• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Veda Dharma Sastra Paripalana

Veda Dharma Sastra Paripalana



Veda Dharma Shastra Paripalana Sabha "VEDA SAMELANAM" - Nov 2014 (18th to 21st) - Gopalapuram
Venue: Venugopalaswamy Temple - No 10, 2nd street, Gopalapuram, Chennai 600086.
Daily schedules and Upanyasam Details:

Day 1 (18th Sep 2014)
Morning 7:30 AM to 12:00 PM and 2:30 PM to 5:30 PM - Shri Veda Vyasa Pooja and Ruk, Krishna Yajur and Sama Veda Parayanam.
Evening 7:00 PM to 8:30 PM - Upanyasam on "Aathma Gunam" - delivered by Mullaivasal Bhramhashri R Krishnamurthy Sasthrigal.

Day 2 (19th Sep 2014)
Morning 7:30 AM to 12:00 PM and 2:30 PM to 5:30 PM - Shri Veda Vyasa Pooja and Ruk, Krishna Yajur and Sama Veda Parayanam.
Evening 7:00 PM to 8:30 PM - Upanyasam on "Srimath Bhagavathgeethaiyum Karmanushtanamum" delivered by Bhramhashri Dr. R Mani Dravid Sasthrigal.

Day 3 (20th Sep 2014)
Morning 7:30 AM to 12:00 PM and 2:30 PM to 5:30 PM - Shri Veda Vyasa Pooja and Ruk, Krishna Yajur and Sama Veda Parayanam.
Evening 7:00 PM to 8:30 PM - Upanyasam on "Ramaayanamum Dharma Upadesamum" delivered by Bhramhashri VG Subramaniaya Ganapadigal
.

Day 4 (21th Sep 2014)
Morning 8:00 AM - Shri Veda Vyasa Pooja and Ruk, Krishna Yajur and Sama Veda Parayanam.
Morning 9:30 AM - Avahanthi Homam
Morning 11:30 AM - Aasirvadham, Pradhakshana Namaskaram & Veda Parayanam Poorthi.








Jaya Jaya Shankara - Hara Hara Shankara.



Source: Sage of Kanchi
 
Periyava on fault finding

PERIYAVA ON FAULT FINDING

To live a life inspired by dharma means coming under a certain discipline and following certain rules of conduct. It is important for people to acquaint themselves with these rules. It would be ideal if they lived according to them on their own because to abide by them out of compulsion is not a matter of pride. "Sampradaya" or tradition is something that has evolved naturally and it is natural that people adhere to them. The customs and rules making up a sampradaya are not all of them written down in the sastras.


Anything laid down as a law becomes a matter of compulsion. Nowadays everywhere people are asked to "Do this" and "not to do that." Notices are displayed about this and that. They are displayed even where I perform the puja(in the Matha), notices that say, "Don't keep talking", "Don't wear shirts", etc.



When I speak thus and ask you not to do this or to do that, I myself am guilty if offending against the good rule I just spoke about. When I say, "Don't do", it becomes a law. I should speak to you thus: "You think about it yourselves whether it is right to have such notices."



"Do not magnify the faults of others," say the wise. "But if there is something good about a man speak appreciatively about it." I myself, however, am bringing your faults into the open. But, to repeat, you must not bring to light the drawbacks of others but only their good qualities. See, even the crescent moon is cool and radiant. That is why Siva wears it in his matted hair, makes its beauty known to the world. The same Siva swallowed the terrible halahala poison concealing it from everyone, so says Dandin in one of his poems.



Pointing a finger at the faults of others or exaggerating them in speech and writing has become the practice today. The more learned a man is, the more eager he is to find fault with others. "Finding fault is indeed the work of a vidvan," it is said. "The word vidvan itself is said to mean a dosajna." But a dosajna is one who knows the faults of something or somebody, not one who reveals them to the world or exaggerates them. If you think a person has any drawbacks you must speak to him about them in a friendly manner [so that he may correct himself] but not constantly harp on them and expose them to the outside world.

We must be worthy enough to speak about the faults of others and we cannot take upon ourselves the role of an adviser when we need to correct ourselves. Advice given by us then would be counterproductive. If we tell a man what is wrong about him he might even feel boastful about it. When are we fit to advise others? When we are worthy enough and when we know that our word will have the desired effect.



If we praise a person for his good qualities he will have greater enthusiasm to cultivate them further. But there should be restraint in praise too- praise indeed is a tricky thing. That is why the wise say: "Isvara and the guru alone may be praised directly. Friends and relatives, instead of being praised to their face, must be spoken of well to others. You may praise a servant only after he has carried out the job entrusted to him. (It is like patting a horse after a ride). You may never praise your son."



Pratyakse guravah stutyah
Parokse mitrabandhavah
Karyante dasabhrtyasca

Na svaputrah kadacana



I have been finding fault with you all the while. As I said fault -finding is not an exercise to be welcomed but the stanza just quoted frees me from any blame because it says that children should not be praised and that you must tell them what is wrong with them. So no fault can be ascribed to me for my having found fault with you.


Fault Finding from the Chapter "Dharmas Common To All", in Hindu Dharma : kamakoti.org:
 
ஸ்வாமி என்றால் என்ன ?

ஸ்வாமி என்றால் என்ன ?


ஸ்வாமி என்றால் என்ன? 'ஸ்வம்' என்கிற வார்த்தைக்கு 'உடைமை', 'சொத்து' என்று அர்த்தம். 'ஸ்வம்' என்பதே தெலுங்கில் 'ஸொம்மு' என்றாகியிருக்கிறது. 'ஸொம்மு' என்றால் 'சொத்து'. ஸ்வந்தம் - நமக்குச் சொந்தமானது - அதுவே நம் சொத்து. கோயிலைச் சேர்ந்த சொத்தைக் கேரளத்தில் 'தேவஸ்வம்' என்கிறார்கள் அல்லவா? உடைமைக்கு சொந்தக்காரர் யாரோ அந்த உடையவர்தான் 'ஸ்வாமி'. ஸ்வாமி என்பதற்கு நேர் தமிழ் வார்த்தை 'உடையார்' என்பது. முன் காலத்தில் கோயில் சுவர்களில் வெட்டப்பட்ட கல்வெட்டுக்களிலெல்லாம் 'திருச்சிற்றம்பலமுடையார்', 'திருவேங்கடமுடையார்', 'திருநாகேச்சுரமுடையார்', 'கபாலீஷ்வரமுடையார்', என்பது போலவே 'உடையார்' என்ற பெயரில்தான் தெய்வங்களைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.


குருவும் ஸ்வாமியும் ஒன்று என்பதால்தான் வைஷ்ணவர்கள் ஸ்ரீ ராமாநுஜரை 'உடையவர்' என்றே சொல்கிறார்கள்.


'ஸ்வாமி' என்றால் சொத்துக்கு உரிமைக்காரர் என்றேன். எந்தச் சொத்து? சகலப் பிரபஞ்ஜமும்தான். அதிலுள்ள நாமும் அவன் சொத்துத்தான். உள்ளதனைத்தும் அவன் ஒருவனுக்கே உடமையாகும். 'எல்லாம் என் உடமையே' என்று தாயுமானவரும் பாடினார். நம் சொத்து, பிறர் சொத்து என்றெல்லாம் பாத்தியதை கொண்டாடுகிறோமே, உண்மையில் இந்தச் சொத்தெல்லாம்- அவற்றுக்குப் பாத்தியதை கோரும் நாம், பிறர் எல்லோருமே - அவனுடைய சொத்துதான். அவன் இல்லாவிட்டால் இந்தப் பிரபஞ்சமும் இல்லை, நாமும் இல்லை. நாம் பாத்தியதை கோருகிற சொத்துக்களும் இல்லை.


நாம் வீடு, வண்டி போன்ற சில சொத்துக்களைப் புதிதாக உண்டாக்கினதாக நினைக்கிறோம். விஞ்ஞானிகள் புதிது புதிதாக இயந்திரங்கள் செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அடிப்படையில் எந்த மூலப்பொருள்களை வைத்துக் கொண்டு செய்கிறோமோ, அவை ஸ்வாமி செய்ததுதான். நாம் அவர் சொத்தை எடுத்து வேறு ஒரு ரூபத்தில் மாற்றுகிறோமே தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை.

'மூலப்பொருளை (element) செய்'. 'அணுவை (atom) உண்டாக்கு' என்றால் எந்த விஞ்ஞான நிபுணராலும் அது முடியாத காரியம். இத்தனை மெஷின்கள், குண்டுகள் செய்கிற விஞ்ஞானியால் ஒரு சின்னஞ்சிறிய இலையைச் செய்ய முடியுமா?


எல்லாவற்றையும் செய்கிற ஒரே ஒருத்தருக்குத்தான் அவையெல்லாம் சொந்தம். அதனால்தான் அவர் உடையவர், ஸ்வாமி என்று அழைக்கப்படுகிறார். நாமும் அவரது உடமைகள்தான். நம் சொத்து என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் இஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே ஸ்வாமியின் சொத்தாகிய நாமும், நம்மை அவன் இஷ்டப்படி நடத்தட்டும் என்று விட்டுவிட்டால் நமக்கு எந்த பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம்தான்.


இப்போது, 'நான், நான்' என்று எதையோ சொல்லிக்கொண்டு அலைகிறோமே, உண்மையில் இது அவனுக்குதான் சொந்தம் என்று புரிந்து கொண்டுவிட்டால் அப்புறம் நாமாகக் கிடந்து அலையமாட்டோம். நமக்கென்று சொந்தமாக ஒரு ஆசையும் ஒரு துவேஷமும் பாராட்டுவதற்கு உரிமை இல்லை என்று தெரிந்து கொண்டு விட்டால், அப்புறம் ஒரு அலைச்சலும் இல்லை. ஒரே நிம்மதிதான்! 'ஸ்வாமி' என்கிற வார்த்தையே, நமக்கு நம்மிடமே எந்த சொந்தமும் இல்லை. நாம் அவன் தன்னிஷ்டப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிற அவனுடைய சொத்துத்தான் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கிறது. இப்படி உணர்வதுதான் பக்தியின் பரம லக்ஷியமான சரணாகதி என்பது.


?????? ??????? ???? ? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
அவன்தான் ஸ்வாமி, ஸ்வாமி என்பவன்.

அவன்தான் ஸ்வாமி, ஸ்வாமி என்பவன்.

ஒரு வீட்டைப் பார்த்தால் அதைக் கட்டியவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். இன்ன எஞ்சினீயர் கட்டினார் என அறிகிறோம். ஒரு வண்டியைப் பார்த்தால் அதைச் செய்த ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம். விசாரித்துப் பார்த்தால் இன்ன தச்சன் செய்தான் என்று அறிகிறோம். ஒரு வீடு அல்லது ஒரு வண்டி என்றால் அதில் பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று இசைவாக சேர்ந்து அமைந்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட பிரயோஜனத்தை உத்தேசித்து அவை இவ்வாறு உருவாக்கியிருப்பது தெரிகிறது. எனவே, 'இந்த வீடு, இந்த வண்டி ஏதோ தானாகவே அகஸ்மாத்தாக (accidental) உண்டாகிவிடவில்லை; இதை உத்தேசத்தோடு ஓர் அறிவே செய்திருக்கிறது' என்று ஊகிக்கிறோம். ஒரு ஒழுங்குக்குக் கட்டுப்பட்டுப் பல வஸ்துக்களைப் சேர்த்து உண்டாக்கியிருக்கிற எதைப் பார்த்தாலும் அதைச் செய்தவன் ஒருவன் இருக்க வேண்டும் என்று ஊகிக்கிறோம்.



அப்படியானால் எத்தனையோ ஒழுங்குகளுக்குக் கட்டுப்பட்டிருக்கும் இந்தப் பிரபஞ்சத்தைச் செய்தவனாக ஒருவன் இருக்கதானே வேண்டும்? எத்தனையோ வேறு வேறு விதமான வஸ்துக்களைப் பலவிதங்களில் சேர்த்து வைத்து, பலவிதமான பிரயோஜனங்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிற இயற்கையை, லோக வாழ்க்கையைப் பார்க்கிறபோது, இவைகளை எல்லாம் இந்த உத்தேசத்துக்காகவே உண்டாக்கி, இவற்றை நடத்தி வருகிற ஒரு மகா பெரிய சக்தி இருக்கத்தான் வேண்டும் என்று தெரிகிறது.


நாம் உட்கார்ந்திருக்கும் இந்தக் கொட்டகையை யார் போட்டார்கள் என்றால் சொல்லத் தெரிகிறது. இந்த வாழை மரத்தை யார் செய்தார்கள்? கண்ணில் காட்டும்படியாக அதைச் செய்தவனைச் சொல்லத் தெரியவில்லை. ஆனாலும் ஒருவன் அதைச் செய்திருக்கிறான். அதனால்தான் இப்படி பட்டை பட்டையாகக் கணக்குப் பிசகாமல் உள்ளுக்குள்ளே அடுக்கிக்கொண்டே இந்த வாழை உண்டாகியிருக்கிறது. எந்த ஆயுதத்தை வைத்துக் கொண்டு அந்த ஒருவன் இத்தனை அழகாகப் பட்டைகளை அடுக்கினான் என்றால் தெரியவில்லை. இப்படியே அந்த மலையை, இதோ மேலே உள்ள நக்ஷத்திரங்களை, சந்திரனைச் செய்தவனை நம்மால் காட்ட முடியவில்லை. இவையெல்லாம் எத்தனையோ காலம் முன்னால் உண்டானவை. செய்தவனை எப்படிக் காட்டுவது, என்று கேட்கலாம். சரி, இந்த ரோஜாப் புஷ்பம் இருக்கிறதே, இது அந்த வாழையை விடச் சமீபத்தில் உண்டானதுதான். முந்தாநாள் சிறு மொட்டாக இருந்தது. இப்போது அழகிய பூவாகியிருக்கிறது. இதில் நூற்றுக்கணக்கான இதழ்கள், ஒவ்வொன்றிலும் நுண்ணிய நரம்புகள், வாசனை எல்லாம் வந்திருக்கின்றன. நம் கண்முன்னமே இது மலர்ந்தது. ஆனாலும் மலர்த்தினவனை நமக்குத் தெரியவில்லை.


மனிதன் எல்லாம் தெரிந்த கெட்டிக்காரன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு காட்டு மிருகம் சென்னைப் பட்டணத்தைச் சுற்றி வந்தால் எதுவுமே தனக்குத் தெரியவில்லை என்று எப்படி ஆச்சரியப்பட்டுப் பார்க்குமோ, அப்படித்தான் இந்தப் பிரபஞ்சத்தில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். மனிதனைவிடக் கெட்டிக்காரனாக ஒருவன் அவனை இப்படி வைத்திருக்கிறான்.


அத்தனை ரோஜாப் பூக்களும் ஒரே தர்மத்தில் மலர்வதால், அத்தனை மலைகளும் ஒரே தர்மத்தில் நிலைத்து இருப்பதால், அத்தனை நக்ஷத்திரங்களும் ஒரே தர்மத்தில் சுற்றுவதால், இந்தச் சகலத்தையும் செய்தவன் ஒரே எஞ்சிநீயர் என்று தெரிகிறது. ஒரே ரீதியில், காரண காரிய விதியில், பிரபஞ்சம் முழுதும் கட்டுப்பட்டிருப்பதால், இதைச் செய்தது ஒரே அறிவு எனத் தெரிகிறது.


கெட்டிக்காரன் என்று தன்னை நினைத்துக் கொண்டிருக்கும் மனிதன், இத்தனையையும் இவனையும் செய்த அந்த மகா கெட்டிக்காரனைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், அவன் மகா கெட்டிக்காரன் மட்டுமல்ல, மகா நல்லவனுங்கூட, இத்தனையைத் திட்டமிட்டுப் படைத்த பேரறிவு என்பதோடு, இத்தனையையும் ரக்ஷிக்கும் பெரும் கருணையும் அவன். நமது கெட்டிக்காரத்தனம் அவன் தந்ததே என்று தெரிந்துகொண்டு அவனிடம் பிரார்த்தித்து கொண்டால் நமக்கு அவன் நல்லது செய்வான்.
அவன்தான் ஸ்வாமி, ஸ்வாமி என்பவன்.



?????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
I don't know if this is a duplicate post. I ran into this Youtube video today, and thought that this thread is the most relevant place to share it. Incidentally it also tells us somethings about Subramania Swamy. If you have not seen this before, please take the time to watch it. It will be a rewarding experience.

Dr Subramanian Swamy shares his experiences with Maha Periyava

http://www.youtube.com/watch?v=6CA-5ihhTCY
 
Last edited:
ஆயுள் முழுவதும் செய்வதே அந்திமத்தில் வர&

ஆயுள் முழுவதும் செய்வதே அந்திமத்தில் வரும்

வாழ்நாள் பூராவும் ஏதாவது ஒன்றில் நம் மனஸ் அழுத்தமாக ஆழமாக ஈடுபட்டிருந்தால்தான் அந்த விஷயமே ப்ராணன் போகிற ஸமயத்திலும் கிளம்பி வந்து நம் மனஸ் முழுவதையும் ரொப்பி வியாபித்துக் கொள்ளும். நாம் அதை நினைக்கிறோம் என்பதில்லை. அதுவே முட்டிக்கொண்டு வந்து தன்னை நினைக்கும்படியாகப் பண்ணும்.

இப்போது ஸைகாலஜியில் சொல்கிறார்கள், நமக்கே தெரியாமல் நாம் எப்பொழுதோ ஆழமாக, அழுத்தமாக நினைத்த விஷயங்கள்தான் தாமாக மனஸின் மேல்மட்டத்துக்கு எழும்பி வருகிறது என்கிறார்கள். குறிப்பாக வெளி வியாபாரமில்லாமல் தூங்குகிறபோது இம்மாதிரி பழைய ஸ்டாக் கிளம்பி வந்து ஸ்வப்னமாகிறது என்கிறார்கள். தூக்கந்தான் என்றில்லை. கார்யமில்லாமல் இருக்கிற போதுகளிலெல்லாம், ஒரு த்யானம் என்று உட்கார்ந்தால்கூட, ஜலத்துக்கடியே கையினால் அழுத்தி வைக்கிற கார்க், கையை எடுத்தவுடன் மேலே கிர்ரென்று வருகிறமாதிரி, உள் நினைப்புகள் மேலே வந்து நம்மைப் பிடித்துக் கொள்கின்றன. சாஸ்த்ரங்களிலும் பூர்வ வாஸனை என்று இதுகளைச் சொல்லி, இவற்றை அடியோடு இல்லாமல் வாஸனாக்ஷயம் பண்ணிக் கொண்டால்தான் மனஸ் பரமதெளிவாகத் தெளிந்து நின்று அதில் ஆத்ம ஜ்யோதிஸ் பளீரென்று அடிக்கும் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் நாம் ''போ, போ''என்று பிடித்துத் தள்ளினாலும் அது போகுமா?போகாது. அதைப் போகப் பண்ணுவதற்கு வழி நம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை பாடும் பட்டு ஸ்த்விஷயங்களை, ஸத்துக்களிலெல்லாம் பரம ஸத்தான - 'ஏகம் ஸத்'தான - பரமாத்மாவை நினைத்துக் கொண்டேயிருப்பதுதான். இந்த நல்ல வாஸனையை 'வா, வா'என்று-சொல்லிக் கொண்டேயிருந்து வரவழைத்து மனஸுக்குள் உட்கார்த்தி வைத்துக்கொண்டால்தான், கெட்ட வாஸனைகள் தங்களுக்கு இடமில்லை என்று ஓடிப்போகும். அமேத்யத்தை எவ்வளவு தேய்த்து அலம்பி விட்டாலும் நாற்றம் போகமாட்டேன் என்கிறது. ஒரு ஊதுவர்த்தியை ஏற்றிவைத்து விட்டால் அது இருந்து இடம் தெரியாமல் போகிறது.


கடைசியில் நல்ல வாஸனைகளும் போக வேண்டும் மனஸே போக வேண்டும். அதெல்லாம் ரொம்பப் பின்னாடி வருகிற நிலை.


????? ???????? ??????? ???????????? ????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
கோயில் இல்லாத இருவர்!

கோயில் இல்லாத இருவர்!

விஷ்ணுவின் பிள்ளைகளான பிரம்மாவுக்கும்,மன்மதனுக்கும் வழிபாடு கிடையாது. இவர்கள் லட்சுமியின் சம்பந்தம் இல்லாமல் பிறந்தவர்கள். விஷ்ணுவின் நாபித்தாமரையில் பிறந்ததால் கமலஜர் என்று பிரம்மாவுக்கு பெயர். அவர், மன்மதனை மனதால் உண்டாக்கியதால், அவனுக்கு மனசிஜன் என்று பெயர். இந்த இருவரும் இல்லாவிட்டால், உயிர்கள் மண்ணில் பிறக்க முடியாது. மன்மதனே, மலர்க்கணை தொடுத்து, ஒரு ஜீவனின் உற்பத்திக்கு காரணமாகிறான். அந்த உயிர் புகுவதற்கான உடலைக் கொடுப்பவர் பிரம்மா. இப்படி, உயிர்களை, பிறவிப்பிணியில் சிக்கித் தத்தளிக்க செய்வதால், இவர்களுக்கு வழிபாடு இல்லாமல் போய் விட்டது, என்கிறார் காஞ்சிப்பெரியவர்.



Temple News | News | Dinamalar Temple | ?????? ?????? ??????!
 
பரோபகாரத்துக்காகவே சிக்கனம் — காஞ்சி மகா

பரோபகாரத்துக்காகவே சிக்கனம் — காஞ்சி மகா பெரியவர்
.



“பரோபகாரத்துக்காகவே சிக்கனம்”

சொந்த வாழ்க்கையில் சிக்கனமாக இருந்தால் தான் பிறத்தியாருக்கு உதவியாக திரவிய ஸஹாயம் செய்ய முடியும்.

அநாவசியங்களையெல்லாம் அத்யாவசியமாக்கிக் கொண்டு மேல்நாடுகளைப் பார்த்து material comfort, luxury என்று மேலே மேலே போய்க் கொண்டிருந்தால் தனக்கும் ஒரு நாளும் த்ருப்தி இராது; பிறத்தியாருக்கும் தான தர்மம் பண்ண முடியாது. மோட்டார் ஸைக்கிளுக்கு மேலே கார் வேணும், அப்புறம் அந்தக் காரிலும் இன்னம் பெரிசாக வேணும், அதற்கப்புறம் அதையே ஏர்-கன்டிஷன் பண்ணணும் என்கிறது போல, ஸிமென்ட் மொஸெய்க் ஆகணும், மொஸெய்க் மார்பிள் ஆகணும் என்கிறது போல ஒன்றுக்கு மேல் ஒன்று ஸெளகர்யத்தைத் தேடிக் கொண்டேயிருப்பதால் எப்போது பார்த்தாலும் அதிருப்தி என்ற பெரிய அஸெளகர்யத்திலேதான் ஒருத்தன் இருந்து கொண்டிருப்பான்! அது மட்டுமில்லை. எத்தனை ஸம்பாத்யம் வந்தாலும் போதவும் போதாது. அதனால்தான் இன்றைக்கு அத்தனை பணக்காரர்களும் கடனாளியாக – கடன் என்கிறதையே ஓவர்-ட்ராஃட் என்று கௌரவமான பெயரில் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இவனே கடனாளியாக இருந்தால் மற்றவர்களுக்கு எங்கேயிருந்து தர்மம் பண்ணுவது?

இப்போது பொதுவாக உள்ள பரிதாப நிலை என்னவென்றால், ஒன்று, சிக்கனமாக இருப்பவன் தானும் அநுபவிக்காமல் பிறத்தியானுக்கும் உதவி பண்ணாமல் கருமியாக இருக்கிறான்; செலவாளியாக இருப்பவனோ ஸெளகர்யம், இன்னும் ஸெளகர்யம் என்று பறப்பதில் தனக்கே போதாமல் கடனாளியாக நிற்பதால் இவனாலும் பரோபகாரம் நடப்பதில்லை.

பிறருக்குச் செய்வதற்காகவே சொந்த விஷயத்தில் சிக்கனமாயிருக்கவேண்டும் என்ற உயர்ந்த கொள்கையை ஒவ்வொருவனும் கடைப்பிடித்தால் எவ்வளவோ புண்யத்துக்குப் புண்யம், நிம்மதிக்கு நிம்மதி, எத்தனையோ தீனர்களும் க்ஷேமமடைவார்கள்.

சிக்கனமாயிருந்தாலொழிய, இப்போது இருக்கிற போக போக்ய இழுப்பில், எவனுக்குமே மிச்சம் பிடிக்க முடியாது. அதனால் சிக்கன வாழ்க்கை நடத்தினால்தான் ‘தனக்கு மிஞ்சி’ தர்மம் பண்ண முடியும். அதாவது எத்தனை சிக்கனமாயிருக்க முடியுமோ அப்படியிருந்து தனக்கு மிஞ்சும்படியாகப் பண்ணிக்கொண்டு தர்மம் பண்ணணும்.

–ஸ்ரீகாந்த் மீனாக்ஷி


SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM
 
மதங்களின் ஒற்றுமை

மதங்களின் ஒற்றுமை

எல்லா சமயங்களும் கடவுளை வழிபட ஏற்பட்டனவே ஆகும். எல்லா சமயங்களும் கடவுள் ஒருவர் என்றே சொல்கின்றன. ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிபட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார். எனவே, எவருமே தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு இன்னோரு மதத்தைத் தழுவ வேண்டியதில்லை.


கோயில், சர்ச், மசூதி, விஹாரம் முதலிய கட்டடங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படலாம். உள்ளே இருக்கிற மூர்த்தி அல்லது சின்னம் மாறுபடலாம். ஒவ்வொன்றிலும் சடங்குகளும் வேறு வேறாக இருக்கலாம். ஆனால் அநுக்ரஹம் செய்கிற பரமாத்மா மாறவில்லை.

ஒவ்வொரு தேச ஆசாரத்தையும், ஒவ்வொரு ஜனக்கூட்டத்தின் மனப்பான்மையும் பொறுத்துப் பல்வேறு சமயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் ஒரே பரமாத்மாவை அவரவர் மனோபாவப்படி பக்தி செய்து, அவரோடு சேருவதற்கு வழி செய்பவையே. எனவே எவரும், தங்கள் மதத்தை விட்டுவிட்டு இன்னொன்றுக்கு மாறவேண்டியதில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தாங்கள் பிறந்த மதத்தைக் குறைவு படுத்துவது மட்டுமின்றி, தாங்கள் சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்; கடவுளையும் குறைவு படுத்துகிறார்கள்.



'தங்களது பிறந்த மதத்தில் குறை தோன்றியதால்தான் ஒருவர் அதை விடுகிறார். ஆனால் புதிதாக சேருகிற மதத்தையும் அவர் குறைவுபடுத்துகிறார் என்று ஏன் ஸ்வாமிகள் சொல்கிறார்?' என்று உங்களுக்குத் தோன்றலாம். சொல்கிறேன்; கடவுள் எல்லா மதங்களுக்கும் பொதுவானவர் என்ற எண்ணம் இல்லாமல் அவரைக் குறுக்குவதால்தானே ஒரு மதத்தைவிட்டு இன்னொன்றில் சேருகிறார்கள்? தங்கள் மதத்துக் கடவுள் பிரயோஜனமில்லாதவர் என்று நினைத்து இன்னோரு மதத்துக்குத் தாவுகிறார்கள். மாறுகிற புதுமதக் கடவுளாவது எல்லோரையும் தழுவுவதாக நினைக்கிறார்களா? இல்லை. அப்படி நினைத்தால் மாறவே வேண்டாம். இவர்கள் தாங்கள் பிறந்த மதத்திலேயே இருந்து வழிபட்டாலும், இப்போது இவர்கள் மாறுகிற மதத்தின் கடவுள் இவர்களுக்கு அநுக்கிரகம் செய்வார் என்ற நம்பிக்கை இவர்களுக்கு இல்லாததால்தானே மதமாற்றத்துக்கே அவசியம் ஏற்பட்டது. அதாவது தாங்கள் மாறுகிற புது மதத்துக்கும், அதன் கடவுளுக்கும்கூட இவர்கள் குறுகலான எல்லை காட்டி விடுகின்றனர்.

ஒரு மதத்திடம் கௌரவ புத்தி இருப்பதாக நினைத்து அதற்கு மாறுகிறபோதே அதை வாஸ்தவத்தில் அகௌரவப்படுத்தி விடுகிறார்கள்.

மற்ற மதங்களும் ஹிந்து மதத்துக்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம், நம்முடைய ஹிந்து மதம் ஒன்று தான். "இது ஒன்றே மோட்ச மார்க்கம்" என்று சொல்லாமலிருக்கிறது.

நம்முடைய வைதீக மதம்தான் பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பதே கிடையாது. ஏனென்றால் ஒரு பரமாத்மாவை அடைவதற்கான பல மார்கங்களே பல மதங்களும் என்று நம் முன்னோர்கள் நன்கு உணர்ந்திருக்கின்றனர். ஹிந்துவாகப் பிறந்த ஒவ்வொருவனும் இந்த விசால மனப்பான்மையைக் குறித்து பெருமைப்பட வேண்டும்.

வேதம் 'ஒரே ஸத்தியத்தைத்தான் ஞானிகள் பல பெயர்களில் சொல்கிறார்கள்' என்கிறது. கீதையில் பகவான், 'எவன் எந்த விதத்தில், எந்த ரூபத்தில் வழிபட்டாலும் அவனுடைய சிரத்தையை நானே விருத்தியாக்கி அவனை அதே வழிபாட்டில் நிலைப்படுத்துகிறேன்' என்கிறார். ஆழ்வார் 'அவரவர் தமதம தறிவறி வகைவகை அவரவர் இறையவர்' என்கிறார். இதனால்தான் மற்ற மதங்களில் செய்வதுபோல் மதமாற்றம் செய்வது (proselytisation) , அதற்காகத் தண்டிப்பது (Persecution, Crusade, Jehad) முதலான போர்களில் படையெடுத்துச் சென்று நிற்பந்தமாகத் தங்கள் மதத்துக்கு மற்றவரைத் திருப்புவது முதலான காரியங்களில் ஹிந்துக்கள் என்றுமே இறங்கியதில்லை. நம்முடைய நீண்ட கால சரித்திரமே இதற்குச் சான்று. சகல சரித்திர ஆராய்ச்சிகாரர்களும் ஒப்புக் கொள்கிற விஷயம் இது. தூரக்கிழக்கு (Far East) முதலான தேசங்களில் ஸ்ரீ விஜய சாம்ராஜ்யம் முதலிய ஹிந்து ராஜ்யங்கள் ஏற்பட்ட போதுகூட நிர்பந்த மத மாற்றமே இல்லை (Forced Conversion) என்றும் நம் கலாச்சாரத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டு அந்நியர்களே நம் மதத்தைத் தாங்களாக எடுத்துக் கொண்டார்கள் என்றும் சரித்திரக்காரர்கள் சொல்கிறார்கள். அநேக சமயங்களில் வியாபாரம் முலமே நம் மத அம்சங்கள் பிற தேசங்களில் புகுந்தது என்றும், வாள் மூலம் அல்ல என்றும் சொல்கிறார்கள்.



என் அபிப்ராயப்படி ரொம்பவும் ஆதி காலத்தில் லோகம் முழுவதிலும் வேத மதம்தான் இருந்தது. பிற்பாடு ஆங்காங்கே வெவ்வேறு மதங்கள் உண்டானாலும் நம் மதத்தின் அம்சம் குறைந்தபட்சம் இடிபாடுகளாக (Ruins) பழைய ஞாபகச் சின்னங்களாக (Relics) வாவது அங்கெல்லாம் இன்னும் காணப்படுகின்றன. இப்படி நான் சொல்வதை ஒப்புக் கொள்ளாத ஆராய்ச்சிகாரர்களும் நம் பரத நாகரீகத்தை மற்ற நாடுகளில் தாங்களாகவே விரும்பி ஏற்றும் கொண்டார்களேயன்றி பலவந்தத்தின் மீதல்ல என்று ஒப்புக் கொள்கிறார்கள்.



ஒருத்தனைப் புது மதத்துக்கு மாற்றுவது என்றால் அதற்கென ஒரு சங்கு (Ritual) இருக்க வேண்டும். இப்போது 'கன்வெர்ட்' செய்கிற மதங்களில் எல்லாம் அப்படி ஒன்று—ஞானஸ்தானம் (Baptism) என்கிற மாதிரி ஏதாவது ஒன்று—இருக்கிறது. மற்ற எந்த மதத்தையும்விட மிக அதிகமான சடங்குகளை சொல்கிற ஹிந்து சாஸ்திரங்களைப் பார்த்தால், இப்படி நம் மதத்துக்கு மற்ற மதஸ்தன் ஒருத்தனை மாற்ற ஒரு சடங்கும் இருக்கக் காணோம். இதுவே நாம் மதமாற்றத்தை விரும்புகிறவர்கள் அல்ல என்பதற்கு அத்தாட்சி.



ரயிலடியில் பிரயாணிகள் வந்திறங்கியதும் ஜட்காக்காரன், ரிக்ஷாக்காரன், டாக்ஸிக்காரன் என்று பல பேர் வந்து சூழ்ந்து கொள்கிறார்கள். எவனுடைய வண்டியில் ஏறிக் கொண்டாலும் போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரலாம். வண்டிக்காரர்கள் கிராக்கி பிடிப்பதற்காகப் போட்டி போடுவதைப் தவறு என்று சொல்வதற்கில்லை. அது அவர்கள் பிழைப்பு. ஆனால் கடவுள் என்கிற ஒரே லக்ஷியத்துக்கு அழைத்துச் செல்வதற்காக வெவ்வேறு மதஸ்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு மதமாற்றத்தில் முனைவது அர்த்தமற்ற காரியம்.


நதியின் மேல் பாலம் போட்டிருக்கிறது. அதில் பல வளைவுகள் இருக்கின்றன. எல்லா வளைவுகளும் ஒரே அளவாகக் கட்டப்பட்டவைதாம். ஆனால் ஒவ்வொரு வளைவுக்கும் கிட்டத்தில் இருப்பவனுக்கு அந்தந்த வளைவே பெரிதாகவும், மற்றவை சின்னதாகவும் இருக்கும். இப்படியே அந்தந்த மதஸ்தர்களுக்கும் தங்கள் மதமே பெரிதாகத் தெரிவதால், பிறரை அதற்கு அழைக்கிறார்கள். ஆனால் எல்லா வளைவுகளும் ஒரே அளவுதான். யாரும் தாங்கள் பிறந்த மதத்தைவிட்டு விலகவேண்டியதில்லை.



மதங்களுக்கிடையே கோட்பாடுகளிலும், அநுஷ்டானங்களிலும் சில வித்தியாசங்கள் இருப்பதில் தவறில்லை. எல்லா மதங்களையும் ஒரே போல் ஆக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே மாதிரி ஆக்காமலே, எல்லா மதஸ்தர்களும் மனத்தில் ஒற்றுமையோடு இருப்பதுதான் அவசியம்; 'யூனிஃபார்மிடி' அவசியமில்லை. 'யூனிடி' இருப்பதே அவசியம்.


????????? ??????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
How do we know that we’re spiritually progressing?

How do we know that we’re spiritually progressing?


“The person who sat opposite to me was 65 years old, slim, a bit on the smaller frame side. The top of his head was almost entirely bald or shaven, the lower portion of his face was outlined by a white beard. He had white moustache and white eyebrows. His body was clothed in the saffron-coloured mantle of the Sannyasin”.


This is how Mr Arthur Isenberg described Periyava before asking his questions.
He came to Numbal, near Chennai with Sri Raghavan on 20th April 1959. It was late in the evening with full-moon.

He asked few intelligent questions to Periyava. Periyava knew it and so there was a smile in Periyava’s eyes.


Mr Arthur had also recollected, “Not that any of this mattered. What did matter was His face, and more particularly, His eyes, which looked at me with a mixture, or rather a fine blending, of intelligence, kindliness and compassion, while at the same time somehow reflecting a most gentle sense of humour”.
Periyava’s answer was perhaps, a bit anticlimactic to him. Periyava told him to continue along the line he was already following. He got clarified with few more questions..


Then he asked an important question to Periyava…



“How can one know whether one is making progress, stagnating or retrogressing in the quest of wisdom?”


Periyava replied: “If each year, the number of things or events, which can arouse your anger or lust grows smaller, you are making progress; if it remains the same, you are stagnating; if it increases, you spiritual development is retrogressive.”



Modern management gurus say, “Without measurement there cannot be any progress”. Here Periyava has blessed a measurement for spiritual progress: ‘How many happenings in a year that we put up with and how many times we react negatively to it?’




Hara Hara Sankara Jaya Jaya Sankara


How do we know that we?re spiritually progressing? : MahaPeriyava.Org
 
How to Control the Mind

How to Control the Mind

Source: Hindu Dharma - Universal way of Life (English version of selected discourses by Maha Periyava)

What is the obstacle to one-pointed meditation? The answer is the unstill mind. All problems are caused by the mind, by the desires arising in it. It is not easy to control the mind and keep it away effectively from desire. If we ask the mind to think of an object, it seems to obey us for a moment, but soon it takes its own course, wandering off.

When I speak to you about meditation and tranquillity, for a moment your mind will perhaps become still and you will be happy. But in a trice it will go astray and the calm you experienced for a few seconds will give place to unquietness. If you bid your mouth to keep shut, it obeys you for a brief moment. Similarly, if you close your eyes asking them not to see anything, they shut themselves off from the outside world for some moments. But try as you might to tell your mind not to think of anything, it will not listen to you.

The mind must be kept under control. Thinking and non-thinking must be governed by your will. Only then can we claim that it is under our control, that we are masters of our own consciousness. Lunatics are usually referred to as people with no control over their minds. In fact none of us have any control over the mind. A madman keeps blabbering. But what about us? We let the mind go freely to keep blabbering inwardly.


Do you know what it means to have mental control? Suppose you are suffering from a severe pain. If you ask your mind not to feel the pain, it shall not feel it in obedience to you [that is you will not feel the pain].

Even if a tiger comes face to face with you and growls you will feel no fear if you ask your mind not to be afraid of the beast. Now we keep crying for no reason. If the mind is under control we will keep smiling even if there is cause for much sorrow. And under the gravest of provocations it will not be roused to anger and will remain calm.

First we must train our mind not to keep wandering. One way of doing it is to apply it to good activities. When oil falls in a steady flow, without spraying, it is called "tailadhara". The mind must be gathered together and made steady. It must be accustomed to think of noble and exalted objects like the Lord. Eventually, the very act of "thinking" will cease and we will dissolve in Isvara to become Isvara.

Yoga is controlling the mind in this manner.

Before we pass on, we must find a way to control the mind. Otherwise, we will be born again and we will be subject to the constant unquietness of the mind again. So we must use the opportunity of this birth itself to subdue the mind even while we are in the midst of so much that can rouse our desire or anger. A man who has succeeded in bridling his mind thus is called a "yukta" by the yogins. He is a "sukhin", one who truly
experiences bliss, so says Sri Krsna You must not turn away from yoga thinking that it is meant only for people like the sages. Who needs medicine? The sick. We suffer from manovyadhi, mental sickness. So we must take the medicine that cures it.

There are two different ways of mastering the mind- the first is outward (bahiranga) and the second is inward(antaranga). We must have recourse to both. The Matha has a cartman and a cook. Their work is outward in nature. Then there are those who prepare the wicks of the lamps, gather flowers for the puja - they are "inward" workers. Both types are needed for the functioning of the Matha. By employing both the outward and
inward means, the mind must first be applied to good things one pointedly and eventually lead to a state in which it does not think of anything at all.

The outward means consists, for example, of sandhyavandana, sacrifices, charity and so on. The best inward means is meditation.

There are five inward (antaranga) means to aid meditation. They are ahimsa (nonviolence), satya (truthfulness), asteyam (non-stealing), sauca (cleanliness) and indriya-nigraha [subduing the senses, if not obliterating them].

To practise ahimsa is to imbue the mind with love for all and not even think of harming others. Asteyam means not coveting other people's goods.

For satya, or truthfulness, to be complete one's entire being, including body, mind and speech, must be involved in its practice. Sauca is hygiene, observing cleanliness by bathing, maintaining ritual purity, etc. Indriyanigraha implies limits placed on sensual enjoyment. "The eyes must not see certain things, the ears must not hear certain things and the mouth must not eat certain things"-restrictions with regard to what you can see, listen to, eat and do with your body.

The body is meant for sadhana, for Atmic discipline. The senses must be "fed" only to the extent necessary to keep the body alive. These five dharmas are to be practiced by all Hindus without any distinction of caste or community.

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!



Sage of Kanchi

Bala Thiru
 
Sesame and water: Where do they go?

SESAME AND WATER: WHERE DO THEY GO?

All human beings must express their gratitude to their fathers (pitrs) and to the gods- they have a debt to pay their fathers, rites to perform for the gods. We must serve our fellow creatures to the best of our ability and extend hospitality at least to one guest a day. This is atithya or what Thiruvalluvar calls "virundu", also known as manusyayajna. Then there is Brahmayajna to perform, the word "Brahma" here denoting the Vedas. Brahmayajna means chanting the Vedas and making others chant them. This is a duty carried out by a few on behalf of all. One of the rites common to all is bhutayajna, demonstrating our love to all creatures, feeding them etc. Pitryajna, devayajna, manusyayajna, bhutayajana are rites all are duty-bound to perform in one way or.
If each individual does his work according to the Vedic dharma and does it in a spirit of dedication to Isvara he may be said to be performing Brahmayajna



. Thiruvalluvar has said more or less the same thing as the Vedas say:



Tenpulattar, deivam, virundu, okkal, tan enru angu


aimbulattaru ombal talai.




Tenpulattar are the pitrs, the fathers. All are duty-bound to pay their debt to them. Mother Veda says: "Matr-devo bhava, pitr-devo bhava. " (Be one to whom the mother is a deity. Be one to whom the father is a deity. ) Auvvai, who brings us the essence of the Vedas, observes: Annayum pitavum munnari deivam" [Mother and Father are the deities first known. ]
We must treat our parents with respect and do all we can to keep them in comfort. We cannot make sufficient recompense for all the sacrifices they make on our behalf. After they depart from this world we must without fail offer libations to them and perform the sraddha ceremony, all in the sastric manner. Though they ridicule the idea of performing sraddha, even reformers have agreed that we must care for our parents.



"The sesame you offer, the water, the balls of rice, the plantains and other items of food remain here," point out the reformists. "Or we see someone removing them before our own eyes, or eating them. You say that the departed parents are born again in this world. If that is true, is it not madness to claim that what is offered here will reach them?" Some of you must be harbouring similar doubts.


Let me tell you a story.



A certain man had sent his son to college in a distant town. One day the boy woke up to the fact that he had to pay his examination fee in a few days. So he wrote to his father: "Please send such and such a sum by telegraphic money order. " The father was a little perplexed. All the same he went to the telegraph office and handed the clerk at the counter the money that had to be sent to his son. "Please send it by telegraphic money order," he told the clerk. He had thought that the clerk would make holes in the notes, put a length of wire through them and send the whole thing to his son. Moments later the clerk said to the man: "Your son will get your money. It has already been sent. " The villager was again puzzled. He saw the money still in the cash box without the notes strung together. He told the clerk:"My money is still here. You haven't made holes in the notes yet." The clerk assured him: "It will reach your son." Now he turned to his work of sending messages: "Ka-tu-katu-katu." The poor village was still not satisfied.
But the money of course reached his son.



Offering libations to one's fathers is similar. If this rite is performed according to the sastras, the deities concerned will convey them to those for whom they are meant. If the fathers are reborn as cows the offering made to them will be taken to them in the form of grass or hay. The deities in charge carry out the orders of the Paramatman. So the father of the mother whose sraddha is performed need not personally come to receive the offering.



Does not the telegraphic money order reach the addressee? If the addressee resides in a foreign country our currency will not be valid there. If rupees are paid here arrangements are made to pay the money in dollars, pounds of whatever. The things offered to the fathers according to the sastras are conveyed in a form suitable to them.



What is important is a sense of gratitude to our fathers and faith in the sastras. At parties a toast is proposed to somebody and all the guests drink or eat to his health. They do so in the belief that by virtue of the mental power the man toasted will become healthy. Sraddha means that which is done in faith. Faith is of the utmost importance. If we do something we must do it according to the rules laid down for it. When you write a letter how do you make sure that it reaches the addressee? "I will write the address as I like. Why should I drop the letter in that letterbox over there? I have a better box at home." would you speak thus?

In the state of worklessness, love, devotion, and jnana are not bound by any rules. But when an action has a purpose behind it you have to respect the rules pertaining to it.

Sesame And Water: Where Do They Go? from the Chapter "Dharmas Common To All", in Hindu Dharma : kamakoti.org:
 
பாபம் நீங்க ஒரே வழி பகவத் தியானம்தான்.



பாபம் நீங்க ஒரே வழி பகவத் தியானம்தான்.




பாபம் நீங்க ஒரே வழி பகவத் தியானம்தான். இதனால்தான் பகவத்பாதாள் "ஜனங்களைத் தியானத்தில் ஈடுபடுத்துங்கள். அவர்கள் தியானம் செய்யாவிட்டால் அவர்களுக்காகவும் சேர்த்து நீங்கள் தியானம் பண்ணுங்கள்" என்று ஆக்ஞை செய்திருக்கிறார். அந்தக் கடமையை செய்ய என்னால் முடிந்த மட்டும் பிரயத்தனம் செய்து வருகிறேன். உங்கள் எல்லோருக்காகவும் தியானம் செய்ய முயலுகிறேன். ஆனால் நீங்களும், அவரவர்களே எவ்வளவுக்கெவ்வளவு தியானம் செய்கிறீர்களோ அவ்வளவுக்கு என் பாரம் குறையும்.

மனசு சுத்தமாவதற்காக, பழைய பாப கர்மப் பலனைத் தாங்கிக் கொள்வதற்காக, புதிய பாபம் செய்யாமலிருப்பதற்காக, எல்லோரும் முடிந்த மட்டும் தியானம் செய்ய வேண்டும். உறுதியாக சங்கற்பம் இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது. அநாவஸ்ய வம்பிலும், நியூஸ் பேப்பர் விமர்ஸனத்திலும் செலவாகிற காலத்தை மட்டுப் படுத்தினால் நித்திய சிரேசைத் தருகிற தியானத்திற்கு வேண்டிய அவகாசம் நிச்சயம் கிடைக்கும். தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும். ஜசுவரியம் இருந்தாலும், தாரித்திரம் வந்தாலும், கஷ்டம் வந்தாலும், சுகம் ஏற்பட்டாலும், ஆரோக்யம் ஏற்பட்டாலும், வியாதி வந்தாலும்—எப்போதும் எத்தனை நாழிகை முடியுமோ அவ்வளவுக்கு தியானம் செய்ய வேண்டும்.

நாம் செய்வதோடு நம் பழக்கத்துக்கு உட்பட்டவர்களையும் தியானம் செய்யும்படி சொல்ல வேண்டும். செய்யவில்லை என்று கோபித்துக் கொள்ளக்கூடாது. அன்போடு அவர்களுக்குப் படும்படி சொல்ல வேண்டும். அன்போடு சொன்னால் எப்படிப்பட்ட மனமும் கரையும்.

????????????? ????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
Veda Dharma Sastra Paripalana

Veda Dharma Sastra Paripalana

Veda Dharma Shastra Paripalana Sabha - 27th Visesha Upanyasam on 23rd November 2014 at Residence of Mr.T S Natarajan "B-8-6, 6th Cross Road, Delhi Avenue,
I I T Campus, Chennai-600036."


Upanyasam Presented by Brahmashri Vijayabhanu Ganapadigal on "AACHARYA BHAKTHI" from 6:30 PM to 8:00 PM.


10687069_389193501235695_3109362562093527525_n.jpg




Source: Sage of Kanchi
 
Obedience; சுச்ருஷை

OBEDIENCE; சுச்ருஷை


இங்கேயும் லோக ஜனங்களின் ஜகமத்யத்தை (ஒரே போன்ற சிந்தனையை)க் காட்டுவதாக் ஒன்று பார்க்கிறோம்.


Obey என்ற வார்த்தையிலிருந்தே obedience வந்திருப்பதாக எவரும் புரிந்து கொள்ள முடியும். லாடினிலிருந்து வந்த அந்த (ஒபீடியன்ஸ் என்ற) வார்த்தைக்கு ‘கவனமாகக் கேட்டுக் கொள்வது) என்றே மூல்த்தில் அர்த்தம் என்றும் சொல்கிறார்கள்.



‘சுச்ருஷை’ என்று ஒன்று நாம் சொல்கிறோம். குரு சுச்ருஷையையே சிஷ்யனுக்குத் தலையான கடமையாகச் சொல்கிறோம். அதற்கும் நேர் அர்த்தம் ‘கேட்டுக் கொள்கிறது’தான்.


ஆக, கீழ்ப்படிதல் என்பதற்கு இங்கிலீஷ் வார்த்தையான ஒபீடியன்ஸ், பணிவிடை என்பதற்கு நம் தேசத்து வார்த்தையான சுச்ருஷை ஆகிய இரண்டும் ‘கேட்டுக் கொள்வது’ என்ற ஒரே அர்த்தத்தின் அடியாகத்தான் இருக்கிறது. கீழ்ப்படிவதும் பணிவிடையும் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்கிற விஷயங்கள். இரண்டிற்கும் இரண்டு வேறே பாஷைகளில் ஒரே அர்த்தம். ஏன் அப்படி இருக்கணுமென்றால்….


’கேட்டுக் கொள்வது’ என்றால், என்ன கேட்டுக் கொள்கிறோமோ அந்தப்படியே செய்ய வேண்டும் என்பது தான் உள்ளர்த்தம். ‘சொன்னதைக் கேளு!” ,’சொன்னபடிக் கேக்கறதில்லே’ என்றெல்லாம் சொல்லும்போது அது தானே அர்த்தம்? ‘Hear’-கும் அந்த அர்த்தமுண்டு. பெரியவர்கள் சொன்னபடி நடப்பதுதான் நிஜமான சுச்ருஷையும் ஒபீடியன்ஸும். அதனால்தான் அப்படி வார்த்தைகள் ஏற்பட்டிருக்கின்றன.


ரொம்பப் பொருத்தமாக ஒன்று தோன்றுகிறது. ஒபீடியன்ஸைக் கீழ்படிதல் என்று சொல்கிறோம். உடம்பு பூராவையும் வாஸ்தவமாகவே கீழே பூமியிலே படியவிட்டுக் கிடப்பதுதான் ஸாஷ்டாங்க நமஸ்காரமாக இருக்கிறது!


: ( ) : kamakoti.org:
 
அம்மை அப்பனிடம் பக்தி!

அம்மை அப்பனிடம் பக்தி!

(மாணவர்களுக்கு அறிவுறை)

மனத்தில் அன்பும், சந்தோஷமும் இருக்கிற போதுதான் புத்தி தெளிவாக இருக்கிறது. புத்தி தெளிவாக இருக்கிற போது படித்தால் பாடம் நன்றாக ஏறுகிறது. கோபம், ஆத்திரம், அழுகை, பொறாமை எல்லாம் உண்டாகிறபோது புத்தி குழம்பிப் போகிறது. அப்போது படிப்பும் ஏறமாட்டேன் என்கிறது.

தினமும் கொஞ்ச நாழி ஸ்வாமியைப் பார்வதி - பரமசிவனாகவோ, மகாலக்ஷ்மி - மகாவிஷ்ணுவாகவோ நினைத்துக் கொண்டு விட்டீர்களானால் மனம் நல்லதாக ஆகும்; புத்தியும் தெளிவாக ஆகும். அதனால் படிப்பும் நன்றாக வரும். நன்றாகப் பாஸ் பண்ணி விடலாம்.

ரொம்பப் புத்திசாலியாக இருந்து நிறைய மார்க் வாங்கிப் பாஸ் பண்ணினால்கூட, நல்லவன் என்ற பெயரெடுக்கா விட்டால் பிரயோஜனம் இல்லை. நல்ல பெயர் இல்லாவிட்டால் பிற்காலத்தில் வாழ்க்கையில் முன்னேறவே முடியாது. நல்லவனாக இருந்துவிட்டால் அது நமக்கு சந்தோஷம்; மற்றவர்களுக்கும் சந்தோஷம்; பெரியவனான பின் வாழ்க்கையில் முன்னுக்கு வருவதற்கும் அதுதான் உதவும். நம்மை நல்லவர்களாக, புத்திசாலிகளாக, இரண்டாகவும் செய்வது ஸ்வாமியிடம் நாம் வைக்கிற பக்திதான்.

இந்தச் சின்ன வயதிலிருந்தே ஸ்வாமியைப் பிடித்துக் கொள்ள வேண்டும். இப்போதுதான் அவரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும் முடியும். வயதாக ஆக வேறு பல தினுசான ஆசைகள் எல்லாம் வந்து, ஸ்வாமியை நினைக்கவொட்டாமல் இடைஞ்சல் செய்யும். இப்போது உங்களுக்கு அந்த இடைஞ்சல் இல்லை. அதனால் இப்போதே அவரிடம் பக்தி வைக்கப் பழகிவிட்டால் அப்புறம்கூட அந்த ஆசைகள் உங்களிடம் வந்து உபத்திரவம் பண்ணாது.

நீங்கள் எல்லோரும் க்ஷேமமாக இருக்க வேண்டும். நிறைய மார்க் வாங்கி, நன்றாய்ப் பாஸ் பண்ணி வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும். இதற்கெல்லாம் வழியாக இப்போதிலிருந்தே ஸ்வாமியிடம், அம்மையப்பனிடம் பக்தியோடு இருங்கள்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.


Source: sage of Kanchi

varagooran Narayanan
 
The Jagadguru Shankaracharya of Sringeri (Full Film)

THE JAGADGURU SHANKARACHARYA OF SRINGERI: Life & Teachings of an Inspiring Saint


https://www.youtube.com/watch?v=1OOxm0KCFRw

In a world that changes all the time, one thing remains the same — our pursuit of happiness and desire to avoid suffering. The sages of Sanatana Dharma (or Hinduism as it is called today) have always taught us that the philosophy of the Upanishads and other texts like the Bhagavad Gita are our path to lasting happiness.

Foremost among our sages is Sri Adi Shankaracharya, who lived 1200 years ago and is credited with reviving Sanatana Dharma. He established four centers of learning in the four corners of India, of which the Sri Sharada Peetham at Sringeri is the first and most important. This Peetham is blessed with an unbroken lineage of eminent Jagadgurus that stretches directly back to Sri Adi Shankaracharya Himself.

Jagadguru Shankaracharya Sri Sri Bharati Tirtha Mahaswamiji is the current and 36th Acharya of this ancient lineage and exemplifies the God-realization of the Upanishadic sages. He is both a direct link to Sanatana Dharma's glorious past and the torch bearer to ensure that the Upanishadic teachings are vibrant even today. This film will take you on a journey into the life and teachings of this great sage. Where was He born and what was His childhood like? How did His divinity express itself? How did He meet His Guru? What made His Guru anoint Him as his successor? Why is His life relevant to us and what can we learn from it?

Through interviews with ordinary devotees, scholars and sannyasis, we discover how the Mahaswamiji practices the essential virtues of humility, compassion, unconditional giving and kindness. While scholars extol His great knowledge, spiritual seekers of all kinds (young and old alike) are carefully guided by Him on the path of Sanatana Dharma. By His personal example and His teachings, the Mahaswamiji demonstrates how the core tenets of Sanatana Dharma can help us lead a balanced, meaningful and happy life even in today's busy world.

An added feature of this film is the simple and penetrating Sanskrit discourse by the Mahaswamiji in which He teaches us about the path prescribed by Sanatana Dharma to avoid suffering and embark on the path to lasting happiness.

This film released on April 9, 2011 to honour the Shashtiabdapoorthi (61st Vardhanti Celebrations) of the Mahaswamiji, is being made available on the Internet on the occasion of Vyasa Puja (July 3, 2012).
 
samskaras

samskaras


The forty samskaras which are meant to purify the individual self are: garbhadhana, pumsavana, simanta, jatakarma, namakarana, annaprasana, caula, upanayana, the four rites like prajapatya (Vedavratas) performed during gurukulavasa (the years the celibate student spends in the home of his guru), the ritual bath on completion of gurukulavasa, marriage, the five mahayajnas performed everyday by the householder. We have listed nineteen so far. Then there are seven pakayajnas, seven haviryajnas and seven somayajnas to be conducted by the householder. Thus
19+21=40



The seven pakayajnas are: astaka (anvastaka), sthalipaka, parvana, sravani, agrahayani, caitri, asvayuji. The seven haviryajnas: agniyadhana, agnihotra, darsa-purnamasa, agrayana, caturmasya, nirudhapasubandha, sautramani. The seven somayajnas: agnistoma, atyagnistoma, uktya, sodasi, vajapeya, atiratra, aptoryama.



Out of the forty samskaras some are to be performed everyday, some at certain times and some at least once in a lifetime. In the first category there are five mahayajnas (panca-mahayajnas).


Rites done to the chanting of mantras are more beneficial than those done without it - a sacrament involving mantras is a samskara. The social service that a house holder does is included among his daily panca - mahayajnas. The panca - mahayajnas are: brahmayajna, devayajna, pitrayajna, manusyayajna and bhutayajna. The chanting of the Vedas constitutes brahmayajna. Sacrifices and puja are devayajna. Tarpana is pitrayajna. Feeding guests is manusyayajna. And offering bali to various creatures is bhutayajna.
Aupasana and agnihotra are part of the daily religious routine. Though a pakayajna, aupasana is not included in the group of seven pakayajnas mentioned above, while agnihotra is one of the seven haviryajnas. Darsa - purnamasa is a haviryajna to be performed once in fifteen days. The other five haviryajnas and the seven somayajnas are to be performed once a year or, at least, once in a lifetime. As if out of consideration for us, the Smrtis have granted us this concession: that the difficult somayajnas need be undertaken only once in a lifetime.



But for the parvani - sraddha which is to be performed once a month and the sthalipaka every Prathama, the other five pakayajnas are to be performed once a year.



To put it differently: the five mahayajnas (brahmayajna, devayajna, pitrayajna, manusyayajna, bhutayajna) together with agnihotra and aupasana are to be performed everyday; darsa-purnamasa and sthalipaka once a fortnight; parvani-sraddha once a month. The other yajnas are to be conducted once a year or at least once in a lifetime.



On a plot of land growing one crop, harvesting is done once a year, while on another plot growing three crops the same is done once every four months. Some crops have to be watered everyday, some on alternate days. Such jobs are samskaras. But there are differences in the samskaras for different crops. The same is the case with the samskaras meant for human beings.


Names of Samskaras from the Chapter "The Forty Samskaras", in Hindu Dharma : kamakoti.org:
 
தான எண்ணத்தையும் தானம் செய்க!

தான எண்ணத்தையும் தானம் செய்க!

வேதம் என்றாலே முதலில் ஞாபகம் வருவது யாகம்தான். யாகமும் த்யாகமும் ஒன்றுதான். இங்கிலீஷில்கூட யாகம், த்யாகம் இரண்டையும் ‘ஸாக்ரிஃபைஸ்’ என்றுதானே சொல்கிறார்கள்? ஆனதால், வைதிகம் என்பது தன்னலமே கருதுவது என்கிற அபிப்ராயம் அடியோடு பிசகு. தன்னலத்தை முழுக்க த்யாகம் பண்ணுவதுதான் ஸநாதன தர்மத்தின் லக்ஷ்யம். இங்கே ‘தர்மம்’என்பதே மதம். வேத தர்மம், ஹிந்து தர்மம் என்றாலே வேதமதம், ஹிந்து மதம் என்றுதான் அர்த்தம். இதே ‘தர்மம்’ பரோபகாரங்களில் ஒன்றான ஈகையாக நினைக்கப்படுவதை முன்பே சொன்னேன். அதனால் நம் மதமே பரோபகாரமானதுதான்.


யாகத்திலே நெருப்பில் வஸ்துக்களை, உடைமைகளைப் போட்டு த்யாகம் பண்ணினால் தேவ சக்திகளுக்கு ப்ரீதி உண்டாகிறது. அவர்கள் லோகத்துக்கு மழை, ஸுபிக்ஷம் நல்ல எண்ணம் எல்லாவற்றையும் அநுக்ரஹம் பண்ணுகிறார்கள். ஒருவன் தன் உடைமையை வேள்வித் தீயில் த்யாகம் பண்ணி இப்படி லோக க்ஷேமத்தைச் செய்ய வேண்டும்.


சொத்து ஸ்வதந்திரங்களை நாமே வைத்துக்கொண்டு அநுபவிப்பதில் பெறுகிற ஸுகம் ரொம்பவும் தாற்காலிகமானது இந்தத் தாற்காலிக ஸுகம் நித்ய ஸெளக்கியமான ஆத்மாபிவிருத்திக்கு ஹானியாகவும் ஆகிறது. ஆனால் இதே உடைமைகளை நாம் வைத்துக்கொண்டு அநுபவிப்பதைவிட, கொடுத்து அநுபவித்தால், இதுவே பரம ஆனந்தத்தை தருகிறது; சாஸ்வத ஸெளக்யத்துக்கும் வழிகோலுகிறது. இதனால்தான் உபநிஷத்துக்களில் முதலாவதான ”ஈசாவாஸ்ய” த்தில் முதல் மந்த்ரத்திலேயே, ”த்யாகம் பண்ணி அநுபவி” என்று சொல்லியிருக்கிறது. காந்திகூட இதில்தான் தம்முடைய ஃபிலாஸஃபி முழுக்க இருக்கிறது என்று சொல்லி, இந்த உபநிஷத்தை தலைக்கு மேலே வைத்துக்கொண்டு ஸ்லோகித்து வந்தார்.

கொடுக்க வேண்டும். அதுதான் த்யாகம். அதைத்தான் வேதம் எங்கே பார்த்தாலும் வற்புறுத்துகிறது. எந்தக் கர்மாவும் செய்து முடிக்கும்போது, ”நான் தான் கர்த்தா என்பதால் இதன் ப்ரயோஜனம் முழுதும் எனக்கே வந்துவிடப் போகிறதே! அப்படி என் ஒருத்தனுக்கு மட்டும் பலன் கிடைத்துவிடக் கூடாது” என்கிற பரம த்யாக புத்தியில் ”ந மம” – ”எனதில்லை; எனக்கில்லை” என்று அதன் பலனை லோக க்ஷேமார்த்தம் த்யாகம் பண்ணச் சொல்கிறது நம்முடைய மதம்.



மற்ற வஸ்துக்களை கொடுத்துவிட்டு, ”நான் கொடுத்தேன்” என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக்கொண்டே இருந்தால் இந்த அஹங்காரமானது த்யாகத்தாலும் தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபிவிருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். த்யாகம் பண்ணவேண்டும்; அதைவிட முக்யமாக த்யாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் த்யாகம் பண்ணிவிட வேண்டும்.


மஹாபலி நிறையக் கொடுத்தான்; வாரி வாரிக் கொடுத்தான். ஆனால் தான் கொடுக்கிறோம் என்ற அஹங்காரத்தை அவன் பகவானுக்கு பலி கொடுக்கவில்லை. இதானால்தான் பகவானே அவனிடம் இந்த அஹங்காரத்தை யாசகமாகப் பெற்று,அஹங்கார நாசத்துக்கு அடையாளமாகத் தலையிலே கால் வைத்தான்.
”ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிறேன்” என்று சொல்லிக்கொண்டு வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அஹங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால் இவனுக்கும் ப்ரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீஸால் லோகத்துக்கும் ப்ரயோஜனமிராது. தாற்காலிகமாக ஏதோ நன்மை நடந்ததுபோல் படாடோபமாகத் தெரியலாம்; ஆனால் அது நின்று நிலைத்து விளங்காது.


????????? | ??????????? ????? | Page 6
 
'குரு' இலக்கணம் '

'குரு' இலக்கணம் '


சார்யாளிடம் வஸித்து, வித்தையை அப்யாஸம் பண்ணுவதற்கு 'குருகுலவாஸம்' என்று பெயர். 'ஆசார்ய குல வாஸம்' என்றில்லை. இதைப் பார்த்தால் ஆசார்யர், குரு இரண்டும் ஒன்றேதான் என்று தோன்றும். ஜகத்குரு சங்கராச்சாரியார் என்பதால் ஒருத்தரே குரு ஆச்சார்யார் இரண்டுமாக இருக்கிறார் என்று ஏற்படுகிறது. இப்படியிருப்பதாலேயே இரண்டும் கொஞ்சம் வேறாயிருக்கலாமோ என்றும் தோன்றுகிறது. 'குரு' என்றால் நேர் அர்த்தம் என்ன? 'ஆச்சார்யார்' என்ற வார்த்தைக்கு definition சொன்னதுபோல 'குரு'வுக்கு என்ன சொல்வது?


'குரு' என்றால் 'கனமானது', 'பெரிசு' என்று அர்த்தம். அதாவது பெருமை உடையவர், மஹிமை பொருந்தியவர் என்று அர்த்தம். பெரியவர்களை கனவான், மஹாகனம் என்கிறோமல்லவா? ('ரைட் ஆனரபிள்' என்ற பட்டத்தை 'மஹாகனம்' என்றே சொல்வார்கள்.) 'பெரியவர்கள்' என்று இங்கே நான் சொன்னதே பெரிசை வைத்துதான். 'குரு' என்கிற மாதிரியே 'ப்ரஹ்மம்' என்றாலும் பெரிசு என்றுதான் அர்த்தம். கனமானவர், பெரியவர் என்றால் எதைக்கொண்டு இப்படிச் சொல்கிறது?.

கனமென்றால் Weight ஜாஸ்தி என்று அர்த்தமா? பெரியவரென்றால் வாட்டசாட்டமாக இருப்பதாக அர்த்தமா? மஹான், மஹான் என்றாலும் பெரிசானவர், பெரியவர் என்றுதான் அர்த்தம். எதில் பெரிசு? என்னை குரு என்கிறீர்கள். பெரியவா என்கிறீர்கள். இன்னும் குஞ்சம் அபிமானம் ஜாஸ்தியானால் மஹான் என்றும் சொல்கிறீர்கள். ( Weight , வாட்டசாட்டம் இவற்றைப் பார்த்தால்) என்னை இப்படிச் சொல்ல நியாயமில்லை. அதனால் இப்படியெல்லாம் சொல்லும்போது ஒருத்தர் உள்ளுக்குள்ளேயே அறிவாலோ, அநுபவத்தாலோ, அருளாலோ கனம் வாய்ந்தவர், பெருமை பெற்றவர் என்றுதான் அர்த்தம். பகவத்பாதாளின் பெயர் என்னிடம் ஒட்டிக் கொண்டிருக்கிற ஒரே காரணத்துக்காக, எனக்கு இதெல்லாம் இருப்பதாக ஏமாந்து குரு, பெரியவா, மஹான் இன்னம் என்னென்ன ஸாதோத்ரமாக உண்டோ அத்தனையும் சொல்கிறீர்கள்.


ஆக, குரு என்றால் அவர் உள்ளுக்குள்ளே ரொம்பப் பெருமை படைத்தவராகயிருக்க வேண்டும். ஆசாரியர் என்பவர் வெளியிலே படிப்பிலே பெரியவர், வெளியிலே போதனை பண்ணுவதில் சதுரர், வெளியிலே நடத்தையால் வழிகாட்டுவதிலே சிறந்தவர். அவருடைய உள் சீலம் ( Character ) தான் வெளிநடத்தையாக ( conduct ) ஆக வெளிப்படுகிறதே தவிர, வெளியே அவர் போலியாக உத்தமர் போல நடித்துக் காட்டுபவரல்ல என்பது நிஜமானாலுங்கூட அவரை வெளி லோகத்துடன் பொருத்தியே வைத்திருக்கிறது-உலகத்துக்கு அவர் தாம் உபதேசிக்கிற ஐடியல்களை வாழ்ந்து காட்ட வேண்டும்.


குரு ஸமாச்சாரம் என்ன? அவர் வெளியிலே எதுவுமே பண்ண வேண்டுமென்றில்லை. அவருக்கு வெளிப்படிப்பு, வித்வத் வேண்டும் என்றில்லை. அவர் சாஸ்திரங்களைப் படித்துக் கரை கண்டிருக்க வேண்டுமென்றில்லை. அவர் எந்த சாஸ்த்ரத்தையோ ஸம்பரதாயத்தையோ ஆசார்யரைப்போல வழுவறப் பற்றி ஒழுகிக்காட்ட வேண்டுமென்பதில்லை. ஏன், அவர் வாயைத் திறந்து போதனைப் பண்ணணும், உபதேசிக்கணும் என்றுகூட இல்லை. மௌனகுரு என்றே இருந்திருக்கிறார்களே!

தன்னில் தானாக நிறைந்து ஒருத்தர் எங்கேயாவது தன்னந்தனியாக உட்கார்ந்திருந்தால்கூட அவருடைய உள்பிரபாவம் தெரிந்தவர்கள் அவரை குருவாக வரிக்கிறார்கள். அதற்காக அவர் இவர்களுக்கு சாஸ்த்ரபாடம் சொல்ல வேண்டும் என்பது இல்லை. ஆனாலும் அவரை குருவாக வரித்தவரிடம் அவருடைய அநுக்ரஹ சக்தியே வேலை செய்து விடுகிறது. அவர் இவரை 'சிஷ்யர்'என்றுகூட நினைத்திருக்கமாட்டார். ஆனாலும் தம்மை அவருக்கு சிஷ்யராக நினைத்தவர் எதை நாடி அவரிடம் போனாரோ அது ஸித்தித்துவிடுகிறது.



படிப்பு என்றால் என்ன என்றே தெரியாமல் இப்படிப் பல குருக்கள். பாடம் நடத்தாமல் எத்தனையோ குருக்கள். வாயையே திறக்காத தக்ஷிணாமூர்த்திதான் ஆதிகுருவே! சாஸ்திர விதிகள் எதற்கும் கட்டுப்படாமல் பேய் மாதிரி, பிசாசு மாதிரி, பைத்தியம் மாதிரி, உன்மத்தம் மாதிரித் திரிந்த அதிவர்ணாச்ரமிகள் பலர் குருமார்களாக இருந்திருக்கிறார்கள். திகம்பரமாக இப்படித் திரிந்த தத்தாத்ரேயரைத்தான் அவதூத குரு என்று ரொம்பவும் ஏற்றம் கொடுத்துச் சொல்கிறோம்.


ஆசாரியன் என்பவன் எல்லாவற்றிலும் 'ஸிஸ்டம்'உள்ளவர். அவர் ஏதாவது ஒரு ஸிஸ்டத்துக்கு (சாஸ்த்ர ஸம்ரதாயத்துக்கு) பிரதிநிதியாக இருக்க வேண்டும். அதன் புத்தகங்களை, விஷயங்களை அவர் 'ஸிஸ்டமாடிக்'காகக் கற்றும் கேட்டும் அறிந்திருக்க வேண்டும். இதை கற்றும் கேட்டும் அறிந்திருக்க வேம்டும். இதை மற்றவர்களும் 'ஸிஸ்டமாடிக்'காக 'டீச்'பண்ணணும். எல்லாவற்றுக்கும் மேலே தாமும் 'ஸிஸ்டமாடிக்'காக வாழ்ந்து காட்ட வேண்டும்.


குருவுக்கு இப்படியெல்லாம் இருந்துதான் ஆக வேண்டும் என்று நிபந்தனை எதுவும் இல்லை. அவர் உள் அநுபவி. அவருடைய அநுபவத்தின் பெருமையாலேயே அவரை மஹான் என்பது. அதன் கனத்தாலேயே குரு என்பது. Character, Conduct (சீலம், நடத்தை) என்பதற்கெல்லாம் அவர் மேலே போனவர். பகவானின் காரெக்டர், கான்டக்ட் எப்படி என்று யாராவது பார்ப்போமா?அப்படித்தான் இதுவும். சாஸ்திரத்தைப் பார்த்துப் பண்ண வேண்டும் என்பதும் குருமார்களுக்கு இல்லை. ஆத்மா அல்லது பிரம்மம் என்பதோடு சேர்ந்த ஞானிகளாக அவர்கள் இருப்பார்கள்;அல்லது ஈஸ்வரன், பகவான் என்கிற மஹாசக்தியுடன் 'டச்'உள்ளவர்ளாக இருப்பார்கள்;அல்லது மனஸை அடக்கி ஸமாதியிலிருக்கிற யோகிகளாக இருப்பார்கள்.


உள்ளே இப்படியிருக்கிறவர்களே வெளியில் ஆச்சார்யர்களாகவும் வித்வத்துடன் பிரகாசித்துக் கொண்டு, சிஷ்யர்களுக்குப் போதனை பண்ணிக்கொண்டு, தாங்களே சாஸ்த்ரப் ப்ரகாரம் கார்யங்கள் செய்துகொண்டும் இருக்கலாம். பகவத்பாதாளும் மற்ற மதாசார்யர்களும் இப்படியே குரு, ஆசார்யன் இரண்டுமாக இருந்திருக்கிறார்கள்.


ஆத்ம ஸாக்ஷத்காரம், ஈஸ்வர ஸாக்ஷத்காரம், யோக ஸமாதி என்கிற அளவுக்குப் போகாவிட்டாலும் முன்னாளில் வித்யாப்யாஸம் செய்வித்த ஆசார்யர்கள் எல்லோருமே உள்ளூர ஒரு பெருமை படைத்தவர்களாகயிருந்தால்தான் அவர்களை குரு என்றும், அவர்களிடம் போய்ப் படிப்பதை குருகுலவாஸம் என்றும் சொல்வதாக ஏற்பட்டிருக்கிறது. ஒரு ஸிஸ்டத்தில் கட்டுப்படாதவராகயிருந்தாலுங்கூட சொந்தமாகவும், சாஸ்திரங்களைக் காட்டியும் நிறைய உபதேசம் செய்த குருக்களும் உண்டு. அவர் சொன்னபோது அவை குறிப்பிட்ட சாஸ்திர ஸிஸ்டமாக இல்லாவிட்டாலும், அவருக்குப் பிற்பாடு அவை அவர் பேரிலேயே ஒரு Systematised சாஸ்திரமாகி, அவரே அதற்கு மூல ஆசார்யர் என்றாகிவிடுவார். வெளியிலே ஸிஸ்டப்படி இருந்த அநேக ஆசார்யர்கள், உள்ளே தனக்குத்தானே ஒரு பெருமை படைத்த குருவாக இருந்திருக்கிறார்கள்; குருவாக இருந்த பலர் எந்த ஸிஸ்டத்திலும் வராமலும் இருந்திருக்கிறார்கள்.












'????' ???????? : ( ??????????? ????? - ???????? ????? ) : kamakoti.org:
 
ஆத்ம திருப்திக்கே ஆசாரம்

ஆத்ம திருப்திக்கே ஆசாரம்

பசுவைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தேன். பசுவின் முகத்தில் மஞ்சள் குங்குமமிட்டு கொம்பிலே குஞ்சலம் கட்டி, கழுத்திலே மாலைகள் போட்டு மணிகள் கட்டினால் பார்க்க ரொம்ப அழகாகத்தானிருக்கிறது.

நமக்குப் பல தினுஸில் உபகாரம் பண்ணும் பசுவைப் போற்றுவதில் psychological satisfaction இருப்பது போல இப்படி அந்த கோமாதாவை அலங்காரம் பண்ணிப் பார்ப்பதில் artistic satisfaction [கலையுணர்வுத் திருப்தி] -ம் உண்டாகிறது. ஆனாலும் பசுவுக்கு அர்ச்சனை பண்ணுவது என்றால் அப்போது அதன் முகத்திலே பண்ணாமல் பிருஷ்ட பாகத்திலே [வால் புறத்திலே] தான் அர்ச்சிக்க வேண்டும். நமக்கு அது பிடிக்கிறதா, பிடிக்கவில்லையா, இப்படிப் பண்ணுவதற்குக் காரணம் உண்டா, இல்லையா என்ற கேள்விக்கு இடமில்லை.

இப்போது நமக்கு ஒவ்வொன்றாகக் காரணம் தெரிகிற அநேக ஆசார விதிகளை ஏற்படுத்தின ரிஷிகள், காரணமில்லாமலா, ‘பசுவின் முகத்தில் பூஜை பண்ணாதே, பின்பக்கம் பண்ணு; அங்கேதான் லக்ஷ்மி வாஸம் பண்ணுகிறாள்’என்று சொல்வார்கள்? நம்பிப் பண்ண வேண்டும். அப்போது அங்கே வாஸம் பண்ணும் லக்ஷ்மி தெரிவாள். ஸைகலாஜிகலாவோ, வேறு விதங்களிலோ நம்மை ‘ஸாடிஸ்ஃபை’ பண்ணாவிட்டாலும் ஸரி, நாம் சாஸ்திரங்களுக்கு அடங்கி, அடி பணிந்து, அதன் பிரகாரம்தான் செய்ய வேண்டும். இந்த எல்லா ஸாடிஸ்ஃபாக்ஷன்களையும்விட ஆத்ம-ஸாடிஸ்ஃபாக்க்ஷனுக்காகத்தான் சாஸ்திராசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதுதான் எக்காலத்துக்குமான ‘ஸாடிஸ்ஃபாக்ஷன்’. மற்ற ‘ஸாடிஸ்ஃபாக்ஷ’னெல்லாம் அடுத்த நிமிஷமே பறந்து போய் ‘டிஸ்ஸாடிஸிஃபாக்ஷனில்’ கொண்டு விடுபவை தான். ஆத்மா நிறைந்து, திருப்தியாய், ஸாடிஸ்ஃபை ஆகவேண்டுமென்றால் பாபத்தைப் போக்கிக் கொண்டு புண்யத்தை ஸம்பாதித்துக் கொண்டால்தான் முடியும். இதற்காக நம்முடைய மற்ற ஸாடிஸ்பாக்ஷன்களைத் தியாகம் பண்ணிக் கஷ்டப்படவும் தயாராகத்தான் இருக்க வேண்டும்.



கோவிலுக்குப் போகிறோம். வழியிலே பிரஸவ ஆஸ்பத்திரியில் ஸஹோதரிக்குப் பிள்ளை பிறந்திருக்கிறது. குழந்தையைப் பார்க்க ஆசையாய்த்தானிருக்கும். ஸஹோதரியும் ரொம்ப ஸந்தோஷப்படுவாள்.

ஸைகலாஜிகல் ஸாடிஸ்ஃபாக்ஷன், மநுஷ்யாபிமானம் இவற்றைக் கொண்டு பார்த்தால் பிரஸவ ஆஸ்பத்திரிக்குள் போகத்தான் வேண்டும். ஆனால் அங்கே போய்வந்தபின் ஸ்நானம் பண்ண முடிந்தால்தான் கோவிலுக்குப் போகலாம். ஸ்நானம் பண்ணாமல் பிரஸவத் தீட்டோடு கோவிலுக்குப் போகப்படாது.

‘கோவிலில் விசேஷமாச்சே, போகத்தான் வேணும்’ என்றால், இப்போது நமக்கு ஸ்நானம் பண்ண வசதி இல்லாவிட்டால், பிரஸவித்த ஸஹோதரியைப் பார்க்காமலேதான் போக வேண்டும். அந்தத் தியாகம் பண்ணத்தான் வேண்டும். சாஸ்திரம் மநுஷ்யாபிமானமில்லாதது என்று குற்றம் சொல்வது நியாயமில்லை. அப்படிச் சொன்னால் அந்த ஆஸ்பத்திரியில் அமலாகிற வைத்ய சாஸ்திரத்தையும் குறை சொல்லத்தான் வேண்டும். ஏன்? அங்கே ஆபரேஷன் தியேட்டரில் நம்மை உள்ளே விடுவார்களா? நமக்கு ரொம்பவும் பிரியமான பந்துவுக்குப் பிராணாபத்தான ஆபரேஷன், அப்போது பக்கத்திலிருக்க வேண்டும். இரண்டு மணி-மூன்று மணி பெரிய ஆபரேஷன் நடக்கிற வரை இன்னது நடக்கிறது என்று தெரியாமல் வெளியிலே திக்கு திக்கென்று உட்கார்ந்திருக்க முடியாது என்றால் டாக்டர் ஒப்புக் கொள்வாரா?

உடலின் க்ஷேமத்தைக் குறித்து
டாக்டர் சொல்வதை ஒப்புக்கொண்டு, அவர் சொல்வது கடுமையாக இருந்தாலும் அவருடைய நல்லெண்ணத்தை மதித்து, அவரைத் திட்டாமல் தியேட்டருக்குள் போகாமலிருக்கிறோமென்றால் (நம் ஸைகலாஜிகல் ஸாடிஸ்ஃபாக்ஷனை ஸாக்ரிஃபைஸ் பண்ணுகிறோமென்றால்) அதே ஆஸ்பத்திரிக்கு, பிற்பாடு ஸ்நானம் பண்ணும் வசதி இருந்தாலொழியப் போகக்கூடாது என்று உயிரின் க்ஷேமத்தைக் கருதி சாஸ்திரகாரர் சொல்வதையும் திட்டாமல் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.



‘மற்ற தேசங்களில் பிரஸவத் தீட்டு பார்க்கிறார்களா, பஹிஷ்டா [மாதவிடாய்] விதிகளை அநுஸரிக்கிறார்களா? இன்னம் நம்முடைய மற்ற ஆசாரங்கள், ஸம்ஸ்காரங்கள் இதுகளைப் பின்பற்றுகிறார்களா?’ என்று கேட்பதில் அர்த்தமில்லை. இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் இப்படியிருக்கிற மற்ற எல்லா தேசங்களும் ஆத்ம ஸம்பந்தமான ஞானத்திலும், அப்படிப்பட்ட ஞானத்தை ஸம்பாதித்துக் கொண்டவர்களிலும் நம் தேசத்தைவிட ரொம்பவும் பின்தங்கியிருந்து வந்திருக்கின்றன என்று அவர்களே ஒப்புக்கொள்வதுதான். நித்ய சிரேயஸ் வேண்டும், ஈஸ்வரனை அடைய வேண்டும், ஆத்மஞானம் பெற வேண்டும் என்றால், அந்த தேசம்-இந்த தேசம், அந்தக் காலம்-இந்தக் காலம் என்று கால, தேசங்களைச் சொல்லிக் கொண்டிருக்காமல் சாஸ்திரப்படி செய்தால்தான் ஸித்தி கிடைக்கும்.



அதுவும் தவிர லோகத்திலேயே இந்த பாரத தேசத்தைத்தான் ஈஸ்வரன் கர்மபூமியாக வைத்திருக்கிறான். ஒரு வீடு என்றால் அதில் சமையலறை, பூஜையறை, படுக்கையறை என்று வெவ்வேறாக இல்லையா? ஒரு ஃபாக்டரி என்றால் அதில் யந்திரசாலை, நிர்வாஹஸ்தர் ஆஃபீஸ், கான்டீன் என்று தனித்தனியாக இல்லையா? இவற்றில் ஒன்றில் செய்வதை இன்னொன்றில் செய்வார்களா? அப்படி பகவான் லோகத்தில் வைதிக கர்மாநுஷ்டானத்துக்காக பாரத பூமியைத்தான் வைத்திருப்பதால் இங்கே மாத்திரம் இத்தனை சாஸ்திரங்களும் ஆசாரங்களும் ஏற்பட்டிருக்கின்றன.


இதிலே கடுமையாகத் தோன்றுவதும் நம்முடைய நித்ய ஸெளக்யத்தை உத்தேசித்துக் கருணையினால் சொன்னதுதான்.


நித்ய ஸெளக்யமான மறுமையின்பத்தோடு இம்மையின்பத்தையும் அது மறுமைக்கு பாதகமாக இல்லாதவரையில் சாஸ்திரங்கள் அளிக்கத்தான் செய்கின்றன. நோய் நொடியில்லாமலிருக்க வேண்டும்;ஜனங்களெல்லாம் ஸெளஜன்யமாகக் கூடி வாழ வேண்டும்; தப்பு தண்டாக்களில் மாட்டிக்கொண்டு கஷ்டப்படக் கூடாது என்று இம்மைப் பயன்களைக் கருதியும் அநேக ஆசாரங்கள் ஏற்பட்டிருக்கின்றன. பலர் நினைக்கிறபடி ஒரே நிர்தாக்ஷிண்யமாயில்லாமல், ஸைகலாஜிகலாகவும், மற்ற ரீதியிலும் அநேக இடங்களில் விட்டுக் கொடுத்தும் விதிமுறைகள் செய்யப்பட்டிருக்கின்றன.


???? ???????????? ?????? | ??????????? ?????
 
வைதிக மதம்

வைதிக மதம்

மூலமாகிய வேதம்


நம்முடைய மதம் என்பது சைவம், வைஷ்ணவம் என்று இரண்டு பெரிய பிரிவுகளாக இருக்கின்றது. 'இதை 'இரண்டு மதம் என்று சொல்வதா, ஒரே மதம்தான் என்று சொல்வதா?' என்று சந்தேகம் வரும்.


கிறிஸ்துவ மதத்திலும் காத்தோலிக், ப்ராடெஸ்டன்ட் என்று பிரிவுகள் இருக்கின்றன. இருந்தாலும, ஒரே மதம் என்று சொல்கிறார்கள். காரணம் என்ன? இரண்டு பேரும் பொதுவாகப் பூஜை செய்ய ஒரே கர்த்தரின் பெயரைச் சொல்லி வணங்குகிறார்கள். புத்த மதத்தில் ஹீனயானம், மஹாயானம் என்று இரண்டு மதமாகச் சொல்வதில்லை! காரணம் அவர்கள் இரண்டு பேருக்கும் புத்தரே தலைவர்.



இப்படி, சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் ஒரே ஸ்வாமி இருக்கிறாரா? இல்லை. இப்போது சாதாரண வைஷ்ணவர்கள் எப்படி இருந்தாலும் அவர்களுக்கு ஆசார்ய புருஷர்களாக இருப்பவர்கள் சிவன் கோயில் பக்கமே வரமாட்டார்கள். விஷ்ணுதான் அவர்களுக்கு ஸ்வாமி, அவர்களுக்கு சிவன் ஸ்வாமியே அல்ல.

விஷ்ணுவினுடைய பக்தர்களுக்கு, சிவனும் ஒரு பக்தன்தான் என்பது அபிப்ராயம். சைவர்களிலும் தீவிரவாதிகள், 'விஷ்ணு ஸ்வாமியே அல்ல; சிவன்தான் ஸ்வாமி; விஷ்ணு அவருக்குப் பக்தன்' என்று சொல்கிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?


'அது போகட்டும்; இவர்கள் இரண்டு பேரையும் ஒரு மதம் என்று சொல்ல இரண்டு பேருக்கும் பொதுவாக ஏதாவது ஒரு மதப்புஸ்தகமாவது இருக்கிறதா?' என்று பார்க்கலாம். கிறிஸ்துவம் இஸ்லாம் முதலியவற்றில் பல பிரிவுகள் இருந்தாலும், எல்லாருக்கும் பொதுவாக பைபிளும் குர் ஆனும் இருப்பதுபோல், சைவ வைஷ்ணவருக்குப் பொதுவான பிராமண கிரந்தம் இருக்கிறதா என்று பார்க்கலாம். சைவர்கள் தேவாரம் முதலிய திருமுறைகளைத் தங்கள் மத நூல்களாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். வைஷ்ணவர்களோ நாலாயிர திவ்வியப் பிரந்தம் தமது ஆதார நூல் என்கிறார்கள். புஸ்தகங்களும் வேறாகப் போய்விட்டன. ஸ்வாமியும் வேறாகப் போய்விட்டார். அப்படி இருக்க இரண்டு பேரையும் ஒரே மதம் என்று எப்படிச் சொல்லுவது?



நமக்குள் சைவர்கள், வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர் வைத்தானோ நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது. அவன் மட்டும் 'ஹிந்து' என்று பெயர் வைத்திருக்காவிட்டால், ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைஷ்ணவர், சாக்தர், முருக பக்தர், பிள்ளையார் உபாசகர், ஐயப்பன் பக்தர், எல்லையம்மனைக் கும்பிடுகிறவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

இப்போது 'ஹிந்து சமூகம்' என்று பொதுப் பெயரில் சொல்லப்படும் சமுதாயத்தை இப்படி ஏழெட்டாகத் தனித்தனி மதம் என்று பிரித்துவிட்டால், அதற்கப்புறம் ஒவ்வொர் ஊரிலும் முஸ்லீம், கிறிஸ்துவர்கள் போன்ற மதஸ்தர்கள்தான் அதிகத் தொகை இருப்பார்கள். அதாவது, இப்போது தேசத்தின் இரண்டு பக்கங்களில் மட்டும் பாக்கிஸ்தான் முளைத்திருப்பதுபோல் இல்லாமல், நம் தேசம் முழுவதுமே பாக்கிஸ்தானாகியிருக்கும். எத்தனையோ கிருத்திருமங்கள் செய்து பாக்கிஸ்தானைப் பிரித்த அதே வெள்ளைக்காரன்தான், எத்தனையோ யுக்திகள் செய்து நம்மை ஆரியர்-திராவிடர் என்றெல்லாம் பேதப்படுத்திய அதே வெள்ளைக்காரன் தன்னையும் அறியாமல் நமக்கு 'ஹிந்து' என்று பொதுப் பெயரைத் தந்து, இன்று இந்தியா தேசம் என்று ஒன்று இருக்கும் படியான மகா பெரிய நன்மையைச் செய்திருக்கிறான்!

அப்படியானால், நமக்கு ஒரு மதமா, இரண்டு மதமா? வைஷ்ணவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே, சைவர்களுக்கு ஸ்வாமி வேறே, புஸ்தகம் வேறே என்று சொன்னாலும் உண்மை அப்படி அன்று. இப்போது இருக்கிறவர்களுடைய மனோபாவத்தைக் கவனித்தால் அது வேறு மதம், இது வேறு மதம் என்று சொல்லக்கூடிய ஹேது வளர்ந்திருக்கிறதே தவர, அவர்களுடைய முதல் நூல்களைப் பார்த்தோமானால் உண்மை தெரியவரும்.

சைவத் திருமுறைகள், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் என்கிற இரண்டையும் பாடினவர்கள் தங்களது நூலே "முதல் நூல்" என்று சொல்லவே இல்லை; நினைக்கவே இல்லை. அவர்கள் தங்களை மதஸ்தாபகர்களாகவும் நினைத்துக் கொண்டதே இல்லை. அவர்கள் காலத்துக்கு முந்தியே ஒரு மதம் இருந்திருக்கிறது. ஆழ்வார்கள் பாடுவதற்கு முந்தி வைஷ்ணவம் இருந்திருக்கிறது. நாயன்மார்களுக்கு முந்தியும் சைவம் இருந்திருக்கிறது. இவற்றுக்கு முதல்நூல் எது என்று பார்த்தால் மறைகள்தாம்: அதாவது வேதங்களே. சைவர்கள் ஈசுவரனையே,

'வேதமோ டாறங்க மாயி னானை'
'வேதநாதன், வேத கீதன், ஆரணன்காண்'
என அநேக இடத்தில் சொல்கிறார்கள்.

வைஷ்ணவ நூல்களிலும் இப்படித்தான், 'வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்' என்று சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொல்லியிருப்பதை நாம் சரியாகக் கவனித்தால், இவ்விருவர்களுக்கும் மூலப் புஸ்தகம் ஒன்றே என்பது தெளிவாகும். இப்போது சைவர்களுக்கும் வைஷ்ணவர்களுக்கும் முக்கியமாக இருக்கிற தேவாரமும், பிரபந்தமும் ஒரே பொது மூலமான வேதத்தை ஆதாரமாகக் கொண்டு உண்டானவையே. தேவாரத்தையும் பிரபந்தத்தையும் பாடிய மகான்கள் எங்கு பார்த்தாலும் வேதத்தின் பெருமையையே பேசுகிறார்கள். எந்த க்ஷேத்திரத்தை வர்ணித்தாலும் 'அங்கே வேத ஒலி மிகுந்திருந்தது; ஹோமப் புகை மிகுந்திருந்தது; வேதம், அதன் அங்கங்கள் எல்லாம் தழைத்திருந்தன' என்று பரவசமாகச் சொல்கிறார்கள். ஸ்வாமியைப் பற்றிச் சொல்கிற அளவுக்கு வேதத்தைப் பற்றியும் சொல்கிறார்கள்.



வேதம் ஒரே தத்துவத்தைப் பல மூர்த்திகளாக்கித் தந்திருக்கிறது. வேதம் என்ற நதியில் இந்த ஒவ்வொரு மூர்த்தி வழிபாடும் ஒரு துறை மாதிரி, 'வேத நெறி தழைத்தோங்க, மிகு சைவத்துறை விளங்க', என்று இதையே சேக்கீழார் சுவாமிகள் சொல்கிறார்.


இப்படியே சாக்தம், காணபதம் (பிள்ளையார் உபாஸனை), கௌமாரம் (முருகன் வழிபாடு), ஸௌரம் (சூரியனையே பரமாத்மாவாக உபாஸிப்பது) முதலான எதை எடுத்துக் கொண்டாலும் அதன் ஆதார நூல்களில், இந்த வழிபாட்டுக்கு ஆதாரம் வேதத்திலேயே இருக்கிறது; 'எங்கள் ஸ்வாமி வேதத்திலேயே ஸ்தோத்திரம் பண்ணப்பட்டவர்' என்றே சொல்லியிருக்கும்.



ஆக 'ஹிந்து' மதம் என்ற பெயருக்குள் உள்ள அத்தனை பிரிவுக்கும் ஆதாரமான நூல் ஒன்றே என்றாகிவிட்டது.



அந்த ஆதாரமான வேதத்தில், சைவ-வைஷ்ணவ-ஸ்மார்த்த சம்பிரதாய ஆசாரியர்கள் எல்லோரும் தசோபநிஷத்துக்கள் என்கிற பத்து உபநிஷதங்களுக்குப் பாஷ்யம் செய்திருக்கிறார்கள். இந்த உபநிஷதங்களுள் பிரம்மம் ஒன்றே ஸ்வாமி என்றுதான் சொல்லியிருக்கிறது. அதற்கே ஓரிடத்தில், கடோபநிஷத்தில் விஷ்ணு என்றும், இன்னோரிடத்தில் மாண்டூக்ய உபநிஷத்தில் சிவம் என்றும் பெயர் சொல்லியிருக்கிறது. வேத சம்ஹிதைகளில் வருகிற மித்ரன், வருணன், அக்னி, இந்திரன் முதலான அத்தனை தெய்வங்களும்கூட இந்த சத்தியத்தின் பல பேர்கள்தான் என்றும் அதே வேதத்தில் சொல்லியிருக்கிறது. (ஏகம் ஸத் விப்ரா: பஹுதா வதந்தி)

ஆனபடியால், நம் மதத்தின் அத்தனை பிரிவுகளுக்கும் பொதுப் புஸ்தகம், பொது ஸ்வாமி இரண்டும் இருப்பதாக ஆகிவிட்டது. பொதுப் புஸ்தகம் வேதம், பொது ஸ்வாமி பிரம்மம். எனவே, சந்தேகமில்லாமல் நாம் எல்லாரும் ஒரே மதம்தான் என்று தீர்மானமாகச் சொல்லிக்கொள்ளலாம்.


அந்தப் பொது ஸ்வாமியையும் நமக்குக் காட்டிக் கொடுத்திருப்பது பொதுப் புஸ்தகமான வேதம்தான். ஸ்வாமியைக் காட்டிக் கொடுத்திருப்பதோடு, ஆசாமிகளான நாம் எப்படி வாழ்க்கை நடத்தி முடிவில் அந்த ஸ்வாமியாகவே ஆகவேண்டும் என்பதற்கும் நமக்கு வழிகாட்டிப் பரமோபகாரம் செய்வது இந்த வேதம்தான். இகம், பரம் இரண்டுக்கும் அதுதான் நமக்குக் கதி; அதுதான் இத்தனை சம்பிரதாயங்களுக்கும், சித்தாந்தங்களுக்கும் மூலம், வேர். நம்முடைய மதப்பிரிவுகள் எல்லாம் வேதத்திலிருந்தே வந்தவை. வேர் ஒன்று; கிளைகள் பல.


ஆராய்ந்து பார்த்தால், ஹிந்து மதப் பிரிவுகளுக்கு மட்டுமின்றி உலகில் உள்ள எல்லா மதங்களுக்குமே மூலம் வேதம்தான் என்று தெரியும். அந்த மூலத்தை மங்காமல் ரக்ஷிக்க வேண்டும் என்பதே நம்முடைய தலையாய கடமை.


???????? ????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
Sri Maha Periva Aradhana by Kanchi Periva Forum - Thursday 18 Dec 2014

Sri Maha Periva Aradhana by Kanchi Periva Forum - Thursday 18 Dec 2014



The event is scheduled to be held at Sri Sankara Gurukulam, CP Ramaswamy Road (Landmark: Off St Mary's Road & Abhiramapuram 4th Street), Abhiramapuram, Chennai 600018.

Here is the tentative schedule of events.



Morning Time- 9.00- 12.30
1- Sri Vigneswara Pooja
2- Sankalpam
3- Abhishekam to Sri Maha Periva with Veda Gosham
4- Sri Maha Periva Sahasranama Archanai
5- Sri Maha Periva Ashtotaram
6- Dhoopa-Deepa-Naivedyam
7- Karpoora Harathi
8- Prasada Viniyogam

Evening Time-5.00-8.30

1- Sri Vishnu Sahasranama Parayanam
2- Sri Lalitha Sahasranama Parayanam
3- Bhajans
4- Upanyasam on Sri Maha Periyava Mahimai
5- Naivedyam, Karpoora Harathi
6- Prasada Viniyogam


Periva Aradhana - Guruvaram - Dec 18, 2014 | Kanchi Periva Forum
 
ஞானாம்பிகை

ஞானாம்பிகை

ஸ்ரீ வித்யா’ என்று தேவி உபாஸனையைச் சொல்கிறோம். ‘வித்யா’ என்றாலே ஞானம்தான். அவித்யை என்றால் அஞ்ஞானம், ஞானப்பால் தருகிற குருவான அம்மாவாக அம்பிகை இருக்கிறாள். இந்திராதி தேவர்களுக்கும் ஞானம் தந்தவள் அவளே என்று ஸாம வேதத்தைத் சேர்ந்த கேன உபநிஷதம் ஒரு கதை சொல்கிறது.

கதை இதுதான்:


ஒரு காலத்தில் தேவாசுர யுத்தத்தில் தேவர்கள் ஜயம் பெற்றார்கள். ‘பரமாத்மா தந்த சக்தியைக் கொண்டே யுத்தம் செய்தோம்; அவரது அநுக்கிரகத்தாலேயே வெற்றி பெற்றோம்’ என்பதை மறந்து, தேவர்கள் தங்களைத் தாமே மெச்சிக் கொண்டார்கள்.


தங்கள் சக்தியால் தாங்களே வெற்றியைச் சாதித்துவிட்டதாகச் கர்வப்பட்டார்கள். ‘இது ஏதடா, அசுரர்களை ஜயித்த இந்த தேவர்களுக்கே அசுர குணம் வந்துவிடும் போலிருக்கிறதே’ என்று பார்த்தார் பரமாத்மா.
அவர்கள் அப்படிக் கெட்டுப் போகாமல் ரக்ஷிப்பதற்காக அவர்களுடைய கண்ணுக் கெட்டுகிற தூரத்தில் அடிமுடி தெரியாத ஒரு ஜோதிஸ்வரூபமாய் நின்றார்.


‘இதென்ன யக்ஷவடிவம்?’ என்று தேவர்கள் அதிசயித்தார்கள். நமக்குப் புரியாததை ‘யக்ஷிணி’ என்று இப்போதும் சொல்கிறோம் அல்லவா? அம்மாதிரி தேவர்கள் அதை யக்ஷம் என்கிறார்கள். அதனிடம் அக்னியை அனுப்பினார்கள்.


அது என்ன என்று தெரிந்துகொண்டு வருவதற்காக அக்னியை அனுப்பினார்கள். அவன் அதை நெருங்கி “நீ யார்?” என்று கேட்பதற்கு முன்பே, அது இவனைப் பார்த்து “நீ யார்?” என்றது?.


“நான் அக்னியாக்கும். ‘ஜாத வேதஸ்’ என்கிற பெயரும் எனக்கு உண்டு” என்றான்.

“சரி, உனக்குள்ள சக்தி என்ன?” என்று யக்ஷம் கேட்டது.

“நான் எதையும் எரித்து பஸ்மீகரம் பண்ணிவிடுவேன்” என்றான் அக்னி.
“ஒஹோ! அப்படியானால் இதை எரி பார்க்கலாம்” என்று சொல்லி ஒரு துரும்பை எடுத்துப்போட்டது யக்ஷம்.
அக்னி தன் பூரண சக்தியையும் அந்தத் துரும்பின் மேல் பிரயோகித்தான்.
ஆனால் துரும்பு எரியவே இல்லை.


அக்னி வெட்கமடைந்து தேவர்களிடம் திரும்பி வந்து நடந்ததைச் சொன்னான்.
‘இதென்னடா! நாம் வெற்றி கொண்டாடும்போது இப்படி நம்மில் ரொம்ப சக்திமானான ஒருத்தனுக்கு – அக்னிக்கு – அபஜயம் வந்ததே’ என்று தேவர்கள் நினைத்தார்கள். யக்ஷம் இன்னதென்று தெரியாததே ஒரு தோல்விதான்; அப்புறம் இந்த அபஜனம் வேறு. அதன்பின் அவர்கள் வாயுவை யக்ஷத்திடம் அனுப்பினார்கள்.
முன்போலவே, “நீ யார்” என்று கேட்டது யக்ஷம்.


‘நான் வாயு’. ‘மாதரிச்வன்’ என்றும் பெயர் பெற்றவன். எதையும் புரட்டித் தூக்கிக்கொண்டு போகும் சக்தி வாய்ந்தவனாக்கும்’ என்றான் வாயு.
“சரி, இந்த சின்னத் துரும்பைத் தூக்கிப்பார்” என்றது யக்ஷம்.



வாயு பிரம்மப் பிரயத்தனம் செய்தும் அவனால் துரும்பை அசைக்க முடியில்லை.


வாயுவும் திரும்பி வந்தான்… “நீ யார்?” என்று யக்ஷத்தைக் கேட்பதற்கே வாயில்லாதவனாக.
‘நாம் அசுரரிடம் அடைந்த ஜயத்தைக் கொண்டாடும் வெற்றி விழாவை இப்படி இது அபஜயமாக்கிவிட்டதே’ என்று தேவர்கள் யோசித்தார்கள்.


இப்போது தேவராஜனுக்கே ஒருவித அடக்கம் உண்டாகிவிட்டது. தங்களைவிடப் பெரியதொரு சக்தி இருக்கிறது என்கிற அறிவு உண்டாயிற்று. அகம்பாவம் போய், ஒரு க்ஷணம் ஈசுவர பக்திகூட உண்டாகிவிட்டது.


நாம் ஏதோ சாதித்துவிட்டதாக அவ்வப்போது வெற்றிவிழாக் கொண்டாடுகிறோம். இப்போது நம் தேசத்தில் இது ரொம்ப ஜாஸ்தி. கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் அந்த வெற்றி எங்கே போச்சு என்று தெரிவதேயில்லை. வேறு யாரோ வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். அப்புறம் அவர்கள் கதையும் மாறிப்போகிறது. மாறாத ஜயம் ஆத்ம ஜயம்தான். அந்த ஜயமும் சரி. மற்ற லௌகிக வெற்றிகளும் சரி, பரதேவதையின் கிருபையாலேயே கிடைப்பவை.


இதைப் புரிந்துகொண்டு, தேவதைக்கெல்லாம் சக்கரவர்த்தியாக இருக்கப்பட்ட இந்திரன் யக்ஷத்தை விநயத்துடன் நெருங்கினவுடன், மகாகாருண்யம் பொருந்திய அது இவனுக்கு ஞான அநுக்கிரஹம் செய்வதற்காக திவ்விய ஸ்திரீ ரூபத்தில் நின்றது.


(யக்ஷம் நின்ற) ‘அந்த ஆகாசத்திலேயே மகத்தான சோபை பொருந்திய ஹைமவதியான உமாதேவி பிரகாசித்தாள்’ என்கிறது உபநிஷத்து.


உருக்கிய பொன்னைப் போன்ற பிரகாசத்தோடு, அதாவது ஞான ஒளியாக ஒளித்துக்கொண்டு நின்ற அம்பாளை இந்திரன் நமஸ்கரித்தான். “சற்று முன் இங்கு தோன்றிய யக்ஷ வடிவம் என்ன?” என்று கேட்டான்.
சாக்ஷாத் அம்பிகை அவனுக்கு ஆசாரிய ஸ்தானம் வகித்து ஞானோபதேசம் செய்தாள்;


“அப்பா, பிரம்மம்தான் அந்த யஷ வடிவம். இவ்வளவு பிரபஞ்சத்துக்கும், உனக்கும். சகல தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காரணமாக, ஆதாரமாக இருப்பது அது ஒன்றுதான். அதன் அகண்டமான சக்திதான் எல்லா ஜீவராசிகளிடமும் கண்டம் கண்டமாக, துளித் துளி இருக்கிறது” என்று உபதேசித்தாள்.


முதலில் யக்ஷ வடிவமாக நின்று, தேவர்களை அவமானப்படுத்தினாள். அவமானப்படுத்தியது அகம்பாவத்தை அடக்குவதற்கே! அகம்பாவம் அடங்கினவுடன் பரமாநுக்கிரஹமாக ஞானோபதேசம் தந்தாள்.


தேவராஜன் உண்மையை இதுவென (இதம்) முதலில் கண்டுகொண்டதாலேயே (த்ர) அவனுக்கு ‘இந்திரன்’ என்று பெயர் உண்டாயிற்று. மற்ற தேவர்கள் பிரம்ம ஸ்வரூபத்தை பார்த்ததோடு சரி. இவன்தான் அதன் கருணாமூர்த்தமான அம்பாளைத் தரிசனம் செய்து, அவளிடமிருந்து பிரம்ம ஸ்வரூப ரஹசியத்தை உபதேசமாகப் பெற்றுக்கொண்டு வந்தவன்.


kural_admin | ??????????? ????? | Page 63
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top