#10,420
Today's link:
Bhagavathy Bhaagavatam – An Introduction
பிரார்த்தனை
எந்த தேவியை வணங்கியதால் மும்மூர்த்திகள்
சொந்தப் பணியாற்றும் வல்லமை பெற்றனரோ;
எந்த ஆதி பராசக்தியின் வடிவம் எப்போதும்,
எல்லோருக்கும் தியானத்துக்கு உகந்ததோ;
எந்தப் பராசக்தியைத் தத்துவ ஞானிகள் கூடி
இந்த உலகத்தின் காரணம் என்கிறார்களோ;
அந்தப் பராசக்தியை; உலகின் அன்னையை;
அனைத்தையும் தருபவளை; வணங்குகிறேன்.
எந்த மகாசக்தி குழந்தையின் விளையாட்டாகவே
இந்த உலகைப் படைத்துக் காத்து அழிக்கிறாளோ;
எந்த தாக்ஷாயணி மலையரசன் மகளாக வந்து
சொந்த முயற்சியால் சிவனை அடைந்தாளோ;
எந்த தேவியைத் தன் துணைவியாக உடலிலும்,
பாதங்களை இதயத்திலும் சிவன் சுமக்கிறாரோ:
அந்த தேவியே, உலகத்தின் ஒரே அன்னையே,
இந்த உலகைத் தீமைகளிலிருந்து காக்கட்டும்.
பிரார்த்தனை எந்த தேவியை வணங்கியதால் மும்மூர்த்திகள் சொந்தப் பணியாற்றும் வல்லமை பெற்றனரோ; எந்த ஆதி பராசக்தியின் வடிவம் எப்போதும், எல்லோருக்கும் தியானத்துக்கு உகந்ததோ; எந்தப் பராசக்தியைத் தத்த…
bhagavathybhaagavatam.wordpress.com