• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

Dear Sir,

The mind is mysterious..the more we analyze it the less we know.

I wonder upon death how does the mind express itself?
Do thoughts actually need a neuronal network of a functioning brain to express itself or it can it function as an independent unit after death?
No idea!

Thoughts are waves...waves are meant to be pulsatile..brain waves on EEG itself has its pattern.
So a straight line pattern of a brain wave does not exist in the living.
So what is the control of the turbulent mind all about?
Is it setting it into "indifferent mode" or just witnessing the ups and downs of life from a different perspective as not to be influenced or affected by the multipolarity of life?
From my personal understanding I feel changes in the human body are cyclical/pulsatile/cicardian in nature.
Nature never intended us to be non responsive to any situation cos that would only spell extinction of species..there could be a possibility that we actually need not restrict our mind but learn to observe its functions and expressions.
The mind does not ever shut down or be still cos subconscious functions in the background.
Its learning to observe the patterns of the mind and interpreting it for the best outcome could be the way out instead of forcing ourselves to restrict every single thought.
For example...When I see a good looking man..I do not restrict my mind and tell myself "Dont look..dont think he is handsome..dont admire him...its wrong"...instead I tell myself "well there goes a handsome creature ..God surely did a good job designing him".
When we restrict our thoughts we create an imprint but when we let the thought traverse our mind..it simply exits without any residual effect.
Last but not least...easily said than done!LOL

Doctor,

Wonderful line of thinking. These are endless quries going on for generations but difficult to get answers. When we analyse thoughts, the question of "who is the that thinker who directs the process ?" occurs. Science could not get a convincing answer so far.

Let us continue our search .........

Brahmanyan,
Bangalore.
 
We can not control the birth of the thoughts but we can channelize them in one direction.

At least this is what our yoga guru has taught us.

When the thoughts running in various directions are unified in one single direction

they can become as powerful as a laser beam.

It is said that a laser beam sent from earth can reach the moon's surface with its diameter still

remaining less than one foot.

Thoughts lead to speech and speech lead to action.

So by controlling the direction and propagation of our thoughts and refraining from

idle chit chat one can create tremendous internal energy.

It can make the person Trikaala jnAni, able to know everything from he sits without even opening the

eyes. The power of mind is both mystique and mysterious.

That is why it is easier to conquer the external world than the world within us!


 
Recap #25

ஊசி போல உடம்பு!

அமெரிக்காவில் வின்டரில் குளிர் துளைக்கும்
ஊசி போல, உடலை எலும்பு வழியே ஊடுருவி!

பனிக்கட்டியின் உறைநிலை நிலவும் போது
குளிர்காற்றும் சேர்ந்து கொண்டால் பிறகு!!!

sweater + cap + gloves போட்டுக் கொண்டு
முழங்காலால் நான் Morse Code அடிக்கும்போது

ஊசிபோல ஒருவரைக் கண்டு வியந்து நின்றேன்.

வெறும் ஒரு டீ ஷர்ட் + ஜீன்ஸ் மட்டும் அணித்து
டக் டக் டக் என்று நடந்து செல்வதைக் கண்டு!

அந்தக் குளிரில் சிவாஜி போல அந்த நடையா?
அவரும் ஓருவேளை "cold blooded" ஆனவரா???
 
Recap #26


"ஜெட் லேக் எப்போப் போகும்?"

நாடு நாங்கள் திரும்பும் முன்னரே,
வீடு நாங்கள் திரும்பும் முன்னரே,

விசிட் செய்யத் தயார் ஆகிவிட்டனர்
விருந்தாளிகள் இந்தியாவில் சிலர்!

ஆறு மாதங்கள் பூட்டிக் கிடந்த வீடு
தாறுமாறாக இருக்கும் அல்லவா?

தூசி தட்டி, சுத்தம் செய்து, வீட்டின்
மாசுக்களைச் சரிசெய்ய வேண்டாமா?

"அடுந்த நாளே வர வேண்டாம் நீங்கள்,
அடுத்த வாரம் வாருங்கள்!" என்றால்...

அதி மேதாவித்தனமான கேள்வி வரும்!
"அது சரி எப்போப் போகும் உன் ஜெட்லேக்?"

ஜெட்லாக் நாம் அழைத்து வரும் விருந்தாளியா?
ஜெட்லாக் ஒரு நாளும் இருக்கலாம் அல்லது

ஒரு வாரம் பத்து நாள் இருக்கலாம் அல்லவா?
சரியாகப் பன்னிரண்டு மணி நேரம் வேறுபாடு!

'ஆடாமல் ஆடுகிறேன்!' என்று பாடாமல் பாடி
ஆடிச் சரியாக வேண்டும் இந்திய நேரத்துக்கு!

பகல் எல்லாம் தூக்கம் கண்களைச் சுழற்றும்;
இரவெல்லாம் பசி சிறு குடலைப் பிசையும்.

அடுக்களையில் சமைக்க எதுவும் இருக்காது!
அடுக்க வேண்டும் அத்தனையையும் வாங்கி!

வாழ்க்கையில் பாலக்காட்டையும், பழனியையும்
வழக்கமாகத் தாண்டி இராதவர்களுக்கும்;

எதையும் கேட்டுப் புரிந்து கொள்ளாதவர்களுக்கும்;
இது புரியும் என்று எதிர்பார்ப்பது நம்முடைய தவறே!
 
Recap #27

Buffet

உடல் வீங்கி விடுகிறார்கள் இங்கு
உள்ள மனிதர்கள் எல்லோருமே!

"அடித்து இறக்குவது" என்று கேட்டுள்ளேன்!
அதை நேரில் கண்டேன் உணவு விடுதியில்!

கொடுத்த பணத்துக்கு வஞ்சனை இன்றி
அடித்து இறக்குகிறார்கள் உணவை உள்ளே!

பத்து டாலர் கொடுத்துவிட்டு உண்பதோ
பார்க்கும் உணவுவகைகள் எல்லாமே!

எப்படிக் கட்டுப் படியாகும் ஓனருக்கு?
எப்படியோ ஆகின்றது நிச்சயமாக!

இல்லாவிட்டால் என்றைக்கோ இதை
இழுத்துப் பூட்டி இருப்பார்கள் அன்றோ!

நினைவுக்கு வந்தது இந்தப் பொன் மொழி!
Don't dig your grave with your fork and knife!


 
செல்வாக்கும், செல்லாத வாக்கும்!


செல்வாக்கு இருந்தால் கேட்காமலேயே கிடைக்குமாம்.

செல்லாத வாக்கு இருந்தால் கேட்டாலும் கிடைக்காதாம்.


இப்போது புரிந்தது நான் விரும்புவது எதுவும் ஏன் கிடைப்பதில்லை என்று!

எப்போதோ நான் என்னை ஒரு DEVOTEE என்று ஆக்கிக் கொண்டுவிட்டேனே!


DEVOTEE = ஓட்டு இல்லாதவர் = செல்லாத வாக்கு உடையவர்! :pout:

செல்லாத வாக்கினால் பொல்லாத சொல்லடி படவேண்டியுள்ளது! :(
 
வெந்த புண்ணும், சொந்த நலனும்!


செல்லாத வாக்கு நமக்கு இருந்தால்

செல்லுவது என்ன என்று தெரியுமா?


நாம் சொல்லாத பொல்லாத சொற்கள் :tape2:

நாம் சொன்னது போல் ஒலி பரப்பாகும்! :gossip:


வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது இது தானோ?

சொந்த நலனைப் பேணுவதற்கு வழி இது தானோ?
 
A PRAYER! :pray:

Worthy of HIM I should become,
The lovely God the size of a thumb;
Who hides in our hearts playfully,
The safest hide-out universally!

Let my mind vanish completely,
Like the misty vapors in Sunshine.
Let HIM guide my hand willingly,
He who makes the stars shine!

Let me be an instrument in His hands,
And just a bundle of aches and pains;
May I see only what HE wants me to see,
May I do only what HE wants me to do.

May I speak only what HE wants me to say,
May I hear only what HE wants me to hear;
Nay, nay, it is time to drop the “I” and “mine”,
And be controlled by the Power Divine!

We think that we own the world,
As masters of the things we hoard;
While in truth we do not possess,
Even our very own foolish selves!

Visalakshi Ramani.

 
It rained here a few days ago!

Internet is playing hide and seek ever since!!

The reason???

~800 cables got damaged in the rain.

The effect???

Roads will be dug up again.

Our city will resemble an excavations site for many more weeks to come!!! :rolleyes:
 
[h=1]உரிமை, கடமை[/h]
உரிமைப் போராட்டம் என்ற ஒன்று,
உலகமெங்கும் நிரவியுள்ளது இன்று.
பெண் உரிமைப் போராட்டம் என்றும்,
பெண் விடுதலைப் போராட்டம் என்றும்,

முதியோர் உரிமைப் போராட்டம் என்றும்,
மாணவர் உரிமைப் போராட்டம் என்றும்,
எண்ண முடியாதபடி போராட்டங்கள்
எங்கிருந்து வருகின்றன? எதற்காக?

தாய் தந்தையரைக் காக்க வேண்டும்
தனயர்கள், என்று சட்டம் இயற்றும்
அவல நிலைக்கு, அரசே தள்ளப்படும்
அவசியம் ஏன், எப்படி ஏற்பட்டது?

உரிமைகளைப் பற்றிப் பேசும்போதே,
உடன் நிழலாகத் தொடருகின்ற நமது
கடமைகளையும் தவறாமல் நமது
கருத்தில் கொள்ள வேண்டுமன்றோ?

ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை,
ஒன்று விடாமல் செய்தோம் என்றால்,
எங்கிருந்து தொடங்கும் உரிமைப்போர்?
எதற்காகத் தொடங்கும் உரிமைப்போர்?

பெற்றோரைத் தாம் பேணுவது கடமையாகப்
பிள்ளைகள் எண்ணினால், சட்டம் எதற்கு?
பெற்றோர் புகார் அளிக்கவும் வேண்டாம்;
பிள்ளை காவலரிடம் சிக்கவும் வேண்டாம்.

மாண்பு மிகு மந்திரிகள் தம் கடமையை,
மாண்புடன் செய்து கொண்டு வந்தால்,
மாறி மாறி மகளிரும், மாணவர்களும்,
மறியல் போராட்டம் நடத்த வேண்டாமே!

உரிமை, உரிமை எனக் கூட்டம் கூடி,
உரத்த குரலில் நாம் போராடும் முன்பு,
கண நேரம் எண்ணிப் பார்ப்போம், நமது
கடமைகளை சரிவரப் புரிகின்றோமா?

கடமைகளும், உரிமைகளும் ஒன்றாகக்
கலந்து பின்னிப் பிணைந்துள்ளன அன்றோ!
ஒருவரின் உரிமை மற்றவரின் கடமையில்,
ஒளிந்துள்ளதை அறிந்தால் வழக்கு ஏன்?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
கடமைகளும், உரிமைகளும் ஒன்றாகக்
கலந்து பின்னிப் பிணைந்துள்ளன அன்றோ!
ஒருவரின் உரிமை மற்றவரின் கடமையில்,
ஒளிந்துள்ளதை அறிந்தால் வழக்கு ஏன்?

But with regards to casting the vote

OUR own Responsibility (Kadamai)

lies in OUR own Right (Urimai)!

ஓட்டுப் போட முடிவது நம் உரிமை.

ஓட்டுப் போட வேண்டியது நம் கடமை.

So The permission to cast vote is our Right.

And the casting of the vote is our Responsibility.
 
தொங்கு சட்டசபை வரலாம் என்கின்றார்கள்!


தூங்கும் சட்ட சபையைவிட இதுவே மேல்.

தொங்க சட்ட சபையை விட இதுவே மேல்!


குறிப்பு ( தேவைப் படுபவர்களுக்கு மட்டும் ):

'தொங்க' என்றால் சுந்தரத் தெலுங்கில் 'திருடன்' என்று பொருள்!
 
Recap #28.

கூழும் வேண்டும், மீசையும் வேண்டும்!


ஜூலை மாதம் வருந்தி வருந்தி அழைத்தனர்
ஜம்மென்று மௌண்ட் ரஷ்மோர் செல்வதற்கு!

நல்ல கிளைமேட் ! உடல் நிறைய சக்தி இருந்தது.
பொல்லாத மனம் மட்டும் ஒத்துழைக்கவில்லை.

"வேண்டாம் வேண்டாம்!" என்று மறுத்துவிட்டு
"வேண்டும் வேண்டும்!" என்றோம் நவம்பரில்.

SUB ZERO TEMPERATURE என்றவுடனே
சப்த நாடியும் அடங்கி விட்டது இருவருக்கும்!

விடவும் மனம் இல்லை! போகவும் துணிவில்லை!
விட்டால் இன்னமும் வயது கூடும் அல்லவா?

இறுதியில் வென்றது கூழ் தான்! மீசை அல்ல!
உறுதியுடன் குளிரை சமாளித்துச் சென்று வந்தோம்.

ஊதல் காற்று என்று ஏன் பெயர் தெரியுமா?
ஊதல் சப்தம் கேட்கிறது அது வீசும் போது!

உடையைத் துளைத்து, எலும்பைத் துளைத்து
உடலையும் துளைக்கும் வல்லமை வாய்ந்தது!

கார்கள் எல்லாம் frost icing உடன் நின்றன
காலையில் கலர்ஃ புல் கேக்குகளாக மாறி!

சிகரெட் இல்லாமலேயே புகை விட்டோம்
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும்!

விரல் நுனிகள் மட்டும் ஐஸ் கட்டிகள் ஆயின.
விரல் நுனிகளில் ரத்த ஓட்டம் குறைவு தானே!
 
Recap #29.

JET LAG VS GET TOGETHER

ஒன்றரை வயதுப் பேரன் இந்தியா வந்தான்
மூன்று வார விடுமுறையில் என் மகனுடன்!

பிரார்த்தனைகளும் சில வேண்டுதல்களும்
பின் தொடர்ந்து வந்தன நான்கு ஆண்டுகளாக!

கல்யாண உற்சவம் முதன்மை வேண்டுதல் !
கந்தனின் தங்கத் தேர் இழுப்பது இரண்டாவது!

குலதெய்வங்களின் கோவில் விசிட் மூன்றாவது.
குடும்பத்தினரை விசிட் செய்வது நான்காவது.

இருப்பதோ ஏழு நாட்கள் மட்டுமே எங்களுடன்.
இருக்கும் அந்த ஏழு நாட்களில் என்ன முடியும்?


ஜெட் லேக் வந்தது போதாது என்பது போல
ஜெட் லேக் உடன் வந்தது ஜலதோஷமும் கூட!

பகல் முழுவதும் அவர்கள் அசந்து உறங்கினார்கள்.
பகல் ஆக்கினார்கள் நம்முடைய இரவுப் பொழுதை.

வீடு முழுவதும் ஓடி ஓடி இறைத்தான் பேரன்
வீட்டில் உள்ள அத்தனை பொருட்களையும்.

மெர்குரி என்று அவனுக்குப் பேர் வைத்தேன்.
மெர்குரி தினம் வீட்டில் செய்ததோ சுனாமி!

எப்படியோ பிரார்த்தனைகளை முடித்தோம்
எங்களுடன் இருந்த அந்த ஒரு வாரத்தில்.

கல்யாண உற்சவத்தில் கண்மூடி உறங்கிப் போனது
கண்டு பிடியுங்கள் யார் என்று! சாக்ஷாத் நானே தான்!
 
Recap #30

கிளுகிளு! கிசுகிசு!

ரோடோரம் நின்று கொண்டும் சீறி வரும்
ஆட்டோக்களையும் தவிர்த்துக் கொண்டும்

சுவாரசியமாகப் படிப்பது சுவரொட்டிகள்!
சுவையான, திகிலான செய்தித் தலைப்புகள்!

ஒரு நாள் செய்தி படிக்காவிட்டாலும் சரிதான்
நூறு துண்டுகள் ஆகிவிடும் போலும் மண்டை!

தமிழ்ப் பத்திரிகையில் உள்ள திடீர் சுவாரசியம்???
தமிழ் பற்று இல்லாதவர்களிடம் காணும் அதிசயம் !!!

குட்டு வெளிப்பட்டது ஒரு நன்னாள் மாலை நேரம்.
எட்ட நின்று கம்ப்யூடர் திரையைக் கண்ட போது!

வம்பை வளர்த்துவெம்பிப் பழுக்க வைக்கும்
நம்ப முடியாத பலானஅறிவுச் சுரங்கங்கள்!

குனித்து கொண்டு எப்போதும் எதையோ தேடும்
இனிக்(இளிக்)கும் அரைகுறை ஆடை அழகிகள்.

(அரை குறை ஆடை = 50% ஆடைகள். எனவே இவை
முக்கால் குறை ஆடைகள்... 25% மட்டுமே இருப்பதால்!)

கிளுகிளுவும், கிசுகிசுவும், படாத பாடு படுத்தும்
கிழ, வயோதிக, வாலிப அன்பர்களை! உண்மை!


 
கால் குறை பெரிதா அல்லது முக்கால் குறை பெரிதா?

எடுத்த எடுப்பில் எல்லோருமே
முக்கால் குறை தான் பெரிது என்பார்கள்.

உண்மையில் கால் குறை தான் பெரிது.

காரணம்...???

அரை குறை என்றால் 50% குறைகிறது.

அதனால் அரை குறை = (100 - 50) = 50%

முக்கால் குறை என்றால் (100 - 75) = 25%

கால் குறை என்றால் (100 - 25) = 75%

இப்போது கூறுங்கள் எது பெரிது என்று!

முழுக் குறை ஆகாத வரையில் சரி தான்! :rolleyes:
 
Is casting vote in the election our

Urimai??? OR Kadamai??? :decision:

Its FREE WILL! LOL


I have never voted in my life...those who ask me why..my reply is "I dont want to acquire the Karma to be a contributory factor for corruption"

You see all politicians eventually compromise their values and succumb to corruption...so if I voted him in..that means I was also a contributory factor!LOL
 
Its FREE WILL! LOL


I have never voted in my life...those who ask me why..my reply is "I dont want to acquire the Karma to be a contributory factor for corruption"

You see all politicians eventually compromise their values and succumb to corruption...so if I voted him in..that means I was also a contributory factor!LOL


Dear Renu,
In India IF I don't cast my vote...someone else will cast my vote.
So I will be incurring sin not once but twice.

Once is for not doing my duty by using my liberty to vote
and the other for letting someone else steal my vote!

All said and done we do need a government to run the show.
If the choice is between the Mad and the Bad, it is better to choose the mad guy!

Who knows he might get cured of his madness one fine day
whereas the bad guy will remain bad his entire life! :rolleyes:
 
RECAP #31

Unlimited craze!

Unlimited என்று உற்சாகமாக
உள்ளே தள்ளுவதன் பலன்...:hungry:

ஸ்மால், மீடியம், லார்ஜ் மாறி
XL, XXL, XXXL என்றாகிவிட்டது! :shock:

உணவு unlimited ஆனாலும்
உடலும், இதயமும் limited!!!

கால்கள் எத்தனை பளு தாங்கும்?
கால் வரை ரத்தம் செல்வதற்கு

எப்படித் துடிக்கும் இதயம் என்று
என்றாவது சிந்திக்க வேண்டாமா? :(
 
Recap #32.

சிரிப்பு எங்கே போனது?

மூன்று மாதக் குழந்தையுடன் முழுதாக
மூன்று மாதங்கள் தங்கி விட்டு வந்தால்

என்ன என்ன மாறுபடும்? எது வேறுபடும்?
மின்னும் சிரிப்பு மறைந்து விடும் முதலில்!

எண்ணவே என்னவோ செய்யும் அடுத்தது!
கண்ணனுக்கும் கூட அது போலவே தான்!

கண்கள் விரியக் கன்னம் குழியச் சிரிக்கும்
கண் திருஷ்டிபடும் சிரிப்பு எங்கே போனது?

கணினியில் கண்டதும் நம்மிடம் எடுத்துக்
கண்ணன் கொஞ்சச் சொல்லும் பொழுது

கணினி வழியாகக் கொஞ்சுவது எப்படி??? :noidea:
கண்ணனின் அழுகையை மாற்றுவது எப்படி??? :(
 
Recap #33

Restaurant style!

நாக்குச் செத்துக் கிடப்பவர்களுக்கு
நம்ம ஊர் சமையல் ரொம்பப் பிடிக்கும்! :love:

யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
என்று அழைப்பர் நண்பர்களை விருந்துக்கு! :grouphug:

எல்லாமே restaurant ஸ்டைல் தான் அப்போது.
எல்லோரும் உண்பதும் அப்போது unlimited food! :popcorn:

அப்படித் தானே விளம்பரம் செய்கிறார்கள் இங்கு!
unlimited masal dosa - one of the top ten foods !

இதிலும் கூடவா அந்த ' டாப் டென்' வரிசை???
எதிலும் அது இருக்கும் போலத் தோன்றுகிறது. :)

முதலில் தொடங்கிய அந்த restaurant ஸ்டைல்
முடிவு வரையிலும் தொடருவது உண்மைதான்!

எல்லோரும் உண்ட பிளேட்டை வைத்துவிட்டு
செல்வார்கள் ஸ்டைலாக எழுந்து நடந்து.

Restaurant என்றால் செக்கும், மேலே டிப்சும்
மறக்காமல் வைத்துவிட்டுப் போவர்கள்!

மறந்து விடுவார்கள் இங்கே செக்கும் டிப்சும்.
மறக்காமல் இங்கே விடுவது plate மட்டுமே! :mad2:

'மகன் எடுக்கக் கூடாது' என நான் முந்திக் கொள்ள
மகன் 'நான் எடுக்கக்கூடாது' என்று வந்து முந்த

பெண்புத்தி பின்புத்தியாக வேலை செய்து
பெண்களே பின் எடுத்தார்கள் தட்டுக்களை. :der:

அன்பினால் செய்கின்றோம் நாம் - நம்முடைய
உடல் சக்திக்கு மீறிய கடின வேலைகளை. :roll:

துன்பம் விளைகிறது மனதில் - அதே அன்பு
உண்பவர்கள் மனதில் இல்லாது போனால். :(







 
Some people are used to screwing the ears of the other

less fortunate people / lesser children of God (?) all the time.

If they do not have enough ears to keep them busy throughout the day,

they will settle for some crazy jewels which need screwing all the time! :rolleyes:
 
I met a family where the siblings themselves are

once/ twice removed or even thrice removed.

And the cousins once/twice/thrice removed...???

They are as good as non existent. :rolleyes:

So much for family bonding and love in the family!
 

Latest ads

Back
Top