• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

குறியாகக்கொண்டு குலமளித்த நாயகனைப்
பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம்?
பத்திரகிரியார்.

அண்டத்தில் உள்ள எல்லாமே புறப்பட்ட இடத்தை மறுபடியும்
சென்றடைவதையே குறியாகக் கொண்டிருக்கின்றது.

கடலில் இருந்து புறப்படும் நீராவி மேகமாகி, மழையாகி,
நதியாகி மீண்டும் கடலையே சென்று அடைகின்றது.

கடவுளிடமிருந்து பிரிந்து வந்து உலகில் பிறந்தவர்கள் நாம்!
மீண்டும் கடவுளையே சென்று அடைவதை நமது குறிக்கோளாகும் .
 
எத்தனையோ அண்டத்து இருந்தவர்கள் எத்தனைபேர்
அத்தனை பேர் உண்டாலும் அணுவும் குறையாண்டி.
பத்திரகிரியார்.

உலகம் முழுவதற்கும் நல்ல குடி நீரைக் கொடுப்பது கடல் நீர்.
எனினும் கடல் நீர் கொஞ்சமும் அளவில் குறைவதில்லை.
உயிர்களுக்கு வேண்டியவற்றை எல்லாம் இறைவன் தருகின்றான் .
என்றாலும் இறைவன் அணுவளவும் தன் சக்தியில் குறைவதில்லை.
 
[h=1]Om Purnamadah Purnamidam - in sanskrit with meaning - mantra from Upanishad[/h] ॐ पूर्णमदः पूर्णमिदं


Om Purnamadah Purnamidam


nature1.JPG


ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पुर्णमुदच्यते
पूर्णश्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥
ॐ शान्तिः शान्तिः शान्तिः ॥

Om Puurnnam-Adah Puurnnam-Idam Puurnnaat-Purnnam-Udacyate
Puurnnashya Puurnnam-Aadaaya Puurnnam-Eva-Avashissyate ||
Om Shaantih Shaantih Shaantih ||

Meaning:
1: Om, That is Full, This also is Full, From Fullness comes that Fullness,
2: Taking Fullness from Fullness, Fullness Indeed Remains.
3: Om Peace, Peace, Peace.

Om Purnamadah Purnamidam - in sanskrit with meaning - mantra from Upanishad
 
சித்திநெறி கேட்டல் செகமயக்கம் சன்மமற
முத்திநெறி கேட்டல் முறைகாண் பராபரமே.
தாயுமானவர்.

இறைவா! உன்னுடைய சிருஷ்டிகளில் உள்ள விந்தைகளைக் கண்டு மயங்கி நிற்காமல்
நான் எப்போதும் உன்னோடு இணை பிரியாது இருப்பதையே வேண்டி நிற்கிறேன்..
 
ஆவியோடு காயமழிந்தாலும் மேதினியில்

பாவி என்று நாமம் படையதே - மேவியசீர்

வித்தார முங்கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே

செத்தாரைப் போலத் திரி.
பட்டினத்தார்.


உடலை உறுதிப் படுத்துவதற்கும் உள்ளத்தைத் தெளிவு படுத்துவதற்கும் தேவை நல்ல உறக்கம்.

பழுதடைந்த உடலைச் சீர் செய்து கொள்வதற்கும், புதிய சூழ்நிலையை உருவாகிக் கொள்வதற்கும் தேவை ஒரு புதிய உடல்.

வாழ்ந்து கொண்டு இருக்கும் போதே மாய்ந்து போனவன் போல யார் இருக்கின்றானோ அவனே ஞானத்துக்குத் தகுதி வாய்ந்தவன்.

மனிதனின் முன்னேற்றத்துக்கு வாழ்வைப் போலவே சாவும் உதவுகின்றது என்பது திண்ணம்.
 
The story I now goes on similar lines but makes more sense.
A blind man would be walking carrying a lantern.
Another man who came from the opposite direction asked him,
"You can't see even with light. Then why did you bring one?"
The blind man would reply,
"It is for people like you so that you don't push me down due to the darkness"
 
நித்தியமொன் றில்லாத நீர்க்குமிழி போன்றவுடற்

கித்தனைதான் துன்பமுண்டோ என்னே பராபரமே.

தாயுமானவர்.


இறைவா நீ நீர். நான் அதில் தோன்றியுள்ள வெறும் ஒரு நீர்க்குமிழி.

நிலையற்ற என்னுடைய வடிவத்தில் பற்று வைக்காமல்

உன் ஸ்வரூபத்தையே எப்போதும் பற்றியிருப்பேனாகுக!

நாம, ரூப பேதங்களில் மயங்கி நிற்கின்றோம் நாம்.

நம் ரூபம் ஓயாமல் மாறிக் கொண்டே இருக்கின்றது.

அதனுடன் நம் நாமங்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.

உண்மைப் பொருள் இந்த நாம ரூப பேதங்களால் மாறுவதில்லை.

நீர்க்குமிழி போன்ற நாம ரூபங்களை ஒதுக்கிவிட்டு

நீர்போன்ற உண்மைப் பொருளைப் பற்றிக் கொள்ள வேண்டும்.
 
சுவர்க்கம், நரகம்!

12.jpg


சுவர்கமும் நரகமும் எப்படி வேறுபடும்?
அவற்றுள் என்ன பேதம் அறிவீரா?

சுவர்க்கமும் நரகமும் வேறுபடுவது
அவற்றுள் வசிக்கும் ஆத்மாக்களாலே!

சுவர்க்கம் நரகம் இரண்டையுமே
சுற்றி வந்து ஒருவர் பார்த்தபோது,

இரண்டில் உள்ளவர்களின் நிலையும்
இருந்தது ஒரு போலவே, விந்தை!

கையுடன் சேர்த்துக் கட்டி இருந்தனர்
கனத்த நீண்ட மரக் கரண்டி ஒன்று.

எதிரில் அறுசுவை உணவு இருந்தும்,
எடுத்துத் தாமே உண்ண இயலாது!

நரகத்தில் வசிப்போர் உணவின்றி
நானா இன்னல்கள் அடைத்தாலும்,

சுவர்க்கவாசிகள் உணவு உண்டு,
சுகமாகவே இருந்து வந்தனர்!

எப்படி இது சாத்தியம் என வியந்தால்,
இப்படித்தான் எனச் செய்து காட்டினர்.

சுவர்க்கவாசி ஒவ்வொருவரும் தம்
எதிரே உள்ளவருக்கு ஊட்டிவிட்டார்.

நரகவாசிகள் நவின்றதோ இப்படி!
“நான் ஏன் ஊட்டிவிட வேண்டும்?

பசியுடன் நான் இருப்பது போலவே,
பசியுடன் அவனும் இருக்கட்டுமே!”

நரகமும் சுவர்க்கமும் நமது மனங்களே!
நரகமும் சுவர்க்கமும் வெளியே இல்லை.

நாலு பேருக்கு உதவுவதுதான் சுவர்க்கம்.
“நான்! எனது!” என்றே வாழ்வது நரகம்.


வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
I heard it in a different way. Some people were sitting around a table
for eating and they were lean and sick. They appeared to be very hungry.
All of them were having spoons which had very long handles and that were
fastened to their arms and hence each one found it impossible to reach
into the pot and take a spoonful; because the handle was too longer than
their arms and that they could not get the spoons back into their mouths.
 
Excerpts from an article

In Hinduism, with its emphasis on reincarnation, the concept of Heaven is not as prominent.
While heaven is temporary (until the next birth), the permanent state that Hindus aspire is Moksha. Moksha is seen as the soul's liberation from the cycle of life and death, a re-establishment in one's own fundamental divine nature and may include union with or joining God. Entry into heaven (Swarga logam) or hell (Narakam) is decided by the Lord of death Yamaraja and his karmic accountant, Chitragupta, who records the good and bad deeds of a person during his lifetime. It must be noted that Lord Yama and Chitragupta are subordinate to the Supreme Lord Ishwara (God) and work under his directions. Entry into heaven is only dependent on one's actions in the previous life and is not restricted by faith or religion. The ruler of heaven, where one enjoys the fruits of one's good deeds, is known as Indra and life in that realm is said to include interaction with many celestial beings (Gandharvas).


In Hinduism, there are contradictions as to whether or not there is a Hell (referred to as 'Narakam' ). For some it is a metaphor for a conscience. But in Mahabharata there is a mention of the Pandavas and the Kauravas going to Hell. Hells are also described in various Puranas and other scriptures. Garuda Purana gives a detailed account on Hell, its features and enlists amount of punishment for most of the crimes like modern day penal code. It is believed that people who commit 'paapam' (sin) go to Hell and have to go through the punishments in accordance with the sins they committed. The God Yamaraja, who is also the God of death, is the king of Hell. The detailed accounts of all the sins committed by an individual are supposed to be kept by Chitragupta who is the record keeper in Lord Yama's court. Chitragupta reads out the sins committed and Lord Yamaraja orders the appropriate punishments to be given to the individuals. These punishments include dipping in boiling oil, burning in fire, torture using various weapons etc. in various Hells. Individuals who finish their quota of the punishments are reborn according to their karma. Generally, all created ones are imperfect and thus have at least one sin to their record, but if one has led a generally pious life, one ascends to Heaven, or Swargam after a brief period of halt in Hell.

Balasubramanian
 
I heard it in a different way. Some people were sitting around a table
for eating and they were lean and sick. They appeared to be very hungry.
All of them were having spoons which had very long handles and that were
fastened to their arms and hence each one found it impossible to reach
into the pot and take a spoonful; because the handle was too longer than
their arms and that they could not get the spoons back into their mouths.

STILL a person can feed another person sitting opposite to him far away.
No need to fold the hand at the elbow.
People can help one another and all can eat.
 
மின்னனைய பொய்யுடலை மெய்யென்று நம்பிஐயோ

நின்னை மறக்கை நெறியோ பராபரமே.

தாயுமானவர்.

மின்னல் போலத் தோன்றி மறையும் உடலை சாஸ்வதம் என்று எண்ணிக் கொண்டு சாஸ்வதமான இறைவனை மறந்து வாழ்வது எவ்வளவு அறிவின்மை ஆகும்!

காலத்தை வீணாக்காமல் சரியான பாதையில் போகின்றவர்கள் மட்டுமே
தாம் செல்ல வேண்டிய இடத்தைச் சென்று அடைவர்.

நாம் அனைவரும் பரம்பொருளிடம் யாத்திரை செல்ல வேண்டியவர்கள்.
அதை மறந்துவிட்டுப் பாதை மாறி நடந்தால் அவனை அடைவது எங்ஙனம்?
 
யார் துறவி?





உலகினைத் துறந்தனர் இருவர்;
உறவில் கணவன் மனைவியர்.

கானகம் ஒன்றில் இருவரும்
ஏகும்போது கண்டான் கணவன்,

மின்னும் வைரக்கல் ஒன்றை!
என்ன ஒளிக் கற்றைகள், ஆஹா!

பின்னே வரும் மனைவி அந்த
மின்னும் வைரத்தைக் கண்டால்,

இன்னும் வைராக்கியம் பெறாமல்
என்ன சொல்வாளோ? செய்வாளோ?

பெண் மனதில் ஆசை வைரத்துக்கும்,
பொன்னுக்கும் மறைந்து விடுமா?

நொடியில் குனித்து எடுத்தவன்,
உடையில் மறைப்போமா அல்லது

மண்ணில் புதைப்போமா அதைக்
கண்ணுக்குத் தெரியாமல், என்று

தவிக்கும் போது மனைவி கேட்டாள்,
தலையில் ஓங்கி அடித்தாற்போல,

“சிறு கல் ஒன்றையும், வைரத்தையும்
ஒரு போல் எண்ண முடியாத நீங்கள்

சந்நியாசி ஆக விரும்புவானேன்?
சம்சாரத்தை வீணே துறப்பானேன்?”

“என்னைக் காட்டிலும், ஒரு காலத்தில்
பொன்னை விரும்பிய பெண்ணே மேல்!”

வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி.
 
வல்லமையே காட்டுகின்ற மாமாயை நானொருவன்

இல்லையெனின் எங்கே இருக்கும் பராபரமே.

தாயுமானவர்.


பரம்பொருள் நமக்கு உலகமாகக் காட்சி தருகின்றார்
ஞானம் பெற்றவர்களுக்கு அவர் உள்ளபடிக் காட்சி தருகின்றார்.

பிரபஞ்சமாகத் தன்னைக் காட்டிக் கொள்வதே இறைவனின் இயல்பு.
இதையே நாம் மாயை என்று கூறுகின்றோம்.

மாயையைக் கடந்து அவனை உள்ளபடி அறிந்து கொள்வதற்கும்
அவனே நம் மீது கருணை புரியவேண்டும்.
 
மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

(திருமூலர்....திருமந்திரம்)
 
[h=1]இன்பமயமே![/h]


பானை ஒன்று வேண்டும் நமக்குப்
பரமாத்மாவைப் புரிந்து கொள்ள.

பானைக்கும், அந்தப் பரமனுக்கும்
பாரில் என்ன தொடர்பு கூறும்?

மண்ணை நீரில் குழைப்பதனால்;
மண்ணும், நீரும் மிகவும் தேவை.

காற்றில் உலரவைப்போம்; எனவே
காற்றும் மிகவும் அவசியமானதே.

காய்ந்தால் மட்டும் போதாது;
வெந்தால்தான் உறுதி பெறும்.

எரியும் நெருப்பில் இட்டு, அதைக்
கரியாமல் சுட வைப்போம் நாம்.

பானைக்குள் ஆகாசம் உள்ளதைப்
பாமரனும் கூட அறிந்திடுவான்.

ஐம்பூதங்களின் உதவி இன்றியே,
அமையாது ஓர் அழகிய பானை!

ஐம்பூதங்களின் உதவி இன்றியே,
அமையாது உலக ஸ்ருஷ்டியுமே.

மாறுபாடுகளும் உள்ளன என்பதை
மறுப்பதற்கில்லை எனக் காண்போம்.

பானை செய்யும் களிமண் வேறு;
பானை செய்யும் குயவன் வேறு;

பானை என்பது முற்றிலும் வேறாம்.
பானை, குயவனோ, மண்ணோ அல்ல.

பானைக்கும், பரமாத்மாவுக்கும்
ஆன பேதங்கள் இவைகளே ஆம்.

அவனே இங்கு களிமண் ஆவான்,
அவனே இங்கு குயவன் ஆவான்.

அவனே இங்கு பானையும் ஆவான்.
அவனே மூன்று பொருளுமாவான்.

செயல், செய்பவன், செய்யப்படும்
பொருள் அனைத்தும் இங்கு, அவனே.

மனத்தில் இதை நினைவுகொண்டால்,
அனைத்துலகமும் இனி இன்பமயமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
மஹாளய பக்ஷம்.

முதன் முதலில் பிரபஞ்சத்தில் தோன்றிய ஆதிமூலச் சூரிய கிரகமும், ஆதிமூலச்சந்திர கிரகமும் இணைகின்ற கிரகமண்டல சங்கமத்தில் தோன்றுவதேமஹாளயபூஷித லோகமாகும்.

இங்குதான் மஹாளயபட்சத்தை பெருந் திருவிழாவாக தேவர்களும் பித்ருக்களும்கொண்டாட...ுகிறார்கள். அதாவது, நமது மூதாதையர்களது பித்ரு லோகங்களில்கொண்டாடப் படுகின்ற பிரம்மோற்சவமே மஹாளய பட்சமாகும்.

பூலோகத்தில் நாம் அளிக்கின்ற தர்ப்பணத்தில் எழுகின்ற தர்ப்பண நீரைக் கொண்டு,பித்ரு லோகங்கள் பலவற்றிலும், பித்ருக்களும் பித்ரு கணங்களும் பித்ருபத்தினிகளும் கலச பூஜை செய்து, அளப்பரிய ஆசீர்வாதப் பலன்களைப்பெறுகின்றனர்.

புரட்டாசி அமாவாசையன்று சகல லோகங்களிலும் இருக்கும் மஹரிஷிகள்,தேவர்கள்மற்ற எல்லா ஜீவன்களும் பூலோகத்திற்கு வந்து பித்ரு தர்பணம்செய்வதாகச் சொல்லப்படுகிறது.

நமது முன்னோர்கள் மற்றொரு பிறவி எடுத்தாலும்,நாம் செய்யும் சிராத்தம்தர்பணம் போன்றவை ஸ்ரீவிஷ்ணுவுக்குப் ப்ரீதியாகிவிடுவதாகவும்அமாவாசையில் மஹாளய அமாவாசை மிகவும் குறிப்பிடத்தக்கது.

மஹாளய பட்சம் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் பவுர்ணமிக்குஅடுத்த நாளான பிரதமை முதல் அமாவாசை வரை 15 தினங்களுக்குஇறந்தபித்ருக்கள் பூமிக்கு வருகிறார்கள் என்று நம்பப்படுகிறது.
இறந்து போனவரின் திதி தெரிந்தால் அந்த திதி தினத்தன்றும், தெரியாவிட்டால்மஹாளய அமாவாசை தினத்தன்றும் பித்ருக்கள் நற்கதி அடைய பூஜைசெய்யவேண்டும் என்று பெரியோர்களால் கூறப்பட்டுள்ளது.

மஹாளய அமாவாசையின் போது பிரமாணர்கள் சிறப்பான முறையில்தர்ப்பணம்செய்வார்கள்.
மஹாளய அமாவாசை தினத்தன்று பித்ருக்கள், குறிப்பாக ஆயுதம்மூலமாககொல்லப்பட்டோ, தற்கொலை செய்து கொண்டோ, அல்லது விபத்துமூலமாக அகாலமரணடைந்து போன பித்ருக்களுக்கு முக்தி கிடைக்க வேண்டும்என்பதற்காக பூஜைசெய்யும் நாளாகும்
 
தானந் தவந்தருமஞ் சந்ததமுஞ் செய்வர்சிவா

ஞானந் தனையணைய நல்லோர் பராபரமே.

தாயுமானவர்.

யோகம், பக்தி, ஞானம் என்னும் முக்கனிகளை உனக்குப் படைத்து
உன்னை வணங்குவதற்கு எனக்கு அருள் புரிவாய் இறைவா!

மனம், மொழி, மெய் என்னும் முக்கனிகளை
உனக்கு அர்ப்பணிக்க எனக்குக் கற்றுக் கொடு!

தானம், தருமம், தவம் என்னும் முக்கனிகளால்
உன்னை அடையும் வழியை எனக்குக் கற்றுக் கொடு.
 

Latest ads

Back
Top