• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இன்று மகா கவி பாரதியாரின் நினைவு தினம் :

Status
Not open for further replies.

Brahmanyan

Active member
இன்று மகா கவி பாரதியாரின் நினைவு தினம் :

மகாகவி பாரதியார் நினைவு தினத்தன்று அவர் பாடல்களில் எனக்கு பிடித்த பாடல் ஒன்றை
நினைவுகூறுகிறேன் :


நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்து
விட்டால்கொஞ்சமோ பிரிவினைகள் - ஒரு
கோடியென் றாலது பெரிதாமோ?

அஞ்சுதலைப் பாம்பென்பான் - அப்பன்
ஆறுதலை யென்றுமகன் சொல்லிவிட்டால்
நெஞ்சு பிரிந்து விடுவார் - பின்பு
நெடுநாளிருவரும் பகைத்திருப்பார் (நெஞ்சு)


சாத்திரங்க ளொன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள்சொலும் வார்த்தைநம்பியே
கோத்திரமொன் யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத்திகழ்வார்
தோத்திரங்கள் சொல்லியவர்தாம் - தமைச்
சூதுசெயு நீசர்களைப் பணிந்திடுவார் - ஆனால்
ஆத்திரங் கொண்டே யிவன் சைவன் - இவன்
அரிபக்த னென்றுபெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு)

எண்ணிலா நோயுடையார் - இவர்
எழுந்து நடப்பதற்கும் வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள்போல் - பிறர்
காட்டிய வழியிற் சென்று மாட்டிக் கொள்வார்
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் (நெஞ்சு)


ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
இதுவும் மீசைக்காரரின் தீர்க்க தரிசனம்! :hail:

விலங்குகள் போல வாழ்வார் :frusty:
 
Here is Bharathiar talking about greatness of Tamil Language
தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும். 1

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார். 4
 
இன்று மகா கவி பாரதியாரின் நினைவு தினம் :

Here is Bharathiar talking about greatness of Tamil Language
தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும். 1

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார். 4




நண்பர் ஸ்ரீ "mkrishna" அவர்களுக்கு
வணக்கம் பல,
அற்புதமான கவிதை.
மஹா கவி பாரதியார் ஒருவரால் மட்டும் தான் இவ்வளவு தீர்கதரிசனமாக எழுதமுடியும் . அவருடைய கவிதைகளை நமது இளம் செல்வங்களுக்கு எடுத்துக் கூறுவதே அக்கவிஞருக்கு நாம் செய்யும் நன்றிக்கடனாகும் .

நலம்கொரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!


பெருங்காயம் வைத்த பெட்டியைப் போல
பேரில் மட்டும் தமிழ் உள்ளது! :nod:

தமிழ் மற்றும் தமிழனின் பெருமை
போன இடம் தெரியவில்லை!! :sad:
 
Bharati was also equally fluent in English!

I came across an article by Mr. K.R.A. Narasiah in MadrasMusings, January 1-15, 2013 VOL. XXII NO. 18, p3.

Nearly 100 years ago, in an open letter to the Hindu...Bharati complains about the Police. His command of the language was so impressive.

On February 10, 1914, Subramania Bharati wrote an open letter in The Hindu under the heading “Police Rule In India”. It was addressed to James Ramsay MacDonald, Leader of the British Labour Party.

In his letter, Bharati describes how he was hounded by the British police, their informers, and spies during his stay in Pondicherry.

Excerpts:

"Dear Sir, From the middle of the year 1906 to the month of August 1908, I was working as a special contributor to a weekly Tamil Journal (named) India , …published in Madras. In (1908) …………..the Government thought it fit to prosecute that journal for sedition.

"I was not the person responsible for the conduct of the Journal and so, of course, they sent another man to gaol.

"I quit Madras a few days after the India prosecution commenced, as many of my friends informed me that keen disappointment was felt by some high placed officials at their inability to find something which would enable them to send me to prison and that the Police were trying to fabricate false evidence against me. An impartial and thorough student of the history of our times like yourself could not but be aware how mercilessly and deliberately the peaceful nationalist movement was suppressed in that year, thus making room for whatneither the Government nor the Nationalists really wanted, viz. terroristviolence."

…."The lower Police, to whom, by the way, political motives and political crimes were, and still are, as strange and unfamiliar as Differential Calculus, at once imagined that the newspapermen who had been talking 'Swadeshi' on the sands of the Madras Beach three years before must be at the bottom of the whole thing; for, had they not shown their bias for disregarding the law by refusing to swallow the benefits of that angelic Section 124-A of the Indian Penal Code as interpreted by the Pinheys of the day?

…"The only charge which the Police could maintain against these …. men wasthat they were found in possession of books published by me! And, of course, Iwas guilty because they had my books! Q.E.D."

…."Afterthe arrival of Lord Pentland as Governor of Madras, I noticed a partial changein the atmosphere of the local post office and concluded, rightly, that theinfluence of the spies on the postal service had gone down considerably. Thisencouraged me to write a long appeal to H.E. Pentland and and send it by post.In that appeal, I narrated all the facts of my case, also appending copies ofcertain documents which, I felt sure, would give His Excellency insight intothe character of the lower Police and their happy freedom from all notions oflegality and moral rectitude..."

….."I make this appeal to you, Sir, who, as chief of the Labour Party and as very sober and thoughtful statesman, wields a considerable influence for good on English public opinion, to do all that you can in the way of strengthening Lord Pentland's hands in rendering me justice, and in withdrawing measures adopted against me on the strength of incredible, absurd and unscrupulous reports."



http://madrasmusings.com/Vol%2022%20No%2018/bharati-complains-about-the-police.html
 
Last edited:
Here is Bharathiar talking about greatness of Tamil Language
தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்.

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும். 1

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்! 2

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும். 3

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளி யுண்டாகும்;
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார். 4


எனக்கு மிகப்பிடித்த தமிழ்க்கவிஞர்களில் பாரதியும் ஒருவர். அவருடைய "காக்கைச்சிறகினிலே நந்தலாலா...." எனக்கு மிகப்பிடித்த ஒரு கவிதை. அதில் வரும் "தீக்குள் விரலைவைத்தால் நந்தலாலா நின்னைத்தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்ற வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. வெகுநீண்ட நேரம் என்னைச்சிந்திக்கவைத்து வியப்பிலாழ்த்திய வரிகள். எண்ணி எண்ணி மகிழ்ந்திடச்செய்த வரிகள். நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டு அனுபவித்தவரிகள்.நிற்க,

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்".
என்ற வரிகள் உயர்வுநவிற்சியாகக்கூறப்பட்டவையோ என்ற ஐயம் எனக்குண்டு. பாரதிக்கு என்னென்ன மொழிகள் தெரியும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது. அறிந்தவர்கள் இங்குப்பதியலாம்.

அதுபோலவே

யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;

என்றவரிகளும் உயர்வுநவிற்சியாகவே படுகிறது. கம்பனும் வள்ளுவனும் இளங்கோவும் இன்னும் பலரும் சிறந்த தமிழ்ப்புலவர்கள் தாம் என்பதில் சற்றும் ஐயமில்லை. ஆனால் அவர்களைப்போல் வேறெவருமேயில்லை என்பது உயர்வுநவிற்சியன்றி வேறென்ன என்ற கேள்வி என்மனதில் ஒலிக்கிறது. பள்ளிச்சிறுவனாக இருந்தபோது "யாயும் ஞாயும் யாராகியரோ" என்று தொடங்கும் கவிதையின் "செம்புலப்பெயல் நீர் போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே" என்ற உவமை என்னைஒரு தமிழ்ப்பைத்தியமாக்கி தமிழை விட்டால் வேறு ஒன்றும் இல்லை என்று எண்ணச்செய்தது உண்மைதான். பின்னர் கல்லூரிப்படிப்பு, பிறமொழிப்பயிற்சி என்றெல்லாம் வந்தபின் தமிழ் என்னை ஆட்கொண்ட அளவு ஆங்கிலம், மலையாளம், உருது முதலான மொழிகளும் என்னை மிகவுமே கவர்ந்தன. உயர்ந்த அழகிய சிந்தனை, கவிதைவழி மகிழ்வுறச்செய்யும் வெளிப்பாடு என்பன தமிழைப்போலவே மற்ற மொழிகளிலும் சற்றும் தரத்தில் குறைவின்றி உள்ளன என்பது நான் கண்ட உண்மை. எனவே இந்த உயர்வுனவிற்சிகூட எனக்கு அழகாகத்தான் இருக்கிறது. பாரதி எந்தப்புலவரையெல்லாம் படித்திருந்தான் என்பது தெரிந்தவர்கள் அது பற்றி எழுதினால் நன்றியுடையவனாவேன்.
 
Last edited:
..... பாரதிக்கு என்னென்ன மொழிகள் தெரியும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது. அறிந்தவர்கள் இங்குப்பதியலாம்.

.

Please see post #6
 
Sad part is that the house where he stayed at Puducherry which is converted into a museum/library is closed for the last 4 years...Is this the tribute to the Mahakavi?

Place which housed a great voice stands silent - The Hindu

Place which housed a great voice stands silent

Will the celebrated poet Bharathiyar’s locked-up memorial-museum, an iconic structure that underlines his link to the coastal town, ever get renovated, asks Olympia Shilpa Gerald


Treasure trove Bharathiyar’s memorial-museum on Easwaran Koil Street at Puducherry houses around 17,000 books, of which nearly 3,000 contain everything written by and about Bharathi till 2011 —Photo: G. Krishnaswamy



Only the flower-studded kolam on the doorstep is any indication that No. 20, Easwaran Dharmarajan Koil Street, with its faded walls and cracked white pillars, holds special significance. Though tourist literature describes the site as a ‘pilgrimage for Tamil people’, it is only locked doors that greet visitors to the Mahakavi Bharathiar Memorial Museum and Research Centre.


While Puducherry remembered Bharathi on Wednesday, when his death anniversary was observed, by paying tributes at various places , the iconic centre that strongly underlines Bharathi’s link to the coastal town stood silent, as it has for the last four years. No. 20 was Bharathi’s last residence during his decade-long stay in the town. The memorial museum, which also doubles up as a haven for researchers, has remained locked so long, that its significance has started to fade from public consciousness, feel scholars and admirers of the poet.


“It is sad there is nothing to show tourists today, on the street that Bharathiyar lived,” says Ramesh, autodriver of stand on Eswaran Dharmarajan Koil Street. The stand set up a padipagam ( reading room) on the street to ensure the poet’s presence in some way. Though almost defunct now, it bears Bharathiyar’s name and portrait.



Bharathiyar was compelled to seek refuge from British rule in the then French-ruled Pondicherry in 1908, says Hemachandran, scholar and vice-president of the Bharathiyar Anbargal Arakatalai. He stayed on till 1918, and the decade he spent here has been dubbed as his most creative period. Pondicherry inspired Bharathi to pen Kuyil Pattu , Kannan Pattu and Panchali Sapatham . Some of his stirring essays for the India magazine were also published from here.



Though the town celebrates its association with the popular poet through statues, streets, institutions, and a sprawling park named after him, the museum’s closure is a loss for researchers, admirers and tourists. The building houses around 17,000 books of which nearly 3,000 contain everything written by and about Bharathi till 2011, says Sengamala Thayar, caretaker at the Subbiah memorial house and library on Vellala Street, where the Bharathiyar related books have been shifted now. Yet the rare manuscripts and photographs still lie under lock and key, while the books are displayed on request to scholars today.



“There are memorial museums at Ettayapuram in Tuticorin and Triplicane in Chennai, the place of his birth and death. But the manuscripts here show word substitutions made by Bharathiyar,” says Ramachandran, president, Tamil Progressive Writers Association. It is an invaluable insight into the thought process of one of the greatest Tamil poets; reading it we understand why he preferred a certain word over another.”
 
More than two?

I thought more than one! :)

Grammar was not in my mind when I wrote that post. But even if it is grammar, there is a comparative degree and a superlative degree and bharati is on superlative terms here. That requires more than two. LOL.
 
Sad part is that the house where he stayed at Puducherry which is converted into a museum/library is closed for the last 4 years...Is this the tribute to the Mahakavi?

Place which housed a great voice stands silent - The Hindu
[FONT=&]

“There are memorial museums at Ettayapuram in Tuticorin and Triplicane in Chennai, the place of his birth and death. But the manuscripts here show word substitutions made by Bharathiyar,” says Ramachandran, president, Tamil Progressive Writers Association. It is an invaluable insight into the thought process of one of the greatest Tamil poets; reading it we understand why he preferred a certain word over another.”[/FONT]

Depending on Government initiative shows the weakness of our Society. The Bharathi Memorial at Ettaiyyapuram was built by the initiative of Kalki Krishnamurthyin 1945.
 
மஹாகவி பாரதியார்

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்".
என்ற வரிகள் உயர்வுநவிற்சியாகக்கூறப்பட்டவையோ என்ற ஐயம் எனக்குண்டு. பாரதிக்கு என்னென்ன மொழிகள் தெரியும் என்ற கேள்வி இயற்கையாக எழுகிறது. அறிந்தவர்கள் இங்குப்பதியலாம்.

அதுபோலவே

பாரதி எந்தப்புலவரையெல்லாம் படித்திருந்தான் என்பது தெரிந்தவர்கள் அது பற்றி எழுதினால் நன்றியுடையவனாவேன்.

அவருடைய வாழ்கை சரித்திரத்தின் படி மஹாகவி பாரதியார் திராவிட மொழிகளும் மற்றும் வங்க மொழி, ஹிந்தி ,சம்ஸ்க்ருதம் கச்சி, ஆங்கிலம், பிரஞ்சு மொழிகளும் அறிந்தவர் என் தெரிய வருகிறது.
அனால் அவர் எந்தப்புலவரையெல்லாம் படித்திருந்தார் என அறிவது கடினம்.
 
Sad part is that the house where he stayed at Puducherry which is converted into a museum/library is closed for the last 4 years...Is this the tribute to the Mahakavi?
Even during his lifetime, though Bharati was considered a people's poet, a great nationalist, outstanding freedom fighter and social visionary, it was recorded that there were only 14 people to attend his funeral. Wikipedia
 
That is a good observation, Naina Sir!
BTW, I am scared of Sanskrit! :fear:

I have driven a Maruti: I have driven a Hyundai. Now If I am going to say யாமறிந்த கார்களிலே மாருதிபோல் ஒன்று கண்டிலேன் how true will that statement be? எங்கும் makes it all the more necessary that there should be more languages taken in for consideration.
 
Last edited:
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலாவைத் தீண்டும் இன்பம் தோன்றுமா?
காதில் பூ சுற்றுவதற்கு ஒரு கணக்கு கிடையாதா?
 
DEAR RR !
IT WILL BE OPT IF WE SAY THE GREATNESS OF PEOPLE is understood after their demise instead of telling many poets are made great. Bharathi is mahakavi and not made
guruvayurappan
 
Status
Not open for further replies.

Latest posts

Latest ads

Back
Top