சிரிக்க! :decision: சிந்திக்க!
இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்???
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு வெட்கத்துடன்
எங்கோ இருக்கும் காதலனிடம் பேசும் கல்லூரி மாணவி;
மறந்து போன instructions கையை ஆட்டியபடி
யாருக்கோ விவரமாகச் சொல்லும் working – woman;
ஓடி வந்து பஸ் ஏறும்போதும்
பேசிக்கொண்டே வரும் வாலிபன்;
தியேட்டரில் படம் பார்க்காமல் செல்போனில்
காதலியின் புகைப்படத்தைப் பார்த்து பார்த்து
புளகம் அடையும் கல்லூரி இளவட்டம்;
நேரத்தை வீணாக்காமல் பல வேலைகளை சாதிக்கும்
இளைய தலைமுறையின் துருதுரு executive;
டிரைவ் செய்து கொண்டே பேட்டி அளிக்கும்
நட்சத்திர நாயக, நாயகியர்கள்;
ஓரக் கண்ணால் “அப்பா வருகிறாரா?” என்று
நோட்டம் இட்டுக் கொண்டே, பால்கனியில் நின்று
அரை மணி அரட்டை அடிக்கும் பெண்ணும்;
“வீட்டில் நுழைந்தால் அம்மாவின் பாம்புச் செவிக்கு
எதுவுமே தப்பாது!” என்று பைக்கில் இருந்து
இறங்கியதுமே, அடுத்த conquest பற்றி
பிளான் செய்யும் லோக்கல் ஹீரோவும்;
“கணவன் எங்கே திரிகிறான்?” என்று கண்டு பிடிக்க
ஆபீஸ் நம்பருக்கு போன் செய்யும் மனைவியும்;
“மனைவி வீட்டில் இருக்கிறாளா அல்லது ஷாப்பிங் /
சினிமா/ லேடீஸ் கிளப் சென்று விட்டாளா?” என்று
துப்பறிய random ஆக போன் செய்யும் கணவனும்;
இவர்கள் எல்லோரும் செல்போன் வரும் முன்பு
என்ன செய்துகொண்டிருந்தார்கள்???