Raji Ram
Active member
ஆடாத சதை ..... உரமான உடல்!
கூடாத உறவு ..... கெட்டவராயின் நலம்!
ஈயாத வள்ளல் ..... ஈயாவிட்டால் வள்ளலே அல்ல!
தேயாத நிலவு ..... நாளும் முழு நிலவு! பிரதமை, அஷ்டமி, நவமி பயம் இல்லை!!
உண்ணாத உணவு ..... ஃப்ரிஜ்ஜில் வைத்தால், மறுநாள் உதவும்!
எண்ணாத எண்ணம் ..... சமாதி நிலையோ?
காணாத கனவு ..... மிக நல்ல உறக்கம்!
வீணான இரவு ..... ??
ஏறாத மரம் ..... யாரும் கிளைகளை வெட்ட மாட்டார்களே!
கோராத வரம் ..... கோராமல் கொடுப்பான் இறைவன்!
வீசாத தென்றல் ..... அது வீசத்தான் வேண்டும்!
பேசாத காதல் ..... சண்டையே வராது!
பாடாத குயில் ..... பரிதாபத்திற்கு உவமை ஆகும்!
ஆடாத மயில் ..... பெட்டை மயில் ஆடாது! அதுதான் வம்சம் வளர்க்கும்!
இனிக்காத உறவு ..... வெட்டன மற!
பனிக்காத இரவு ..... மார்கழி தவிர, சிங்காரச் சென்னையில்!
செல்லாத ஊர்கள் ..... கூட்டம் குறையும்!
சொல்லாத பேர்கள் ..... மறந்தாலும் பரவாயில்லை!
சுடாத நெருப்பு..... 'பூமிதி' (தீ மிதித்தல்) செய்வோருக்கு நலம் தருமே!
விடாத துன்பம் ..... இதன் பயனால் மனமும் உடலும் கெடுமே!
கிட்டாத இன்பம் ..... என்றால் பிறருக்குக் கிட்டிய இன்பமோ?
ஒட்டாத உறவு ..... சாப்பாடு, போன், பயணம் இன்ன பிற செலவுகள் இல்லை!
நீந்தாத மீன் ..... மீன் பிரியர்கள் எளிதில் பிடிப்பார்கள்!
ஓங்காத வாள் ..... உயிர்கள், உடல்கள் சேதம் ஆகாது!
ஏதோ பயனுள்ளவைதான் இவையும்! :high5: