• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Pilgrimage or sightseeing in USA

Status
Not open for further replies.
Temples - 1.

Pittsburgh Sri Venkateswara temple (2003)

பாலாஜி கோவில் 'பிட்ஸ்பர்க்கில்' மிகப் பிரசித்தம்; அங்கு
பாலாஜி தரிசனத்துக்கு எல்லோரும் கூடிட ஏற்பாடு ஆனது.

'ஜருகு, ஜருகு' என உந்துதல் இல்லை; அமைதியாக, நெஞ்சு
உருக ஆண்டவனை வேண்ட முடிகிறது! பிரசாதமாக அங்கு

பாதாம், கற்கண்டு, கிஸ்மிஸ், ஆப்பிள், வாழைப் பழம் என
பல்வேறு சத்தானவை, நம் கைகள் நிறையத் தருகின்றார்!

ஒரு தளம் முழுதும் சாப்பாட்டு அறையே வியாபித்திருக்க,
பெரும் கூட்டம் அங்கு நிறைந்திருக்க, புளியோதரை முதல்,

பிசிபேளா, தயிர் சாதம் வரை வகை வகையான உணவுகள்,
'பிசி'யாக 'டோக்கன்' தந்து, வரிசையில் பட்டுவாடா செய்ய,

பிரம்மச்சாரிப் பசங்கள் முதல் இல்லத்தரசிகள் வரை அங்கு,
பிரசாதங்களை 'தெர்மோகோல்' பெட்டிகளில் வாங்குகிறார்!

 

Temples - 2.


Sathyanarayana temple, Tampa. (2003)


மாலை வேளை சத்திய நாராயணா கோவிலுக்குச் சென்று தரிசனம்;
மாலை வேளை பூஜைகள், மிக அருமையாக நடந்துகொண்டிருந்தன.

சிவன் லிங்க வடிவில் திகழ, அம்பாள் பல ஆபரணங்களுடன் மிளிர,
நவக்கிரஹ சன்னதிகள் இருக்க, விநாயகர் வினை தீர்க்க அமர, ஜனக

ராஜ குமாரி சீதை ஸ்ரீ ராமருடன் விளங்க, வள்ளி, தெய்வானை சமேத
ராஜ அலங்கார முருகன் புன்னகை பூக்க, மனங்கள் அன்று நிறைந்தன!
 

Temples - 3.


Vallabha Ganapathy temple, New York. (2003)

பிரபலமான வல்லப கணபதி கோவில், நியூயார்க்;
பிரமாதமாகத் தென்னிந்தியக் கலை மிளிரும் அங்கு!

ஆறு அடிக்கு மேல் உயர்ந்து இருக்கும் விநாயக மூர்த்தி;
அருமையான அலங்காரம்; கண்கள் கொட்ட மறந்தன!

விநாயக சதுர்த்தியன்று, பக்ஷணங்களாலேயே அழகாக,
விநாயக மூர்த்திக்கு அலங்காரம் செய்வது சிறப்பாகும்!

தேவிகள் காமாக்ஷி, பார்வதி, துர்க்கை சன்னதிகளில்
தேவிகளின் உருவழகு, எங்கள் கண்களை நிறைத்தன.

பெண் மருத்துவர் ஒருவரின் முழு முயற்சியால், அங்கு
பொன்னான இக்கோவில் அழகுற எழுந்துள்ளது, என்றார்!

ஞாயிற்றுக் கிழமைகளில், இனிய பஜனை நடத்துகின்றார்;
ஞாயிற்றுக் கிழமைகளில், சிறப்புச் சாப்பாடும் கிடைக்கும்!

இடியாப்பம், மசால் தோசை, பிசிபேளாபாத், பகளாபாத்,
இட்லி, உப்புமா எனப் பலவகை உணவுகள் சூடாக உண்டு.

வரிசையில் நின்று, நமக்கு வேண்டியவை சொன்னால்,
வரிசைப்படி டோக்கன் கொடுத்துவிடுகின்றார், நமக்கு.

கேட்டவை தயாரானதும், எண்ணை அறிவித்து - நாம்
கேட்டவை, பாக்கெட்களில் சிந்தாமல் கொடுக்கின்றார்!


:pray2:
. . . + . . . :hungry:

 

Temples - 4


Venkateswara temple, New Jersey (2003)


இங்கும் உள்ளது அழகான வெங்கடேஸ்வரா கோவில்;
இங்கும் ஸ்ரீதேவி, பூதேவி, விநாயகர், சுவாமி ஐயப்பன்,

வள்ளி, தெய்வானை சமேதர் முருகன் என சன்னதிகள்,
அள்ளும் அழகுடன் திகழத் தென்னிந்திய முறையிலும்,

பட்டபிஷேக ராமர், ராதா க்ருஷ்ணா, மாருதி சன்னதிகள்,
பட்டால் அலங்கரித்து, வட இந்திய முறையிலும் உள்ளன.

சாஸ்திரிகள் பஞ்சகச்சம் கட்டி, கால்களில் SOCKS போட்டு,
சாஸ்திரப்படி பூஜைகள் செய்து, நம்மை அசத்துகின்றார்!

மூடிய உண்டியல்கள் பல அங்கு வைத்திருந்தாலும், அங்கு
'வேண்டிய' காசுகளை, சுவாமி அருகிலேயே போடுகின்றார்!

 

Temples - 5

Ashland Sri Lakshmi Temple, Boston (2009)

விடுமுறை நேரத்தை இதற்கு ஒதுக்கி வைப்பதால், ஞாயிறன்று
பலமுறை இவர்கள் போகும், ஸ்ரீ லக்ஷ்மி கோவில் சென்றோம்.

வைகாசி மாதம் சென்றபோது, ஸ்ரீ முருகனின் அலங்காரம்,
கைராசியான பூசாரி செய்திருக்க, திரை மூடியே இருந்தது.

அன்று அரை மணி நேரம் காத்திருந்தும், பயனின்றி,
சென்றுவிட்டோம் இனிய இல்லம், தரிசனம் இன்றி.

கற்கள் பதித்த கிரீடம், திலகம், ஒளிரும் கரங்கள் கொண்டு,
சொற்களில் அடங்கா அழகு மிகு தெய்வங்கள் இங்கு உண்டு!

ஐயப்பன் பதினெட்டுப் படிகளுடன் அமர, சிந்தூர ஆடையை
ஐங்கரன் அணிய, செந்நிற உடையில் திருமகள் மிளிர, பாலாஜி,

பொங்கும் அழகுடன் அலங்காரனாய் நிற்க, முத்து அங்கியும்,
தங்க வில்வ மாலையும் அணிந்த நடராஜர் பதம் தூக்க, தங்க

மாலைகள் பல அணிந்து சிவகாமி திகழ, தங்கக் கவசங்கள்
மாலை நேர உற்சவ மூர்த்திகளை நன்றாய் அலங்கரிக்க,

அழகு மிகு தேவியர் சகிதம் கந்தன் சிரிக்க, மாருதியின்
அழகுத் திருமேனி முழுதும் இட்ட வெண்ணைக் காப்பில்,

கருப்பு, சிவப்பு திராட்சைகளும், 'ஸ்டிராபெரி'யும், நல்ல
பொருத்தமாய் வண்ணமளிக்க, 'டாலர்' நோட்டுக்களும்,

காசுகளும் சன்னதிகளில் கொட்டிக் கிடக்க, தரை
தூசு துரும்பின்றித் தூய்மையாகத் துலங்க, ஸ்ரீ லக்ஷ்மி

ஆரத்தி முடிந்ததும், பிரசாதம் பெற்றுக்கொண்டு, இரவு
நேரத்தில் நாங்கள் இனிய இல்லம் திரும்பினோம்!


:pray: . . . :hail:
 

Temples - 6


Saibaba temple, Boston (2011)


வழிபடும் தெய்வங்களுக்குக் கோவில் அமைத்து,
வழிபாடு செய்வதுதான் இந்தியாவில் நடக்கிறது.

அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியையே இங்கே

பலர் வழிபடும் ஸ்ரீ சாய்பாபா கோவிலாக்கியுள்ளார்.

கோபுர வடிவம் இல்லை; துவஜஸ்தம்பம் இல்லை;
கோவிலின் அமைப்பு, உள்ளே மட்டுமே இருக்கிறது!

பாபா வாழ்வின் அதிசய நிகழ்வுகளை, மிக அழகிய
படங்களாகத் தீட்டிச் சுவர்களில் பொருத்தியுள்ளார்.

ஷீரடி பாபாவின் உருவச்சிலை பளிங்கில் உள்ளது;

திருவடிகள் இரண்டும் ஒரு பக்கம் விளங்குகின்றன!

பிரதட்சிணம் வருவதற்கு
துவாக உள்ள அமைப்பு;
பிரசாதம் கிடைத்திடும், மங்கள ஆரத்திக்குப் பிறகு.

வெள்ளிப் பல்லக்கு ஒன்றை அழகாக வடிவமைத்து,
வெள்ளியில் இரண்டு சிம்மங்கள் இருபுறம் வைத்து,

புட்டபர்த்தி பாபாவின் படமும் அருகினில் வைத்து,
ஷீரடி பாபாவின் படம் மையத்திலே விளங்குகிறது.

பக்தர்களின் ஆர்வத்தினால், பாபா மட்டும் அன்றிப்
பக்தி செய்யப் பல தெய்வங்களை வைத்துள்ளார்.

பால், தயிர், இளநீர், தேன், பன்னீர், சந்தனம் நல்ல
நாட்கள் அனைத்திலும் அபிஷேகம் செய்கின்றார்.

பூஜைகள் செய்யும் அர்ச்சகரும், T shirt ஐ அணிந்து
பூஜை செய்தது, நன்றாகவே இருந்தது! நம் நாட்டில்,

துண்டைக்கூடப் போர்த்த விடாது, Topless ஆக்கும்,
முண்டு அணியும் மலையாள தேசத்தினர் உண்டு!

தங்கள் உடையை இவ்வாறு ஆக்கிவிட்டதற்கு, நம்
ஆண்கள் சிலரேனும் போராடி, எதிர்க்க மாட்டாரோ?


:confused:
 
Saibaba temple, Boston (2011)

எங்கள் வீட்டின் அருகில் சாயிபாபா கோவில்;

தங்கள் வீடுகளில் பிரசாதம் செய்துகொண்டு

கோவிலில் கொடுத்து, ஆரத்தி முடிந்த பிறகு,
ஆவலாய் உள்ள பக்தர்களுக்கு வழங்குவர்.

மகன் ஒருநாள் சீக்கிரமாக வீடு திரும்பி வர,
அவன் அழைத்துச் சென்றான், தரிசனத்திற்கு.

சங்கடஹர சதுர்த்தி அன்று; எனவே வீட்டிலே
சக்கரைப் பொங்கல் தயாரித்தாள், பெண்ணரசி.

பெரிய Tin foil பெட்டியில், சூடாக அதை வைத்து,
உரிய நேரத்திலே, அக் கோவிலை அடைந்தோம்.

மாலை ஏழு மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகும்;
மாலைகள் சாற்றியுள்ளனர், சாய்பாபா சிலைக்கு.

சின்ன ஒரு மேடை அழகாக அமைத்து, சிவனின்

சின்ன லிங்கத்தை நடுவிலே நிறுத்தி, அழகான

ஒரு விநாயகர் விக்ரஹத்தை அருகில் இருத்தி,
சிறு அளவு லிங்கங்களையும் சுற்றிலும் அடுக்கி,

அர்ச்சகர் அபிஷகத்தை ஆரம்பித்தார்; ருத்ர ஜபம்
அர்ச்சகரின் கணீர் குரலில், அறையை நிரப்பிவிட,

நம் நாட்டுப் பரம்பரை உடையில் சிலர் வர, இங்கு
நம் நாட்டிலிருந்து குடி பெயர்ந்த மாமிகள் பலர்

ஜீன்ஸ் - T ஷர்ட் அணிந்து வர, சில இளம் பெண்கள்
ஜீன்ஸ் உடையை மறந்து, சுடிதாரில் உலவ, அங்கு

உடையைப் பற்றிய கவலை இல்லாது, பக்திக்கு
உரிய மரியாதை கொடுத்த பலரைப் பார்த்தேன்!

ஒவ்வொரு குடும்பத்தாரும் அபிஷேகம் செய்திட,
ஒவ்வொரு வெள்ளிச் சொம்புப் பாலைத் தந்தனர்.

மன நிறைவான வைபவமாக நிகழ்ச்சி நடந்தது;
மன நிறைவுடன் நாங்களும் இல்லம் வந்தோம்!

:pray: . . . :)
 
Dear T K S Sir,

Thanks a lot for your feed back. I shall visit the temples you have mentioned, God willing! :pray:
 
Smt Raji Ram

Hope at your next visit you can write a poems about Stroudsburg temple in PA
http://svbf.org/photo_gallery.php and

Guruvayoorappan Temple in NJ

:: Sri Guruvayurappan Temple ::

They are both in East Coast of USA ...

If you are in Stroudsburg you should visit Arsha vidya Gurukulam, of swami Dayananda. The Dakshinamoorty temple is absolutely a beautiful.
The lectures are wonderful, the accommodation is superb (they have about 50 condominiums), the food is amazing (LOL).
 
Dheho Devalayaha!!!

The most beautiful temple in the world is our own human body.
 

Temples - 8


Sri Lakshmi Temple, Ashland, Boston (2011)

மகனின் பிறந்தநாள், பெண்ணரசியை மணந்த நாள்,
எங்கள் மணநாள் எல்லாம், பத்து நாட்களுக்குள்ளே!

எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஒரே நாள் கோவிலில்,
எல்லா தெய்வங்களையும் வழிபட எண்ணினோம்!

ஆஷ்லாண்டில் உள்ள லக்ஷ்மி கோவில் சென்றுவர,
ஆசையுடன் புறப்பட்டுச் சென்றோம். நல்ல கூட்டம்.

சென்ற முறை காணாத கற்கள் வைத்த நகைகள் பல,
இந்த முறை ஐயப்பன் சுவாமிக்கு அணிவித்துள்ளார்!

ஐயப்பன் புதிய நகைகளால் மின்ன, அதனை அடுத்த
ஐங்கரன் சன்னதியும் அலங்காரத்தால் சிறந்திருக்க,

பட்டுடை உடுத்தி, லக்ஷ்மி தேவி பரிமளிக்க, அருகில்
பட்டுடை உடுத்திய வெங்கடசலபதி அருள் பாலிக்க,

நடராஜர், அம்பாளுடன் நடனக் கோலத்தில் இருக்க,
நடனமாடும் மயில் வாகனத்தில் முருகன் விளங்க,

தங்கக் கவசத்தில் ஆஞ்சநேயர் திகழ, இரு பெண்கள்
தங்கள் பங்காக, வண்ணப் பூ மாலைகளைக் கட்ட,

சிவப்பு நிறச் சேலைகள் உடுத்திப் பெண்கள் உலவ,
அதற்குக் காரணம், துர்கா பூஜையே என்று கூறினர்.

பாசிமணிகள் பல கழுத்தில் அணிந்து, பச்சை நிறப்
பாசிமணிகளை, பூணல் போலக் குறுக்கே அணிந்து,

அலங்காரக் கொண்டைகளில் பூக்களையும் வைத்த,
அலங்காரப் பிரியைகள் பலரை அங்கு பார்த்தோம்!

ஆரத்தித் தட்டுடன் சிலர் க
ற்பூரம் காட்டத் தொடங்க
துரத்தி வந்த வயதான பூசாரி அவர்களைத் தடுக்க,

கூட்டமாய் சுற்றி அமர்ந்து பாடியபடி, சில பெண்கள்
ஆட்டமும் ஆடி, தம் மகிழ்ச்சியை வெளிக் காட்டினர்.


:grouphug: . . . :dance:

 
Smt Raji Ram

Hope at your next visit you can write a poems about Stroudsburg temple in PA
http://svbf.org/photo_gallery.php and

Guruvayoorappan Temple in NJ

:: Sri Guruvayurappan Temple ::

They are both in East Coast of USA ...
hi RR madam,
i know very well abt SVBF in stroudsburg....there is unique facility there...i know some board members....there is ONLY

SRADHA BHAVAN IN USA...here they provide cook/sastrigal for all sradhams/13 days karyams....
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top