• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

அப்பன் மரணப் படுக்கையில் கிடைக்கும் போது

அப்பன் பெற்ற சுப்பனுக்கு வரும் விபரீத ஆசைகள்....

டென்னிஸ் ஆட வேண்டும் கவலை இல்லாமல் !

ஹில் ஸ்டேஷன் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் !!

கோவில், குளம் என்று எங்காவது செல்ல வேண்டும் !!!

சாமி, அசாமிகளைத் திருப்தி படுத்த பரிஹாரம் செய்ய வேண்டும் !!!!

எதுவுமே நடவாதது போல ப்ராஜெக்ட் செய்ய வேண்டும் !!!!!

உத்தமன் சுப்பனுக்கு பெத்த அப்பன் தரும் பரிசு???

கெட்ட கனவுகள், பூதம், பிரேதம், பிசாசு இத்யாதிகள்!!!

மனச் சாட்சி இருப்பதை அவர்களும் உணரவேண்டாமா?

வேறு எப்படித்தான் அவர்களுக்கு உணர்த்த முடியும் கூறுங்கள் ?
 
The best and the briefest way to shatter the bloated ego of a person who imagines that he/ she is in the Center of the Universe???
Ask this simple question,
"Who are you?"
or
"Do I know you?"
and watch him / her crumble to dust!
 
Just when I started sharing the links of my blogs
my website had got infected by malwares and does not allow even me to enter - unless I want to do it at my persona risk!
Such is Life!
 
#311. "எள் என்பதற்குள் எண்ணையாக!"

"எள் என்பதற்குள் எண்ணையாக நிற்கின்றாள்!" என்று
பெண்களை முன்பெல்லாம் புகழுவது
கணவன்களின் வழக்கம்.

அவர்கள் கண் ஜாடையைப் புரிந்து கொண்டு
நாம் எல்லாம் செய்வோம்.

ஆனால் அவர்கள் வாய் விட்டுச் சொன்னால் கூடக்
கண்டு கொள்ளமாட்டார்கள்.

சில இடங்களில் இது (எள் + எண்ணெய்)
தடங்கல்களாக மாறுவது உண்டு.

பந்தியில் கொஞ்சம் நிதானமாகச் சாப்பிட்டால்
கோவிந்தா.... கோவிந்தா!

Snow ball போல உருண்டு திரண்டு வரும்
பேப்பர் + இலையின் மூட்டை நம் இலையையும்
உடன் இழுத்துக் கொண்டு போயே போய்விடும்.

சில இடங்களில் நாம் வரும் முன்பே
எல்லாம் பரிமாறி விடுவார்கள் சாதம், சாம்பார் உள்பட.

ஈ மொய்த்துக் கொண்டு கிடக்கும் எல்லாம். :doh:
என்ன தான் அவ்வளவு அவசரமோ தெரியாது!

சில இடங்களில் நாம் உண்ணும்போது
அடுத்த பந்திக்கு இடம் பிடிக்க
ஆட்கள் ஓடி வந்து வந்து நம் பின்புறம் நின்று கொண்டு
பெருமூச்சும், ஜொள்ளும் விட்டுக் கொண்டிருப்பார்கள்.

இப்படி முறைக்கும் போது எப்படிச் சாப்பிட முடியும்?

இதெல்லாம் போதாது என்று வீடியோ ஆட்கள்
வாயைத் திறக்கும் வரைக் காத்திருந்துவிட்டு
முடிந்தால் வாய்க்குள் ஒரு Zoom ஷாட்டும் எடுப்பார்கள்.

அவர்கள் போய்த்தொலையட்டும் என்று அமர்ந்திருந்தால்
அதற்கும் முன்பே சாப்பிடும் இலை தொலைந்து விடும்!

அல்லது பின்னால் இருப்பவர் அவசரப் படுத்துவார்.
"எத்தனை நேரம் சாப்பிடுவேள் இந்தச் சாப்பாட்டை?"
 
# 312. சொர்க்க வாசல்கள்.

சொர்க்க வாசல் ஆண்டுக்கு ஒரு முறை
என்று தானே எண்ணுகிறீர்கள்?

இப்போது ஒவ்வொரு கல்யாணமண்டபக் கதவும்
சொர்க்க வாசல் ஆகி வருகிறது.

முன்பெல்லாம் வருந்தி வருந்தி அழைத்தால் தான்
விருந்துக்கு வருவார்கள்.

ஏனோ தானோ என்று அழைத்தால் கோபித்துக் கொண்டு
சாப்பிடாமல், கையைக் கூட நனைக்காமல் போய்விடுவார்கள்.

பந்திக்கு அழைப்பதே ஒரு கலை ஆக இருந்தது!
இன்று அது கொலை ஆகி வருகின்றது.

ஒரு மனிதன் / மனுஷி கூட ஆத்மார்த்தமாக அழைப்பது
இல்லை.
மற்றவர்கள் அதைப் பொருட்படுத்துவதும் இல்லை. அதிசயம்
தான்!

ஏதோ Ethiopia வில் இருந்து பட்டினியாகவே நடந்து வந்தது போல!
நல்ல உணவையே கண்ணில் கண்டிராதது போல.
விருந்து என்பது வாழ்வில் ஒரு காணாத புதுமை போல.

எங்கள் காலனியில் ஒரு கல்யாணமண்டபம் கட்டினார்கள்.
அது எல்லோருக்கும் மிகவும் வசதி ஆயிற்று.

ஊருக்கு வெளியே இருந்தது எங்கள் காலனி.

சிடியில் மண்டபம் எடுத்தால் அத்தனையும் அங்கு கடத்த
வேண்டும்.
அத்தனை பேரும் பஸ் ஏற்பாடு செய்யச் சொல்லுவார்கள்.

செலவு எல்லை மீறிப் போய்விடும், மிக அதிகம் ஆகிவிடும்.

கல்யாண மண்டபத்தில் செய்தால் அன்று
எல்லார் சமையல் அறைக்கும் விடுமுறை.

மொத்தப் பேரும் மண்டபத்துக்கு வந்துவிடுவார்கள்.
அதனால் ஒரே ஒரு கதவை மட்டும் திறந்து வைத்து
scrutinize செய்த பிறகே உள்ளே நுழைய அனுமதி.

நுழைந்தவர்கள் 'திபு திபு' என்று ஓடுவதைப் பார்த்து
பயந்தே போனேன். எதற்கு அந்த ஓட்டப் பந்தயம்?

முதல் வரிசையில் இடம் பிடித்து அமர.
சீக்கிரம் சாப்பிட்டு விட்டு சீக்கிரம் வீட்டுக் போகலாமே!

போகிற போக்கில் TOKEN கொடுப்பார்களோ
என்று கூடத் தோன்றியது உண்டு.

கோவையில் ஒரு வினோத மண்டபம்.

கிரௌண்ட் லெவெலில் DINING HALL .
அதற்கு மேலே மண்டபம்.

RECEPTION, கல்யாணம் அங்கே நடக்கும்.

டீக்காக உடை அணிந்து வந்து விருந்து சாப்பிட்டு விட்டு
மாடியே ஏறாமல் சென்றவர்களை நான் அங்கே பார்த்தேன்

GIFT தரவேண்டாம்! GREET செய்யவும் வேண்டாம்.
படி ஏறவும் வேண்டாம்! :nono:
எல்லோருக்கும் எவ்வளவு CONVENIENT!
 
Everyone knows about Valluvar and Vasuki - the most ideal couple.

VaLLuvar had once instructed Vasuki to keep a needle and a cup of water along the plantain leaf used for eating. Everyday she kept them and they were never ever used for any purpose.

Just before dying, she wanted to know, "Why the needle and the cup of water with the food?"

VaLLuvar replied,"If any grain of cooked rice (annam) falls on the floor, I wanted to pick it up with the needle, rinse it in the cup of water and eat it also. But you have never spilled even one grain of rice. So I never needed to use it even once!"

What would be VaLLuvar's reaction to the massive amount of good, costly and tasty food wasted during every celebration now???
 
# 313. பத்தாம் பதயம்.

கல்யாண மண்டபக் கதவு சொர்க்க வாசல் ஆனது போலவே இந்தக் கோவில் மண்டபமும் சொர்க்க வாசல் ஆனது!

கிராமத்தில் இருப்பவர்கள் எங்கு எந்த நாடு சென்றிருந்தாலும் ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக
அங்கு வந்தே ஆக வேண்டும்.

போட்டி போட்டுக் கொண்டு விருந்துகள் நடக்கும்.
யார் நிறைய தினுசுக் காய் கறிகள் அளித்தார்கள்.
யார் நிறையப் பாயசம் வைத்தார்கள் என்று போட்டா போட்டி.

தலை வாழை இலை போட்டு பரிமாறுவார்கள்.
லிமிட் இல்லாத உணவு!

தானும் உண்டு விட்டு / குடித்து விட்டு; கூஜாவிலும் / சொம்பிலும் வீட்டுக்குப் பாயசம் எடுத்துச் செல்பவர்களும் உண்டு!

ஒரு முறை பார்த்தேன் ஒரு பல்லுப் போன பாட்டி.
கோணைக் காலை நீட்டி அமர்ந்திருந்தாள்.
இலை அவள் காலை விட நீளமாக இருந்தது!

பாயசத்தைக் இலையில் "கொட்டச்" சொல்லி
அதை இலை முழுக்கத் துரத்தித் துரத்தி
குடித்துக் கொண்டிருந்தாள்.

Indoor ஸ்போர்ட்ஸ்?!

முழங்கை வரை ஒருவருடைய நாக்கு நீளுமா??
அன்று நீண்டதைப் பார்த்தேன்!!

"முழங்கை வழிவார"ப் பாட்டி பாயசத்தைச் சுவைத்ததை
பார்த்து முடிவு செய்தேன் இனி இங்கு
உண்பதற்கு வரப் போவதில்லை!

இன்றும், அவள் அன்று உண்ட அழகை நினைத்தால்;
இன்று நான் உண்டதெல்லாம் வெளியே வந்துவிடும்.

அன்று நான் கற்றுக் கொண்டது இதுவே;

Our respectability is inversely proportional to
the sights and sounds we produce when we eat.

Remember the man who belched in both ways -
or in both the ends of his alimentary canal -
in a state dinner thrown by a queen?
 
# 314. "நானும் "cheers " சொல்லுவேனே!"

அவள் கணவனுக்கு எப்போதும்
வெளி நகரங்களில் போஸ்டிங்.

குடும்பம் ஒரே ஊரில் இருந்து வந்தது
குழந்தைகளின் படிப்புக்காக.

தனியே இருந்தாலே தெனாவெட்டு வந்துவிடும் அல்லவா?

ஊற்றிக் கொடுக்கவும், வாங்கிக் கொடுக்கவும்
'காரியவாதிகள்' aka Contractors இருந்தால்
கெட்டுக் குட்டிச் சுவர் ஆவது மிக மிக எளிது.

புட்டி / குட்டி / பெட்டி என்று வீக் பயின்ட்டில் குறி வைப்பார்களே! அவர் மனைவிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

நண்பர்களிடம் சொல்லலாம் என்றால்
அவர்கள் மிடாக் குடியர்கள்! :spit:

நண்பர்களின் மனைவிகளிடம் அங்கலாய்த்துக் கொண்டபோது ஒருத்தி சிரித்தாள் இவள் படும் டென்ஷனைப் பார்த்து!

"எங்க வீட்டில் நானும் அவர் கூட உட்கார்ந்து
cheers சொல்லுவேனே!"

Decades later this lady died after suffering from throat cancer.
Whether or not her "cheers" contributed to this is debatable!
 
The bedridden old relative was sent home and breathed his last peacefully at his own home - among his family members.

I salute to the doctor who suggested this instead of keeping him in the hospital for some more days, in order to earn a few more thousands of rupees.

One must know when to HOLD ON and when to LET GO.
 
History repeats itself.

Whoever takes charge of the temple affairs start feeling oneup -for no known reasons!

thalai kazhuthil niRkaathu (Tamizh)

toppu lEsi pOthundhi (Telugu)

dhimAg kharAb hO jAtha hai ( Hindi)

aattam enna solluvEn?

aattam ondrE thaan!

athai aadubavargaL mattum vERu!
 
Today was the 9 A.M to 5-30 P.M powercut day!
I was caught unawares today.

The day seemed to be long and lousy.

As usual I got a lot of pending work done -
those which do not need electricity!
 
The old smilies don't work anymore!!

So, some you use now, stay as letters and some turn funny!

For example "party"!

It appears as :party:

WOW! smiley for pray works now!! ?
 
# 315. A wax doll.

அந்த போட்டோவில் இருந்தது
ஒரு புகழ் பெற்ற ஹாலிவூட் நடிகை!

அவள் அல்ல அவளின் மெழுகு உருவம்,
அச்சு அசலாக, உயிரோட்டத்தோடு.

இருந்த இடம் Madame Tussaud's wax museum.

அங்கே அவற்றின் அருகே நின்று
புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

அவள் தான் எத்தனை உயரம், என்ன கலர்,
எவ்வளவு பெரிய cleavage?
(reincarnation of poothaki?)

ஒரு புஜம் (Arnold's?) உள்ளே நுழையும் போல இருந்தது.
எத்தனை enhancements??? எத்தனை silicone??? தெரியாது!

அமானுஷ்யமாக, பூதாகாரமாக,
காவியங்களில் வருபவள் போல இருந்தாள்.

அருகில் நின்று cleavage உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் என் பல வருடத்திய நண்பியின் மகன்,
என் பழைய மாணவன்,

இப்போது இருப்பது அமெரிக்காவில்!

"என்னப்பா இது?" என்று சிரித்துக் கொண்டே கேட்டால் சொல்கின்றான்,

"எனக்கும் இதே போல மனைவி வேண்டும்!"
என்று தயங்காமல்.

"வருகின்றவன், போகின்றவன் எல்லோரும்
இதே போல எட்டிப் பார்ப்பார்களே!
அதற்கு உனக்கு சம்மதமா?" என்று கேட்டேன்.

அப்போது தான் யோசித்தான் அவன் அந்தக் கோணத்தில்!

அத்தனை curve இருப்பவள் போயும் போயும் இவனை எதற்கு மணந்து கொள்ள சம்மதிப்பாள். no chance!

திருமணம் நடந்தது பிறகு. பெண்ணை நான் பார்க்கவில்லை.

பிள்ளைப் பேற்றுக்குப் போனவள்
அம்மாவிடமே தங்கி விட்டாள்.

இந்தியாவிலேயே பழைய வேலையிலேயே
சேர்ந்து விட்டாளாம்.

இவன் அமெரிக்காவில் enjoying unlimited Freedom !

தலையில் அடித்துக் கொள்ள வேண்டியது தான்
நம்மால் முடிந்தது.

பார்ப்பதற்கு என்று இருக்கும் பொருட்கள் பார்க்க மட்டும் தான். உபயோகிக்கும் பொருட்கள் பார்வைக்கு அலங்காரமாக இரா.

கிரீடத்தைக் காலிலும், சப்பலைத் தலையிலும் வைத்துக் கொண்டு நடக்க முடியுமா?

இவன் cleavage மோகத்தைப் பார்த்து
வெறுத்துப் போய் விலகினாளா?

அல்லது வேறு என்ன காரணம் என்று
எனக்குத் தெரியவில்லை.
 
# 316. The Perfect Pout!

ஒரு திருமணத்தில் அவளைப் பார்த்தேன்!
அச்சு அசல் ஒரு பேபி piglet போல perfect pout!

மேல் உதடு pout செய்யும் அறிவோம்!
இங்கு இரண்டு உதடுகளும் ஒரே போல!

அவன் கணவன் கல்யாணத்தை போட்டோ எடுக்காமல்
அவளையே எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தான்.

பிறகு தெரிந்தது அவள் தான் பின் தாலி கட்ட வேண்டிய
நாத்தனார் என்று.

ஒன்பது கஜம் புடவை. பிடரிவரையில் முடி. தலையில் அடித்த ஆணியில் இருந்து தொங்குவது போல
மல்லிகைச் சரம்.

"என்னைப் பார்! என்னைப் பார்!" என்று ஆண்களை
'லோ லோ வென்று 'அலைய வைக்கும் low neck blouse.

"சோளி கே பீச்சே க்யா ஹை?" ஆராய்ச்சி செய்பவர் அன்று ரொம்ப ரொம்ப பிஸி.

பின்புறம் embroidery + sequins வொர்க்+ கட் வொர்க் + windows எல்லாமே இருந்தன.

சில சினிமாப் படங்களில் முத்தத்துக்கு தயாராக
இருப்பவர்கள் போல அவள் எப்போதுமே இருந்தாள்.

கணவன் அவளை வட்டமிட்டதில் அதிசயமில்லை.
'open invitation round the clock' என்றால் யாருக்குத் தான் பிடிக்காது?

அவளிடம் அந்த perfect pout டின் ரகசியம் கேட்டிருந்தால்
என்ன சொல்லி இருப்பாள் ??? :gossip:

தினமும் இரவு தூங்கும் போது உதடுகளைச் சுற்றி
நல்ல ரப்பர் பேண்ட் அணிவதையா ???
 
Chip and Dale give a valuable tip in one of their cartoons.

"Just look cute and they will take care of all your needs!"

Babies do this all the time but they are incapable of acting by themselves.

Smart/ pretty/ scheming / cunning women do this to enslave a man and keep him wound round her little finger!
 
Nine Modes of Bhakti Yoga Sadhana



by Swami Sivananda

In the Srimad Bhagavata and the Vishnu Purana it is told that the nine forms of Bhakti are Sravana (hearing of God's Lilas and stories), Kirtana (singing of His glories), Smarana (remembrance of His Name and presence), Padasevana (service of His feet), Archana (worship of God), Vandana (prostration to the Lord), Dasya (cultivating the Bhava of a servant with God), Sakhya (cultivation of the friend-Bhava) and Atmanivedana (complete surrender of the self).
A devotee can practise any method of Bhakti which suits him best. Through that he will attain Divine illumination.
1. SRAVANA

Sravana is hearing of Lord's Lilas. Sravana includes hearing of God's virtues, glories, sports and stories connected with His divine Name and Form. The devotee gets absorbed in the hearing of divine stories and his mind merges in the thought of Divinity, it cannot think of undivine things. The mind loses, as it were, its charm for the world. The devotee remembers God only, even in dream.

Sri Sankaracharya says, "The company of the wise, even for a moment, becomes the boat to cross across the ocean of Samsara." Without Satsanga, Sadhana does not become perfect and strong. The fort of Sadhana should be built on the foundation of Satsanga. Mere austerities are not the end of Sadhana. Satsanga illumines the devotee and removes his impurities. It is only then that subtle truths are grasped well by the devotee. Lord Krishna says to Uddhava that nothing but Satsanga alone can put an end to all worldly attachments. In the Bhagavata Mahatmya it is told that the best Dharma in this world is to hear Lord's glories. For, thereby, one attains to the Divine Abode.
2. KIRTANA

Kirtana is singing of Lord's glories. The devotee is thrilled with Divine Emotion. He loses himself in the love of God. He gets horripilation in the body due to extreme love for God. He weeps in the middle when thinking of the glory of God. His voice becomes choked, and he flies into a state of divine Bhava. The devotee is ever engaged in Japa of the Lord's Name and describing His glories to one and all. Wherever he goes he begins to sing the praise of God. He requests all to join his Kirtana. He sings and dances in ecstasy. He makes others also dance.

Such practices should be the outcome of a pure heart, and they should not be merely a show. God knows the inner secret of all and none can cheat Him. There should be perfect straightforwardness and all his actions should be the natural outpouring from his heart. This is the easiest of all modes of approach to God. In the Kali Yuga, iron age, Kirtana alone is the best Yoga-'Kalau Kesavakirtanam.' This is the prescribed method of devotion for this age. The mind is ever intent upon singing Lord's Names and glories and it has no occasion to take interest in things of the world. Day and night the devotee feels the presence of God and thins out his ego. He becomes Sattvic and pure at heart.
3. SMARANA

Smarana is remembrance of the Lord at all times. This is unbroken memory of the Name and Form of the Lord. The mind does not think of any object of the world, but is ever engrossed in thinking of the glorious Lord alone. The mind meditates on what is heard about the glories of God and His virtues, Names, etc., and forgets even the body and contents itself in the remembrance of God, just as Dhruva or Prahlada did. Even Japa is only remembrance of God and comes under this category of Bhakti. Remembrance also includes hearing of stories pertaining to God at all times, talking of God, teaching to others what pertains to God, meditation on the attributes of God, etc. Remembrance has no particular time. God is to be remembered at all times, without break, so long as one has got his consciousness intact. Right up from his getting up from sleep in the morning, until he is completely overpowered by sleep in the night, a person is to remember God. He has no other duty in this world except remembrance of God. Remembrance of God alone can destroy all worldly Samskaras. Remembrance of God alone can turn away the mind from sense-objects. Generally the mind runs extrovert. But remembrance of God makes it introvert and does not allow it to run to particular objects of the world. Remembrance of God is a very difficult method of Sadhana. It is not possible to remember God at all times. The mind will cheat the person. He will think that he is meditating on God, but actually he will be dreaming of some object of the world or something connected with name and fame. Remembrance is equal to concentration or meditation. All the qualities which a Raja Yogin prescribes for the practice of meditation should be acquired by a Bhakta who wants to practise Smarana-Bhakti. Smarana is swimming against the forceful current of the river of Maya. Smarana leads to exclusive meditation on God, as is done in Raja Yoga.
4. PADASEVANA

Padasevana is serving the Lord's feet. Actually this can be done only by Lakshmi or Parvati. No mortal being has got the fortune to practise this method of Bhakti for the Lord is not visible to the physical eyes. But it is possible to serve the image of God in idols and better still, taking the whole humanity as God. This is Padasevana. Padasevana is service of the sick. Padasevana is service of the poor. Padasevana is service of the whole humanity at large. The whole universe is only Virat-Svarupa. Service of the world is service of the Lord.

Service of the Lord's feet can be done through formal worship to Murtis or idols in temples or to a mental image of God.
5. ARCHANA

Archana is worship of the Lord. "Those who perform the worship of Vishnu in this world, attain the immortal and blissful state of Moksha." Thus says the Vishnu-Rahasya. Worship can be done either through an image or a picture or even a mental form. The image should be one appealing to the mind of the worshipper.

Worship can be done either with external materials or merely through an internal Bhava or strong feeling. The latter one is an advanced form of worship which only men of purified intellect can do. Worship should be done according to the rules laid down in the Varnashrama-Dharma or in the case of advanced devotees worship can be done in any manner they like. The purpose of worship is to please the Lord, to purify the heart through surrender of the ego and love of God.

Serving the poor people and worshipping saints is also worship of the Virat-Svarupa of the Lord. The Lord appears in all forms. He is everything. The scriptures declare that the Lord alone appears as the sentient and the insentient beings. The devotee should have Narayana-Bhava or Isvara-Bhava in all beings. He should consider all creatures, down even to the worm as merely God. This is the highest form of Worship.
6. VANDANA

Vandana is prayer and prostration. Humble prostration touching the earth with the eight limbs of the body (Sashtanga-Namaskara), with faith and reverence, before a form of God, or prostration to all beings knowing them to be the forms of the One God, and getting absorbed in the Divine Love of the Lord is termed prostration to God. The Bhagavata says: "The sky, air, fire, water, earth, stars, planets, the cardinal points (directions), trees, rivers, seas and all living beings constitute the body of Sri Hari. The devotee should bow before everything in absolute devotion, thinking that he is bowing before God Himself." Lord Krishna says to Uddhava: "Giving no attention to those who laugh in ridicule, forgetting the body and insensible to shame, one should prostrate and bow down to all beings, even to the dog, the ass, the Chandala and the cow. All is Myself, and nothing is but Myself."
The ego or Ahankara is effaced out completely through devout prayer and prostration to God. The Divine Grace descends upon the devotee and man becomes God.
7. DASYA

Dasya-Bhakti is the love of God through servant-sentiment. To serve God and carry out His wishes, realising His virtues, nature, mystery and glory, considering oneself as a slave of God, the Supreme Master is Dasya-Bhakti.

Serving and worshipping the Murtis in temples, sweeping the temples, meditating on God, and mentally serving Him like a slave, serving the saints and the sages, serving the devotees of God, serving the poor and the sick people who are forms of God, is also included in Dasya-Bhakti.

To follow the words of the scriptures, to act according to the injunctions of the Vedas, considering them to be direct words of God, is Dasya-Bhakti. Association with and service of love-intoxicated devotees and service of those who have knowledge of God is Dasya-Bhakti. The purpose behind Dasya-Bhakti is to be ever with God in order to offer services to Him and win His Divine Grace and attain thereby Immortality.
8. SAKHYA

Sakhya-Bhava is cultivation of friend-sentiment with God. The inmates of the family of Nandagopa cultivated this Bhakti. Arjuna cultivated this kind of Bhakti. The Bhagavata says: "Oh, how wonderful is the fortune of the people of Vraja, of cowherd Nanda whose dear friend is the perfect, eternal Brahman of Absolute Bliss!".​
To be always with the Lord, to treat Him as one's own relative or a friend, belonging to one's own family, to be in His company at all times, to love Him as one's own Self, is Sakhya-Bhava of Bhakti-Marga. The devotee of Sakhya-Bhava takes up with eagerness any work of the Lord leaving aside even the most important and urgent and pressing work, assuming an attitude of neglect towards personal work, and totally concerning himself with the love of the Lord. How do friends, real friends love in this world? What an amount of love they possess between one another? Such a love is developed towards God instead of towards man. Physical love is turned into spiritual love. There is a transformation of the mundane into the Eternal.
9. ATMA-NIVEDANA

Atma-Nivedana is self-surrender. In the Vishnu-Sahasranama it is said: "The heart of one who has taken refuge in Vasudeva, who is wholly devoted to Vasudeva, gets entirely purified, and he attains Brahman, the Eternal."The devotee offers everything to God, including his body, mind and soul. He keeps nothing for himself. He loses even his own self. He has no personal and independent existence. He has given his self for God. He has become part and parcel of God. God takes care of him and God treats him as Himself. Grief and sorrow, pleasure and pain, the devotee treats as gifts sent by God and does not attach himself to them. He considers himself as a puppet of God and an instrument in the hands of God. He does not feel egoistic, for he has no ego. His ego has gone over to God. It is not his duty to take care of his wife, children, etc., for he himself has no independent existence apart from God. God will take care of all. He knows how to lead the world in the right path. One need not think that he is born to lead the world. God is there who will look to everything which man cannot even dream of. He has no sensual craving, for he has no body as it is offered to God. He does not adore or love his body for it is God's business to see to it. He only feels the presence of God and nothing else. He is fearless, for God is helping him at all times. He has no enemy for he has given himself up to God who has no enemies or friends. He has no anxiety for he has attained everything by attaining the grace of God. He has not even the thought of salvation; rather he does not want salvation even; he merely wants God and nothing but God. He is satisfied with the love of God for by that there is nothing that is not attained. What is there to be attained, when God has sent His grace upon the devotee? The devotee does not want to become sugar but taste sugar. There is pleasure in tasting sugar, but not in becoming sugar itself. So the devotee feels that there is supreme joy more in loving God than becoming God. God shall take complete care of the devotee. "I am Thine," says the devotee.​



 
Thank you for your valuable contribution.
When expressed in a poetic form it would look like this!

#020. ஒன்பது வித பக்தி.

அன்பர் செய்யும் பக்தியின் வகைகள்
ஒன்பது ஆகும் என்பது பிரசித்தம்,
ஐம்பொறிகளையும், புலன்களையும்,
ஐயனை வழிபட அமைப்பதாலே!

இறைவனின் பெருமைகளைக் காதால்
இடை விடாமல் கேட்பது “சிரவணம்”;
சாபத்துக்கு உள்ளான மன்னன் பரீக்ஷித்து
தாபங்கள் தீர்ந்தான் பாகவதம் கேட்டு!

இறைவனின் பெருமைகளை வாயால்
இடை விடாமல் பாடுவது “கீர்த்தனம்”;
சுக முனி பாடிய பாகவதக் கதையால்
சுகம் அடைந்தனர் கேட்டவர் எல்லோரும்!

மனதுக்குள் இடையறாது இறை நாமத்தை
மனனம் செய்வதை “ஸ்மரணம்” என்பார்;
எத்தனை துன்பங்கள், இடர்கள் வந்தபோதும்
பக்த பிரஹலாதன் மறக்கவில்லை ஹரியை.

குறையாத பக்தியுடன் இறை பாதங்களுக்கு
நிறைய சேவை செய்வதே “பாத சேவை”;
பாத சேவை செய்யும் மகத்தானதொரு
பாக்கியம் பெற்றவள் லக்ஷ்மி தேவியே.

மாசற்ற மனத்துடன் மலர்களைக் கொண்டு
ஈசனுக்கு பூஜை செய்வதே “அர்ச்சனை”;
பிருது மகாராஜா அர்ச்சனை செய்தவர்களில்
பிரசித்தி வாய்ந்து, இறை அருள் பெற்றவர்.

எட்டு அங்கங்களும் நன்கு நிலத்தில் படும்படி
எண் குணத்தானை வணங்குவது “வந்தனம்”;
கண்ணனை வணங்கித் தனிப் பெருமையை
கண் கூடாகப் பெற்றவர் பக்த அக்ரூரர்.

தாசானு தாசனாகத் தன்னையே எண்ணி,
நேசத்துடன் தொண்டுகள் புரிவது “தாஸ்யம்”;
“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்பதில்
அனுமனை யாரால் மிஞ்சிவிட முடியும்?

சரி நிகர் சமமாகத் தன்னை எண்ணிக்கொண்டு
இறைவனிடம் நட்புக் கொள்ளுவது “சக்யம்”;
உண்டு , உறங்கி, பேசிப் பழகிய அர்ஜுனன்
கண்ணனிடம் கொண்ட பக்தியே சக்யம்.

தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும்
தயங்காமல் அர்ப்பணிப்பது “ஆத்மநிவேதனம்”;
அனைத்தையும் அளித்ததால் அழியாப் புகழ்
அரசன் மகாபலி செய்த ஆத்ம நிவேதனத்துக்கு!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

#020. NAVA VIDHA BHAKTI.

There are nine different form of loving God – namely the nine forms of Bhakti. They vary depending on which of our ‘Indriams’ (organs) we employ in doing Bhakti.

The first form of the ‘nava vidha bhakti’ is ‘SravaNam’ or listening to the glories of our dear Lord. King Pareekshit attained mukthi by his sravnam of BhAgavatha MahA purAnam sung by Suka muni in just seven days.

The second form of bhakti is ‘Keerthanam’ or singing the Lord’s glory. Suka muni sang the glory of Lord in BhAgavadam and everyone who listened to it benefited immensely.

The third form of bhakthi is ‘SmaraNam’ the continual remembrance of God’s names and form. Bhakta PrahlAd is the best example for this form of Bhakti. In spite of the dire threats and cruel punishments inflicted on him by his father, he never failed to utter the name of Sri Hari even for a second!

The fourth form of bhakti is ‘pAdha sEvA’ . Lakshmi Devi is the most blessed in this form of bhakti as She is continuously doing pAdha SEvA to Lord Vishnu.

The fifth form of bhakti is ‘Archanai’ to God with pure and fresh flowers. Pruthu maharAj was famous for doing Archanai to his dear Lord.

The sixth form is ‘Vandanam’ or do sAshtAnga namaskAram. Akroorar got Lord’s blessings by doing Vanadanam.

The seventh form of bhakti is ‘DhAsyam’ – to be a humble servant of the Lord. None can beat HanumAn in his spirit of DhAsyam and the services rendered to Lord.

The eighth form of bhakti is ‘Sakhyam’ or friendship with Lord – based on equality with Him. All the PaNdavas are and especially ArjunA is the most famous for Sakhya bhAvam to Lord.

The ninth form of bhakti is ‘Atma nivEdhanam’ or total surrender to the Lord’s lotus feet. MahA Bali became the best example for this kind of Bakti, by offering to God everything he possessed including his bloated ego!
 
# 317. In a white bikini near The White House.

வெள்ளை மாளிகையைப் பார்க்க யாருக்குத் தான் விருப்பம் இருக்காது?
முதல் விசிட்டின் போது ஜூலை 4 அன்று அங்கே சென்றோம்.

வெள்ளை மாளிகையின் சில அறைகளைப் பார்க்க அன்று அனுமதி உண்டு.
அனுமதி வாங்க திருப்பதி மலையில் உள்ளது போல மலைப்பாம்பு வரிசை.

அத்தனை அழகான கார்டன் பார்த்ததே இல்லை என்று
கொஞ்சம் அருகில் சென்றதும், திடீரென்று உதயமான
அவனைப் பார்த்து மிரண்டு போனேன். :scared:

Full black டிரஸ்! கையில் annihilator போலப் பெரிய குழல்!
துடிக்கும் புஜங்களும், கறுப்புக் கண்ணாடியும் பயமுறுத்தின!

இந்தப் பக்கம் வந்து விட்டேன்! :bolt:
அங்கே ஜஸ்ட் எதிர்மறைக் காட்சி!

அன்னம் போல roller blades மீது வழுக்கியப்படி
ஒரு கரு நிற அழகி ...வெள்ளை பிகினியில்!

A fan of Ursula Andress? தெரியவில்லை.

Circus செய்வது போல அவளுக்குத் தெரிந்த வித்தை
எல்லாவற்றையும் அங்கே செய்து காட்டினாள். :clap2:

அவ்வளவு அமைதியான பார்வையார்கள் எங்கு கிடைப்பார்கள்?
அவ்வளவு நிறையப் பார்வையாளர்களும் எங்கு கிடைப்பார்கள்?

கண்ணுக்கு விருந்து எங்களுக்கு.
கருத்துக்கு விருந்து அவளுக்கு.

அது முதல் விசிட் என்பதால் பட்டப் பகலில்,
வெட்ட வெளிச்சத்தில், குட்டியான உடை
என்னை விந்தையில் ஆழ்த்தியது உண்மையே!
 
#318. "யாருக்கு வேணும் உங்க சாம்பாரும் அப்பளமும்?"

Alumni மீட்டிங் பற்றி பேசி முடிவு செய்து கொண்டிருந்தோம்.

அவர்கள் சொன்ன மெனு எழுபதுகளில் இருப்பவர்களுக்கு ரொம்பவும் அதிகம்!
அதிலும் முக்கியமாக இரவு டின்னரில்!

ஊர்வன, பறப்பன, நடப்பன, ஓடுவன என்று
வகைக்கொன்றாக விரும்பினார்கள்.

"இவை எப்படிச் செரிக்கும்?" என்று கவலைப்பட்டேன் நான்! பலவித வியாதிகள் இருக்குமே இந்த வயதில்!.

இப்படி இரவு நேரத்தில் 'அடைத்துக்' கொண்டால்...?
ஆனால் அவர்கள் காதில் விழவே இல்லை. :hand:

சரி vegetarian களுக்கு என்ன மெனு என்றால்

"போனால் போகிறது ஒரு ஸ்வீட் போட்டு விடுவோம்
எல்லோருக்கும்!" என்று அவர்களையும் ( + ) பண்ணிக் கொள்கிறார்கள்.

நான் மட்டும் செலவு + உடல் நலம் கருதி மறுத்துக் கொண்டே இருந்தேன்; தடைகள் சொன்னேன்!

அதில் ஒருவருக்குக் கோபம் வந்துவிட்டது!
"யாருக்கு வேணும் உங்க சாம்பாரும் அப்பளமும்?" என்றார்.

நல்ல விருந்து என்பதற்கு அடையாளமே
பாயசம், வடை, அப்பளம் தானே.

"என்னவோ செய்யுங்கள் உங்கள் உடல், உங்கள் வயிறு!"
என்று கடைசியில் விட்டு விட்டேன்!

சிலருக்குச் சொன்னாலும் தெரியாது!
இது போதாது என்று இன்னொருவர் கூறினார்,

"நாங்க உங்க ஷேரையும் சேர்த்து டபுள் ஷேர் அடிப்போமே!"

ஏற்கனவே அவர்கள் மெனுவே டபுள் ஷேர்!
அதில் வேறு இன்னொரு டபுள் ஷேர் ஆம்!

இது எப்படி இருக்கு???

The wife of the man who asked the question in the title
later died of cancer in the stomach! Whether 'these double doses' were one of the causes .... I am not so sure!
 
கர்பிணிப் பெண்ணைப் பார்க்க வந்தவர்கள்
கண்டு அதிசயித்தனர் அவள் மாமியாரையும்!

இருவரும் ஒருபோலவே வீங்கிய வயிற்றுடன்
ரொம்பவும் tight ஆகிவிட்ட nighty யுடன் !

"இவ மாசமா இருக்கான்னு சொன்னாங்க !
உங்களைப் பத்தி எதுவும் சொல்லலையே!"

'நித்திய கல்யாணி'யைத் தெரியும் அவர்களுக்கு!
'நித்திய கர்பிணி'யை அவர்கள் அறியவில்லை போலும்!
 
# 319. "சாரி வாங்கலையோ சாரி!"

அது ரப்பர் சில்க் என்ற ஒரு புது ரகம் வந்த காலம்!
மெத்து மெத்து என்று இருக்கும். ஸீ-through அல்ல!

நல்ல கலர்களிலும், நல்ல டிசைன்களிலும் கிடைத்தன.
முதலில் விலை அதிகம்! ரூபாய் 350 + இருந்தது.

பிறகு ஒரு நாள் வண்டியில் நிறைய ரப்பர் சில்க் புடவைகள்!
"சாரி வாங்கலையோ சாரி!" என்று கூவிக் கூவி விற்பனை!

வெறும் அறுபது ரூபாய் என்ற போது ஐயம் வந்தது.
ஆறில் ஒரு பங்கு விலைக்கு எப்படிக் கிடைக்கும்

புதுச் சேலை? :suspicious:
பிறகு உற்றுப் பார்த்தால் தெரிந்தது...

முன்ஜாக்கிரதையாக வக்குத் தைக்காமலும், ஃபால்ஸ் தைக்காமலும் நன்கு உபயோகித்து இருக்கிறார்கள்.

பிறகு விற்பனைக்கு!

வெளிச்சத்தில் பார்த்தால் சிறிய துளைகளும் தெரிந்தன.

யார் யார் கட்டின புடவைகளோ!
யார் யார் ஏமாந்து வாங்கினார்களோ!
அந்த இறைவனுக்குத் தான் வெளிச்சம்!

அப்பா எப்போதும் சொல்லுவார்,

"வாசலில் வருபவர்களிடம் புடவைகள் வாங்காதீர்கள்!
கடையில் போய் எல்லோரையும் போல நாமும் ஏமாந்தால் போதும்!" என்று.
 
# 320. The Perfect Toilet Training!

அந்த வீட்டில் சிறிய குழந்தை இருக்கிறது என்றால்
ஒருவருமே நம்ப மாட்டார்கள்! காரணம்....

ஒரு நாப்கின் துணி கூட வெளியில் தொங்காது!
Pampers வாங்கும் அளவுக்கு வசதியும் கிடையாது!

அந்த "ஷிஷூ" ஷீ (pee) ஷூ (poop) எதுவுமே போகாதா?

ஒரு நாள் அவர்கள் வீட்டுக்குச் சென்றபோது
மர்மம் தெளிந்தது; ரகசியம் தெரிந்தது.

அந்தக் குழந்தையின் இரண்டு கால்களையும் பற்றித்
தூக்கி அதன் வயிற்றை லேசாக அழுத்திப்
பிடித்துக் கொண்டே இருந்தாள் அதன் அம்மா!

"காலை உதைத்து விளையாட வேண்டும் என்றால்
எதோ ஒன்று ( அல்லது இரண்டு ) செய்ய வேண்டும்!"
என்று விரைவில் கண்டுபிடித்து விட்டது குழந்தை.

பிறகு என்ன கஷ்டம் அதற்கோ அதன் அம்மாவுக்கோ?

The baby was already toilet trained
by the illiterate and uneducated mother!
 
The man who is a terror in the office will be as gentle as a lamb in his house.

The converse is also true!

The man who feels challenged and persecuted everywhere, will become a terror once he steps into his house.

So there are two syndromes in every house.

'VeettilE-puli-VeLiyilE-eli-syndrome' and

'VeettilE-eil-VeLiyile-puli-syndrome'

The wife automatically takes up the role which is not taken up by her husband.

Nice way of equalizing the odds! Right?
 

Latest posts

Latest ads

Back
Top