1. வற்றாத பொய்கை
வற்றாத பொய்கை வளநாடு கண்டு மலை மேலிருந்த குமாரா
உற்றார் எனக்கு ஒருவருமில்லை உமையாள் தனக்கு மகனே
முத்தாடை தந்து அடியேனை ஆளும் முருஹேசன் என்றன் அரசே !
வித்தாரமாக மயில் மீதிலேறி வரவேணும் எந்தன் அருகே! …… 1
Lord Kumara who lives on the mountain looking upon the land of perennial water;
I have none who I can all as my own, oh son of Uma Devi!
You are the provider and the ruler of me, oh King MurugEsa!
I request you to come near me, mounted on your beautiful peacock.