தமிழா! தமிழா!
பருதி தோன்றிய வானம் போல்
நின் பார்வை பட்டவுடன் ஆங்கே
நிதம் செழித்து வளர்ந்திடும் தமிழ்.
என்றும் அழியாப் புகழுடனே நீ
வரவேண்டும் - தமிழ் வாழ-இனம்
தழைக்க உன் உழைப்பினைத் தரவேண்டும் !
ஆயிரம் பொய்தனை மெய்போல் பேசியே
ஆரவார -ஆர்ப்பாட்ட கூச்சலிட்டே இங்கே
ஓட்டுக்கு நீட்டுவார் ஒரு நோட்டை.
உன் ஓட்டை தேட்டை போடாவே
அவர் செயும் ஜெ(க)ஜால வித்தைகள்
ஏ அம்மா ! எத்தனையோ கோடி!
வீட்டுக்கு ஒரு மாடு என்பார் ..
மேய்க்க நல்லதொரு ஆடு என்பார் !
தமிழா! தமிழா! புரிந்து கொள்வாய்..
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
கல்வி மட்டும் உனக்கு கிடையாது-
என்றே சொல்லாமல் சொல்வதை !
சொல்லாமல் செயும் பல நலத்திட்டங்கள் -
நாடும் உன் வீடும் வாழ !
நலமுடனே வாழ-இங்கு உண்டு .
ஆறாம் முறை தமிழ் ஆழ
மறந்துவிடாதே நம் அண்ணா தந்த
உதய சூரியன் சின்னத்தை என்றென்றும்.