பூ மன்னு மாது பொருந்திய மார்பன் * புகழ் மலிந்த
பா மன்னு மாறன் * அடி பணிந்துய்ந்தவன் * பல் கலையோர்
தாம் மன்ன வந்த இராமனுசன் * சரணாரவிந்தம்
நாம் மன்னி வாழ * நெஞ்சே! சொல்லுவோம் அவன் நாமங்களே
- (இராமனுச நூற்றந்தாதி – திருவரங்கத்தமுதனார்)
ஸ்ரீமாதாவ்ங்க்ரி ஜலஜத்வய நித்யசேவா
ப்ரேமா விலாசய பராங்குச பாதபக்தம்
காமாதி தோஷகரம் ஆத்ம பதாஸ்ருதாநாம்
ராமாநுஜம் யதிபதிம் ப்ரணமாமி மூர்த்நா.
- (யதிராஜவிம்சதி – ஸ்ரீமணவாள மாமுனிகள்)
வேதங்கள் பாரத தேசத்தினுடைய உயிர் நாடியாக விளங்குபவை. வேதங்களையும், அவற்றின் உத்தர பாகமான, வேதாந்தமான உபநிஷத்துக்களையும், ரிஷிகள் பேணிப் பாதுகாத்தார்கள். நம் வாழ்க்கை முறை, நாம் யார், எதற்காக பிறவி எடுத்தோம், இதைப் போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் உபநிஷத்துக்களிலே உண்டு. அவற்றைப் பிரித்துப் பார்த்தோமென்றால், வேதம் என்றும், வேதாந்தம் என்றும் இரண்டு பகுதிகளாக உள்ளன. வேதம்ங்கிறது ‘பூர்வ’ பாகம். வேதாந்தம்ங்கிறது ‘உத்தர’ பாகம். பூர்வ பாகம்ங்கிறது நாம் செய்ய வேண்டிய கர்மங்களை விசாரிக்கும். எப்படி ஒவ்வொரு கர்மத்தையும் செய்ய வேண்டும் என்று விளக்கும். உத்தர பாகம்ங்கிற வேதாந்தம், கர்மங்களால் ஆராதிக்கப்படுகின்ற ப்ரம்மத்தைப் பற்றி விளக்கும். அதனாலதான் இது ரெண்டுதுக்கும் ‘கர்ம காண்டம்’னுட்டும்,‘ப்ரம்ம காண்டம்’னுட்டும் பேர். கர்மத்த விசாரிக்கிறது, பூர்வ பாகம், கர்ம காண்டம். ப்ரம்மத்தை விளக்குவது, ப்ரம்ம காண்டம், உத்தர பாகம். இது வேதங்கள், வேதாந்தங்கள்.
இதிலெ ரிக், யஜுர், சாம, அதர்வன என்பன நான்கு வேதங்கள். இந்த ஓரொரு வேதத்துக்கும் பல உபநிஷத்துக்கள் உண்டு. அதிலே பிரதானமாக பத்து உபநிஷத்துக்களை எடுக்கிறார்கள். ஈஷா, கேன, கட, ப்ரஸ்ன, முண்ட, மாண்டூக்ய, தித்திரிகி, ஐத்ரேயெ, சாந்தோக்ய, ப்ரகதாரண்யக, என்று 10 உபநிஷத்துக்கள். வேதங்களையும், வேதாந்தத்தையும் தெரிந்து கொண்டால்தான் ப்ரம்மத்தை நாம் அறிந்து கொள்ள இயலும். ப்ரம்மத்தை ப்ரத்யக்ஷ்யமாக பார்த்தோ, கேட்டோ, தொட்டோ, சுவைத்தோ, முகர்ந்தோ அறிந்து கொள்ள முடியாது. ப்ரம்மத்தை அநுமானம் பண்ணித் தெரிஞ்சுக்கவும் முடியாது. அப்ப ப்ரம்மத்தை எது கொண்டுதான் தெரிந்து கொள்ள? ஒரே புகல், வேதங்கள், வேதாந்தங்கள்தான். இதை கண்ணன் கீதையிலே சொல்லும் போது, ‘வேதைச்ய சர்வைகி அஹமேவ வேத்யஹா. வேதாந்தகிருது வேத விதேவ சாகம்’ – ‘எல்லா வேத வேதாந்தங்களாலும் நானே சொல்லப்படுகிறேன்’, என்று சொல்கிறார். வேதாந்தம் பகவானைச் சொல்லாமலிராது; பகவானைச் சொல்லியே தீரும். அவனை அடைவதற்கு ஒரே வழி வேதாந்தம்தான் என்று கண்ணனே கீதையிலே சொல்றார். அதனால்தான் வேதத்துக்கும், வேதாந்தத்துக்கும் இத்தனை முக்கியத்துவம் ஏற்படுகிறது. ப்ரம்மத்தைச் சொல்றதுன்னுட்டு வேதாந்தத்துக்கு வைபவம். வேதாந்தத்தினாலே சொல்லப்படுகிறான்னுட்டு ப்ரம்மத்துக்கு ஏற்றம். ஒருத்தர்க்கு ஒருத்தர். ஸ்ரீரங்கத்துல இருக்கிறார்னுட்டு ஸ்ரீரங்கநாதனுக்கு ஏற்றம்; திருவரங்கநாதனை தன்னிடத்தே கொண்டிருக்குனுட்டுதான் திருவரங்கத்துக்கே ஏற்றம். அதப்போலே பகவானை விளக்கறதுன்னுட்டுதான் வேதாந்தத்துக்கு வைபவம். வேதாந்தத்தினாலேயே கொண்டாடப்படுகிறானுட்டுதான் பகவானுக்கே ஏற்றம்.
இந்த வேதத்துக்கும் வேதாந்தத்துக்கும் மேலே ‘உப ப்ரம்மனங்கள்’அப்படினுட்டு பல தோன்றின. உபப்ரம்மனம்னால், ப்ரம்மத்தப் பத்திதானே வேதாந்தம் சொல்ல வந்தது? அதனுடைய அர்த்தத்தை இன்னும் விளக்குவதற்காகவும், நடைமுறைப் படுத்தி காட்டுவதற்காகவும், யாரும் அறிந்து கொள்ளும் வண்ணம் செய்வதற்காகவும் இந்த உபப்ரம்மனங்கள் ஏற்பட்டன. அவை யாவையெனில், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள். இவற்றுக்குத்தான் உபப்ரம்மனங்கள்னு பேரு. ஸ்மிருதி இதிகாச புராணம்,னு சொல்லுவர்கள்.
இதிலே ஸ்மிருதிங்கறது,
சாஸ்திரம்ங்கிறதுக்கு ஸ்ருதின்னு பேர். ஏன்னா அது காதால கேட்டுப்பட்டு, கேட்டுப்பட்டே வந்தது. ஆசார்யன் ஒருத்தர் சொல்லிக் கொடுப்பர், சிஷ்யன் காதால கேட்டு திரும்பச் சொல்லுகிறான். இப்படியேதான் வேதங்களும், உபநிஷத்துக்களும் வளர்ந்துள்ளன. ஆகையாலே அதற்கு ‘ஸ்ருதி’ அப்படிங்கிற பேர் வந்தது. ஷ்ரவணத்தின் மூலமே வளர்ந்திருக்கோல்லையோ, அதனாலே ’ஸ்ருதி’ன்னு பேர். அந்த ஸ்ருதியை ஞாபகத்திலே கொண்டு, நாம் எப்படி வாழ வேண்டும் அப்படின்னுட்டு எழுதப்பட்டவைகளுக்கு ‘ஸ்மிருதி’னு பேர். ’ஸ்மரணம்’ என்பது ஞாபகத்திலே கொள்ளுதல் அல்லவா? நினைவுதானே ஸ்மரணம். ஸ்ருதியை நினைச்சு நினைச்சு எழுதியிருக்கறதுனாலே ‘ஸ்மிருதி’ன்னு சொல்றார்கள். உதாரணத்துக்கு, ‘மனு ஸ்மிருதி’, ‘யாக்ஞவல்க்ய ஸ்மிருதி’, இது முதலான ஸ்மிருதிகள். அதுல இருக்கறத வச்சுத்தான் நாம நித்யப்படி கர்மங்களையே செய்ய முடியும். மனு பகவான் எப்படி சொல்லியிருக்கிறாரோ அப்படித்தான் வர்ணாஸ்ரமத்தினுடைய தர்மங்கள் இருக்கும். யாக்ஞவல்க்யர் எப்படி சொல்றாரோ, அப்படித்தான் இருக்கும். இப்ப ஒரு கல்யாணம் பண்றோம்னு வச்சுக்கோங்கோ, ஸ்மிருதிகளிலுள்ள சூத்திரங்களைச் சேர்த்துதான் இப்படி கல்யாணம் பண்றது என்பதையே வைத்துள்ளார்கள். அதனாலே ஸ்மிருதிகள் அத்தனையும் பூர்வ பாகமான வேதத்துக்கு உப ப்ரம்மனங்கள். அப்ப பூர்வ பாகம் எதப்பத்தி சொல்லும்? கர்மத்தை. அப்ப ஸ்மிருதிகள் எதைப் பற்றி விளக்கும்? கர்மத்தைப் பற்றியேதான் இன்னும் நன்றாக விளக்கும்.
வேதங்கள், அதனுடைய உபப்ரம்மனங்களான ஸ்மிருதிகள், இது ஒரு பகுதி. அடுத்த பகுதி வேதாந்தம், உபநிஷத்து. அது ப்ரம்மத்தைப்பத்தி விசாரித்ததோல்லையோ? அப்போ அந்த வேதாந்தத்துக்கு உபப்ரம்மனங்கள் உண்டா என்றால், அவைதான் இதிகாசங்களும், புராணங்களும்.
இதிகாச புராணாப்யாம் வேதம் செளபப்ரம்மயேது
விபேத்யல்பத் ஸ்ருதாத் வேதஹா மாமயம் ப்ரதரிஷ்யதி
- இது ஒரு புராண ஸ்லோகம். வேதம் பயப்படுமாம். இதிகாச புராணங்களைத் தெரிஞ்சுக்காமல் என்னோட அர்த்தத்த ஒருத்தன் புரிஞ்ச்சுக்கப் பார்த்தான்னால் தப்புதப்பா தெரிஞ்சுனுடுவானே, என்னாயிருமோ, என்னப்பத்தி தப்பா பேசிருவனோ, அப்படின்னு வேதமே பயப்படுமாம். அதனால இதிகாச புராணங்களைத் தெரிஞ்சுண்டால்தான் வேதாந்தத்தின் அர்த்தம் நன்றாகப் புரியும். அப்ப வேதாந்தத்துக்கு உபப்ரம்மனம், இதிகாச புராணங்கள். ஏன் அப்படி சொல்றான்னா, ப்ரம்மத்தப் பத்திதானே வேதாந்தம் விளக்க வந்தது? அந்த ப்ரம்மமே அவதரித்து என்னன்ன பண்ணிக் காட்டியிருக்காரோ, அந்த சரித்திரங்களைக் கொண்டதுதான் இதிகாசங்களும், புராணங்களும். அதனாலே உபநிஷத்துக்களுக்கு இதிகாச புராணங்கள், உபப்ரம்மனங்கள். வேதங்களுக்கு ஸ்மிருதி உபப்ரம்மனம். அப்போ மொத்தமா சேர்த்து எது நமக்கு இப்போ ஆதாரமா கிடைச்சது? எது நம்முடைய ஞானத்தை வளர்க்கப் போகிறது? வேதங்களும், ஸ்மிருதிகளும்; உபநிஷத்துக்களும், இதிகாச புராணங்களும். இவைகள் சேர்ந்துதான் ஞானத்துக்கு ஊற்றுவாய்.
ரொம்ப நன்னாத்தான் இருந்தது. எத்தனையோ வருஷங்களாய், எப்படியெல்லாம் ரிஷிகள் வளர்க்கணுமோ, அப்படித்தான் வளர்த்துக்கொண்டு வந்தார்கள். ஆனால் அவ்வப்போது பகவானுக்கு சில லீலைகள் புரியவேணும் என்கிற ஆசை ஏற்படுகிறது. அதனாலே இந்த வேத வேதாந்தங்களுக்கு சில ஆபத்துக்களெல்லாம் நேரும். அந்த ஆபத்துக்களை அவ்வப்போது யுக புருஷர்களைப் பிறப்பித்து, பெரிய மகாத்மாக்களைப் பிறப்பித்து, அவர்களைக் கொண்டு மறுபடியும், இதுதான் வேதாந்தத்தின் அர்த்தம், என்று பகவான் உலகத்துக்கு எடுத்துரைக்கிறார்.
பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம்
சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி
பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்
ஆநீதாந்து நிஜாச்ஷரைஹி சுமனசஹா பெளமாஃப் பிமவ்துன்வகம்
- இது ரொம்ப முக்கியமான ஸ்லோகம். இந்த வேத வேதாந்தங்கள் அத்தனையும் நன்றாகத்தானே இருந்தன? மேற்கொண்டு பல ரிஷிகளைப் பகவான் பிறப்பித்து, ‘இதனுடைய அர்த்தங்களை இன்னும் விளக்குவதற்கு, இன்னும் க்ரந்தங்களையெல்லாம் நீங்கள் எழுத வேணும்’, அப்படின்னு பெருமாள் சொல்றார். அதிலே ரொம்ப முக்கியமானவர், பகவத் அவதாரமாகவே கொண்டாடப்படுகிற வேத வ்யாசர். அவருக்கு ‘பகவத் பாதராயணர்’னு பேர். அவருக்கு மற்றொரு பேர், ‘க்ருஷ்ணத் த்வைபாயணர்’னு பேர். உலகமறிந்த பேர், ‘வேத வியாசர்’.
வியாசம் வஷிஷ்ட நப்தாரம் சக்தே பெளத்ரம கல்மஸம்
பராசராத்மஜம் வந்தே சுகதாந்த தபோநிதிம்
- அப்படின்னு சொல்றோமோல்லையோ? அவர்தான் வியாச பகவான். வியாசம் பண்ணுவதுன்னால், இந்த சப்தத்துக்கு அர்த்தம் பார்த்தோம்னா, பகுத்தல், பிரித்தல் அப்படின்னு அர்த்தம். வியாசர் பண்ணியிருக்கற வேலை அதுதான். முதல் மூன்று யுகங்களிலேயும் ரிக் வேதமும், யஜூர் வேதமும், சாம வேதமும், அதர்வண வேதமும் ஒன்றாகக் கிடக்கும். இது ரிக், யஜுஸு, சாம, அதர்வம், பிரிவினை இருக்காது. இது பஞ்சாதி, இது ப்ரஸ்ணம், இது காண்டம், இது ஆரண்யம், இது சாகை, பிரிவு இருக்காது. அத்தனையும் ஒன்றாகக் கிடக்கும். அப்பதான் வேத வியாசர் அவதரிக்கிறார். முதல் மூன்று யுகங்களிலே மக்களுக்கு இருந்த சிரத்தை, அவர்களுக்கு இருந்த ஞானம், சக்தி, இதை வச்சுண்டு ஒன்னா இருந்தாக்கூட அவளாலே படிச்சு தெரிஞ்சுக்க முடிஞ்சது. ஆனா இப்ப கலியுகம் வந்துடுச்சுன்னு வச்சுக்கங்கோ, அதப்போல இருந்தா படிச்சு நம்மால புரிஞ்சுக்க முடியாது. முன்னாடில்லாம் நம்ம பெரியோர்கள் எழுதின புஸ்தகமே எப்படி இருக்கும்? இப்ப எப்படி இருக்கும்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ. முன்னாடி ஒரு பக்கத்துல ஒரு வரி எழுத ஆரம்பிச்சா மூணு பக்கத்துக்கு அதே வரி போகும். அரைப்புள்ளி, காப்புள்ளி ஒண்ணும் குத்தவே வேண்டாம். அது நேரா படிச்சுண்டு போறாப்பல இருக்கும். பத்தி பிரிச்சுருக்க மாட்டா, ஒண்ணும் உப தலைப்புக்களெல்லாம் இருக்காது. கொட்டை எழுத்துல ஒண்ணு, மத்த எழுத்துல ஒண்ணு, அப்படியெல்லாம் இருக்காது. ஒரேமாதிரிதான் ஓடும். அதக் கண்ண கவிச்சு வச்சுண்டு படிச்சுண்டு இருந்துதான் நாம புரிஞ்சுண்டு இருந்தோம். நாம இல்லே, நம்ம முன்னோர்கள். ஏன்னா நாம புரிஞ்சுக்க மாட்டோம்ன்னு வச்சுக்கோங்கோ. ஆனா அவர்கள் அப்படி புரிஞ்சுண்டிருந்தா. இப்போ அதப்போல ஒரு புஸ்தகத்த குடுத்தேள்னா, வாசிக்க மாட்டோம். ஏன்னா, இது மூணு பக்கத்துக்கு ஒரே வரி ஓடிண்டிருந்தா, படிக்கறதுக்கு நமக்கு ஸிரத்தை இல்லேன்றது ஒரு பக்கம். புத்தி அவர்களுக்கு இருந்ததுன்னா, புத்தின்னுகூட சொல்ல முடியாது. கத்துண்டுதான் தீரணும்ங்கிற ஸிரத்தை இருக்கவே புத்தி வந்தது. அததான் நாம சொல்லனுமே தவிர, அதனாலே, இன்னிக்கு எப்படி புஸ்தகம் அச்சுப் போடறா? பக்கமா பிரிக்கணும், சின்னச் சின்ன தலைப்பா பிரிக்கணும், பத்து வரிக்கு ஒரு தரம் பத்திய மாத்திடனும், அதுக்கு ஏதானும் தலைப்பு எல்லாருக்கும் ஆசையை தூண்டுறாப்பல குடுக்கணும், ஒரு நாளைக்குப் படிக்கறதுக்கு நாலு பக்கம் போறும், அப்புறம் தொடரும் போட்டு அடுத்த பக்கம் தொடரணும், இது இத்தனையும் பண்ணாத்தான் இவன் இன்னைக்கு படிக்க வரப்போறான். இது இவா மட்டும் இன்னைக்கு பண்ணலே, வியாசரே இதத்தான் பண்ணினார்.
மொத்தமும் வேதங்கள் ஒண்ணா இருக்கா. இத இனிமேல் இவன் படிச்சுக்க முடியாதுங்கறதுனாலதான், வேதங்கள் அத்தனையையும் பிரித்தார். பிரித்ததோடே இல்லாமல் ரொம்ப முக்கியமான ஒரு கைங்கர்யத்தை வியாசர் நமக்கு செய்தார்.
சம்யங் ஞாய கலாபேந மகதா பாரதேநச
உபப்ரம்மித வேதாய நமோ வியாசாய விஷ்ணவே
- விஷ்ணுவின் அவதாரமான வியாசரை வணங்குகிறேன். இவர் நமக்குச் செய்த உபகாரம், சம்யங் ஞாய கலாபேந, மகதா பாரதேநச, பாரதம்ங்கிற பெரிய சாஸ்திரத்தக் கொடுத்தார். பாரதப் பஞ்சமோ வேதஹா, னு சொல்லுவர்கள். நான்கு வேதங்களுக்கு மேலே ஐந்தாவது வேதமாகவே மகாபாரதம் கொண்டாடப்படுகிறது. அதில் இல்லாதது எதிலும் கிடைக்காது. அதில் இருந்தால் எதிலும் தேட வேண்டிய தேவையில்லை. எதிகாஸ்தீத தன்யத்ர எந்நேகாஸ்தீ நதக்கொஸிது தர்மேச அர்த்தேச காமேச மோக்ஷ்சேச பரத ரிஷப, எதுவும் இதற்குள் உண்டு என்பதைத்தான் வைசம்பாயனர், ஜனமேஜயன் என்னும் ராஜாவுக்குச் சொல்லுகிறார். அப்படி ஒரு மகாபாரதத்த குடுத்தார். ஆனா அதற்கு முன்னாடி ஆச்சர்யமான ஒரு க்ரந்த நிர்மாணம் பண்ணார் அவர். பாரதம் குடுத்ததுங்கிறது ஒண்ணு. ஆனா அது ஏன் குடுத்தார்ன்னு சொல்றேன். அதுக்கு முன்னாடி மத்தொரு க்ரந்தம் எழுதினார். அதற்கு ‘ப்ரம்ம சூத்திரம்’னு பேர். அதாவது,பாராசர்ய வசஸ்ஸுதாம் – இப்ப இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம் சொல்றேன். இந்த ஸ்லோகம் எழுதியிருக்கறது இராமானுசர். அத மட்டும் ஞாபகம் வச்சுக்கங்கோ. இன்னும் இராமானுசர் என்னங்கிற விசயத்தப்பத்தி அடியேன் இன்னும் சொல்லலை. அவர் எழுதின ஸ்லோகத்துக்கு மட்டும் அர்த்தம் சொல்றேன். பாராசர்ய வசஸ்ஸுதாம் உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம், பராசரர், பராசரருடைய திருக்குமாரருக்கு பாராசர்யர், அவர்தான் வியாசர். வியாசர் வந்திருக்கிற வழிமுறை எது என்று பார்த்தோம்னால், ப்ரம்மா, ப்ரம்மாவினுடைய பிள்ளை வசிஷ்டர், வசிஷ்டரோட பிள்ளை ஷக்தி, ஷக்தியினோட பிள்ளை பராசரர், பராசரரோட பிள்ளை வியாசர், வியாசருடைய திருக்குமாரர் சுகர். இது ஒண்ணும் சாதாரணப்பட்ட குரு பரம்பரை இல்லே. ஒத்தொருத்தரும் நமக்கு கொடுத்திருக்கிற அர்த்தங்களைப் பார்த்தோம்னா, வாழ்நாள் இல்லே, எத்தனை ஜென்மம் எடுத்து கைங்கர்யம் பண்ணினாலும் போதவே போதாது. அப்பேர்ப்பட்ட சாஸ்திரத்த நமக்கு குடுத்திருக்கா. தன்னலம் கருதாத கைங்கர்யம். அவர்களுக்கு எந்த தேவையுமே கிடையாது. ஆனா மக்கள் நலம் பெற வேணுங்கிற ஒரே காரணத்துக்காக, பகவத் விசயத்தை நமக்குன்னு குடுத்தார்கள்.
அவர்தான் ப்ரம்ம சூத்திரம் எழுதுகிறார். பாராசர்யர் – வியாசர்; வசஸுதா– அவருடைய திருவாக்காகிற அமுதம். அந்த அமுதம் எங்கேர்ந்து எடுக்கப்பட்டது தெரியுமா? உபநிஷத் துக்தாத்பி மத்யோத்ருதாம் – உபநிஷது என்கிற பாற்கடல். பாற்கடலை கண்ணன் கடைந்தார். ஆனா இப்ப நாம பார்க்கறது அந்த பாற்கடலை இல்லே. உபநிஷத்துகளாகிற கடல், உபநிஷத் துக்தாத்பி மத்ய உத்ருதாம் – துக்தாத்பியான பாற்கடலில் நடுவிலிருந்து எடுத்தார். கண்ணன் கடைந்தது பாற்கடலை. ஆனால் க்ருஷ்ணத் துவைபாயனராண வியாசர் கடைந்தது மறைப் பாற்கடலை. மறைன்னா தமிழ்லே வேதம்னு அர்த்தமோல்லையோ? அதனாலே வியாசர் கடைந்தது வேதம் என்னும் கடலை. கடையணும்னா மத்து வேணுமோல்லையோ? பெருமாள் மந்தர பர்வதத்த நட்டுட்டார். இங்க எத நடறதுன்னா, மதி மந்தானம் ஆவித்ய, ஏனாசெள ஸ்ருதி சாகராது ஜகத்ஹிதாய ஜனிதஹா மகாபாரத சந்த்ரமாஹா – வியாசர் எப்ப உபநிஷத் கடலை கடைவதற்காக பார்த்தாலும், தன்னுடைய மதி, ஞானத்தையே மத்தாக நாட்டிடுவர். தன்னுடைய ஞானத்தை மத்தாக நாட்டி, உபநிஷத்துக்களாகிய கடலைக் கடைந்து, ‘பாராசார்ய வசஸ்ஸுதாம் உபநிஷது துக்தாத்பி மத்யோத்க்ருதாம், சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனி’, இப்பேர்ப்பட்ட அமிர்தத்த கடைஞ்சு குடுத்துட்டார். அப்ப உபநிஷத்துக்களாகிற கடலைக் கடைந்து அமிர்தம் கிளர்ந்தது. அந்த அமுதம்தான் ப்ரம்ம சூத்திரம்ங்கிற க்ரந்தம். அத நமக்கு குடுத்தாரே, இதனால என்ன லாபம்ன்னா, சம்சாராக்னி விதீபனப் வியபகதப் ப்ராணாத்ம சஞ்சீவனிம் – சம்சாரமென்னும் அக்னியாலே தவித்துப் போய் கிடக்கிற நம் அனைவருக்கும், தாபத்ரேயத்தாலே தத்தர்களாய், ஆத்யாத்மிக, ஆதி தெய்விக, ஆதி பெளதிகங்களாகிற மூன்று சூடு; சம்சாரம்கிற பெரும் வெப்பம், அந்த வெப்பத்திலே தவிச்சுட்டு இருக்கிற நமக்கு அமிர்தமாக, அருமருந்தாக ப்ரம்ம சூத்திரத்த குடுத்தார். இந்த ஆத்மாவிற்கு சஞ்சீவனி மருந்தாட்டம் நமக்கு அதைக் குடுத்தார். அதை நெறய ஆச்சார்யர்களெல்லாம் போற்றிப் பாதுகாத்தார்கள். பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் – இந்த பூர்வாச்சார்யகளெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு காப்பாத்தினார்கள் தெரியுமா? இவருடைய சிஷ்யப் பரம்பரை இருக்கு, தங்க்கர், த்ரமிடர், போதாயனர், இவாள்லாம் வியாசருடைய பரம்பரையில வர்றவா. இவர்களெல்லாம் பரம வைதிகர்கள். சாஸ்திரம் கற்றவர்கள்.
போதாயனர் வேதவியாசருடைய ப்ரம்ம சூத்திரத்துக்கு நல்ல டிப்பனி எழுதினார். டிப்பனின்னா, உரைன்னு சொல்றோமோல்லையோ, அதப்போல ஒரு உரை எழுதினார். அதுக்கு ‘போதாயன வ்ருத்திக் கிரந்தம்’னு பேரு. வ்ருத்தின்றது எதுன்னா, ஒரு சூத்திரம், மூணு வச்சுக்கங்கோ. சூத்திர க்ரந்தம், வ்ருத்திக் க்ரந்தம், பாஷ்யக் க்ரந்தம், அப்படின்னு எப்பவுமே மூணு இருக்கும். முதல்ல சூத்திர க்ரந்தம். சூத்திரம்ங்கிறது, சொற்கள் குறைவாகவும், பொருள் நிறைவாகவும் இருக்கும். இப்ப ப்ரம்ம சூத்திரம்ங்கிறது அப்படித்தான். ரொம்ப குறைச்சலா இருக்கும். குறைச்சல்னா என்ன, பக்கம் குறைச்சல்லாம் இல்லே. ஒரு எழுத்து இருக்கும், ஒரு சொல் இருக்கும், ரெண்டே ரெண்டு சொல் மட்டும் இருக்கும். அதாதோ ப்ரம்மதிக்யாஸா, ஜென்மாத்யஸ்ய யதஹா, சாஸ்திரயோநித்வாத், தத்துசமந்வயாத், ஈக்ஸதே நாசத்தம், இதெல்லாம் ஒன்னொன்னும் ஒவ்வொரு சூத்திரம். ப்ரம்ம சூத்திரத்திலுள்ள ஆரம்பத்திலுள்ள சில சூத்திரங்கள் இவை. அவ்வளவுதான் ஒரு சூத்திரம், அதாதோ ப்ரம்மதிக்யாஸா, இதுக்கு வ்யாக்யானம் நூறு பக்கம் இருக்கும். ஜென்மாத்யஸ்ய யதஹா, இதுக்கு வ்யாக்யானம் நூறு பக்கம் இருக்கும். முதல் முதல்ல சூத்திரமா இந்த மாதிரி வேத வியாசர் எழுதிட்டார். அது ரொம்ப குறைவா இருக்கறதுனாலே, ஓ! இது புரியாம போயிடுமோ, அது பயம். அதனால அப்புறம் போதாயனர் என்ன பண்ணார், அதற்கு வ்ருத்திக்ரந்தம் சாதித்தார். இதை கொஞ்சம் விளக்குவோம் அப்படிங்கறதுக்காக‘போதாயன வ்ருத்திக்ரந்தம்’ பிறந்தது.
சூத்திர க்ரந்தமும் இருக்கு, வ்ருத்தி க்ரந்தமும் இருக்கு. இதை பெரியோர்கள் நன்னா இரட்சித்தார்கள். ஆனா என்னைக்குமே லோகத்துக்கு என்ன மரபுன்னா, காலம் போகப் போக எதுவும் தேயும். எந்த உயர்ந்த விசயமானாலும், அவனவன் தலையெடுத்து தான் சொன்னதே என்று பேச ஆரம்பிக்கிறான். மணவாளமாமுனிகள் ஒரு பாசுரத்தில தெரிவிக்கிறார்,
முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே
தன்னெஞ்சில் தோத்தினதே சொல்லி
இது சுத்த உபதேசவர வார்த்த என்பவர் மூர்க்கராவார்.
- முன்னாடி யார் என்ன சொல்லியிருக்கார்களோ அதை அப்படியே வரி மாறாமல் கேட்க வேண்டும். நம் சம்பிரதாயத்திலே, ‘என் புத்திக்கு இது தோணித்து, நான் சொல்றேன்’னு சொன்னால், அவன் வித்வானே இல்லே. எந்த சதஸ்லேயும் உள்ளேயே சேர்க்க மாட்டா. நாம ஏதாவது ஒரு சதஸ்ல வாயத் திறந்து பேசறோம்னா, இந்த புஸ்தகத்துல, இன்ன வரில இருக்கு, சொன்னாத்தான் இவனுக்கு எடமே இருக்குமே தவிர, இது எனக்கு தோணித்துன்னு சொன்னா, அது, பலபேர் அந்த மாதிரி ஆரம்பிச்சுட்டா இப்போ. அந்த மாதிரி காலக்ஷேபத்துக்கு நாம போகாம இருக்கறதுதான் நலம். முன்னாடி என்ன சொல்லியிருக்கார்களோ அதைத்தான் கேட்கணும்.
ஒரே ஒரு விசயம் ஆனந்தமா இருக்கும், அதுக்காக சொல்றேன். ஆழ்வார்கள் பாசுரங்களிலே ஏன் குயிலைப் பத்தி பாடாம, ஏன் கிளியையே பாடறா? மடக்கிளியை கைகூப்பி வணங்கினாளே, திருமங்கையாழ்வார் திருநெடுந்தாண்டகத்துல பாடினாரா? அதேபோல,மென்கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே, அதே திருமங்கையாழ்வார் பாடினார். எல்லே, இளங்கிளியே இன்னம் உறங்குதியோ, பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில், ஒருத்தரானும் குயிலைப் பாட மாட்டேங்கறா. ஆண்டாள் கைல வச்சுண்டிருக்கறது, குயிலை வச்சுக்க மாட்டேங்கறா, கிளியைத்தான் ஆண்டாள் வச்சுண்டிருக்கா. என்ன ஸ்வாமி கிளிக்கு பாக்கியம்? குயிலுக்கு பாக்கியம் இல்லையா? பாட்டு கிளி நன்னா பாடுமா, குயில் நன்னா பாடுமா சொல்லுங்கோ? கிளி கர கரன்னும், தொண்டை ஓஹோன்னு ஒண்ணும் ஒசத்தியால்லாம் இருக்காது. குயில்லனா, பாட்டுக்கு எடுத்தது குயில்தானே. அப்ப ஆழ்வார்களெல்லாம் குயில் பாட்டுன்னு சொல்லாமல் ஏன் கிளிப்பேச்சுங்கறா? ஏன் அப்படி சொன்னேன்னா, கிளி பேச்சுதான், கிளி பாடாது. அதுக்கு பேசறதுக்குதான் தெரியும். ஆனா கிளிக்கு ஒரு பெருமை, சொல்லிக் கொடுத்தததான் திருப்பிச் சொல்லும். தானாகச் சொல்லவே சொல்லாது. ஆனா குயில் எப்போதும் தானாகத்தான் பேசும். ஆச்சார்யகளுக்கு ஆசையே, சொன்னத்த திரும்பச் சொல்ல வேண்டும். அதனாலதான் இங்க உபதேச ரத்ன மாலையில், ‘முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு’ – முன்னோர் சொன்னத முறை தப்பாமல் கேட்கணும், பின்னோர்ந்து தாம் அதனை பேசணும். சொன்னத்த திருப்பி விளக்கமாச் சொல்லலாம். அவ்வளவுதான் நம்மால முடியுமே தவிர, மாற்றுவதற்கு நமக்கு யோக்கியதை கிடையாது. அப்படி இல்லே, ‘எனக்குத் தோணித்து, நான் சொன்னேன்’-னாவது சொல்லிட்டு போயிடணுமாம். மணவாள் மாமுனிகள் என்ன அங்க கோபம்ன்னா, இவன் நெஞ்சில தோணித சொல்லிப்பிட்டு, இதத்தான் பூர்வாச்சார்யார்கள் சொல்லியிருக்கான்னு வேற சொல்லிட்டானாம். அதத் திசை திருப்பாமல் இருந்திருக்கலாமோல்லையோ? உனக்குத் தோணித நீ சொன்னேன்னு வேணா சொல்லிட்டுப் போ, இது ராமானுஜர் சொல்லியிருக்கார், இது நாதமுனிகள் சொல்லியிருக்கான்னு சொல்லிட்டேன்னா, தெரியாத ஜனங்கள் திசை திருப்பப்படும். ஓ, இவர் ஏதோ பெரிய வித்வான் போலருக்குன்னு கேட்க வந்தவர்களுக்குப் போய், இதில்லே, அவரே இதத்தான் சொல்லியிருக்கார்ன்னு நான் தப்பாச் சொல்லிட்டேன்னா, அது கூடாது. அதைத்தான் முன்னோர்களுடைய வழியாகச் சொல்லுவர்கள்.
அதனாலே, பூர்வாச்சார்யர்கள் நன்றா ரட்சித்து வச்சிருந்தா. அவனவன் தனக்கு தனக்கு தோணின அர்த்தங்களையெல்லாம் ப்ரம்ம சூத்திரத்துக்கு சொல்ல ஆரம்பிச்சுட்டான். உபநிஷத்துக்களுக்கும் தப்பான அர்த்தங்களைச் சொல்ல ஆரம்பிச்சு, ப்ரம்ம சூத்திரத்துக்கும் தப்பான அர்த்தத்தைச் சொல்ல ஆரம்பிச்சு, கடைசில இந்த ப்ரம்ம சூத்திரத்தினுடைய உண்மையான அர்த்தம் எங்க தெரியுமோ போச்சு? அந்த மூலைல கொண்டு போய் போட்டாச்சு. பூர்வாச்சார்ய ஸுரக்ஸிதாம் – பூர்வாச்சார்யார்கள் நன்றாக ரட்சித்து வைத்திருந்தார்கள், ஆனால் அய்யகோ என்ன நடந்தது தெரியுமா?பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம் – அவனவனுக்கு மதி, ஒரு இடத்துல ஐம்பது பேர் இங்க உட்கார்ந்திருக்கிறீர்கள்னு வச்சுக்கங்கோ, எத்தனை கட்சி தெரியுமோ இருக்கும்? ஐம்பத்திரெண்டு இருக்கும். ஸ்வாமி, ஐம்பது பேர்தான இருக்கா, ஐம்பதுக்கு மேல இருக்குமான்னா, என்ன அப்படி சொல்லிட்டீள்? இந்த இரண்டு பேரும் சேரலாம் அந்த இரண்டு பேரும் சேரலாம், கொஞ்ச நேரம் கழிச்சு இதை வெட்டி விட்டுட்டு இன்னொன்னுல சேரலாம். இப்படித்தான் நம்ம கட்சி. ஒன்னொன்னுக்கு நாம எப்படி வச்சுண்டிருக்கோம்னா, அம்பது ஆளிருந்தோம்னா, நூறு கட்சி. அவனவன் தனக்குத் தோணித அத்தனையும் புதுசுன்னு சொல்லிண்டிருக்கான். அதனால, ‘பகுமதி வ்யாகாத தூரஸ்திதாம்