மூன்று பதுமைகள்!
மனிதர்களில் மூன்று வகைகள் உண்டு,
முதல் வகை, நடு வகை, கடை வகை;
முதல் இரு வகையினர் அறிவார் தாங்கள்
முதலையின் பிடியில் சிக்கி உள்ளதை!
மூன்றாம் வகையினர் அறியார் தாம்
முதலையிடம் மாட்டிக் கொண்டதையே!
முதலையும், மூர்க்கனும் கொண்டது விடா;
முதலை என்பது மூழ்கடிக்கும் சம்சாரமே!
முழுவதும் உலக விஷயங்களிலேயே
மூழ்கித் திளைத்து வாழ விழைபவர் பலர்;
முயன்று முக்தி அடைய விரும்புவார் சிலர்;
முக்தி அடைந்து விட்டவர்களோ மிகச் சிலரே!
மூன்று பதுமைகள் நீரில் விழுந்தன,
முற்றிலும் அவை நீரில் மூழ்கலாயின;
முதல் பதுமையோ உப்பால் செய்தது,
முற்றிலும் கரைந்து மறைந்தே போனது!
இரண்டாம் பதுமை பஞ்சினால் ஆனது,
இருக்கும் நீரைத் தன்னுள் உறிஞ்சி
பெரிய வடிவம் எடுத்துக்கொண்டது;
பெரிய எடையும் அடைந்து விட்டது!
கல்லினால் செய்த மூன்றாம் பதுமை,
கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கி விட்டது.
கரையவும் இல்லை கனக்கவும் இல்லை;
கண நேரத்தில் நீரின் அடியில் அமர்ந்தது!
கரைந்த பதுமையோ முக்தி அடைந்தது;
கரைந்து நீருடன் அது ஒன்றாகி விட்டது!
இத்தகைய மனிதர்களே இப் பூவுலகில்,
முக்தர்கள் எனப்படும் முதல் வகை ஆவர்.
நீரை உறிஞ்சி கனமான பதுமையோ,
நிறைந்த அருள் மொழிகளைக் கேட்டு,
முக்தி அடையப் பற்று அறுக்க முயலும்,
முமுக்ஷு என்ற இரண்டாம் வகையினர்.
மூழ்கிக் கண நேரத்தில் அடியில் கிடப்பவர்,
மூன்றாம் வகையாம் லௌகீகர் ஆவார்.
இவர்கள் முக்திக்கு முயல்வதும் இல்லை;
இவர்கள் முக்தியை விழைவதும் இல்லை.
கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்;
கேட்டு அறிவோம் விடுதலை பெறும் வழியை!
முயன்றால் முடியாதது இல்லை அல்லவா?
முயலுவோம் முதலையின் பிடியிலிருந்து தப்ப!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
Cancel reply
மனிதர்களில் மூன்று வகைகள் உண்டு,
முதல் வகை, நடு வகை, கடை வகை;
முதல் இரு வகையினர் அறிவார் தாங்கள்
முதலையின் பிடியில் சிக்கி உள்ளதை!
மூன்றாம் வகையினர் அறியார் தாம்
முதலையிடம் மாட்டிக் கொண்டதையே!
முதலையும், மூர்க்கனும் கொண்டது விடா;
முதலை என்பது மூழ்கடிக்கும் சம்சாரமே!
முழுவதும் உலக விஷயங்களிலேயே
மூழ்கித் திளைத்து வாழ விழைபவர் பலர்;
முயன்று முக்தி அடைய விரும்புவார் சிலர்;
முக்தி அடைந்து விட்டவர்களோ மிகச் சிலரே!
மூன்று பதுமைகள் நீரில் விழுந்தன,
முற்றிலும் அவை நீரில் மூழ்கலாயின;
முதல் பதுமையோ உப்பால் செய்தது,
முற்றிலும் கரைந்து மறைந்தே போனது!
இரண்டாம் பதுமை பஞ்சினால் ஆனது,
இருக்கும் நீரைத் தன்னுள் உறிஞ்சி
பெரிய வடிவம் எடுத்துக்கொண்டது;
பெரிய எடையும் அடைந்து விட்டது!
கல்லினால் செய்த மூன்றாம் பதுமை,
கண்ணிமைக்கும் நேரத்தில் மூழ்கி விட்டது.
கரையவும் இல்லை கனக்கவும் இல்லை;
கண நேரத்தில் நீரின் அடியில் அமர்ந்தது!
கரைந்த பதுமையோ முக்தி அடைந்தது;
கரைந்து நீருடன் அது ஒன்றாகி விட்டது!
இத்தகைய மனிதர்களே இப் பூவுலகில்,
முக்தர்கள் எனப்படும் முதல் வகை ஆவர்.
நீரை உறிஞ்சி கனமான பதுமையோ,
நிறைந்த அருள் மொழிகளைக் கேட்டு,
முக்தி அடையப் பற்று அறுக்க முயலும்,
முமுக்ஷு என்ற இரண்டாம் வகையினர்.
மூழ்கிக் கண நேரத்தில் அடியில் கிடப்பவர்,
மூன்றாம் வகையாம் லௌகீகர் ஆவார்.
இவர்கள் முக்திக்கு முயல்வதும் இல்லை;
இவர்கள் முக்தியை விழைவதும் இல்லை.
கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்;
கேட்டு அறிவோம் விடுதலை பெறும் வழியை!
முயன்றால் முடியாதது இல்லை அல்லவா?
முயலுவோம் முதலையின் பிடியிலிருந்து தப்ப!
வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
Cancel reply