• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

1. தாயும் பிள்ளையும் ஒன்றானாலும் வாயும் வயிரும் வெவ்வேரே.

2. ஊருக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதானே.

3. பொய்யானாலும் பொருந்தச்சொல்.

1. அப்படி இல்லாவிட்டால்

மகனே அம்மாவின் உணவையும் உண்டு விடலாம் /

அம்மாவே மகனுடைய உணவையும் உண்டு விடலாம்!

யார் வேண்டுமானாலும் தான் தின்னியாக இருக்கமுடியுமே!

2. பிள்ளை ராஜாவானால் அன்னை ராஜமாதா! :drama:

3. இதில் எல்லோரும் வல்லவர்கள், நல்லவர்கள், தேர்ந்தவர்கள்!!!:thumb:
 
Last edited:
ஸபாஷ், சரியானபோட்டி சரியான பதில். உங்களுடைய சுரீர் பதில்களை மேலும் மேலும் வரவேற்க்கிரேன்.
 
ஆமாம், உங்களுக்கு இப்படிஎல்லாம் பதிலுரைக்க எப்படி தோன்றுகிறது? ஆனாலும் அம்மா,பிள்ளை பற்றி சொன்னது கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிரது. அம்மாவும் பிள்ளையும் ஒருவர் மற்றவர் உணவை உண்டு விடுவார்களா என்ன. கொஞ்சம் அதிகமாக தோன்றவில்லையா?
 
ஆமாம், உங்களுக்கு இப்படிஎல்லாம் பதிலுரைக்க எப்படி தோன்றுகிறது? ஆனாலும் அம்மா,பிள்ளை பற்றி சொன்னது கொஞ்சம் அதிகமாகவே தோன்றுகிரது. அம்மாவும் பிள்ளையும் ஒருவர் மற்றவர் உணவை உண்டு விடுவார்களா என்ன. கொஞ்சம் அதிகமாக தோன்றவில்லையா?




1387a. தான்தின்னி பிள்ளை வளர்க்காள்;

தவிடு தின்னி கோழி வளர்க்காள்.

1387b. Self centered people are worst parents.



Quotes 1381 to 1390 | East meets West

 
கணவனுக்கு வடைகளைச் சுட்டு வைத்த மனைவி
ஒவ்வொன்றாகத் தின்று கொண்டிருந்தாள்.
மிகுந்தது ஒரே ஒரு வடை.

கணவன் கேட்டான்
"அத்தனை வடைகளையும் எப்படிச் சாப்பிட்டாய் நீ ?"

"இதோ இப்படித் தான் என்று மிகுந்த ஒரு வடையையும்
இரண்டாக முறித்து வாயில் போட்டு மென்று உண்டு விட்டாள்
அந்தத் தங்கமான மனைவி!.
இது உண்மைக் கதை! :)
 
மந்திரங்களெல்லாம் மயங்காமல் உள்நினைந்து

முந்து அரனை அர்ச்சிக்கும் ஆறு.

ஒளவைக் குறள்.


எண்ணத்தால் மனது நல்ல உறுதி பெறுகின்றது.
உறுதிப் படும் எண்ணம் ஒவ்வொன்றும் மந்திரமாகின்றது.
மந்திரங்கள் எண்ணில் அடங்காதவை.
அவற்றைக் கண்டு மயங்காமல் ஒன்றே ஒன்றைப் பற்றுக.
அதுவே நம்மை இறைவனிடம் கொண்டு சேர்க்கும்.
மந்திரங்கள் அனைத்துமே இறைவனின் வடிவம் ஆகும்.
 
முற்பிறப்பு.



முந்தைய பிறவியில் நாரத முனிவர்
தந்தையில்லாமல், தாய் ஒருத்தியின்,
துறவியரை அண்டிப் பிழைப்பவளின்,
வறுமையில் வாடும் மகனாக இருந்தார்.

மாரிக் காலத்தில் நான்கு மாதங்களும்
வேறிடம் செல்லார் துறவியர் எவரும்;
தாயுடன் சேர்ந்து தானும் உதவினான்
மாயையை வென்ற அம்முனிவர்களுக்கு.

அவர்கள் புசித்து எஞ்சிய உணவை
அருள்மிகு பிரசாதமாகவே உண்டும்;
அவர்கள் பேசும் மொழிகளை எல்லாம்
அமர்ந்து கேட்டும் ஞானம் பெற்றான்.

சிறுவனின் தீவிர சிரத்தையைக் கண்டு,
மறை முனிவர்களும் மனம் மிக மகிழ்ந்து
போதனை செய்தனர் இறைபக்தியையும்,
சாதனை செய்யும் சில முறைகளையும்.

பால் கறக்கச் சென்ற அன்னையை
பாம்பு ஒன்று தீண்டிக் கொல்லவே;
பாலகன் பாரினில் தனியன் ஆனான்,
கால் போன போக்கில் திரியலானான்.

ஒரு நாள் தியானம் செய்யும்போது
ஒரு திருவுருவம் மனக்கண்ணில் தோன்ற,
மீண்டும் மீண்டும் அதைத் தான் காண
வேண்டும் வேண்டும் என ஆவல் மிகுந்தது.

“பற்றை முற்றும் விடாதவர்களும், மனப்
பக்குவம் சிறிதும் அடையாதவர்களும்,
காண இயலாது என்னை அறிவாய்! நீ
காண இயலும் உன் அடுத்த பிறவியில்”

அசரீரியாக அவன் மட்டும் கேட்டான்,
அதிசயமான இனிய வார்த்தைகளை!
விசனப்பட்டான் இன்னும் எத்தனை நாள்
விரும்பாத இது போன்ற வாழ்க்கை என?

மின்னல் வெட்டியது போலச் சரிந்தது
முன்னர் பெற்ற அவனது ஸ்தூலதேகம்,
விண்ணில் பறந்தது அவன் சூக்ஷ்மதேகம்,
விஷ்ணுவின் மூச்சுடன் உள்ளே புகுந்தது.

பிரமனின் செய்த அடுத்த படைப்பினில்
பிரமனின் அற்புத மானச புத்திரனாகத்
தோன்றினார் நம் தேவமுனி நாரதர்,
மூன்று உலகமும் பக்தியுடன் சஞ்சரிக்க.

பாமரப் பணிப்பெண் ஒருவளின் மகன்
பார்புகழும் தேவமுனிவர் ஆகிவிட்டதன்
ரகசியம் எது என அறிந்திடுவோம் நாம்,
விகசித்த அவர் பக்தியினால் அன்றோ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
Here is the story. Narada (in his previous birth was the son of a daasi aka servant)

He did not know who was his father. Nor could his mother tell him with certainty

since a daasi in those days had to cater to all the needs of the guests-

whom she were taking care of - during their stay with her master.


When Narada was asked about his father he said he did not know about his father.

The people present there were shocked by the bold truth and told him,

"You must be the son of brahmin since no one else

will admit a truth of this kind, in a group of people!"
 
Sant Kabir Dohas:

Pothi Padh Padh Kar Jag Mua, Pandit Bhayo Na Koye
Dhai Aakhar Prem Ke, Jo Padhe so Pandit Hoye.

Reading books where everyone died, none became anymore wise
One who reads the word of Love, only becomes wise.


Sant Kabir
**
 
chess-coins9big.jpg

Source: chess coins
 

Latest ads

Back
Top