• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

"# 6 . ANTI-VEGAN.

அடுத்து வந்த பெண் அழகாகாக இருந்தாள்.

அதே பெயரில் எங்கள் வீட்டில் இருவர் இருந்ததால்
"ஒன்று அல்லது மூன்று" என்று மூன்றாவதாக
அவள் வருவாளா?

அவளுக்கு என் மகன் vegan ஆக இருப்பது
பிடிக்கவில்லையாம். :pout:

அவளை vegan ஆகும்படி யாரும் சொல்லவில்லை,
சொல்ல நினைக்கவும் இல்லை. :nono:

அவர் அவர் இஷ்டம்.

சொல்லவும் மாட்டோம் நாங்கள் யாரையும் மாறும்படி.
ஒரு வேளை அவள் non - veg சாப்பிடுவாளோ?

"எல்லாம் நன்மைக்கே!" என்று நம்புபவள் நான்.
"இதுவும் நன்மைக்கே!" என்று நினைத்துக்கொண்டேன்.

அந்தப் பெண்ணுக்கு இன்னும்திருமணம் ஆகவில்லை.
எங்கே, என்ன கோளாறோ எனக்குத் தெரியவில்லை!
 
# 7. ULTRA MODERN LIBERATED GIRL?


அடுத்து வந்தவள் ஒரு பெரிய military officer பெண்.
படு ஸ்டைல் ஆக இருந்தாள்.

"Liberated woman" போல இருந்தாள்....காரணம்
உள்ளாடை அணிந்திருக்கவில்லை.

தலை boy கிராப்.
அமெரிக்க வாழ்க்கைக்கு
already தயார் ஆக இருந்தாள்.

"நமக்கு சரிப்படுவாளா?"
நிச்சயமாகத் தெரியவில்லை. :confused:

மாருதியின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு
அவளை தமிழ் matrimony form
பூர்த்தி செய்யச் சென்னேன்.

Food habits இடத்தில் non-vegetarian
என்று எழுதி இருந்தாள்.

நான் அதிர்ந்து போனேன்.
இவரும் கூடத் தான்.

அவன் vegan .
அவள் non vegetarian.

எப்படி சரிப்படும்?
குழந்தையை எப்படி வளர்ப்பாள்?

அவளைப் போலவா?
அல்லது அவனைப் போலவா?

தங்கை என் கோபத்தைப் பார்த்துவிட்டு பயந்துபோய்
அவளே பேசினாள் அந்தப் பெண்ணின் அம்மாவிடம்.

அந்தப் பெண்ணின் அம்மாவுக்கு
சம்பந்தத்தை விட மனம் இல்லை.

எனக்கு மணம் செய்து வைக்க
மனம் ஒப்பவில்லை.

பிறகு ஒரு 'இருபக்க நண்பர்' வழியாகத் தெரிந்தது
அந்தப் பெண் அம்மாவின் பேச்சையும் மீறிக்கொண்டு
non -vegetarian என்று எழுதினாள் என்ற உண்மை.

அவளுக்கு அந்தத் துணிச்சலைத் தந்ததும்,
எங்களைக் காப்பற்றியதும் வேறு யார்?

அந்த மாருதியே தான்!

பிறகும் பெண்ணின் அம்மா விடவில்லை.
மெயில் மேல் மெயில் வந்தது. :typing:

நான் ஒரே வரியில் பதில் எழுதினேன்,

"You are trying to make the impossible possible!"

"அசாத்தியத்தை சாத்தியம் ஆக்குவது"
மாருதியின் வேலை அல்லவா???
 
# 8. MISS. COPPERHEAD!

அவளும் PhD படித்து இருந்தாள் இவனைப் போலவே.
மூத்த மருமகளும் ஒரு PhD என்பதால் ஒரு அக்கறை இருந்தது.

ஒவ்வொரு போட்டோவில் ஒவ்வொரு மாதிரி இருந்தாள்.
நேரில் பார்க்கும்போது தெரிந்துவிடுமே எப்படி இருக்கிறாள் என்று.

அந்த அம்மாவுக்கு எப்படியாவது இந்த சம்பந்தம்
கை நழுவாமல் இருக்க வேண்டும் என்ற தீவிரம்.

ஒரே மகன் அமெரிக்காவில்.
அவனுக்கு ஒரு பெண் குழந்தை.

அவன் மனைவி இறந்ததால்
இப்போது அமெரிக்கன் மனைவி.

அம்மாவுக்குத் தனி வீடு இருந்தது அருகிலேயே.

பெண்ணும் அங்கே செட்டில் ஆகி விட்டால் இந்தியா வரவேண்டிய அவசியமே இருக்காது. அவர்கள் யாருக்குமே!

அந்தப் பெண்ணைத் தான் சுற்றம் புடை சூழச்
சென்று பார்த்தோம் நாங்கள் எழுவரும்.

பெரிய மகனும் மனைவியும், ராஜியும் கணவர் ராமும்,
நானும் இவரும், இளைய மகனும் என்று எழுவர்.

அந்த மாமி கையைப் பிசைந்து கொண்டே இருந்தார்.
அபிநயத்துக்கும் நிஜ வாழ்க்கைக்கும் எத்தனை தொடர்பு!

வெகுநேரம் கழித்துப் பெண் மாடியில் இருந்து இறங்கி வந்தாள். தீ சுவாலை போன்று செம்பு நிறத் தலை முடி!

அத்தனை பேர் இருந்தோமே, எந்த விதமான
மரியாதையும் செலுத்தவில்லை அவள்.

நெற்றி நிலத்தில் பட நமஸ்காரம் செய்யாது போனாலும்,
வாயால் நமஸ்காரம்சொல்லி இருக்கலாம்

அல்லது ஆங்கிலத்தில் "இனிய மாலைவேளை!"
என்று சொல்லி இருக்கலாம்.

அவளுக்கு நாங்கள் இருந்ததே தெரியவில்லை கண்ணுக்கு. மகன் அருகில் சோபாவில் அமர்ந்து ரொம்பப் பழகியவள் போலப் பேசினாள்!

ஒன்றுமே சாப்பிடவில்லை.

நான் நினைவு படுத்தியவுடன்
"I don't eat sweets not made in ghee!" என்றாள்.

மகன் நெய்யில் செய்தால் உண்ண மாட்டான் என்று
தங்கை சொன்னதால் மாமி நெய் இல்லாத பலகாரம் வைத்திருந்தார்.

இப்போதே இந்தப் போடு போடுகிறாள்.
அவனைத் தவிர யாரும் அவளுக்குத் தேவை இல்லை.

இந்தியாவுக்கு வரும் எண்ணமும் இல்லை.
தேவையும் இல்லை.

காலப் போக்கில் இவனையும் இங்கே வரவிடாமல் தடுக்கலாம். நம்மையும் அங்கே வரவிடாமல் தடுக்கலாம்.

முதலில் அந்தக் கேரட் நிற முடியை
சகித்துக் கொள்ள வேண்டுமே.

எங்களிடம் கருத்துக் கேட்டான் எங்கள் மகன்.
"கண்ணா! உன் வாழ்க்கை! உன் சாய்ஸ்!' என்று சொன்னோம்.

அன்று முழுவதும் தன் அண்ணா, மன்னியுடன்
கலந்து ஆலோசித்து பிறகு அவள் வேண்டாம் என்று முடிவு செய்தான்.

அவன் சொன்ன காரணம்,
"She can't mingle with our family!"
God bless him for placing 'family' before 'self'

நேரில் பார்ப்பதற்கும் இவனுக்கு அக்கா போல இருந்ததால் நாங்களும் அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டோம்!
 
What can we say about people who try to replace hard work (to keep in good shape) with fancy vitamins laced with trace elements?
Nothing like slanting Sun rays, fresh air and a brisk walk to enjoy the feeling of well being!
But do all people listen to this sound and cost-free advice?
 
I hit upon a solution for posting the links.
I will do it on the dates which are multiples of 5.
I check my fasting on sugar on those days.
So I will remember to do this also on those days
Any added advantages...???
The 72 links will get repeated only after one full year!
It will give extra time for those persons ( if any)
for reading the blog in great details.
 
# 9. "அக்காவா? அம்மாவா?"

பெண் நன்றாகப் படித்திருந்தாள்.
நல்ல உயரம். அதற்கேற்ற உடல் வாகு.

லேடி போலீஸ் இன்ஸ்பெக்டர் போல இருந்தாள்.

இவனுக்கு "அக்காவா? அம்மாவா?" என்று தான்
இவர்களை ஒன்றாகப் பார்ப்பவர்கள் எண்ணுவார்கள்.

அவர்கள் ரொம்பவும் விரும்பினார்கள் இந்த சம்பந்தத்தை.

"ஜாதகம் சேரவில்லை!" என்று ஒரு
வெள்ளைப் பொய் சொன்னேன்!

"Lady police vendaam " endru solla mudiyumaa???
 
கலாட்டா கல்யாணங்கள்

# 10. குஷ்பூ போலவே!

இவருக்கும் மூன்று பெண்களாம்.

மூத்தவள் போட்டோவோடு வந்திருந்தார்.
பெண் நல்ல சிவப்பு நிறம். செமகுண்டு.

இவன் அருகில் அவள் நின்றால் ....
ஓமப்பொடி + லட்டு போல இருப்பார்கள்!

இந்த வயதிலேயே இப்படியிருந்தால்
ஐம்பது, அறுவது வயதில் எப்படி இருப்பாள்???

போகட்டும். அவர் ஒரு T. V. cable operator.

அது அரசு கேபிள் வந்து அனைவரின் வேலைக்கும்
உலை வைத்துக்கொண்டிருந்த காலம்.

அவரின் இரண்டு மகள்களையும் பெரியவளுடன்
"wed one and take home three girls" என்று பிளான் செய்திருந்தது அவர் பேச்சிலேயே தெரிந்தது.

இவன் அந்தப் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடிக்
கல்யாணம் செய்து கொடுக்க வேண்டுமாம்.

வேலை போன மாமனார் மாமியாரைப்
போஷிக்க வேண்டுமாம்.

குருவி தலையில் பனங்காயைக் கட்ட
நாங்கள் தயார் இல்லை.

அவளும்ஒரு பனம்பழம் போலத் தான் இருந்தாள்.
அவள் குடும்பம் இரண்டாவது பனம் பழம்.

கும்பிடு போட்டு அவரை அனுப்பி வைத்தேன் - அவர்
மூன்று பெண்களுக்கு 'நல்ல இடம்' கிடைக்க வாழ்த்தி.
 
It is funny!

Every father thinks that no boy is good enough for is daughter.

He also wants to shift the responsibility of his own family on to the not-good-enough-groom, if he is ( as the now girls now say) 'adjustable' and 'gullible'!
 
Idioms and Idiots do not mingle together very well - even though they differ by a single alphabet. Instead together they produce a lot of jingle!

When the person who is asked to 'take a seat'....
lifts up the chair instead of sitting on it , he / she is not made to enjoy or even understand the beauty of idioms and phrases.

So I was 'taken to task' for using the idiom 'take to task' ! :(
In English people swear S O B to scold a man.
In Tamil it can be replaced by a beautiful sweet sounding word
'mandhiyin maindhanE!'

Howzzzzat???
 
கலாட்டா கல்யாணங்கள்

# 11 . BRIDE WITH A SON!

"ராமா ! நான் உனக்காகவே காத்திருக்கிறேன்!"
என்றாள் அவள்.
இது சீதை சொல்லவேண்டிய டயலாக் அல்லவா? போகட்டும்.

அகல்யை சொன்னாலும் கூடச் சகித்துக் கொள்ளலாம்.
தாடகை இதைச் சொன்னால்!!!!

அவள் புகைப்படம் இந்தியன் ZEBO வை நினைவூட்டியது.
போதாக குறைக்கு மூன்று வயதில் ஒரு மகன் வேறு!

என்ன நினைத்துக் கொண்டு APPLY செய்கிறார்கள்
இவர்கள்???

"அம்மா தாயே! உனக்கு ஏற்ற செகண்ட்
இன்னிங்க்ஸ்காரனைப் பார்த்துக்கொள்.

இது எந்தவிதத்திலும் சரிப்படாது!"
என்று ஒரே போடாகப் போட்டு

கழற்றிக்கொள்ள வேண்டியிருந்தது அவளிடமிருந்து.
 
# 12. An Air hostess.

அந்தப் பெண் நிச்சயமாக அழகிதான்.
ஆனால் அந்த அழகு ஆபத்தானது -
அவளுக்கும் அவள் கணவனுக்கும் கூட.

"ரூபவதி பார்யா சத்ரு!" என்பார்களே.

பல செய்திகளைப் படிக்கிறோம் இவர்களைப் பற்றி.
எல்லோரும் மோசமானவர்கள் என்று சொல்ல மாட்டேன்.

ஆனால் எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?
ஏனென்றால் அவர்கள் PROFESSION RISKY ஆனது.

ஒரு ஜோக் உண்டு இவர்களைப் பற்றி
"Coffee? Tea? or me?" என்று கேட்டு உபசரிப்பதாக.

அவள் நல்லவளாக இருந்தாலும்
"எங்கே பறந்து கொண்டு இருக்கிறாளோ?"
"நல்ல படியாக வந்து சேர வேண்டும்"

என்று மொத்தக் குடும்பமும் எப்போதும்
கவலைப் பட்டுக் கொண்டு இருப்போம்.

நாம் already டென்ஷன் பார்ட்டி.
இதுவும் தேவையா ???
 
கடவுள்

இடம், பொருள், ஏவல், காலத்தைக்
கடந்தவன் கடவுள்.

கண், செவி, நாசி, நாவு, தோலுக்கு
அப்பாற்பட்டவன் கடவுள்.

எத்தனை சிறியதோ... அத்துணை சூட்சுமம்

அணுவைக் காணமுடியவில்லையே!
அணு என்பது பொய்யா?

நோய்க் கிருமிகளைக் காணமுடியவில்லையே!
நோய்களும் பொய்யா?

மனம் மொழி மெய்களைக் கடந்த
ஒரே மெய்வஸ்துவை பொய் என்பவர்கள்

கண் உடையவர்அல்லர் - முகத்திரண்டு
புண் உடையவரே!
 
# 13. TRUST YOUR CREEPY FEELINGS.

இரண்டு ஜாதகங்கள் நன்கு சேர்ந்தன.
பெண் பார்க்க வரச் சொன்னால் இவன் பதில் இது!

" I have a creepy feeling in my guts that
I can never be happy with either of them!"

அடிவயிற்றில் தோன்றும் உணர்வுகளை
முழுவதுமாக நம்புபவள் நான்!

அவன் கூறுவது எனக்குப் புரிந்தது.

Intuitions do not tell us lies!
Trust them and be guided by them.
 
# 14 . "WHY SO SHY?"

ஒரு பாங்கில் பெரிய ஆபீசர் அவள்.

எல்லாப் புகைப்படங்களிலும் தலைக் குனிந்து
தரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்!

அது சற்று விநோதமாக இருந்தது!

பட்டிக் காட்டுக் கட்டுப் பெட்டிப் பெண் அல்லவே,
காலால் தரையில் கோலம் போடுவதற்கு!

என் மன்னி காரணத்தைக் கண்டுபிடித்தார்
பெண்ணுக்கு மாறுகண் என்பதை!

Lens வழியாக அதை நிரூபித்தார். :high5:

வாழ்நாள் முழுவதும் "யாரிடம் பேசுகிறாள்?"
என்று கண்டுபிடிப்பதிலேயே கழிந்துவிடும்!

எனவே வேண்டாம் என்று முடிவு செய்தோம்.
 
When the four corners do not meet!
For the first time in my life the four corners did not meet.
I am talking about the pyjma legs - after they are cut to shape.
The four corners should meet where the two legs meet.
But today they did not.
I am still unable to figure out what went wrong but when the four corners do not meet.... you are done for the day!
 
Can you guess the names of the artists paying homage to Saint Thyagaraja in Aradhana in Thiruvaiyaru in 2019?



Attachments area
Preview YouTube video Thiruvaiyaru - Thyagaraja Aradhana 2019 - Nagaswaram - Sheik Mahaboob Subhani & Kaleeshabi Mahaboob
 
We love when Jesudas sings the praise of our Indian Hindu deities. We Love Sheik Mehbood Subani and his wife Kaleeshabi Mehboob when they play our classical music on the nadaswaram. At the same time we won't feel awkward while making fun of the other religions and their practices! :(
 
If you have time, interest and inclination here is a full length concert! Enjoy the musical madhuradhwani.




Attachments area
Preview YouTube video Madhuradhwani-Sheik Mahaboob Subhani&Kalisha Bee Mahaboob - Nadhaswaram
 
Talking about the four corners which would not meet and made me waste a lot of time in adjusting them made remember some other famous fours!

The Famous Four.

To paint every country/state in different colors in a map how many colors do we really need?

Three will be far too less and five will far be too much.
Yes! We need just four colors to depict each country or state separately in a map.

This is known as the 'Famous Four Colors needed in a map'.

Other famous Four Parameters.

To know the position of a point in space, we need three coordinates (X,Y,Z) as well the time T.

The position of the point may vary with time. So these four parameters can pinpoint with 100% accuracy the position of a point in space.

In a temple the person is pin pointed by his Gothram, Star, Raasi and name. Again four parameters.

In an office a person can be pinpointed by his name, designation, department and the office he works in.
Again four parameters.

In a locality a person can be pinpointed by his name, his house number, name of the street and the name of the city he lives in.

Isn't strange that the famous four really are famous for their ability for pinpointing a person everywhere??
 
# 15. THE UNIVERSAL COUSIN.

எந்தப் பெண்ணின் ஜாதகம் கிடைத்தாலும்
அதில் இவரைப் பற்றிய தகவல் இருக்கும். :ranger:

பெண்ணின் பெற்றோரில் ஒருவர் கண்டிப்பாக
இவருடைய (1 / 2 / 3 வது) கசின் ஆக இருப்பார்.:high5:

யார் எந்தத் தலைமுறையில் "overtime" செய்து
இவரை எல்லோருக்கும் universal கசின்
ஆக்கினார் என்று மட்டும் தெரியவில்லை !!! :rolleyes:
 
# 16. MISS. லக்ஷ்மி கடாக்ஷம்.

அந்தப் பெண்ணுக்கு பரிபூரண லக்ஷ்மி கடாக்ஷம்.
பணப் பெட்டி எப்போதும் நிரம்பி வழியுமாம்.

இவனை விடவும் பத்து வயது சிறியவள்.

முடிந்தால் தன்னைவிடவும் சின்னவனைக்
கல்யாணம் செய்து கொண்டு 'ஆட்சி புரிய'
பெண்கள் விரும்பும் காலம் அல்லவா இது!

இந்த வயது வித்தியாசம் சற்று அதிகம் தான்!
பெண்ணின் mental maturity பற்றிய ஐயம் எழுந்தது.

அமெரிக்கா போன பிறகு நினைத்து நினைத்து
"நான் எங்க அம்மாவைப் பாக்கணும்!" என்றால்....???

மகன் சொன்னான்,"நான் மாதச் சம்பளம் வாங்குபவன்.
என்னால் அவள் லக்ஷ்மி கடாக்ஷம் வீணாக வேண்டாம்.

ஒரு business man கல்யாணம் பண்ணிக்கொண்டால்
அவளைத் தலையில் வைத்துக் கொண்டாடுவான்!

நாம் ஏன் அதைக் கெடுக்க வேண்டும்???" Very true!
 
Future is the replay of the past.
We receive what we have handed out!

The son / daughter who takes care of the parents
is in turn taken care of by his/ her children.

The son/ daughter who deserted the aged parents
would be deserted by his / her own children hen he becomes aged.

The 'young son' who manhandled and pushed his aged father out of his house would in turn be 'rewarded' by a terrible fall into a gutter - pushed by the cruel hands of Fate - when he becomes old.

Nothing happens without a reason.
We harvest what we have sown.

Future is nothing but the replay of the past -
with reversed characters!

The ugly deed done by the doer in the past is
now being done on the doer in the future!
 
# 17. A FUN GIRL!

A "Fun Girl" is a very ambiguous term!

A "Fun-seeking girl" என்றால் அமெரிக்காவில்
"A dime a dozen" கிடைப்பார்கள் தாராளமாக!

நமக்கு வேண்டியது நம் குடும்பத்துக்கு ஏற்ற
ஒரு vivacious girl and not a vicious girl!

கணவனுக்கு நல்ல மனைவியாகவும்,
பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தாய் ஆகவும்,
நமக்கு நல்ல மகளாகவும் இருக்கவேண்டும்.

இரு குடும்பங்களையும், இரு தலைமுறைகளையும்,
பாலம் போல நன்றாக இணைக்க வேண்டும்.

சில பெண்கள் போடும் முதல் கண்டிஷனே

"ஒண்ணுலே நான் இருக்கணும்
அல்லது அவங்க இருக்கணும்!

கஷ்டப் பட்டாலும் படுவேன் ஆனால்
யாருமே எனக்கு வேண்டாம்."

இது தான் அவர்கள் தரப்பு வாதம்.

கணவன் வேண்டும், குழந்தை வேண்டாம்!
கணவனைப் பெற்றவர்களும் வேண்டாம்!

எந்த விதமான கடமைகளும் வேண்டாம்!
எந்தவிதமான பொறுப்புகளும் வேண்டாம்!!

"உழை, உண், உடுத்து, ஆசை தீர அனுபவி!!!"
இது தான் அவர்களின் வாழ்க்கைத் தத்துவம்.
 

Latest posts

Latest ads

Back
Top