நல்லதோர் வீணை
வீணையும் பெண்ணும் ஒரேபோலவே;
வீணர்கள் இசைக்கவே இயலாதவர்கள்.
இசைக்கத் தெரிந்தவரிடம் கிடைத்தால்,
இசைப்பார் உலகை மயக்கும் இசையை.
----
நல்லதோர் வீணையைக் கைகளில் எடுத்து,
நலம் கெடப் புழுதியில் எறிந்து விடாதீர்!
வல்லவன் கைகளை அடையட்டும் அது!
வானவர் மயங்க இசைக்கட்டும் அது!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
நல்லதோர் வீணை செய்தே
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே
சொல்லடி சிவசக்தி - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ
விசையுருப் பந்தினைப் போல் - உள்ளம்
வேண்டியபடி செய்யும் உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன் - நித்தம்
நவமெனச் சுடர் தரும் உயிர் கேட்டேன் ...உயிர் கேட்டேன் ...uyir கேட்டேன்
தசையினைத் தீச்சுடினும் - சிவா
சக்தியைப் பாடும் நல்லகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதும் தடையுள்ளதோ
-நன்றி பாரதியார்