த3ச’கம் 100 ( 1 to 5)
கேச’ ஆதி3 பாத3 வர்ணனம்
அக்3ரே பச்’யாமி தேஜோ நிபி3ட3தர கலாயாவலி லோப4நீயம்
பீயூஷாப்லவிதோஹம் தத3னு தது3த3ரே தி3வ்ய கைசோ’ர வேஷம் |
தாருண்யாரம்ப4 ரம்யம் பரமஸுக ரஸாஸ்வாத் ரோமாஞ்சிதாங்கை3:
ஆவீதம் நாரதா3த்4யை விலஸத்3 உபநிஷத் ஸுந்த3ரி மண்ட3லைச்’ச|| ( 100 – 1)
நான் மிகவும் நெருக்கமான காசாம்பூக் கூட்டம் போன்ற அழகான ஒரு தேஜசை என் எதிரில் பார்க்கிறேன். அதனால் நான் அமிர்தத்தில் மூழ்கடிக்கப் பட்டவன் போல ஆகிறேன். அதன் பின் அதன் நடுவில் தெய்வத் தன்மையோடு கூடினதாகவும், யௌவன வயதின் ஆரம்பத்தில் இருப்பதால் மிக அழகானதாகவும் உள்ள, ஒரு குழந்தையின் வடிவைக் காண்கிறேன். பரமானந்த ரசத்தை அனுபவித்து, மயிர்க் கூச்சடைந்த அவயவங்களை உடைய, நாரதர் முதலானவர்களும், சோபிக்கின்ற உபநிஷத்துகள் ஆகிய சுந்தரிகளின் சமூஹங்களும் அதனைச் சூழ்ந்திருப்பதையும் பார்க்கிறேன்.( 100 – 1)
-----------------------------------------------------------------------------------------------------------------------
நீலாப4ம் குஞ்சிதாக்3ரம் க4னமமலதரம் ஸம்யதம் சாரு ப4ங்க்3யா
ரத்னோத்தம் ஸாபி4ராமம் வலயித முத3யச் சந்த்3ரகை: பிஞ்ச2 ஜாலை:|
மந்தார ஸ்ரங்நிவீதம் தவ ப்ருது2கபரீபா4ரமாலோகயேஹம்
ஸ்நிக்3த4 ஸ்வேதோர்த்4வ புண்ட்3ராமபி ச ஸுலலிதாம் பா2ல பா3லேந்து3வீதீ2ம் || ( 100 – 2)
நீலநிறம் உடையதும், நுனியில் வளைந்ததும், அடர்ந்ததும், சுத்தமானதும், அழகான மடிப்புடன் கட்டப்பட்டதும், ரத்தின மயமான நகைகளால் அழகடைந்ததும், விளங்கும் மயில் கண்களால் அழகு பெற்ற மயில் தோகைகளின் வரிசைகளால் சுற்றப்பட்டதும், மந்தார மாலையால் சுற்றப் பட்டதும் ஆகிய தங்களுடைய தலை ரோம பாரத்தையும்; பளபளப்புள்ள, வெண்மையான, ஊர்த்துவ புண்ட்ரத்தையும்; அழகான இளஞ் சந்திரனைப் போன்ற நெற்றித் தடத்தையும்; நான் பார்க்கிறேன்.( 100 – 2)
-----------------------------------------------------------------------------------------------------------------------
ஹ்ருத்3யம் பூர்ணானு கம்பார்ணவ ம்ருது3லஹரி சஞ்சல ப்4ரூவிலாசை:
ஆநீல ஸ்நிக்3த4 பக்ஷ்மாவலி பரிலஸிதம் நேத்ர யுக்3மம் விபோ4 தே|
ஸாந்த்3ரச்சாயம் விசா’லாருண கமலத3லாகர மாமுக்3த4 தாரம்
காருண்யா லோகலீலா சி’சி’ரித பு4வனம் க்ஷிப்யதாம் மய்யநாதே2 || ( 100 – 3)
ஹே பிரபுவே! நிறைந்த கருணைக் கடலின் மெதுவான பிரவாஹத்தாலும், சலிக்கின்ற புருவங்களின் லீலைகளாலும், மனோஹரமனதும்; மிகவும் கருத்த, பளபளப்பான, இமைமயிர்க் கூட்டத்துடன் விளங்குவதும்; அடர்ந்த, காந்தியையுடைய, அகன்று, சிவந்து, தாமரை இதழ் போன்ற வடிவம் உடையதும்; மிகவும் மனோஹரமான கருவிழிகளை உடையதும்; கருணை கூர்ந்த பார்வையின் லீலையால் உலகங்களைக் குளிர்விப்பதும்; ஆஆகிய தங்களுடைய இரண்டு கண்களும் அனாதை போன்ற என் மேல் செலுத்தப்படவேண்டும் ( 100 – 3)
-----------------------------------------------------------------------------------------------------------------------
உத்துங்கோ3ல்லாஸி நாஸம் ஹரிமணி முகுர ப்ரோல்லஸத்3 க3ண்ட3பாலீ
வ்யாலோலத்கர்ண பாசா’ஞ்சித மகரமணி குண்டல த்3வந்த்3வ தீப்ரம்|
உன்மீலத்3 த3ந்த பங்க்தி ஸ்புரத3ருணதரச் சாய பி3ம்பா3த4ராந்த:
ப்ரீதி ப்ரஸ்யந்தி3 மந்த3ஸ்மித மது4ரதரம் வக்த்ரமுத்3 பா4ஸதாம் மே || ( 100 – 4)
உயர்ந்து பிரகாசிக்கின்ற மூக்கை உடையதும்; இந்திர நீலக் கல்லால் ஆன கண்ணாடிபோல விளங்குகின்ற கன்னப் பிரதேசங்களில், அசைகின்ற காதுகளில் தரிக்கப்பட்ட ரத்ன மயமான மகர குண்டலங்களால் பிரகாசிக்கின்றதும்; அழகிய பல் வரிசைகளை உடையதும்; மிகச் சிவந்த நிறமுடைய கோவைப்பழம் போன்ற உதடுகளின் மத்தியில் பிரீதியைப் பெருக்குகின்ற புன்னகையால் மிகவும் மதுரமானதும்; ஆகிய தங்கள் திருமுகம் எனக்கு நன்கு பிரகாசிக்க வேண்டும்.(100-4)
-----------------------------------------------------------------------------------------------------------------------
பா3ஹு த்3வந்த்3வேன ரத்னோஜ்ஜ்வல வலயப்4ருதா சோண பாணி ப்ரவாலேன்
உபாத்தம் வேணு நாலீம் ப்ரஸ்ருத நக2மயூகா2ங்கு3லீ ஸங்க3 ஸார
க்ருத்வா வக்த்ராரவிந்தே3 ஸுமது4ர விகஸத்3 த்3ராகமுத்3பா4வ்யமானை:
ச’ப்த3 ப்ரஹ்மாம்ருதைஸ்த்வம் சி’சி’ரித பு4வனை: ஸிஞ்ச மே கர்ண வீதீம்||(100- 5)
ரத்தினங்களால் பிரகாசிக்கின்ற வளையல்களை தரித்த; சிவந்த தளிர் போன்ற உள்ளங்கைகளை உடைய; இரண்டு கைகளால் எடுக்கப்பட்டு, எங்கும் பரவிடும் நகங்களின் காந்தியை உடைய விரல்களின் சேர்க்கையால் சித்திர வர்ணம் உடைய புல்லாங்குழலைத் தாமரைத் திருமுகத்தில் வைத்துக் கொண்டு; இனிமையான ராகங்களால் உலகங்களைக் குளிர்விக்கின்ற நாதபிரம்மம் ஆகிய அமிர்தத்தால் என் காதுகள் ஆகிய வீதிகளைத் தாங்கள் நனைக்கவேண்டும்.(100-5 )
---------------------------------------------------------------------------------------------------------------------