ்வொன்றிலும் பத்து,பன்னெண்டு சீப்புகள் இருக்கும். ஒரு தாரையே ரெண்டு பேர் சுமக்க வேண்டியிருந்தது. அத்தனை பெரிய பழங்கள்! சீப்பு…… கனம் என்பதால் மட்டும் இல்லை, பெரியவாளுக்கு சமர்ப்பிக்கும்போது, பழங்கள் நசுங்காமல் இருக்கவே ரெண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்தனர்.அன்போடு தன்னைக் காண வந்த பக்தருக்கு பிரசாதம் கொடுத்து அனுப்பிவிட்டு, சிஷ்யரைக் கூப்பிட்டார்.

“டேய்! அந்த ரெண்டு தார்களையும் ஜாக்ரதையா எடுத்து உள்ள வை ! பழத்த பாத்தியோ ! எவ்வளவு மொழு மொழுன்னு இருக்கு!……..ஒரு பழம் சாப்ட்டாலே போறும் போலருக்கு. சாப்பாடே தேவையில்லே!….நாலு நாளைக்கு ஒங்களுக்கெல்லாம் கவலையே இல்லே!”

ம்ஹும் ! இது வெறும் சிஷ்யாளோட கல்பனை. ஏனென்றால் பெரியவா இந்த மாதிரி உத்தரவிடவில்லை……….மாறாக,

“டேய்! இந்தா…….இந்த ரெண்டு தாரையும் கொண்டு போய், வாசல்ல ஒரு பெரிய புளியமரம் இருக்கோல்லியோ?……..அதோட கெளைல [கிளை] கைக்கு எட்டறா…ப்ல கட்டி தொங்க விடுங்கோடா !” என்று சொன்னார்.

அந்யாயம்! அக்ரமம்!…பெரியவா இப்பிடி எல்லாம் எங்களுக்கு அநீதி இழைக்கக் கூடாது! நாங்கள் இதை பலமாக கண்டிக்கிறோம்……என்றெல்லாம் வாயால் சொல்லவே முடியாது என்பது மட்டுமில்லை………..மனசால் கூட நினைக்க முடியாது.

சிவாஸ்தானம்-தேனம்பாக்கம் பகுதியை சேர்ந்த மக்கள் வறுமைக் கோட்டுக்கும் கீழே வாடுபவர்கள். பொறுப்பில்லாத ஆண் ‘குடி’ மக்கள் நன்றாக குடித்து விட்டு, பசியோடு வீட்டுக்கு போய் அங்குள்ள பெண்கள், குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள். இது அன்றாடம் வாடிக்கையாக நடப்பது! நம்முடைய கருணைக் கடலுக்கு இது தெரியாதா? ஏழை பங்காளன் இல்லையா?வாழைத்தார் கட்டின அன்று இரவு அவ்வழியாக குடித்துவிட்டு வீட்டுக்கு போனவர்கள், வாழைதாரிலிருந்து பழத்தை பிய்த்து சாப்பிட்டுவிட்டு போனார்கள். பெரியவா ‘ப்ளான்’ படி, பசி வெகுவாக அடங்கியதால், வீட்டில் உள்ள பெண்களும், குழந்தைகளும் அடியிலிருந்து தப்பித்தனர். [பெரியவாளுக்கு தெரியாத சூக்ஷ்மமா?]

மறுநாள், நிரந்தர உத்தரவு வந்தது………….”மடத்துக்கு வர்றவா குடுக்கற பழத்தையெல்லாம் புளியமரத்ல தொங்க விடுங்கோ !” அதிலிருந்து புளிய மரத்தில் தினமும் வாழைப்பழம் !!

சுமார் பதினைந்து நாட்களுக்குப்பின், அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர் ஒருவர் வந்தார்………”ஸாமி, இப்போ ரொம்ப ஆளுங்க திருந்திட்டாங்க. ‘தண்ணி’ போடறதையே நிறுத்திட்டாங்க ஸாமி! குடிசைல பொம்பளைங்க, கொளந்தைங்க எல்லாம் இப்போ சந்தோஷமா இருக்காங்க ஸாமி!…” வணங்கினார்.

மாற்றத்துக்கு காரணம்…………வாழைப்பழமா? இல்லை. ஞானப்பழமாக பூமியில் உதித்த பெரியவாளின் பெரும் கருணை மட்டுமே இது!பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்த பெரியவா, பழங்களில் [பழம்+கள்] உள்ள ‘கள்ளை’ ஒழித்து, பழத்தை மட்டும் தன் குழந்தைகளுக்கு ஊட்டினார்.


Source: Sage of Kanchi

Varagooran Narayanan
 
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

சிலந்தி தன் வாயாலே வலைபின்னி, வேண்டாமென்கிறப்போ தானே அதைத் தின்னுடறது. பகவானும் இந்த லோகத்தைப் படைக்கிறார். கல்பம் முடிஞ்சதும் தனக்குள்ளே ஐக்கியமாக்கிக்கிறார். நாம எத்தனை முறை அழிச்சாலும் சிலந்தி வலை பின்னிடும். அது மாதிரி எத்தனையோ இடைஞ்சல் வரும். ஆனாலும் கர்மாக்களை விடப்படாது. முயற்சி செய்யாதவனுக்கு விதி நன்னாயிருந்தாக்கூட பகவான் ஒத்தாசை பண்றதில்லே!

சமுதாயத்தில், ஒரு ஸ்திரத்தன்மை இருந்தால் தான், நிச்சிந்தையான நிம்மதியான தத்துவம், கலை, அறிவு நூல்கள் வளர்ந்தோங்க முடியும்.நாம் இந்த தேசத்தில் பயம் இல்லாத பிரஜைகளாகத் தலையை நிமிர்த்தி நடக்கவேண்டுமானால், பிறரைத் தீமையிலிருந்து காக்கும் சூத்ர தர்மத்தை விருத்தி செய்ய வேண்டும்.

மனசு எதைத் தீவிரமாக இடைவிடாமல் நினைக்கிறதோ, அதுவாகவே மாறிவிடுகிறது.

Source:Sage of Kanchi
 
Last edited:
குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே.உன் பைய&

குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே.உன் பையன்தான்."


அந்த அன்பருக்கு திருச்சி ரயில்வே அலுவலகத்தில் பணி, இரண்டு பையன்கள்,ஒரு பெண்.


மகா சுவாமிகளிடம் அபார பக்தி. பெரியவாள் எங்கே முகாமிட்டிருந்தாலும் வருடத்துக்கு நாலைந்து முறைகள், குடும்பத்தோடு தரிசனத்துக்கு வருவார். மின்னல் வேக தரிசனம் இல்லை.ஓரிரு நாள்கள் தங்கி பெரியவாளின் நெருக்கத்தை நிதானமாக அனுபவித்து விட்டுத்தான் போவார்.


"இந்தப் பையனுக்கு ஒன்பது வயதாயிடுத்து, உபநயனம் நடத்தணும்" என்று பெரியவாளிடம் விக்ஞாபித்துக் கொண்டார், ஒரு முறை. "செய்யேன்..."

"பையனின் கோத்திரம்...சூத்திரம் தெரியல்லே..." பெரியவாள் நிமிர்ந்து பார்த்தார்கள். "உன்னோட....பையன்தானே?" இல்லை! பையனின் கர்ப்பவாச காலத்திலேயே தகப்பனார் சிவலோகம் போய்ச் சேர்ந்தார். இரண்டு மாதக் குழந்தையை விட்டு விட்டு தாயாரும் போய்ச் சேர்ந்து விட்டாள்.கிராமத்தில் குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை யார் ஏற்பார்கள்?" "நாங்கள் குழந்தையை எடுதுண்டு வந்தோம்.ஊர்,பெயர்,பந்து, ஜனங்கள் தெரியலை,திருநெல்வேலி பக்கம் ஏதோ அக்ரஹாரம் என்று மட்டும் கேள்வி..."


பெரியவாள் முகத்தில் அசாதாரணமான புன்னகை. அருகிலிருந்த தொண்டர் கண்ணனிடம், "பாரு....ஓர் அநாதைக் குழந்தையை எடுத்துண்டு வந்து,வளர்த்து, பூணூல் போடப் போறார்! என்ன மனஸ் இவருக்கு.." கண்ணன் சொன்னார்: "அவரோட..சொந்தப் பிள்ளைனுதான் நாங்களும் நினைத்துக் கொண்டிருன்ந்தோம்!"


பெரியவாள் மனசுக்குள்ளே ஆனந்தப்பட்டுக் கொண்டு சொன்னார்கள்"
"கோத்திரம் தெரியாவதர்களுக்கு,காசியப கோத்திரம்;
ஸூத்திரம் தெரியாதவர்களுக்கு,போதாயன ஸூத்திரம்
என்று கேள்விப்பட்டிருக்கேன்.

அது மாதிரி சொல்லி, பூணூல் போடு,ஆனா,குழந்தையை அந்நியமா நினைச்சுடாதே.உன் பையன்தான்." பிரசாதம் பெற்றுக்கொண்டு மன நிறைவுடன் நகர்ந்தார்கள்.



Kanchi Maha Periavaa- My Guru: September 2012
 
கனகல் மருத்துவம் – Cancer Cure

கனகல் மருத்துவம் – Cancer Cure

Thanks to Shri Suresh Panchanathan for this article.

இருபது வருஷங்களுக்கு முன்பு நடந்த சம்பவம்.



ஈச்சங்குடி கணேசய்யர் என்பவர் பெரியவாளிடம் நிரம்பவும் பக்தி பூண்டவர். அவருடைய மனைவிக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட்டாள். டாக்டர்கள் அந்த அம்மாளுக்கு ஆபரேஷன் செய்துதான் ஆக வேண்டும். இல்லாவிட்டால், பிழைப்பது அரிது என்று சொல்லிவிட்டார்கள்.
பெரியவாளிடம் வந்து பிரார்த்தித்தார், கணேசய்யர்.



‘ஆபரேஷன் வேண்டாம். திருத்துறைப்பூண்டிக்குப் பக்கத்திலே திருநெல்லிக் காவல்என்று ஒரு ரயில்வே ஸ்டேஷன் இருக்கு. அந்த ஸ்டேஷனில் இறங்கி ஒரு கிலோமீட்டர் மேற்கே போனால், ஒரு வாய்க்கால் வரும். அதன் கரையில், கனகல் என்று ஒரு மரம் இருக்கு. அதன் இலைக்காம்பை சாப்பிடச் சொல், கான்ஸர் குணமாகிவிடும்’ என்றார்கள் பெரியவா.


அதன்படி அந்த அம்மாள், அந்த மரத்தின் இலையின் காம்பை மென்று தின்று வந்தாள். சில நாட்களில் நோய் மறைந்தேவிட்டது.



(துரதிருஷ்டவசமாக, அந்தக் கனகல் மரம் சமீபத்தில் பட்டுப் போவிட்டது)”
- ஸ்ரீ மடம் பாலு

- வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ என்ற நூலிலிருந்து தொகுத்துத் தந்தவர் : த.கி.நீலகண்டன்

2014 May 23 « Sage of Kanchi
 
அலகிலா விளையாட்டுடையான்

அலகிலா விளையாட்டுடையான்

ஒரு சமயம் மாத ஜெயந்தியாகிய அனுஷத்தன்று சேலத்தில் இருக்கும் திரு.ரவிச்சந்திரனின் பெற்றோர், தங்கள் மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்து புடவை, திருமாங்கல்யம் முதலிய மங்களப் பொருள்களுடன் பெரியவாளிடம் அனுக்ரஹம் பெற்றுச் செல்ல வந்தனர். வந்தவர்கள் நேராக ப்ரதோஷம் மாமா இல்லம் சென்று மாத ஜெயந்தி வைபவத்தில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். இரவு 9 மணிக்குத்தான் ப்ரதோஷம் மாமாவிற்கு ரவியின் பெற்றோர் வந்த காரிய விவரம் தெரியவந்தது. இரவு நேரமாகி விட்டதால் அவர்கள் தயங்குவதை உணர்ந்த மாமா 'பரவாய்யில்லை, உடனே ஸ்ரீமடம் சென்று, திருமாங்கல்யத்தை வைத்து அருள் பெறுங்கள். பெரியவாளின் அனுக்கிரஹம் கிடைக்கும்" என்று சொல்ல ரவியின் பெற்றோர் தயங்கியபடி ஸ்ரீமடம் வந்தனர்.

நேரம் ஆகிவிட்டபடியால் மடமே அமைதியாய் இருந்தது. அனைவரும் உறங்கி விட்டனர். செய்வதறியாது நின்ற ரவியின் பெற்றோரை திடீரென்று பாலு என்ற அன்பர் 'என்ன பிள்ளைக்கு கல்யாணமா"? என்று விசாரித்து அவர்களை உள்ளே அழைத்துச் சென்று சயனத்திலிருந்த மஹா ப்ரபுவிடம் மெல்லிய குரலில் தகவல் சொன்னார். உடனே எழுந்த கருணாமூர்த்தி அவர்களை அழைத்து அருள் ஒழுக கடாட்சித்து திருமாங்கல்யத்தை வாங்கி மடியில் வைத்துக் கொண்டார். அந்த அகாலத்திலும் அதிசயமாய் ஸ்ரீ காமாட்சி அம்பாளின் குங்கும ப்ரசாதம் வர, அன்னையின் அருட் ப்ரசாதத்துடன் திருமாங்கல்யத்தை அருளி தன் பக்தர்களுக்கு அருளவே தான் எந்நேரமும் இருப்பதை உணர்த்தி, தன் அன்பர் வாக்கையும் காத்திடுவதே தனது கடமை என்று அருளினார்.



Source: Sage of Kanchi

Halasya Sundaram Iyer
 
Gems from Maha Periyava

Gems from Maha Periyava

ஆசாரத்தால்தான் டிஸிப்ளின் எனும் மனநெறி ஏற்படுகிறது. ஆசாரம் வெளிவிஷயம் என்பது சுத்தப் பிசகு. அதனால்தான் மனஸில் உத்தமமான பண்பும், உயர்ந்த கட்டுப்பாடும் உண்டாகிறது. விஷ்ணு ஸஹஸ்ர நாமத்தின் 'பல ச்ருதி'யில் பகவானை நேச்சர் என்கிற ஜடப் பிரபஞ்ச தர்மம், மநுஷ்ய மனநெறியை உண்டாக்கும் மதாசார தர்மம் ஆகிய இரண்டுக்கும் மூலமாக ரொம்ப அழகாகச் சொல்லியிருக்கிறது.

ஸர்வாகமாநாம் ஆசார : ப்ரதமம் பரிகல்பதே I
ஆசார-ப்ரபவோ தர்மோ தர்மஸ்ய ப்ரபு-ரச்யுத :II

'ஸர்வ ஆகமங்கள்' என்கிற ஸகல சாஸ்திரத்துக்கும் ஆசாரமே முதலானதாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆசாரத்திலிருந்து உண்டாவதே தர்மம். அந்த தர்மத்துக்குப் பிரபு அச்யுதனான பகவான் - என்று அர்த்தம். அச்யுதன் என்றால் அசங்காமல் 'ஸ்டெடி'யாக இருக்கிறவன். தர்மம் என்ற அறநெறி ஸ்டெடியாக இருக்க வேண்டியதல்லவா?


?????? ?????? ?????? ?????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
நம்பிக்கைதான் வேண்டும்.

நம்பிக்கைதான் வேண்டும்.



பம்பாயில் கணபதிராம் என்பவரும், அவர் மனைவியும் பெரியவாளின் பரம பக்தர்கள்.

பெரியவாள் பாதுகையில் கற்கள் எடுத்துப் பதிக்க வேண்டுமென்பதற்காக, தனது வைரத்தோட்டையே கொடுத்தவர்கள்.

ஒரு ஆபரேஷன் செய்து கொள்வதற்காக மனைவியுடன் கணபதிராம் ஒரு மாத காலம் சென்னைக்கு வந்து தங்க வேண்டி வந்தது. புறப்படும் முன் அவர் மனைவி, பெரியவாளுக்கு ஒரு மாதம் பூஜை இல்லாமல் போகுமே என்று கவலைப்பட்டார்.

ஒரு முடிவுக்கு வந்து, ஒரு டப்பாவில் திராட்சைப் பழத்தை எடுத்து வைத்து, "இதுதான் ஒரு மாதத்துக்கு உனக்கு நைவேத்தியம் நான் திரும்பி வந்ததும் பூஜை தொடரும். மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

ஆப்ரேஷன் ஆகி வீடு திரும்பியதும் பெரியவா முன்னால் வைத்த திராட்சைப் பழம் நினைவுக்கு வந்தது.

அதை எடுத்து பிரசாதத்தை குழந்தைகளுக்குக் கொடுக்கலாமென்று திறந்து பார்த்தால் ஆச்சரியம்! ஒரு பழம்கூட அதில் இல்லை.

பக்தியுடன் உருகினால் நமக்கும் இப்படிப்பட்ட அதிசயங்கள் நடக்கும்.

நம்பிக்கைதான் வேண்டும்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top