(3)
தலைமை அமைச்சர் :
பார் புகழும் பல்லவர் ஆட்சியிலே மக்களுக்கு குற்றம் குறை ஏதும் இல்லை!
நாடும் மக்களும் நலம் பல பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள் .
இராசவர்மன் :
அமைச்சரே நன்று சொன்னீர் .நீங்கள் கூறியது
முற்றிலும் உண்மை. நான் நகர் வளம் வரும்பொழுது மக்களின்
மகிழ்ச்சி ததும்பும் முகங்களைப் பார்த்தேன். பார்க்கும்பொழுதே
தெரிகிறது நம் ஆட்சியில் எந்த குறையும் இல்லை என்பது .
தலைமை அமைச்சர் :
தங்களின் தந்தையார் சிம்மவிஷ்ணு விட்டுச்சென்ற அறபணிகள்-
கலைப்பணிகள் தங்களின் சீரிய முயற்சியால் தொய்வின்றி நடந்து
வருவது கண்டு உள்ளம் உவகை கொள்கிறது
தலைமை அமைச்சர் :
அமைச்சர் பெருமானே நீங்கள் கூறியது கேட்டு
என் உள்ளம் பெரும் மகிச்சி கொள்கிறது...அது சரி ..
நம் தலைமை சிற்பி எங்கே? தங்களிடம் பேசிக் கொண்டே
தலைமை சிற்பியை மறந்துவிட்டேனே ..அழைத்து வாருங்கள்
அவரை என்று மாமன்னன் கூற தலைமை சிற்பி பணிவுடன்
மன்னர் முன் வந்து நிற்கிறார்.
தலைமை சிற்பி :
மாமன்னன் கலைப்பணி நீடூழி வாழ்க என்று கூறி மன்னரின்
முன் மெத்தப் பணிவுடன் நிற்கிறார்.
இராசவர்மன்:
தலைமை சிற்பியே தன்னிகரில்லா கலைங்கனே நின் கலை நீடு வாழ்க !
என்று கூறி தன் அருகில் அமரவைகிறான் மாமன்னன் .