• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable Quotes Part II

1.கசகசா சில திண்பண்டங்களில் ருசிக்காக மட்டும் சேர்க்கப்படுவதில்லை. இது தேகத்திற்கு குளிர்ச்சி தரும் மருத்துவ குணம் கொண்டது. எச்சரிக்கை இதை அதிகம் உண்டால் மயக்கம் வரும்.
2.ஓயாது அழும் குழந்தைகளுக்கு கசகசாவை மைபோல் அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறையும்.
3.10 கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் இவைகளை சேர்த்து அரைத்து அம்மை விழுந்த இடத்தில் தடவினால் அம்மை வந்த தடம் மறைய தொடங்கும்.
4.வயிற்றுப்போக்கு ஏற்படும்பொழுது சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும். மோர்/ நீர்மோர் (Buttermilk):
தயிரை விடச் சிறந்தது மோர். மோர் ஆகக் கடைந்து குடியுங்கள் சளி பிடிக்காது. மோர் சிறந்த பிணிநீக்கி.
எத்தனைதான் கலர்க்கலரான குளிர்பானங்கள் மார்கெட்டில் வந்தாலும், இரசாயனம், செயற்கை சுவை மற்றும் நிறம் (Artificial flavour, Artificial colour) கலக்காத இந்த நீர்மோருக்கு அவையெல்லாம் இணையாகுமா? வெண்ணெய்ச்சத்து சிலுப்பி நீக்கப்பட்ட இந்த நீர்மோர் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், ஜீரண சக்தியை அதிகரிக்கவல்லது. பசியின்றி வயிறு ‘திம்மென்று’ இருக்கும்போது இஞ்சி கலந்த இந்த நீர்மோரை ஒரு டம்ளர் பருக அரைமணி நேரத்தில் நல்ல பசியைத் தூண்டிவிடும். கோடைகாலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு குளுகுளுவென மோர் கொடுத்து உபசரிப்பது நம் தமிழர்களின் பண்பாட்டில் ஒன்றல்லவா? மோரில் பொட்டசியம், வைட்டமின் B12, கால்சியம், ரிபோப்ளேவின் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் நிறைந்துள்ளது. நீர்மோர் நான்கு வித்தியாசமான சுவைகள் (புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு) அடங்கியது. மலிவானது. எங்கள் ஊரில் வெயில் காலத்தின்போதும், கோவில் திருவிழா நேரங்களிலும் அமைக்கப்படும் தண்ணீர் பந்தலில் பொதுவாக நீர்மோரும், பானாக்கமும் வழங்குவார்கள். இந்த இரண்டு பானங்களில் அறுசுவையும் அடங்கிவிடும். அறுசுவை உணவு நமது உடலில் சேரும்போது உடல் கொண்ட மொத்த களைப்பும் நீங்கி தனி புத்துணர்ச்சி கிடைத்துவிடும். மோர் தயாரிக்க..
தேவையான பொருட்கள்:
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1 ½ கப்
கறிவேப்பிலை – 1 ஆர்க்கு (பொடியாக நறுக்கியது.)
மல்லித்தழை – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
இஞ்சி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது.)
பச்சைமிளகாய் – அரைமிளகாய் அளவு- 2 கப் மோருக்கு. (காரம் உங்கள் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளவும்.)
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
ஒரு பெரிய பாத்திரத்தில் தயிரை ஊற்றவும். இதனுடன் தண்ணீர் சேர்த்து தயிர் கடையும் மத்து கொண்டு சிலுப்பிவிடவும். கட்டிகள் இல்லாமல் தயிர் நன்றாக கரைந்துவிடும். தயிரில் இருக்கும் வெண்ணெய்ச் சத்தும் தனியே பிரிந்துவிடும். இதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை, இஞ்சி, பச்சைமிளகாய் தேவையானஅளவு உப்பு சேர்த்து கலக்கவும். சுவையான இந்த நீர்மோரை டம்ளரில் ஊற்றி பருக அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்பு:
வெயில் காலத்தில் மோர் நிறைய தயாரித்து ப்ரிட்ஜில் வைத்துக்கொண்டு குழந்தைகளுக்கு தண்ணீருக்கு பதிலாக மோர் கொடுக்கலாம். உடல் சூட்டை தணிக்கும்.
கோடை காலத்தில் ப்ரிட்ஜில் வைத்தாலும் மோர் புளித்துவிடும். அதற்குத் தயிரிலிருந்து எடுத்த வெண்ணையை அந்த மோர் தீரும்வரை, மோரிலேயே வைத்திருந்தால் மோர் கடைசிவரைக்கும் புளிக்காமல் இருக்கும்.
 
கெட்டவழி ஆணவப்பேய் கீழாக மேலான
சிட்டருளைப் பூசை செய்வார் பராபரமே.
தாயுமானவர்.


சூரிய ஒளி எப்போதும் எங்கும் நிறைந்திருக்கிறது.
எனினும் மூடி பனி அதை மூடி மறைத்து விடுகிறது,

நாம் எப்போதும் இறைவன் சன்னதியிலேயே இருக்கின்றோம்.
எனினும் ஆணவமலம் குறிக்கிட்டு இறைவனையே மறைத்து விடுகிறது.

சூரிய வெப்பத்தால் மூடு பனி விலகுவது போல
இறைவன் அருளால் ஆணவமலம் அகல வேண்டும்
 
[h=5]"At the end of each day, you should play back the tapes of your performance. The results should either applaud you or prod you." -- Jim Rohn[/h]
 
It will be better to plan the activities of the next day before falling asleep.
We can compare as to how much of the activities planned for today got done.
That way we can keep track of the future, present and the past.
 
அந்தக்கரணம் அடங்கத் துறப்பதுவே

எந்தத் துறவினும் நன் றெந்தாய் பராபரமே.
தாயுமானவர்.


உலகத்தைக் காண உதவும் அந்தக்கரணங்களை
உன்னிடம் திருப்பி உன்னையே காண்பேன் ஆகுக.
 
There is a sort of magnet in some people's heart which
will easily attract their friends by way of nice interaction,
smiling behaviour, hospitality, etc. If that magnet continues
to be of unselfishness,thinking of others in the right direction
continues and learn to live for others in times of crisis, troubles,
etc, the true friends of them will certainly live for them.
 
ஐவரொடுங் கூடாமல் அந்தரங்க சேவைதந்த

தெய்வ சிவமே பராபரமே!

தாயுமானவர்.


காலமெல்லாம் உலக வாழ்விலேயே மூழ்கி இருத்தல் கூடாது.

இடையிடையே சற்று அருள் நாட்டம் கொள்ள வேண்டும்.

அப்படிச் செய்பவர்கள் பிறவிப் பெருங் கடலில்

முற்றிலுமாக மூழ்கிவிட மாட்டார்கள்.

விளையாட்டு பொம்மைகளை வீசி எறிந்து விட்டு

தாயை நாடும் அறிவுள்ள குழந்தையைப் போல

உலகப் பொருட்களை உதறி விட்டு உன்னை நாடுவேனாகுக !
 
1236628_525032554249423_507956445_n.jpg
 
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே!" என்பார்கள்

இவை மட்டும் அல்ல. உலகில் நாம் காண்பவை எல்லாம்

கொண்டாடும் இடத்தில தான் மதிப்புப் பெறுகின்றன!
 
தேடாத தேட்டினரே செங்கைத் துலாக் கோல்போல்
வாடாச் சமநிலையில் வாழ்வார் பராபரமே.
தாயுமானவர்.


ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு இயல்பு நிலை உண்டு.
அதை அடையும் வரையில் அதற்கு ஓய்வு இல்லை.
அதுவரை அதற்கு மன நிம்மதியும் இல்லை.
நீர் கடலைச் சென்று அடையும் வரை தடுமாறுகிறது.
மனிதன் தெய்வத்தை அடையும் வரையில் தத்தளித்துக் கொண்டு தடுமாறுகின்றான்.
ஓடிய தேர் தன் நிலைக்குத் திரும்புவது போல நானும்
உன்னை அடைந்து என் இயல்பு நிலைக்கு வருவேன் ஆகுக.
 
Master Shifu, in Kung Fu Panda would admit at the very end of the movie that
finally he found the inner peace.
That is what every man and woman seeks all his/ her life
with or without success.
Once he/ she finds it, NOTHING else matters anymore.

th
 
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து.

திருக்குறள்.

ஒவ்வொரு கலையும் நமக்கு நன்கு உணர்த்துகின்றது

கடவுள், தானே உலகாகப் பரிமளித்துக் கொண்டிருப்பதை.

கற்க வேண்டிய முறையில் நாம் எந்தக் கலையைக் கற்றாலும்

அதுவே நம்மை மெய்ப்பொருளிடம் அழைத்துச் சென்று விடும்.
 
எத்தாற் பிழைப்பேனோ எந்தையே நின்னருட்கே

பித்தனேன் மெத்தவுநான் பேதை பராபரமே.

தாயுமானவர்.


பாரில் உள்ளவர்களுக்கு வெவ்வேறு பொருட்களின் மீது பித்துப் பிடித்து
அவற்றைத் தேடிக் கொண்டு அலைந்து திரிகின்றார்கள்.
எனக்கு உன்னையே அடையும் பித்துப் பிடிக்க வேண்டும் என் ஐயனே!

உயிர்களை உனக்கு உரிமையாக்கி கொள்வதில் நீ பித்துப் பிடித்தவனாக இருப்பதால்
உனக்குப் பித்தன் என்ற ஒரு பெயர் வந்து அமைந்தது.
எனக்கு உன்னை அடையும் பித்துப் பிடித்தால் முன்னேற்றம் வெகு விரைவாகிவிடும்.
 
A genuine friend listens to both joy and sorrow, advises freely
the justifiable things, comes forward to help or assist readily,
takes all things patiently and shoulders problems, if need be,
and defends courageously too and continues to be a friend
under any circumstances.
 
Good character is not formed in a week or a month. It is created little by little, day by day. Protracted and patient effort is needed to develop good character."
[Heraclitus]
 

Latest ads

Back
Top