• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

16. அறம் செய்வான் திறம்

#251. தாம் அறிவார்


தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர்
தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்;
தாம் அறிவார் சில தத்துவர் ஆவார்கள்;
தாம் அறிவார்க்குத் தமர் பரன் ஆமே.

தம்மை அறிந்தவர் சிவபெருமானது திருவடிகளை வணங்குவர்.
தம்மை அறிந்தவர் அறத்தை மேற்கொண்டு செய்து செய்து வருவர்.
தம்மை அறிந்தவர் உண்மையை உணரும் தத்துவர்கள் ஆவர்.
தம்மை அறிந்தவர்க்கு இறைவனே உறவினன் ஆவான்.



 
#252. செய்ய முடிந்தவை, செய்ய வேண்டியவை!

யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே.



எல்லோராலும் செய்ய முடிந்த செயல்கள் இவை.
உணவு
உண்ணும் முன்னர் இறைவனுக்கு
ஒரு வில்வத்தைச் சமர்
ப்பித்தல்;
தினமும் ஒரு பசுவுக்கு ஒரு கைப்பிடி பச்சைப் புல்லை அளித்தல்;
தான் உண்ணும் முன்னர் ஒருவருக்கு ஒரு கவளம் உணவு அளித்தல்,
எல்லாரிடமும் இனிய சொற்களைப் பேசுதல்.
இவற்றை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.



 
#253. பயன் அறியார்.

அற்றுநின்றார் உண்ணும் ஊணே அரன்என்னும்
கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
உற்று நின்று ஆங்கு ஒரு கூவற் குளத்தினில்
பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே.

அகப் பற்றும், புறப் பற்றும் நீங்கியவர்கள் சிவஞானியர்.
உணவை நாடி அவர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள்.
அவர்களைத் தேடிச் சென்று நாம் அளிப்பதே உணவே அறம்.
இந்த உண்மையை அறிந்த பிறகும் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் பலர் ஒரு கிணற்றங் கரையிலோ, குளத்தங் கரையிலோ தங்கி இருக்கும் ஞானியரை வருந்தி வருந்தி அழைத்து வந்து உணவு அளிப்பதிலையே!
 
#254. அறம் செய்வீர்

அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
தழுக்கிய நாளில் தருமம் செய்வீர்
விழித்திருந்து என் செய்வீர் வெம்மை பரந்து
விழிக்க அன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே.

மன மலங்களை அகற்றி அறிவைப் பெருக்கிக் கொள்ளவில்லை.
செல்வம் இருந்தபோதிலும் அறச் செயல்களைச் செய்யவில்லை.
உலகில் இப்படிக் காலத்தைக் கழிப்பதால் என்ன பயன் விளையும்?
நெருப்பில் உடல் எரியும் போது அறம் செய்யாதவர் நிலை என்னவாகும்?
அறம் செய்யும் உள்ளத்தைப் பெறாத மனிதர்களே! இதனைச் சிந்தியுங்கள்!
 
#255. தவம் செய்வீர்.

தன்னை அறியாது, தாம் நல்லார் என்னாது, இங்கு
இன்மை அறியாது, இளையர் என்று ஓராது,
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே.

உயிர்களைக் கவரும் யமன் இவற்றைச் சிந்திக்க மாட்டான்.
உன் நிலைமையை பற்றிச் சிறிதும் சிந்திக்க மாட்டான்.
நீங்கள் மிகவும் நல்லவர் எனச் சிந்திக்க மாட்டான்.
நீங்கள் வறுமையில் வாடுவதையும் சிந்திக்க மாட்டான்.
நீங்கள் வயதில் இளையவர் என்றும் சிந்திக்க மாட்டான்.
வலிமை உடைய யமன் வந்து சேரும் முன்பே நீங்கள்
உடலை நிலைக்கச் செய்யும் அரிய தவத்தை மேற்கொள்வீர்!
 
#256. அறம் செய்யும் முறை

துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை;
இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
அறந்தான் அறியும் அளவு அறியாரே.

அகப் பற்று புறப் பற்று இரண்டையும் துறந்து விட்டால்
அவர்களுக்கு இல்லை எந்த விதமான உறவுமுறைகளும்.
இறந்து விட்டவர்களுக்கு இல்லை எந்த விதமான உலக இன்பமும்.
அறம் செய்ய மறந்தவனுக்கு வழித் துணையாக வரமாட்டான் ஈசன்.
இந்த மூன்று வகைப் பட்டவர்களுமே அறம் செய்யும் முறையை அறியார்.
 
#257. உடலைப் பேணுவீர்!

தான்தவம் செய்வது ஆம் செய் தவத்து அவ்வழி
மான்தெய்வமாக மதிக்கும் மனிதர்கள்
ஊன் தெய்வமாக உயிர்க்கின்ற பல்லுயிர்
நான் தெய்வம் என்று நமன் வருவானே.


அறிவைத் தெய்வமாக மதிக்கும் மனிதர்கள்,
தாம் முற்பிறப்பில் செய்த தவத்தின் பயனாக
இப்பிறவியிலும் தவம் செய்து மேன்மை அடைவர்.
உடலே தெய்வம் என்று மதிக்கும் அறிவற்ற மனிதர்கள்
தாமே தெய்வம் என்று எண்ணி அறம் செய்யாது வாழ்வர்.
யமன் வருவதை அறியாது வீணே அழிந்து போவர்.
 
#258. மறுமைக்குத் துணை

திளைக்கும் வினைக்கடல் தீர்வு உறுதோணி
இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு;
கிளைக்கும் தனக்கும் அக்கேடு இல் புகழோன்
விளைக்கும் தவம் அறம் மேல்துணை ஆமே.

நல்வினைகள், தீவினைகள் இரண்டும் கலந்து ஒரு
பெரும் கடலாக மாறி நம்மை அதில் அமிழ்த்து விடும்.
அதில் மூழ்காமல் பத்திரமாகக் கரையேறுவதற்கு
நமக்கும் நம் உறவுகளுக்கும் களைப்பைப் போக்கி
உதவுகின்ற தோணிகளாக இரண்டு வழிகள் உள்ளன.
அழியாப் புகழை உடைய இறைவனைப் பற்றிக் கொண்டு
அறச் செயல்களைப் புரிந்து வாழ்வது ஒரு வழி.
இல் வாழ்வில் இருந்து கொண்டே அறச் செயல்களைப்
புரிந்து கொண்டு வாழ்வது மற்றொரு வழி.
இரண்டுமே மறுமைக்குத் துணையாம்.
 
#259. சிவன் செய்த வழி

பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
அற்ற முரையான் அறநெறிக் கல்லது
உற்றங்க ளாலொன்று மீந்தது வேதுணை
மற்றண்ணல் வைத்த வழி கொள்ளு மாறே.


உலகுக்கு ஆதாரமாக இருப்பவன் இறைவன்.
அவனைக் குற்றம் கூறாமல் இருத்தல் வேண்டும்.
அறநெறியை விடுத்துப் பிற நெறிகளில் செல்லாது இருக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு நாம் கொடுப்பதே நமக்குத் துணையாக மாறி வரும்.
இதுவே சிவன் நாம் முக்தி அடைவதற்கு ஏற்படுத்தியுள்ள வழியாகும்
 
17. அறம் செய்யான் திறம்


#260. பயன் அறியார்!

எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன,
ஒட்டோய நல்லறம் செய்யாதவர் செல்வம்
வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர் பயன் அறியாரே.

எட்டி மரம் பழுத்தது. பெரிய கனிகள் தரையில் வீழ்ந்தன.
ஆனால் யாரும் அவற்றை நாடிச் செல்லவில்லை.
வட்டி வாங்கி உலகில் பெரும் பொருள் சேர்ப்பவர்
அதன் உண்மையான பயனை அறியார். அறம் செய்யார்.
அவர்கள் செல்வமும் எட்டிக் கனிகள் போன்று பயனற்றவையே
 
Good news to the readers of Thirumanthiram!

A new blog has been launched by my dear daughter (in law) today.

I have just posted the first 30 poems and their meaning.

A visit to the blog will make you understand the difference between

an ordinary post and a post in the blog clearly.

I am giving the link below for anyone who cares to visit the site.

https://thirumanthiram1.wordpress.com/ :welcome:
 
I lost my dear mother on 16th inst.

After the rituals are over I will get my cataract surgery done.

It will be several weeks before I resume posting in this thread.

However the NEW blog will be ready with the 328 posts already typed.

For the sake of those whom may care to read more

and whom the blogs don't scare, here the link to my blog do I share.

https://thirumanthiram1.wordpress.com/

 
Quotes 1781 to 1790




#1781a. தீவினைப் பயன் தனிமையாக்கும்!

#1781b. Misfortune is friendless.




#1782a. பொற்சாவி எந்தப் பூட்டையும் திறக்கும்!

#1782b. A golden key opens every lock.



#1783a. பணம் தேன் போல மிகவும் சுவையானது.
பணப் படைத்தவன் நகைச்சுவைகளும் தான்!

#1783b. Money is honey, my little sonny
And a rich man’s joke is always funny!



#1784a. ஈட்டும் ஆர்வமும், கற்கும் ஆர்வமும் ஒன்று சேரா.

#1784b. The love of earning and the love of learning seldom meet.



#1785a. பிள்ளை பெற்றால் மட்டும் போதுமா ஓர் அன்னையாவதற்கு?

#1785b. Simply having children does not make a woman a mother.



#1786a. இசை அனைவரும் அறிந்த ஒரு மொழி.

#1786b. Music is the only universal language.



#1787a. இயற்கை நம் தவறுகளை மன்னிப்பதில்லை

#1787b. Nature pardons no mistakes.



#1788a. கடவுளின் கை வண்ணமே இயற்கை.

#1788b. Nature is the art of God.



#1789a. கோழையும் வீரன் ஆவான் தேவை ஏற்பட்டால்.

#1789b. Necessity makes even the very timid very brave.


#1790a. நேர்மையான பிள்ளைகள் வேண்டுமா?
முதலில் நீங்கள் நேர்மையாக இருங்கள்.

#1790b. If parents want honest children they must be honest themselves.
 
Quotes 1791 to 1800




#1791a. பொறுமையைப் போதிப்பவன் வலியை அறியாதவன்

#1791b. He preaches patience who never knew pain.




#1792a. நம்பிக்கையுடன் வாழும் கலையே பொறுமை.

#1792b. Patience is the art of hoping.



#1793a. தன்னுள் அமைதி காணமுடியாதவன் அதை எங்குமே காண மாட்டான்.

#1793b. When a man finds no peace in himself it is useless to seek it elsewhere.



#1794a. கூட்டத்துக்கு தலைகள் பல; மூளைகள் இல!

#1794b. The mob has many heads but no brain.



#1795a. மானுட சேவையே மாதவன் சேவை.

#1795b. The best service to God is the service to man.



#1796a. இன்பம் அழியும். புகழ் அழியாது.

#1796b. Pleasures are transient; fame is immortal.



#1777a. ஏழைகள் வயிற்றுக்கு உணவு தேடுகிறார்கள்.
செல்வந்தர்கள் உணவுக்கு வயிற்றைத் தேடுகின்றார்கள்.

#1797b. The poor man seeks meat for his stomach. The rich man seeks stomach for his meat.




#1798a. எதுவும் இல்லாதவன் ஏழை அல்ல. “இன்னும் வேண்டும்!” என்பவனே ஏழை.

#1798b. Not he who has little, but he who wishes for more is poor.



#1799a. கள்ளுண்ணாமைக்குக் காரணம் ஏழ்மை.

#1799b. Poverty is the mother of temperance.



#1800a. தற்புகழ்ச்சி சிபாரிசு ஆகாது.

#1800b. Self praise is no recommendation.

 
Quotes 1801 to 1810




#1801a. தொழுபவனின் உள்ளம் இறைவனுக்கு இதமானது.

#1801b. God warms his hands at a man’s heart when he prays.




#1802a. பிரார்த்தனையால் மேன்மை அடைபவன் கேட்பது கிடைக்கும்.

#1802b. Who rises from prayer a better man his prayers are answered.



#1803a. ஊரானுக்காக பிரார்த்தித்தால் உனக்கும் நன்மை விளையும்.

#1803b. If you pray for another man you will be helped yourself.



#1804a. பாரபக்ஷம் அறியாமையில் தோன்றும்.

#1804b. Prejudice is the child of ignorance.



#1805a. வளமை நல்ல ஆசிரியர். வறுமை அதை விடச் சிறந்தது.

#1805b. Prosperity is a great teacher. Adversity a greater!



#1806a. வளமை நண்பர்களைச் சேர்க்கும். வறுமை அவர்களைச் சோதிக்கும்.

#1806b. Prosperity makes friends. Adversity tests them.



#1807a. நற்குணங்களுக்காக தன்னை மதிக்கின்றார்களா என்பது
ஒவ்வொருசெல்வந்தன் மனத்திலும் நிலவுகின்ற சந்தேகம்.

#1807b. The prosperous man is never sure that he is loved for himself.



#1808a. உடனே முடிக்க வேண்டியதை ஆறப் போடதீர்கள்!

#1808b. That should not be long considered which can be decided at once.



#1809a. உண்மையில் வருந்துபவன் உண்மையில் திருந்தியவன்.

#1809b. He who repents his sins is almost innocent.



#1810a. சிறந்த பழிக்கு பழி அவர்களை மன்னிப்பது தான்.

#1810b. The noblest vengeance is to forgive.

 
Quotes 1811 to 1820




#1811a. மன்னிப்பதே சிறந்த தண்டனை.

#1811b. To forget the wrong is the best revenge.




#1812a. பொருளை ஈட்டுவது சுலபம்
ஈட்டிய பொருளைக் காப்பது கடினம்.

#1812b. To gain wealth is easy. To keep it is hard.



#1813a. செல்வந்தன் வீட்டில் நண்பர்கள் கூட்டம்.

#1813b. At the door of the rich are many friends.



#1814a. இறந்த புனிதர்களை வாழ்த்துவதும், இருக்கும் புனிதர்களைத் தாக்குவதும் உலகத்து வழக்கம்.

#1814b. The way of the world is to praise the dead saint and persecute the living ones.



#1815a. அஸ்தமன காலத்துக்குச் சேமியுங்கள்.
சூரியன் நாள் முழுவதும் ஒளி வீசாது அல்லவா.

#1815b. For age and want save while you may;
No morning sun lasts he whole day.



#1816a. சொல்லும் போது அதன் சுவை குன்றிவிடும்.

#1816b. There is nothing that can’t be made worse by telling.



#1817a. பிறர் உன் ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டுமா?
முதலில் நீ அதைக் காப்பாற்று.

#1817b. If you wish another to keep your secrets, first you keep it yourself.



#1818a. பக்தி பரிமளிப்பது உடல் நலம் குன்றியவர்களிடத்தில்!

#1818b. The chamber of sickness is the chapel of devotion.



#1819a. நோய் காட்டும் நீ யார் என்று.

#1819b. Sickness shows what we are.



#1820a. தனிமை ஞானத்தை வளர்த்தும்.

#1820b. Solitude is the best nurse for wisdom.
 
Quotes 1821 to 1830




#1821a. சுவர்க்கம் சரி செய்ய முடியாத சோகம் எதுவுமில்லை.

#1821b. Earth has no sorrow that heaven cannot heal!




#1822a. நெடு நாள் துயரம் ஒரு நாள் தீரும்.

#1822b. The longest sorrow finds at last relief.



#1823a. மன ஓட்டத்தை மறைப்பதற்கே பேச்சு.

#1823b. The true use of speech is to conceal our thoughts.



#1824a. வாய்ச் சொற்கள் காட்டி விடும் மனிதன் எப்படிப் பட்டவன் என்று.

#1824b. A man’s character is revealed by his speech.




#1825a. வெற்றிக்கு மிஞ்சியது எதுவும் இல்லை.

#1825b. Nothing is as important as success.



#1826a. வெற்றி பெற்ற முட்டாளும் அறிவாளி போல.

#1826b. Success makes even a fool seem wise.



#1827a. நிறையப் பேசுபவன் சில சமயம் சரியாகப் பேசுவான்.

#1827b. He who talks much us sometimes right.



#1828a. செல்வதே தெரியாமல் சென்றுவிடும் காலம்.

#1828b. Naught treads so silently as the feet of Time.



#1829a. இழந்த ஒரு வினாடியைப் புதையல் கொடுத்ததும் பெறமுடியாது.

#1829b. All the treasures of earth can not bring back one lost moment.



#1830a. ஒரு மலை, ஒரு கடல், ஒரு ஆறு போலவே மற்றவைகள்!

#1830b. See one mountain, one sea, one river, and see all.

 
Quotes 1831 to 1840




#1831a. ஐயம் எழுந்தால் மெய்யைச் சொல்லு.

#1831b. When in doubt, tell the truth.




#1832a. மனிதர்கள் மறையலாம்; உண்மை மறையாது .

#1832b. Individuals may perish but truth is eternal.



#1833a. காலம் உண்மையைக் கண்டறியும்.

#1833b. Time discovers the truth.



#1834a. சர்வ கலாசாலை: கூழாங்கல் மெருகு ஏறி வைரங்கள் மெருகு அழியும் இடம்.

#1834b. A University is a place where pebbles are polished and diamonds are dimmed.



#1835a. துரதிருஷ்டம் : முதுகில் விழுந்து மூக்கைப் பேர்த்துக் கொள்பவ
து!

#1835b. Unlucky – One who falls on his back and breaks his nose.



#1836a. சிறிய தீமைக்குக் கதவைத் திறந்தால் பெரியதும் அதனுடன் நுழையும்.

#1836b. Never open the door to a little vice lest a great one enters with it.



#1837a. சமூகத்தின் நல்ல குணங்கள் = சாதுக்களின் தீய குணங்கள்!

#1837b. The virtues of the society are the vices of the saints.




#1838a. நல்லவர்கள் எப்போதும் சிறுபான்மையினரே.

#1838b. Virtue is always in a minority.

#1839a. நற்பண்பு மனிதனை இறைவனோடு இணைக்கும்.

#1839b. Virtue unites a man with God.



#1840a. உற்சாக மனைவியே உண்மையான மகிழ்ச்சி!

#1840b. A cheerful wife is the joy of life.

 
Quotes 1841 to 1850



#1841a. செலவாளி மனைவியின் கணவன் கவலையாளி.

#1841b. An expensive wife makes a pensive husband.




#1842a. பணிவான மனைவிக்குக் கணவன் கட்டுப்படுவான்.

#1842b. An obedient wife commands her husband.



#1843a. கண்ணாடியை விரும்பும் மனைவி கற்சட்டியை விரும்ப மாட்டாள்.

#1843b. A wife that loves the looking glass hates the cooking gas.



#1844a. தன் அறிவு பயனற்றது என்று அறிந்தவனே உண்மையில் அறிவாளி.

#1844b. That man is wisest who realizes that his wisdom is worthless.



#1845a. துன்பத்தில் பிறக்கும் ஞானம்.

#1845b. Wisdom comes by suffering.



#1846a. கந்தல் உடையினுள் ஞானம் ஒளிந்திருக்கலாம்.

#1846b. There is often wisdom under a shabby cloak.



#1847a. அறிவாளியின் சேவகன் முட்டாளானால் அறிவால் என்ன
பயன்?

#1847b. What is the good of being wise when foolishness serves.



#1848a. நகைச்சுவை நல்ல அறிவாக முடியாது.

#1848b. Wit does not take the place of knowledge.



#1849a. நகைச்சுவை உப்பைப்
போன்றது;
உணவைப்
போன்றது அல்ல.

#1849b. Wit is the salt of conversation- not the food.



#1850a. பெண்கள்: இவர்களுடன் வாழ
முடியலாம்.

ஆனால் இவர்கள் இல்லாமல் வாழ முடியாது

#1850b. Women: Who men can live with – but can’t live without.
 
Quotes 1851 to 1860




#1851a. இனிமையான குறைந்த சொற்களே பெண்ணின் ஆபரணம்.

#1851b. Kind words and a few are a woman’s ornaments.




#1852a. தன்னை நேசிக்கும் ஆண் விரும்புவது போல மாறுவாள் பெண்.

#1852b. A woman can be anything a man who loves her would have her to be.



#1853a. அழகிய பெண் செய்வதெல்லாம் சரி தான்.

#1853b. A handsome woman is always right.



#1854a. சேவலை விடக் கோழி உரக்கக் கூவும் இல்லம் நரகம்.

#1854b. It is a sad house where the hen crows louder than the rooster.



#1855a. படிக்கத் தகுந்தவற்றை எழுது;
அல்லது எழுதத் தகுந்தவற்றைச் செய்.

#1855b. Either write things worth reading or do things worth writing.



#1856a. உன் உள்ளத்தை நோக்கிப் பின்
னர் எழுது.

#1856b. Look at thy heart and write.



#1857a. இளமை: நம்பிக்கைகளின் வசந்த காலம்.

#1857b. Youth is the season of hope.


#1858a. வாழ்வின் பின் பாதியைச் சோக
ம் ஆக்கிக் கொள்ள
வாழ்வின் முன் பாதியை உபயோகிப்பவன் மனிதன்

#1858b. The majority of men employ the first portion of their life in making the other portion miserable.



#1859a. ஆர்வம் அறிவாளிகளுக்கே என்றாலும் இருப்பது என்னவோ அறிவிலிகளிடம்.

#1859b. Zeal is only for the wise men but is mostly found in fools.



#1860a. அறிவு இல்லாத ஆர்வம் மூடத்தனத்தின் மூத்தவள்.

#1860b. Zeal without knowledge is the sister of folly.

 

Latest posts

Latest ads

Back
Top