• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill .

நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
- Abraham Lincoln. http://www.***********.com/forums/images/smilies/bee.png

Read more: quotable quotes.

Perseverance and persistence is the tortoise

which can defeat the intelligent but lazy hare!
 
நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது - ப்ரெமர்



ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
http://www.***********.com/forums/images/smilies/clap2.gif

Man is his own friend.

Man is his own enemy!

Ambition is the destination we aim to reach.

Hard work the steps we take towards it.
 
அரிய செயல்கள் அனைத்தும் விடாமுயற்சியாலேயே அடையப் பெற்றிருக்கின்றன; வெறும் வலிமையால் மட்டும் அல்ல.
- Samuel Johnson.
பொதுவாக, வெற்றி என்பது, மற்றவர்கள் கைவிட்டுவிட்ட பின்பும் அயராமல் தொடர்வதாலேயே கிட்டுவதாகும்.- William Feather.http://www.***********.com/forums/images/smilies/blah.gif



He who hangs on to something

longer and stronger THAN the rest

emerges victorious at the end!
 
Last edited:
ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்.

முட்டாளின் முழு வாழ்கையும் புத்திசாலியின் ஒரு நாள் வாழ்க்கைக்குச் சமம். -அரேபிய பழமொழி http://www.***********.com/forums/images/smilies/cheerful.png


But most people postpone to tomorrow

what can be / has to be done to day and

THAT tomorrow NEVER EVER comes!!! :)
 
நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை -டிக்கன்ஸன்



Th pessimists sees only the thorn.

The optimist sees only the rose.

The wise man sees both the rose and the thorn! :clap2:
 
பந்தத்துக்குக் காரணம் நமது தேக மோஹம்!
பந்தம் நீங்கும் ‘நான் தேஹம் அல்ல’ என்றதும்!

சிந்தித்து இதனை உணர்வதே ஜீவன் முக்தி ;
பந்தப்படுத்துவது ‘நான், எனது’ எனும் எண்ணம்!

என்னிடம் உள்ளவை என்னுடையவை அல்ல!’
என்ற தெளிவை அடைவது தான் ஜீவன் முக்தி.”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

https:/
ஜீவன் முக்தி/devibhaagavatam.wordpress.com/
 
எல்லோரும் ’டெல்லர்’




கத்தை கத்தையாய் பச்சை நோட்டு,
கலகலக்கும் நாணயக் கூட்டு,
இவைகள் அளிக்கும் உற்சாகம் ,
இனிமை, அருமை, பெருமை, உண்மை !

தேடித் தேடி பொருள் ஈட்டி,
ஓடி ஓடி அதைப் பெருக்கி,
நாடி நாடிச் செலவுகள் செய்து,
கூடிக் கூடி இன்புறுகின்றோம்!

உலகில் வரும்போது வெறுங்கை,
உலகை விட்டு செல்லும்போதும் அதுவே!
சேர்த்து வைத்த செல்வம் எல்லாம்,
சேர்ந்து வராது செல்லும் போது!

எத்தனை அழகிய வீடோ, மனையோ,
எத்தனை சிறந்த உடையோ, நகையோ,
எத்தனை அதிக பணமோ, காசோ,
எத்தனை செல்வச்செழிப்போ, களிப்போ,

செல்லும் போது உடன் வராது ஒரு
செல்லாக்காசு கூட! நாம் சேமிக்கலாம்;
செல்வத்தை கொடுக்கலாம் வாங்கலாம்;
செலவுகள் செய்து மனம் மகிழலாம்!

வங்கிப் பணம் எல்லாம் “டெல்லர்” வசம்,
வங்கியினுள்ளே இருக்கும் வரையில் தான்.
வெளியே அவர் செல்லும் போது, ஒரே ஒரு
வெள்ளிப் பணமாவது அவர் கூட வருமா?

ஆம், நாம் எல்லோரும் டெல்லர்களே!
ஆனால், நாம் உலகத்தின் டெல்லர்கள்.
உலகமே ஒரு பெரிய வங்கி ஆவதால்,
உயரிய மனிதர்கள் அதன் டெல்லர்களே!

அவர்கள் வங்கிப் பணத்தை உரிமையுடன்
ஆளுவது போலவே நாமும் உரிமையுடன்
ஆளலாம் நம்மிடமுள்ள செல்வதை! நம்
ஆயுள் உள்ளவரை தான், பிறகு இல்லை!


நல்லதையே நினைத்து, நன்மையே செய்து
செல்லும் வழியை நல்வழி ஆக்குவோம்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து நாம்,
வானுறையும் தெய்வத்துடன் ஒன்றுவோம்.

வாழ்க வளமுடன்
விசாலாக்ஷி ரமணி.
 
While it will be wise to light a lamp to drive the external darkness,
one has to be wise enough to have a good Satsang to eliminate the
inner darkness.

உலக விஷயங்களில் உழலும் போதும்,
கலகங்கள் பலப்பல காணும் போதும்,
நீருடன் கலந்த பாலைப் போலவே,
நீர்த்துப் போகும் நம் சாதனை முயற்சிகள்.

நீரில் அமிழ்த்திய பானை என்றும்,
நீர்மை இழந்து காய்ந்து போகாது.
நல்லவர் நட்பு நம் நினைவில் நிறுத்தும்,
நல்ல பண்புகளையும், நல்ல மரபுகளையும்.
 
Every second that one spends on doubting others one
may not know where they are proceeding. Sometime or
other one has to try to hold someone's hand to get
an opportunity to proceed in life in the right path.
Perhaps that would be the high time for them to accept
the universal facts.
 
ஆட்சி செய்கின்றீர் சம்சார வலையில் சிக்காமல்;
மாட்சிமை பெற்றுள்ளீர் விதேக ஜீவன் முக்தராக.

மோக்ஷத்தில் விருப்பம் கொண்டுள்ளேன் நான்;
மோக்ஷம் தருவது எது என்று அறிய வேண்டும்.

தவமா? யாகமா? தியானமா? விசாரணையா?
தீர்த்த யாத்திரையா? விரதமா? இவற்றில் எது?”

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

https://devibhaagavatam.wordpress.com/
 
விதிக்கப்பட்டுள்ளன நாற்பதெட்டு விதிமுறைகள்;
விதிகளில் நாற்பது கிருகஸ்த்தனுக்கு உரியவை.


எட்டு சமஸ்காரங்கள் உரியவை மோக்ஷகாமிக்கு.
கிட்டும் மோக்ஷம் இதை விடாது செய்பவனுக்கு.


ஈடுபடவேண்டும் இவற்றில் வரிசைக் கிரமமாக;
விட்டு விடமுடியாது எந்த ஒரு ஆசிரமத்தையும்.

https://devibhaagavatam.wordpress.com/
 
“சந்நியாசத்தில் நேரடியாக பிரவேசிக்கும் ஒருவன்
சந்திக்க வேண்டி வரும் இடர்பாடுகள் பலவற்றை.


ஐந்து மதயானைகளின் வலிமை பெற்றவை புலன்கள்!
ஐம்புலன்களையும் அடக்கி ஒடுக்கி வைப்பது கடினம்.


நெறிகெட்டு ஓடச் செய்யும் பரிபாகம் இல்லாதவனை!
அறிவினை மயக்கும்; பெருக்கும் பலரக இச்சைகளை!


சித்தத்தைக் கெடுப்பவை நாம் கொண்டுள்ள இச்சைகள்
எத்தனை இச்சைகள் நித்திரை, ஆகாரம், சுகம் இத்யாதி.


வெல்வது கடினம் வெறும் சங்கல்பத்தினால் மட்டும்
வெல்வது எளிது அவற்றை நாம் அனுபவித்த பிறகு.
 
கீழே விழுவான் உயரத்தில் உறங்குபவன் புரண்டால்!
கீழே உறங்குபவனுக்கு இல்லை அன்றோ இந்த ஆபத்து?


நேராகச் சன்னியாசம் பெற்றவன் சீராக இல்லாமல்
சிறிது நழுவினாலும் பிரஷ்டனாகி வீணாகிவிடுவான்


அனுபவிக்காத இன்பங்களும் இச்சைகளும் ஒன்றாகி
அலைக் கழிக்கும் மனிதனை வாழ்நாள் முழுவதும்.
 
காணும் பொருட்கள் அனைத்தும் பந்தப்படுத்தும்;
காண இயலாத பொருட்கள் நம்மை பந்தப்படுத்தா!
 
அருந்துகிறார்கள் சோமபானம் – பசுக்களை
அதர்மமாக பலியிடுகிறார்கள் யாகத்தில்!

சுராபானம் அருந்திச் சொக்கட்டான் ஆடுவது
சுகம் தரும் வாழ்கை நெறிமுறையா கூறும்!
 
“அக்கினியில் உண்டாகும் புகை அக்கினியாலா?
அக்கினியில் உண்டாகும் புகை வெறும் விறகால்!


விறகின் சம்பந்தம் இல்லாத ஒரு அக்னியில்
சிறிதும் புகை இருக்காது இது உண்மையன்றோ?


ஹிம்சை அல்ல வேதங்கள் கூறும் நெறிமுறைகள்;
ஹிம்சையாகும் காமிய கர்மங்கள் செய்பவனுக்கு .


நிஷ்காமியாக ஈச்வரார்ப்பணம் செய்தால் அவை
நிலை பெறும் முற்றிலும் அஹிம்சைகளாகவே.


செயல்கள் ஆசையோ அஹங்காரமோ இன்றிச்
செய்யப்பட்டால் அவை செய்யப் படாதவை ஆகும்!”
 

Latest ads

Back
Top