• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

MahAperiyavA's teachings and messages

Status
Not open for further replies.
பத்மாவதி பரிணயம் மரவக்காடு ராமஸ்வாமி அய்யருக்கு, நான்கு பெண்கள், இரண்டு ஆண் குழந்தைகள்.

இளவயதில் எதிலும் அக்கறை காட்டாமல் சுற்றித் திரிந்ததால்
மாத வருமானத்திற்கு உத்திரவாதம் இல்லை. வைதீகச் சடங்குகள்
செய்விக்கும் பண்டிதர்களுடன் உதவியாளனாகச் செல்வார்.அதில்
கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடந்து கொண்டிருந்தது.
பரம்பரையாக வந்த வீட்டில் வாசம், நல்ல வேளையாக வீட்டு
வாடகை பிரச்னை இல்லை.

கிராமத்துக்கு வெளியே, ஒரு தென்னந்தோப்பு, முப்பது
தென்னைகள்.’தாளுண்ட..நீரைத் தலையாலே தான் தருதலால்’
தினமும் ஒரு கால சாப்பாடு நிச்சயம்..

மகா பெரியவாளை நமஸ்கரித்து விட்டு எழுந்து நின்றார்.



மஹா பெரியவாள்


ராமஸ்வாமி,முகத்தில் சோகம் அப்பியிருந்தது.
“பெரிய பெண்ணுக்கு இருபத்திரண்டு வயதாகிறது. அடுத்தவளுக்கு இருபது. ரெண்டு பேருக்கும் ஒரே
முகூர்த்தத்திலே கல்யாணம் பண்ணினால் செலவு குறையும்.அது ஒத்து வரலே,


மூத்தவளுக்கு ஒரு வரன் நிச்சயமாகும் போல் இருந்தது…பணம் தேவைப்பட்டது. தென்னந்தோப்பை கிரயம் பேசி,
அட்வான்ஸ் வாங்கி, அக்ரிமென்ட் போட்டேன்…” தொண்டை அடைத்துக் கொண்டது. மென்று விழுங்கினார்
“அண்ணாவுக்குக் கோபம். அவரைக் கேட்கலையாம். பரம்பரை சொத்து: அவருக்கும் உரிமை உண்டாம்
.கோர்ட்டுக்குப் போய் ஸ்டே வாங்கிட்டார்…”


பெரியவாள் ஐந்து நிமிஷம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பின்னர் பிரசாதம் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
ராமஸ்வாமிக்குப் படு ஏமாற்றம்.’கவலைப்படாதே’ என்று ஒரு குறிப்புக் கூட கொடுக்கவில்லையே பெரியவாள்.
வெளியே வந்ததும், பெரியவாளின் அணுக்கத் தொண்டர் ராயவரம் பாலு கண்ணில் பட்டார். அவரிடம் தன் ஆதங்கத்தைக்
கொட்டித் தீர்த்தார் ராமஸ்வாமி..


“பெரியவா மனசு வெச்சா என்ன வேணுமானாலும் பண்ணலாம்.
என் அண்ணாவுக்கு என்ன குறைச்சல்? பெரிய வீடு, எப்போ பார்த்தாலும் வெளியூர்தான். நேரில் பார்க்கவே முடியறதில்லே.
அப்பா சிரார்த்தத்துக்குக் கூட என்னைக் கூப்பிடறதில்லே..என்னால் தனியாகப் பண்ண முடியுமா? நான்..கஷ்டப்படறவன், உதவி செய்யப்படாதா?”


பாலு கேட்டார்; பெரியவாளிடம் சொல்லப்படாதா?”
“சொன்னேனே; பெரியவா கேட்டுண்டே இருந்தா..விபூதி பிரஸாதம் கொடுத்தா அவ்வளவுதான்!”
பாலுவுக்கும் புரியவில்லை. எல்லாருக்கும் ஆறுதல் கூறும்
பெரியவா,ராமஸ்வாமியை மட்டும் ஏன் ஒதுக்கி விட்டார்கள்”
ராமஸ்வாமி ஏழையே தவிர, ரொம்பவும் நல்லவர்;பக்திமான்;
அனுஷ்டாதா… பெரியவாளுக்குத் தெரியுமே”

“கவலைப்படாதே, பெரியவா மேலே பாரத்தைப் போட்டுட்டு மேலே காரியத்தைப் பார்…வரட்டுமா”
அரை அடி அகலத்துக்கு ஜரிகைக் கரை போட்ட தூய வேஷ்டி அதற்கேற்ற அங்கவஸ்திரம்,கொட்டைப் பாக்கு அளவில்
தங்கப்பூண் கட்டிய ருத்ராட்சமாலை,நவரத்தினமாலை, ஐந்து பவுன் சங்கிலியில், இரண்டு அங்குல டயா மீட்டரில் ஒரு
டாலர்; பத்தினியும் இரண்டு சிஷ்யர்களும் உடன் வர, தட்டு நிறையப் பழங்களுடன் கம்பீரமாக நடந்து வந்தார்.’
உபன்யாஸ திலகம் மார்க்கபந்து சாஸ்திரிகள்.
பெரியவாளிடம் அவருக்கு எப்போதும் ஒரு சலுகை உண்டு. வெகு நேரம் பேசிக் கொண்டிருப்பார்கள்.சாயங்காலத்தில்
ஒரு மணி நேரம் உபன்யாசம் செய்யச் சொல்வார்கள்.
பெரியவாள், பௌராணிகர் வந்திருப்பதை ஓரக் கண்ணால் பார்த்து விட்டார்கள்.ஆனாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல்
யார் யாருடனோ,என்னென்னவோ பேசிக் கொண்டிருந்தார்கள்.


இன்றக்கு என்ன,இப்படி?
அகில பாரதத்திலும் புகழ் பெற்ற ஒருபௌராணிகரை இப்படிக்
காக்க வைக்கலாமா?

ராயவரம் பாலு,பெரியவாள் அருகில் சென்று,”மார்க்கபந்து சாஸ்திரிகள் வந்திருக்கார்” என்று இரைந்து சொன்னார்.
பெரியவாள் பார்வை இவர் பக்கம் திரும்பு கிற மாதிரி பட்டது.


பழத்தட்டை சமர்ப்பித்துவிட்டு, வந்தனம் செய்தார் சாஸ்திரிகள்.
“திருப்பதிக்குப் போயிண்டிருக்கேன்.ரொம்ப அபூர்வமா, ஏழெட்டு நாள் ரெஸ்ட்.புரோகிராம் இல்லே.ஸ்ரீனிவாசனுக்கு
திருக்கல்யாணம் பண்ணிப் பார்க்கணும்னு, பத்தினி ஆசைப்பட்டா, உடனே புறப்பட்டுட்டேன். பெரியவா அனுக்ரஹத்தோட ஸ்ரீனிவாச கல்யாணம் நடக்கணும்…” பெரியவாள் அவரை ஏறிட்டுப் பார்க்கவில்லை; முகம் கொடுத்துப் பேசவில்லை.


தரிசனத்துக்கு வந்த பாட்டிகள், குடியானவர்களிடமெல்லாம் உற்சாகமாகப் பேசினார்கள். அரை மணி ஆயிற்று. “சாஸ்திரிகள் நின்னுண்டுருக்கா…” என்று நினையூட்டினார் பாலு. “ஹி……ஹி……ஆமாம்……பெரியவா அனுக்ரஹம் பண்ணனும். ஸ்ரீநிவாஸ திருக்கல்யாணம்…..”அவர் வாக்கியத்தை முடிக்கு முன் சட்டென்று எழுந்தார்கள் பெரியவாள்.
“முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ….” உள்ளே போய் விட்டார்கள், பெரியவாள்.எல்லாருககும் ஆச்சர்யமாக
இருந்தது.


ஸ்ரீநிவாஸ கல்யாணம் என்றால்,அது பத்மாவதி கல்யாணமும் தானே? யார் போய் பெரியவாளிடம் விளக்கம் கேட்பது?
திருப்பதியில் நிறையப் பேர்கள், கல்யாணம் உற்சவம் செய்கிறார்கள்.நீ, திருச்சானூரில் பத்மாவதி கல்யாணம் உற்சவம் செய்’ என்கிறார்களா?
“பெரியவா என்ன உத்தரவு போட்டுட்டுப் போயிருக்கா?”
சாஸ்திரிகள் முகத்தில் ஒரு லிட்டர் அசடு வழிந்தது.
முதுகில் சுளீரென்று சாட்டையடி!

இரண்டு மாதங்கள் கழித்து, முகமெல்லாம் பூரித்துக் கிடக்க,கல்யாணப் பத்திரிகையைப் பெரியவாளிடம் சமர்ப்பித்து விட்டு ராமஸ்வாமி,சொன்னார்.
“கல்யாணச் செலவு முழுக்க அண்ணாவே ஏத்துண்டுட்டார். ‘கன்னிகாதானம் பண்ணிக் கொடுக்கிறது மட்டும்தான் உன் பொறுப்பு. மீதி எல்லாத்தையும் எங்கிட்ட விட்டுடு’ன்னார்.”
“தென்னந்தோப்பு கேஸை வாபஸ் வாங்கிண்டுட்டார். “சின்ன பையனுக்குப் பன்னிரண்டு வயது. பூணூல் போட்டு தன் சிஷ்யனா வைத்துக் கொள்வதாகச் சொல்லிட்டார்.”
“அண்ணா,இப்படி அனுகூலமா மாறுவார்னு நான் கனவுகூட கண்டதில்லே….”
பெரியவாள் வலக் கரத்தைத் தூக்கி ஆசிர்வதித்து பிரசாதம் கொடுத்தனுப்பினார்கள்.
வெளியே வந்தார் ராமஸ்வாமி.எதிரே ராயவரம் பாலு!

“என்ன மரவக்காடு! கல்யாணப் பத்திரிகையா? புத்திரிக்குக் கல்யாணமா?கையிலே காலணா இல்லேன்னு கண்ணீர் விட்டீரே?” பத்திரிகையைப் பிரித்துப் பார்த்தார் பாலு.
“…மரவக்காடு ஜகதீஸ்வர சாஸ்திரிகள் பௌத்ரியும் என் இளைய சகோதரன் சிர.ராமஸ்வாமியின் ஸீமந்த புத்திரியுமான சௌ.பத்மாவதியை..” விதேயன்;மார்க்கபந்து சாஸ்திரி… பாலுவின் கால்கள் தரையில் வேர்விட்டன.
“பாலு அண்ணா! அவசியம் கல்யாணத்துக்கு வந்துடணும்…அண்ணா பொறுப்பிலே நடக்கிறது…உங்களைப் பார்த்தால்,அண்ணா சந்தோஷப்படுவார்…” தலையை அசைத்துவிட்டு,நகர்ந்தார் பாலு. இரண்டு மாதங்கள் முன்னர்,பெரியவாள் சொன்ன சொற்கள் காதருகில் மீண்டும் ஒலித்தன.
‘முதல்லே பத்மாவதி பரிணயம் பண்ணுங்கோ…”
“எந்த பத்மாவதி” திருச்சானூர் பத்மாவதியா? மரவக்காடு பத்மாவதியா?
ராமஸ்வாமியினுடைய பெண்ணின் பெயர் ‘பத்மாவதி’ என்று பெரியவாளுக்கு யார் சொல்லியிருப்பார்கள்?.

தேவ ரகசியங்களில் தலையிட நமக்குத் தகுதியில்லை மரவக்காடு பத்மாவதி கல்யாணத் தேதியை நினைவு வைத்துக் கொண்டால் போதும்.!
திருச்சானூர் பத்மாவதிக்கு நித்ய கல்யாணம்.!

சங்கரா! போற்றி…போற்றி
மகா பெரியவா திருவடிகள் சரணம் – “ஹர ஹர சங்கர – ஜெய ஜெய சங்கர”…!!!


 
Maha Periyaval about Seshadri Swamigal - An extract from Google

Last century witnessed the Trinities (brahma,vishnu,siva) Seshadri Swamigal (tiruvananamalai) ,Kanchi Mahaperiyava
,Sri Ramana Maharishi (also known as Chinna Seshadri swamigal).

Here is the excerpt from Maha Periyava:

Maha Periyava

Shri.Bharanidharan : I was writing ‘Arunachala magimai’ at that time. One day, I said to Maha Periyava that I am unable
to locate the house where Shri Seshadri Swamigal lived between 1870 to 1889. Maha Periyava said ‘ why don’t you take
efforts to find the house?’ and directed me to various people. The search narrowed down to 2 to 3 houses. It was then I met
the old man who built the house where Swamigal ived and he said ‘ when the elder(est) son was 19years he became mad and
ran away from the house’. So, finally, I located the Shri.Seshadri Swamigal’s house.


Then, when i went to have darshan of Maha Periyava who was at Kollavar Chatram, i briefed HIM on the developments.
He said ‘ shall we buy the house, much like Sangeetha mummoorthigals’ houses have been bought in Thiruvaroor?’.
We formed a committee, collected money, the house was bought and named as ‘Sri Kamakoti Seshadri Swamigal Nivasam’.
Maha Periyava then asked a portrait of Seshadri Swamigal to be kept in the house and Moovalur Gopala Dheekshitar was
asked to shift his residence there and do agni hotram and ishti homam. then, under instructions of Maha Periyava, the
aradhana of Swamigal was started in Margazhi Navami.


One day, Maha Periyava drew a plan on the sand at Sivasthanam, Thenambakkam, on how to build a mantap at Swamigal’s
residence. A trust was formed with Nalli Kuppusamy Chetty, ‘Sangupani’ Sivaraj Mudaliyar, K.R.Visvanathan and I was also
a part of it. In 1985 Sehsadri Jayanthi was also started in Thai, Hastham, again under HIS instructions.



Seshadri Swamigal

On Jan 21st,1987 (Thai Hastham) I went to the mutt to receive Maha Periyava’s blessings for the celebs to go off well and
casually mentioned about Unjavrithi that i witnessed at Thiruvaiaru just a couple of days back, during Thiyagaraja aradhana.
Maha Periyava said ‘start unjavrithi in Seshadri Swamigal Jayanthi too’. I said ‘okay, will plan for the next year’ ‘why next year?
start now’. i said i do not know anything about unjavrithi. Maha Periyava showed an old man standing nearby and said ‘ ivarukku
thalaipagai kattu. sombu onnu tholla (shoulder) pottuko, and as you go on the street the ladies will put rice in the sombu, collect it
and come back.thats all unjavrithi is all about’. ‘bhajanai?’. ‘no need for professionals, just the two of you would be enough’.
‘what to sing?’.

Maha Periyava thought for a moment, started putting thalam and began to sing ‘Jaya Jaya Jaya Jaya Kaamaakshi,
Jaya Jaya jaya Jaya kaamakoti, Jaya jaya Jaya jaya Seshadri’.just repeat this. the next year, Papanaasam Sri Kunjumani
Bhagavathar joined us.


One day, when we were talking about the registration of Seshadri Swamigal’s house, Maha Periyava asked me ‘ how many
Seshadris are involved in this?’. I said ‘four’.Maha Periyava said ‘five’ – first Seshadri Swamigal, then your friend who is
with us now, the advocate who verified the documents, the clerk in the register office and, of course, your father!!’.


Yet another day when i went to Thenambakkam, Maha Periyava sat like Seshadri Swamigal, with legs folded in the same way
and his left hand palm holding the chin and asked ‘ is this not how HE is sitting?’. I could not make out any difference between
the two of them and tears welled up in my eyes.


It was some time later that Maha Periyava spoke those immortal words ‘ will I ever become like Seshadri Swamigal?, will
I attain that level?’ If Maha Periyava whom all of us know is saakshath Parameswaran said this of Seshadri Swamigal, at what
level HE must have been? Brahamananda nilai !!
 
Last edited:


Maha Periyava's Message

நான் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். உங்களில் ரொம்பப் பேருக்கு அது விசித்ரமாக இருக்கும். அதாவது, வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? அதுவே தப்பு. வேத பாஷைக்கு 'ஸம்ஸ்க்ருதம்' என்று பேர் இல்லை. அதற்குப் பேர் 'சந்தஸ்' என்பதுதான். சந்தஸ் என்றால் சந்தம்(meter) மட்டுமில்லை. சந்தங்களில் அமைந்த வேதங்களுக்கும் வேதபாஷைக்கும்கூட 'சந்தஸ்'என்றே பேர். வேதம் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் (லௌகிகமான பேச்சு, எழுத்து, காவியங்கள் ஆகியன மட்டுமின்றி தர்ம சாஸ்திரம், புராண இதிஹாஸம் உள்ப்ட எல்லா விஷயங்களிலும்) பிரயோகமாகிற பாஷக்குத்தான் ஸம்ஸ்கிருதம் என்று பேர். வேத பாஷை சந்தஸ். 'வேத பாஷையில் இப்படி இருக்கிறது'என்று சொல்லுமிடங்களில், வியாகரண சாஸ்திரம் எழுதிய பாணினி, 'இதிசந்தஸி' என்பார். மற்றபடி ஸம்ஸ்கிருதத்தைச் சொல்லும்போது 'இதி லோகே'என்பார்.



ஸம்ஸ்கிருதம் என்பது பார்த்துப் பார்த்து ஸம்ஸ்காரம் பண்ணப்பட்ட- அதாவது பழுதில்லாமல், வழுவில்லாமல் ரூபம் பண்ணப்பட்ட பாஷை. ஆனாலும் முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட ஒரு பாஷை உண்டென்றால் அது வேத பாஷையான சந்தஸ்தான். 'கிருதம்' என்றால் 'செய்யப்பட்டது' என்று அர்த்தம். 'ஸம்ஸ்கிருதம்'என்றால் நன்றாக செய்யப்பட்டது. அப்போது யாரோ உட்கார்ந்து கொண்டு பிரயத்தனப்பட்டு இந்த பாஷையை செய்திருக்கிறார்கள் என்று ஆகிறது. வேத பாஷை இப்படி இல்லையே !அது தானாக flash ஆனது (பளிச்சிட்டது-ரிஷிகளால் க்ரஹிக்கப்பட்டது-நாம் எப்போதிலிருந்து இருக்கிறோமோ அப்போதிலிருந்து ச்வாஸமும் இருக்கத்தானே செய்கிறது? அதேபோல்தான் வேதமும். "தேனே ப்ரஹ்ம ஹ்ருதாய் ஆதி கவயே" )

அதனால் அதில் grammar (இலக்கணம்) முக்கியமில்லை. லோகோபகாரமாக இப்படி வந்த சப்தங்களை வைத்தே அதற்கு நன்றாக grammar முதலியவையும் இருப்பதாக ஸம்ஸ்காரம் செய்து, தேவஜாதியினர் ஸம்ஸ்கிருத பாஷையைப் பண்ணி அதில் பேசலானார்கள். அதனால்தான் Vedic Grammar (வேத இலக்கணம்) , Vedic Prosody (வேதத்தின் யாப்பு) என்றெல்லாம் தனியாக இருக்கின்றன. வேதத்திலிருந்து ஸம்ஸ்கிருதம் பண்ணப்பட்டது என்பதாலேயே வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை. பிற்பாடு ஸம்ஸ்கிருதம் தானாக வளர்ந்தும், ஸர்வ தேசப் பரிவர்த்தனைகளாலும் அநேக புது வார்த்தைகள் அதில் சேர்ந்த மாதிரி வேதத்தின் பாஷையில் ஏற்படவில்லை.

வேதம் ஸம்ஸ்கிருதம் இல்லை என்பதே, இப்போது நம் தாய் பாஷைகளுக்கு இல்லாத ஸ்தானம் ஸம்ஸ்கிருதத்துக்கு ஏன் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் வேத வித்யையை ஆதரிக்காமல் கோபப்படுகிறவர்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். இரண்டு கால் பிராணி, நாலு கால் பிராணி ஆகிய அனைத்துக்கும் க்ஷேமத்தை உண்டு பண்ணும் சலனங்களை உண்டாக்கக் கூடிய சப்தங்களையே உடையதான வேத பாஷையும், மற்ற அநேக மந்திர சாஸ்திர மந்திரங்களின் பாஷையும், நாம் நடைமுறையில் சொல்கிற அர்த்தத்தில் பாஷையே இல்லை. அவை ஒரு ஜாதிக்கோ, இனத்துக்கோ உரியன இல்லை. ஸமஸ்தப் பிரபஞ்சத்துக்குமான பாஷை என்று வேண்டுமானால் சொல்லலாம். சந்திரன் எல்லா தேசத்துக்கும் ஜிலுஜிலு என்ற நிலா அடிக்கிறது;சூரியன் லோகம் பூராவுக்கும் ஜீவஸத்தைத் தருகிறது. "எந்த தேசத்து சந்திரன்?எந்த தேசத்து சூரியன்? எங்களுக்கு இது வேண்டாம்"என்பார்களா?

தொல்காப்பியர், வேத சப்தங்கள் பரா என்கிற மூலத்தில் தோன்றியதால் முக்கியத்துவம் பெற்றவையாகும் என்று சொல்லியுள்ளார். மந்திராக்ஷரம், 'அந்தணர் மறைத்தே'என்று எழுத்ததிகாரத்தில் (102ம் சூத்திரம்) சொல்லியிருப்பதாகவும், ஆதலால் ஆலயங்களில் மந்திர சப்தங்களை மாற்றாமல் ரக்ஷிப்பதற்குத் தொல்காப்பியமே ஆதரவாகத்தான் இருக்கிறது என்றும், அந்தத் தமிழ்ப் புலவர்கள் எடுத்துக் காட்டினார்கள்.

'நம் பாஷையில் ஒன்று இருந்தால்தான் உசந்தது; வேறெந்தப் பாஷையில் இருந்தாலும் மட்டம்; அது வேண்டாம்'என்று நினைப்பது கொஞ்சம்கூடப் பகுத்தறிவாகத் தோன்றவில்லை. உலகத்திலிருக்கிற அத்தனை புத்திசாலித்தனமும், நல்லதும் நம் பாஷையில்தான் இருக்க வேண்டும் என்று நாம் நினைத்தால், அவரவர்களும் இப்படித்தானே தங்கள் தங்கள் தாய் பாஷையைப் பற்றி நினைப்பார்கள்?அதனால் இநதப் பாஷைதான், அந்தப் பாஷைதான் என்றால் - அதில் துளிகூடப் பகுத்தறிவும் இல்லை;யதார்த்த ஞானமும் இல்லை.

ஒரு பக்கத்தில் நம்பிக்கையின் மீதே அநேக விஷயங்களை ஏற்கவேண்டிய ஆஸ்திக்யத்தை பரிஹாஸம் செய்து, "பகுத்தறிவு, பகுத்தறிவு"என்கிறார்கள். இன்னொரு பக்கத்தில், இப்படி பிரத்யக்ஷத்திலேயே பகுத்தறிவு இல்லாமல் இருக்கிறது!

ஒரு பக்கத்தில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'என்பதுதான் தமிழ்நாட்டின் தேசாசாரம் என்று சொல்கிறோம். இன்னொரு பக்கம், ஆதிகாலத்திலிருந்து இங்கு உறைந்து போய்விட்ட ஸநாதனமான ஸமாசாரங்களைக்கூட எப்படியாவது இல்லாமல் பண்ணிவிட்டால் தேவலை என்று நினைக்கிறோம்!

மந்திரங்களை நாம் விடுவதால் மந்திரங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை. நமக்குத்தான் நஷ்டம். மைசூரிலிருந்து காவேரி வருகிறது, வெளிதேசத்திலிருந்து உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு மருந்து வருகிறது என்றால், அதெல்லாம் வேண்டாம்; உள்ளூர் ஜலம் கிடைத்தால்தான் குடிப்போம்; உள்ளூர் மருந்தானால்தான் சாப்பிடுவோம்'என்று உயிரை விடுவார்களா? நமக்குப் பெரிய ரக்ஷையாக இருக்கிற மந்திரங்களில் பாஷையைக் கொண்டுவந்து, அந்நியம் எனறு ஒதுக்குவது இப்படித்தான். வாஸ்தவத்தில் அது அந்நியமும் இல்லை. நம்மோடு அந்நியோந்நியமாக ஆதிகாலத்திலிருந்து கரைந்ததுதான். --
 
An interesting information about the Sacred Thread which we wear
[h=3]சடங்கின் போது, ஏன் பூணூலை இடம், வலம் தோள்களில் மாற்றிக்கொண்டே
இருக்கிறோம்? - மஹா பெரியவா
[/h]
[FONT=verdana, sans-serif]
[/FONT] [FONT=verdana, sans-serif]தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம் ; சிரத்தையோடு செய்வது சிராத்தம். தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.

[/FONT]
[FONT=verdana, sans-serif]இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் இரண்டும் இருக்கின்றன. சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபே¬க்ஷயும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள். நேராகவே கடவுளிடம் போகிற பிற மதஸ்தர்களுக்கும் சிகை, யக்ஞோபவீதம் இல்லை.[/FONT]
[FONT=verdana, sans-serif]
[/FONT]

[FONT=verdana, sans-serif]ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ணி வேண்டும் என்று சொல்கிறேன்:[/FONT]
[FONT=verdana, sans-serif]
[/FONT]

[FONT=verdana, sans-serif]கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு. தெற்குதான் பித்ருக்கள் இருக்கும் பக்கம். ' தென்புலத்தார் ' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா ? தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்..... ' உத்தராயணம் ' என்பதில் மூன்று சுழி ' ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் ' என்னும்போது இரண்டு சுழி ' ன ' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது.[/FONT]
[FONT=verdana, sans-serif]
[/FONT]

[FONT=verdana, sans-serif]உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார். நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான். அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம் அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.[/FONT]
[FONT=verdana, sans-serif]
[/FONT]

[FONT=verdana, sans-serif]" பிரதக்ஷணம் பண்ணுவது " என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கி என்றுதான் அர்த்தம். முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்த்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.[/FONT]
[FONT=verdana, sans-serif]
[/FONT]

[FONT=verdana, sans-serif]இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான்.

அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.[/FONT]



 
Goddess Ambal (Utsava Murthi) giving Divya Dharshan to everyone at Sri Madam in the
presence of Maha Periyava in front of Adhistanam.

utsava-kamakshi-mahaperiyava-sannidhi.jpg
 
An interesting information to go through






Below is a most Beautiful incident in the life of Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal
or Maha Periyavaal who was the 68th Jagadguru in the Kanchi Kamakoti Peetam.


A family went to have the darshan of Maha Periyavaal. Along with them, they took one of their family friends who lived in the USA for
some decades. The friend did not have any great faith in our religion, system and especially the monks wearing the saffron; he went along
with him with utterly non-interested to meet Him. He was under the impression that Maha Periyavaal was a fundamentalist, an uneducated
monk. This NRI had no great respect at all for Him. Not only that, he uttered such inauspicious things about Him, ‘what does He know?
Does He know English?’.


There was a big throng of devotees at the Mutt and the family was standing in a decent distance from Him. As usual, Maha Periyaval
saw this family with His graceful eyes, and called all of them near to Him.


They all went near Him, the friend too.


After all the usual courteous enquiry towards the family, the Master looked at the NRI friend and asked about his details, including his
name, whereabouts, his predecessors, where he is working etc etc.


Then He asked, ‘you are born in India, and you know Tamil; your wife was also born in India and should know the mother tongue.
When you two converse will it be in Tamil or English?’


The friend replied ‘We never use Tamil at home, we use only English. The same goes for the kids also.’


Then Maha Periyavaal asked, ‘before speaking, you may have to think and conceive the sentence. Is the thought process in Tamil or English?’


The friend replied, ‘That too in English only’.


Some minutes later, an old lady came to have Maha Periyaval Darshan.


Maha Periyavaal looked at the NRI person and said, ‘This old lady is now very poor, but once upon a time she was very rich. But
even after she lost all the materialistic wealth her devotion towards the Mutt, Acharya and me has never changed even a bit. Could
you please tell me what is the English word which will describe this unflinching devotion, which can’t be changed by external situations?
I would like to know.’


The man was flummoxed. He thought and thought for a while but did not know that word.


Maha Periyaval smiled and told him, ‘please take your time and let me know’.


Even after some time, he could not come up with the required word.


Then Swamiji said, ‘Can I suggest one word? Could you please confirm whether the same can convey this meaning? EQUIPOISED’.


The man was spellbound and fell on Maha Periyaval's Feet to Pardon him for his ego..
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top