• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

Sriman NArAyaNeeyam

ஸந்தி ச்’ரேயாம்ஸி பூ4மாம்ஸ்யபி ருசிபி4த3யா
கர்மிணாம் நிர்மிதானி
க்ஷுத்3ரானந்தா3ச்’ச ஸாந்தா ப3ஹுவித4: க3தய:
க்ருஷ்ண தேப்4யோ ப4வேயு: |
த்வஞ்சாசக்2யாத2 ஸக்2யோ நனு மஹிததமாம்
ச்’ரேயஸாம் ப4க்திமேகாம்
த்வத்3 ப4க்த்யானந்த3 துல்ய: க2லு விஷய ஜுஷாம்
ஸம்மத3: கேன வா ஸ்யாத்3 || ( 95 – 3)


ஹே கிருஷ்ணா! கர்மத்தின் அதிகாரிகளின் ருசி பேதங்களை அனுசரித்துப் பலப்பல சிரேயஸாகிய சாதனங்கள் உபதேசிக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து அற்ப சந்தோஷமும், அநித்தியமான பதவிகளும் அவர்களுக்குக் கிடைக்கும். ஆனால் தங்கள் பக்தன் உத்தவனுக்குச் சிரேயஸ் ஆன மார்க்கங்களில் மிகச் சிறந்தது பக்தி ஒன்றே என்று தாங்கள் உபதேசித்தீர்கள். விஷய சுகத்தை அனுபவிப்பவர்களுக்குத் தங்களின் பக்தி தரும் ஆனந்தத்துக்குத் துல்லியமான ஆனந்தம் எப்படிக் கிடைக்கும்?

 
Sriman NArAyaNeeyam

த்வத்3ப4க்த்யா துஷ்டபுத்3தே4ஸ் ஸுக2மிஹசரதோ
விச்யுதாச’ஸ்ய சாசா’ :
ஸர்வாஸ்யு: சௌக்2யமய்ய: ஸலிலகுஹரக3ஸ்யேவ
தோயைகமய்ய : |
ஸோSயம் க2ல்விந்த்3ரலோகம் கமலஜப4வனம்
யோக3ஸித்3தீ4 ச்’ச ஹ்ருத்3யா :
நாகாங்க்ஷத்யேத தா3ஸ்தாம் ஸ்வயமனுபதிதே
மோக்ஷ சௌக்யேSப்யனீஹா : || ( 95 – 4)


தங்களிடம் கொண்ட பக்தியில் ஆனந்தம் அடைந்து, எல்லா விதமான ஆசைகளையும் ஒழித்து, இவ்வுலகில் சுகமாகச் சஞ்சரிப்பவன் ஒருவனுக்கு, மடுவின் நடுவில் உள்ளவனுக்கு எல்லாப் பக்கங்களிளும் நீர்மயமாக இருப்பதைப் போல, எல்லாப் பக்கங்களிலும் சுகமயமாக இருக்கும். இது போன்ற பக்தன் இந்திரலோகம் , பிரம்மலோகம், அணிமாதி சித்திகள், அஷ்ட ஐஸ்வரியங்கள் என்ற எதையும் விரும்புவதில்லை. அவ்வளவு ஏன்? தானாக வந்து சேருகின்ற மோக்ஷ சுகத்திலும் கூட அவனுக்கு விருப்பம் இராது.
 
Sriman NArAyaNeeyam

த்வத்3ப4க்தோ பா3த்4யமானோSபி ச விஷய ரசை:
இந்த்3ரியா சா’ந்தி ஹேதோ:
ப4க்த்யைவாக்ரமய மாணை: புனரபி க2லு
தைர்து3ர்பலைர்நாபி4ஜய்ய : |
ஸப்தார்சிர் தீ3பிதார்சிர் த3ஹதி கில
யதா பூ4ரிதா3ரு ப்ரபஞ்சம்
த்வத்3ப4க்த்யோகே4 ததை3வ ப்ரத3ஹதி து3ரிதம்
து3ர்மத3: க்வேந்த்3ரியாணாம் || ( 95 – 5)


தங்களுடைய பக்தனின் இந்திரியங்கள் சாந்தி அடையாததால் அவன் விஷய சுகங்களால் பாதிக்கப் படலாம். ஆனால் பக்தி அவனை ஆக்கிரமிக்கும்போது அந்த விஷய சுகங்கள் பலமிழந்து போய் விடும். அவற்றால் அவனை ஜெயிக்க முடியாது. ஜுவாலைகளை உடைய அக்கினி பெரும் விறகுக் கூட்டத்தை எரிப்பது போலவே தங்களிடம் கொண்ட பக்தி அந்த இந்திரியங்களின் கொட்டத்தை அழித்து விடும்.
 
Sriman NArAyaNeeyam

த3ச’கம் 95 : த்4யான யோக3:

சித்தார்த்3ரீபா4வ முச்சைர் வபுஷி ச
புலகம் ஹர்ஷ பா3ஷ்பஞ்ச ஹித்வா
சித்தம் சுத்3த்4யேத்கத2ம் வா கிமு
ப3ஹுதமஸா வித்3யயா வீதப4க்தே: |
த்வத்3கா3தா2 ஸ்வாத3 ஸித்3தா4ஞ்ஜன ஸதத
மரீம்ருஜ்யமானோSயமாத்மா
சக்ஷூர்வத்தத்வஸூக்ஷ்மம் ப4ஜதி ந து
ததா2Sப்யஸ்தயா தர்க்க கோட்யா || (95 – 6 )


உள்ளம் உருகாமல், உடலில்மயிர் கூச்சம் அடையாமல், ஆனந்தக் கண்ணீர் பெருகாமல் சித்தம் எங்கனம் சுத்தி அடையும்? பக்தி இல்லாதவனுக்குத் தவம், ஞானம் இவற்றால் என்ன பயன்? இந்த ஆத்மா தங்களுடைய கதைகளை அனுபவிப்பதால் சித்தாஞ்சனம் தீட்டப்பட்ட கண்கள் தத்துவங்களின் உண்மையை அறிவதைப் போல பிற யுக்திகளால் அறிவதே இல்லை.
 
Sriman NArAyaNeeyam

த்4யானம் தே சீ’லயேயம் ஸமதனு ஸுக2
ப3த்3தா4ஸனோ நாஸிகாக்3ரன்
யஸ்தாக்ஷ: பூரகாத்3யைர் ஜிதபவனபத2ச்’
சித்தபத்3மன்தவ வாஞ்சம் |
ஊர்த்4வாக்3ரம் பா4வயித்வா ரவிவிது4 சி’கி2னஸ்
ஸம்விசிந்த்யோ பரிஷ்டாத்
தத்ராஸ்த2ம் பா4வயே த்வாம் ஸஜலஜலத4ர
ச்’யாமலம் கோமளாங்க2ம் || ( 95 – 7 )


தங்களுடைய தியானத்தை நான் நன்கு அப்பியாசிப்பேன். சரீரத்தைச் சமமாக நிலை நிறுத்திச் சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு, கண் பார்வையை மூக்கின் நுனியில் அமைத்துக் கொண்டு, பூரகம் முதலியவற்றால் வாயு மார்க்கத்தை ஜெயித்து, கீழ் முகமாக உள்ள இதயகமலம் மேல் முகமாக மாறியதாகப் பாவித்து, ஒன்றின் மேல் ஒன்றாகச் சூரியன், சந்திரன் அக்கினி இவைகளைத் தியானித்து, அக்கினியின் நடுவில் நீருண்ட மேகத்தின் சியாமளா வர்ணமும் அழகிய அவ்வயவங்களும் கொண்ட தங்களைத் தியானிப்பேன்.
 
Sriman NArAyaNeeyam

த3ச’கம் 95 : த்4யான யோக3:

த்4யானம் தே சீ’லயேயம் ஸமதனு ஸுக2
ப3த்3தா4ஸனோ நாஸிகாக்3ரன்
யஸ்தாக்ஷ: பூரகாத்3யைர் ஜிதபவனபத2ச்’
சித்தபத்3மன்தவ வாஞ்சம் |
ஊர்த்4வாக்3ரம் பா4வயித்வா ரவிவிது4 சி’கி2னஸ்
ஸம்விசிந்த்யோ பரிஷ்டாத்
தத்ராஸ்த2ம் பா4வயே த்வாம் ஸஜலஜலத4ர
ச்’யாமலம் கோமளாங்க2ம் || ( 95 – 7 )


தங்களுடைய தியானத்தை நான் நன்கு அப்பியாசிப்பேன். சரீரத்தைச் சமமாக நிலை நிறுத்திச் சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு, கண் பார்வையை மூக்கின் நுனியில் அமைத்துக் கொண்டு, பூரகம் முதலியவற்றால் வாயு மார்க்கத்தை ஜெயித்து, கீழ் முகமாக உள்ள இதயகமலம் மேல் முகமாக மாறியதாகப் பாவித்து, ஒன்றின் மேல் ஒன்றாகச் சூரியன், சந்திரன் அக்கினி இவைகளைத் தியானித்து, அக்கினியின் நடுவில் நீருண்ட மேகத்தின் சியாமளா வர்ணமும் அழகிய அவயவங்களும் கொண்ட தங்களைத் தியானிப்பேன்.
 
Sriman NArAyaNeeyam

ஆநீலச்’லக்ஷ்ண கேச’ம் ஜ்வலிதமகர
ஸத்குண்ட3லம் மந்த3ஹாஸ
ஸ்யன்தா3ர்த்3ரம் கௌஸ்துப4 ஸ்ரீ பரிக3த
வனமாலோருஹாராபி4 ராமம் |
ஸ்ரீவத்ஸாங்க3ம் ஸுபா3ஹும் ம்ருது3லஸது3த3ரம்
காஞ்சனச்சா2ய சேலம்
சாருஸ்நிக்3தோ4ரு மம்போருஹ லலித
பத3ம் பா4வயேஹம் ப4வந்தம் || (95 – 8 )


நன்கு கறுத்த மினுமினுப்பான கேசங்களை உடையவரும்; பிரகாசிக்கும் மகர குண்டலங்களை அணிந்தவரும்; புன்னகைப் பெருக்கினால் நனைந்தவரும், கௌஸ்துபத்தின் காந்தியால் சூழப்பட்டவரும்; வனமாலை, முத்து மாலை இவற்றால் அழகு பெற்றவரும்; ஸ்ரீ வத்சம் என்ற அடையாளத்தை உடையவரும்; அழகிய திருக் கரங்களை உடையவரும், மிருதுவான, பிரகாசிக்கும் வயிற்றை உடையவரும்; தங்க நிறப் பட்டாடைகள் அணிந்தவரும்; அழகான புஷ்டியான தொடைகளை உடையவரும்; தாமரை மலர் போன்ற மிருதுவான திருவடிகளை உடையவரும்; ஆகிய தங்களைத் தியானிப்பேன்.
 
Sriman NArAyaNeeyam

ஸர்வாங்கே3ஷ்வங்க3 ரங்க3த் குதுகமதி
முஹுர்தா4ரயன்னீச’ சித்தம்
தத்ராப்யேகத்ர யுஞ்ஜே வத3னஸரஸிஜே
ஸுந்த3ரே மந்த3ஹாஸே |
தாத்ராலீனந்து சேத: பரமஸுக2
சித3த்3வைத ரூபே விதன்வன்
அன்யன்னோ சிந்தயேயம் முஹுரிதி
ஸமுபாரூட4யோகோ3 ப4வேயம் || (95 – 9 )


ஹே ஈசா விருப்பத்தை அடைந்த மனத்தைத் தங்களுடைய எல்லா அவயவங்களிலும் நிலை நிறுத்துவேன். அவை அனைத்திலும் மிக அழகான புன்னகை தவழும் தங்கள் முக கமலத்தில் மனதைச் சேர்த்து வைப்பேன். அந்த மனத்தை வேறு எதுவும் சிந்தியாமல் சத் சித் ஆனந்ததமயமான பிரம்மத்திடத்தில் செலுத்துவேன். இப்படி அடிக்கடித் தங்கள் தியான யோகத்தை நான் அடைந்து பவிப்பேன் ஆகுக!
 
Sriman NArAyaNeeyam

த3ச’கம் 95 : த்4யான யோக3:


இத்தம் த்வத்3த்4யான யோகே3 ஸதி
புனரணிமா3த்யஷ்ட ஸம்ஸித்3த4யஸ்தா:
தூ3ரச்’ருத்யாத3யோSபி ஹ்யஹமஹமிகயா
ஸம்பதேயுர் முராரே |
த்வத்ஸம்ப்ராப்தௌ விலம்பா3வஹம் அகிலமிதம்
நாத்3ரியே காமயேSஹம்
த்வாமேவானந்த பூர்ணம் பவனபுரபதே
பாஹிமாம் ஸர்வதாபாத் || ( 95 – 10)


ஹே முராரி! இவ்வாறு தங்கள் மீது செய்யும் தியான யோகம் சித்தி அடைந்த பிறகு அணிமா சக்திகள் எட்டும் ” நான் முந்தி! நீ முந்தி ! ” என்று போட்டி போட்டுக் கொண்டு என்னிடம் வந்து சேரும். தங்களை அடைவதில் தாமதத்தை ஏற்படுத்தும் அவற்றை நான் விரும்பவே மாட்டேன். ஆனந்த மயமான தங்களையே நான் விரும்புவேன்.
ஹே குருவாயூரப்பா! அனைத்துத் தாபங்களில் இருந்தும் என்னை காப்பாற்றுவீர்!
 

த3ச’கம் 96​

ப4கவத் விபூ4தய:

த்வம் ஹி ப்3ரஹ்மைவ ஸாக்ஷாத்
பரமுருமஹிமன்னக்ஷராணாமகார:
தாரோ மந்த்ரேஷு ராஞாம் மனுரஸி முனிஷு
த்வம் ப்4ருகுர் நாரதோ3பி |
ப்ரஹ்லாதோ3 தா3னவனாம் பசு’ஷுச
ஸுரபி4 பக்ஷிணாம் வைனதேயோ
நாகா3னாமஸ்யனந்தச் ஸுரஸரித3பி
ச ஸ்ரோதஸாம் விஸ்வமூர்த்தே || ( 96 – 1)


அதிக மகிமை உடைய விஸ்வமூர்த்தியே! தாங்களே சாக்ஷாத் பரப்ரம்மம் ஆவீர்கள். அக்ஷரங்களுக்குள் அகாரமாகவும்; மந்திரங்களுக்குள் பிரணவமாகவும்; அரசர்களுக்குள் மனு மஹாராஜாவாகவும்; முனிவர்களுக்குள் ப்ருகு மற்றும் நாரதர் ஆகவும், அசுரர்களுக்குள் ப்ரஹ்லாதனாகவும்; பசுக்களில் காமதேனுவாகவும்; பட்சிகளில் கருடனகவும்; நாகங்களில் அனந்தனாகவும், நதிகளில் கங்கையாகவும் தாங்கள் இருகின்றீர்கள் ( 96 – 1 )
 


த3ச’கம் 96​

ப4கவத் விபூ4தய:

ப்3ரஹ்மண்யானம் ப3லிஸ்த்வ்ம் க்ரதுஷு ச
ஜப யக்ஞோஸி வீரேஷு பார்த்தோ2
ப4க்தானாமுத்3த்4வஸ்தம் பலமஸி ப3லினாம்
தா4ம தேஜஸ்வினாம் த்வம் |
நாத்ஸ்யந்தஸ் த்வத் விபூ4தேர் விகாஸ
த3திச’யம் வஸ்து ஸர்வம் த்வமேவ
த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதா3னம் யதி3ஹ
ப4வத்3ருதே தன்ன கிஞ்சித் ப்ரபஞ்சே || ( 96 – 2 )

தாங்கள் பிராமண பக்தர்களுக்குள் பலிச் சக்கரவர்த்தியாகவும்; யக்ஞங்களுக்குள் ஜப யக்ஞமாகவும்; வீரர்களுக்குள் அர்ஜுனனாகவும்; பக்தர்களுக்குள் உத்தவனாகவும், பலவான்களின் பலமாகவும்; தேஜஸ்விகளின் தேஜஸ் ஆகவும் இருக்கின்றீர்கள் தங்கள் விபூதிக்கு ஒரு எல்லையே இல்லை. விசேஷமாக பிரகாசிக்கின்ற மேன்மையுடைய எல்லாப் பொருட்களும் தாங்களே ஆவீர்கள்! ஜீவனும் தாங்களே ; பிரகிருதியும் தாங்களே, இந்த பிரபஞ்சத்தில் தாங்கள் இல்லாத பொருள் என்று ஒன்றுமே இல்லை அல்லவா?
( 96 – 2 )
 

த3ச’கம் 96​

ப4கவத் விபூ4தய:

த4ர்மம் வர்ணாச்’ரமாணாம் ச்’ருதி பத2 விஹிதம்
த்வத் பரத்வேன ப4க்த்யா
குர்வன்தோSந்தர் விராகே3 விகஸதி
ச’னகைஸ் ஸந்த்யஜந்தோ லப4ந்தே|
ஸத்தாஸ்பூர்த்தி ப்ரியத் வாத்மகம்
அகி2ல பதா3ர்தேஷு பி4ன்னேஷ்வ பி4ன்னம்
நிர்மூலம் விச்’வமூலம் பரமமஹமிதி
த்வத்3 விபோ4த4ம் விசு’த்3த4ம் || ( 96 – 3 )

நான்கு வர்ணங்களுக்கும், நான்கு ஆசிரமங்களுக்கும், வேதமார்கங்களில் விதிக்கப்பட்ட தர்மத்தை ஈஸ்வர அர்ப்பணமாக அனுஷ்டித்துக் கொண்டு;அதனால் மனதில் வைராக்கியம் உதிக்கும்போது கிரமமாக அந்த தர்மங்களைத் தியாகம் பண்ணிக்கொண்டு இருப்பவர்கள்; சச்சிதானந்த ரூபமானதும், வேறு வேறாகத் திகழும் எல்லாப் பொருட்களிலும் காரண ரூபமாக நிறைந்திருப்பதும், தனக்குக் காரணம் இல்லாததும், எல்லாவற்றுக்கும் காரணமாக இருக்கும் பரமாத்மாவாகிய தங்களின் சுத்த ஸ்வரூப ஞானத்தை அடைகின்றார்கள். ( 96 – 3 )
 

த3ச’கம் 96​

ப4கவத் விபூ4தய:

ஞானம் கர்மாபி ப4க்திஸ் த்ரிதயமிஹ
ப4வத்3 ப்ராபகம் தத்ரதாவன்
நிர்விண்ணானா மசே’ஷே விஷய இஹ
ப4வேத் ஞான யோகோ3Sதி4கார:|
ஸக்தானாம் கர்மயோக3ஸ் த்வயி ஹி
விநிஹிதோ யே து நாத்யந்த ஸக்தா:
நாப்யப்யந்தம் விரக்தாஸ் த்வயி ச
த்3ருத ரஸா ப4க்தி யோகோ3 ஹ்யமீச’ம்|| ( 96 – 4 )


இவ்வுலகில் ஞான யோகம், கர்ம யோகம், பக்தி யோகம் மூன்றும் தங்களை அடைவிக்கும் சாதனங்கள் ஆகும். இவைகளில், இவ்வுலகில் இருக்கும் விஷயசுகம் அனைத்தின் மீதும் வெறுப்பு அடைந்தவர்களுக்கே ஞான யோகத்தில் அதிகாரம் சித்திக்கும்.
விஷய சுகங்களில் பற்று உடையவர்களுக்குத் தங்களிடம் அர்ப்பணம் செய்யப்பட் ட கர்ம யோகம் விதிக்கப்பட்டுள்ளது.
எவர்களுக்கு விஷய சுகங்களில் மிகுந்த பற்று இல்லையோ, மிகுந்த வைராக்கியமும் இல்லையோ , தங்களிடம் பிரேமையும் அதிகமாக உள்ளதோ அவர்களுக்கு பக்தி யோகம் விதிக்கப்பட்டுள்ளது ( 96 – 4 )
 

த3ச’கம் 96​

ப4கவத் விபூ4தய:

ஞானம் த்வத்3 ப4க்தானாம் வா லகு4
ஸுக்ருதவசா’ன் மர்த்யலோகே லப4ந்தே
தஸ்மாத் தத்ரைவ ஜன்ம ஸ்ப்ருஹயதி
ப4கவன் நாககோ3 நாரகோ வா|
ஆவிஷ்டம் மாம் து தை3வாத்3 ப4வஜலநிதி4
போதாயிதோ மர்த்ய தே3ஹே
த்வம் க்ருத்வா கர்ணதா3ரம் கு3ருமனுகு3ண
வாதாயிதஸ் தாரயேதா2:|| ( 96 – 5)


ஞானத்தையாவது, தங்களிடம் பக்தியையாவது மனிதர்கள் தம்முடைய பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தால் பிரயாசை இன்றி அடைகின்றார்கள். ஆகையால் சுவர்க்கத்தை அடைந்தவனும், நரகத்தை அடைந்தவனும், மனித உலகத்தில் வந்து பிறப்பதையே விரும்புகின்றான். சம்சாரம் ஆகிய சாகரத்தைத் தாண்ட ஒரு மரக்கலம் போல இருக்கும் இந்த மானிட சரீரத்தில் புகுந்துள்ள என்னையும், ஆச்சாரியானைப் படகோட்டியாகச் செய்து, தாங்களே அதற்கு அனுகூலமான காற்றாக இருந்து, என்னைக் கரை சேர்ப்பீர் ஆகுக. ( 96 – 5 )
 

த3ச’கம் 96​

ப4கவத் விபூ4தய:

அவ்யக்தம் மார்க3யந்த: ச்’ருதிபி4ரபி நயை:
கேவல ஞான லுப்தா4:
க்லிச்’யன்தேSதீவ ஸித்3தி4ம் ப3ஹுதர
ஜனுஷா மந்த ஏவாப்னுவந்தி|
தூ3ரஸ்த2: கர்மயோகோ3பி ச பரமப2லே
நன்வயம் ப4க்தியோகஸ்
த்வா மூலாதே3வ ஹ்ருத்யஸ் த்வரிதமயி
ப4க3வத் ப்ராபகோ வர்த்த4தாம் மே|| ( 96 – 6 )


வெறும் ஞானத்தை மட்டும் விரும்புபவர்கள் உபநிஷத்துகளைக் கொண்டும், மீமாம்ச நியாயங்களைக் கொண்டும், அவ்யக்தமான பிரம்மத்தை விசாரம் செய்து கொண்டு மிகவும் கஷ்டப்படுகின்றார்கள். பல ஜன்மங்களின் முடிவிலே அவர்கள் மோக்ஷத்தைப் பெறுகிறார்கள். கர்ம யோகமும் சுவர்க்க லோகம் போன்ற பலன்களைத் தருவதால், பரம புருஷார்த்தமான மோக்ஷத்திலிருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. ஹே பகவன்! ஆதிமுதலே மனதைக் கவருவதும், விரைந்து தங்களிடம் அடைவிப்பதுவும் ஆகிய இந்த பக்தி யோகமே எனக்கு விருத்தி அடையக் கடவது. ( 96 – 6 )
 

த3ச’கம் 96​

ப4கவத் விபூ4தய:

ஞானாயை வாதியத்னம் முனிரப வத3தே
ப்3ரஹ்ம தத்வம் து ச்’ருண்வன்
கா3ட4ம் த்வத் பாத3ப4க்திம் ச’ரணமயதி
யஸ் தஸ்ய முக்தி: கராக்3ரே |
த்வத்3 த்4யானேSபோஹ துல்யா புனரஸுகரதா
சித்த சாஞ்சல்ய ஹேதோ:
அப்4யாஸாதா3சு’ ச’க்யம் தத3பி வச’யிதும்
த்வத் க்ருபா சாருதாப்4யாம்|| ( 96 – 7 )


வியாச முனிவர் கேவல ஞானத்தை மட்டும் அடையப் பல கிரந்தங்களைப் படித்துச் செய்யப்படும் அதிகமான பிரயத்தனத்தை நிஷேதிக்கின்றார். ஆனால் எவன் ஒருவன் பிரம்மதத்துவத்தைக் கேட்டு, அறிந்து, தங்கள் திருவடிகளில் பக்தியுடன் உறுதியாகச் சரணம் அடைகின்றானோ அவனுக்கு மோக்ஷமானது அவன் கைக்கு வெகு அருகிலேயே இருக்கிறது ஆனால் இந்த பக்தி யோகத்தையும் மனதின் சஞ்சலம் காராணமாக எளிதில் செய்ய முடியாது என்பது துல்லியமே. ஆயினும் அந்த தியானத்தை அப்யாசத்தாலும், தங்கள் கிருபையாலும் தங்கள் திருமேனி எழிலாலும் விரைவாக சம்பாதிக்க முடியும்.
( 96 – 7 )
 

த3ச’கம் 96​

ப4கவத் விபூ4தய:

நிர்விண்ண: கர்ம மார்கே3 க2லு விஷமதமே
த்வத்கதா2 யாதௌ3 ச கா3ட4ம்
ஜாதச்’ரத்3தோ4Sபி காமனயி பு4வனபதே
நைவ ச’க்னோமி ஹாதும்|
தத்3 பூ4யோ நிச்’சயேன த்வயி நிஹிதமனா
தோ3ஷபு3த்3த4யா ப4ஜஸ்தான்
புஷ்ணீயாம் ப4க்திமேவ த்வயி ஹ்ருத3ய க3தே
மங்க்ஷு நங்க்ஷயந்தி ஸங்கா3 || ( 96 – 8 )


ஹே லோகநாதா! கர்ம மார்க்கத்தில் வெறுப்பு அடைந்தவனாக இருந்தாலும்; தங்கள் சரித்திரம் முதலியவற்றில் திடமான சிரத்தை உடையவனாக இருந்தாலும்; கர்மங்களை முழுவதுமாக விட்டு விடும் சக்தியற்றவன் ஆகின்றேன். ஆகையால் தங்களிடத்தில் உறுதியுடன் மனத்தைச் செலுத்திக்கொண்டும், தோஷ புத்தியுடன் அந்தக் கர்மங்களையும் அனுபவித்துக் கொண்டும், பக்தியை வளர்ப்பேன் ஆகுக தாங்கள் இதயத்தை வந்து அடைந்தால் விஷயங்களில் உள்ள பற்றுதல் விரைவில் நாசம் அடையும் அல்லவா?
( 96 – 8 )
 


த3ச’கம் 96​

ப4கவத் விபூ4தய:

கச்’சித் க்லேசா’ர்ஜிதார்த்த2க்ஷய
விமலமதிர் நுத்3யமானோ ஜனௌ கை4:
ப்ராகே3வம் ப்ராஹ விப்ரோ ந கலு மம ஜன:
கால கர்மாக்ர ஹாவா|
சேதோ மே து3:க2ஹேதுஸ் ததி3ஹ கு3ணக3ணாம்
பா4வயத்ஸர்வகாரீ
த்யுக்த்வா சா’ந்தோ க3தஸ்த்வாம் மம ச குரு விபோ4
தாத்3ருசீ’ம் சித்த சா’ந்திம் || ( 96 – 9 )


முன்னொரு காலத்தில் ஒரு பிராமணன், மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருள் நாசம் அடைந்ததால் வெறுப்படைந்து, அதனால் மாசற்ற மனம் உடையவனாகி, ஜனங்களால் துன்புறுத்தப்பட்டு இவ்வாறு கூறினான்,
“என்னுடைய துக்கத்துக்கு காரணம் ஜனங்களோ , காலமோ, கர்மமோ, கிரஹங்களோ அல்ல. மனது தான் எனது வருத்தத்துக்குக் காரணம். அந்த மனதானது ஆத்மாவிடத்தில் கர்த்ருத்வம் முதலியவற்றை ஆரோபணம் செய்து எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது” என்று சொல்லி மனச் சாந்தி அடைந்தவனாகத் தங்களை வந்து அடைந்தான்.
ஹே பிரபு! அந்த மனச்சாந்தியை எனக்கும் தந்தருள்வீர் ( 96 – 9 )
 


த3ச’கம் 96​

ப4கவத் விபூ4தய:

ஐல: ப்ராகு3ர்வசீ’ம் ப்ரத்யதிவிவச’மனாஸ்
ஸேவமானச்’ சிரம் தாம்
கா3ட4ம் நிர்வித்3ய பூ4யோ யுவதி ஸுக2மித3ம்
க்ஷுத்3ர மேவேதி கா3யன்|
த்வத்3 ப4க்தீம் ப்ராப்ய பூர்ணஸ்
ஸுக2தரமசரத் தத்3 வது3த்3தூ4யஹ ஸங்க3ம்
ப4க்தோத்தம்ஸம் க்ரியாமாம் பவனபுரபதே
ஹந்தமேருந்தி3 ரோகா3ன் || ( 96 – 10 )


முன்னொரு காலத்தில் புரூரவஸ் என்ற ஓர் அரசன் ஊர்வசியிடம் மிகவும் பரவசம் அடைந்து, வெகு நாள் அவளை அனுபவித்த பிறகு, திடமான வைராக்கியத்தை அடைந்து, “இந்த ஸ்திரீ சுகம் மிகவும் துச்சமானதே!” என்று சொல்லித் தங்களிடம் பக்தியை அடைந்து, பூர்ண மனோரதனாக பவித்து, வெகு சுகமாக சஞ்சரித்தான். ஹே குருவாயூரப்பா! அது போலவே பற்றுதலை வெகு தொலைவில் விலக்கி வைத்து, என்னையும் பக்தர்களில் சிறந்தவனாகச் செய்வீராகுக! முதலில் என் வியாதிகளை அகற்ற வேண்டும்.( 96 – 10)
 
 

த3ச’கம் 97​

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

த்ரைகுண்யாத்3 பி4ன்னரூபம் ப4வதி ஹி
பு4வனே ஹீன மத்4யோத்தமம் யத்3
ஞானம் ச்’ரத்3தா4 ச கர்த்தா வலதிரிதி
ஸுக2ம் கர்ம சாஹாரபே4தா3 : |
த்வத்க்ஷேத்ர த்வம்நிஷேவாதி3 து யதி3ஹ
புனஸ்த்வத்பரம் தத்துஸர்வம்
ப்ராஹுர்நைர்கு3ண்ய நிஷ்ட2ம் தத3னு பஜனதோ
மங்க்க்ஷு ஸித்3தௌ4 ப4வேயம் || ( 97 – 1)


இந்த உலகில் ஞானம், சிரத்தை, கர்த்தா, வாசஸ்தலம், சுகம், கர்மம், ஆகாரம் போன்ற அனைத்துமே சத்துவம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களின் பேதத்தால் வேறுபடுகின்றன என்பது பிரசித்தி. ஆனல் தங்களையும், தங்கள் பிரசித்தி பெற்ற க்ஷேத்திரங்களையும் சேவிப்பது தங்கள் விஷயமாகவே நடைபெற்றால் அவைகளை மட்டும் நிர்குணம் என்று கூறுவதுண்டு,. அதன்படி அவற்றை அடிக்கடி சேவிக்கும் நான் விரைவில் முக்திடைவேன் ஆகுக.
 

த3ச’கம் 97​


த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

த்வய்யேவ ந்யஸ்தசித்தஸ்ஸுக2மயி
விசரன் ஸர்வசேஷ்டாஸ் த்வத3ர்த்த2ம்
த்வத்3 ப4க்தைஸ் ஸேவ்ய மானானபி
சரிதசராநாச்’ரயன் புண்ய தே3சா’ன் |
த3ஸ்யௌ விப்ரே ம்ருகா3தி3ஷ்வபி ச
ஸமமதிர் முச்ய மானாவமான
ஸ்பர்தா4ஸூயாதி3 தோ3ஷஸ் ஸததம்
அகி2ல பூ4தேஷு ஸம்பூஜயே த்வாம் || ( 97 – 2)


ஹே ஈசா! தங்களிடம் மனத்தைச் செலுத்தி விட்டு; சுகமாகச் சஞ்சரித்துக் கொண்டு; சகல பிரவிருத்திகளையும் தங்களுக்காகவே செய்து கொண்டு; தங்கள் பக்தர்களால் இப்போது செய்யப்படும், முன்னர் செயப்பட்ட புண்ணிய கர்மங்களைச் செய்து கொண்டு; புண்ணிய க்ஷேத்திரங்களைச் சேவித்துக் கொண்டு; திருடன், பிராமணன், மிருகம் போன்ற எல்லோரிடமும் சமபுத்தியுடன் இருந்து கொண்டு; அவமானம், விரோதம், அசூயை போன்ற குணங்களை விட்டு விட்டு; எல்லா உயிர்களிடமும் தங்களை பூஜிப்பேனாகுக!
 

த3ச’கம் 97​

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

த்வத்3பா4வோ யாவதே3ஷு ஸ்புரதி ந
விச’த3ம் தாவதேவம் ஹ்யுபாஸிதம்
குர்வன் நைகாத்ம்யபோ3தே4 ஜ்ஜடிதி விகஸதி
த்வன்மயோSஹம் சரேயம் |
த்வத்3 த4ர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந
ப4க3வன் ப்ரஸ்து தஸ்ய ப்ரணாச’:
தஸ்மாத் ஸர்வாத்மனைவ ப்ரதி3ச’
மம விபோ4 ப4க்தி மார்க்க3ம் மனோக்ஞம் || ( 97 – 3)


இந்தத் திருடன், பிராமண, பசு போன்றவற்றில் ஈஸ்வர பாவம் ஸ்பஷ்டமாக விளங்கும் வரையில், எல்லாவற்றிலும் உள்ள ஆத்மா ஒன்றே என்று எண்ணிக் கொண்டு நான் சஞ்சரிப்பேனாகுக. ஐஸ்வர்யம் ஆதி குணங்கள் நிறைந்த தேவா! இந்த பாகவத கர்மத்துக்கு தொடக்கம் முதல் முடிவு வரை குறைவு என்பதே இல்லை. ஆகையால் எனக்கு மனத்தைக் கவரும் பக்தி மார்க்க்கதைத் தந்தருள்வீர்.
 

த3ச’கம் 97​

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

தச்சைனம் ப4க்தியோக3ம் த்3ரட4யிதுமயி மே
ஸாத்4யமாரோக்3ய மாயு:
தி3ஷ்ட்யா தத்ராபி ஸேவ்யம் தவ சரணமஹோ
பே4ஷஜாயேவ து3க்3த4ம் |
மார்கண்டே3யோ ஹி பூர்வம் க3ணகநிக3தி3த
த்3வாத3சா’ப்3தா3யு ருச்சை:
ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ ப4டநிவஹைர்
த்3ராவயாமாஸ ம்ருத்யும் || (97 – 4 )


ஹே ஈசா! இந்த பக்தி யோகம் உறுதி அடைவதற்கு என்னுடைய ரோகம் நீங்க வேண்டும்; ஆயுள் கூட வேண்டும். அவற்றைப் பெறுவதற்கும் தங்கள் திருவடிகளே மருந்துக்கான பால் போல ஆகின்றன. அதுவும் கூட நன்மைக்கே! முன்னொரு காலத்தில் மார்க்கண்டேயன் என்பவருக்கு ஜோசியர்கள் பன்னிரண்டு ஆண்டு ஆயுளைக் கூறினார்கள். அவர் தங்களை ஒரு வருஷம் நன்றாகச் சேவித்துத் தங்கள் படர்களின் உதவியுடன் யமனையே விரட்டினார்.
 

த3ச’கம் 97​

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

மார்கண்டே3யச்’சிராயுஸ்ஸ க2லு புனரபி
த்வத்பர: புஷ்ப ப4த்3ரா
தீரே நின்யே தபஸ்யன்னதுல ஸுக2ரதி :
ஷட் து மன்வந்தராணி |
தே3வேந்த்3ரஸ் ஸப்தமஸ்தம் ஸுரயுவதி
மருந்மன்மதை2ர் மோஹயிஷ்யன்
யோகோ3ஷ்மப்லுஷ்ய மாணைர் ந து
புனரச’க்த்வஜ்ஜனம் நிர்ஜயேத் க: || ( 97 – 5 )


சிரஞ்சீவியான மார்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்ற பின்னரும் தங்கள் பக்தனாகவே இருந்தார்.புஷ்ப பத்திரா நதிக் கரையில் தபஸ் செய்து ஆறு மன்வந்தரங்களைக் கழித்தார். ஏழாவது மன்வந்தரத்தில் தேவேந்திரன் மார்க்கண்டேயரை அப்சரஸ்கள், வசந்த மாருதன், மன்மதன் இவர்கள் உதவியுடன் மயக்க எண்ணினான்.
மார்க்கண்டேயரின் யோகக்கினியால் தகிக்கப்பட்ட அவர்களால் அவரை மயக்க முடியவில்லை. தங்கள் பக்தனை யாரால் ஜெயிக்க முடியும்?
 

Latest posts

Latest ads

Back
Top