• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
Veda Dharma Sastra Paripalana

Veda Dharma Sastra Paripalana

Veda Dharma Shastra Paripalana Sabha - 24th Visesha Upanyasam on 9th November 2014 at Residence of Mr. V.Balaji C 208- Marvel Shrijee Apts, Amman Koil Street, Vadapalani, Chennai – 600026 (near Vadapalani Murugan Temple) .

Upanyasam Presented by Brahmashri Vadakudi shri. T. Sundararama Dikshidhar on "Shat Karmakkal" from 6:30 PM to 8:00 PM.


10419037_383489031806142_7604368306237651096_n.jpg



Source: Sage of Kanchi
 
நந்தனார்: உண்மையை வென்ற கற்பனை

நந்தனார்: உண்மையை வென்ற கற்பனை

நந்தனார் கதை தெரிந்த எல்லோரும் அவர் ஒரு ஈவிரக்கமில்லாத பிராம்மணர் பண்ணையாரிடம் படாதபாடுபட்டவர் என்று தீர்மானமாக நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் வாஸ்தவத்தில் அறுபத்து மூவர் சரித்திரங்களுக்கு அதாரிட்டியான பெரிய புராணத்தில் வருகிற நந்தனார் கதையில் அந்த வேதியர் பாத்திரமே கிடையாது.



பெரிய புராணத்தில் திருநாளைப் போவார் நாயனார் புராணம் என்ற தலைப்பில் வருகிற நந்தனாருடைய கதையைப் பார்த்தாலே தெரியும். அவர் எந்தப் பண்ணையாரிடமும் சேவகம் பண்ணியவரில்லை. தத்தம் குலாச்சாரப்படி தொழில் செய்யும் எல்லா ஜாதிக்காரர்களுக்குமே அந்தக் காலத்தில் ராஜமான்யமாக நிலம் சாசனம் செய்யப்பட்டிருக்கும்.



நன்றாக எல்லை கட்டிய அந்த நிலத்துக்குத் துடவை என்று பெயர். அப்படிப்பட்ட பறைத் துடவையை நந்தனாரும் பெற்றுத் தம்முடைய சொந்த நிலத்தில் பயிரிட்டு வந்ததாகத்தான் பெரிய புராணத்தில் வருகிறது. இவரோ பிறந்ததிலிருந்து மறந்தும் சிவ சிந்தனை தவிர வேறே இல்லாதவர் என்று சேக்கிழார் சொல்லியிருக்கிறார். க்ஷேத்திரம் க்ஷேத்திரமாகப் போய்க்கொண்டே அவர் சிவத்தொண்டு செய்துவந்ததாகத்தான் மூல நூலான பெரிய புராணத்திலிருக்கிறதே தவிர ஒரு கொடுங்கோல் பிராம்மணரிடம் அடிமைப்பட்டு ஒரே இடத்தில் கட்டிப் போட்டாற்போலக் கிடந்தாரென்று இல்லை.



கொடுங்கோல் பிராம்மணர்களை சிருஷ்டி பண்ணியதும் ஒரு பிராம்மணர்தான். போன நூற்றாண்டில் இருந்த கோபாலகிருஷ்ண பாரதி என்கிற பெரியவர். நம்முடைய மதிப்பு மரியாதைக்குரிய பெரியவர். சிவ பக்தியில் ஊறியவர். கேட்கிற எவருடைய நெஞ்சத்தையும் அந்த பக்தியில் கரைக்கும்படியான உசந்த பாட்டுகள் கவனம் செய்தவர். கடைசிவரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து மஹா சிவராத்திரி புண்யகாலத்தில் சுவாமியோடு கலந்து விட்டவர். அவர் ஏழை எளியவர்களிடம் ரொம்பவும் இளகின சுபாவத்துடன் இருந்திருக்கிறார். அதோடு நல்ல நாடக உணர்ச்சி, உணர்ச்சியைப் பாராட்டித் தரும் சாமர்த்தியம் எல்லாமும் படைத்தவராக இருந்திருக்கிறார்.



அவர் நாளில் அந்தச் சீமையில் மிராஸ் பண்ணும் பிராம்மணர்களில் ஒருத்தர் இரண்டு பேர் உழவு செய்யும் ஆள்காரர்களை ரொம்பவும் கொடுமைப்படுத்தியதையும், அப்படியும் அந்த எளிய ஜனங்கள் எதிர்த்துச் சண்டை போடாமல், இப்படித்தான் நம் ஜன்மா என்று சகித்துக்கொண்டு இருந்து வந்ததையும் அவர் பார்த்தார். ஏற்கெனவே அவருக்கு எந்த ஜாதியரானாலும் பக்திச் செல்வத்தைக் குறைவறப் பெற்று ஈச்வரனுடனேயே இரண்டறக் கலக்கும் உன்னத நிலைவரை போய்விட முடியும் என்று காட்டும் திருநாளைப்போவார் சரித்திரத்தில் தனியான ஈடுபாடு இருந்திருக்கிறது.



அந்த நினைப்பும் அவர் நேரில் கண்ட நிலவரமும் அவருடைய நாடகத் திறமையில் ஒன்றாகச் சேர்ந்து வேதியர் பாத்திரத்தை சிருஷ்டிக்கப் பண்ணிவிட்டது. பறைத் துடவை பெற்றிருந்த நந்தனாரை அந்த வேதியரின் கூலியாளாக ஆக்கி அவரிடம் கொடுமைப்படுவதாகக் கதையை அழகாக ஜோடித்து மேலே மேலே சீன்களைக் கற்பனைப் பண்ணி நந்தன் சரித்திரக் கீர்த்தனையாகப் பாட வைத்து விட்டது.



அப்புறம் கதாகாலஷேபக்காரர்கள், காந்தீய தேசாபிமானிகள் எல்லோரும் அதை விசேஷமாக பிராபல்யப்படுத்தியதில் மூலமான பெரிய புராணத்துத் திருநாளைப்போவார் கதையே எடுபட்டுப்போய் இதுதான் நந்தனார் கதை என்றே ஆகியிருக்கிறது. இதை பார்ப்பவன், கொடுங்கோல் என்று வசைமாரி பாடுகிறவர்கள். இதோ பாருங்கள், ஒரு ஐயரே கொடுக்கும் ப்ரூஃப் என்று காட்டுவதில் கொண்டுவிட்டிருக்கிறது.



அந்தக் காலத்தில் மகா வித்வான் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை தமிழறிஞர்களில் முக்கியமான ஸ்தானம் வகித்தவர். அவர் பிராம்மணரில்லை. ஆனாலும் குறுகிய ஜாதி நோக்கில் பார்க்காமல் நடுநிலையாகப் பார்த்தார். பார்த்து, என்னதான் கல்பனா சக்தி. எளிய ஜனங்களிடம் அநுதாபம் இருந்தாலும் இப்படி ஒரு மூலக் கதையை மாற்றியிருப்பது சரியில்லை எனறு முடிவு பண்ணிவிட்டார். விஷயம் தெரியாமல் அவரிடமே சிறப்புப் பாயிரம் வாங்கவேண்டுமென்று கோபால கிருஷ்ண பாரதி போனார்.



வீடுதேடி வந்த பிராம்மணரிடம் தப்பெடுக்க வேண்டாமென்று நினைத்து, நீங்கள் இதை முக்கியமாக சங்கீத நாடக பாணியில் அமைத்திருக்கிறீர்கள். எனக்கோ சங்கீதம் பிடிக்காது. தமிழ்ப் புலமை, சிவ பக்தி ஆகியவற்றோடு நல்ல சங்கீத வித்வத்துவம் உள்ள எவரிடமாவது நீங்கள் பாயிரம் வாங்குவதுதான் பொருத்தம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். ஆனாலும் தம்மிடம் தமிழ் கற்றுக் கொண்டிருந்த உ.வே. சுவாமிநாதையர் போன்றவர்களிடம் மனசில் இருந்ததைச் சொன்னார். அதனால்தான் இப்போது உங்களுக்கு நான் இந்தக் கதை சொல்ல முடிகிறது.


அப்போதைக்கு பாரதி திரும்பிப் போனாலும் மறுபடியும் வந்தார். பண்டித, பாமர ரஞ்ஜகமாக நீங்கள் எழுதியிருக்கிற இந்த நூல் தானே பிரசித்தி அடையும். என் பாயிரம் அவசியமேயில்லை என்று சொல்லிப் பிள்ளை அவரை அப்போதும் திருப்பியனுப்பி விட்டார்.


இப்படி பாரதி பல தடவை நடையாக நடந்து பிறகு ஒரு தடவை நடுமத்தியான வேளையில் வந்தார். அப்போது வீட்டுக்குள்ளே பிள்ளை சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறாரென்று தெரிந்தது. அவர் எழுந்திருந்து வருகிறபோது வரட்டும் என்று வாசல் திண்ணையில் பாரதி உட்கார்ந்து விட்டார். உட்கார்ந்தவர் தன்னையறியாமல் நந்தன் சரித்திர கீர்த்தனைகள் பாட ஆரம்பித்தார்.


உள்ளே அரைத் தூக்கமாயிருந்த பிள்ளையின் காதில் பக்தி பாவம், ராக பாவம் இரண்டும் பூர்ணமாக இருந்த அந்தப் பாட்டுக்கள் விழுந்ததால் அவரும் அதில் ஆகர்ஷணமாகிவிட்டார். அந்தப் பாட்டுகளில் இலக்கணப் பிழைகள் வழு என்பது இருப்பதாகவும் ஏற்கெனவே அவருக்கு இரண்டாவது குறை. இப்போது, பாடியவருடைய பக்திப் பிரவாகத்தில் அந்த வழுவெல்லாங்கூட அடித்துக்கொண்டு போய்விட்டாற்போலத் தோன்றிற்று. அந்த பிரவாகத்தைத் தடைப்படுத்த வேண்டாமென்றே, அவர் தொடர்ந்து தூங்குகிற மாதிரி இருந்து கேட்டுக் கொண்டிருந்தார். வருகலாமோ? என்ற பாட்டுக்கு பாரதி வந்தார்.


ஏற்கெனவே அந்த வார்த்தையை இலக்கண சுத்தமில்லை என்று பிள்ளை கண்டித்திருக்கிறார். வருகை, போகை என்று உண்டு. வருதல், போதல் என்றும் உண்டு. அவை இலக்கண சுத்தமான பிரயோகங்கள். இரண்டுமில்லாமல் இதென்ன வருகல்?ஆரம்ப வார்த்தையே சரியாயில்லையே. வரலாமோ? என்றாலே சரியாயிருக்குமே என்று சொல்லியிருக்கிறாராம்.


ஆனால் இப்போது நந்தனார் தூரத்திலிருந்து சிதம்பரம் கோவிலை தரிசனம் பண்ணி, ஒரு பக்கம் பக்தியிலே தாபமான தாபம். இன்னொரு பக்கம் தன்னுடைய பிறவியை நினைத்துத் தயக்கமான தயக்கத்தோடு கண்ணுக்குத் தெரியாத நடராஜாவை மனக் கண்ணால் பிடித்து நிறுத்தி வைத்து, கண்ணுக்குத் தெரியும் அந்த சந்நிதானத்துக்குத் தானும் வரலாமா, வரலாமா என்று என்றைக்கோ உருகி உருகிக் கேட்டதை, அதே தாபத்தோடு பாரதி உருக்கமாகப் பாடிக் கேட்டவுடன் மீனாக்ஷி சுந்தரம் பிள்ளைக்கு இலக்கணப்பிழை, திருமுறையை மாற்றிய பிழை எல்லாம் மறந்து போய்விட்டதாம்.


இப்பேர்ப்பட்ட பக்த சிகாமணி நாம் திரும்பத் திரும்ப விரட்டியடித்தும் பாயிரத்துக்காக வருகலாமோ? என்று நம்மிடமே கேட்பதுபோல் பண்ணி விட்டோமே என்று ரொம்பவும் பச்சாத்தாபப்பட்டுக் கொண்டு வாசலுக்கு ஒடி வந்தாராம். வருகலாமோ அவரையும் வரவழைத்து விட்டது. அவரிடமிருந்து பாயிரத்தையும் வரவழைத்துவிட்டது.


தெய்வத்தின் குரல் (ஆறாம் பகுதி)


????????: ??????? ????? ?????? - ?? ?????
 
பூர்த்த தர்மம்” : பலர் கூடிப் பொதுப்பணி

[h=2]பூர்த்த தர்மம்” : பலர் கூடிப் பொதுப்பணி[/h]

பூர்த்தம் காதாதி கர்ம யத்
என்று ஸம்ஸ்க்ருத டிக்க்ஷனரியான ‘அமர’த்தில் சொல்லியிருக்கிறது. ‘காதம்’ முதலான கர்மாக்கள் பூர்த்தம் ஆகும் என்று அர்த்தம்.


காதம் என்றால் வெட்டுவது; அதாவது குளமோ, கிணறோ, வாய்க்காலோ வெட்டி உபகாரம் பண்ணுவது. சாஸ்திரங்களில் விசேஷித்துச் சொல்லியிருக்கிற இந்தப் பூர்த்த தர்மத்தை மறந்தால்தான் ஜலக்கஷ்டம் (Water scarcity) என்று ஓயாமல் அவஸ்தைப் படுகிறோம். அந்தக் காலத்தில் இந்தக் கார்யம் ரொம்பவும் முக்யமாகக் கருதப்பட்டதால்தான் நாம் கூப்பிட்டு ஒருத்தன் வரவில்லை என்றால், ”அவன் அங்கே என்ன வெட்டிக் கொண்டிருக்கிறானோ?” என்று கேட்கிற வழக்கம் வந்திருக்கிறது. அதாவது அவன் வெட்டிக் கொண்டிருந்தால் மட்டும் நாம் எத்தனை அவஸரத்தில் கூப்பிட்டாலும் வராமலிருக்கலாம் என்று அர்த்தமாகிறது!


இப்போது வெட்டுகிற கார்யம் போய், தூர்ப்பது தான் முக்யமான கார்யமாக இருக்கிறது! குழாயில் தண்ணீர் நின்றுவிட்டாலோ அல்லது பூச்சியும் புழுவுமாகக் குழாய் ஜலம் வரும்போதோ, ”ஏண்டா குளத்தைத் தூர்த்தோம், கிணற்றை மூடினோம்?” என்று துக்கமாக வருகிறது.


முன்பெல்லாம் ஒரு குளம் என்றால் வாய்க்கால்கள், வடிகால்கள் என்றெல்லாம் போட்டு வெகு சுத்தமாக வைத்துக் கொள்வார்கள். கிணறு என்றால் இழுக்கத் தெரிந்த மநுஷ்யனுக்கு மட்டும்தான் அது ப்ரயோஜனமாகும். குளமானாலோ வாயில்லா ப்ராணிகளுக்கும்–காக்காய், குருவி முதற்கொண்டு ஸகல ஜீவராசிகளுக்கும்–அது பயன்படும்.


பாதை போடுவது ஒரு தர்மம். வ்ருக்ஷம் வைப்பது இன்னொரு தர்மம். புதிதாக வைப்பதோடு, இருக்கும் வ்ருக்ஷங்களை வெட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். புதிதாக வைக்கிற செடிக்கு தினம் ஜலம் விட்டு, அது வ்ருக்ஷமாக வளரப் பண்ண வேண்டும். ”வனமஹோத்ஸவம்” என்று இன்றைக்குப் பெரிய மநுஷர்கள் வந்து செடி நட்டுவிட்டு நாளைக்கே அதற்கு ஜலம் விட ஆள் இல்லாமல் அது பட்டுப்போனால் என்ன ப்ரயோஜனம்? இதுமாதிரி டெமான்ஸ்ட்ரேஷன், வெளிவேஷம் நமக்கும் உதவாது, லோகத்துக்கும் உதவாது. இதற்குப் பதில் யாருக்கும் தெரியாமல் ஒருத்தன் ஏதோ ஒரு ஒற்றையடிப் பாதையில் உள்ள முள்ளை, கண்ணாடியை அப்புறப்படுத்தி வந்தால், அதுவே மற்றவர்களுக்கு வழியை சுத்தி பண்ணுவதோடு இவனுக்கும் சித்த சுத்தியைக் கொடுத்துவிடும்.

???????? ??????? : ???? ?????? ????????? | ??????????? ?????
 
“ராமோ விக்ரஹவான் தர்ம”

“ராமோ விக்ரஹவான் தர்ம”

நியமம், அதாவது தனது என்ற வெறுப்பு விருப்பு இல்லாமல் சாஸ்திரத்துக்குக் கட்டுப்படுவது முக்கியம். அதே போல் தைரியமும் முக்கியம். ஒருத்தர் பரிகாசம் பண்ணுகிறார் என்று தர்மத்தை விட்டுவிடக் கூடாது. ராமனை சாக்ஷாத் லக்ஷ்மணனே பரிகசித்தான். அண்ணா. தர்மம் தர்மம் எதையோ கட்டிக்கொண்டு அழுவதால்தான் இத்தனை கஷ்டங்களும் வந்திருக்கின்றன. அதை விட்டுத் தள்ளு. தசரதன் மேல் யுத்தம் செய்து ராஜ்ஜியத்தை நான் ஸ்வீகரித்துத் தர அனுமதி தா என்று அன்பு மிகுதியால் சொன்னான். ஆனால் ராமன், யார் எது சொன்னாலும் பொருட்படுத்தாமல் தர்மத்தையே காத்தான். கடைசியில் அது அவனைக் காத்தது. தர்மம் தலை காத்தது.

ராவணனுக்குப் பத்து தலை இருந்தும் அதர்மத்தால் கடைசியில் அத்தனை தலைகளும் உருண்டு விழுந்தன. ஸ்ரீராமன் இன்றும், “ராமோ விக்ரஹவான் தர்ம” என்றபடி தர்மத்தில் தலைசிறந்து தர்ம ஸ்வரூபமாக அநுக்கிரகம் செய்துவருகிறான். சாக்ஷாத் ஸ்ரீராமனை லட்சியமாகக் கொண்டு ராம என்று மனஸாரச் சொல்லிக்கொண்டே இருக்கிறவர் களுக்குச் சித்த மலங்கள் எல்லாம் விலகும். தர்மத்தை விட்டு எந்நாளும் விலகாமல் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள்.

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)


??????????? ?????: ??? ????? ???????? ???????? - ?? ?????
 
Symbols worn outside are inwardly beneficial

SYMBOLS WORN OUTSIDE ARE INWARDLY BENEFICIAL

I have stated again and again that the people must perform the rites handed down to them from forefathers, that they must adhere to the practices pertaining to the tradition to which they belong and they must wear the symbols appropriates to the same, like the holy ashes or Tiruman, the rudraksa, etc. Some people hold the view that all that is needed is conduct and character, that conduct is a matter of the mind, that religious customs are but part of the external life.



In truth, however, your outward actions and the symbols worn by you outwardly have an impact on the inner life. There is a relationship between bodily work and inner feelings. Let me illustrates this truth. One day, unexpectedly, a man comes to know he was won prize in a lottery, say, one lakh rupees. His joy knows no bounds, but it makes its own impact on his body. He becomes so excited that his breathing itself stops for a moment and he faints. "A particular feeling creates a specific change in the process of breathing". From this practical observation yoga develops lessons in breathing to create healthy and noble feeling and urges. Often the outward appearance reflects the inner feelings. When you are angry your eyes become red, your lips quiver. When you are sorrowful your eyes become moist and you shed tears. If you are happy you are agape, showing all your teeth. Thus there is a definite connection between the body and the mind, between the boy and the inner feelings. Based on this fact, the wise have devised yogic postures that are calculated to nurture particular Atmic qualities.



Will soldiers be less valorous if they do not wear their uniforms? All over the world members of the defence services wear uniforms and it is claimed that they keep them fighting fit and inspire courage in them.



The symbols worn outside, the samskaras performed outwardly, are inwardly beneficial. If you think that it is all a disguise so it will be. You must resolve to wear the symbols in all sincerity and perform the rites too. Then they will truly cause purity within. Outward action help you inwardly.



It perhaps natural that I should give importance to samskaras, to the custom of wearing symbols like the sacred ashes, rudraksa, etc. After all, I am the head of Matha and you will come to me only if I wear all these. You will give me money for the conduct of the Matha. So all these symbols that I wear serve a purpose in my case. But your case is different. You have your own means of livelihood and you may be able to perform samsakaras even more sincerely than I do and make yourself pure by wearing the symbols of our religion.


Let us wear the signs that remind us of the Supreme Truth. Let us perform the rites that keep us away from evil. Let us be of good conduct and character and cleans our consciousness. And let us meditate on the Ultimate Reality, experience It inwardly, realise bliss.


Inward and Outward from the Chapter "From Work To Worklessness", in Hindu Dharma : kamakoti.org:
 
Desire and anger goad a man into sinful action.

Desire and anger goad a man into sinful action.


It is customary to speak of kama(desire) and krodha(anger) together. Krsna Paramatman says in the
Gita that desire and anger goad a man into sinful action.



When we intensely desire an object we try to get it by fair means or foul. It is a deadly enemy, desire: it eggs us on to commit sin. Equally deadly is anger. When we fail to get the object of our desire we turn our anger against the man who, we believe was an obstacle. Unfulfilled desire becomes anger.
If we throw a rubber against the wall, it bounces- in other words it returns to us. The ball thrown is desire and it is the same ball that becomes anger as it bounces. The attack we believe we make on others in our anger is actually an attack we make on ourselves- and we are hurt more than those we wanted to hurt. When we are angry our whole body shakes. Anger indeed causes pain both to the body and the mind and we make ourselves ugly when we are angry. You will know the truth of this if you see a photograph taken when you are in foul mood.



Hunger is appeased by eating. But is fire assuaged in the same way? You keep feeding it and it keeps devouring everything. Fire is bright but it chars all that it consumes. Or, in other words, it turns everything black. That is why it is called "krsnavartman". Kama or desire is similar. It flares up like fire. The more it is fed the more it becomes hungry. Indeed kama blackens our mind. When a desire is gratified there is joy for the moment, but soon it goes in search of more "food" and the process we lose our peace of mind and happiness and become victims of sorrow and anger.



Sorrow and anger are two forms of unrequited desire. If we think that those who are a hindrance to the gratification of our desire are inferior to us, we turn our anger against them, and if we think they are superior, all we do is to grieve within ourselves. Anger is packed with more evil power than even desire. Naisadham, the story of Nala, illustrates this truth beautifully. As King Kali makes his appearance, desire and anger (kama and krodha) accompany him as his two army commanders. The herald sings their praises. "There is no place that kama cannot gain entry to. No, there is a place he cannot enter. It is the fortress in which anger resides. This fortress is the heart of Durvasas. " Durvasas does not know desire but he is subject to fits of anger.



We must be extremely wary of this terrible sinner called anger. A little thought will convince us that we are not in the least qualified to be angry with anybody or to shout at anybody. We are even more guilty than those against whom we turn in our anger. We know this in our heart of hearts. Even if we are guiltless, before we rush to find fault with someone, we must ask ourselves whether we would not have committed the offence we think he is guilty of were we placed in the same circumstances as he.

We must try our best to keep anger always at a distance.



Anger from the Chapter "Dharmas Common To All", in Hindu Dharma : kamakoti.org:
 
உண்மையைச் சொன்னாள் கோபம் கோபம் வருகிறது.

உண்மையைச் சொன்னாள் கோபம் கோபம் வருகிறது., பொய் சொன்னால் சந்தோஷப்படுகிறோம்



ஸரஸ்வதி கடாக்ஷம், லக்ஷ்மி கடாக்ஷம்
இந்த இரண்டையும் பற்றி மநுஷ்ய சுபாவம் ரொம்பவும் விசித்திரமாக இருக்கிறது. எல்லோருக்கும் தங்களுக்கு ரொம்பவும் ஸரஸ்வதி கடாக்ஷம், அதாவது புத்திசாலித்தனம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களை மஹா புத்திசாலிகளாகலவே வெளியில் காட்டிக் கொள்ளப் பிரியப்படுகிறார்கள். ஆனால் நல்ல புத்தி வேண்டும் என்று அதற்காகத் தாபத்தோடு யாரும் பிரார்த்திப்பதாகத் தெரியவில்லை. பொதுவாகப் புத்திசாலித்தனம் என்பது சாமர்த்தியம் என்றுதான் நினைக்கப்படுகிறது. ஞானமும் ¢விவேகமும்தான் உண்மையான புத்திமானின் லக்ஷணங்கள். இவற்றுக்கு யாரும் ஆசைப்படுவதில்லை.

நமக்கு மிகவும் சாமர்த்தியமும் சாதூர்யமும் இருக்கின்றன. அதாவது யாரையும் ஏமாற்றிவிடலாம் என்று அவரவரும் சந்தோஷப்பட்டுக்கொண்டு, இந்த புத்திசாலித்தனத்தோடு நின்றுவிடுகிறோம். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் மட்டும் எவ்வளவு இருந்தாலும் நமக்குப் போதமாட்டேன் என்கிறது. மண்டுவாக இருந்தாலும்கூட தன்னைப் புத்திசாலியாகக் காட்டிக்கொள்வதற்கு நேர் மாறாக, நமக்கு எத்தனை சம்பத்து இருந்தாலும் அது வெளியில் தெரியக்கூடாது என்று ஏழை வேஷம்தான் போடுகிறோம்.

ஒருவனைப்பற்றி யாராவது எத்தனை புத்திசாலி என்று பேசினால் எத்தனை சந்தோஷப்படுகிறோம். ஆனால் ஒருத்தன் பாங்கில் லட்ட லட்சமாகப் பணம் போட்டிருக்கிறான் என்றால், அவனுக்குக் கோபம்தான் வருகிறது. தங்களுக்கு இருக்கிற செல்வம் போதாது என்று நினைப்பதால்தான் இவர்களுக்கு அதைப்பற்றிச் சொன்னாலே கோபம் வருகிறது.
அதிருப்திதான் தரித்திரம். திருப்திதான் சம்பத்து. ஆகையால், நாம் நிஜமான புத்திசாலிகளா தரித்திரர்களாக இருந்தாலும்கூட, அப்படிச் சொல்லிக் கொள்ளாமல், மனஸால் நிறைந்து, திருப்தியால் பணக்காரர்களாக இருந்துகொண்டிருக்கலாம். தரித்திரம் என்று சொல்லிக் கொண்டால்தான் நமக்கு யார் பணம் கொடுக்கிறார்கள். சொல்லிக்கொள்ளாமலேதான் பணக்காரரை விடத் திருப்தியாக இருப்போமே.

புத்தி, செல்வம் - இவற்றோடு ஒவ்வொருத்தருக்கும் அழகாக இருக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. தான் புத்திசாலி என்பதைப்போல, எல்லோரையும்விடத் தானே அழகு என்கிற எண்ணம் நம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கிறது. இதற்குத்தான் அலங்காரம் எல்லாம் பிரமாதமாகச் செய்துகொள்கிறோம். தினத்துக்குத் தினம் ஃபாஷன்கள் மாறிக்கொண்டே இருப்பதெல்லாம் நம் அழகைப் பிரகடணம் பண்ணிக் கொள்ளத்தான். பரம கருணாமூர்த்தியான அம்பாள், கேவலம் ரக்த - மாம்ஸ சம்பந்தமான இந்தச் சரீர அழகை விரும்புகிறவளுக்கு அதைக்கூடப் பூரணமாகத் கொடுத்து அநுக்கிரஹிக்கிறாள்.


இத்தனையும் இருந்து தீர்காயுசு இல்லை என்றால் என்ன பிரயோஜனம்? அம்பாள் சிரஞ்ஜீவித்துவமும் தருவாள் என்கிறார். இதற்குமேல் வேறென்ன வேண்டும்?என்று தோன்றலாம்.



ஆனால், இதற்குமேல்தான் அம்பாளின் பரமாநுக்கிரஹத்தை தேடச் செய்யும் கேள்வியே பிறக்கும். இத்தனை பணம், அழகு, புத்தி எல்லாவற்றையும் வைத்துக்கொண்டு இத்தனை காலம் ஒட்டியாச்சு. இதிலெல்லாம் வாஸ்தவத்தில் என்ன மனநிறைவைக் கண்டோம்?இதையெல்லாம் வைத்துக்கொண்டு எப்போது பார்த்தாலும் சஞ்சலப்பட்டுக்கொண்டே, ஒன்றை விட்டால் இன்னொன்று என்று தாவிக்கொண்டே இருந்துவிட்டோம். நிரந்தர சௌக்கியத்தை, சாந்தத்தை இவை எதையும் பெற்றதாகத் தெரியவில்லையே.



இதை எப்படிப் பெற்றுக்கொள்வது?என்கிற கோள்வி பிறக்கும். நடுநடுவே நமக்கு இந்தக் கேள்வி தோன்றினாலும், அடுத்த க்ஷணமே மாயை நம்மை இழுத்துக் கொண்டு போகிறது. ஆனால் நாமாக இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் இப்படி நினைக்காமல் அம்பாளை உபாஸிப்பதன் பலனாக, அவள் நம்மை இப்படி நினைக்கப் பண்ணுகிறபோது, அந்த நினைப்பு நாளுக்குநாள் மேலும் மேலும் தீவிரமாக ஆகும். பணம் வேணும், படிப்பு வேணும், அழகு வேண்டும், ஆயுசு வேண்டும் என்பதெல்லாம் நம்மை மேலும் மேலும் நம்மைப் பாசத்தில் கட்டிப் பிரம்மையில்தான் தள்ளிக் கொண்டிருந்தது என்கிற அறிவு உண்டாகும்.



பாசம் என்றால் கயிறு. பாசத்தில் கட்டப்படுவது பசு. கயிற்றைப் போட்டுத் தறியில் கட்டின பசு மாதிரி, ஒரு குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் போக முடியாமல், அதற்குள் கிடக்கிற தாற்காலிக இன்பங்களையே மேய்த்துக்கொண்டு, அசட்டுத் தனமாக இதுவே எல்லாம் என்று திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்தக் கட்டை அறுத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் பரம சுதந்திரம். இந்த இந்திரியங்களின்

சின்ன சௌகரியங்களுக்கு அப்புறம் அகண்டமான, சாசுவதமான ஆத்ம ஆனந்தம். பாசம் போய், நாம் பசுவாகக் கட்டுப்பட்டுக் கொண்டிருந்த நிலையும் போய்விட்டால், அப்புறம் பரம்பிரம்மம்தான். பணம், புத்தி, ஆயுள், அழகு ஆகிய சிற்றின்பங்களுக்குத் தவித்த மனஸில் இவற்றின் கட்டுக்களே வேண்டாம் என்கிற வைராக்கியம் உண்டானால், அப்புறம் பேரின்ப மயமாவதற்கான ஸாதனைகளில் இறங்கி, முடிவில் அம்பாள் அருளாள் பேரின்பமாகவே ஆகலாம். அதைவிடப் பெரிய பலன் வேறில்லை.





https://groups.google.com/forum/#!topic/sathvishayam/lSmN1OCB-9U
 
மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது

மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது

மனசு ஆடிக் கொண்டேயிருக்கிற நிலையில் உள்ள நாம் எடுத்த எடுப்பில் பாப புண்ணியமற்ற நிலையை அடைந்து, அவரே நாம் என்று உணர முடியாது. ஆகவே, அவரே நாமாக இருந்தாலும், அதை நாம் அனுபவத்தில் உணருவதற்கு அவரது அருளைப் பிரார்த்திக்க வேண்டியர்களாகவே இருக்கிறோம். அவர் மகா பெரிய ஸ்வாமி, நாம் அல்ப ஜீவன்-அவர் மகா சமுத்திரம், நாம் உத்தரணி ஜலம் என்கிற எண்ணத்தோடு ஆரம்பத்தில் பக்தியே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். ஸ்வாமி கொடுத்துள்ள மனசுதான் இப்போது நம்மை அவரிடமிருந்த பேதப்படுத்துகிறது. இந்த மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது. ஆகவே, இந்த நிலையில் இதே மனசால் அவர் ஒருத்தரை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது


தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்?


இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும். இதற்குத்தான் பக்தி, பூஜை, க்ஷேத்திராடனம் எல்லாம் வைத்திருக்கிறது. இவற்றில் மேலும் மேலும் பக்குவமடைந்து சரீரப் பிரக்ஞை, அகங்காரம் அடியோடு போய்விட்டால், அவர் பரமாத்மா, நாம் ஜீவாத்மா என்கிற பேதமே போய், அவரே நாமாக, அத்வைதமாக ஆகிவிடுவோம். 'நீ வேறெனாதிருக்க, நான் வேறெனாதிருக்க' என்று அருணகிரிநாதர் பாடிய அனுபவத்தை அடைவோம்.


?????? ????? ????? ???????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ராமாயணம், மஹாபாரதம் இரண்டிலேயும் சகோதர பாசம் உண்டு. ராமர் மாதிரி லட்சுமணர் இல்லை. எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார். இருக்கிற இடம் தெரியாமல் இருந்த சுமித்திரையின் பிள்ளையா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். இரட்டை பிள்ளைகளில் ஒருத்தர் அவரோடு பிறந்த சத்ருக்னர் நில் என்றால் நிற்கிறார். உட்காரச் சொன்னால் உட்காருகிறார். அதனால் தான் முந்தி பிறந்த மூன்று பேரையும் தாண்டி தகப்பனாருக்கும் 'கர்மா' செய்கிற பாக்கியம் கிடைச்சது. பொறுமைக்கு என்னிக்குமே பெருமை உண்டு.

பாண்டவர்கள் அஞ்சு பேரும் ஒன்று போல் இல்லை. பலத்தாலே பீமசேனனும், வித்தையாலே விஜயனும் கியாதி பெற்றார்கள். நீதி, நியாயம், தர்மம் மூணையும் எடுத்துட்டா தருமபுத்திரரும் சாதாரணமானவர் தான். நச்சு பொய்கையிலே எல்லாரும் செத்துப் போயிட்டா. தருமர் அவசரப்படலே. தம்பிகள் செத்துடடாளேன்னு இடிஞ்சுபோய் உட்காரலே. பொறுமையா யட்சனுடைய எல்லா கேள்விக்கும் பதில் சொன்னார். கடைசியிலே யாராவது ஒருத்தரைப் பிழைக்க வைக்கறேன்னப்போ நகுலனைக் கேட்ட நேர்மை எல்லாருக்கும் உயிர் கொடுத்தது.

பாண்டு மாதிரி காட்டுக்குப் போகாம, திருதராட்டிரன் மாதிரி பிள்ளைகள் மேலே குருட்டுப் பாசமும் வைக்காம, குலத்தையே பெருமைப்படுத்தினார் விதுரர். பாண்டவர்களை சதுரங்கம் ஆடனுமானாலும் கூப்பிட விதுரர்தான் வேண்டி இருந்தது. அதனாலே நல்லவன் இருக்கிற அந்த ஒருத்தனாலே உங்க குலமே உசரலாம். தர்ம நியாயத்தை மட்டும் எந்த நாளிலும் கைவிடாம இருக்கணும்.


Source: Sage of Kanchi

Ramachandran Venkataraman
 
Ramayana pravachanam

Ramayana pravachanam

Dr. Ranganji's Ramayana pravachanam in Tamil from 22.11.14 to 30.11.14 at Aasthiga samajam, Venus colony, Aalwarpet, Chennai.





63425_966466813367975_8144887084734937219_n.jpg




Source: Sage of Kanchi

Parthipan Venugopal
 
Veda Dharma Sastra Paripalana

Veda Dharma Sastra Paripalana


Veda Dharma Shastra Paripalana Sabha - 25th Visesha Upanyasam on 15th November 2014 at Residence of Mr. K B R MOORTHY 3/5, Flat No. 6, Betala Saraswathi Flats,III Floor,
6th Trust Cross Street, Mandavelipakkam,Chennai-600028 .

Upanyasam Presented by Mullaivasal Brahmashri R.KRISHNAMURTHY SASTRIGAL on "MATHA PITHRU BHAKTHIl" from 6:30 PM to 8:00 PM.



1912330_386523868169325_7172721711448627212_n.jpg






Source: Sage of Kanchi
 
The love of god

THE LOVE OF GOD

Camp: Chitoor district (19.8.1931)

His Holiness explained some aspects of the love of God. It is caused in various ways; thrugh bhakti or love or fear.

The ordinary idea of Prathana to God, that a coconut will be broken or some rupees will be given, if this or that is done, is not commendable.

But it is not be deprecated; for it is desirable that one should remember God and invoke his aid always. It is also reminds one that he must be prepared to sacrifice what he considers dear to him on earth, to realise or experience, THE ETERNAL.

There is difference between God and Jeevatma, although JEEVATMA and GOD are both part and parcel of NIRGUNA BRAHMAN and are merged in it.

Man see and thinks, the objects he sees are real; God sees and knows they are unreal. PARAMATMA is supreme; it is both the seer and the seen.

If a man places a mirror, he sees his image in it and knows it is unreal; but a bull that sees his image in a mirror, takes it to be real and begins to fight; the relation between God and man is the same as that between the man who placed the mirror and the bull.

(Source: Chaaturmaasyam at Chitoor district by C Venkatramana Iyer 1931-32)


Source: Sage of Kanchi

Venkatesan Ramadurai
 
Visesha Upanyasam on 16th November 2014

Visesha Upanyasam on 16th November 2014

Veda Dharma Shastra Paripalana Sabha - 26th Visesha Upanyasam on 16th November 2014 at Residence of Mr. Panchanatheeswaran 102 – A, Prince Villa, No: 15, Rajamannar Street, T Nagar Chennai- 600017 .
Upanyasam Presented by Brahmashri Vijayabhanu Ganapadigal on "SANDHYOPASANAM" from 6:30 PM to 8:00 PM.


1609973_387089854779393_6811917340474576642_n.jpg





Source: Sage Kanchi
 
Periyava's deep observations on success in life

Periyava's deep observations on success in life

Today even a multimillionaire is neither contented nor happy. In olden days, even a cobbler led a life without cares. What sort of progress have we achieved today by inflaming evil desires in all hearts and pushing everyone into the slough of discontent? Not satisfied with such "progress" there is talk everywhere that we must go forward rapidly in this manner.

Greed and covetousness were unknown during the centuries when varna dharma flourished. People were bound together in small well-knit groups and they discovered that there was happiness in their being together. Besides they had faith in religion, fear of God and devotion, and a feeling of pride in their own family deities and in the modes of worshipping them. In this way they found fullness in their lives without any need to suffer the hunger and disquiet of seeking external objects. All society experienced a sense of well-being.

Now people want to live in comfort and to be provided with all sorts of amenities. There is no end to their unseemly desires. In America, it is said, everybody has a bungalow, car, radio, telephone, etc. But are people there contented? No. There is more discontent in that country than in our own. There the incidence of crime is more than anywhere else.

It is all right that every American has a car. But today's car is not good enough for them tomorrow. More and more new models keep coming in the market and each new model offers more comfort than the previous one. This means that the American citizen is compelled to earn more with the appearance of each new car. A time may come when aircraft will be used in the U. S. for people to fly from house to house.

Similarly, we see such a progression all over the world in the matter of housing. First there was the hovel or the hut; then came the dwelling with the tiled roof; afterwards houses with cement and concrete walls. The flooring also changed over the years. First the floor was wiped with cowdung; then it was plastered and cemented; the mosaic flooring came later; and the search is on for smoother and shinier surfaces. It is the same case with clothing - better and finer fabrics are being made every day.

Although we are already living in comfort we are all the time using our ingenuity to discover objects and gadgets that will make our life still easier. However, all the time we are likely to have the feeling of uneasiness with all the comforts we already possess and this means there will be no end to our yearnings. Not knowing any contentment or peace of mind we are compelled to earn more and more. It is like thinking that fire can be extinguished by pouring petrol on it; we keep discovering newer and newer objects but in the progress we keep further inflaming our longing for ease and comfort.

This truth was known to our sages, to our forefathers. They taught us that we ought not to seek more than our bare needs. In recent times Gandhiji impressed upon the people the same lesson.

In this century, people seek ostentatious living in the name of progress. So long as the hunger for new comforts continue neither the individual nor society will have contentment. There will always be feelings of rivalry, jealousy and heart-burning among people. In the varnasrama dharma, the Brahmin and non-Brahmin are equal economically speaking. In spite of the caste differences, the same simple living is enjoined on all. The ideal of equality can be achieved only if all people live a simple life. In this order every individual experiences contentment and inner happiness and no one has cause of envying others their prosperity.

No man, whatever his vocation, should have either too much money or too many comforts. Above all what is important is that for which all these are intended but that which cannot be truly obtained through them: contentment and a sense of fullness within. Only when there is inner satisfaction can one meditate on the Lord.

And only in the mind of a man who has such contentment is the Ultimate Truth realised as a reality. When a person has too many comforts he will be incapable of going beyond the stage of sensual pleasures. If he is addicted to enjoyments, without any need for physical exertion, he will do injury to his mind, and his inner being. Hard work and the capacity to suffer discomforts are essential for those who yearn for Atmic uplift. They will then learn to realise that there is comfort in discomfort and in hard work.

(Source: http://www.kamakoti.org/hindudharma/part4 and www.periva.proboards.com, www.periva.org)


Sage of Kanchi

Venkatesan Ramadurai
 
ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு

ஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் வாக்கு


குருடன் ஒருவன் கையில் லாந்தருடன் போய்க் கொண்டிருந்தானாம். எதிரில் வந்த ஒருவன் 'உனக்குத்தான் கண் தெரியவில்லையே, லாந்தர் ஏன் எடுத்து வருகிறாய்?' என்று கேட்டான். அதற்குக் குருடன், 'எனக்கு கண் இல்லாவிட்டாலும் உனக்குக் கண் இருக்கிறது அல்லவா? அதற்காகத்தான் இதை எடுத்து வருகிறேன். இல்லாவிட்டால் இந்த இருட்டில் நீயே என்மேல் தடுக்கி விழுந்திருப்பாயே' என்றானாம். அதுபோலவே பழைய சாஸ்திரங்கள் நமக்குப் புரியாவிட்டாலும், எதிர்காலத்தில் யாருக்காவது புரியலாம்; பயனாகலாம் என்பதனாலாவது அவற்றை நாம் ரக்ஷித்தாக வேண்டும். "வசதியே இல்லாத காலங்களில் யுகாந்தரமாக ரக்ஷிக்கப்பட்ட சாஸ்திரங்களை நமக்கு முதல் தலைமுறையினர் எல்லா வசதியிருந்தும் காப்பாற்றாமல் அழித்து, நம்மை வஞ்சித்து விட்டார்கள்" என்று, வருங்காலத் தலைமுறையினர் நம்மைக் குற்றம் சொல்ல இடம் வைக்கலாமா?


?????????????????? ?????? ????????? ? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
தமிழ் மாதம் பெயர்கள் எப்படி வந்தன!

தமிழ் மாதம் பெயர்கள் எப்படி வந்தன!

தமிழ் மாதம் என்பது சித்திரை, வைகாசி எனத் துவங்குகின்றன. பெரும்பாலும் ஒரு மாதத்தில் பௌர்ணமி அன்று எந்த நக்ஷத்திரமோ அதுவே அந்த மாஸத்தின் பெயராக இருக்கும் அனேகமாக அன்றைக்கு ஒரு பண்டிகையாகவும், விழாவாகவும் இருக்கும்.

1. சித்திரை மாதம்(மாஸம்)
சித்திரை மாஸத்தில் சித்ரா நக்ஷத்திரத் தன்றுதான் பௌர்ணமி வரும் அதனால் சித்திரை மாஸம் என்றானது

2. வைகாசி மாதம்(மாஸம்)
விசாக சம்மந்தமான வைசாகம்.விசாக நக்ஷத்திரத்தில் பெரும்பாலும் பௌர்ணமி ஏற்படுகிற மாசம் தான் வைசாகி. மதுரை என்பது மருதை என திரிவது போல் சமஸ்கிருத வைசாகி தமிழில் வைகாசி ஆயிற்று.


3. ஆனி மாதம்(மாஸம்)
அனுஷ நக்ஷத்திர சம்மந்தமானது ஆனுஷீ.அந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுகிற மாஸம் ஆனுஷீமாஸம். தமிழில் ஷ என்ற எழுத்து உதிர்ந்து ஆனி என்றாயிற்று.


4. ஆடி மாதம்(மாஸம்)
ஆஷாட நக்ஷத்திரத்தில் பூர்வ ஆஷாடம்,உத்தர ஆஷாடம் என்று இரண்டு. பூர்வம் என்றால் முன்,உத்தரம் என்றால் பின்.பூர்வ/உத்தர ஆஷாடம் என்பதில் உள்ள அந்த ர்வ என்ற கூட்டெழுத்து சிதைந்தும்.ஷ உதிர்ந்தும் தமிழில் பூராடம் உத்திராடம் என்கிறோம். இந்த இரு நக்ஷத்திரங்களில் ஒன்றில் பௌர்ணமி வரும் மாதம் ஆஷாடி.இதில் ஷா உதிர்ந்து ஆடி ஆயிற்று.


5.ஆவணி மாதம்(மாஸம்)
ச்ராவணம் என்பது ச்ரவண நக்ஷத்திரத்தை குறிக்கும். முதலில் உள்ள ச்ர அப்படியே தமிழில் drop ஆகி வணத்தை ஓணம் என்கிறோம்.அது மஹாவிஷ்னுவின் நக்ஷத்திரமாதலால் திரு என்ற மரியாதை சொல்லை சேர்த்து திருவோணம் என்கிறோம். அனேகமாக பௌர்ணமி ச்ராவண நக்ஷத்திரத்தில் வருவதால் ச்ராவணி எனப்படும்.இதில் சமஸ்கிருதத்திற்கே உரிய ச்,ர என்ற கூட்டெழுத்து drop ஆகி ஆவணி மாதமாயிற்று.


6. புரட்டாசி மாதம்(மாஸம்)
ப்ரோஷ்டபதம் என்பதற்கும் ஆஷாடம் என்பதற்கும் ஆஷாடம் போலவே பூர்வமும் உத்தரமும் உண்டு.பூர்வ ப்ரோஷ்டபதம் தான் தமிழில் பூரட்டாதி ஆயிற்று.அஷ்ட என்பது அட்ட என திரிந்தது.உத்திர ப்ரோஷ்டபதம் என்பது உத்திரட்டாதி ஆயிற்று.இந்த நக்ஷத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் ப்ரோஷ்டபதி என்பது திரிந்து புரட்டாசி ஆயிற்று.


7. ஐப்பசி மாதம்(மாஸம்)
ஆச்வயுஜம்,அச்வினி என்பதை அச்வதி என்கிறோம்.அதிலே பௌர்ணமி வருகிற ஆச்வயுஜீ அல்லது ஆச்வினீ தான் திரிந்து ஐப்பசி ஆயிற்று.


8. கார்த்திகை மாதம்(மாஸம்)
க்ருத்திகை நக்ஷத்திரம் தான் கார்திகை.இந்த நக்ஷத்திரத்தில் பௌர்ணமி ஏற்படுவதால் அது கார்த்திகை மாதமாயிற்று.


9. மார்கழி மாதம்(மாஸம்)
மிருகசீர்ஷம் என்பது மார்கசீர்ஷி என்றாயிற்று.இதில் பெரும்பாலும் பௌர்ணமி வரும் மாதம் மார்கசீர்ஷி என்றாயிற்று.அதில் சீர்ஷி என்பது மறுவி மார்கழி என்றாயிற்று.


10. தை மாதம்(மாஸம்)
புஷ்யம் தான் தமிழில் பூசம் .புஷ்ய சம்மந்தமானது பௌஷ்யம். புஷ்யத்திற்கு திஷ்யம் என்றும் பெயர்.பௌர்ணமி திஷ்யத்திலே வரும் மாதம் தைஷ்யம்.அதிலே கடைசி மூன்று எழுத்துக்களும் போய் தை என்றாயிற்று.


11. மாசி மாதம்(மாஸம்)
மக நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் மாகி என்றாயிற்று. இதில் கி என்பது சி யாக மருவி மாசி ஆயிற்று.


12. பங்குனி மாதம்(மாஸம்)
பூர்வ பல்குனியை பூரம் என்றும் உத்தர பல்குனியை உத்திரம் என்கிறோம்.இந்த இரு நக்ஷத்திரத்தில் பௌர்ணமி வருவதால் பல்குனி எனப்படும். அதில் ல எழுத்து மருவி பங்குனி ஆயிற்று.
இப்படி சம்ஸ்கிருத வார்த்தைகளே மருவி தமிழ் மாஸப்பெயர்களாக அமைந்துள்ளன.


------------------------------தேவராஜ சாஸ்திரிகள்-----------



Sage of Kanchi

Lakshmi Narayanan
 
Sabarimalai 18 Steps

Sabarimalai 18 Steps


Eighteen is considered as the code number to break into the soul of the Nature. The significance of 18 can be traced back to the Vedic age. The first Veda, believed to be protected by Lord Brahma himself, had 18 chapters. Later, Veda Vyasa divided it to create the four vedas: Rigveda, Yajur Veda, Sama Veda and Atharava Veda. Each of these vedas had 18 chapters.Veda Vyasa also wrote 18 puranas and 18 upa-puranas. The Bhagavad Gita has 18 chapters and the Kurukshetra war lasted 18 days”….He goes on with more such data pointers – I dont remember all of that….



Pathinettapadi (18 divine steps) to the sanctum sanctorium is divine in all aspects. Initially the 18 steps were made of granite. It was later covered with Panchaloha in the year 1985 to prevent it from deterioration. As per the tradition, ONLY those who undertake the penance for 41 days and those who carry the IRUMUDI on their head are allowed to use the steps.





  1. 1st step- Getting knowledge and consciousness to make think is called first step.
  2. 2nd step- The bhakters ultimate consciousness is second step. Dvaita & advaita are same. Advaita means God & Dvaita means soul.
  3. 3rd step- vision or insight, imagination, understand, act, excercise, law to be connected with intellect.
  4. 4th step- pure consciousness image of knowledge it refers.
  5. 5th step- not in pure form & enlightened like bhagavathi gods form.
  6. 6th – past several births (purva janam) goodness if we climb sixth step and we can see lord shiva.
  7. 7th step- will-power, we will have will-power to get god blessing
  8. 8th step- yaga inner form. rahoyagam.
  9. 9th step- supreme celestial light , “paramjyothis” in order today also “makara jyothi” is seen.
  10. 10th step- meditating and knowing universal supreme lord.
  11. 11th step- ascetic meditating. God and devotee uniting.
  12. 12th step- samadhi non dualistic state of consciousness.
  13. 13th step- atma, soul changes happens.
  14. 14th step- supreme brahma, indicates knowledge person god subramanian. Ultimate supreme brahma is also called this step.
  15. 15th step- nadabrahma means ecstasy continues.
  16. 16th step- jyothiswarupa- illumination of god. A supreme effulgence, the proper form of god.
  17. 17th step- trigunathitha means tri characters of god
  18. 18th step – which is considered as parama feet- the ultimate supreme feet of lord ayyappa swamy.

Swamiye sharanam ayyappa



https://groups.google.com/forum/#!topic/mintamil/8GDPrWrbgMQ
Sage of Kanchi
 
The importance of guru

THE IMPORTANCE OF GURU

The decay of a religion in any country could be attributed to the lack of character of its leaders and of the people constituting the establishment responsible for its growth.



When we listen to the story of the Buddha, when we see again and again his images that seem to exude the milk of human kindness, compassion and tranquility spring in our own hearts and we feel respectful towards him. People must have been attracted to him thus during his time. How, in later times, there was a moral decline in the Buddhist monastic establishments will be seen from MattaVilasamwritten by Mahendra Pallava. This work shows how Buddhism came to be on the decline and demonstrates that the rise or fall of a religion is dependent on the quality and character of its spokesmen.



After the Buddha came AdiSankara to whom people were drawn for his incomparable goodness and greatness. Later appeared Ramanuja and Madhva who, in their personal lives, stood out as men of lofty character. They too were able to gather round them a large following and extend the sway of their respective systems. Recently came Gandhiji as a man of peace and sacrifice. Millions of people accepted his teachings, which indeed came to constitute religion, "Gandhism". If a system owes its growth to the excellence of the philosophical principles on which it is based, Gandhism ought to be at the peak of its glory today. But what do we see in reality? The Gandhian way of life as practiced now is all too obvious to need any comment.



The question here is not about the religions that try to draw people to themselves either through force or the lure of money. It is but natural for ignorant people to become converts to a new religion through rites like baptism after receiving various inducements and "social rewards". It was in this manner, they say, that Christianity extended its influence during times of famine. It is also said that Islam was propagated with the sword, that masses of people were forced to join it by force of arms. Here again there is proof of the fact that that the common people do not adopt a religion for the sake of any principle or out of any interest in its philosophical system. There is one matter to consider. The padres [Christian missionaries] converted mainly people living in the ceris [that is people on the outskirts of a village or town]. Their usual procedure was to tell these poor folk that they were kept suppressed in the religion of their birth and offer them inducements in the form of free education and medical treatment and the promise of a better status.




Not all, however, fell to such lures. However much they seemed to be suppressed in the religion of their birth, many of them refused to be converted, ignoring the advantages held out. Why? One reason was their good nature and the second was respect for the great men who have appeared in our religion from time to time. They told themselves: "Let us continue to remain in the religion of our forefathers, the religion that has produced so many great men."



We must not censure those who convert people to their faith. They believe that their religion represents the highest truth. That is why they practice conversion by compulsion or by placing various temptations before people belonging to other faiths. Let us take it that they try to bring others into their fold because they believe that that is the only means of a man's salvation. Let us also presume that they believe that there is nothing wrong in carrying out conversion either by force or through the offer of inducements because they think that they are doing it for the well-being of the people they seek to convert.



If religions that resort neither to force nor to money power have grown, it is solely because of the noble qualities of their teachers. Outwards guise alone is not what constitutes the qualities of the representative or the spokesman of a religion. Whatever the persuasion to which he belongs he must be utterly selfless, bear ill-will towards none, in addition to being morally blameless. He must live an austere life, and must be calm and compassionate by nature. Such a man will be able to help those who come to him by removing their shortcomings and dispelling the evil in them.



Producing men of such noble qualities from amongst us is the way to make our religion flourish. It is not necessary to carry on propaganda against other religions. The need is for representatives, for preceptors, capable of providing an example through their very life of the teachings of our religion. It is through such men that, age after age, sanatana dharma has been sustained as a living force. Hereafter too it will be through them that it will continue to remain a living force.



If a militant proselytizer appears on the scene, I shall not be able to gather a force to combat him. Nor can I spend crores and crores like those religious propagandists who build schools and hospitals to entice people into their faith. Even if I were able to do so, conversions carried out in such a manner would be neither true nor enduring. Suppose a group comes up that has more muscle and money power; it will undo my work with its superior force and greater monetary strength. We should not, therefore, depend on such outward forces to promote our religion but instead rely on our Atmic strength to raise ourselves. In this manner our religion will flourish without any need for aggressive propaganda or the offer of inducements.



At present many intellectuals abroad talk in glowing terms of Advaita, may be because of its lofty character as a philosophical system. They come to the school of Vedanta after examining it and after being inwardly convinced of its truth. But the common people need the example of a great soul, a great life [not abstract principles].
A man of peace and compassion, a man of wisdom and self-sacrifice, must arise from our midst.

Qualities of Religious Teachers from the Chapter "Religion In General", in Hindu Dharma : kamakoti.org:
 
காந்தர்வ வேதம்

காந்தர்வ வேதம்

'அவன் என்ன புரட்டிவிட்டானா?' என்று சாதாரணமாக ஒரு வழக்கு இருக்கிறது. புரட்டுவதற்கு என்ன இவ்வளவு முக்கியத்துவம்? யோசித்துப் பார்த்தால், முறைப்படி புரட்டுவது ரொம்பவும் பெரிய, அர்த்தமுள்ள விஷயம் என்று தெரிகிறது. அநேக கலைகள் புரட்டுவதினாலேதான் பிறந்திருக்கின்றன.


இத்தனை புஸ்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன. ஒரு சில எழுத்துக்களைப் புரட்டி புரட்டி வைத்து வார்த்தைகளாக்கியதால்தானே, இத்தனை புஸ்தகங்களும் வந்திருக்கின்றன! நம்மைவிட இங்கிலீஷ்காரர்களுக்கு எழுத்து இன்னும் குறைவு. இருபத்தாறே எழுத்துககளைப் புரட்டிவிட்டு ஏராளமாக எழுதிவிட்டார்கள்! அந்தப் புரட்டலில் ஒரு முறை, ஓர் அழகு இருந்துவிட்டால் கலையாகிறது. நமக்கும் வார்த்தைகள் தெரிகின்றன. கவியும் அதே வார்த்தைகளைத்தான் புரட்டி வைக்கிறான் — உடனே அதில் ரஸம் பிறக்கிறது, கவியைக் கொண்டாடுகிறார்கள்! நாம் வார்த்தையைப் புரட்டி எழுதினால் அதை யார் மதிக்கிறார்? தாகூர் மாதிரி ஒருவர் புரட்டுகிறபடி புரட்டினால் ஏக மதிப்பு உண்டாகிறது. அக்ஷர லக்ஷம் என்கிறார்கள்.



சித்திரக் கலையும் இப்படியேதான். வர்ண பாட்டிலையும் பிரஷ்ஷையும் வைத்துக்கொண்டு நாம் 'புரட்டுவது' ரஞ்சகமாக இல்லை. ஆனால் சைத்திரிகன் அதே வர்ணங்களைப் புரட்டுகிறபடி புரட்டினால் அது ஆனந்தம் தருகிறது.


சங்கீதமும் புரட்டல்தான். நாம் எல்லோரும் சத்தம் போடுகிறோம். அந்தச் சப்தத்தை ஸ்வரங்களாகப் பாகுபடுத்தி, இதற்கப்புறம் இது என்று அழகாகப் புரட்டி வைத்தால் இன்பம் உண்டாகிறது. நன்றாகப் புரட்டினால் நிறைய இன்பம்! புரட்டலில் நிபுணனாக இருப்பவனுக்கு ஒரு மணிக்கு இருநூறு முந்நூறு ரூபாய் தருகிறோம். நாம் சத்தம் செய்தால் ஓய வைப்பதற்கு பணம் கொடுக்கலாம்! புரட்டல் இன்பம் இப்படிப்பட்டது.


நமது தொண்டை என்கிற மாமிச வாத்தியத்தில் காற்றைப் புரட்டுகிறோம். தவிர சங்கீத வாத்தியங்கள் பல இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் இந்தப் புரட்டல் மாத்திரம் பொது. தவில், மிருதங்கம், கஞ்சிரா போன்ற சர்ம வாத்தியங்களில் தோலில் புரட்டுகிறார்கள். வீணை, தம்பூர், பிடில் போன்ற தந்தி வாத்தியங்களில் தந்தியில் புரட்டுகிறார்கள். இந்த வாத்தியங்களில் புரட்டுகளுக்கு நடுவே இழைந்து வரும் 'அநுரணனம்' என்ற இழைப்பு ஒலி நயமான இன்பம் தருகிறது. ஒருதரம் மீட்டினால் உண்டாகும் ஒலி இழுத்துக்கொண்டே நிற்கிறது. முதல் மீட்டில் உண்டான ஒலி நீடித்து, இரண்டாவது மீட்டில் எழுப்பும் ஒலியோடு கவ்வி நிற்கிறது. இதுவே, அநுரணனம். புல்லாங்குழல், நாயனம் போன்ற துவாரமுள்ள ரந்திர காற்றைப் புரட்டுகிறார்கள்.

ஹார்மோனியமும் ஒருவிதத்தில் ரந்திர வாத்தியந்தான். அதில் வாய்க்குப் பதில் துருத்தி இருக்கிறது. புல்லாங்குழலிலும் நாயனத்திலும் துவாரங்களை விரலால் மாற்றி மாற்றி அடைத்துத் திறக்கிறார்கள் என்றால், ஹார்மோனியத்தில் பில்லைகளை மாற்றி மாற்றி அழுத்தி எடுக்கிறார்கள். தத்துவம் ஒன்றுதான்.


சப்தத்தைப் புரட்டுவதோடு, அங்கங்களைப் புரட்டி விட்டால் நாட்டியக் கலை உண்டாகிறது. சங்கீதத்தில் காதால் கேட்டு அர்த்த ஆனந்தமும், ஸ்வர ஆனந்தமும், பெறுகிறோம். நாட்டியத்தில் இவற்றோடு கண்களால் பார்த்து, 'அங்கசர்ய ஆனந்தமும்' (அங்கங்களைப் முறைப்படி அசைப்பதால், புரட்டுவதால் ஏற்படுகிற இன்பமும்) பெறுகிறோம்.


நவரஸ உணர்ச்சிகளை விளக்குகிற அங்க அசைவான அபிநயம் மட்டும் இல்லாமல், நவரஸமில்லாத வெறும் அங்கசரியை (அங்கப் புரட்டு) மட்டுமே ஆனந்தம் தருவது உண்டு என்பதால்தான் 'நிருத்தம்' என்ற கலை ஏற்பட்டிருக்கிறது. ஈஸ்வரனுக்குச் செய்கிற அறுபத்துநாலு உபச்சாரங்களில் சங்கீதத்தோடுகூட, நிருத்தமும் உபச்சாரமாக சொல்லப்படுகிறது. கீர்த்தனத்தில் சப்தம், அர்த்தம், லயம் யாவும் சேர்ந்து இன்பம் தருகின்றன. ஸ்வரம் பாடும்போது சப்தமும், லயமும் மட்டும் இன்பம் தருகின்றன. ராக ஆலாபனத்தில் வெறும் சப்தம் மாத்திரம் ஆனந்தம் தருகிறது அல்லவா? நிறுத்தத்தில் வெறும் அங்கசரியை மட்டும் லயத்தோடு சேர்த்து ஆனந்தம் தருகிறது.


இந்தக் கலைகள் யாவும் காந்தர்வ வேதம் எனப்படும். கந்தர்வர்கள் உற்சாகப் பிறவிகள். அவர்கள் எப்பொழுதும் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருப்பார்கள். மனதுக்கு உற்சாகம் தரும் கலைகளுக்கு இதனாலேயே காந்தர்வ வேதம் எனப் பெயர் ஏற்பட்டிருக்கிறது.

???????? ????? : ( ??????????? ????? - ????? ????? ) : kamakoti.org:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top