• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

த3ச’கம் 97​

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச


ப்ரீத்யா நாராயணாக்2ய ஸ்த்வமத2 நரஸக2:
ப்ராப்த வானஸ்ய பார்ச்’வம்
துஷ்ட்யா தோஷ்டூய மானஸ்ஸது விவித4வரை:
லோபி4தோ நானுமேனே |
த்3ரஷ்டும் மாயாம் த்வதீ3யாம் கில
புனரவ்ருணோத் ப4க்தித்ருப்தாந்தராத்மா
மாயாது:கா2னபி3க்ஞ ஸ்தத3பி ம்ருக3யதே
நூன மாச்’சர்யஹேதோ: || ( 97 – 6 )


பிறகு நாராயணன் மற்றும் நரன் ஆன தாங்கள் அந்த மார்க்கண்டேயன் அருகில் வந்தீர்கள். மிகுந்த சந்தோஷத்துடன் துதித்த மார்க்கண்டேயன் பல வரங்களால் ஆசை மூட்டப்பட்ட போதும், பக்தியினால் திருப்தி அடைந்து இருந்ததால் அந்த வரங்களைக் கேட்க வில்லை. ஆனால் அவர் தங்கள் மாயையைப் பார்க்க விரும்பினார். மாயையினால் உண்டாகும் வருத்தத்ததை அவர் அறியாததால் அதைக் காண விரும்பி இருக்க வேண்டும்.
 

த3ச’கம் 97​

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

யாதே த்வய்யாசு’ வாதாகுல ஜலத3க3லத்
தோயபூர்ணாதிகூ4ர்ணத்
ஸப்தார்ணோராசி’ மக்3னே ஜக3தி ஸ து
ஜலே ஸம்ப்4ரமன் வர்ஷ கோடி: |
தீ3ன: ப்ரைக்ஷிஷ்ட தூ3ரே வடத3லச’யனம்
கஞ்சிதா3ச்’ச்ர்யா பாலம்
த்வாமேவ ச்’யாமளாங்க3ம் வத3னஸரஸி
ஜன்யஸ்த பாதா3ங்கு3லீகம் || ( 97 – 7 )


தாங்கள் சென்றவுடன், தாமதியாமல் பிரளய மேகங்கள் பொழிந்த கன மழையால் நிரம்பிய சப்த சாகரங்களில், பூமி மூழ்கிவிட்டது. மார்க்கண்டேயர் அந்தப் பிரளய ஜலத்தில் அனேக கோடி வருஷங்கள் சுழன்று திரிந்து வருந்தினார். நீரின் மேல் ஓர் ஆலிலையில் படுத்துக் கொண்டு, சியாமள வர்ணத்துடன், கால் விரலை வாயில் வைத்துச் சுவைக்கும் ஒரு அற்புதக் குழந்தையான தங்களை வெகு தொலைவில் கண்டார்.
 

த3ச’கம் 97​

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

த்3ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்டரோமா த்வரிதமபி4க3த :
ஸ்ப்ரஷ்டு காமோ முநீந்த்3ர:
ச்’வாஸேனாந்தர் நிவிஷ்ட: புனரிஹ ஸகலம்
த்3ருஷ்டவான் விஷ்ட பௌக4ம் |
பூ4யோSபி ச்’வாஸவாதைர் ப3ஹிரனுபதிதோ
வீக்ஷிதஸ்த்வத்கடாக்ஷை:
மோதா3தா3ச்’லேஷ்டு காமஸ்த்வயி பிஹிததனௌ
ஸ்வாச்’ரமே ப்ராக3வதா3ஸீத் || ( 97 – 8 )


தங்களைக் கண்டு மயிர் கூச்சம் அடைந்து, தங்களைத் தொட விரும்பி, விரைவாகத் தங்கள் பக்கம் வந்தார். தங்களின் மூச்சுக் காற்றுடன் உள்ளே சென்றவர் அங்கே உலகம் அனைத்தையும் பார்த்தார். மறுபடியும் மூச்சுக் காற்றுடன் வெளியே வந்தவர் தங்களை ஆலிங்கனம் செய்து கொள்ள விரும்பினார். ஆனால் தாங்கள் தங்கள் சரீரத்தை உடனே மறைத்துவிடவே அவர் தான் முன் போலவே தன் ஆசிரமத்தில் இருப்பதைக் கண்டார்.
 

த3ச’கம் 97​

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

கௌ3ர்யா ஸார்த்த4ம் தத3க்3ரே புரபி4த3த2
க3தஸ்த்வத்ப்ரிய ப்ரேக்ஷ ணாரத்தீ2
ஸித்3தா4னேவாஸ்ய த3த்வா ஸ்வயமய
மஜராம்ருத்யுதாதீ3ன் கா3தோSபூ4த் |
ஏவம் த்வத்ஸேவயைவ ஸ்மரரிபுரபி
ஸ ப்ரயதே யேன தஸ்மாத்
மூர்த்தி த்ரய்யாத்மகஸ்த்வம் நனு ஸகல
நியன்தேதி ஸவ்யக்தமாஸீத் ( 97- 9)


அதற்குப் பிறகு பரமேஸ்வரன் தங்கள் பக்தனைக் காண்பதற்குப் பார்வதி தேவியுடன் வந்தார். மார்க்கண்டேயன் முன் சென்று, அவர் தன் தவ மகிமையால் முன்பே பெற்றிருந்த ஜனன மரணமின்மையை அவருக்கு தான் அளிக்கும் வரமாக அருளிவிட்டுச் சென்றார். பரமேஸ்வரன் கூடத் தங்களைச் சேவிப்பதில் பிரீத்தி அடைகின்றார் என்பதால் தாங்களே மும் மூர்த்திகளுக்கும் அந்தர்யாமி என்பது தெளிவாகின்றது அல்லவா?
 

த3ச’கம் 97​

த3ச’கம் 97 : உத்தம ப4க்தி ப்ரார்த்த2னா, மார்கண்டே3ய கதா2 ச

த்ர்யம்சோ’Sஸ்மின் ஸத்யலோகே விதி4ஹரி
புரபி4ன்மந்தி3ராண்யூர்த்4வ மூர்த்4வம்
தேப்4யோSப்யூர்த்4வம் து மாயா விக்ருதி விரஹிதோ
பா4தி வைகுண்ட2 லோக: |
தத்ர த்வம் காரணாம்ப4ஸ்யாபி பசு’பகுலே
சு’த்3த4 ஸத்வைகரூபி
ஸச்சித் ப்3ரஹ்மாத்3வயாத்மா பவனபுரபதே
பாஹிமாம் ஸர்வ ரோகா3த் || (97 -10)


பிரம்ம லோகம் , விஷ்ணு லோகம், சிவலோகம் என்னும் மூன்று பாகங்களையுடைய அந்த சத்திய லோகத்தில், பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்களின் லோகங்கள் ஒன்றுக்கு மேல் ஒன்றாக உள்ளன. தங்களின் வைகுண்டமோ எனில் மாயையும் அதன் காரியங்களாகிய மஹத், அஹங்காரம் முதலிய பதினாறு விகாரங்களும் அற்றதாக அந்த மூன்று லோகங்களுக்குள் மேலே பிரகாசிக்கின்றது. அந்த வைகுண்டத்திலும், காரண ஜலத்திலும், கோகுலத்திலும், தாங்கள் சுத்த சத்துவ ஸ்வரூபியாகவும், சத் சித் ஆனந்த பிரம்ம ஸ்வரூபியாகவும் இருக்கின்றீர்கள். ஹே குருவாயூரப்பா! எல்லா வியாதிகளில்
இருந்தும் என்னைக் காப்பாற்றுவீர்!
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

யஸ்மின்நேதத்3 விபா4தம் யத இத3
மப4வத்3யேன சேத3ம் யஏதத்
யோSஸ்மாது3த்தீர்ண ரூப : க2லு
ஸகலமித3ம் பா4ஸிதம் யஸ்ய பாஸா|
யோ வாசம் தூ3ர தூ3ரே புனரபி மனஸாம்
யஸ்ய தே3வா முனீந்த்3ரா :
நோ வித்யு3ஸ் தத்வ ரூபம் கிமுபுனரபதே
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || (98-1)


அதிஷ்டான ரூபியான எவரிடம் இந்தப் பிரபஞ்சம் ஆரோபிக்கப்பட்டுப் பிரகாசிக்கின்றதோ; உபாதான காரணமாகவும், நிமித்த காரணமாகவும் உள்ள
எவரிடமிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியதோ;
எவரிடம் சென்று இந்தப் பிரபஞ்சம் ஐக்கியம் ஆகின்றதோ;
எவர் இந்தப் பிரபஞ்சமாகவே தோன்றுகின்றாரோ;
எவர் இந்தப் பிரபஞ்சத்தைக் காட்டிலும் வேறான உருவம் கொண்டவரோ;
எவருடைய பிரகாசத்தால் இந்தப் பிரபஞ்சமும் பிரகாசிக்கின்றதோ;
எவர் வாக்குக்கும், மனோ விருத்திக்கும் வெகு தூரத்தில் இருக்கின்றாரோ;
எவருடைய உண்மை ஸ்வரூபத்தைத் தேவர்களும் முனிவர்களும் கூட அறியவில்லையோ; எவருடைய உண்மை ஸ்வரூபத்தை எவருமே அறியவில்லையோ;
அப்படிப்பட்ட ஸ்ரீகிருஷ்ணனுக்கு என்னுடைய நமஸ்காரம்.
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

ஜன்மாதோ2 கர்ம நாம ஸ்புடமிஹ
கு3ண தோ3ஷாதி3கம் வா ந யஸ்மின்
லோகானாமூதயே ய: ஸ்வய மனு பஜதே
தானி மாயானுஸாரீ |
பிப்ரச் சக்தீர ரூ போபி ச
பஹுதர ரூபோSவ பாத்யத்புதாத்மா
தஸ்மை கைவல்ய தாம்னே பர ரஸ
பரிபூர்ணாயவிஷ்ணோ நமஸ்தே || ( 98-2)


எங்கும் நிறைந்துள்ள கிருஷ்ணா! இவ்வுலகில்
எவரிடத்தில் பிறப்பு, கர்மம், பெயர், குணம், தோஷம் முதலியவை இல்லையோ:
எவர் லோக அனுக்கிரஹத்துக்காக மாயையை அனுசரித்து அதைச் சுதந்திரனாக அங்கீகரிக்கின்றாரோ;
எவர் வித்யை, அவித்யை, ஞானம், ஐஸ்வர்யம் என்னும் சக்திகளை தரித்தவரோ;
எவர் உருவமே இல்லாத போதிலும் தாவர ஜங்கமங்களின் உருவங்களைத் தரிக்கின்றாரோ;
எவர் மத்ஸ்யம் கூர்மம் போன்ற அற்புத வடிவங்களில் பிரகாசிக்கின்றாரோ;
எவர் மோக்ஷமும், பரமானந்தமும் அளிப்பவரோ அவருக்கு என் நமஸ்காரம்.
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

நோ திர்ய்ஞ்சன்ன மர்த்யம் ந ச ஸுரமஸுரம்
ந ஸ்த்ரியம் நோ புமாம்ஸம்
ந த்3ரவ்யம் கர்ம ஜாதிம் கு3ணமபி
ஸத3ஸத்3வாSபிதே ரூப மாஹு: |
சி’ஷ்டம் யத் ஸ்யான் நிஷேதே4 ஸதி
நிக3மச’தைர்லக்ஷணா வ்ருத்தி தஸ்தத்
க்ருச்2ரேணாவேத்3யமானம் பரமஸுக2மயம்
பா4தி தஸ்மை நமஸ்தே || ( 98 – 3 )


தங்கள் ஸ்வரூபம் பசு, பக்ஷி போன்ற திரியக் அல்ல; மனிதன் அல்ல; தேவன் அல்ல; அசுரன் அல்ல; ஸ்த்ரீ அல்ல; புருஷன் அல்ல; திரவியம் அல்ல; கர்மம் அல்ல; ஜாதி அல்ல; குணம் அல்ல; அந்தக்கரணம் அல்ல; அவ்யக்தம் அல்ல; என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. “நேதி! நேதி! ” என்று ஒவ்வொன்றாக நிஷேதம் பண்ணும்போது எது கடைசியில் மிஞ்சுகின்றதோ, அதுவே உபநிஷத்துக்களால் லக்ஷண விருத்தி அடைகின்றது. வாச்ய, வாசக பாவம் இவற்றின் சம்பந்தம் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு அறிவிக்கப்படும் பிரம்மானந்த மயமாக அது பிரகாசிக்கின்றது. அப்படிப்பட்ட ஸ்வரூபத்தை உடைய தங்களுக்கு என் நமஸ்காரம்.
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

மாயாயாம் பி3ம்பி3தஸ்த்வம் ஸ்ருஜதி
மஹத3ஹங்கார தன்மாத்ரபே4தே3ர:
பூ4தக்3ராமேந்ந்த்ரியாத்யைரபி ஸகல ஜக3த்
ஸ்வப்ன ஸங்கல்ப கல்பம் |
பூ4ய: ஸம்ஹ்ருத்ய ஸர்வம் கமட2 இவ
பதா3ன்யாத்மனா காலச’க்த்யா
க3ம்பீ4ரே ஜாயமானே தமஸி விதிமிரோ
பா4ஸி தஸ்மை நமஸ்தே || ( 98 – 4)


மாயையில் பிரதிபலிக்கும் தாங்கள்; மஹத் தத்வம், அஹம் தத்வம் இவற்றுடன்; சப்தம், ஸ்பரிசம், முதலான ஐந்து தன்மாத்திரைகளைக் கொண்டும்; ஐந்து மஹா பூதங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனஸ் இவைகளைக் கொண்டும்; ஸ்வப்பனத்துக்கும் சங்கல்பத்துக்கும் ஒப்பான பிரபஞ்சத்தைப் படைக்கின்றீர்கள். ஆமை தன் கால்களை உள்ளுக்கிழுப்பது போலவே, கால சக்தியால் இவை எல்லாவற்றையும் மீண்டும் தங்களிடம் அடக்கிக் கொள்கின்றீர்கள். சுஷுப்தியில் ஆழ்ந்த இருளில் தாமஸ சம்பந்தம் இல்லாத பிரகாச ரூபியாகத் தாங்கள் ஸ்வ ஸ்வரூபத்துடன் விளங்குகின்றீர்கள். அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்!
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

ச’ப்3த3 ப்3ரஹ்மேதி கர்மேத்யணுரிதி
ப4க3வன் கால இத்யாலபந்தி
த்வாமேகம் விச்’வஹேதும் ஸகலமயதயா
ஸர்வதா2 கல்ப்யமானம் |
வேதா3ந்தைர் யத்து கீ3தம் புருஷபரசித்3
ஆத்மாபி4த4ம் தத்துதத்வம்
ப்ரேக்ஷாமாத்ரேண மூலப்ரக்ருதி விக்ருதிக்ருத்
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || ( 98 – 5 )


சர்வ ஸ்வரூபியாக இருப்பதால், தாங்கள் எல்லா விதங்களிலும் கல்பிக்கப் படுகின்றீர்கள். சப்தப் பிரம்மம், கர்மம், பரமாணு, காலம் என்று தங்களையே பிரபஞ்சத்துக்குக் காரணமாகக் கூறுகின்றனர். உபநிஷத்துக்கள் புருஷன், பரன், சித், ஆத்மா என்று யாரைக் கூறுமோ அந்தத் தத்துவம் தன் பார்வையாலேயே மூலப் பிரகிருதியையும் அதன் விகாரங்களையும் சிருஷ்டிக்கின்றது. அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

ஸத்வேனாஸத்தயா வா ந ச க2லு
ஸத3ஸத்வேன நிர்வாச்யரூபா
த4த்தே யாஸாவவித்3யா கு3ண
பணிமதிவத்3 விச்’வத்3ருச்யாவபா4ஸம் |
வித்3யாத்வம் சைவ யாத ச்’ருதிவசனலவைர்
யத்க்ருபாஸ்யந்த3 லாபே4
ஸம்ஸாராரண்ய ஸத்3யஸ் த்ருடன
பரசு’தாமேதி தஸ்மை நமஸ்தே || ( 98 – 6 )


சத் ( இருப்பது) என்றோ, அசத் (இல்லாதது) என்றோ, சதசத் ( இருந்தும் இல்லாதது ) என்றோ, வார்த்தைகளால் கூற முடியாத அவித்யை; ஒரு வெறும் கயிற்றில் ஒரு பாம்பைத் தோற்றுவிப்பதுபோல அனைத்து த்ருச்ய வஸ்துக்களையும் பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கின்றது. அதே அவித்யை பகவானுடைய கருணைக் கடாக்ஷம் கிடைக்கும் போது உடனே வித்தையாக மாறிவிடுகிறது. சம்சாரம் என்னும் வனத்தை வெட்டும் கோடாரியாக மாறி விடுகின்றது. அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

பூ4ஷாஸு ஸ்வர்ணவத்3வா ஜக3தி
க4டச’ராவாதி3கே ம்ருத்திகாவத்
தத்வே ஸஞ்சிந்த்யமானே ஸ்புரதி
தத3து4னாSபய த்3விதீயம் வபுஸ்தே |
ஸ்வப்ன த்3ரஷ்டு: ப்ரபோ3தே4 திமிரலயவிதௌ4
ஜீர்ண ராஜ்ஜோச்’ச யத்3வத்
வித்3யாலாபே4 ததை2வ ஸ்புடமபி விகஸேத்
க்ருஷ்ண தஸ்மை நமஸ்தே || ( 98 – 7 )


ஹே கிருஷ்ணா! உண்மையை ஆராயும் போது குண்டலம் முதலிய ஆபரணங்களில் உள்ள சுவர்ணத்தைப் போலவும், குடம் முதலியவற்றில் உள்ள மண்ணைப் போலவும், ஜகத்துக்குக் காரணமான தங்களின் ரூபம் பிரகாசிக்கின்றது. கனவு விழித்து எழும் போது கனவுலகு அழிந்து விடுகின்றது. தீபத்தின் ஒளி கிடைக்கும் போது கயிற்றில் தெரியும் பாம்பு மறைந்து போகின்றது. அது போன்றே பிரம்ம ஞானம் ஏற்படும் போது பிரபஞ்சத்தின் தொடர்பு அழிந்து அந்த பிரம்மமும் சத் சித் ஆனந்த மயமாகப் பிரகாசிக்கும். அப்படிப் பட்ட தங்களுக்கு நமஸ்காரம்.
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

யத்3பீ4த்யோதே3தி ஸூர்யோ த3ஹதி
ச த3ஹனோ வாதி வாயுஸ் ததா3Sன்யே
யத்3பீ4தா: பத்3மஜாத்3யா: புனருசித
ப3லீனாஹரந்தேSனுகாலம் |
யேனை வாரோபிதா: ப்ராங்க் நிஜபத3மபி
தே ச்யாவிதாரச்’ச பச்’யாத்
தஸ்மை விச்’வம் நியந்த்ரே வயமபி
ப4வதே க்ருஷ்ண குர்ம: ப்ரணாமம் || (98 – 8 )


ஹே கிருஷ்ணா! யாரிடம் கொண்ட பயத்தினால் சூரியன் உதிக்கின்றானோ,
அக்கினி எரிக்கின்றானோ, காற்று வீசிகின்றதோ,
பிரமன் முதலானவர்கள் காலம் தவறாமல் செயல் புரிகின்றார்களோ,
யாரால் அவர்கள் தங்கள் ஸ்தானங்களுக்கு நியமிக்கப் படுகின்றார்களோ,
யாரால் பிறகு அங்கிருந்து தள்ளப் படுகின்றார்களோ
அப்படி எல்லாவற்றையும் நியமனம் செய்யும் தங்களுக்கு நமஸ்காரம்.
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

த்ரைலோக்யம் பா4வயந்தம் த்ரிகு3ண மயமித3ம்
த்ர்யக்ஷரஸ்யைகவாச்யம்
த்ரீசா’னாமைக்யரூபம் த்ரிபி4ரபி
நிக3மைர் கி3யமானஸ்வரூபம் |
திஸ்ரோSவஸ்தா வித3ந்தம் த்ரியுக3 ஜனிஜுஷம்
த்ரிகர்மா க்ராந்த விச்’வம்
த்ரைகால்யே பே4தஹீனம் த்ரிபி4ரஹ மனிச’ம்
யோகபே4தை3ர் ப4ஜே த்வாம் || ( 98 – 9 )

சத்வம், ரஜஸ், தமஸ்,
என்ற முக்குணங்களின் விகாரமாக இந்த மூவுலகை சிருஷ்டிப்பவரும்; அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று அக்ஷரங்களை உடைய பிரணவத்தின் முக்கிய பூதரும்; பிரமன், விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளின் ஒன்றுபட்ட உருவத்தை உடையவரும்; ருக், யஜுர், ஸாம என்ற மூன்று வேதங்களால் கானம் செய்யப்படும் ஸ்வரூபத்தை உடையவரும்; ஜாக்கிரதை, ஸ்வப்பனம், சுஷுப்தி என்ற மூன்று அவஸ்தைகளை அறிகின்றவரும்; திரேதா, துவாபரம், கலி என்ற மூன்று யுகங்களிலும் அவதாரம் செய்தவரும்; மூன்றடிகளால் மூவுலகங்களை முழுமையாக ஆக்கிரமித்தவரும்; பூதம், வர்த்தமானம், பவிஷ்யம் என்ற மூன்று காலங்களிலும் பேதமற்றவரும்; ஆகிய தங்களை நான் கர்ம, ஞான, பக்தி என்ற மூன்று யோகங்களாலும் வழிபடுவேன் ஆகுக!
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

ஸத்யம் சு’த்3த4ம் விபு3த்3த4ம் ஜயதி தவ வபு:
நித்யமுக்தம் நிரீஹம்
நிர்த்3வந்த்3வம் நிர்விகாரம் நிகி2லகு3ணக3ண
வ்யஞ்ஜனாதா4ர பூ4தம் |
நிர்மூலம் நிர்மலம் தாந்நிரவதி4
மஹிமோல்லாஸி நிர்லீனமந்த:
நிஸ்ஸங்கா3னாம் முனீனாம் நிருபம
பரமானந்த3 ஸாந்த்3ர ப்ரகாச’ம் || ( 98 – 10)


பரமார்த்த சத்யம் ஆனதும்; மாயையின் சம்பந்தம் இல்லாததும்; ஸ்வயம் பிரகாசமானதும்; எப்போதும் சுதந்திரமாக இருப்பதும், கர்த்துருத்வம் போன்றவை இல்லாததும்; ஸ்வஜாதீய பேதம் இல்லாததும்; சமஸ்த ஜீவர்களின் நற் குணங்களுக்கு ஆதாரமாக இருப்பதும்; தனக்கு காரணமாக எவருமில்லாததும்; ஆளவில்லாத மகிமையுடன் பிரகாசிப்பதும்; பற்றற்ற முனிவர்கள் தம் அந்தக்கரணத்தில் பற்றி இருப்பதும்; பரமானந்தமும், பிரகாசமும் கொண்ட தங்கள் ஸ்வரூபம் மேன்மை பெற்று விளங்குகின்றது.
 
த3ச’கம் 98: நிஷ்கள ப்3ரஹ்ம உபாஸனம்

து3ர்வாரம் த்3வாத3சா’ரம் த்ரிச’தபரிமிலத்
ஷஷ்டி பர்வாபி4வீதம்
ஸம்ப்4ராம்யத் க்ரூரவேக3ம் க்ஷணமனு
ஜக3தா3ச்சி2த்3ய ஸந்தா4வமானம் |
சக்ரம் தே காலரூபம் வ்யத2யது ந து மாம்
த்வத்பதை3காவலம்ப3ம்
விஷ்ணோ காருண்ய ஸிந்தோ4
பவனபுரபதே பாஹி ஸர்வாமயௌகா4த்|| ( 98 – 11)


ஹே விஷ்ணோ! யாராலும் தடுக்க முடியாததும், பன்னிரண்டு மாதங்கள் என்னும் ஆரங்களை உடையதும்; முன்னூற்று அறுபது நாட்கள் என்னும் முனைகள் சூழந்ததும், கொடிய வேகத்துடன் நன்கு சுழல்வதும் ; ஒவ்வொரு க்ஷணத்திலும் உலகை பலாத்காரமாகப் பிடித்து இழுத்துக் கொண்டு விரைந்து ஓடும் தங்கள் காலச் சக்கரம் தங்கள் திருவடிகளில் அவலம்பிதிருக்கும் என்னை வருத்தக் கூடாது. கருணைக் கடலான குருவாயூரப்பா! என்னை வியாதிக் கூட்டத்திலிருந்து காப்பாற்றுவீர்.

 

த3ச’கம் 99​

வேத3 ஸ்துதி

விஷ்ணோர் வீர்யாணி கோ வா கத2யது
த4ரணே: கச்’ய ரேணூன்மிமீதே
யஸ்யை வாங்க்4ரி த்ரயேண த்ரிஜக3த3பி4 மிதம்
மோத3தே பூர்ண ஸம்பத் |
யோSசௌ விச்வானி த4த்தே ப்ரியமிஹ
பரமம் தா4ம தஸ்யாபி4யாயாம்
தத்3 ப4க்தா யத்ர மாத்யந்த்
யம்ருதரஸ மரந்தஸ்யத்ர ப்ரவாஹ:|| ( 99 – 1)


எவருடைய மூன்றடிகளால் மூவுலகங்களும் அளக்கப்பட்டு,
அதனால் ஐஸ்வர்யம் நிறைந்ததாகச் சந்தோஷப்படுகின்றதோ;
எந்த பகவான் உலகங்கள் அனைத்தையும் தாங்குகின்றாரோ,
எங்கும் நிறைந்திருக்கும் அந்த விஷ்ணுவின் வீரியங்களை
யாரால் எடுத்து உரைக்க முடியும் ?
பூமியின் துகள்களை யாரால் எண்ண முடியும்?
எந்த உலகத்தில் விஷ்ணு பக்தர்கள் சந்தோஷப்படுகின்றார்களோ,
எந்த உலகத்தில் மோக்ஷம் என்னும் பூந்தேன் பெருக்கெடுக்கின்றதோ,
அந்த விஷ்ணு பகவானுக்கு மிகவும் பிரியமானதும் மேலானதும் ஆகிய
வைகுண்டத்தை நான் இந்த உலகிலேயே அடைவேன் ஆகுக!( 99 – 1)
 

த3ச’கம் 99​

வேத3 ஸ்துதி

ஆத்3யாயாசே’ஷகர்தே ப்ரதி நிமிஷ
நவீனாய பர்த்ரே விபூ4தே :
ப4க்தாத்மா விஷ்ணவே ய: ப்ரதி3ச’தி
ஹவிராதீ3னி யக்ஞார்சனாதௌ3 |
க்ருஷ்ணாத்3யம் ஜன்ம யோ வா மஹதி3ஹ
மஹதோ வர்ணயேத் சஸோSயமேவ
பீத: பூர்ணே யசோ’பி4ஸ் த்வரித
மபி4ஸரேத் ப்ராப்யமந்தே பத3ம் தே || ( 99 – 2)


பக்தி நிறைந்த மனதை உடைய எவன் ஒருவன்
(எல்லாவற்றுக்கும் முதலில் இருப்பவரும்;
எல்லாவற்றையும் படைத்தவரும்;
ஒவ்வொரு கணத்திலும் புதிதாகத் தோன்றுகின்றவரும்,
அணிமாதி ஐஸ்வரியங்களைத் தரிக்கின்றவரும் ஆகிய)
ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு; யாகம், பூஜை முதலியவற்றில்
ஹவிஸ், புஷ்பம், பழம் முதலியவற்றை சமர்ப்பணம் செய்கின்றானோ அல்லது
எவன் ஒருவன் மஹானான விஷ்ணுவின் மிகவும் பூஜ்யகரமான
கிருஷ்ண அவதாரத்தை வர்ணிக்கின்றானோ; அவனே இந்த உலகில்
சந்தோஷமாகக் கீர்த்திகள் நிறைந்தவனாக வாழ்ந்திருந்துவிட்டு கடைசியில்
தங்கள் வைகுண்ட லோகத்தைத் தாமதம் இன்றி அடைவான். ( 99 – 2)
 

த3ச’கம் 99​

வேத3 ஸ்துதி

ஹே ஸ்தோதார: கவீந்த்3ராஸ்தமிஹ
க2லு யதா2 சேதய்த்4வே ததை2வ
வ்யக்தம் வேத3ஸ்ய ஸாரம் ப்ரணுவத
ஜனனோ பாத்த லீலா கதா2பி:|
ஜானந்தஸ் சாஸ்ய நாமானி அகில ஸுக2
கராணீதி ஸங்கீர்த்த யத்4வம்
ஹே விஷ்ணோ கீர்த்த நாத்3யைஸ் தவ க2லு
மஹதஸ் தத்வ போ3த4ம் ப4ஜேயம் || ( 99 – 3)


துதிக்கின்ற கவி ஸ்ரேஷ்டர்களே! பிரமாணச் சித்தரும், வேதத்தின் சார பூதருமான அந்த மஹாவிஷ்ணுவை எவ்விதம் நீங்கள் அறிகின்றீர்களோ, அவ்விதமாகவே இவ்வுலகில் அங்கீகரிக்கப்பட்ட லீலா விசேஷங்களின் கதைகளால் நன்கு துதியுங்கள்!

ஹே அறிஞர்களே! எல்லோருக்கும் எல்லாப் புருஷார்த்தங்களையும் கொடுக்கின்ற அந்த விஷ்ணுவின் திருநாமங்களை நன்கு கீர்த்தனம் செய்யுங்கள்!

ஹே விஷ்ணுவே! நாம சங்கீர்த்தனம் முதலியவற்றாலேயே நான் மஹானாகிய தங்களுடைய தத்துவ ஞானத்தை அடைவேன் ஆகுக! ( 99 – 3 )
 

த3ச’கம் 99​

வேத3 ஸ்துதி

விஷ்ணோ: கர்மாணி ஸம்பச்’யத மனஸி
ஸதா3 யைஸ்ஸ தர்மானபத்4னா
த்3யானீந்த்3ரஸ்யைஷ ப்4ருத்ய ப்ரியாஸக2
இவ ச வ்யாதனோத் க்ஷேமகாரீ|
ஈக்ஷந்தே யோகா3 ஸித்3தா4: பரபத3 மனிச’ம்
யஸ்ய ஸம்யக் ப்ரகாச’ம்
விப்ரேந்த்3ரா ஜாக3ரூகா க்ருத ப3ஹு நுதயோ
யச்ச நிர்பா4ஸயந்தே || ( 99 – 4 )


எந்த எந்தப் பிரவிருத்திகளைக் கொண்டு தர்மங்களை அந்த அந்த அதிகாரிகளுடன் சேர்த்து வைத்தாரோ அந்த விஷ்ணு பகவான்;
தேவேந்திரக்கு ஒரு வேலைக்காரனைப் போலவும், பிரியமுள்ள தோழனைப் போலவும், க்ஷேமத்தை செய்வதற்கு எந்த எந்த பிரவிருத்திகளைச் செய்தாரோஅந்த விஷ்ணு பகவான்;
யோகசித்தி பெற்றவர்கள் எந்த விஷ்ணு பகவானுடைய நன்கு பிரகாசிக்கின்ற சிறந்த ஸ்தானத்தை எப்போதும் பார்கின்றர்களோ அந்த விஷ்ணு பகவான்;
எந்த ஸ்தானத்தை பிராமணோத்தமர்கள் பலதரப்பட்ட ஸ்துதிகளால் பிரகாசப் படுதுகின்றார்களோ அந்த விஷ்ணு பகவான்;
அப்படிப்பட்ட அந்த விஷ்ணு பகவானின் பிரவிருத்திகளை எப்போதும் மனதில் தியானம் செய்யக் கடவீர் ( 99 - 4 )
 

த3ச’கம் 99​

வேத3 ஸ்துதி

நோ ஜாதோ ஜாயமானோSபி ச ஸமதி4க3தஸ்
த்வன் மஹிம்னோSவஸானம்
தே3வ ச்’ரேயாம்ஸி வித்3வான் ப்ரதிமுஹுரபி
தே நாம ச’ம்சாபி4 விஷ்ணோ |
தந்த்வாம் ஸமஸ்தௌமி நானாவித4நுதி
வசனைரஸ்ய லோக த்ரயஸ்யாபி
ஊர்த்4வம் விப்4ராஜமானோ விரசித வஸதீம்
தத்ர வைகுண்ட2 லோகே || ( 99 – 5)


ஹே தேவா! தங்கள் மகிமையின் முடிவைக் கண்டவன் பிறந்ததும் இல்லை, பிறக்கப் போவதும் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் ஈசா! சிரேய சாதனங்களை அறிந்த நான் தங்கள் திருநாமத்தை ஒவ்வொரு கணமும் கீர்த்தனம் செய்கின்றேன்.
இந்த மூவுலகங்களுக்கும் மேலே வைகுண்டத்தில் வாசம் பண்ணிக் கொண்டிருக்கும் அப்படிப் பட்ட தங்களை பலவிதமாக நன்கு துதிக்கின்றேன். ( 99 – 5 )
 

த3ச’கம் 99​

வேத3 ஸ்துதி

ஆப:ஸ்ருஷ்ட்யாதி3 ஜன்யா: ப்ரத2மமயி
விபோ4 க3ர்ப்ப4 தே3சே’ த3து4ஸ்த்வாம்
யத்ர த்வய்யேவ ஜீவா ஜலச’யன ஹரே
ஸங்க3தா ஐக்யமாபன் |
தஸ்யாஜஸ்ய ப்ரபோ4 தே விநிஹித மப4வத்
பத3ம் மேகம் ஹி நாபௌ4
தி3க்பத்ரம் யத் கிலாஹு: கனகத4ரணிப்4ருத்
கர்ணிகம் லோக ரூபம் || ( 99 – 6)


ஹே பிரபு! சிருஷ்டியின் துவக்கத்தில் உண்டான ஜலம், முதலில் தங்களைக் கர்ப்பத்தில் தரித்தது. ஜலத்தில் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ ஹரியே! அந்த ஜலத்தின் நடுவில் இருக்கும் தங்களிடத்திலேயே சகல ஜீவர்களும் ஒன்று சேர்த்து ஐக்கியம் அடைந்தனர். அந்த ஜலத்தில் படுத்திருப்பவரும், பிறப்பற்றவரும் ஆகிய தங்களுடைய நாபியில் ஒரு தாமரைப் பூ உண்டானது அல்லவா? அந்த தாமரைப் பூ திக்குகளாகிய இதழ்களை உடையதாகவும் மஹா மேருவாகிய தாமரைக் கொட்டையை உடையதாகவும் லோக ரூபமாகவும் கூறுகின்றனர். ( 99 – 6 )
 

த3ச’கம் 99​

வேத3 ஸ்துதி

மூர்த்த்4னாமக்ஷ்ணாம் பதா3னி வஹஸி கலு
ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விச்’வம்
தத்ப்ரோத்கம்யாபி திஷ்ட2ன் பரிமிதவிவரே
பா4ஸி சித்தாந்தரேSபி |
பூ4தம் ப4வ்யம் ச ஸர்வம் பரபுருஷ ப4வான்
கிஞ்ச தேஹேந்த்3ரியாதி3ஷு
ஆவிஷ்டோ ஹ்யுத்3க3தத்வாத்3 அம்ருதமுக2ரஸம்
சானுபு4ங்க்ஷே த்வமேவ || ( 99 – 8 )


தலைகள் உடைய, கண்கள் உடைய, கால்கள் உடைய அனேக ஆயிரம் ஜீவன்களைத் தரிக்கின்றீர்கள். இந்த பிராமாண்டம் முழுவதும் வியாபித்து, அதையும் கடந்து வியாபித்து இருக்கின்றீர்கள். ஆனாலும் குறுகிய துவாரத்தை உடைய மனதிலும் பிரகாசிக்கின்றீர்கள். ஹே புருஷோத்தமா! கடந்து சென்றதும், இனி வரப் போவதும் எல்லாம் தாங்களே! தேஹம், இந்திரியங்கள் முதலியவற்றில் தாங்கள் பிரவேசித்தவராக இருந்த போதிலும் அவைகளில் இருந்து வெளியேறியவராகவும் இருப்பதால் தான் மோக்ஷ சுகத்தின் ரசத்தையும் தாங்கள் அனுபவிக்கிறீர்கள். ( 99 – 8 )
 

த3ச’கம் 99​

வேத3 ஸ்துதி

யஸ்து த்ரைலோக்ய ரூபம் த3த4த3பி ச
ததோ நிர்க3தோSனந்த சு’த்3த4
ஞானாத்மா வர்தஸே த்வம் தவ க2லு
மஹிமா ஸோSபி தாவான் கிமன்யத் |
ஸ்தோகஸ்தே பா4க3 ஏவாகி2ல பு4வனா தயா
த்3ருஷ்யதே த்ரயம்ச’கல்பம்
பூ4யிஷ்ட2ம் ஸாந்த்3ர மோதா3த்மக முபரி
ததோ பா4தி தஸ்மை நமஸ்தே || ( 99 – 9 )


ஹே அனந்த! தாங்கள் மூவுலகமாகிய உருவத்தைத் தரித்தபோதிலும்,
அம்மூவுலகங்களில் இருந்து வெளிபட்ட சுத்த ஞான ஸ்வரூபியாகவும் இருக்கின்றீர்கள். எது எல்லாம் இங்கு இருக்கின்றதோ அது எல்லாம் தங்களுடைய மகிமை தான். தங்களுடைய நான்கில் ஒரு பாகமே இந்தப் பிரபஞ்சமாகக் காணப்படுகிறது.
முக்கால் பாகம் பிரம்மாண்டத்துக்கும் மேலே பரமானந்த ரூபமாக விளங்குகிறது. அத்தகைய அனந்த ரூபியான உமக்கு என் நமஸ்காரம்.
( 99 – 9 )
 

த3ச’கம் 99​

வேத3 ஸ்துதி

அவ்யக்தம் தே ஸ்வரூபம் து3ரதி4க3மதமம்
தத்து சு’த்3தை4க ஸத்வம்
வ்யக்தஞ்சாப்யே ததே3வ ஸ்புட மம்ருத
ரஸாம்போ4தி4 கல்லோல துல்யம்
ஸர்வாத் க்ருஷ்டாம பீ4ஷ்டாம் ததி3ஹ
கு3ணரஸேனைவ சித்தம் ஹரந்தீம்
மூர்த்திம் தே ஸம்ச்’ரயேஹம் பவனபுரபதே
பாஹிமாம் க்ருஷ்ண ரோகா3த் || (99 -10)


எந்த ஒரு இந்திரியத்திற்கும் புலப்படாத தங்களின் நிர்குண ஸ்வரூபமானது பிரயத்தனப்பட்டும் அறிய முடியாததாகவே இருக்கிறது.
சுத்த சத்துவ ரூபமான சகுண ஸ்வரூபமோ எனில் எளிதில் அறியக் கூடியதாக இருக்கிறது. மேலும், பிரகாசிக்கின்ற ஸ்ரீ கிருஷ்ணன் முதலிய சகுண ஸ்வரூபமே பிரம்மானந்தம் ஆகிய சமுத்திரத்தின் அலைகளுக்கு ஒப்பனதாக இருக்கிறது.
ஆகையால் இவ்வுலகில் , எல்லாவற்றையும் காட்டிலும் மிகவும் மேன்மையானதும், பிரியமானதும், பக்த வாத்சல்யம் போன்ற குணங்களின் இனிமையால் மனத்தைக் கவருவதும் ஆகிய தங்கள் மூர்த்தியை நான் ஆசிரயிக்கிறேன். ஹே கிருஷ்ணா! குருவாயூரப்பா! என்னை சமஸ்த ரோகங்களில் இருந்து காப்பாற்ற வேண்டும் ( 99 – 10 )
 

Latest posts

Latest ads

Back
Top