பெண்
பெண்ணாய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும் - தேசிக விநாயகம் பிள்ளை.
தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வதே பெண்களுக்கு அழகு - ஒளவையார்
பெண்களுக்குரிய சுதந்திரத்தை வழங்காதவரை ஒரு நாடு சுபீட்சம் அடையாது - நேரு.
எந்த இடத்தில் பெண்கள் மரியாதையாக நடத்தப்படுகின்றனரோ அந்த இடத்தில் தேவதைகள் குடியிருக்கின்றனர் - மகாபாரதம்
பெண்ணின் ஒழுக்கத்தில் நம்பிக்கை இருத்திலே குடும்ப இன்பத்தின் அடிப்படை - லாண்டர்.
பெண்களின் கண்ணீர் உலகிலேயே மிக ஆற்றலுள்ள நீர் சக்தி - வில்சன் மிஸ்னர்.
பெண்களிடம் உள்ள நல்ல பண்பு அவர்களுக்குப் பாராட்டை உண்டு பண்ணுகிறது. ஆனால், அவர்களின் நல்ல நடத்தையே அவர்களைத் தெய்வங்களாக்குகிறது - ஷேக்ஸ்பியர்.
அழகு என்பது, சில காலமே நிற்கும் கொடுங்கோலாட்சி, அதற்கு நீ அடிமையாகாதே – வால்டேர்
வாழ்க்கை என்ற ஆற்றையோ, கடலையோ கடப்பதற்குப் பெண் என்ற படகோ, கப்பலோ அவசியம் தேவை – காண்டேகர்
அழகான பெண், கண்களுக்கு ஆனந்தமளிக்கிறாள். குணமான பெண் இதயத்திற்கு குதூகலமளிக்கிறாள். முதலாமவள் ஒரு ஆபரணம், இரண்டாமவள் ஒரு புதையல். -நெப்போலியன்
பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள். - ஆஸ்கார் ஒயில்ட்
My views on women follows in the form of poems! :bump2: