• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

7. எலும்பும், கபாலமும்

#371. ஏந்தியது ஏன்?

எழும்பும் கபாலமும் ஏந்தி எழுந்த

வலம்பன் மணி முடி வானவர் ஆதி
எலும்பும் கபாலமும் எந்திலன் ஆகில்
எலும்பும் கபாலமும் இற்று மண் ஆமே.

எலும்பு என்பது மணி முடிதரித்த தேவர்களின் வடிவம். மண்டையோடு என்பது அறிவின் வடிவம். சிவபெருமான் எலும்பையும், மண்டை ஓட்டையும் பிரளய காலத்தில் தாங்குவது ஏன் தெரியுமா ? அவ்வாறு அவன் தாங்கவில்லை என்றால் மீண்டும் பிறவி எடுக்கும் ஜீவர்களின் பழைய வடிவமும், அறிவும் தொடர்பு இன்றிப் போய்விடும்
 
8. அடி முடி தேடல்

#372. மால் அயன் அடி முடி தேடல்

பிரமனும் மாலும் , ‘பிரானே நான்’ என்னப்

பிரமன் மால் தங்கள்தம் பேதமையாலே
பரமன் அனலாய்ப் பரந்து முன் நிற்க
அரன் அடி தேடி அரற்றுகின்றாரே.

“நானே பிரம்மம்!” என்று தம் அறியாமையால் நினைத்துக் கொண்டனர் அரியும் அயனும். அதனால் அஹங்காரம் அடைந்தனர். அப்போது சிவபெருமான் அவர்கள் முன்பு ஒரு பேரொளிப் பிழம்பாகத் தோன்றி நிற்கவும் அந்த ஒளிப் பிழம்பின் அடியையும் முடியையும் அவர்கள் தேடித் தேடிக் காண இயலாமல் வாடி நின்றனர்.
 
#373. நான் கண்டேன் சிவனை!

ஆம்ஏழ் உலகு உற நின்ற எம் அண்ணலும்
தாம்ஏழ் உலகில் தழற்பிழம்பாய் நிற்கும்
வான்ஏழ் உலகு உறும் மா மணிகண்டனை
நானே அறிந்தேன் அவன் ஆண்மையாலே.

ஏழு உலகங்களும் பொருந்தும் வண்ணம் உயர்ந்து நிற்பவன் சிவன். அவன் தானே அக்கினி வடிவாக ஏழு உலகங்களிலும் பரந்து நிற்கின்றான். வானத்தில் ஏழு உலகங்களிலும் விளங்கும் சிவனை, மாலும் அயனும் தேடியும் காண இயலாத சிவனை நான் அவன் அருளால் காணப் பெற்றேன்.
 
#374. எங்கும் நிறைந்தவன்

ஊனாய், உயிராய் உணர்வு அங்கியாய், முன்னம்
சேணாய் வான் ஓங்கி , திருஉருவாய் அண்டத்
தாணுவும் ஞாயிறும் தண்மதியும் கடந்து
ஆள் முழுது அண்டம் ஆகி நின்றானே.

உடலாகவும், உயிராகவும், அதில் உறையும் உணர்வாகவும், அக்கினியாகவும், அரி அயன் காண இயலாத தொலை தூரத்துப் பொருள் ஆகவும், வானளாவிய ஒரு பேரொளியாகவும், அண்டங்களைத் தாங்கும் ஒரு தூணாகவும் அவற்றை வலம் வரும் சந்திர சூரியர்களைக் கடந்தவனாகவும், தான் ஆளும் அண்டங்கள் அனைத்திலும் முழுமையாக விளங்குகின்றவன் சிவபெருமான்.
 
#375. சிவனை அறிய இயலாது!

நின்றான் நிலமுழுது அண்டத்துள் நீளியன்
அன்றே அவன் வடிவு அஞ்சினர் ஆய்ந்தது
சென்றார் இருவர் திருமுடி மேல் செல
நன்று ஆம் கழல்அடி நாட ஒண்ணாதே.

எல்லா இடங்களிலும் நிறைந்து நிற்கும் சிவபெருமான் அண்டங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டு உயர்ந்து நின்றான். பேரொளியாக அவன் விளங்கிய போது அவன் ஒளிரும் திருமேனியைக் கண்டு அஞ்சினர் அரியும் அயனும். அந்த ஒளியின் அடி முடிகளைக் ஆராயச் சென்றனர் இருவரும். அரி நிலத்தின் கீழேயும் அயன் வானத்தின் மேலேயும் சென்றனர். எவ்வளவு தேடியும் அடி முடிகளைக் காணாது நாணி மீண்டு வந்தனர்.
 
#376. அடி முடி காணிலர்

சேவடி ஏத்தும் செறிவுடை வானவர்
மூவடி தாஎன் றானும், முனிவரும்,
பாவடி யாலே பதம் செய் பிரமனும்
தாவடி இட்டுத் தலைப் பெய்துமாறே.

கூட்டமாக இருந்து சிவன் சேவடிகளைப் போற்றுகின்ற தேவர்களும், தானமாக மூன்றடி மண் கேட்ட திருமாலும், முனிவர்களும், இசை வடிவான மந்திரங்கள் மூலம் விரும்பியவற்றை அடையலாம் என்னும் நான்முகனும் அலைந்து திரிந்தாலும் சிவனைக் காண இயலாது அல்லவா?
 
377. சிவன் இயல்பை அறிகிலர்

தானக் கமலத்து இருந்த சதுமுகன்

தானக் கருங்கடல் வாழித் தலைவனும்
ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற
தானப் பெரும் பொருள் தன்மையது ஆமே.

சுவாதிஷ்டானச் சக்கரத்தில் இருக்கும் நான்முகனும், மணிபூரகத்தில் இருக்கும் திருமாலும், ஊனின் உள்ளே இருக்கும் உயிர் போல் உணரவல்ல, தலை உச்சியில் விளங்கும் சதாசிவனுக்கு ஈடு ஆவரோ? ஆகா மாட்டார்!
 
#378. சாதாக்கியம் பெறலாம்

ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர்
மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்நெறி முன்கண்டு
ஆலிங்கனம் செய்து உலகம் வலம் வரும்;
கோலிங்க அமைஞ்சு அருள் கூடலும் ஆமே

சாதாக்கியம் = சிவ தத்துவங்கள் ஐந்தில் ஒன்று.
ஞானமும் செயலும் ஒத்தது சாதாக்கியம்.

கோலிங்கம் ஐந்து :

1. கர்ம சாதாக்கியம், 2. கர்த்துரு சாதாக்கியம், 3. மூர்த்தி சாதாக்கியம்,
4. அமூர்த்தி சாதாக்கியம், 5. சிவ சாதாக்கியம்.
அனைத்திலும் கலந்து விளங்குகின்ற மேலான மெய்ப்பொருள் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு இங்கு அடைக்கப்பட்டுள்ளது.

இந்த உண்மையை உணர்ந்து கொண்டால், நம்மால் எல்லாத் தத்துவங்களில் கலந்து நிற்கும், அதே சமயம் அவற்றைக் கடந்தும் நிற்கும் பஞ்ச சதாக்கியத்தின் அருளைப் பெறமுடியும்.
சிவனால் வகுக்கப்பட்ட நெறியில் சென்றால் சிவசதாக்கியத்தை எளிதாக
அடையலாம்.
 
#379. தேவர்கள் சிவனைப் பொருந்தார்

வாள் கொடுத்தானை வழிபட்ட தேவர்கள்
ஆள் கொடுத்து எம் போல் அரனை அறிகிலர்;
ஆள் கொடுத்து இன்பம் கொடுத்துக் கோளாகத்
தாள் கொடுத்தான் அடி சாரகிலரே.

தேவர்களுக்கு ஒளி தந்தவன் சிவபெருமான். அவனை வணங்குவார்கள் தேவர்கள். ஆயினும் தங்களையே இறைவனுக்கு அடிமையாகத் தந்து, நாம் அறிந்தது போல சிவனை அவர்கள் அறிகிலர். இறைவன் தன்னையே நமக்குத் தருவான். சிவ போகத்தையும் தருவான். நாம் உய்யும் வண்ணம் தன் திருவடிகளைத் தருவான். என்றாலும் தேவர்கள் சிவனைச் சென்று பொருந்துகிலர். பலவேறு ஆசைகளுடன் அவர்கள் சிவனை வழிபடுவதால் அந்த அறியாமை அவனுடன் பொருந்த விடாது.
 
380. படைக்கும் தொழிலை அருளினான்.

ஊழி வலம் செய்து அங்கு ஓரும் ஒருவருக்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்;
‘வீழித் தலை நீர் விதித்தது, தா’ என
ஊழிக் கதிரோன் ஒளியை வென்றானே.

ஊழியைச் செய்பவன் உருத்திரன். அவனை ஆராய்ந்து அறிபவன் சிவன். ” எனக்குத் தாங்கள் இடும் ஆணையை அளித்து அருள்க!” எனப் பிரமன் வேண்டிடப் பேரொளியாக நின்ற இறைவன் பிரமனுக்குப் படைப்புத் தொழிலை அளித்தான்.
 
9. சர்வ சிருஷ்டி

381. நாதத் தத்துவம்

ஆதியோடு அந்தம் இலாத பராபரம்

போதம் அது ஆகப் புணரும் பராபரை
சோதி அதனில் பரம் தோன்றத் தோன்றுமாம்
தீதில் பரை; அதன் பால் திகழ் நாதமே.

தொடக்கமும் முடிவும் இல்லாதது பரம் பொருள். அறிவு மயமாகப் பிரிக்க இயலாதபடி உள்ள பரம்பொருளிடம் தோன்றுவாள் பரை என்னும் சக்தி. அந்தச் சக்தியிடம் தோன்றும் நாதம்.
 
382. நாதத்தில் தோன்றுபவை

நாதத்தில் விந்துவும் நாத விந்துக்களில்
தீதற்றகம் வந்த சிவம் சத்தி என்னவே
பேதித்து ஞானம் கிரியை பிறத்தலால்
வாதித்த இச்சையில் வந்து எழும் விந்துவே.

நாதத்திலிருந்து தோன்றும் விந்து. நாத விந்துகளில் இருந்து தோன்றுவர் சிவனும் சிவை என்னும் சக்தியும். சிவன் பேரறிவு கொண்டவன். சிவை என்னும் சக்தி தேவி பேராற்றல் கொண்டவள். இங்ஙனம் இருவராகப் பிரிந்த பின்னர் ஞானமும், செயலும் உண்டாகும். அதனால் உலகைத் தோற்றுவிக்கும் இச்சை எழும். இவை அனைத்தும் சுத்த மாயையிலிருந்து தோன்றுபவைகள்.
 
383. சக்தியின் பெருமை

இல்லது சத்தி இடம்தனில் உண்டாகிக்
கல் ஒளி போலக் கலந்து உள் இருந்திடும்;
வல்லது ஆக வழி செய்த அப்பொருள்
சொல்லது சொல்லிடில் தூராதி தூரமே.

தத்துவங்கள் தோன்றும் இடம் ஆவாள் சக்தி தேவி. இவள் நவ மணிகளின் ஒளியுடன் பராசக்தியிடம் தோன்றி நம் ஆவியில் கலந்து பரவி நிற்பாள். ஆற்றலோடு தொழில் செய்ய வல்ல அந்தச் சக்தியின் பெருமைகளை நம்மால் கூறவும் இயலுமோ?
 
#384. சதாசிவன்

தூரத்தில் சோதி தொடர்ந்து ஒரு சத்தியாய்,
ஆர்வத்து நாதம் அணைந்து ஒரு விந்துவாய்
பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்
சார்வத்துச் சத்தி ஓர் சாத்துமான் ஆமே.

எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவன் சிவன். அவன் பேரொளி வடிவானவன். அவனே எண்ணத்துக்கு உட்பட்ட சக்தியாகவும், இச்சையினால் நாதத்தைப் பொருந்துகின்ற விந்துவாகவும், பாரமான ஐந்தொழில்களைப் புரிபவனாகவும் ஒப்பற்ற ஆற்றல் கொண்டவனாகவும் உள்ளான்.
 
#385. பிரபஞ்சம் தோன்றிய விதம்

மானின்கண் வான் ஆகி, வாயு வளர்ந்திடும்

கானின் கண் நீரும் கலந்து கடினமாய்த்
தேனின் கண் ஐந்தும் செறிந்து ஐந்து பூதமாய்ப்
பூவின் கண் நின்று பொருந்தும் புவனமே.

அசுத்த மாயையினின்றும் ஆகாயம் தோன்றும். அதிலிருந்து தோன்றும் வாயு. வாயுவிலிருந்து நெருப்பும் , நெருப்பில் இருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் தோன்றும். பஞ்சீகரணம் என்னும் முறைப்படி பஞ்ச தன்மாத்திரைகள் கலக்கப்படும் போது பஞ்ச பூதங்கள் இவ்வாறு தோன்றும்
 
#386. சிவ சக்தியர்

புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி
புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்
புவனம் படைப்பானும் பூமிசை ஆயனாய்
புவனம் படைப்பான் அப்புண்ணியன் தானே.

புவனத்தைப் படைப்பது சிவ சக்தியர். அவர்களுக்கு ஐந்து புதல்வர்கள் உள்ளனர். அவர்கள் முறையே நான்முகன், திருமால், ருத்திரன், மகேசுவரன், சதாசிவன் ஆவர். படைக்கும் போது சிவசக்தியர் பிரம்மனிடம் பொருந்தி இருப்பர். நிலம், நீர், தீ, வளி, வெளி, விந்து, நாதம், சக்தி, சிவன் என்ற ஒன்பதையும் படைப்பர்.
 
https://thirumanthiram2.wordpress.com/

#548. பெரியார் துணை

அருமைவல் லோன் கலை ஞானத்துள் தோன்றும்;
பெருமைவல் லோன்பிற விச்சுழி நீந்தும்
உரிமைவல் லோன் உணர்ந்து ஊழி இருக்கும்;
திருமைவல் லாரோடு சேர்ந்தனன் யானே.

சான்றோரோடு கூட வல்லவன் கலை ஞானத்துடன் விளங்குவான். பெருமை உடைய ஞானம் பெற்றவன் பிறவிச் சுழலிலிருந்து வெளிப்படுவான். உரிமையோடு பழகுபவன் சிவனை உணர்ந்து என்றும் அழிவில்லாமலிருப்பான். அருமை பெருமை வாய்ந்த சான்றோர்களின் சிறந்த துணையை அடைகின்ற பெரும் பேற்றைப் பெற்றேன் நான்.

இரண்டாம் தந்திரம் முற்றப் பெற்றது.
 
Eyes down to the new thread in Literature section
மீண்டும் நாரயணீயம் very soon.

Slokas from first dasakam onwards
will be presented in this new thread.

The other thread was KaNNanin Kathai
which started only from the 37th dasakam.
 
#387. உலகினைக் காப்பர்.

புண்ணிய நந்தி பொருந்தி உலகுஎங்கும்
தண்ணிய மானை வளர்த்திடும் சக்தியும்
கண்ணியல் பாகக் கலவி முழுதுமாய்
மண்ணியல் பாக மலர்ந்தெழு பூவிலே.

அறிவு மயமாகச் சிவன் அனைத்துப் பொருட்களிலும் பொருந்தி இருப்பான். அவனே குளிர்ச்சி பொருந்திய மாயையும் காக்கின்றான். சக்தி சிவனுடன் பொருந்தி, வெப்பத்தைத் தணிக்கும் குளிர்ச்சி போலச் செயல்படுவாள். சிவனின் தாங்கும் தன்மையில் அவளும் விரிந்து இருப்பாள்.
 
#388. பிறப்பு உண்டாவது

நீரகத்து இன்பம் பிறக்கும் நெருப்பு இடை
காயத்தில் சோதி பிறக்கும் அக்காற்று இடை
ஓர்வு உடை நல்உயிர்ப் பாதம் ஒலிசத்தி
நீர் இடை மண்ணின் நிலைப் பிறப்பாமே.

புருஷனுக்கு இன்பம் உண்டாவது நீர்ப் பகுதியாகிய மணிபூரகத்தில் ஆம். அனாகதத்தில் அக்னி விளங்குவதால் அங்கே ஒளி வீசும் கிரணங்கள் உண்டாகும். விசுத்தியில் வாயு விளங்கு உயிர்நிலைபெற்று இருக்கும். நாதமோ எனில் சக்தியியைத் தரும். நீருக்கும்
( மணிபூரகச் சக்கரம்) மண்ணுக்கும் ( மூலாதாரம்) இடையே உள்ள சுவாதிஷ்டானமே உற்பத்திக்குரிய இடம் ஆகும்.
 
389. உலகினைப் படைப்பவன்

உண்டு உலகு எழும் உமிழ்ந்தான் உடன் ஆகி
அண்டத்து அமரர் தலைவனும் ஆதியும்
கண்டச் சதுமுகக் காரணன் தன்னோடும்
பண்டு இவ்வுலகம் படைக்கும் பொருளே.

உலகு ஏழையும் உண்டு உமிழ்ந்த திருமால் உலகினைக் காக்கும் கடவுள் ஆவான். நான்முகன் உலகினைப் படைக்கும் கடவுள் ஆவான். ஆனால் அண்டங்கங்களில் வாழுகின்ற தேவர்களின் தலைவனாகிய சிவபெருமானே அனைவருக்கும் தலைவனும் முதல்வனும் ஆவான். அவனே உண்மையில் இந்த உலகினைப் படைத்துக் காக்கும் மெய்பொருள் ஆவான்.
 
After a long gap back to this thread and will continue to share my quotes here on a regular basis .


“We must all suffer one of two things: the pain of discipline or the pain of regret.” -- Jim Rohn
 

Latest ads

Back
Top