• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
3561. ஸமய: = காலம், பொழுது, வழக்கம், முறை, நிலைமை, நிபந்தனை, கட்டளை, குறி, குறிப்பு, சபதம், முடிவு, எல்லை.

3562. ஸமர: = போர், சண்டை.

3563. ஸமர்த2 = திறமையுள்ள, கெட்டிக்காரன் ஆன, பலம்
வாய்ந்த, தகுதி உடைய.

3564. ஸமர்ப்பணம் = தானம், காணிக்கை, கொடுத்தல்.

3565. ஸமவாய: = சேர்க்கை, கலப்பு, கூட்டம், குவிப்பு.

3566. ஸமஷ்டி = மொத்தம், எல்லாம்.

3567. ஸமஸ்த = சேர்க்கப்பட்ட, சுருக்கப்பட்ட, முழு, எல்லா.

3568. ஸமஸ்யா = பூர்த்தி செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரு செய்யுளின் ஒரு அடி.

3569. ஸமாக3ம: = சேர்க்கை, சேருதல், வருகை.

3570. ஸமாதா4னம் = சேர்த்தல், பக்கத்தில் வைத்தல், திருப்தி, தியானம், சிந்தித்தல், விடை அளித்தல், சமாதானம்.
 
3571. ஸமாதி4: = தியானம், தவம், மௌனம், செய்து முடித்தல், அசைவற்ற தன்மை, பூத உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்.

3572. ஸமான = நல்ல, நியாயமான, சாதரணமான, ஒன்று போல் உள்ள.

3573. ஸமான: = சமமானவன், நண்பன், பஞ்ச பிராணன்களில் ஒன்று.

3573. ஸமாபனம் = முடித்தல், கொல்லுதல், அடைதல்.

3574. ஸமாப்த = முடிக்கப்பட, பூர்த்தி செய்ப்பட்ட.

3575. ஸமாப்தி: = முடிவு, முழுமை, நிறைவேற்றல்.

3576. ஸமாராத4னம் = தோடு புரிதல், திருப்தி செய்வித்தல்,
மகிழ்ச்சி அளித்தல்.

3577. ஸமாரோஹ : = ஏறுதல், சவாரி செய்தல்.

3578. ஸமாவ்ருத = சூழப்பட்ட, மறைக்கப்பட்ட.

3579. ஸமாஸ: = சேர்க்கை, கலவை, கூட்டு, சுருக்கம்,

3580. ஸமிதி: = சபை, குழு, சமூஹம், கூட்டம்.
 
3581. ஸமீக்ஷா = தேடுதல், ஆராய்தல், சிந்தித்தல், புத்தி, அறிவு.

3582. ஸமீசினம் = உண்மை, சரியானது, பொருத்தமானது.

3583. ஸமுத்பதி = ஸமுத்3ப4வ: = பிறப்பு, உற்பத்தி.

3584. ஸமுதா3ய: = ஸமூஹ: = சமுதாயம், கூட்டம்.

3585. ஸமுத்3த4ரணம் = தூக்குதல், விடுவித்தல், வருடன்
பிடுங்குதல்.

3586. ஸமுத்3ர: = ஸாக3ர: = கடல், சிவன்.

3587. ஸமுன்னத = உயர்ந்த, மேலான, முக்கியமான.

3588. ஸம்ருத்3தி4: = செல்வம், நிறைவு, வளர்ச்சி, செழிப்பு.

3589. ஸமேத = கூட, கூடிய, அருகில் உள்ள.

3590. ஸம்பத்தி = செல்வம், சொத்து, விருத்தி, மிகுதியான.
 
3591. ஸம்பன்ன = செல்வம் படைத்த, பூர்த்தி செய்த, முழுமை அடைந்த, மகிழ்ச்சி அடைந்த.

3592. ஸம்பர்க: = தொடர்பு, சேர்க்கை, கலப்பு, தொடுதல்.

3593. ஸம்பாத3னம் = செய்துமுடித்தல், சம்பாதித்தல்.

3594. ஸம்புட: = சிறு பெட்டி, டப்பா.

3595. ஸம்பூர்ண = நிறைந்த, எல்லாமான.

3596. ஸம்ப்ரதி = இப்போது.

3597. ஸம்ப்ரதா3ய: = பாரம்பர்யம், வழக்கம்.

3598. ஸம்ப்ரோக்ஷணம் = புனிதமான நீரைத் தெளித்தல்.

3599. ஸம்ப3த்3த4 = இணைக்கப்பட்ட, பிரியம் கொண்ட.

3600. ஸம்ப4வ: = பிறப்பு, உற்பத்தி, இருப்பு, சந்திப்பு, கலப்பு, காரணம், நிகழ்ச்சி, சம்பவம்.
 
3601. ஸம்பா4ர: = தேவையான பொருட்கள், சேர்க்கை, சேர்த்தல், தயாரித்தல், கூட்டம், குவியல், நிறைவு, உதவி.

3602. ஸம்பா4வனம் = ஸம்பா4வனா = சன்மானம், மரியாதை, தகுதி, சந்தேகம், எண்ணம், ஆலோசித்தல், எண்ணுதல்.

3603. ஸம்பா4ஷா = ஸம்பா4ஷணம் = பேசுதல், சம்பாஷணை.

3604. ஸம்ப்4ருத = நிறைந்த, சேர்க்கப்பட்ட, சுமக்கப்பட்ட,
உண்டாக்கப்பட்ட, அடையப்பட்ட, வளர்க்கப்பட்ட, தயார்
செய்யப்பட்ட, வைக்கப்பட்ட.

3605. ஸம்போ4க3: = சுகம், ஆனந்தம், புணர்ச்சி.

3606. ஸம்ப்4ரம: = சுழற்சி, குழப்பம், ஊக்கம், சிரத்தை, பயம்,
குற்றம், குறை, அவசரம்.

3607. ஸம்மதம் = இணக்கம், ஒப்புதல்.

3608. ஸம்மதி: = ஆமோதித்தல், இணக்கம், ஒப்பு, ஆசை,
விருப்பம், மதிப்பு, பிரியம் , சிநேஹம்.

3609. ஸம்மான: = மரியாதை, மதித்தல்.


3610. ஸம்மேளனம் = கூடுதல், கலத்தல், சபை, சேர்த்தல்.
 
3611. ஸம்மோஹ: = குழப்பம், பரபரப்பு, மயக்கம், வசீகரித்தல், அறியாமை, மடத்தனம்

3612. ஸம்ராஜ் = சக்கரவர்த்தி.

3613. ஸரணி: = ஸரணீ = வழி, பாதை, போக்கு, வரிசை.

3614. ஸரள = கபடம் அற்ற, சுலபமான, நேரான.

3615. ஸரஸ் = குளம், ஏரி, பொய்கை, தண்ணீர்.

3616. ஸரஸிஜம் = ஸரஸிருஹம் = ஸரோஜம் = தாமரை.

3617. ஸரஸ்வதி = கல்வியின் தேவதை, சொல், பேச்சு, மேலான
ஸ்திரீ, பசு, ஒரு நதியின் பெயர்.

3618. ஸரித் = நதி, கயிறு.

3619. ஸர்க3: = தியாகம், விட்டுவிடுதல், இயற்கை குணம்,
சிருஷ்டி, படைப்பு, தீர்மானம், காப்பியத்தின் பகுதி, ஒப்பு, உலகு, வேகமாகச் செல்லுதல்.

3620. ஸர்ப: = நல்ல பாம்பு, போக்கு, செல்லுதல்.
 
3621. ஸர்வ = எல்லாமான, முழுதுமான.

3622. ஸர்வ: = விஷ்ணு, சிவன்.

3623. ஸர்வஜித் = ஒரு ஆண்டின் பெயர், எல்லோரையும் ஜெயித்தவன்.

3624. ஸர்வக்ஞ : = சிவன், எல்லாம் அறிந்தவன்.

3625.ஸர்வத: = எங்கும், எல்லாப்பக்கங்களிலும்.

3626. ஸர்வத்ர = எல்லா இடங்களிலும், ஒவ்வொரு இடத்திலும், எப்போதும்.

3627. ஸர்வதா2 = முற்றிலும், முழுவதும், எக்காலத்திலும்,
எல்லாவிதத்திலும், எல்லா வழிகளிலும்.

3628. ஸர்வதா3 = எக்காலத்திலும், எப்போதும்.

3628. ஸர்வச': = முழுவதும், எவ்விடத்திலும், எப்பக்கத்திலும்.

3630. ஸலிலம் = தண்ணீர்.
 
3631. ஸவ: = யாகம், நீர்க்கடன் கொடுத்தல், சோமக் கொடியைப் பிழிதல், சந்ததி, சூரியன், சந்திரன்.

3632. ஸவித்ரு = சூரியன், சிவன், இந்திரன், எருக்கஞ்செடி.

3633. ஸவித்ரி = தாய், பசு.

3634. ஸவ்ய = இடது, தென்புறமான, எதிரிடை, தலை கீழான.

3635. ஸஸ்யம் = தானியம், பயிர், நற்குணம்.

3636. ஸஹ = ஸாகம் = கூட, சேர்ந்து.

3637. ஸ
ஹஸா = பலாத்காரமாக, உடனடியாக, எதிர்பாராது,
புன்சிரிப்புடன், ஆலோசிக்காமல்.

3638. ஸஹஸ்ரம் = ஆயிரம்.

3639. ஸஹஸ்ராம்சு' = ஸஹஸ்ரார்சி: = ஸஹஸ்ரஷ்மி = சூரியன்.

3640. ஸஹாய: = நண்பன், தோழன், சிவன், பின் பற்றுபவன், உதவி செய்பவன்.
 
3641. ஸஹாயதா = ஸஹாயத்வம் = ஸ்நேஹம், நட்பு, சேருதல், உதவி, தோழர்களின் கூட்டம்.

3542. ஸஹித = கூடவுள்ள, இணைந்த, கூட.

3643. ஸஹ்ய = சாஹிக்கக் கூடிய, தாங்கக் கூடிய.

3644. ஸா = லக்ஷ்மி, பார்வதி, அவள்.

3645. ஸாங்3க = அங்கங்களுடன் / பகுதிகளுடன் கூடிய.

3646. ஸாத்விக = உள்ளது உள்ளபடி, உண்மையான, அவசியமான, நல்ல, சரியான, சத்வ குணமுடைய.

3647. ஸாத3னம் = களைப்பு, சேதம் செய்தல், வீடு, இருப்பிடம்.

3648. ஸாத்3ருச்'யம் = ஒருமைப்பாடு, சமமானது, ஒரே உருவம் உள்ளது, படம், உருவம்.

3649. ஸாத4னம் = காரியத்தை செய்து முடித்தல், பூர்த்தி செய்தல், உபாயம், கருவி, காரணம், சாமான்கள், அடக்குதல், ஜெயித்தால், தவம், சேனை, மோக்ஷம்.

3650. ஸாதா4ரணம் = பொதுவான, வழக்கமான, சாமான்யமான, சமமான.
 
3651. ஸாது4 = பொருத்தமான, தகுதியான, நல்ல, சரியான, மேலான.

3652. ஸாது: = நல்லவன், முனிவன், சாது, வியாபாரி, வட்டிக் கடைக்காரன்.

3653. ஸாத்3ய = செய்யத் தக்க, அடையத் தக்க, செய்து முடிக்கத் தக்க, முடிந்த.

3654. ஸாத்வீ = பதிவிரதை, நல்லவள்.

3655. ஸானு = மலை உச்சி, மலை மீதுள்ள சமதள பூமி, முளை, காடு, சூரியன், சாலை, பாதை, கற்றறிந்தவன்.

3656. ஸாந்த3ர = நெருக்கமான, கூட்டமான, அதிகமான,
மிகுதியான, பருத்த, பலமான.

3657. ஸாந்நித்4யம் = அருகில் இருத்தல், எதிரில் இருத்தல்.

3658. ஸாப2ல்யம் = லாபம்,, வெற்றி, பயன் அளிக்கும் தன்மை.

3659. ஸாமக்3ரி = சாமான்கள், பொருள், கருவி.

3660. ஸாமன் = அமைதிப் படுத்துதல், சமாதான
ம் செய்தல், அடக்கம், மென்மை, சாமவேதம்.
 
3661. ஸாமந்த = பொதுவான, உலகம் முழுவதும் பரவிய, அருகிலுள்ள, எல்லையிலுள்ள.

3662. ஸாமர்த்யம் = சக்தி, வலிமை, திறமை, போதுமானது.

3663. ஸாமான்ய = பொதுவான, சமமான, அற்பமான, சாதாரணமான, பூரணமான.

3664. ஸாமான்யம் = சமூஹம், கூட்டம், வகை, சமமானது, பொதுவானது, ஒரே உருவம் கொண்டவை.

3665. ஸாமீப்யம் = அருகில் இருப்பது, சமீபம்.

3666. ஸாம்ப்ரத = உசிதமான, தகுதியான, பொருத்தமான.

3667. ஸாம்யம் = ஒப்பானது.

3668. ஸாம்ராஜ்யம் = பெரிய நாடு, சாம்ராஜ்யம்.

3669. ஸாய: = முடிவு, அம்பு, மாலை வேளை.

3670. ஸாயம் = மாலை வேளையில்.
 
3671. ஸார: = ஸாரம் = சத்து, சாரம், சாறு, நூலின் சுருக்கம், திறமை, சக்தி, வலிமை, கோந்து, அமிர்தம், ஒரு நோய், மேன்மை, சூரத்தனம், உடலில் உள்ள கொழுப்பு.

3672. ஸாரங்க3: = மான், புள்ளிமான், யானை, வண்டு, சிங்கம், மேகம், அன்னப் பக்ஷி, மன்மதன், கற்பூரம், தாமரை, ஒரு இசைக் கருவி.

3673. ஸாரதி2: = தேர் ஓட்டுபவன், உதவியாள், கடல்.

3674. ஸாரமேய: = நாய்.

3675. ஸாரூப்யம் = உருவத்தில் ஒப்பு, முக்தியில் ஒரு வகை.

3676. ஸார்த2 = பொருளுடன் கூடிய, செல்வம் படைத்த, அர்த்தம் உள்ள.

3677. ஸார்த4 = ஒன்றுக்கு மேல் பாதி சேர்ந்த.

3678. ஸார்வபௌ4ம: = சக்கரவர்த்தி, அரசர்கோன்.

3679. ஸால: = மதில் சுவர், கோட்டை மதில் சுவர், சுவர், மரம், சால மரம்.

3680. ஸாவாகாச'ம் = ஓய்வுடன், சௌகரியப்படி.
 
3681. ஸாவதா4னம் = கவனத்துடன், நிதானமாக.

3682. ஸாவித்ரீ = பார்வதி, சத்யவானின் மனைவி, உபநயனச் சடங்கு, காயத்ரீ மந்த்ரம், ஒளிக் கிரணம்.

3683. ஸாஹஸம் = பலாத்காரம், வேகத் தன்மை, தண்டனை, கொடுமை, தவறான செயல், தைர்யம் , பிடிவாதம்.

3684. ஸாஹாய்யம் = உதவி, தோழமை.

3685. ஸாஹித்யம் = இலக்கிய படைப்பு, சாஹித்ய சாஸ்திரம், சேர்க்கை, சேருதல்.

3686. ஸிம்ஹ: = சிங்கம், சிம்ம ராசி, முக்கியமானவன்.

3687. ஸிகதா = மணல், மணல் பாங்கான நிலம்.

3688. ஸிச் = வெண்மையான, சூழப்பட்ட, கட்டப்பட்ட, முடிக்கப்பட, அறியப்பட்ட.

3689. ஸித = வெண்மையான.

3690. ஸிதா = சர்க்கரை, அழகான ஸ்த்ரீ, நிலா.
 
3691. ஸித்3த4 = நிறைவேறின, முழுமை அடைந்த, தீர்க்கப்பட்ட, ஸ்தாபிக்கப்பட்ட, விடுபட்ட, புனிதமான, சுத்தமான, புகழ் வாய்ந்த, தெய்வத் தன்மை வாய்ந்த.

3692. ஸித்3தா4ந்த: = பிரமாண உண்மை, பயன், முடிவு, கொள்கை, வாதத்தின் முடிவு.

3693. ஸித்3தி4: = பூர்த்தி, செய்து முடித்தல், லயித்துப் போதல், மோக்ஷம், தெய்வீக சக்தி, தீர்மானித்தல்.

3694. ஸிந்து4: = கடல், ஸிந்து நதி, ஸிந்து நாடு.

3695. ஸீதா = உழும் போது நிலத்தில் ஏற்படும் பள்ளமான
கோடு, விவசாயம், ஜனகனின் வளர்ப்பு மகள்.

3696. ஸீமந்த: = எல்லைக் கோடு, தலை மயிரின் வகிடு.

3697.
ஸீமா = எல்லை, ஓரம், கரை, அண்டம், வயல்.

3698. ஸீர: = கலப்பை, சூரியன்.

3699. ஸு = நல்ல, சரியான, மேலான, அழகான, பூர்த்தியான
(என்னும் பொருள் தரும் ஒரு முற்சேர்கைச் சொல் / prefix)

3700. ஸுக்ருதம் = நல்ல காரியம், நல்ல செயல், கிருபை, தயை, புண்ணியம்.
 
Last edited:


மயக்கி மருட்டும் சில சொற்கள்.


my dear friends,

I am happy to note the significant increase in the traffic in this thread. :happy:

It may be due to the new members who find this useful
or due to the old member who have had a late realisation
or may be due to both. :)

I wish the newcomers should make use of the Tamil thread which was completed exactly eight months ago.

The name is given at the top of THIS post and you can find in the third page of the Literatures section.

When Sanskrit gets so much attention can our mother tongue Tamil be left behind??? :nono:

Happy reading!

with warm regards, :pray2:
Visalakshi Ramani.
 
3701. ஸுக2ம் = நலம், ஆனந்தம், மகிழ்ச்சி, சுபம், சுவர்க்கம், தண்ணீர்.

3702. ஸுக3ந்த4ம் = நல்ல வாசனை, சந்தனம்.

3703. ஸுக்3ரீவ: = அன்னப் பக்ஷி, தலைவன், வீரன், வானர அரசன் சுக்ரீவன்.

3704. ஸுசரித = ஸுசரித்திர = நல்ல ஒழுக்கம் உடைய.

3705. ஸுசிரம் = நீண்ட காலம் வரை.

3706. ஸுஜன: = நல்ல மனிதன்.

3707. ஸுத: = மகன், அரசன்.

3708. ஸுதா = ஸூநூ = மகள்.

3709. ஸுதி3னம் = நல்ல நாள்.

3710. ஸுதூ3ரம் = நெடுந்தூரம்.
 
3711. ஸுதா4 = அமிர்தம், சுண்ணாம்பு, தேன், தண்ணீர்.

3712. ஸுதீ4: = கற்றறிந்தவன், பண்டிதன்.

3713. ஸுந்த3ர = அழகான, பிரியமான, மனத்தைக் கவரும்.

3714. ஸுபத2: = நல்ல சாலை, நல்ல பாதை.

3715. ஸுபர்ண: = கருடன், கந்தர்வன், சூரிய கிரணம்.

3716. ஸுப்தி: = தூக்கம், நம்பிக்கை.

3717. ஸுப4க3 = பாக்கியசாலியான, அழகான, பிரியமான.

3718. ஸுபா4ஷிதம் = அழகான பேச்சு, நீதி வாக்கியம்.

3719. ஸுபி4க்ஷம் = செழிப்பு, க்ஷேமம், வளமை.

3720. ஸும: = சந்திரன், ஆகாயம்.
 
3721. ஸுமதி: = நல்ல சுபாவம், நல்ல மனம், நல்ல புத்தி, உபகாரம், கிருபை, ஆசீர்வாதம், பிரார்த்தனை.

3722. ஸுமுக2: = கணேசர், சிவன், கருடன், கற்றறிந்தவன்.

3723. ஸுர: = தேவன், சூரியன்.

3724. ஸுரபி4: = நல்ல மணம், சம்பக மரம், கடம்ப மரம், பொன், வசந்த காலம், ஜாதிக்காய், பசு, காமதேனு, துளசி, பூமி, மதுபானம், கந்தகம்.

3725. ஸுரா = கள், தண்ணீர், குடிக்கும் பாத்திரம்.

3726. ஸுவர்ணம் = ஸ்வர்ணம் = தங்கம், தங்கக் காசு.

3727. ஸு ஷமா = அதிக அழகு, அதிக காந்தி.

3728. ஸு ஷுப்தி: = ஆழ்ந்த உறக்கம், அறியாமை.

3729. ஸு ஷும்னா = உடலின் ஒரு முக்கிய நாடி.

3730. ஸூகர: = பன்றி.

[Note. I had to give an extra space between the 'su/soo' and 'sha/shu' etc. Otherwise they jump and hug each other like long lost lovers!] :)
 
3631. ஸவ: = யாகம், நீர்க்கடன் கொடுத்தல், சோமக் கொடியைப் பிழிதல், சந்ததி, சூரியன், சந்திரன்.

3632. ஸவித்ரு = சூரியன், சிவன், இந்திரன், எருக்கஞ்செடி.

3633. ஸவித்ரி = தாய், பசு.

3634. ஸவ்ய = இடது, தென்புறமான, எதிரிடை, தலை கீழான.

3635. ஸஸ்யம் = தானியம், பயிர், நற்குணம்.

3636. ஸஹ = ஸாகம் = கூட, சேர்ந்து.

3637. ஸ
ஹஸா = பலாத்காரமாக, உடனடியாக, எதிர்பாராது, புன்சிரிப்புடன், ஆலோசிக்காமல்.

3638. ஸஹஸ்ரம் = ஆயிரம்.

3639. ஸஹஸ்ராம்சு' = ஸஹஸ்ரார்சி: = ஸஹஸ்ரஷ்மி = சூரியன்.

3640. ஸஹாய: = நண்பன், தோழன், சிவன், பின் பற்றுபவன், உதவி செய்பவன்.
 
Last edited:
I Had posted words # 3631 to 3640 instead of # 3731 to 3740 yesterday.

So I will be posting both yesterday's # 3731 to 3740 and
today's # 3741 to # 3750 now.

Please don't blame me. I am sacrificing 90 minutes sleep everyday to able to attend the Ushath kaala puja in the temple.

As the sleep deficits adds on, I will be doing more crazy and cranky things throughout this Tamil month. Please bear with me! :pray2:
 
3731. ஸூசக: = துளை போடுபவன், ஊசி, துளைபோடும் கருவி, செய்தி தெரிவிப்பவன், காக்கை, நாய்.

3732. ஸூசனம் = ஸூசனா = துளைதல், அறிவித்தல், ஜாடை.

3733. ஸூசி: = ஸூசீ = துளையிடுதல், ஊசி, கூர்மையான நுனி, கூம்பு, குறிப்பு, அட்டவணை, நூலின் பொருளடக்கம்

3734. ஸூசிகா = ஊசி, யானையின் துதிக்கை.

3735. ஸூத: = தேரோட்டி, தேர் தச்சன், சூரியன்.

3736. ஸூதி: = பிறவி, பிறப்பு, குழந்தை.

3737. ஸூத்ரம் = கயிறு, கம்பி, நூல், பூணூல், சூத்திரம்,
சுருக்கமான சொல்.

3738. ஸூத3: = சேதம் செய்தல், கொலை, கிணறு, சமையல்
செய்பவன், மண், குற்றம்.

3739. ஸூனா = மகள், நதி, ஒளிக்கிரணம், இடுப்புப் பட்டை,
கசாப்புக் கடை, கொல்லுதல்.

3740. ஸூனு: = மகன், குழந்தை, தம்பி, சூரியன்.
 
3741. ஸூந்ருதம் = மங்களம், சுபம், உண்மையான பேச்சு, பிரியமான பேச்சு.

3742. ஸூர: = சூரியன், அரசன், கவிஞன், கற்றறிந்தவன், சோம என்னும் கொடி, எருக்க இலை அல்லது செடி.

3743. ஸூரி: = சூரியன், முனிவர், கற்றறிந்தவன், புரோகிதர், கிருஷ்ணன்.

3744. ஸூர்ய: = சூரியன், எருக்கஞ்செடி.

3745. ஸூக்ஷ்ம = நுட்பமான, சூட்சுமமான, சிறியதான, கூர்மையான, மெல்லிய, சாதுர்யமான, சரியான.

3746. ஸூக்ஷ்மம் = சூக்ஷும தத்துவம், பரம்பொருள்,
சூட்சுமத் தன்மை, திறமை, வஞ்சனை, மோசடி, ஒரு சொல் அணி.

3747. ஸூக்ஷ்ம: = அணு.

3748. ஸ்ருஜ் = உண்டுபண்ண, பிறப்பிக்க, செய்ய, விட்டுவிட, தள்ளிவிட, அணிய, கொட்ட, ஏறிய, அனுப்ப.

3749. ஸ்ருணீ: = அங்குசம்.

3750. ஸ்ருஷ்டி: = படைப்பு, விட்டு விடுதல், கொடுத்தல், இயற்கை குணம், மக்கள், குழந்தைகள்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top