#1873 to #1876
#1873. வானுலகு ஆள்வர்
இயங்கும் உலகினில் ஈசன் அடியார்
மயங்கா வழிசெல்வர், வானுலகு ஆள்வர்;
புயங்களும் எண்திசை போதுபா தாளம்
மயங்காப் பகிரண்டம் மாமுடி தானே.
இடையறாது இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில் சிவனடியார்கள் அறியாமையால் மயங்கி நில்லார். அவர்கள் அறிவு வழியே என்றும் தொடர்ந்து செல்வர். அவர்கள் வானுலகையும் ஆளும் வல்லமை கொண்டவர். அவர்களின் புயங்களே எட்டுத் திசைகள் ஆகும், அவர்களின் தாமரைத் திருவடிகள் பாதளம் வரை நீளும். அவர்கள் திருமுடியோ மயக்கம் தராத அண்ட வெளியில் அமையும்.
#1874. நுண்ணுடலையும் அழிக்கலாம்
அகம் படிகின்ற நம் ஐயனை ஓரும்
அகம் படி கண்டவர் அல்லலில் சேரார்
அகம் படி உள் புக்கு அறிகின்ற நெஞ்சம்
அகம் படி கண்டாம் அழிக்கலும் எட்டே.
தன் மனத்தில் படிந்திருக்கும் இறைவனிடம், தன் மனத்தைப் படிய வைத்து, தன் மனம் அடங்கப் பெற்றுள்ள அடியவர், துன்பத்தில் துவள மாட்டார். தன் அகங்காரத்தை வென்றுத் தன்னுள்ளே ஈசனைக் காண அறிந்து கொண்டவர், தன் புரியட்டகம் ஆன நுண் உடலை அழிக்க வல்லவர்.
விளக்கம்
மனம் விரும்பும் போது அடியவரால் இறைவனை அடைய முடியும். அப்போது அவருடைய அகங்காரம் அழிந்து விடும். அதனால் பிரபஞ்சம் மறைந்து விடும். அப்போது புரியட்டகம் என்னும் ஓசை, ஊறு, ரூபம், கந்தம், ரசம், மனம், புத்தி, அகங்காரம் என்பவற்றால் அமைந்துள்ள நுண்ணுடல் இல்லாமல் போய்விடும்.
#1875. என் ஆவி உழவு கொண்டான்
கழிவும் முதலும், எம் காதல் துணையும்
அழிவும் அது ஆய் நின்ற ஆதி பிரானைப்
பழியும் புகழும் படு பொருள் முற்றும்
ஒழியும் என் ஆவி உழவு கொண் டானே.
எனக்கு வரவும் சிவனே. எனக்குச் செலவும் சிவனே. என் காதல் துணைவனும் அவனே. என் அழிவும் அவனே. நான் அவனை எண்ணிய வேளையில் எனது பழியை நீக்கினேன்; என் புகழை நீக்கினேன். அவற்றின் பயன்களையும் நீக்கினேன். இவை அனைத்தும் நீங்கிய என் உள்ளத்தை அவன் நன்கு உழுது பண்படுத்திப் பக்குவம் செய்தான்.
#1876. ஒன்றாய் உலகம் படைத்தான்
என் தாயோடு என் அப்பன் ஏழ் ஏழ் பிறவியும்
அன்றே சிவனுக்கு எழுதிய ஆவணம்
ஒன்றாய் உலகம் படைத்தான் எழுதினான்
நின்றான் முகில் வண்ணன் நேரேழுத்தாமே
எந்தையும் சிவனே. என் தந்தையும் அவனே. என் ஏழு ஏழு பிறவிகளிலும் நான் அவனுக்கே அடிமை என்ற சாசனத்தைத் தன் ஒருவனாக உலகைப் படைத்த நான்முகன் என்றோ எழுதக் கார் வண்ணத் திருமால் அதில் சாட்சிக் கையொப்பம் இட்டான்.