ஒரு வழிப்பாதை
ஒரு வழிப்பாதை, இரு வழிப்பாதை,
புதியதன்று, மிக மிகப் பழையதே!
“எல்லா பாதையும் செல்லும் ரோம் நகர்”,
என்பார் முன்பு சரித்திரவாணர்.
எல்லாப் பாதையும் செல்லும் கண்ணனிடம்,
எந்த பாதையும் திரும்பாது அங்கிருந்து!
தாய் போல் வந்த மாயப் பூதனையும்,
தன் உயிர் விட்டாள், திரும்பவில்லை!
வேகத் திகிரியாகச் சுழன்று வந்தவன்,
தாமரைத் தாள் பட்டுச் சூரணம் ஆனான்!
புயல் போல் கண்ணனைத் தூக்கிப் பறந்தவன்,
புழுதிக் குவியலாய்க் கீழே விழுந்தான்!
வந்தான் வத்சாசுரன் அழகிய கன்றாய்!
வந்தவன் அசுரன் என்று அறிந்ததும்,
கால்களைப் பற்றி, சுழற்றி, எறிந்து,
காலனாய் மாறினான், கார் வண்ணன்!
வானளாவும் ஒரு பறவை உருவுடன்,
வஞ்சித்து நின்றான் பகாசுரன் – அவன்
வாயினைப் பிளந்து, வானுலுகுக்கு
வழி நடச் செய்தான் நம் கண்ணன்!
மலை அளவு உயர்ந்த மலைப்பாம்பாக,
மண்ணில் கிடந்தான் கோர அகாசுரன்.
மயங்கி வாயினுள் நுழைந்த சிறுவரை,
மனம் கனிந்து காத்தான், மாயக் கண்ணன்!
வந்த வேகத்தில் மறைந்து போயினர்,
தேனுகன், பிரலம்பன், கேசி, அரிஷ்டன்!
வந்தவர்களைக் காணோம் என்று,
தேடினாலும் காண முடியாது எங்குமே!
வைரிகள் தோற்று, வெந்து, மடிந்து,
ஒரு வழி பாதையில் போவது போல,
பிரியர்கள் கண்ணனைப் பிரிய முடியாமல்,
ஒரு வழி பாதையில் செல்வர் அவனிடம்!
“கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்”,
என்று இறைவனைப் புகழ்வது போலச்
“சென்றவர் மீண்டிலர், மீள்பவர் சென்றிலர்”,
என்ற இதுவும் ஒரு வழி பாதையே!
வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி
THIS TOO IS AN ONE WAY TRAFFIC!
One way traffic and two way traffics are not new to the world.
“All roads lead to Rome” is an old adage. Similarly all roads lead to KrishnA but none of them come back from Him!
PUthanA feigned to be an affectionate mother, while breast feeding KrishnA. But she gave up her life and never went back to the place where she had come from.
S’akatAsurA who came in the guise of a propelling wheel, was shattered to a thousand pieces by a kick inflicted by the lotus feet of infant krishnA.
ThrunAvarthA, who lifted up Krishna in the form of a hurricane, trying to kill Him, instead got killed by KrishnA.
VatSAsurA who appeared as a calf, was whirled round and flung to his death, quite playfully by KrishnA.
BakAsurA the giant bird was torn into two pieces by KrishnA with His bare hands.
aghAsurA who came in the guise of a giant pyhton, DhEnukA, PralambA, KEsi and ArishtA all disappeared from the face of the earth and never went back.
The enemies of KrishnA give up their ghosts and never return. But those who adore and love Him also never come back – since they can’t stand the separation.
There is a famous saying about God.
“Those who have seen Him, never speak about it.
Those who speak about it, have never seen Him”
Similarly “Those who go to KrishnA, never return.
Those who have returned, have never gone to Him”