• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sahasra nAma AvaLi

10. ஹே மஹேச்’வரா!​


s11

கௌ3ரிவிலாஸ ப4வனாய மஹேச்’வராய
பஞ்சானனாய சரணாக3த கல்பகாய |
ஸர்வாய ஸர்வஜக3தாமதி4பாய தஸ்மை
தா3ரித்4ர து3:க2 த3ஹனாய நம: சி’வாய ||

பார்வதி தேவியின் லீலைகளுக்கு இருப்பிடம் ஆனவனே!
எல்லோருக்கும் ஈஸ்வரனே! ஐந்து முகங்கள் உடையவனே!
தஞ்சம் அடைந்தவர்களுக்கு விரும்பியவற்றை அளிக்கும் கற்பகவிருக்ஷம் ஆனவனே!
சம்ஹாரகனே! எல்லா உலகங்களுக்கும் அதிபனே! வறுமைப் பிணியைத் தீர்ப்பவனே!
சம்சாரம் என்னும் பெரும் துன்பத்திலிருந்து என்னைக் காத்தருள்வாய் ஜகதீசனே !
 

11. ஹே சி’வச’ங்கர!​


s12

அதி பீ4ஷண கடு பா4ஷண யமகிங்கர படலி
க்ருத தாட3ன பரிபீட3ன மரணாக3ம ஸமயே |
உமையாஸஹ மமசேதஸி யமசா’ஸன நிவஸந்
சி’வச’ங்கர சி’வச’ங்கர ஹர மே ஹர து3ரிதம் (10 )


எமனையே தண்டிக்கின்ற சிவசங்கரா!
மிகவும் பயங்கரமான எமதூதர்கள்
கர்ண கடூரமான வார்த்தைகளால்
திட்டியும் அடித்தும் என்னை வதைக்கையில்,
பார்வதி அன்னையுடன் கூட வந்து,
நீங்கள் என் சித்தத்திலிருந்து கொண்டு
என் பாவங்களைப் போக்குவீராகுக!

What a lovely picture!
Three gods sharing four eyes;
and YET it looks so beautiful.
 

12. ஹே பசு’பதே!​


s13

அஸாரே ஸம்ஸாரே நிஜ ப4ஜனதூ3ரே ஜட3தி4யா
ப்4ரமந்தம் மாமந்த4ம் பரமக்ருபயா பாதுமுசிதம் |
மத3ன்ய: கோ தீ3னஸ்தவ க்ருபணரக்ஷாதிநிபுண :
த்வத3ன்ய : கோ வா மே த்ரிஜக3தி ச’ரண்ய பசு’பதே || (11)


விவேகம் இல்லாதவர்களுக்கு நல்லறிவு அளித்துக் காப்பவரே!
தேஹம் முதலிய ஜடப் பொருட்களில் இருந்து வேறுபட்டவரே!
மாயையில் அகப்படாதவரே! உங்கள் பக்திக்கு வெகு தூரத்தில் இருப்பதும்,
இன்பம் அற்றதுமான சம்சாரத்தில் உழல்கின்ற குருடனான என்னைத்
தாங்கள் கருணையுடன் காப்பாற்றுவது உசிதம்.
என்னை விட தீனன் யார் உள்ளார்?
ஏழைகளை ரக்ஷிப்பதில் மிகுந்த சமர்த்தரும்,
சரணம் அடையத் தகுந்தவரும் என
மூன்று உலகில் உம்மை விட்டால்
எனக்கு யார் இருக்கின்றார்கள்?
 

13. ஸ்ரீ மாத்ருபூ4த!​


s14

ஸ்ரீச’ : ச’ர: கனக பூ4மித4ர: ச’ராஸ:
வாஸஸ்து ரூப்யசி’க2ரீ த4நத3: ஸகா2 தே |
த்வாம் ஆச்’ரிதஸ்ய மம கிம் ந து4நோஷி தை3ன்யம்
ஸ்ரீ மாத்ருபூ4த சி’வ பாலயமாம் நமஸ்தே || (12)


ஹே தாயுமான பரமேஸ்வரா! உமக்கு விஷ்ணுவே பாணம்;
மஹாமேருபர்வதமே தனுசு; உமது இருப்பிடம் வெள்ளி மலை;
உமது நண்பன் குபேரன்; உம்மையே சரணம் அடைந்த
என்னுடைய ஏழ்மையை ஏன் இன்னும் நீர் போக்கவில்லை?
உமக்கு என்னுடைய நமஸ்காரம். என்னை நீரே காத்தருள வேண்டும்!
 

14. ஹே ஜம்புகேஸ்வரா!​


s15

இந்த்3ராதி3 தி3க்பதி நிரங்குச’ பா4க்3ய ஹேதும்
சந்த்3ராதி ரம்ய ப4வதா3ஸ்ய ம்ருகா3யமாணம் |
இந்தீ3வரோ த3ர மனோஹரம் ஈச’தா3ஸே
ஜம்பூ3 பதே மயி நிதே4ஹி க்ருபாகடாக்ஷம் || (13)


ஹே ஜம்புகேஸ்வரா! இந்திரன் முதலான லோகபாலகர்களின்
தடையில்லாத பாக்கியத்துக்கு காரணமானதும்;
சந்திரனை ஒத்த அழகிய தங்கள் முகத்தில் மானை நினைவூட்டுவதும்,
கருநெய்தல் மலர்களை நிகர்த்த அழகுடையதும் ஆன தங்களின்
அருள் விழிகளை என் மேல் கடாக்ஷிக்க வேண்டும்.
 

15. ஸ்ரீ பார்வதி பரமேஸ்வர!​


s16

கலாப்4யாம் சூடா3லங்க்ருத ச’சி’ கலாப்4யாம் நிஜதப :
ப2லாப்4யாம் ப4க்தேஷு ப்ரகடித ப2லாப்4யாம் ப4வது மே |
சி’வாப்4யாமச்’தோக த்ரிபு4வன சி’வாப்4யாம் ஹ்ருதி3 புனர்
ப4வாப்4யாமானந்த3 ஸ்புரத3னுப4வாப்4யாம் நதிரியம் || (14)


சகல வித்யா ஸ்வரூபர்கள்;
கூந்தலில் அணியாக வைக்கப்பட்ட சந்திரகலையை உடையவர்கள்;
தமது சொந்தத் தவத்தின் பயனாகத் தோன்றியவர்கள் ;
தம் பக்தரிடம் பலவித பலதானங்களை பிரகடனம் செய்பவர்கள்;
மூன்று உலகங்களுக்கும் மங்கலத்தை அளிப்பவர்கள்;
மனதில் அடிக்கடித் தோன்றுபவர்கள்; ஆனந்தமயமாகப் பிரகாசிக்கும்
ஞான வடிவினர்களாகிய பார்வதி பரமேஸ்வரர்களுக்கு இந்த நமஸ்காரம்.
 

16. ஸ்ரீ மஹாதே3வ!​


s17

கரசரணக்ருதம் வா கர்மவாக்காயஜம் வா
ச்’ரவண நயனஜம் வா மானஸம் வாபராத3ம் |
விஹிதமவிஹிதம் வா ஸர்வமேதத் க்ஷமஸ்வ
சி’வ சி’வ கருணாப்3தே4 ஸ்ரீ மஹாதே3வ ச’ம்போ4|| (15 )


மங்களஸ்வரூபனே! கருணைக் கடலே! ஸ்ரீ மகாதேவா!
கரம், பாதம், வாக்கு, தேஹம், காது, கண், மனம்
இவற்றால் நான் செய்த அபசாரங்களையும்,
தவறான செய்கைகளையும் பொறுத்தருள்வீர்!

அந்யதா ச’ரணம் நாஸ்தி த்வமேவ ச’ரணம் மம |
தஸ்மாத் காருண்ய பா4வேன ரக்ஷ ரக்ஷ மஹேச்’வர || (16 )


ஹே பரமேஸ்வர! எனக்கு வேறு கதி இல்லை! நீயே துணை!
ஆகையால் என்னைக் கைவிடாது கருணை கூர்ந்து என்னைக் காப்பாற்றுவீர்!

 

அவளும் அணுவும்!​


0a

அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
அவளன்றி அவனாலும் அசையமுடியாது.


சாட்டை இல்லா பம்பரம் போல நம்மை
ஆட்டுவிப்பவள் அன்னை பராசக்தியே!

அவளே நமக்கு உறுதுணையாவாள்.
அவளே நமக்குப் பரகதியாவாள்.

அவளே நமக்குத் தாயும், தந்தையும்.
அவளே நமக்கு குருவும், இறையும்.

அவள் மலர்ப் பதம் பணிவோம்;
அவள் அருள் வேண்டி இத்தொடரில்.

ஐங்கரனும், ஆறுமுகனும் ஆகிய இரு
கண்மணிகளை வணங்கிய பின்னர்.

உங்கள் உண்மையுள்ள,
விசாலாக்ஷி ரமணி.
 

1. விநாயகாய நம :​


d1

க3ஜானனம் பூ4த க3ணாதி ஸேவிதம்
கபித்த2 ஜம்பூ3 பலஸார ப4க்ஷிதம் |
உமாஸுதம் சோ’க2 விநாச’ காரணம்
நமாமி விக்4னேச்’வர பாத3 பங்கஜம் ||(1)


யானை முகத்தை உடையவன்; பூத கணங்களால் சேவிக்கப்படுபவன்;
விளாம்பழம், நாவல் பழங்களின் சாரத்தை உண்பவன்;
துன்பங்கள் வராமல் பாதுகாப்பவன்; பார்வதி புத்திரன் ஆகிய
விக்னேஸ்வரனுடைய பாதத் தாமரைகளை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 

2. விநாயகாய நம:​

d2

மூஷிக வாஹன மோத3க ஹஸ்த
சாமர கர்ண விளம்பி3த சூத்ர |
வாமனரூப மஹேஸ்வர புத்ர
விக்4ன விநாயக பாத3 நமஸ்தே|| ( 2 )


மூஷிக வாஹனனே!
கையில் மோதகத்தைக் கொண்டுள்ளவனே!
சாமரங்களை ஒத்த செவிகளை உடையவனே!
அசைந்து ஆடும் பூணூலைத் தரித்தவனே!
வாமன ரூபனே! மகேஸ்வரனின் மகனே!
விக்னங்களைத் தகர்த்து எறிபவனே!
உன் திருவடிகளுக்கு என் நமஸ்காரங்கள்.
 

3. விநாயகாய நம:​


d3

ஏகத3ந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸந்நிப4ம் |
லம்போ3த3ரம் விசா’லாக்ஷம் வந்தே3ஹம் க3ணநாயகம்|| ( 3 )

ஒரு தந்தம் உடையன்; பெருத்த சரீரம் உடையவன்;
உருக்கின பொன்னின் காந்தியை உடையவன்;
தொங்கும் வயிற்றினன்; விசாலநேத்திரன்
ஆகிய கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்!
 

4. விநாயகாய நம:​


d4

அம்பி3கா ஹ்ருத3யானந்த3ம் மாத்ருபி4: பரிவேஷ்டி2தம் |
ப4க்தப் ப்ரியம் மதோ3ன்மத்தம் வந்தே3ஹம் க3ணநாயகம் || (4)

அம்பிகையின் மனதுக்கு இன்பம் அளிப்பவன்; மாதாக்களால் சூழப்பட்டவன்;
பக்தப்பிரியன்; மதோன்மத்தன் ஆகிய கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 

5. விநாயகாய நம:​


d5

ஸர்வவிக்4ன ஹரம் தே3வம் ஸர்வவிக்4ன விவர்ஜிதம் |
ஸர்வஸித்3தி4 ப்ரதா3தாரம் வந்தே3ஹம் க3ணநாயகம் || (5)


எல்லா விக்கினங்களையும் போக்கவல்லன்;
தன்னுடைய காரியங்களில் இடையூறு என்பதே இல்லாதவன்;
எல்லா சித்திகளையும் வழங்க வல்லவன் ஆகிய
கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 

6. விநாயகாய நம:​


d6

க3ணேச்’வரம் உபாஸ்மஹே க3ஜமுகம் க்ருபா ஸாக3ரம்
ஸுராஸுர நமஸ்க்ருதம் ஸுரவரம் குமாராக்3ராஜம் |
ஸுபாச’ஸ்ருணி மோத3க ஸ்புடித த3ந்த ஹஸ்தோஜ் ஜ்வலம்
சி’வோத்ப4வமபீஷ்ட2தம் ச்’ரிதததேஸ்ஸு ஸித்3தி4 ப்ரத3ம் || (6 )

யானை முகத்தோன்; கருணைக்கடல்; தேவர்களும்,
அசுரர்களும் வணங்குபவன்;
தேவர்களுள் ச்ரேஷ்டன்; குமரக்கடவுளுக்கு ஜேஷ்டன்;
பாசம், அங்குசம், மோதகம், முறிந்த தந்தம் ஆகியவற்றால்
பிரகாசிக்கும் கரங்களை உடையவன்; பரமசிவனின் மைந்தன்;
கோரினவற்றைத் தருபவன்; பக்தர்களின் அபீஷ்டங்களை
நிறைவேற்றுபவன் ஆகிய கணபதியை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 

Om Skandaya namah!​

e0


1. ஸுப்ரமண்ய ஸ்துதி​


e1

நீலகண்ட2வாஹனம் த்3விஷட்3பு4ஜம் கிரீடினம்
லோல ரத்ன குண்ட3ல ப்ரபா4பி4ராம ஷண்முக2ம் |
சூ’ல ச’க்தி த3ண்ட3குக்குடாக்ஷ மாலிகாத4ரம்
பா3லமீச்’வரம் குமார சை’ல வாஸினம் பஜே || (1)


மயில் வாஹனன்; பன்னிரு புஜங்களை உடையவன்; கிரீடம் தரித்தவன்; அசைந்து ஆடி ஜொலிக்கும் இரத்தின குண்டலங்களின் காந்தியில் அழகாக விளங்கும் ஆறு முகங்களை உடையவன்; சூலாயுதம், வேலாயுதம், கதாயுதம், சேவற்கொடி, அக்ஷ மாலை இவைகளைத் தாங்கியவன்; பால ரூபம் கொண்டவன்; குமர மலையில் எழுந்தருளி இருப்பவன் ஆகிய சுப்ரமண்யனை நான் பூஜிக்கின்றேன்.
 

2. ஸுப்ரமண்ய ஸ்துதி​

e3

வல்லிதே3வயானிகாஸமுல்லஸந்தமீச்’வரம்
மல்லிகாதி3தி3வ்ய புஷ்ப மாலிகா விராஜிதம் |
ஜல்லரீநிநாத3ச’ங்க வாத3னப்ரியம் ஸதா3
பல்லவாருணம் குமார சைல வாஸினம் பஜே || (2)

வல்லி, தேவயானையோடு கூடி விளங்குகின்றவன்;
மல்லிகை முதலான சிறந்த புஷ்ப மாலைகளை அணிந்தவன்;
ஜல்லரி, சங்கம் போன்ற வாத்தியங்களின் இசையில் பிரியம் உடையவன்;
தளிர் போன்ற சிவந்த நிறம் கொண்டவன்;
குமரமலையில் எழுந்தருளி இருக்கும் சுப்ரமணியனை நான் பூஜிக்கின்றேன்.
 

3. ஸுப்ரமண்ய ஸ்துதி​


e4

மயூராதி4ரூட4ம் மஹாவாக்யகூ3ட4ம்
மனோஹாரி தே3ஹம் மஹாசித்த கே3ஹம் |
மஹீதே3வதே3வம் மஹாதே3வபா3லம்
மஹாதே3வபா3லம் ப4ஜே லோகபாலம் || (3)


மயில் வாஹனத்தில் ஏறி அமர்ந்தவன்;
‘தத்வமஸி’ போன்ற மஹா வாக்கியங்களின் சூக்ஷ்மார்த்தமாக விளங்குபவன் ;
மனத்தைக் கவரும் அழகிய வடிவினை உடையவன் ;
மகான்களின் உள்ளங்களைத் தான் வாழும் ஆலயமாகக் கொண்டவன் ;
தேவாதி தேவன் ஆனவன்; வேதங்களின் உட்பொருளானவன்;
மகாதேவனின் புத்திரன் ; உலகைக் காப்பவன் ஆகிய
குமரக் கடவுளை நான் பூஜிக்கின்றேன்.
 

4. ஸுப்ரமண்ய ஸ்துதி​


e5

தேந்த்3ரியே நஷ்டஸம்ஜ்ஞே விசேஷ்டே
கபோ2த்3கா3ரி வக்த்ரே ப4யோத்கம்பிகா3த்ரே |
ப்ரயாநோண்முகே2 மய்யநாதே ததா3நீம்
த்3ருதம் மே த3யாளோ ப4வாக்3ரே குஹத்வம் || (4 )


கருணைக் கடல் ஆகிய குஹப் பெருமானே! ஐம்புலன்கள் ஒடுங்கி, அறிவு இழந்து, அச்சத்தால் அங்கம் நடுங்கி, காப்பவன் இல்லாமல், நான் மரணம் நெருங்குகையில் பரிதவிக்கும்போது, தேவரீர் விரைந்து என் முன் எழுந்தருள வேண்டுகின்றேன்.
 

5. ஸுப்ரமண்ய ஸ்துதி​


e2

க்ருதாந்தஸ்ய தூ3தே ஷு சண்டே3ஷு
கோபாத்3த3ஹச்சி2ந்தி4 பி4ந்தீ4தி மாம் தர்ஜயத்ஸு |
மயூரம் ஸமாருஹ்ய மா பீ4ரிதி த்வம்
புரச்’ச’க்திபாணிர் மமாயாஹி சீ’க்3ரம் || (5)

ஹே கருணாமூர்த்தியே! மரண காலத்தில் கொடிய யமதூதர்கள் வெட்டு, குத்து, கொளுத்து என்று என்னைப் பலவாறாக பயமுறுத்தும்போது; தாங்கள் விரைவில் மயில் வாகனமேறி, வேலாயுதம் தாங்கி, என் முன் காட்சி தந்து, எனக்கு அபயம் அளிக்க வேண்டும்.
 

6. ஸுப்ரமண்ய ஸ்துதி​


e6

ப்ரணம்யாஸக்ருத் பாத3யோஸ்தே பதித்வா
ப்ரசாத்3ய ப்ரபோ4 ப்ரார்த்தயேsநேகவாரம் |
ந வக்தும் க்ஷமோஹம் ததா3நீம் க்ருபாப்3தே4
ந கார்யந்தகாலே மனாக3ப்யுபேக்ஷா || (6)


கருணாகரனே! நான் மரணம் அடையும் தருவாயில் உம்மைப் பிரார்த்திக்கச் சக்தி அற்றவனாக இருப்பேன். ஆகையால் “அப்போது என்னைக் கைவிடாதீர்” என
இப்போதே உமது பாதங்களில் பலமுறை நமஸ்கரித்துக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

முருகன் சந்நிதியில் மனமுருகி இங்ஙனம் வேண்டுபவருக்கு அந்திமக் காலத்தில் அவன் உறுதியாக அபயம் அளிப்பான்.
 

Sree Lakshmi Devi​


b0

1. ஸ்ரீ லக்ஷ்மி ஸ்துதி​


b1

லக்ஷ்மீம் க்ஷீர ஸமுத்3ர ராஜதனயாம் ஸ்ரீ ரங்க3 தா4மேச்’வரீம்
தா3ஸீ பூ4த ஸமஸ்த தே3வ வநிதாம் லோகைக தீ3பங்குராம் |
ஸ்ரீமன் மந்த3 கடாக்ஷ லப்3த விப4வ ப்3ரம்மேந்த்3ர க3ங்கா3த4ராம்
த்வாம் த்ரைலோக்ய குடும்பி3நீம் ஸரஸிஜாம் வந்தே3 முகுந்த3ப்ரியாம் || (1)


நீ க்ஷீர சமுத்திரராஜனின் அருமைப் புதல்வி;
நீ ஸ்ரீ ரங்க க்ஷேத்திரத்தின் தலைவி;
தேவ மாதர்கள் உன் அடிமைகள்;
நீ உலகின் ஒளி விளக்கு;
பிரமன், இந்திரன், ருத்திரன் போன்றவர்கள்
உன் மந்த கடாக்ஷத்தால் ஐஸ்வர்யங்களை அடைகின்றனர் ;
மூவுலகின் தலைவி நீ; தாமரை மலரில் அமர்பவள் நீ;
முகுந்தனுக்கு பிரியமானவள் நீ. உன்னை நான் வணங்குகின்றேன்.
 

2. ஸ்ரீ லக்ஷ்மி ஸ்துதி​


b2

மாதர் நமாமி கமலே கமலாயதாக்ஷி
ஸ்ரீ விஷ்ணு ஹ்ருத் கமலவாஸிநீ விச்வமாத: |
க்ஷீரோத3யே கமலகோமள கர்ப்ப4கௌ3ரி
லக்ஷ்மீ ப்ரஸீத ஸததம் நமதாம் ச’ரண்யே || (2)


தாமரைப்பூவினில் வசிப்பவளே! தாமரைக் கண்களை உடையவளே! விஷ்ணுவின் இதயத்தைத் தன் இருப்பிடமாகக் கொண்டவளே! உலகின் தாயே! பாற்கடலில் உதித்தவளே! தாமரைப் பூவினை ஒத்த மென்மையான சரீரம் உடையவளே!
உன்னை வணங்குபவர்களை ரட்சிப்பவளே! மகாலட்சுமி தாயே!
நீ என்றும் எம்மை அனுக்ரஹிப்பாயாகுக! உன்னை நான் நமஸ்கரிக்கின்றேன்.
 

3. ஸ்ரீ லக்ஷ்மி ஸ்துதி​


b3

யா ஸா பத்3மாஸனஸ்தா விபுல
கடி தடீ பத்3ம பத்ராயதாக்ஷி
க3ம்பீ4ரா வர்தனாபி4: ஸ்தனப4ர
நமிதா சு’ப்ர வஸ்த்ரோத்தரீயா |
லக்ஷ்மீர் தி3வ்யைர் க3ஜேந்த்3ர
மணிக3ண க2சிதை: ஸ்நாபிதா ஹேமகும்பை3:
நித்யம் ஸா பத்3மஹஸ்தா மம
வஸ்து க்3ருஹே ஸர்வ மாங்க3ல்யயுக்தா || (3)


எந்த லக்ஷ்மிதேவி புதிதாக மலர்ந்த தாமரையில் அமர்ந்தவளோ, அழகிய விஸ்தாரமான இடுப்புப் பிரதேசத்தை உடையவளோ, தாமரை இதழை போன்ற அழகிய நீண்ட கண்களை உடையவளோ, கம்பீரமானதும் வட்டவடிவினதும் ஆன அழகிய நாபியை உடையவளோ, ஸ்தனபாரத்தில் கொஞ்சம் உடல் வளைந்தவளோ, வெண் பட்டு உடுத்தவளோ, தேவர் உலகின் யானைகளால் ரத்தினம் பதித்த குடங்களின் நீரில் அபிஷேகம் செய்யப்பட்டவளோ, தாமரை மலரைக் கைகளில் எந்தியவளோ, அந்த லக்ஷ்மி என்னுடைய இல்லத்தில் சர்வ மங்கலையாக வாசம் செய்யட்டும்.
 

Latest ads

Back
Top