• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

My jokes in Tamil and English

Status
Not open for further replies.
எமர்ஜென்ஸியை எதிர்த்துப் போராடி ஜெயிலுக்குப் போன நீங்க ஏன் மன்னிப்புக் கடிதம் கொடுத்து வெளியிலே வந்தீங்க?
ஜெயிலுக்குப் போன அப்புறம்தான் தெரிஞ்சது எனக்கு எமர்ஜென்ஸி நெருக்கடியே பரவாயில்லை இந்த ஜெயில் கொசுக்கடிக்குன்னு.
 
நம்ம கம்பெனி மானேஜர் தற்கொலை பண்ணிக்கிட்டார்.
நல்ல மனுஷன். அவருக்கு விரோதிகளே யாரும் கிடையாது. அப்படி இருக்கும்போது அவரை யாரு தற்கொலை பண்ணியிருப்பாங்க?
 
பசிச்சதுன்னு ஹோட்டலுக்குப் போனேன். நாலு தோசை சாப்பிட்டும் பசி அடங்கலை. அஞ்சாவது தோசை சாப்பிட்ட பிறகுதான் பசியே அடங்கிச்சு. பில் தான் ஜாஸ்தி ஆயிட்டுது.
போடா, பைத்தியக்காரா, அந்த அஞ்சாவது தோசையை முதல்லேயே சாப்பிட்டிருந்தா பசி அப்பவே அடங்கி இருக்கும், இவ்வளவு பில்லும் ஆயிருக்காது இல்லே?
 
என்னங்க? கேட்டீங்களா? எனக்கு இதுதான் கடைசி ஜன்மம். அடுத்த ஜென்மமே கிடையாதுன்னு சொல்லிட்டார் அந்த சாமியார்.
ஓ! அப்படின்னா அடுத்த ஜென்மத்துலே ஒருத்தன் தப்பிச்சான்னு சொல்லு.
 
அந்தப் பொண்ணு மகா வாயாடி.
எப்படிச் சொல்றே?
ஏண்டி உனக்கு நாலு கழுதை வயசாச்சு. பொறுப்பே இல்லாம பேசறியேன்னு சொன்னா உங்களுக்கு என்னை மாதிரி ரெண்டு மடங்கு வயசாச்சு. அப்படின்னா உங்களுக்கு எவ்வளவு கழுதை வயசாச்சுன்னு நீங்களே பெருக்கிப் பாத்துக்குங்க அப்படின்னு சொல்றா.
 
big sale.
Rumors of the sale (and some advertising in the local paper) were the main reason for the long line that formed by 8:30, the store's opening time, in front of the store.
A small man pushed his way to the front of the line, only to be pushed back, amid loud and colorful curses.
On the man's second attempt, he was punched square in the jaw, and knocked around a bit, and then thrown to the end of the line again.
As he got up the second time, he said to the person at the end of the line...
"That does it!
If they hit me one more time, I don't open the store!"
 
நமது tv நேயர்களுக்கு ஒரு நற்செய்தி. இதுநாள்வரை நீங்கள் திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் எங்கள் சீரியல்களைப் பார்த்து ரசித்து அழுதீர்கள். இனிமேல் வாராவாரம் சனிக்கிழமையும் எங்கள் சீரியல்கள் தொடருவதால் இனி நீங்கள் வாரம் ஆறு நாட்கள் எங்கள் சீரியலைப் பார்த்து அழுது ரசிக்கலாம். இல்லை, ரசித்து அழலாம்.
 
என்னங்க இது? ரோடுலே விட்டு விட்டு அங்கங்கே ஸ்பீட் பிரேக்கர் இருக்கும் . நான் பாத்திருக்கேன். ஆனால் இங்கே ஸ்பீடு பிரேக்கருக்கு நடுவுலே அங்கங்கே கொஞ்சம் ரோடு இருக்கு. இது என்ன ஊருங்க இது?
இதுதாங்க சென்னை.
 
Blonde got the 4th child
He fills data in the birth certificate "Mother: Blonde. Father: Blonde. Kid: Chinese."
"How come you write "Chinese" when both parents are Blonde?"
"Aah, I read it in the newspaper", Blonde says.
"Every 4th person born on the Earth now is a Chinese."
 
எங்க குடும்பத்துலே நாங்க எங்க சொந்தத்துலேதான் கல்யாணம் பண்ணிக்கிற வழக்கம்.
ஓ! அப்படியா?
ஆமாம்.எங்க அம்மா எங்க அப்பாவைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். எங்க அண்ணன் என் அண்ணியைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். எங்க தாத்தா என்னோடே பாட்டியைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ஏன்? நான்கூட என் பெண்டாட்டியைத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
 
இது தாண்டா உலகம்.
நான் சின்னவனா இருந்தபோது நான் சின்னப் பயல்னு சொல்லி ஒருத்தரும் என்னை மதிக்கலை.
கல்யாணம் ஆகிற வரையிலும் வாழ்க்கையிலே அனுபவம் பத்தாதுன்னு ஒருபயலும் என்னை மதிக்கலை.
நடுவயசுலே என் பொண்டாட்டி என்னை மதிக்கலைனு சொல்லி ஊர்ல ஒரு பய என்னை மதிக்கலை.
இப்ப எனக்கு வயசானப்போ வயசானவன்னு சொல்லி ஒரு பயலும் என்னை மதிக்கிறது இல்லை.
உயிரோடு இருந்தப்போவே யாரும் என்னை மதிக்கலையே. நான் செத்தப்புறம் யார் என்னை மதிக்கப் போறாங்க? (செத்தப்புறம் என்னை மதிச்சா என்ன, மதிக்காட்டி என்ன?)
 
wo atoms are walking down the street, towards each other, but neither sees the other.
They crash into each other and they both fall down.
"Are you okay?" the first atom says to his friend.
"Well, I think I lost an electron, but otherwise I'm alright."
Are you sure?
Yes. I am positive
 
அவர்: என்னோட பர்ஸ் தொலைஞ்சு போச்சு. அதுலே நான் பத்தாயிரம் ரூபா வெச்சிருந்தேன். அதைக் கண்டுபிடிச்சிக் கொடுக்கறவங்களுக்கு நான் நூறு ரூபா பரிசத் தரேன்.
(அங்கிருந்த கூட்டத்தில் ஒருவர்) நான் இரு நூறு ரூபா தரேன்.
 
அதோ போறாரே. அவர்தான் இந்த ஊர்லேயே ரொம்ப வருஷமா பழந்தின்னு கொட்டை போட்டவர்.
யார் அவர்?
அவர் தான் இந்த ஊரிலேயே பெரிய மாம்பழ வியாபாரி.
 
நான் அறுபது வயசு வரையிலும் சாப்பாட்டு விஷயத்திலே ரொம்பக் கண்டிப்பா இருந்தேன். எண்ணைப் பலகாரங்கள், எண்ணையில் செஞ்ச சமையல் பதார்த்தங்கள், கொழுப்பு இதையெல்லாம் கொஞ்சங்கூட சேர்க்காம இருந்தேன். இப்ப வடை, பஜ்ஜி மாதிரியான எண்ணை சாமான்கள், ஐஸ்கிரீம், வெண்ணை, நெய் பட்சணங்கள் எல்லாத்தையும் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன்.
என்ன சார்? தலை கீழா இருக்கு நீங்க பண்ணறது. ஏன் சார்? இந்த வயசுலேதான் நீங்க சாப்பாட்டுலே கட்டுப்பாடா ஜாக்கிரதையா இருக்கணும்.
அறுபது வயசு வரையிலும் எனக்கு பொறுப்பு இருந்தது பிள்ளகள் படிப்பு, கல்யாணம் அப்படி இப்படின்னு. இப்ப எனக்கு எந்தப் பொறுப்பும் கிடையாது. இத்தனை வருஷமாத்தான் வயித்தைக் கட்டி வாயைக்கட்டி வாழ்ந்தாச்சு. இனிமேலாவது வாய்க்கு ருசியா நமக்குப் பிடிச்சதைச் சாப்பிட்டு சந்தோஷமா இருக்கிறதை விட்டுட்டு ஏன் வாயைக் கட்டணும்? வாயைக் கட்டி வயித்தைக் கட்டி நூறுவருஷம் வாழறதுக்குப் பதிலா, நல்ல திருப்தியா சாப்பிட்டுக் கொஞ்சம் வருஷம் இருந்தாப் பத்தாதா? அதான் இருந்தாச்சே அறுபது வருஷம். அது போதாதா?
 
A man went into a shoe repair store in his hometown that he had not been in for almost twenty years. He found everything just the way he remembered it.
He went up to the counter and asked the man about a pair of shoes that he had left there for heel repair almost 20 years ago.
"One minute. I'll check,” replied the man.
A few minutes later, the repairman came back.
"Well..." said the man,
"They'll be ready Tuesday."
(Doesn't it remind you of our tailors of yester years?)
 
அதென்னங்க சேவை வரி? என் பையன் இது தெரியாமல் பொது நல சேவை செய்யறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கானே. அதுக்கும் இந்த வரி உண்டுங்களா?
உஷ். பலமாய்ப் பேசாதீங்க. அதுக்கும் நீங்க சொல்ற மாதிரி வரி போட்டாலும் போட்டுவிடுவாங்க.
 
அப்பா, அந்தப் பொண்ணு எங்க காலஜ் பேச்சுப் போட்டியிலே ஃபர்ஸ்ட் பிரைஸ் வாங்கியிருக்கா.
பாவம் அவளைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன்.
 
என் பேத்திக்கு என்பேரை வச்சது தப்பாய்ப் போச்சு.
ஏன்?
என் மருமக அழுத்தம் திருத்தமா ஊரே கேட்கிற மாதிரி பலமா பேரைச் சொல்லித் திட்டும்போது அவ என் பேத்தியைத் திட்டறாளா, இல்லை என்னைத் திட்டறாளான்னு புரியமாட்டேங்குது.
 
One day, a diver was enjoying the aquatic world 20 feet below sea level.
He noticed a guy at the same depth he was, with no scuba gear on whatsoever.
The diver went below another 10 feet, but the guy joined him a minute later.
The diver went below 15 more feet, and a minute later, the same guy joined him.
This confused the diver, so he took out a waterproof pad and pencil, and wrote,
“Amazing! How are you able to stay this deep down without equipment?”
The guy took the pencil and pad, erased what the diver had written, and wrote,
“I'm drowning, you moron!”
 
பொழுதே போகமாட்டேங்குது. வாழ்க்கையே வெறுத்துப் போச்சுன்னு சொல்றீங்களே. பேசாம டிவி சீரியல் பாருங்க. நல்லாப் பொழுது போகும்.
டிவி சீரியல் பாத்துப் பாத்துத்தான் எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.
 
உங்க அம்மாவுக்குக் கொஞ்சம் கூட மூளை இல்லைங்க.



சரியாச் சொன்னே. மூளை இருந்திருந்தா, இருந்திருந்தும் உன்னைப் போய் என் தலையிலே கட்டி வச்சி இருப்பாங்களா?
 
அந்தக்காலத்து நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் புலம்பல்:
உங்களைக்கல்யாணம் பண்ணிக் கொண்டு என்ன சுகத்தைக் கண்டேன். ஊட்டி கொடைக்கானல்னு ஒரு ஹனிமூன் உண்டா? ஒரு நகை நட்டு உண்டா? ஒரு சினிமா டிராமா உண்டா? ஒரு பீச் உண்டா? ஒரு ஃபோன் உண்டா? ஒரு கார் உண்டா?
இந்தக் காலத்து நடுத்தர வர்க்கத்துப் பெண்களின் புலம்பல்:
உங்களை marry பண்ணி ரொம்பவும் disappoint ஆயிட்டேன். ஸ்காட்லண்ட், ஹவாய்னு ஒரு ஹனிமூன் உண்டா? ப்ளாடினத்துலே ஒரு ஃபேஷன் ஜுவல்லரி உண்டா? ஒரு ஸ்மார்ட் ஃபோன் உண்டா? ஒரு ஐநாக்ஸ், மல்டிப்ளக்ஸ் சினிமா, ஒரு மால், ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் உண்டா? ஒரு BMW இல்லே ஒரு ஃபெராரி கார் உண்டா?
 
Patient to the eye doctor:
"Whenever I drink coffee, I have this sharp, excruciating pain in my eye."
"Remember to remove the spoon from the cup before drinking."
 
இவன் உன்னோடே கூடப் பிறந்தவனா?
இல்லை. இவன் என் தம்பி. நான் பிறந்து நாலு வருஷம் தள்ளிப் பிறந்தவன். ஆனா அவன் தான் என் கூடப் பிறந்தவன். ஆனா தம்பி இல்லை.
என்னப்பா குழப்பறே? தம்பியைக் கூடப் பிறந்தவன் இல்லேங்கறே. இவனைக் கூடப் பிறந்தவன். ஆனா தம்பி இல்லேங்கற. அப்படின்னா அவனும் நீயும் ரெட்டையர்களா?
இல்லை. அவனும் நானும் ஒரே ஆஸ்பத்திரியிலே வெவ்வேறே அம்மாக்களுக்கு பக்கத்து பக்கத்து பெட்லே ஒரே சமயத்துலே பிறந்தவங்க. அதனாலே அவன்தான் என் கூடப்பிறந்தவன்.
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top