H
hariharan1972
Guest
உயர்திரு ராமா அவர்களே,
ஆங்கிலத்தில் எழுதி அலுத்துவிட்டமையாலும், இப்போது தான் என் கணணியில் தமிழ் எழுத்துவடிவங்கள் அமைக்கப் பெற்றதாலும் தமிழிலேயே எழுதுகிறேன்.
மறைக்கு வேதம் என்ற பொருள் கொண்டு பார்த்தால், மறைக்கு ஆரம்பமும் முடிவும் கிடையாது என்பது நம்மில் பலரது கொள்கைப்பாடு.
அதை புறங்கூறவோ அல்லது மாறான நிருபணம் செய்யவோ நான் விழையவில்லை.
பிரச்சனை இது தான் :
அதாவது மறைகளிலே, சில பகுதிகள் (எ.கா : புருஷ சுக்தா) என்பன பின்னாளில் புகுத்தப்பட்டன என்ற கருத்துடையவர் பலர்.
அது சரியோ, தவறோ, நான் படித்தமட்டில் சில மறை நூல்கள் பிறப்பாலே வேற்றுமையைப் படுத்துவதை ஆதரிப்பதைப் போல இருப்பதால், இது இறைவனின் வாக்கு அல்லது விருப்பம் என்பது பிராமணர்கள் அல்லாத சமூகத்தினருக்கு ஏற்புடையதாகயில்லை.
இது நான் வேறு இணையதளத்தில் இயங்கும் போது காணப்பெற்ற விவாதங்களில் நான் அறிந்தது.
அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமாக கூட மறைகளின் ஆதியை அறிய முடியாதா என்று கேட்போரும் உளர்.
தற்காலத்துக்கு ஒத்துப்போகாத சில பகுதிகள் தாம் மறையின் மீது இருக்கும் துவேஷத்திற்கு காரணமென்று நினைக்கிறேன்.
ஆக இந்த பிரச்சனையை அணுக வேண்டிய கட்டாயம் உள்ளதாகவே நான் எண்ணுகிறேன்.
அது கிடக்க,
கடவுளை அறிய உதவும் எந்த ஒரு படைப்பையும் நான் மறை என்று பொதுப்படையாகவே சொன்னேன்.
அதில் தவறிருப்பினும், கடவுளை அறிய முற்பட்டதில் பிராமண சமூகம் முன்னோடியாக இருந்தது என்பது என் கருத்து.