• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

[h=2]இரண்டாம் தந்திரம்[/h]
2. பதிவலியில் வீரட்டம் எட்டு


சிவபெருமான் மறக் கருணை காட்டிய எட்டு இடங்கள் இவை.


1. திருவதிகை...முப்புரங்களை அழித்த இடம்


2. திருக் கடவூர் ...யமனை வென்ற இடம்


3. திருக்கொறுக்கை ...மன்மதனை வென்ற இடம்


4. திருவழுவூர்...கயமுகாசுரனை வென்ற இடம்


5. திருக்கோவலூர் ...அந்தகாசுரனை அழித்த இடம்


6. திருப்பறியலூர் ...நான்முகனை வென்ற இடம்


7. திருக்கண்டியூர்...திருமாலை வென்ற இடம்

8. திருவிற்குடி ...சலந்தராசுரனை வென்ற இடம்
 
#339. அந்தகாசுரன்

கருத்து உறை அந்தகன் தன்போல் அசுரன்
வரத்தின் உலகத்து உயிர்களை எல்லாம்
வருத்தம் செய்தான் என்று வானவர் வேண்டக்
குருத்து உயர் சூலம் கைக்கொண்டு கொன்றானே.

அந்தகன் என்னும் கொடிய அசுரன் இயமனைப் போன்றவன். இறைவனிடம் பெற்ற வரத்தினால் அந்தகன் உலகததோரை வருத்தி வந்தான். அவன் செய்யும் கொடுமைகளைப் பொறமாட்டாத வானவர் இறைவனிடம் சென்று முறையிட, சிவபெருமான் கூர்மையான ஞானச் சூலத்தை எடுத்து அந்தகனை அழித்து அருளினான்.

அந்தகன் = அறியாமை ஆகிய அசுரன் குருத்து உயர் சூலம் = கூர்மை ஆகிய ஞானம். இது நடந்த இடம் திருக்கோவலூர்
 
#340. நான்முகனை அடக்கியது

கொலையின் பிழைத்த பிரசாபதியைத்
தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கியிட்து
நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித்
தலையை அறிந்து இட்டுச் சந்தி செய்தானே.

நான்முகன் ஸ்வாதிஷ்டானச் சக்கரத்தில் இருந்து கொண்டு விந்துவை நாசம் செய்கின்றான். அவன் விந்து நீக்கம் செய்வதைத் தடுத்தும் , அக்னி காரியத்தினால் பக்குவம் வாய்ந்தவர்கள் விந்துவை வெற்றி பெறச் செய்தும், நான்முகனின் குறும்பை அடக்கினான் சிவபெருமான்.

இது நிகழ்ந்த இடம் திருப்பறியலூர்
 
#341. உலக இன்பம்

எங்கும் பரந்தும் இரு நிலம் தாங்கியும்
தங்கும் படித்து அவன் தாள் உணர் தேவர்கள்
பொங்கும் சினதுள் அயன் தலை முன் அற
அங்கு அச்சுதனை உதிரம் கொண்டானே.


பக்குவம் அடைந்தவர்கள், எங்கும் பரவி இருக்கும், எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கும், எல்லாம் சென்று ஒடுங்குமிடமாக இருக்கும் இறைவனின் திருவடிகளையே இடைவிடாது சிந்தித்து இருப்பார்கள். அதனால் அவர்களுக்குப் போகத்தில் கவர்ச்சி குறைந்துவிடும். மணி பூரகச் சக்கரத்தில் இருக்கும் திருமாலின் கவர்ச்சியை அவர்கள் வென்று விடுவார்கள்.

இது நிகழ்ந்த இடம் திருக் கண்டியூர்.
 
#342. அருள் செய்வான்

எங்கும் கலந்து மென் உள்ளத்து எழுகின்ற
அங்க முதல்வன், அருமறை ஓதிபால்
பொங்கும் சலந்தரன் போர் செய்ய நீர்மையின்
அங்கு விரல் குறித்து ஆழி செய்தானே.


உயிரில் கலந்து உள்ளவன் சிவன். உடலின் நாயகன் சிவன். நாதத் தத்துவத்துக்கு உரியவன் சிவன். நீரை முகமாகக் கொண்ட அபானனன் சலந்தரன். அவன் கீழே நோக்கியபடி இருக்க, யோக சாதனையால் அவனை மேலே சென்று சஹஸ்ர தளத்தில் கலநது விரியும்படி அருள் புரிபவன் இறைவன்.


இது நடந்த இடம் திருவிற்குடி
 
#343. முப்புரம் எரித்தது

அப்பணி செஞ்சடை யாதி புராதனன்
முப்புரஞ் செற்றன னென்பர்கள் மூடர்கள்
முப்புர மாவது மும்மல காரியம்
அப்புரமெய்தமை யாரறிவாரே.

முப்புரங்களை அழித்தான் கங்கையை அணிந்த செஞ்சடையை உடைய சிவபெருமான் என்பார்கள். முப்புரம் ஆகிய மூன்று கோட்டைகள் நம்முடைய ஆணவம், கன்மம், மாயை என்னும் மும் மலங்கள் ஆகும், இம்மும் மலங்களை சிவன் அழித்த சிறப்பினை அறிய வல்லார் யாருளர்?

பெருமான் திரிபுரங்களை அழித்தது திருவதிகைத் தலத்தில்.
 
#344. சிவ ஒளி

முத்தீ கொளுவி முழங்கு எரி வேள்வியுள்
அத்தி உரி அரன் ஆவது அறிகிலர்
சத்தி கருதாது ஆம் பல தேவரும்
அத்தீயினுள் எழுந்தன்று கொலையே.


மூன்று வகையான அக்கினியை வளர்த்து செய்யும் வேள்விகளில் யானையைப் போன்ற கரிய இருளைக் கிழித்துக் கொண்டு இறைவன் சிவ ஒளியாக வெளிப்படுவான். இதை எவரும் அறிவதில்லை. அகண்டமாகச் சிவன் வெளிப்படும்போது கண்டமாகிய தேவர்கள் அழிந்து விடுவர்.

சிவபெருமான் கயமுகாசுரனை சம்ஹரித்த தலம் திருவழுவூர்
 
#345. இறப்பில்லை

மூலத் துவாரத்து மூளும் ஒருவனை
மேலைத் துவாரத்தின் மேல் உறநோக்கி முற்
கால் உற்று காலனைக் காய்ந்து அங்கி யோகமாய்
ஞாலக் கடவூர் நலமாக இருந்ததே.

மூலாதாரத்தில் கிளம்பி எழும் ஒருவனை சுழுமுனை நாடி வழியே மேலே செலுத்த வேண்டும். தலை உச்சியில் இருக்கும் பிரமரந்திரத்தில் அவன் சென்று பொருந்துமாறு ஊர்த்துவ திருஷ்டியால் நோக்க வேண்டும். அங்கிருந்து கொண்டு ஒருவன் யமனைச் சினந்து அக்னி வழிபாடாக தியானம் செய்து வந்தால், அவன் உடலைக் கடந்து சஹஸ்ரதளத்திலேயே என்றும் அழிவின்றி இருக்க முடியும்.

சிவன் யமனை அழித்த செயல் நடந்தது திருக்கடவூர் தலத்தினில்.
 
#346. காமனை வெல்வது

இருந்த மனதை இசையப் இருத்திப்
பொருந்தி இலிங்கவழி அது போக்கி,
திருந்திய காமன் செயல் அது அழித்து அங்கண்
அருந்தவ யோகம் கொறுக்கை அமர்ந்ததே
.

கொறுக்கை இருப்பது என்பது என்ன? மனத்தைச் சிவனுடன் சேர்த்து விட வேண்டும். இலிங்க வழி செல்லக் கூடாது. விந்து நீக்கமாகிய காமன் செயலைக் கெடுக்க வேண்டும். இவ்வாறு செய்துவிட்டு வாழ்க்கை துணையுடன் பொருந்தி இருப்பதே கொறுக்கை இருத்தல் எனப்படும்.

மனத்தைச் சஹஸ்ர தளத்தில் பொருத்திக் கொண்ட ஒருவன் பெண்ணுடன் புணர்ந்தால் விந்து நீக்கம் ஏற்படாது. இது காமன் என்னும் மன்மதனை வெல்வது ஆகும். இதனால் சிவ திருஷ்டி என்னும் ஞானக் கண் கிடைக்கும்.

மன்மதனைச் சிவன் வென்ற இடம் திருக் கொறுக்கை என்னும் திருத்தலம்
 
3. லிங்க புராணம்

லிங்கம் என்பது தோற்றம் ஒடுக்கம் இவைகளின் காரணமான அருட்குறி!

#347. சக்தி வழிபட்டாள்

'அடிசேர்வேன்' என்ன எம் ஆதியை நோக்கி
முடிசேர் மலைமகனார் மகள் ஆகித்
திடம் ஆர் தவஞ் செய்து தேவர் அறியப்
படியார அர்ச்சித்துப் பத்தி செய்தாளே.

"சிவபெருமானின் திருவடிகளைச் சென்று அடைவேன்!" என்று உறுதி பூண்டாள் சக்தி தேவி. உடலின் உச்சியில் விளங்கும் சிற்சக்தி ஆனாள் அவள். சிவனை அடைவதற்கு ஒளி மண்டல வாசிகள் காணும்படி முறையாக வழிபட்டுத் தவம் செய்தாள்.

மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தி மேலே சென்று சிரசில் இருக்கும் சிற் சக்தியுடன் ஒன்றாகச் சேருவதே தவம் எனப்படும்












[TABLE="class: Bs nH iY"]
[TR]
[TD="class: Bu"][/TD]
[/TR]
[/TABLE]
 
#348. ஆட்கொள்வான் சிவன்


திரிகின்ற முப்புரம் செற்ற பிரானை
ரியன் என்று எண்ணி அயர்வுற வேண்டா;
புரிவுடையாளர்க்குப் பொய்யலன் ஈசன்
பரிவொடு நின்று பரிசறிவானே.



உலவும் திறன் பெற்ற மும்மலக் கோட்டைகளை அழித்த பிரான் அடைவதற்கு அரியவன் என்று எண்ணி அயர்வுற வேண்டியதில்லை. அன்புடையவரிடம் அவன் பொய்க்க மாட்டான். பெருமான் அன்பர்களுக்கு அருள் புரிந்து கருணை காட்டுவான்
 
#349. மூவருக்கும் தருபவன் சிவன்


ஆழி வலம் கொண்டு அயன் மால் இருவரும்
ஊழி வலம் செய்ய ஒண் சுடர் ஆதியும்
ஆழி கொடுத்தனன் அச்சுதற்கு அவ்வழி
வாழி பிரமற்கும் வாள் கொடுத்தானே.

சுவாதிஷ்டன, மணிபூரகச் சக்கரங்களில் உறையும் நான்முகனும், திருமாலும் மூலாதாரத்தை முறைப்படி வலம் வந்தனர். அங்கே ஒளி வடிவாக விளங்கும் ருத்திரன் சஹஸ்ர தளத்தில் விளங்கும்படி திருமாலுக்கு அருள் செய்தான். நான்முகனுக்கும் ஒளி தந்து நான்முகன் சுவாதிஷ்டானத்திலிருந்து உற்பத்தியைப் பெருக்காமல் இருக்கும்படிச் செய்தான்.
 
#350. சிவன் வெளிப்படுவான்


தாங்கி இருபது தோளும் தடவரை
ஓங்க எடுத்தவன் ஒப்பு இல் பெருவலி
ஆங்கு நெரித்து 'அமரா' என்று அழைத்தபின்
நீங்கா அருள் செய்தான் நின்மலன் தானே.


பத்துத் தலைகளும் இருபது தோள்களும் கொண்ட ராவணன் தன் முயற்சியால் கயிலை மலையைப் பெயர்த்து எடுத்தான். அவன் ஆற்றலை முற்றிலுமாக அழித்து, " இறைவா! என்னைக் காப்பாற்று!" என்று கெஞ்ச வைத்து அவனுக்கு நீங்காத பக்தியை அளித்தான் சிவபெருமான்.

ராவணனுக்குப் பத்துத் தலைகள். அவைகள் காமம், குரோதம், உலோபம், மோஹம், மதம், மாச்சர்யம், டம்பம், தர்ப்பம், அசூயை, ஈரிஷை.

ஞான இந்திரியங்கள் ஐந்து, கர்ம இந்திரியங்கள் ஐந்து, இவைகள் சுவைக்கும் புலன்கள் பத்து என்ற இருபதும் அவனது தோள்கள்
 
#351. உடல் நினைவு மறையும் வழி


உறுவது அறிதண்டி ஒண்மணல் கூட்டி
அறுவகை ஆன் ஐந்தும் ஆட்டத் தன் தாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழுவால் வெட்டி மாலை பெற்றானே.


தனக்கு நேர்வதைக் காரண காரியங்களுடன் அறிய வல்லவன் சீவனான சண்டீசன். அவன் வெள்ளிய ஒளியாகிய மணலால் ஒரு லிங்கத்தைச் செய்தான். பிறவிப் பிணி நீங்கும் வண்ணம் தன் ஐந்து ஞான இந்திரியங்கள் புலன்களில் மேயாமல் தடுத்தான். மாயையால் உண்டான உடலான தந்தை சினம் கொண்டு அவனை ஒடுக்கினான். சண்டீசன் அக்கினிக் கலையாகிய வாளினால் இடை பிங்கலைகளைச் செயலாற்றாமல் செய்து சிவத் தொண்டன் ஆகிவிட்டான்.
 
#352. தேவர்களுக்கு அருள்வான்


ஓடிவந்து எல்லாம் ஒருங்கிய தேவர்கள்
வாடி முகமும் வருத்தத்துத் தாம் சென்று
நாடி "இறைவா நம" என்று கும்பிட,
ஈடு இல் புகழோன் "எழுக" என்றானே.



தேவர்கள் எல்லாம் சிவபெருமானிடம் ஓடி வந்து மிகுந்த முக வாட்டத்துடன் "இறைவா போற்றி!' என்று அடைக்கலம் புகுகின்றபோது "எழுந்து வாருங்கள்!" என்று கூறி பெருமான் அருள் செய்தார் .

தேவர்கள் பாற்கடலில் எழுந்த கொடிய நஞ்சைக் கண்டு அஞ்சி சிவனிடம் சென்று அடைக்கலம் புகுந்ததைக் குறிக்கும் இது.
 
Thirumanthiram2 (IraNdaam thanthiram) has been launched yesterday.

The posts from #337 to #410 have been posted today.

Posts will go the WordPress blog as soon as they get ready.

I will continue to post @ 2 everyday here in this thread.

I want to have a reservoir since I may not get to type

more posts at the same speed as I did these.

Welcome to the latest blog

https://thirumanthiram2.wordpress.com/

to read more than what will get posted here. :pray2:

 
[h=2]4. தக்கன் வேள்வி[/h]
ஆண் பெண் கூட்டுறவே தக்கன் வேள்வி ஆகும்.

சிவனை எண்ணாமல் வேள்வி செய்யப்பட்டது.

விந்து ஜெயம் என்ற பயன் கிடைக்க வில்லை.

வேள்வியும் பயன் தராமல் அழிவுற்றது.
 
#353. அருள் இன்றேல் ஜெயம் இல்லை!


தந்தை பிரான் வெகுண்டான் தக்கன் வேள்வியை
வெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்
முந்திய பூசை முடியார் முறை கெட்டுச்
சிந்தினர் அண்ணல் சினஞ்செய்த போதே.

தக்கன் ஆண் பெண் கூட்டுறவாகிய வேள்வியைச் செய்தான். சிவனை எண்ணாமல் அந்த வேள்வி செய்யப்பட்டது. சிவபெருமான் அது கண்டு மிகுந்த சினம் கொண்டார். அதனால் மிகுந்த காமாக்னி ஏற்பட்டது. விந்து வெளிப்பட்டது. விந்து ஜயம் என்ற பலன் அந்த வேள்விக்குக் கிடைக்கவில்லை. சிவபெருமான் சினந்தவுடன் தேவ காரியம் தடைப்பட்டது.
 
#354. திருமாலுக்கு அருளல்


சந்தி செயக்கண்டு எழுகின்ற அரிதானும்
"எந்தை இவன் அல்ல யாமே;" உலகினில்
பந்தம் செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய
அந்தம் இலானும் அருள் புரிந்தானே.

ஆண் பெண் கூட்டுறவைச் செய்வதற்கு தருக்கி எழுபவன் திருமால். அவன் "உலகத்தைப் படைப்பவன் நானே அன்றி சிவன் அல்ல" என்றான். அதனால் பந்தப்படுத்தும் பாசக்கட்டில் விழுந்தான் திருமால். மனம் திருந்தி வருந்திச் சிவனை நோக்கித் தவம் செய்த பின்னர் , அவனுக்கு சிவன் அருள் புரிந்தான்.
 
#355. நான்முகனுக்கு அருளல்

அப்பரிசே அயனார் பதி வேள்வியுள்
அப்பரிசு அங்கி அதிசயம் ஆகிலும்,
அப்பரிசேயது நீர்மையை உட்கலந்து
அப்பரிசே சிவன் ஆலிக்கின்றானே.

தக்கன் வேள்விக்குத் தானே தலைவன் என்ற தருக்கு அடைந்தான் நான்முகன். அதனால் காமாக்னி மூண்டு எழுந்த போதிலும், அதன் வகையிலேயே, அதன் தன்மையில் நன்றாகப் பொருந்திய சிவபெருமான் ஆரவாரத்துடன் விளங்கினான்.
 
#356. நீக்கமற நிறைவான்

அப்பரிசே அயன் மால் முதல் தேவர்கள்
அப்பரிசே அவர் ஆகிய காரணம்
அப்பரிசு அங்கியுல நாளும் உள்ளிட்டு
அப்பரிசு ஆகி அலர்ந்திருந்தானே.

நான்முகனும் திருமாலும் தேவர்களும் அத்தன்மையைப் பெறக் காரணம் ஆவான் சிவபெருமான். அக்கினிக் கலையில் நீக்கம் அற நிறைந்திருக்கும் சிவன் அந்த அக்கினிக் கலையை உள்ளே விளங்கச் செய்வான்.
 
#357. விரைந்து அருள்வான்


அலர்ந்திருந்தான் என்று அமரர் துதிப்பக்

குலம் தரும் கீழ் அங்கி கோளுற , நோக்கிச்

சிவந்த பரம் இது சென்று கதுவ

உவந்த பெருவழி ஓடி வந்தானே.


சிவபெருமானே எங்கும் நீக்கமற நிறைந்துள்ளவன். இந்த உண்மையை உணர்ந்த வானவர்கள் அவனிடம் வேண்டினர். அப்போது ஆறு ஆதாரங்களில் கீழாக உள்ள மூலாதாரத்தில் உள்ள
அக்கினிக் கலை மேலே எழுந்தது. சுழுமுனை வழியே சஹஸ்ரதளத்தைச் சென்று பற்றியது அச் சிவந்த ஒளி. அப்போது சிறந்த வழிபாடு இதுவே என்று விரைந்து வந்து அருள் செய்தான் சிவபெருமான்.
 
#358. நல்லவர்கள் ஆயினர்


அரி, பிரமன், தக்கன், அருக்கனுடனே

வருமதி, வாலை ,வன்னி நல் இந்திரன்

சிரம், முகம், நாசி, சிறந்தகை, தோள் தான்

அரன் அருளின்றி அழிந்த நல்லோரே.


திருமால், நான்முகன், தக்கன், சூரியன், சந்திரன், நாமகள், அக்கினி, இந்திரன் என்பவர் தலை, முகம், மூக்கு, கை, தோள் என்பனவற்றைச் சிவன் அருள் பெறாததால் இழந்தனர். பின்னர் சிவன் அருள் பொருந்தியதால் அவர்கள் நல்லவர்கள் ஆயினர்.
 
Your thread is really energising spiritual seeker like me.
Under Viashnava Tantric process if a female is not using her body for procreation and sensual pleasures and practises the convertion of sexual pleasure into spiritual energy contemplating on Sri Ardha Nareeswara (Sivam), she will get abundant and unparallel power to cure ills of humanity in general and lead her into eternity. If the process failed it will have dangerous and disastrous consequences.
This is not possible for males due to biological limitation.
I share this information from a Magazine "Mirror" read decades ago.
 

Latest ads

Back
Top