கால பைரவன்;99925 said:
An article was written by one of the members of SISHRI (South Indian Social History Research Institute) regarding nayar marriage. It can be seen below. This "tharavadu" is understood to have existed among Nayars even before Namboothris migrated to Kerala. I understand these types of cut/paste articles are not encouraged, but might be required to counter those who engage in distorting history.
My comments are in
Bold Orange please.
நாயர்களின் திருமணம்
"நாயர்களின் குடும்பம் 'த
ற(ர)வாடு' எனப்படும். இது தாய்வழி அமைப்புடையதும் தாய்த்தலைமை அமைப்புடையதுமாகும். இவ்வகைக் குடும்பங்களில் தாய், அவளின் பெண் மக்கள், சகோதரர்கள்,
(அவர்களின் மனைவி— சகோதரர்களின் மனைவிகள் இக்குடும்பத்தில் வாழ மாட்டார்கள்; எப்படி இந்த வீட்டூப் பெண்கள் இங்கு வாழ்கிறார்களோ அதே மாதிரி, மனைவிகள் அவரவர் பிறந்த வீடுகளில் அவரவர் தாய், சகோதரர்களுடன் தான் வாழ்வார்கள்), மக்கள் ஆகியோர் முதன்மையாக இடம் பெற்றிருப்பர். கணவனும் அவரது ஆண்வழி உறவினர்களும் இக்குடும்பத்தில் இடம் பெற மாட்டார்கள்.
நாயர்களின் திருமணம் பூப்படையாப் பெண்களுக்கு நடக்கும் திருமணத்திலிருந்து தொடங்குகிறது. (பூப்படைந்து அதிகம் நாள்க்கள் கழியாமலும் இது நடந்து வந்ததாகக் கேட்டறிவு.)ஒவொரு சிற்றூரிலும் 7 முதல் 12 வயது வரையுள்ள பூப்பு நிலை அடையவிருக்கும் கன்னிப் பெண்கள் பலரைச் சேர்த்து நடத்தும் இந்தத் திருமணம் மூலம் பெண்களுக்குச் சமூகத்தில் சிறப்பு நிலை கொடுக்கப்படுகிறது.
இவ்வகைத் திருமணத்திற்கு முன்னர் ஊரிலுள்ள பெரியோர்கள் கூடி, சோதிடரின் ஆலோசனையுடன் பூப்பு நிலை அடையவிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் மணமகன்களைத் (சடங்கு மனமகன்கள்) தேர்வு செய்வர்
(பல நாயர் சமூகங்களிலும் மணமகன்கள் இருந்ததில்லை; இந்த சடங்கிற்கு "புடவ கொட" - புடவை கொடுப்பது - என்று பெயர்; இந்த புடவகொட - இது மருவி புடவட ஆகியிருந்தது - செய்யும் அதிகாரம் அந்தந்த ஊரிலுள்ள ஒரு நம்பூதிரிக்குத் தான்;this namboothiri, and in the absence of any Namboothiri accepting this office, any Nair of standing, also had the right of deflowering the girls, once upon a time. Hence the statement in the book that this புடவட ritual was for girls who had yet to attain puberty, seems to be wrong in view of the further statement of conjugal relations during the three days and so on. All in all, this is not a dependable book, imo.) . திருமணச் சடங்கிற்கு மூன்று நாட்களுக்கு முன்னரே மணப்பெண்கள் அனைவரையும் தனிக்குடிலில் தங்கவைப்பர். சடங்கு நாளன்று சடங்கு மணமகன்கள் அனைவரும் வரிசையாக மணப்பெண்கள் தங்கியிருக்கும் வீட்டிற்கு வந்து பல சடங்குகளைச் செய்த பின்னர் தங்கத்தாலான தாலியை அவரவரின் மணப்பெண்ணிற்குக் கட்டி விடுவர். பின் ஒவ்வொரு ஜோடியும் தனியிடத்தில் மூன்று நாட்களுக்குத் தங்குவர். இந்த மூன்று நாட்களில் உடலுறவு கொள்ளலாம்.
(how? the girls have not attained puberty!) ஆனால் பொதுவாக ஈடுபடுவதில்லை. மூன்று நாட்கள் தனியாக இருந்த பின் 4 ஆம் நாள் புனிதச் சடங்கு நீராடுவர். இதனால் சேர்ந்து வாழ்ந்ததன் மூலம் ஏற்பட்ட தீட்டை விலக்கிக் கொள்வர்.நான்கு நாட்கள் சடங்கு முடிந்த பின்பு சடங்கு மணமகன்கள் அனைவரும் பிரிந்துவிடுவர். தாலி கட்டும் சடங்கின் மூலம் எந்தவொரு சடங்குக் கணவனும் தாலி கட்டிய பெண்ணின் குடும்பத்துடனோ, அக்குடும்பத்தின் சமூக பொருளாதார, அதிகார அமைப்பிலோ கணவன் – மனைவி என்ற தகுதியைப் பெறுவதில்லை. பெண்களைச் சமூகத்தில் மதிப்புமிக்க உறுப்பினராக்குவதே ஒவ்வொரு சடங்கு மணமகனின் பங்காக அமைகிறது. ஆகவே இச்சடங்கின் மூலம் இளம் பெண்கள் தாய்மைப் பேறடையும் பெண்கள் என்ற தகுதியையும் குழந்தை ஈன்றெடுக்கும் பேற்றினைப் பெற அங்கீகாரம் பெற்றவள் என்னும் தகுதியையும் பெறுகின்றனர். பூப்பு அடைவதற்கு முன்னர் நடைபெறும் இத்திருமணத்தைச் செய்து கொள்ளாத பெண்கள் புறச் சாதியினராகக் கருதப்பட்டு விலக்கப்படுவர்.
சடங்குத் திருமணம் முடிந்த பெண்கள் பூப்பு எய்தியவுடன் தங்களுக்குப் பிடித்த ஆண்களுடன் உடலுறவு கொள்வர். இவர்கள் பார்வைக் கணவர்கள்
(கணவன் அல்லது பர்த்தாவு எனும் வார்த்தை இந்த ஆண்களுக்கு உபயொகப்படுத்துவதில்லை; அத்தேஹம், சம்பந்தக்காரன், என்றெல்லாம் தான் சொல்லிவந்தார்கள்.) எனக் கூறப்படுகின்றனர். பொதுவாக ஒவ்வொரு பெண்ணும் சில ஆண்களையே (கணவர்கள்) சேர்த்துக் கொள்வாள். இந்த ஆண்களுள் அவளுக்குத் தாலி கட்டிய சடங்குக் கணவனும் இடம் பெறலாம். சடங்குக் கணவனும் பிற ஆண்களும் ஒரே நேரத்தில் வந்துவிட்டாலும், தாலிகட்டிய சடங்குக் கணவனுக்குப் பாலுறவில் முன்னுரிமை கொடுப்பது அவளின் விருப்பத்தைப் பொறுத்ததே.
ஓர் இரவில் பல ஆண்கள் ஒரு பெண்ணுடன் சேர்ந்திருக்க எண்ணி வரலாம். ஆகவே பெண்ணுடன் உடலுறவு கொள்ள குடிசைக்குள் நுழைபவன் ஒரு பொருளை வாயிற்படியில் வைத்துவிட்டு உள்ளே சென்று விடுவான். அவனுக்கடுத்து வேறொருவன் வரும்போது முன் சென்றவனின் பொருள் குடிசைக்கு வெளியே இருக்குமாதலால் பின்னர் வந்தவன் முதலில் சென்றவன் வெளியே வரும் வரை காத்திருப்பான். பெரும்பாலும் பார்வைக் கணவர்கள் இரவு உணவிற்குப் பின் வந்து காலை உணவிற்கு முன்னரே பெண்ணின் வீட்டிலிருந்து சென்று விடுவர். ஒரு பெண்ணுடன் தொடக்கக் காலத்தில் தொடர்பு கொள்ளும் பார்வைக் கணவர்கள் அன்பளிப்புகளைத் தருவர். இவை பெரும்பாலும் உடை வகைகளாக இருக்கும். பின்னர் ஆண்டிற்கு மூன்று முறை நடைபெறும் திருவிழாவில் அன்பளிப்புகளைத் தருவார்கள். அவ்வாறு தரவில்லை என்றால் அவர்கள் அவளோடு தொடர்ந்து உறவு கொள்ள விரும்பவில்லை என்பதைக் காட்டும். ஆணும் பெண்ணும் எந்த நேரத்திலும் தங்கள் உறவை முறித்துக் கொள்ளலாம்.
பெண் கர்பமடையும் போது அவளின் தாய்மைப் பேற்றிற்குக் காரணமானவன் நான் தான் என்று கூற ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் முன்வருவர். இந்த உறுதிமொழி குழந்தை பிறந்ததும் பிறப்பைக் கவனித்த செவிலித்தாயிற்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுப்பதன் மூலம் அவர் சமூகத் தந்தை என்னும் தகுதியைப் பெறுவார். இவ்வாறு பணம் கொடுக்க முன்வராமல் போனால் அப்பெண் தகாத சாதியினருடன் தொடர்பு கொண்டாள் எனப் பழிசுமத்தப்படுவாள். செவிலித் தாய்க்குப் பணம் கொடுப்பதன் மூலம் ஒருவன் அக்குழந்தையோடும் குடும்ப, பொருளாதார, அதிகார, சடங்கு முறைகளோடும் தொடர்பு பெற்றுவிட முடியாது.
குழந்தைகளைத் தாய்க் குடும்பத்திலேயே வளர்க்கின்றனர். ஒரு தாயின் குழந்தைகள் அனைவரும் தங்கள் தாயோடு தொடர்பு கொள்ளும் அனைத்துப் பார்வைக் கணவர்களையும் மகான் என்னும் பொருளுடைய பெயரிலேயே அழைக்கின்றனர். குழந்தைகளுக்கும் தந்தைக்கும் எவ்வகையான நேரடி உறவும் இருப்பதில்லை. ஆனால் சடங்குக் கணவனுக்கும் அவன் தாலி கட்டிய பெண்ணின் குழந்தைகளுக்கும் ஒரு முக்கியமான உறவு நிலை பெற்றுள்ளது. சடங்குக் கணவன் தான் தாலி கட்டியப் பெண் தாய்மையடையும் போது அதற்குக் காரணம் நான் தான் என்று கூறவில்லையாயினும், அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும்போது செவிலித் தாய்க்காகும் செலவைக் கொடுத்து அக்குழந்தையின் சமூகத் தந்தை என்னும் தகுதியைப் பெறவில்லையாயினும் அவன் இறக்கும்போது, அவன் ஈமச் சடங்குகளை அவன் தாலிகட்டிய பெண்ணின் குழந்தைகள் செய்வார்கள். நாயர் திருமணமுறை நிறுவனமுற்ற குடும்ப அமைப்பாகச் செயல்படாத போதிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் சமுதாயத்தில் அவர்களுக்கான தகுதியைப் பெற்றுக்கொடுக்கிறது.
இன்று இவ்வகைத் திருமணம் மறைந்து விட்டது."(காண்க: பண்பாட்டு மானுடவியல், பக்தவச்சல பாரதி)
மேற்படியான உறவில் பிறந்த எந்த வாரிசுகளையும், உடனிருக்கும் ஆணாதிக்கச் சமூகத்தவர் (பரத்தைமையும்; கற்பு நெறியும் ஒருங்கே அமைந்த சமூகத்தினர்) வேசி மக்கள் என்றே அழைப்பர். இது சாஸ்திரத்தில் எழுதப்பட்டுவிட்டதால், அதை எழுதியது பார்ப்பான் என்பதால், பார்ப்பான் இழிவு படுத்திவிட்டான் என்று சொல்வது வரலாற்றுப் பார்வையல்ல. இது எழுதப்பட்ட காலத்தில் சமூகம் ஜனநாயகமயப் பட்டிருக்கவில்லை. இப்படி இருக்க, பார்ப்பான் இழிவு படுத்திவிட்டதாகக் கூறுவது 'எம்ப்ரிகல்' நோக்கில் இருந்துதான்.
(Here we have to bear in mind one aspect. Even when the nairs' system of "sambandham" and marumakkathaayam were in operation, the Namboothiris followed makkaL thaayam as per Hindu Dharma Saastras. Perhaps the misuse of the Sambandham system had much to do with the Namboothiris' eagerness to limit their descendents to the eldest son's eldest son and so on, so that the landed estates were saved from fragmentation. Thus the Sambandham system ideally fitted with the Namboothiri system like the DNA-RNA combine. Is it not, then, justified that the பார்ப்பான் is blamed for this?)