• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
பாட்டி பேசறது தாத்தாவுக்குக் கேட்காது. தாத்தா பேசறது பாட்டிக்குக் கேட்காது. அப்படி இருக்கும்போது எதை வெச்சி ரெண்டு பேரும் விடாமல் தினமும் சண்டை போடறாங்கன்னே எனக்குப் புரியமாட்டேங்கறது.
அது அம்பது வருஷ பழக்க தோஷம்.
 
இந்த ஆசிரியர் இருக்காரே, இவர் சொல்லிக் கொடுக்கிற ஆசிரியர் இல்லை. சொல்லிக் கெடுக்கிற ஆசிரியர்.
 
Patient to Dentist: "How much to get my teeth straightened?"
"Twenty thousand bucks"
Patient heads for the door.
Dentist to patient: "Where are you going?"
"To a plastic surgeon to get my mouth bent."
 
என்னங்க என்ன விசேஷம்? பட்டாசு வெடிச்சு ஊர் பூராவும் கொடி, தோரணம், கூத்து, பாட்டு, கும்மாளம்னு ஒரே அமர்க்களமா இருக்கு.
நம்ம தலைவர் லஞ்சம் கொடுத்த கேஸுலே உள்ளே போயிட்டு இன்னிக்கு பெயில்லே வெளியிலே வந்திருக்காரு. அவரை வரவேற்கத்தான் இந்த ஆர்ப்பாட்ட வரவேற்பு.
 
ஏன் நாம பேசற மொழியைத் தாய் மொழின்னு சொல்றோம்?
ஏன்னா, வீட்டிலே அப்பாவுக்குப் பேச சான்ஸே கிடைக்கிறது இல்லே.
 
தலைவர் அடிக்கடி உண்ணாவிரதம் இருக்காரே. எப்படி முடியுது?
அவருக்கு அடிக்கடி வயத்துவலி வரதுதான் காரணம்
 
A blonde was speeding in a 25 mile per hour residental zone when a local police cruiser pulled her over.
The female police officer who walked up to the car also happened to be a blonde. She asked for the blonde's driver's license.
The driver searched frantically in her purse for a while and finally said to the blonde policewoman, "What does a driver's license look like?'
Irritated, the blonde cop said, "Don't be a smartass!, it's got your picture on it!"
The blonde driver frantically searched her purse again and found a small, rectangular mirror down at the bottom. She held it up to her face and said, "Aha! This must be my driver's license", then handed it to the blonde policewoman.
The blonde cop looked in the mirror, handed it back to the driver and said, "You're free to go. And, if I had known you were a police officer too, we could have avoided all of this."
 
ஏழைங்க கடன் வாங்கித் திரும்பக் கட்ட முடியலைனா, அரசாங்கம் அவங்க கடனைத் தள்ளிடும்.
கோடீஸ்வரர்கள் கடன் வாங்கித் திரும்பக் கட்டலைனா, அதை திரும்பி வாராக் கடன்னு பாங்க் தள்ளிடும்.
சாதாரண பொதுமக்கள் கடன்வாங்கி திரும்பக் கட்டலைனா, பாங்க் அவங்களை உள்ளே தள்ளிடும்.
 
இந்த நாட்டு பிரதம மந்திரியாக ஆக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு எதனால் வந்தது?
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு மாத்திரம இருக்கக் கூடாதா என்ன?
 
நம்ம கட்சிப் பேச்சாளரை ஒரு மாசத்துக்கு பேசவே கூடாதுன்னு நம்ம ஊர் டாக்டர் சொல்லிட்டாரு.
நாம அதுக்காக அவருக்கு நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கோம். ஆனால் அவர் எப்பவுமே பேசக் கூடாதுன்னு சொல்லியிருந்தார்னா நாமெல்லாம் சேர்ந்து அந்த டாக்டருக்கு ஒரு சிலையே வச்சிருக்கலாம்.
 
An Amish husband, wife and son travel to the city on vacation. They visit a shopping mall and while the mother is shopping, the father and son are standing in awe in front of an elevator (having no idea what it is). As they watch, an elderly lady walks into the strange silver doors and the doors close. The father and son watch as the numbers go up, and then back down. When the doors open, a beautiful young woman walks out. The father leans over and whispers to the son, "Son, go get your mother!"
 
ஹோட்டல் சாப்பாடு எனக்கு ஒத்துக்கல்லே. நானே சமைச்சு சாப்பிடறதும் எனக்குப் பிடிக்கலை. அதான் நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தீர்மானிச்சுட்டேன்.
நானும் சமைக்கிறது, வீட்டு வேலை செய்யறது இதெல்லாம் பிடிக்காமதான் டைவர்ஸ் பண்றதா தீர்மானிச்சுட்டேன்.
 
அவன் லவ் பண்ணறான்னு தெரிஞ்சும் நீ விமலாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டியே. இப்ப சந்தோஷமா இருக்கியா?
பேசாமல் அவனே விமலாவைக் கல்யாணம் பண்ணிக்கட்டும்னு விட்டிருக்கலாம்னு இப்ப தோணுது.
 
தாங்க முடியாத நெஞ்செரிச்சல்னு சொல்லி டாக்டர் கிட்டே போனியே. என்னஆச்சு?
சிகிச்சை முடிஞ்சி அவர் கொடுத்த பில்லைப் பார்த்ததும் ஒரே வயித்தெரிச்சலாப்போச்சு
 
During their silver anniversary, a wife reminded her husband:
Do you remember when you proposed to me, I was so overwhelmed that I didn't talk for an hour?"
The hubby replied: "Yes, honey, that was the happiest hour of my life."
 
கோவிலுக்குப் போய் உங்க பேரிலே சுவாமிக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன்.
ஏண்டி? இன்னிக்குக் காலையிலே இருந்து இத்தனை நேரம் வரையிலும் நீ வீட்டிலே எனக்கு அர்ச்சனை பண்ணினது பத்தாதா?
 
என்ன? நம்ம வீட்டு சமையல்லே இன்னிக்கு கறி, கூட்டிலே எல்லாம் ஒரே நார் நாரா இருக்கு.
சாப்பாட்டிலே நார்ச்சத்து நிறைய சேர்க்கணும்னு நேத்து டாக்டர் சொன்னாரில்லே. அதை நான் சமயற்கார அம்மா கிட்டே சொன்னேன். அதான் அந்த அம்மா தேங்கா நார், வாழை நார் இப்படி எல்லா நார்களையும் கறியிலேயும் கூட்டுலேயும் சேர்த்துட்டாங்க.

நல்ல வேளையா டாக்டர் இரும்புச் சத்து சேர்க்கணும்னு சொன்னார்னு சொல்லாம விட்டியே. சொல்லியிருந்தா அந்த அம்மா சாப்பாட்டிலே ஊசி, குண்டூசி, கோணூசி, குத்தூசி, ஆணி கோணின்னு சேர்த்திருப்பாங்க. தப்பிச்சோம்.


 
ட்ரெயின்லே எனக்கு மேல் பெர்த் கொடுத்துட்டான். எனக்கு கால்லே சுளுக்கு இருந்ததனாலே ரொம்பக் கஷ்டப்பட்டு ஏறி படுக்க வேண்டிதாப் போச்சு.
கீழ் பெர்த்துலே இருக்கிற யார் கிட்டேயாவது விஷயத்தைச் சொல்லி பெர்த் மாத்தி இருக்க வேண்டியதுதானே.
கேட்கலாம்னு தான் நெனச்சேன். ஆனால் கீழ் பெர்த்து எல்லாம் காலியா இருந்தது. அதுலே யாருமே இல்லை.
 
The things said in a court, word for word, taken down by the reporters.
Q: How many autopsies have you performed on dead people?
A: All my autopsies were performed on dead people
*************
Q: What was the first thing your husband said to you when he woke up that morning?
A: He said "Where am I, Cathy?"
Q: And why did that upset you?
A: My name is Susan.
 
என் பெண்டாட்டுக்கு பேய் பிடிச்சி இருக்குன்னு பூசாரி சொல்றார்.
ஆச்சரியமா இல்லே இருக்கு. ஒரு பேய் இன்னொரு பேயைப் பிடிக்குமா?
 
எனக்கு என் மாமா கிட்டே இருந்து இன்னிக்குக் காத்தாலே ஒரு மிஸ்டு கால் வந்தது. அவருக்கு ஃபோன் போட்டுக் கேட்டதுலே அவரோடே ஃபிரண்டுக்கு ஆக்ஸிடென்ட்லடுலே ஒரு கால் போயிட்டுதுன்னு சொன்னார்.

ஓ!அதைத்தான் மிஸ்டு கால்னு சொன்னீங்களா?
 
அந்த ஏரியாவிலே தடுக்கி விழுந்தா டாக்டர்கள் தான்.
நீங்க சொன்னது நூத்துக்கு நூறு சரிதான். நான் அந்த ஏரியாவுக்குப் போயி அந்த கண்ணறாவி ரோடுலே நடந்தபோது தடுக்கி விழுந்ததுலே முழங்கால் முட்டி பேந்து போய் டாக்டர்கிட்டே போக வேண்டியதாப் போச்சு.
 
A man had a party where all the rich people attend.
And the he had a pool with alligators. So he announced that anyone who will swim across this pool and come out alive will be granted three wishes.
But no one wanted to go for the challenge. All of a sudden, there was a big splash and a man was swimming like a hell and came out alive.
So the host asked, "What are your three wishes?"
The man replied, "Give me the shotgun and bulllets and show me the idiot that pushed me in ...."
 
நான் உங்கிட்டே கொடுத்த பாமை அந்தக் காருக்குள்ளே நான் சொன்ன இடத்திலே ஜாக்கிரதையா வெக்கணும்.வைக்கும்போது பாம் வெடிக்காமல் பாத்துக்க. தப்பித்தவறி வெடிச்சிடுத்துன்னு வெச்சிக்க அப்புறம் அவ்வளவுதான்.
அதைப் பத்தி நீங்க கவலைப்படாதீங்க. அதுக்காகத்தான் இன்னொரு பாம் நான் கையிலே எக்ஸ்ட்ராவா வெச்சிருக்கேன்.
 
நர்ஸ்: ஏங்க? உங்க பக்கத்து பெட்டிலே இருந்த நோயாளி எங்கே? ஆளையே காணும். சொல்லாம கொள்ளாம தப்பிச்சி போயிட்டாரா?
நோயாளி: அவர் ஒருத்தராவது பிழைச்சிப் போகட்டும். விடுங்க.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top