• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Think or sink!

# 334. "நேற்று ராத்திரி ...!"

ரயில்வே ஸ்டேஷன் waiting ரூம்!

இளமையான அழகான தம்பதியினர்.
வட நாட்டினர் சந்தேகமே இல்லாமல்!

நெருக்கமாக உட்கர்ந்து கொண்டு கிசு கிசு
குசு குசு பேச்சு. அர்த்தமுள்ள சிரிப்பு அலைகள் !

ஒருவரை ஒருவர் சீண்டிக்கொண்டு!
எல்லாம் நன்றாகத் தான் இருந்தது;

அவர்களின் செல்லுலாயிட் பொம்மைக் குழந்தை
படிக்கட்டின் அருகே செல்லும் வரையிலும்.

பதறி போய் குழந்தையை நான் பிடிக்காவிட்டால்
உருண்டு கொண்டு கீழே போயிருக்கும் அது!

"யார் குழந்தை இது?" என்றால் அப்போது தான்
அந்த உலகில் இருந்து இந்த உலகுக்கு வருகிறார்கள்.

"தன்யவாத்!" பலமுறை சொன்ன போதும் என் கோபம்
குறையவில்லை அவர்களின் அலட்சியப் போக்கினால்.

"meeti meeti baathen karO! magar bEti par bhi Ek nazar rakhO!
என்று சொன்னேன்!

அவர்கள் விழித்தார்கள்! "எங்கோ அமர்ந்து கொண்டு இருந்தவளுக்கு நாம் பேசினது எப்படித் தெரியும் என்று!"

அவர்கள் நயன பாஷைக்கு ஒரே ஒரு பொருள் தான்
இருக்கமுடியும்..."நேற்று ராத்திரி யம்மா!..."
 
# 335. குதிரை, கத்தி, மனைவி.

ராஜ புத்திரர்கள் தரவே மாட்டார்களாம் எவரிடமும்
தங்கள் குதிரையை, கத்தியை, மனைவியை - எக்காரணத்துக்கும்.

நல்ல பாலிசி தான். ஐயமில்லை.

ஒருவர் கையிலேயே இருப்பவை தாம்
அவர் சொன்ன பேச்சை நன்கு கேட்கும்.
எல்லோரும் கையை வைத்தால் பின் பாழ் தான்!

என்னைக் கேட்டால் நமது வாகனங்கள் ஆகிய
ஸ்கூட்டரையும் இந்த லிஸ்டில் சேர்க்க வேண்டும்.

தினமும் ஒட்டுபவர்களுக்குத் தெரியும் எங்கே
skull breakers, குண்டு, குழி, பள்ளம் என்று.

இங்கே வருபவர்கள் எல்லோரும் தவறாமல்
கடன் வாங்குவது நமது ஸ்கூட்டரைத் தான்.

ஒரு தம்பதியரின் எடை சுமார் 100 + 80 கிலோ!

வேகத்தைக் குறைக்காமல் தடாலடியாக
ஒரு நாள் ஓட்டிவிட்டு அவர்கள் போய்விடுவார்கள்.

பிறகு கழன்று விழுந்த மறைகளைத் தேடி,
( நம் தலையில் இருந்து விழுந்ததையும் சேர்த்து)
எடுத்துச் சென்று work ஷாப்பில் கொடுத்து
'மூக்கு வழியாகச் செலவு செய்து' ரிப்பேர் செய்யவேண்டும்!

முதல் முறை தெரியாது என்று வைத்துக் கொண்டாலும்...
ஒவ்வொரு முறையும் இதே கதை என்றால்...
விஸ்வாசம் யாரிடம் அதிகம் சொல்லுங்கள்!

வாழ்நாள் முழுக்கக் கழுதையாக உழைக்கும் நம் வண்டியின் மீதா?
ஒருநாள் கூத்து அடித்து அதைக் கெடுக்கும் அவர்கள் மீதா?
 
# 336. வைரத்தோடு.

சமீபத்தில் நடந்த ஒரு குடும்பத் திருமணத்தில் ஒரு
மாமியார் மருமகளுக்கு வைர வளையல்கள் போட்டார்.

அப்படியே அவர் தனக்கும் புதிது செய்து கொண்டார்.
எத்தனையோ லகரமாம்! சரியாக நினைவில்லை.

ஆனாலும் அவரைக் கவர்ந்தது... நான் அணிந்திருந்த
என் ஹைதரபாத் கல் வளயல்களே.
( இது எப்படி இருக்கு?) :rolleyes:

பக்ஷணம் எடுக்கப் போனவர் வரச் சற்று தாமதம் ஆனதும் எல்லோர் மனதிலும் அதே ஐயம்! ஒரே ஐயம்!

யாரேனும் கிட்னாப் செய்திருப்பார்களோ?
நம்மைப் பற்றி அப்படிக் கவலைப் படவேண்டாமே! :)

அது சரி விஷயத்துக்கு வருகிறேன்!

இன்னொரு கல்யாணத்தில் மருமகளுக்கு
வைரத்தோடு போட்டார் ஒரு நல்ல மாமியார்.

இன்னொரு அம்மா செய்தது என்ன தெரியுமா?

மூன்று மகள்களில் உயிரோடு இருக்கும் ஒருத்திக்குக் கூடக் கொடுக்காமல் திருப்பதி உண்டியில் அதை போடச் செய்தது!

கொடுப்பதற்கு பணம் மட்டும் அல்ல; ஒரு நல்ல மனமும் வேண்டும்!

The joy of giving often exceeds the joy of receiving!
 
# 337. "என் தலையணை".

சில பழுத்த கிழங்கள் பயங்கர ரவுஸ் செய்யும்!

"என் தலையணை இல்லாவிட்டால் எனக்குத்
தூக்கம் துளிக்கூட வராது தெரியமா?"

எங்காவது செல்வதென்றால் இவர்கள் முதலில் எடுத்து வைத்துக் கொள்வது இவர்கள் தலையணை தான்.

"தலையணை மந்திரம்" stage தாண்டிய பின்னும்
தலையணைக்கு இத்தனை மகத்துவம் ஏன்? :noidea:

ஒரு நாள் அதைத் தூக்கியபோது தெரிந்ததாம்
அதன் எடையும், மதிப்பும், மகத்துவமும். :shocked:

கிடைத்த பணத்தை எல்லாம் வெள்ளிக் காசுகளாக மாற்றி தலையணையில் அவற்றை மறைத்து வைத்திருந்தது!!!

அரசியல்வாதிகள் எல்லோரும் பிச்சை வாங்கவேண்டும்!

இன்னொரு பாட்டி தலையணையில் தன்னுடைய தோசைக்கல் சைஸ் வைரத் தோட்டை மறைத்து வைத்திருந்தாளாம்.

"கிழம் உயிரை விட்ட படுக்கை!" என்று தூக்கி எறிந்திருந்தால்....???

எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ இல்லையோ
தலையணைப் பிரியர்களின் தலையணையை மட்டும்
தூக்கி எறியும் முன்பு பரிசோதிப்பது நலம் பயக்கும்.
 
# 338. நன்மையையும், தீமையும்.

நன்மையையும் தீமையும் கலந்தே உள்ளன.
யாரும் மறுக்க முடியாத உண்மை இது.

பளுக் குறைவாக இருக்கும் அலுமினியத்தில்
பல பொருட்களைச் செய்கின்றார்கள்.

அது பளுக் குறைவு ஆனால் மின்சாரத்தையும்,
உஷ்ணத்தையும் நன்கு கடத்தும் அல்லவா!

அது நன்மையையும் பயக்கலாம், அல்லது தீமையும்.

திருமணக் கனவுகளில் மூழ்கிய ஒரு இளைஞனின்
பரிதாப முடிவு இப்படி நிகழ்ந்ததாம்!

நண்பனுடன் பேசிக்கொண்டே அலுமினியம் ஏணியை
உயர்த்திப் பிடித்துக் கொண்டு நடந்திருக்கின்றான்.

அது ஹை டென்ஷன் வயரைத் தொட்டிருக்கிறது.

அது அவனை அப்படியே சுழற்றியடித்துக்
கருக்கி பொடியாகி விட்டது ஒரே நொடியில்.

என்ன செய்யலாம் என்று சிந்திக்க
அவகாசம் இல்லை நண்பனுக்கு.

மணக் கோலம் பூண வேண்டிய நண்பன்
தன் கண் முன்னே பிணமாகக் கூட மாறாமல்
கரிப் பொடியானது எப்படி இருக்கும்???

இது போல் நடக்காமல் இருக்க எதாவது செய்யமுடியமா?

ஒரு non conducting layer பாதுகாப்பு செய்து
இது போல் நடக்காமல் தவிர்க்க முடியாதா???
 
அம்புலிமாமா கதைப்புத்தகம் படித்து உண்டா?

அதில் விக்கிரமாதித்யன் கதை தொடங்கும் இப்படி...
"தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமன் ....."

இங்கே இன்று குக்கர் வெயிட் பறந்தது ஒரு மாடி வீட்டில்.
பிரஷர் அவ்வளவு அதிகம் ஆகிவிட்டது.

மீண்டும் வெயிட்டைப் போட்டு மீண்டும் பறந்தது.
மீண்டும் வெயிட்டைப் போட்டு மீண்டும் பறந்தது.
மீண்டும் வெயிட்டைப் போட்டு மீண்டும் பறந்தது.

கஜினி ஸ்டைலில் பறக்கும் வெயிட்டைத் தடுக்க
அடுப்பைச் சின்னதாக்க வேண்டும்
என்று தெரியாதாம் அந்த அம்மணிக்கு!

காஸ் சிலிண்டெர் தட்டுப்பாடு உள்ளபோதே
இப்படி இருக்கிறார்கள் என்றால்

கேட்டதும் சிலிண்டெர் கிடைத்தால்
என்னென்ன செய்வார்களோ!!!
 
# 339. கிளியோபாத்ரா போல் ...

ஒரு முறை A. C. 2 tier பயணத்தின்போது
சைடு பெர்துக்கள் இரண்டும் கிடைத்தன!

குழந்தைகள் இருவரும் நானும் அமரக் கொஞ்சம்
இடங்கேடாக இருந்தது.
அங்கு தானே எல்லா நடமாட்டமும்.

ஒரு பக்க சீட்டில் ஒரு ஆன்ட்டி கிளியோத்ரா
போஸில் நீட்டிக் கொண்டு ...படுத்துக் கொண்டு!

நானாக இருந்திருந்தால் மூவரில் ஒருவரை அழைத்து
அந்த சீட்டில் அமரச் செய்திருப்பேன்.
அத்தனை இடம் இருந்தது.

அவள் எங்களைப் பார்க்கவே இல்லை.
எங்காவது இடம் கேட்டுவிட்டால்!!

வழி நெடுகப் படுத்துக் கொண்டே வந்தாள் அவள்.
அப்போதே நினைத்தேன்,

" இது நிச்சயம் ஓசிக் கிராக்கி தான்!
காணததைக் கண்டது போலக் காட்டுகிறது" என்று.

அது உடனேயே நிரூபணம் ஆயிற்று.

ஒவ்வொரு பெரிய ஸ்டே ஷனிலும் யாராவது வந்து
"மேடத்துக்கு ஏதாவது வேண்டுமா?" என்று உபசரிப்பு!

அற்பனுக்கு வாழ்வு வந்தால் ....!!!
 
மூச்சு, பேச்சு, ஏச்சு என்னும்
மூன்றுக்கும் தேவை காற்று.

மூச்சு இன்றியமையாதது.
பேச்சு தேவையற்றது.
ஏச்சு தவிர்க்க வேண்டியது.

3 in 1 இல் என்ன மாயாஜாலம்!
 
தலைக்கு டை போடுவதை நான் நிறுத்தியவுடன்
தலை மகன்களும் மகளிரும் பலர் நிறுத்திவிட்டனர்.

எல்லோரும் இப்போது வெள்ளி அல்லது தங்கத்
தலை முடியுடன் வலம் வருகின்றோம் ஜாலியாக.

எல்லோருக்கும் தேவை ...ஒரே ஒரு முன்னோடி!!!

கறுப்புத் தலைமுடியின் கீழ்
கிழடாகத் தோன்றிய அதே முகம்

வெள்ளிப் பனித்தலை முடியின் கீழ்
இளமையாகத் தோன்றுவது ஏன்???
 
#2,255
# 340. தட்டு முட்டு சாமான்கள்.

ஒரு முறை A.C. 2 tier compartment
ஒரு காலயாங்கடையாகவே மாறி இருந்தது.

தட்டு, முட்டு, லொட்டு, லொசுக்குகள் நிறைய!
ஒரு பல்லுப் போன பாட்டியின் சாமான்களாம்.

அந்தப் பாட்டிக்கோ, அந்த சாமான்களுக்கோ
அந்த பெட்டியில் நுழையவே அருகதை இல்லை!

"ரயில்வேசில் யாரானும் வேலை செய்கிறார்களா?"
என முகம் தாமரையாக மலர்ந்துவிட்டது.

"என் மாப்பிள்ளை பெரிய ஆபீசர்...." எனத் தொடங்கினார்.

வீட்டுக்கு வந்ததும் பெரிய மகன் கேட்டான் ,

"மம்மி எப்படி நீ எல்லாத்தை பத்தியும்
கரெக்டா கண்டுபிடிக்கறே?"

அவன் வயதில் நானும் என் அம்மாவைப் பார்த்து
இதே போல் ஆச்சரியப்பட்டது உண்மை தான்!
 
She and her name were made for each other.
She is the Angelic Manager of a Hospital that does not sleep!
She infuses Hope, Cheer and Trust by her gentle words and smile in the patients steeped in Despair, Fear and Doubts!
 
....
கறுப்புத் தலைமுடியின் கீழ்
கிழடாகத் தோன்றிய அதே முகம்

வெள்ளிப் பனித்தலை முடியின் கீழ்
இளமையாகத் தோன்றுவது ஏன்???
When a 65 year old has jet black hair like 25 year girl, face appears older!
When a 65 year old has pure silver hair like 85 year granny, face appears young!! ?
 
# 341. Good will stores.

நல்ல பொருட்களைப் பாழாக்குவதில்லை அமெரிக்கர்.

அப்படியே குட் வில் ஸ்டோருக்குத் தானம் செய்து விடுகிறார்கள். அது எதுவாக இருந்தாலும் சரியே.

உடைக்காமல் / கிழிக்காமல், சுத்தமாகத் தர வேண்டும்
அவ்வளவே!

அந்த ஸ்டோரில் பொருள் வாங்குவது ஒரு treasure Hunt போல!

நல்ல நல்ல paintings குறைந்த விலைக்குக் கிடைக்கும்.

பொழுது போவதே தெரியாதாம் அங்கு ஷாப்பிங் செய்தால். இதுவரை நான் சென்றதில்லை.

அவர்களின் சேவை பற்றிய விவரங்கள் கீழே உள்ளன!

Goodwill® earned the support of over 74 million donors in the United States and Canada in 2010. And the donation process is easy.

Simply drop off your gently used items at your nearest donation center. Some Goodwill locations also accept donations of computer equipment and vehicles.

Just keep in mind a few simple guidelines.

Do
Wash or dry clean clothing.
Test electrical equipment and battery-operated items.
Include all pieces and parts to children’s games and toys.
Check with your local Goodwill Industries agency to determine standards for donating computers and vehicles.

Don’t
Leave items unattended outside a collection center.
Donate broken or soiled items.
Give items that have been recalled, banned, or do not meet current safety standards. For more information about questionable items, visit the Consumer Product Safety Commission.
 
உறவும், பெயரும்.

எல்லோருக்கும் மிகவும் பிடித்த வார்த்தை
எப்போதுமே தன்னுடைய பெயர் தான்.

சிலர் பெயரைச் சொல்லாமலேயே வேறு
சில பல உறவுகளிலேயே வாழ்வார்கள்.

"அம்பியின் தம்பி" யாக சில சமயம்;
"சின்னவனின் அண்ணனாக" சில சமயம்;

"அப்பனின் மகனாக" சில சமயம்;
"மகனின் அப்பனாக" சில சமயம்.

இப்படி அறிமுகம் செய்து கொண்டாலும்
பிற்பாடு அசல் பெயரைச் சொல்லலாமே!
 
பல்லவன் இல்லவன்!

தன் இனம் வாழ்வதைக் காணப் பொறாத பெருமை
தமிழ் இனத்துக்கு உள்ளது போல் எவருக்கும் இல்லை.

சேரனும், சோழனும் சேர்ந்தால்; பாண்டியன் காலி!
சேரனும், பாண்டியனும் சேர்ந்தால்; சோழன் காலி.

சோழ பாண்டியர்கள் சேர்ந்தால்; சேரன் காலி!
மூவருமே சேர்ந்துவிட்டால்...பல்லவன் இல்லவன்!
 
# 342. கப்பல் பாட்டி.

சிறு குழந்தைகளாக இருந்தபோது கப்பல் பார்க்கச் சென்றோம்.

கரை ஓரம் வரையில் கப்பல் வர இயலாது அல்லவா?
சிறிய படகில் பயணித்துக் கப்பலை அடைய வேண்டும்.

படகு என்றாலே ஆட்டம் தானே!
ஆட்டம் என்றாலே தலை சுற்றுமே!

ஒரு வயதான பாட்டியும் எங்களுடன் வந்தார்.
ஒன்பது கஜம் புடவை...பச்சை நிறம்...

இன்னும் நினைவுள்ளது.

பாட்டிக்குத் தலை சுற்றி, வயிற்றைக் கலக்கி
பலான வேலை செய்துவிட்டார் படகிலேயே!

மனிதன் உண்ணும் போது மணக்க மணக்க
உள்ளே செல்லும் பொருட்கள்
வெளியே வரும்போது எப்படி மாறிவிடுகின்றன.

அது மேல் வழியானாலும் சரி,
மறு முனையானாலும் சரி.

படகே நாறிவிட்டது. ஒன்பது கஜம் புடவை எவ்வளவு
inconvenient என்று அன்று தெரிந்து கொண்டேன்!

வீட்டுக்குப் போய் எல்லோருமே குளிக்க வேண்டி இருந்தது!

அந்த நிகழ்ச்சியின் நினைவு பலநாள் உணவைப் பாழ் செய்தது.

வயிறு முட்டச் சாப்பிட்டுவிட்டு வந்து பஸ்ஸில் ஏறுபவர்கள்,

வழி நெடுக வாந்தி எடுத்துக் கொண்டே வருபவர்கள்,

வெற்றிலை போட்டுக் கொண்டு ரத்தச் சிவப்பில் துப்புபவர்கள்

கழிப்பிடத்துக்கும் வெளியே சிறுநீரை பெருநீராகப் பாய்ச்சுபவர்கள்

இவர்களை எல்லாம் என்ன செய்யலாம் சொல்லுங்கள் நீங்களே!
 
# 343. சித்திப் பாட்டி.

இரண்டாவது மகன் பிரசவம்.
பெரியவன் மூன்று வயதுக் குழந்தை.

அம்மாவுக்கு உதவி செய்ய கிராமத்தில் இருந்து
வந்து சேர்ந்தார் ஒரு சித்திப் பாட்டி.

என்ன உதவி செய்தார் என்று தெரியவில்லை!
மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு அவர் உடல் தேறியது.

'பிரட் உப்புமா' செய்கின்றேன் என்று கிளம்பினார்.
சொன்னேன், "வெறும் பிரட், பாலுடன் தந்தால் போதும்!"

சொன்னால் கேட்கும் பழக்கம் பாட்டிகளிடமா?

அந்த பெரிய லோஃப் பிரட்டை கண்டபடிக் குதறி விட்டு,
கரண்டி நிறைய நெய்யில் தாளித்து அதைப் போட்டுக்
கலந்து கொண்டு வந்தார். பயந்தே போய்விட்டேன்.

உணவு என்றால் அதற்கு ஒரு வடிவம், ஒரு நிறம், ஒரு மணம், ஒரு ருசி எல்லாம் இருக்க வேண்டும் என்று நம்புபவள் நான்.

இந்த 'மாஸ்'ஸைப் பார்த்து பயந்ததில் என்ன அதிசயம்?

ஒரு வேளைக்கு ஒரு கரண்டி நெய் ஜீரணம் ஆகுமா?
நெய் ஜீரணம் ஆனாலும் என் எடை என்ன ஆகும் சொல்லுங்கள்!

அதன்பின் அம்மாவிடம் சொல்லிவிட்டேன்,
"என் உணவை நீங்களே தயார் செய்யுங்கள் please!"
 
The link due on 20th is given below. The link due on 25th will be given here on 28th (if I remember to post it!) :)


An introduction to the blog

Words form the basic tools for any writer.

Words convey meanings as well as emotions.

Words are borrowed as well lent by languages.

Words often fuse together to form new words.

Words have interesting tales hidden behind them.

Words can be picturesque, descriptive, rhyming or poetic.

The components of some words appear to be contradicting.

Some words appear to be the wrong names for the right things.

We shall explore the wonderful world of words now.

Visalakshi Ramani
 
# 344. "நான் யார்?"

ரமண பகவானின் ஆத்மவிசாரம் அல்ல இது!
சென்ற பயணத்தில் நடந்த உண்மைச் சம்பவம்!

சாதாரணமாகப் பயணம் 24 to 36 மணி நீடிக்கும்.
அந்த முறை L . A. வில் காத்திருந்த நேரம் +

சிங்கப்பூரில் காத்திருந்த நேரம் எல்லாம் சேர்த்து
48 மணி நேரத்துக்கும் அதிகம் ஆகிவிட்டது.

இப்போதெல்லாம் குறைந்த பட்ச உணவையே
பயணிக்கும் போது நமக்குத் தருகின்றார்கள்.

ஹாஸ்டலில் எட்டு வருடம் தங்கியதில் ஒரு நன்மை
எது கிடைத்தாலும் சாப்பிட்டுவிடுவேன் -
சுத்தமாக, சூடாக, வெஜிடரியன் ஆக இருந்தால் போதும்.

இவர் கிடைத்த கொஞ்ச உணவையும் ஒதுக்கி வைத்தார்.
காபிக்குச் சர்க்கரை பற்றவில்லை. கேட்க வெட்கம்.

சிங்கப்பூரில் விமான நிலையத்தில் இருக்கும்போது
தொடங்கியது என்னுடைய அந்தப் புது அனுபவம்.

"நாம் எங்கே இருக்கின்றோம்?" என்று கேட்டார்.
பிறகு "நாம் எதற்காகக் காத்திருக்கிறோம்?" என்று.

"நாம் எங்கே போகின்றோம்?"என்றார்.
"நாம் எங்கிருந்து வருகின்றோம்?" என்றார்.

கேள்விக் கணைகள் தடையின்றித் தொடர்ந்தன.

நானும் சின்னக் குழந்தைக்குச் சொல்லுவதுபோல
பொறுமையாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்.

எல்லாம் கேட்டார் நல்ல வேளையாக ஒன்றைத் தவிர!

"நீ யார்?" என்று கேட்டிருந்தால்
நான் மயங்கி விழுந்திருப்பேன்!

ஒரு முறை அம்மாவின் blood sugar மிகவும் குறைந்து,

அதன் symptoms தெரியாமல் மிகவும் கவலைப்பட்டு
நர்சிங் ஹோமில் சேர்த்து ஆயிரங்களில் செலவு செய்தது
நல்லவேளையாக அப்போது என் நினைவுக்கு வந்தது!

விமானம் ஏறும்போது பணிப்பெண்ணிடம் சொன்னேன்,
"நிறையச் சக்கரையைக் கொட்டி ஒரு கிளாஸ் தண்ணீர் தா!"

அதைக் குடித்தவுடன் பதினைந்து நிமிடங்களில் முன்னேற்றம்.

ஆனாலும் எப்போதும் போலத் துறுத்துறு ஆகவில்லை.
அமைதியாகவே வந்தார். அன்று தான் தெரிந்தது

ஒரு கப் காபியில் மூன்று ஸ்பூன் சர்க்கரை ஏன் தேவை என்று!
 
# 344. ஒரு ரூபாய்க்கு அப்பளம்!

அந்த "பலே பாட்டி!"க்கு எத்தனை சொத்து???
அவருக்கே தெரியாது....கோடிகளில் இருக்கும்.

அத்துவானக் காடாக இருந்த நிலத்தை எப்போதே
பட்டாணிச் சுண்டலுக்கு வாங்கிப் போட்டிருந்தார் தாத்தா.

இன்று அதுவே apartment ஆக மாறும்போது எத்தனை லாபம்! பாட்டி படு சிக்கனம்.

கோவிலில் எதாவது கொடுத்தோம் என்றால்
"அது மட்டும் இரண்டு கொடு!"
என்று கேட்டு வாங்கிக் கொள்வார்.

அன்று மளிகைக் கடைப் பையன்
கத்திக் கொண்டு இருந்தான்!

"ஒரு ரூபாய்க்கெல்லாம் அப்பளம் கிடையாது பாட்டி.
அஞ்சு ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளுங்கள்!"

பாட்டி விடவில்லை. அவனும் தரவில்லை.
Oh! இது தான் விடாக்கண்டன் கொடாக்கண்டன் ஜோடியா?

"அப்பளம் கெட்டுப் போகாது வாங்கிக் கொள்ளுங்கள்!"
"ஒருத்திக்கு எதுக்கு அஞ்சு ரூபாய்க்கு அப்பளம்?"

அஞ்சு ரூபாய்க்கு அப்பளம் இரண்டோ
அல்லது மூன்றோ கிடைத்திருக்குமா?

வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி
பாட்டி பணக்காரியான ரகசியம்
அன்று நன்று விளங்கியது.!
 
# 346. சாரி பிக்பாக்கெட்!

அந்த பஸ் ரூட் எப்போதும் கூட்டம் அலை மோதும்.
அன்றும் அது போலவே அலை மோதியது!

என் கையில் பெரிய பை.
பையில் இரண்டு புது புடவைகள்.
அதற்கு மேலே ஒரு முறை உடுத்தின ஒரு புடவை.

பையின் வாயைக் கர்சீப்பால் கட்டியிருந்தேன்.
பையை எனக்கு முன்னால் பிடித்துக் கொண்டிருந்தேன்.

இறங்கும் போது ஒரு நொடி பையைப் பின்னால் பிடித்தேன்;
அது முன்னால் இருந்தால் படிகளைப் பார்க்க முடியாது.

ஒருத்தி என் முதுகில் பயங்கரமாக இடித்தாள்.
வீட்டுக்கு வந்து பார்த்தால்
"தோல் இருக்கப் பழம் விழுங்கிய" கதை!

பை கட்டியது கட்டியது போலவே இருக்க ஒரு புடவை அபேஸ்!
நல்லவேளை புது புடவைகள் ஒன்றும் ஆகவில்லை.

தொலைந்த புடவை தொலைந்ததும் எனக்கு நல்லதே!

முதல் முறை அதை அணிந்தபோது மல்லாக்க
(தலை கீழேயும் கால்கல் மேலேயும் இருக்கும்படி)
அந்த அகன்ற சாலையில் பரிதாபமாக விழுந்தேன்

ஒரு நாய் சாலையில் ஓடி வந்து ஃ ஜிக் ஃ ஜாக் பண்ணியது!
இவர் ஃ ஜாக் ஃஜிக் பண்ணி இருக்க வேண்டுமோ?

"சனி ஒழிந்தது !" என்று சேலையைப் பற்றிக்
கவலைப் படவில்லை

இன்றுவரை புரியவில்லை எப்படி
ஒரு நொடியில்,
ஒரு இடியில்,
ஒரு மூடிய பையில் இருந்த
ஒரு சேலையை எடுத்தாள் என்று!
 
In the medieval era it was widely believed a malady or illness could be transferred from one person to another or to an inanimate object on the strength of prayers and donations. Perhaps one of the most powerful evidence the rite actually existed, lies in the heart touching story of Gurkhani emperor Babur and his beloved son Humayun – a pair of father and son regents who lived and died in the 15th century.

 
This has happened again in the 21st Century - to my knowledge.

A nonagenarian repaid 'his dues' to his father who had died for 5 decades and also saved his son's life in a single drastic action with two different results!

He had a bad fall - since he had inflicted a similar fate on his own aged father, when he was a young and energetic MCP!

His son was warned by an astrologer that he might become bedridden under life threatening conditions.

The man who behaved like a bad son when young, became very noble as an old man . He took on his son's prospective ailments, he himself became bedridden and gave up his dear life to save his son's life.

Proof for the popular saying....
Every Sinner has a future!
Every Saint has a past!
 
முதலில் மனிதன் மது குடிப்பான்.

பிறகு மது அவனைக் குடிக்கும்!

The above statement does not include cases like this! :(

Assam spurious liquor death toll rises to 143 - The Hindu
https://www.thehindu.com › News › States › Other States
2 days ago - Relatives mourn the death of victims, who died after consuming spurious liquor at a tea garden at Halmari Tea Estate in Golaghat on February ...
 
# 348. Circus in the National Highway.

அன்று Vizag to சென்னைப் பயணம் - நான் மட்டும் தான்.

ரயில்நிலயத்துக்குச் செல்லும்போது பார்த்தோம்
முன்னே சென்ற அத்தனை இரு சக்கர வாகனங்களும்
ஒரு பெரிய வட்டம் அடித்து விட்டுப் பின் சரிந்து விழுந்ததை!

அதே இடத்தில், அதே போல, அத்தனையும் விழுந்தன!

பிறகு கவனித்ததில் தெரிந்தது சாலையில் இருந்த
ஒரு லாரியின் சக்கரம் விடுத்த அடையாளத்தில்
செல்லும்போது அந்த வண்டிகள் வட்டம் அடித்து விழுந்தன என்று.

இவரிடம் சொன்னேன், "அந்த கறுப்புக் கோட்டின் மேல்
போகாதீர்கள்!"

சொல்லும் போதே அதே கோட்டின் மீது சென்று, அதே போல வட்டம் அடித்து, நட்ட நடு ரோட்டில் இருவரும் விழுந்தோம்.

உடல் எல்லாம் கீறல்கள். புது nylex சாரி எங்கெல்லாமோ கிழிந்து....!வீடு சென்று மாற்றிக் கொள்ள நேரம் இல்லை.

"பகவான் விட்ட வழி!" என்று முன்னே சென்றோம்.

ரயிலில் செல்லும்போதே நல்ல ஜுரம் வந்து விட்டது.
புடவையையும் மாற்றிக் கொள்ள முடியவில்லை.

வீங்கிய முகமும், கிழித்த புடவையும், சிவந்த கண்களும், கொதிக்கும் உடம்புமாக ஊர் போய்ச் சேர்ந்தேன் -தனியாக!

அத்தனை பேர் அங்கேயே விழக் காரணம்....?

மீன்களை ஏற்றிச் சென்ற லாரியில் இருந்து கசிந்த
எண்ணை + தண்ணீர் + preservatives கலவை தான்.

அன்று மட்டும் அந்த சாலையில் எத்தனை பேர்
விழுந்து இருப்பர்களோ தெரியாது!

பின்னால் ஒரு லாரி வந்திருந்தால்....?
 

Latest posts

Latest ads

Back
Top