• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sreeman NArAyaNeeyam

Status
Not open for further replies.
த3ச’கம் 2 :- ப4க3வத்3ரூப வர்ணனம்

அத்யாயாஸகராணி கர்மபடலான் யாசர்யா நிர்யன்மலா :
போ3தே4 ப4க்திபதே2sத2வாsப்யுசித தாமாயந்தி கிம் தாவதா |
க்ளிஷ்ட்வா தர்க்பதே2 தவ வபுர்ப்3ரஹ்மாக்யமன்யே புன
ச்’சித்தார்த்ர த்வம்ருதே விசிந்த்ய ப3ஹுபி4: ஸித்யந்தி ஜன்மாந்தரை:||2-9)

மிகவும் சிரமமான கர்ம யோகத்தைச் செய்து, அதன் மூலம் மனமாசு நீங்கப் பெற்றவர்கள் ஞான யோகத்தில் அல்லது பக்தி யோகத்தில் அதிகாரத்தைப் பெறுகின்றார்கள். அதனால் என்ன பயன்? வேறு சிலர் உள்ளம் உருகாமலேயே வேதாந்த சாஸ்த்திரத்தைமட்டும் பற்றிக் கொண்டு அனேக ஜன்மங்களுக்குப் பின்னர் மோக்ஷம் அடைகின்றார்கள். (2 – 9)
 
த்வத்3 ப4க்திஸ்து கதா2 ரஸாம்ருத ஜ4ரி நிர்மஜ்ஜனேன ஸ்வயம்
ஸித்3யந்தி விமலப்ரபோ3த4 பத3வீ மக்லேச’ தஸ்தன்வதீ |
ஸத்ய:ஸித்3தி4கரீ ஜயத்யயீ! விபோ4! சைவாஸ்து மே த்வத்பத3
ப்ரேமப்ரௌடி4 ரஸார்த்3ரதா த்3ருததரம் வாதாலயாதீ4ச்வர! (2 – 10)

ஹே பிரபோ! தங்களிடம் வைக்கும் பக்தி மக்களைக் கதையாகிய அமிர்தப் பிரவாகத்தில் முழுகச் செய்வதால் தானாகவே சித்திக்கின்றது. நிர்மலமான ஞானத்தை பக்தி எளிதாக்குகிறது. இந்த ஜென்மத்திலேயே பக்தி சித்தியை அளிக்கிறது. அதனால் பக்தி மேன்மை பெற்று விளங்குகிறது. அப்படிப் பட்டத் தங்கள் திருவடிகளில் பிரேமையில் கனிகின்ற பக்தியே எனக்கு விரைவாக உண்டாகட்டும். ( 2 – 10)
 
த3ச’கம் 3 – ப4க3வத் ஸ்வரூப வர்ணனம்

பட2ந்தோ நாமானி ப்ரமத3ப4ர சிந்தௌ4 நிபதிதா:
ஸ்மரந்தோ ரூபம் தே வரத3! கத2யந்தோ கு3ணகதா2: |
சரந்தோ யே பக்தாஸ் த்வயி க2லு ரமந்தே பரமமூ
ன்ஹம் த4ன்யான்மன்யே ஸமதி4 க3த ஸர்வாபி4லஷிதான் || (3-1)

ஹே வரதா ! தங்கள் திரு நாமங்களைக் கீர்த்தனம் செய்து கொண்டும்; தங்கள் மங்கள ரூபத்தைத் தியானம் செய்து கொண்டும்; ஆனந்தக் கடலில் மூழ்கியும்; தங்கள் குணங்கள், சரிதங்களைப் பற்றிப் பேசிக்கொண்டும் ; வேறு ஆசைகளில்லாமல் சஞ்சரிப்பவர்கள் தங்களிடத்திலேயே ரமிக்கின்றார்கள். அவர்களை நான் பாக்கியசாலிகளாகக் கருதுகின்றேன். (3 – 1)
 
க3த3க்ளிஷ்டம் கஷ்டம் தவ சரணஸேவா ரஸப4ரே பி
அனாஸக்தம் சித்தம் ப4வதி ப3த விஷ்ணோ குரு த3யாம் |
ப4வத் பாதா3ம்போ4ஜ ஸ்மரண ரஸிகோ நாமநிவஹா
நஹம் கா3யம் கா3யம் குஹச்சன விவத்ஸ்யாமி விஜனே || (3 – 2)

ஆதி வியாதிகளால் கிலேசம் அடைத்துள்ள என் சித்தம், தங்கள் திருவடிகளைச் சேவிப்பதில் கூடப் பற்று இன்றி இருக்கிறது. ஐயோ கஷ்டம்! எங்கும் நிறைந்துள்ள விஷ்ணோ! என்னிடம் தயை காட்டுங்கள். தங்கள் திருவடிகளைத் தியானம் செய்து கொண்டும், தங்கள் திரு நாமங்களைப் பாடிக் கொண்டும் ஏகாந்தமான இடத்தில வாசம் செய்ய விரும்புகின்றேன். (3 – 2)
 
த3ச’கம் 3 – ப4க3வத் ஸ்வரூப வர்ணனம்

க்ருபா தே ஜாதா சேத் கிமிவ நஹி லப்4யம் தனு ப்4ருதாம்
மதீ3யக்லேசௌக4 ப்ரஸமனதசா’ நாம கியதீ |
ந கே கே லோகேsஸ்மின்ன நிச’மயி சோ’காபி4ரஹிதா:
ப4வத் ப4க்த முக்தா : ஸுக2 க3திஸக்தா வித3த4தே || (3 – 3)

ஹே பகவன்! தங்கள் கிருபை உண்டானால் சரீரம் படைத்தவர்களால் அடைய முடியாதது எது? என் துன்பங்களைப் போக்குவது தங்களுக்கு எம்மாத்திரம்? தங்கள் பக்தர்கள் எத்தனை பேர் துக்கம் இல்லாதவர்களாக, ஜீவன் முக்தர்களாகப் பற்றற்றவர்களாக சஞ்சரிக்கின்றர்கள். பின்பு மோக்ஷத்தை அடைகின்றார்கள். (3 – 3)

 
முனிப்ரௌடா4 ரூடா4 : ஜக3தி க2லு கூ3டா4த்மக3தயோ
ப4வத் பாதா3ம்போ4ஜ ஸ்மரண விருஜோ நாரத3 முகா2:|
சரந்தீச’ ஸ்வைரம் ஸததபரி நிர்பா4த பரசித்
ஸதா3நந்தா3த்3வைத ப்ரஸர ப்ரிமக்னா: கிமபரம் || ( 3 – 4 )

உலகப் பிரசித்தி பெற்றவர்களும், அறிந்து கொள்ள முடியாத தங்களைப் பற்றி அறிந்து கொண்ட ஆத்ம ஞானிகளும், தங்கள் பாதத் தாமரைகளை வணங்கித் துன்பம் நீங்கியவர்களும்,நாரதர் போன்ற முனி ஸ்ரேஷ்டர்களும், சத் சித் ஆனந்த மயமான அத்வைத பிரவாஹத்தில் ஆழ்ந்திருக்கின்றார்கள். கவலை என்பதே இன்றி இருக்கின்றார்கள். இதற்கும் மேலே பிரார்த்திக்க வேறு என்ன உள்ளது? (3 – 4)
 
த3ச’கம் 3 – ப4க3வத் ஸ்வரூப வர்ணனம்

ப4வத்3 ப4க்தி: ஸ்பீதா ப4வது மம சைவ ப்ரசமயே
த3சே’ஷ க்லேசௌ’க4ம் ந க2லு ஹ்ருதி3 ஸந்தே3ஹ கணிகா |
ந சேத்3 வ்யாஸஸ்யோக்திஸ் தவ ச வசனம் நைகமவசோ
ப4வேன் மித்2யா ரத்2யா புருஷ வசன ப்ராய மகி2லம் || ( 3 – 5 )



தங்களிடம் உள்ள எனது பக்தி பரிபூரணமாக இருக்க வேண்டும். அந்த பக்தி தான் என் துன்பங்களை நாசம் செய்யும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை. அவ்வாறு செய்யாமல் போகுமானால் வியாசரின் கூற்றும், தங்கள் வசனமும், வேத வாக்கியங்களும் தெருவில் திரியும் பாமரன் பேச்சைப் போல வீணாகி விடும். (3 – 5)

 
ப4வத்4 ப4க்திஸ்தாவத் ப்ரமுக2மது4ரா த்வத்3கு3ண ரஸாத்
கிமப்யாருடா4 சேத3கி2ல பரிதாப ப்ரச’மனீ |
புனச்’சாந்தே ஸ்வாந்தே விமலபரி போ3தோ3த3யமிளன்
மஹாநந்தா3த்3வைதம் தி3ச’தி கிமத : ப்ரார்த்2யமபரம் || (3 – 6)

தங்களிடம் வைக்கும் பக்தி, தங்கள் குணங்களைக் கேட்பதனால், தொடக்கத்திலேயே மதுரமாக உள்ளது.. இதுவே விருத்தி அடைந்த பின்னர் எல்லாத் தாபங்களையும் நாசம் செய்கின்றது. இறுதியில் ஹிருதயத்தில் நிர்மலமான ஞானோதயம் தந்து பிரம்மானந்தத்துடன் இரண்டறக் கலக்கச் செய்கிறது. ஒருவன் விரும்புவதற்கு இதைவிட வேறு என்ன இருக்கிறது? (3 – 6)
 
த3ச’கம் 3 – ப4க3வத் ஸ்வரூப வர்ணனம்

விதூ4ய க்லேசா’ன் மே குரு சரணயுக்3மம் த்4ருதரஸம்
ப4வத் க்ஷேத்ர ப்ராப்தௌ கரமபி ச தே பூஜன விதௌ4 |
ப4வன் மூர்த்யாலோகே நயனமத2 தே பாத3 துலஸீ
பரிக்4ராணே க்4ராணம் ச்’ரவணமபி தே சாரு சரிதே || (3 – 7 )

என் துன்பங்களைப் போக்கி விடுங்கள். என் இருகால்கள் தங்கள் கோவிலை அடைய வேண்டும்; என் இரு கைகள் தங்களைப் பூஜிக்க வேண்டும்; என் இரு கண்கள் தங்கள் மங்கள விக்ரஹ வடிவைத் தரிசிக்க வேண்டும்; என் நாசி தங்கள் பாத துளசியை முகர வேண்டும்; என் செவிகள் தங்கள் ரசமான சரித்திரங்களைக் கேட்க வேண்டும். (3 – 7)
 
ப்ரப்4ருதாதி4வ்யாதி4 ப்ரஸப4 சலிதே மாமக ஹ்ருதி3
த்வதீ3யம் தத்3ரூபம் பரமஸுக2 சித்3ரூப முதி3யாத் |
உத3ஞ்சத் ரோமாஞ்சோ க3ளித ப3ஹு ஹர்ஷாச்’ரு நிவஹோ
யதா2 விஸ்மர்யாஸம் து3ருபச’மபீடா4 பரிப4வான் (3 – 8)


மயிர்கூச்சம் அடைந்து, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, வருத்தம் தரும் என் துக்கங்களை நான் மறக்கும் வண்ணம், கவலைகளாலும் வியாதிகளாலும் சலிக்கின்ற என் உள்ளத்தில், சத் சித் ஆனந்த மயமான தங்கள் ஸ்வரூபம் தோன்ற வேண்டும். ( 3 – 8)
 
த3ச’கம் 3 – ப4க3வத் ஸ்வரூப வர்ணனம்

மருத்3 கே3ஹாதீ3ச’ த்வயி க2லு பரஞ்சோபி ஸுகி2னோ
ப4வத்ஸ்னேஹி ஸோஹம் ஸுப3ஹு பரிதப்யே ச கிமித3ம் |
அகீர்த்திஸ்தே மாபூ4த்4 வரத3! க3த3பா4ரம் ப்ரச’மயன்
ப4வத்3 ப4க்தோத்தம்ஸம் ஜ4டிதி குருமாம் கம்ஸ த3மன || (3 – 9)

குருவாயூரப்பா! தங்களிடம் பராமுகமாக இருப்பவர்கள் சிலர் சுகம் அடைபவர்களாக இருக்கின்றார்கள். தங்களிடம் பக்தி கொண்ட நான் வருத்தத்தில் மூழ்கியுள்ளேன் இது என்ன செயல்? இதனால் உங்களுக்கு அபகீர்த்தி வரக்கூடாது. கம்சனைக் கொன்றவரே! என் வியாதிகளைப் போக்கி என்னை உங்கள் பக்தர்களில் சிறந்தவனாகச் செய்யுங்கள். (3 – 9)
 
கிமுக்தைர் பூ4யோபி4ஸ் தவஹி கருணா யாவது3தி3யா
த3ஹம் தாவத்3தே3வ! ப்ரஹித விவிதா4ர்த்த ப்ரலபித:|
புர: க்லுப்தே பாதே3 வரத3 தவ நேஷ்யாமி தி3வஸான்
யதா2 ச’க்தி வ்யக்தம் நதிநுதிநிஷேவா விரசயன் || (3 – 10)


தேவாதி தேவ! அதிகம் சொல்லுவதால் என்ன பயன்? ஹே வரத ! தங்களுக்கு என் மீது எப்போது தயை உண்டாகின்றதோ, அது வரையில் நான் புலம்புவதை விட்டு விட்டு, என் சக்திக்கு ஏற்றவாறு தங்கள் திருவடிகளுக்கு நமஸ்காரம், ஸ்தோத்திரம் , பூஜை செய்து கொண்டு என் காலத்தைக் கழிப்பேன். (3 – 10)
 
NOW THAT 'THE RUCHI' HAS BEEN ESTABLISHED FOR READING

SRIMAN NAARAAYANEEYAM, I WILL INCREASE THE NUMBER OF
DAILY POSTS FROM 2 TO 5. HAPPY READING! :ranger:
 
த3ச’கம் 4 :அஷ்டாங்கயோக வர்ணனம், யோகசித்தி வர்ணனம் ச


கல்யதாம் மம குருஷ்வ தாவதீம்
கல்யதே ப4வதுபாஸனம் யயா|
ஸ்பஷ்டமஷ்ட வித4 யோக சர்யயா
புஷ்டயாssசு’ தவ துஷ்டி மாப்னுயாம் || ( 4 – 1 )

எவ்வளவு ஆரோக்கியம் இருந்தால் தங்களை ஆராதனம் செய்ய முடியுமோ, அவ்வளவு ஆரோக்கியத்தை எனக்குத் தந்தருளுங்கள்! சம்பூர்ணமான எட்டு அங்கங்கள் கொண்ட யோகத்தை அனுஷ்டிப்பதால் நான் விரைவாகவே தங்கள் அனுக்ரஹத்தைப் பெறுவேன். இது நிச்சயம்! (4 – 1)
 
ப்3ரஹ்மசர்ய த்3ருட4 தாதி3பி4ர்யமை:
ஆப்லவாதி3 நியமைச்’ச பாவிதா: |
குர்மஹே த்3ருட4மமீ ஸுகா2ஸனம்
பங்கஜாத்3யமபி வா ப4வத்பரா: || ( 4 – 2)

தங்கள் பக்தர்களாகிய நாங்கள், பிரம்மச்சாரியத்தின் யமங்களைக் கொண்டும், ஸ்நானம் போன்ற நியமங்களைக் கொண்டும், பரிசுத்தர்களாகிப் பத்மாசனம், சுகாசனம் போன்றவற்றைத் திருடமாகச் செய்கிறோம். (4 – 2)
 
தாரமந்தரனு சிந்தய ஸந்ததம்
ப்ராணவாயு மபி4யம்ய நிர்மலா:|
இந்த்ரியாணி விஷயாத3தா2பஹ்ருதி
ஆssஸ்மஹே ப4வது3 பாஸனோன்முகா2: || ( 4 – 3 )

பிரணவத்தைத் தைல தாரை போலவும், மணியின் நாதம் போலவும் இடைவிடாது சிந்திப்போம். பிராணாயாமம் செய்து பரிசுத்தர்கள் ஆவோம். இந்திரியங்களை அவற்றின் விஷயங்களில் இருந்து திருப்புவோம். தங்களை உபாசிப்பதில் விருப்பம் கொண்டோம். (4 – 3)
 
அஸ்புடே வபுஷி தே ப்ரயத்னதோ
தா4ரயேம தி4ஷணாம் முஹூர் முஹு:|
தேன ப4க்திரஸ மந்தரார்த்3ரதாம்
உத்3வஹேம ப4வத3ங்க்4ரி சிந்தகா: || (4 – 4 )

அச்பஷ்டமானது தங்கள் மங்கள விக்ரஹம். பிரயத்தனப்பட்டு புத்தியை அதில் நிலை நிறுத்துவோம். தங்கள் திருவடிகளைத் தியானித்து பக்தி ரசத்தையும், உள்ளத்தின் கனிவையும் பெறுவோமாகுக. (4 – 4)
 
விஸ்புடா வயவ பே4த3 ஸுந்தரம்
தத் வபுஸ் ஸுசிர சீ’லனவசா’த் |
அச்’ரமம் மனஸி சிந்தயாமஹே
த்4யான யோக3 நிரதாஸ் த்வதா3ச்’ரயா: || (4 – 5)

தங்களை ஆச்ரயித்த நாங்கள் தியான யோகத்தை இடைவிடாமல் அனுஷ்டிப்போம். வெகு காலம் அப்யாசம் செய்ததால் நாங்கள் சிரமமின்றி ஸ்பஷ்டமான, அழகான, தங்கள் திருமேனியை மனதில் தியானிப்போம்.(4 – 5)
 
த3ச’கம் 4 :அஷ்டாங்கயோக வர்ணனம், யோகசித்தி வர்ணனம் ச

த்4யாயதாம் ஸகல மூர்த்தி மேத்3ருசீ’ம்
உன்மிஷன் மது4ர தாஹ்ருதாத்மனாம் |
ஸாந்த்3ர மோத3 ரஸ ரூபமாந்தரம்
ப்ரஹ்ம ரூபமயி தேsவ பா4ஸதே || (4 – 6 )


சகல அவயவங்களுடன் கூடிய தங்கள் திருமேனியை தியானம் செய்து , அதன் பிரகாசத்தால் கவரப் பட்ட எங்களுக்கு, பூர்ண ஆனந்த ரசமாகிய தங்கள் ஸ்வரூபம் எங்கள் மனதால் அறியுமாறு நன்கு பிரகாசிக்கின்றது.
(4 – 6)
 
தத் ஸமாஸ்வ த3ன ரூபிணீம் ஸ்தி2திம்
த்வத் ஸமாதி4மயி விச்’வநாயக |
ஆச்’ரிதா: புனரத: பரிச்யுதா
வாரபே4மஹி ச தா4ரணாதி3கம் || ( 4 -7 )

ஹே விஸ்வநாதா ! பிரம்மத்தை அனுபவிக்கும் தங்களை விஷயமாகக் கொண்ட நிர்விகல்ப சமாதியிலிருந்து ஒருவேளை நழுவினால், மீண்டும் தாரணை முதலியவற்றைத் தொடங்குவோம்.
(4 – 7)
 
இத்த2மப்4யஸன நிர்ப4ரோல்லஸத்
த்வத் பராத்மஸுக கல்பிதோத்ஸவா:|
முக்த ப4க்த குல மௌலிதாம் க3தா:
ஸஞ்சரேமா சு’க நாரதா3தி3வத் || ( 4 – 8 )


தாரணை, தியானம் சமாதி இவற்றை நன்கு அப்யாசம் செய்வதாலும், தங்கள் ஸ்வரூபமான பரப் பிரம்மத்தை அனுபவிப்பதாலும் நாங்கள் உற்சாகம் அடைவோம். ஜீவன் முக்தர்களில் சிறந்தவர்களான சுகன், நாரதன் போல நாங்களும் சஞ்சரிப்போம். (4 – 8)
 
தத் ஸமாதி4 விஜேயே து ய: புனர்
மங்க்ஷு மோக்ஷ ரஸிக: க்ரமேண வா|
யோகவச்’ய மனிலம் ஷடாச்’ரயை:
உன்னயத்யஜ ஸுஷும்னயா ச’னை: || ( 4 – 9)


ஜனனம் இல்லாத ஈசனே! நிர்விகல்ப சமாதியில் வெற்றியடையும் போது, சத்யோ முக்தியை விரும்பும் யோகியும் சரி, கிரம முக்தியை விரும்பும் யோகியும் சரி, பிராணாயாமத்தால் வசப்படுத்தப்பட்ட சுஷும்னா நாடி வழியாகவும் , ஆறு ஆதாரச் சக்கரங்கள் வழியாகவும் பிராண வாயுவை கிராமமாக மேலே கொண்டு போகின்றனர். (4 – 9)
 
லிங்க3 தே3ஹமபி ஸந்த்யா ஜன்னதோ2
லீயதே த்வயி பரே நிராக்3ரஹ: |
ஊர்த்த4வலோக குதுகீ து மூர்ததாஸ்
ஸார்த்த4மேவ கரைணைர் நிரீயதே || (4 – 10)

சத்யோ முக்தியை விரும்பியவன் பிராண வாயுவை புருவம் வரையில் கொண்டு போன பின்பு லிங்க சரீரத்தை விட்டு விட்டு தங்களிடம் சாயுஜ்ய முக்தியை அடைகின்றான். கிரம முக்தியை விரும்பியவன் தலை உச்சியின் வழியாக ஐந்து பிராணன்கள்; பத்து இந்திர்யங்கள்; மனசு புத்தி இவற்றுடன் கூடிய லிங்க சரீரத்துடனையே உடலை விட்டு வெளியே செல்கின்றான். (4 – 10)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top